அந்த சிறைச்சாலையில் மித்ராவிற்காக காத்திருந்தாள் சுகன்யா..இன்று அவளுக்கு விடுதலை..அவளை அழைத்து செல்வதற்காக வந்திருந்தாள்…
ஆமாம்..சுகன்யாவும்,மித்ராவும் நெருங்கிய தோழிகளாய் மாறி போயிருந்தனர்..அவளுடைய பிறந்த நாளின் போது அவளை பற்றி அவளின் தந்தையின் மூலம் அறிந்து கொண்டவள்,வாரத்திற்கு ஒருமுறை வந்து அவளை பார்த்து விட்டு சென்றாள்.. முதலில் அவளிடம் பேச பயந்த மித்ரா,பின்பு சிறிது சிறிதாக அவளிடம் பேச ஆரம்பித்தாள்.இப்போது இருவரும் நெருங்கிய தோழியாய் மாறி போயினர்…மித்ரா தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் அவளிடம் கூறினாள்..இதற்கு முன்பு வாரத்திற்கு ஒருமுறை வந்து பார்த்தவள்,அதன்பிறகு தினந்தோறும் பார்க்க வர தொடங்கினாள்..அவள் படிக்க நிறைய புத்தகங்கள் கொண்டு வந்து கொடுப்பாள்..இருவரும் இணைபிரியா தோழிகளாய் மாறிப்போயினர்…
அப்போது அங்கிருந்து வெளியே வந்த மித்ராவை அணைத்து கொண்டாள் சுகன்யா….
அவள் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது அமைதியாய் இருந்தாள்…
ஏய் மித்து நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் ..நீ என்னனா எதுவுமே ரியாகட் பண்ணாம இருக்க….
என்ன ரியாக்ட் பண்ண சொல்ற சுகு..நான் வெளில வந்து என்ன பண்ண போறேன்..எனக்குனு யாரு இருக்கா?என்றாள் வருத்தத்துடன்…
ஏன் மித்து நான் இல்லையா..?அப்போ நீ என்னை ப்ரண்டா நினைக்கலயா?..சும்மா தான் இவ்ளோ நாள் பேசிட்டு இருந்தியா?
அய்யோ சுகு ஏன் இப்படி பேசுற…என்னால உனக்கு எதுக்கு சிரமம்…
ஒரு சிரமம் இல்ல..நீ எங்கூடவே வர்றதுல எனக்கு சந்தோஷம் தான் என்றவள் அவளை தன்னுடனே அழைத்து சென்று விட்டாள்..சுகன்யாவும்,ரத்னவேலும் அவளிடம் எவ்வளவு அன்பாக நடந்து கொண்டாலும்,மித்ராவிடம் ஒரு பயம் இருத்து கொண்டே இருந்தது..எப்பொழுதும் அமைதியாகவே இருந்தாள்..அவளை மாற்ற இருவரும் முயற்சி செய்தனர்..ஆனால் அவர்களால் முடியவில்லை …அதனால் தான் சுகன்யா அவளுக்கு ஒரு மாற்றம் வேண்டி அவளை இங்கு அழைத்து வந்திருந்தாள்..தனது வேலையையும் இங்கு மாற்றி கொண்டாள்…
இதையெல்லாம் நினைத்து பார்த்த சுகன்யாவிற்கு கண்கள் கலங்கியது..அவள் மித்ராவின் தலையை ஆறுதலாய் கோதி விட்டாள்…அப்போது போன் ஒலிக்கும் சப்தம் கேட்ட,சப்தம் வந்த திசையை பார்க்க, அது மித்ராவின் போனில் இருந்து தான் வந்து கொண்டிருந்தது….அதனை எடுத்தவள் காதில் வைத்து ஹலோ என்றாள்…
மிது?
ஸாரி மிது இல்ல…அவ ப்ரண்ட் சுகன்யா…நீங்க?
ஹோ ஸாரி..நான் கவி..கவிலாஷ்….
