“நீங்க சொல்றது உண்மையா டாக்டர்…”கேட்டான் ப்ரனேஷ்..
எஸ் மிஸ்டர்..நீங்க கூட்டிவந்த பேஷன்ட் கண் முழிச்சிட்டாங்க..நீங்க போய் பாக்கலாம் என்றார்..
“தாங்ஸ் டாக்டர் என்ற ப்ரனேஷ் கவிலாஷை இழுத்து கொண்டு அவரை பார்க்க சென்றான்…
சில நாட்களுக்கு பின் விழி திறந்தவர், எதிரில் நின்றவர்களை தனது இரு புருவங்களையும் சுருக்கி குழம்பி போய் பார்த்தார்…
“நா..நா..ன் எ..எ..ப்.படி இங்க.திக்கி திக்கி கேட்டார் அவர்…. “
ஐயா,பயப்படாதீங்க..நாங்க தான் உங்கள இங்க கொண்டு வந்து சேர்த்தோம்.
“எ..னக்கு..என்ன ஆச்சு..புரியாமல் கேட்டார்…”
ஐயா உங்களுக