அந்த பெயரை கேட்டதும்,அவளுக்கு எதோ புரிய,ஹாய் கவி அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை…சரியானதும் நீங்க கோல் பண்னதா சொல்றேன்…
அவள் கூறியதை கேட்டதும் அதிர்ச்சியானவன்,உடம்பு சரியில்லையா!என்னாச்சு என்றான் பதட்டத்துடன்…
பயப்படும்படி எதுவும் இல்ல..சின்ன மயக்கம் தான்…
என்னது மயக்கமா?அதிர்ந்தவன்,நான் உடனே கிளம்பி வரேன் என்று போனை வைத்து விட்டான்….
ப்ரனேஷ் அவனது தங்கையையும்,அவனது குல்பியையும் அழைத்து கொண்டு வெளியே வந்திருந்தான்..அவன் தங்கை ஒவ்வொரு இடமாய் ஏறி இறங்கி,அவனது பர்சை காலியாக்கி கொண்டிருந்தாள்…அவனுக்கு அய்யோ என்றிருந்தது..அவனது பர்ஸ் காலியாவதை விட, அவனை அழைத்து கொண்டு சுத்துவதை நினைத்து…
ஏய் பப்ளி போதும்டி..இதுக்கு மேல என்னால முடியாது..வாங்க வீட்டுக்கு போகலாம்..என்றான்..
டேய் அண்ணா பீளீஸ் டா..பார்க் மட்டும் போய்ட்டு வீட்டுக்கு போகலாம் …கெஞ்சினாள்…
சரி என்று வேண்டா வெறுப்பாய் ஒத்துக் கொண்டான்…
அண்ணன் தங்கை இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டு செல்ல, சமி மட்டும் அவர்களை ரசித்தபடி அவர்களுடனே சென்றாள்..அவளால் அவர்களுடைய சந்தோஷத்தில் இணைய முடியவில்லை..காரணம் ப்ரனேஷ் அவளை விட்டு விலகி நின்றான்..இவள் பேசாமல் இருந்தாலும்,அவளிடம் வலிய சென்று பேசுபவன்,காலையில் நடந்த சம்பவத்திற்கு பிறகு அவளை பார்பதையே தவிர்த்தான்..அவன் விலகி போவது அவளுக்கு மகிழ்ச்சியை தந்திருக்க வேண்டும்..மாறாக அவளுக்கு வருத்தத்தை தந்தது..அவனது விலகலில் அவள் தான் அடிபட்டு போனாள்..அவனை பார்க்க கூடாது,பேச கூடாது என்று அவள் நினைத்திருந்தாலும்,அவளது மனம் அவனை தேடியது என்பது முற்றிலும் உண்மை..அதேநேரம் அவளது நிலையை நினைத்தவள் அந்த எண்ணத்தை அடியோடு மறக்க முயற்சி செய்தாள்..பாவம் அவளால் முடியவில்லை..அவன் அன்று கொடுத்த முத்தத்தை நினைத்து எவ்வளவு மகிழ்ந்தாள்..ஆனால் அதைவிட தன் நிலையை நினைத்து அவ்வளவு வருந்தினாள்..அவன் கூடவே இருக்க வேண்டும் என்று தோன்றிய நினைவை அழிக்க முடியாமல் தவித்தாள்..அவனது கூடவே இருப்பதை விட, அவனை தூரத்தில் நின்றே பார்த்தே தனது வாழ்க்கையை வாழ்ந்து விடலாம் என்று நினைத்தவளுக்கு,அவன் வீட்டிலயே தங்க வேண்டிய நிலமை வந்ததும்,ஒருபுறம் மகிழ்ந்தாலும்,அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள்…மொத்தத்தில் அவனை விலக்கவும் முடியாமல்,நெருங்கவும் முடியாமல் தவித்தாள்…
அந்த பார்க்கில் இருந்த ஊஞ்சலில் சிறுவர்கள் ஊஞ்சலாடி கொண்டிருந்தனர்..அதனை பார்த்த ரவீனா டேய் அண்ணா எனக்கும் அதுல ஆடனும்டா..
அந்த ஊஞ்சலையும்,அவளையும் மாறி மாறி பார்த்தவன் ஏய் அது சின்ன பிள்ளைங்க ஆடுறதுடி..உன்னோட சைஸ்க்கு நீ ஏறுனா அது அறுந்து விழுந்துடும் என்றான் கிண்டலாய்…
டேய் அண்ணா வேண்டாம் என்று அவனை பார்த்து முறைத்தவள்,அடுத்த நொடி அந்த ஊஞ்சலை நோக்கி சிறுபிள்ளை போல் துள்ளி குதித்து ஒடினாள்….
சமி அங்கு இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தாள்..சிறு வயதில் தனது பெற்றோருடன் விளையாடியது நினைவிற்கு வர, அவளையறியாமலே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது…யாரும் பார்க்காத வண்ணம் கண்களை துடைத்து கொண்டாள்….
அப்போது தண்ணீர் பாட்டிலுடன் அங்கு வந்த ப்ரனேஷ் அவளிடம் நீட்டி “இந்தா குடி ,என்றான்..அதனை வாங்கி அவள் குடிக்க, அவள் அருகிலயே அமர்ந்தான்….
சட்டென அவள் எழ,அவள் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தான்…
அவன் பிடியில் அவள் மனம் துள்ளி குதிக்க, அதை அடக்கியவள்,வுடு பாசு இன்னா பண்ற நீ?
அவளையே பார்த்தவன் உனக்கு என்ன பிரச்சனை என்றான்..
அவள் புரியாமல், “என்ன பிரச்சனை என்று அவனிடமே திரும்பி கேட்டாள்..
உன்ன நெருங்கி வந்தா நீ தூர போற..நான் தூரமா போனா ஏக்கமா பாக்குற…அதான் கேட்டேன்…
அ..அப்படி..யெல்..லாம் ஒன்னுமில்ல என்றாள் தடுமாற்றத்துடன்…
ஒ….அப்படியா என்றவன், அவளது முகத்தில் விழுந்து கிடந்த முடியை,அவளது காது மடலில் சொருக ,அவளது உடல் சிலிர்த்து அடங்கியது…அவளுடைய இரண்டு கையையும் எடுத்து தன் கை வளையத்திற்குள் கொண்டு வந்தவன்,இதோ பாரு குல்பி நீ எத நெனச்சி பயப்படுறனு எனக்கு தெரியல..ஆனா ஒன்னு மட்டும் தெரியுது..நீ என்ன காதலிக்கிற..அது உண்மை..
இ..ல்…
நீ இல்லைனு சொன்னாலும் அது தான் உண்மை..உன்னோட வாய் இல்லனு சொல்லலாம்..ஆனா உன்னோட கண்கள் சொல்லுதே என்மேல உள்ள காதல…என்றவன் அவளது கண்களை நேரடியாய் பார்க்க, அவள் தான் தன் பார்வையை தாழ்த்தி கொண்டாள்…
இது பார் குல்பி என் மனசுல உள்ளத நான் சொல்லிட்டேன்..இனிமே முடிவு நீ தான் எடுக்கனும்..நீ எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்..ஏன்னா உன்னோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் என்று கூறிவிட்டு, அவளது கையை விடுத்து அங்கிருந்து சென்றான்..
அவன் கூறிவிட்டு சென்றதை கேட்டு அவள் தான் சிலையாய் அமர்ந்திருந்தாள்…
தூங்கி கொண்டிருந்த மித்ராவையே பார்த்திருந்தான் கவிலாஷ்…உடம்பை சுருக்கி படுத்திருந்தவளை பார்க்க அவனுக்கு பாவமாய் இருந்தது..அதற்கு மேல் அங்கு நிற்காமல் அறையை விட்டு வெளியே வந்தான்…
சுகன்யா,என் மிதுக்கு என்னாச்சு..?
என் மிது என்பதை குறித்து கொண்டவள்”லேசான மயக்கம் தான்,என்றாள்…
ரொம்ப நன்றி சுகன்யா”என் மிதுவ பத்திரமா பாத்துகிறதுக்கு…
லேசாய் புன்னகைத்தவள்’கவிலாஷ் நீங்க ஏன் அவள கல்யாணம் பண்ணிக்க கூடாது…
நான் எங்க அம்மாகிட்ட பேசிட்டேன் சுகன்யா..கூடிய சீக்கிரம் அம்மாவ அழச்சிட்டு மித்ராவோட அப்பா,அம்மாகிட்ட பேசனும்…என்றான் சிறு புன்னகையுடன்..
வா..ட்?என்று அதிர்ந்தவள்,மித்ராவோட அப்பா,அம்மாகிட்ட பேசனுமா?அது எப்படி முடியும்..அவுங்க தான் இறந்து போய்டாங்களே என்று குண்டை தூக்கி போட்டாள்…
அவள் கூறியதை கேட்டு அதிர்ந்தவன்,என்ன சொல்றீங்க சுகன்யா,எப்போ?என்றான் அதிர்ச்சியிலிருந்து மீளாமல்…
அப்போ நடந்த எதுவுமே உங்களுக்கு தெரியாதா?
என்ன நடந்தது.?எனக்கு எதுவுமே தெரியாது என்றான் அப்பாவியாய்…
ஓ மை காட்..அப்போ நீங்க மித்ராவ கடைசியா எப்போ பாத்தீங்க…?
நானும்,மித்ராவும் ஒரே காலேஜில் தான் படிச்சோம்..நல்ல ப்ரண்ட்ஸ்ஸா கூட இருந்தோம்..ஆனா ப்ரண்டையும் தாண்டி நான் அவள காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்..என்னால அவகிட்ட உண்மைய மறைக்க முடியல..எப்படியாவது அவகிட்ட சொல்லிடனும்னு நெனச்சேன்..ஆனா உள்ளுக்குள்ள ஒரு பயம்..எங்கே நான் சொல்லி அதுக்கப்புறம் என் கூட பேசாம போயிட்டா என்ன பண்றதுனு…இப்படியே நாட்களும் போச்சி..அன்னைக்கு தான் எக்ஸாம் முடிஞ்சு காலேஜ் கடைசி நாள்…இதுக்கு மேலயும் சொல்லாம இருக்க கூடாதுனு முடிவெடுத்து அன்னைக்கு என்னோட லவ்வ சொன்னேன்..கேட்டதும் ஷாக் ஆயிட்டா…எதுவுமே பேசல..அமைதியா இருந்தா..எனக்கு பயமாயிடுச்சு..அப்புறம் தைரியத்தை வரவழச்சிகிட்டு இதோ பாரு மிது..இது இன்னைக்கு வந்த காதல் இல்ல..உன்ன எப்போ முதன் முதல்லா பார்த்தேனோ.அன்னைக்கு வந்தது..ஆனா நீ என் கூட ஒரு நல்ல தோழியா பழகும் போது நான் உன்ன காதலிக்கிறேனு சொல்ல எனக்கு தைரியம் வரல…அதனால தான் இத்தன வருஷமா பூட்டி வச்சிருந்த என் காதல இதுக்குமேலயும் மறைக்க முடியாம சொல்லிட்டேன்..நீ உடனே சொல்லனும்னு அவசியம் இல்ல..நல்லா யோசி..டைம் எடுத்துக்கோ..எத்த நாள் வேனாலும்..ஆனா கண்டிப்பா பாசிட்டிவ்வா பதில் சொல்லு…உன்னோட போன்க்காக நான் காத்திருப்பேன் என்றுவிட்டு வந்து விட்டேன் என்றான்….
அதுக்கப்புறம் அவ போன் பண்ணாளா கவி?
இல்ல..நானும் அவ போன்காக தினமும் காத்திருப்பேன்..ஆனா அவகிட்டேருந்து போன் வரவே இல்ல…அப்புறம் அவுங்க ஊருக்கு போயி விசாரிச்சேன்…அவுங்க வேற ஊர் போயிட்டதா சொன்னாங்க..எங்கெல்லாமோ தேடினேன்..கண்டுபிடிக்க முடியல….அ துக்கப்புறம் ஷாரிக்காவோட பிறந்த நாள் அப்போ தான் பார்த்தேன் என்றான்….
அவன் கூறியதை கேட்டு அதிர்ந்த சுகன்யா,அப்போ நடந்த எதுவுமே உங்களுக்கு தெரியாதா?
என்ன நடந்தது என்றான் புரியாமல்?
அவளுக்குள் சிறு தயக்கம்..இவனிடம் உண்மையை கூறினால் அதன்பிறகு தனது தோழியை ஏற்றுக் கொள்வானா என்று…
சொல்லுங்க சுகன்யா ..என்ன உண்மை…
அது..அதுவந்து….மித்ராவுக்கு ஏற்கனவே…..
மித்ராவுக்கு ஏற்கனவே..?
அவ..அவளுக்கு கல்யாணம் ஆச்சு…
அவள் கூறியதை கேட்ட கவிலாஷ் முற்றிலும் அதிர்ந்து போனான்..அவனால் இதனை நம்ப முடியவில்லை…யாரோ அவனது குரல்வளையை நெறிப்பது போல் இருந்தது..அவனது உடல் அவனறியாமலே நடுங்கியது.அவனது கண்ணளிலிருந்து கண்ணீர் வழிந்தது..அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதென்றால் அவளோடு நான் இணைந்த போது ஏன் மறுக்கவில்லை..அப்போது நான் அவளை காதலித்து எல்லாம் பொய்யா…அவள் என்னை காதலிக்கவில்லையா…எல்லாமே நடிப்பா..என்று நினைத்தவன் பொத்தென்று அமர்ந்தான்..அவனை சுற்றி யாரோ நின்று கொண்டு கைதட்டி சிரிப்பது போல் இருந்தது..தனது தலையை பிடித்து கொண்டு உட்காந்திருந்தான்….
நீ..நீங்..க சொ..சொல்ற.து உண்மையா?அதிர்ச்சியிலிருந்து மீளாமல் கேட்டான்..அது பொய்யாய் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கொண்டே….
ஆமா..கவி..ஆனா..ஆனா…
சட்டென அவளை நிமிர்ந்து பார்த்து “ஆனா?
என்றான்…
இதோ பாருங்க கவி நீங்க அவ மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்கனு இந்த கொஞ்ச நேரத்துலயே தெரிஞ்சிகிட்டேன்..அதனால உங்ககிட்ட எதையும் மறைக்காம சொல்றேன்..ஆனா எல்லாம் தெரிஞ்ச அப்புறம் அவள விட்டு போய்டாதீங்க ப்ளீஸ்..கெஞ்சினாள்…
இதுக்கு மேல தெரிஞ்சிக்க என்ன இருக்கு..அதான் என்ன நல்லா நம்ப வச்சு ஏமாத்திட்டாளே? சீறினான்….
இல்ல கவிலாஷ் அவ யாரையும் ஏமாத்தல..அவ கல்யாணத்துல அவளுக்கு விருப்பமே இல்ல….
என்ன சொல்றீங்க…?
தன் கண்ணீரை துடைத்தவள் மித்ரா தன்னிடம் கூறிய அனைத்தையும் அவனிடம் கூற தொடங்கினாள்…
கவிலாஷ் நீங்க மட்டுமில்ல அவளும் உங்கள உயிருக்குயிரா காதலிச்சா…
என்ன சொல்றீங்க..?அதிர்ச்சியாய் கேட்டான்…
ஆமா..நீங்க என்ன காரணத்திற்காக அவள்கிட்ட கூற தயங்குனிங்களோ அதே காரணத்துக்காக தான் அவளும் தயங்கிருக்கா…நீங்க உங்க காதல சொன்னதும் அவளுக்கு அவ்வளவு சந்தோஷம்..சந்தோஷத்துல என்ன பேசுறதுனே தெரியாம நின்னுருக்கா..
உண்மையாவா..!என் மிது என்ன அப்பவே காதலிச்சாளா?ஏனோ அந்த நேரம் அவள் கூறிய அந்த செய்தி அவனது காயம்பட்ட மனத்திற்கு மருந்தாய் இருந்தது…அப்போ ஏன் அவள் என்கிட்ட சொல்லல…
என்னதான் அவ உங்கள காதலிச்சாலும் உங்கள நேர்ல பாத்து ஒகே சொல்ல அவளுக்கு ஒரு தயக்கம்…
அப்போ வீட்டுக்கு போய் போன் பண்ணி சொல்லிருக்கலாமே?நான் எவ்வளவு நாள் காத்திருந்தேன்..ஆதங்கமாய் கூறினான். .
அங்க தான் விதி தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சது…
என்ன சொல்றீங்க..எனக்கு புரியல..?
மித்ரா வீட்டுக்கு போயி உங்களுக்கு கோல் பண்ணலானு தா நெனச்சா..ஆனா வீட்டுக்கு போன அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது…
அதிர்ச்சியா..?என்னது….
அங்க மித்ராவுக்கு அவுங்க அப்பா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருந்தார்..இத கேட்டு மித்ரா ஆடிப் போயிட்டா..அவ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கவே இல்ல…அவுங்க அப்பா காரணம் கேட்டார்…அவ உங்கள விரும்புனதா சொன்னா..அவரால இத ஏத்துக்க முடியல..அவர் அவகிட்ட உங்கள மறக்க சொல்லி போராடினார்..ஆனா அவ செய்யல…அப்போ தான் அவர் அவளோட தலையில ஒரு குண்டை தூக்கி போட்டுருக்கார்….
கவிலாஷ் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தான்..அவனது வாய் மட்டும் தானாய் “என்ன அது” என்றது..?
மித்ரா அவுங்க பொண்ணு இல்லையாம்..ஒரு ஆக்ஸிடண்ட்ல அடிபட்டு சுயநினைவு இல்லாம கிடந்தவள இவுங்க தான் கூட்டிவந்து ட்ரீட்மெண்ட் பார்த்துருக்காங்க…அவளுக்கு பழைய விசயங்கள் எல்லாமே மறந்து போச்சு..அவள தேடி யாரும் வரல…அதனால இவுங்களே அவ தூக்கி வந்து வளத்துருக்காங்க…
என்ன சொல்றீங்க..மிது இதபத்தி என்கிட்ட எதுவும் சொன்னதே இல்ல….
அவளுக்கே இது அன்னைக்கு தான் தெரிஞ்சிருக்கு…அதுக்கப்புறம் அவ உங்க நினைப்ப மனசுல போட்டு புதச்சிகிட்டு கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா…
கல்யாணம் முடிஞ்சு இவுங்களும் அவ கூடவே போய்டாங்க..மாப்பிள்ளை மேல அவ்வளவு பாசம் வச்சிருந்தாங்க இரண்டு பேரும்..அப்போ தான் அவர் அவுங்க ஆபீஸ்ல நடந்த பார்ட்டிக்கு கூட்டிட்டு போயிருக்கார்..அங்கு தான் அவளுக்கு பிரச்சனை ஆரம்பமாச்சு..
என்ன நடந்தது…என்ன பிரச்சனை..?
ஒருநாள் அவ புருஷன் ரொம்ப சந்தோஷமா இனிப்பு கொடுத்தானாம்..கேட்டதுக்கு ப்ரமோசன் கிடச்சிருக்குனு சொன்னானாம்..எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்..அவுங்க ஒனர் சின்னதா பார்ட்டி தாரேனு சொன்னாதா கூறி அவள கூட்டிட்டு போயிருக்கான்..அங்க போனதும் தான் அவனோட சுயரூபம் தெரிஞ்சிருக்கு..அவ புருஷன் புரமோசனுக்காக மித்ராவ அவன் பாஸ் கூட ஒரு நாள் தங்க…..
போது……ம்…கத்தினான் கவிலாஷ்..அவனது கண்களிலிருந்து கண்ணீர்….
இத அவளால ஏத்துக்க முடியல..அவ புருஷன்கிட்ட சண்ட போட்டுருக்கா…நடந்த சண்டையில அவளையும் அறியாம பக்கத்துல இருந்த கத்திய எடுத்து அவன க
குத்திட்டா..அங்க இருந்த அவனோட பாஸ் பயந்து போயி போலீஸ்க்கு இன்பார்ம் பண்ண, அவுங்க வந்து அவள அரஸ்ட் பண்ணிட்டாங்க….அவளுக்கு மூன்று வருஷம் ஜெயில் தண்டனை,இதெல்லாம் நினச்சு அவுங்க அப்பா அம்மா பெட்ரோல் ஊத்தி கொளுத்திகிட்டாங்க…அப்புறம் ஜெயில்ல தான் நாங்க சந்திச்சோம் என்று அனைத்தையும் கூறி முடித்தாள்…
கேட்டு கொண்டிருந்த கவிலாஷின் நிலமை தான் படுமோசமாய் போனது..சட்டென எழுந்தவன் மித்ரா உறங்கி கொண்டிருக்கும் அறையை நோக்கி ஒடினான்…அங்கே படுத்திருந்தவளை பார்த்து அவனது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது..அய்யோ…என் செல்லமே எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சிருக்க..உன் கூட இருந்து ஆறுதல் கூட சொல்ல முடியாத பாவி ஆய்டனே… நான் உன்ன விட்டு போயிருக்க கூடாது..நான் உன் கூடவே இருந்திருக்கனும்..உன்ன பத்தி விசாரிச்சிருக்கனும்..என்ன மன்னிச்சிடு…என்று அவளது காலை பிடித்து கதறினான்…எவ்வளவு நேரம் அழுதானோ தெரியவில்லை..அழுது முடித்தவன் எழுந்து அவளருகில் வந்து அமர்ந்து,அவளது நெற்றியில் இதமாய் ஒரு முத்தமிட்டான்..
அவளறியாமலே ,போங்க லாஷ்,என்றாள் சிறு புன்னகையுடன்…
தூக்கத்தில் கூட தன்னையே நினைத்திருக்கும் அவளை நினைத்து அவனது காதல் மனம் கர்வம் கொண்டது….
மெல்ல எழுந்தவன் சுகன்யாவிடம் திரும்பி,நீங்க இனிமே மிதுவ நினச்சு கவலை படாதீங்க…அவ இனிமே என்னோட சொத்து..அவள கண்கலங்காம பாத்துக்க வேண்டிய பொறுப்பு என்னோடது…நான் சீக்கிரமே மிதுவ கல்யாணம் பண்ணி என் வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவேன்…என்றான் தீர்க்கமாய்…
ரொம்ப நன்றி கவி…அப்படி மட்டும் நடந்தா நான் காலம் முழுவதும் உங்களுக்கு கடமை பட்டிருப்பேன்…
சுகன்யாவை நினைத்து அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது..உங்கள மாதிரி ஒரு தோழி கிடைக்க என் மிது குடுத்து வச்சிருக்கனும்….என்றான்…
சிறு புன்னகையுடன் அதனை ஏற்றுக் கொண்டவள்,கவி, மிது இப்போ அடிக்கடி எதையோ நினச்சி பயப்படுறா..அது என்னனு கொஞ்சம் கண்டுபிடிக்கனும்…
கண்டிப்பா..என்றவன் அவளிடம் விடைபெற்று அங்கிருந்து சென்றான்….
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.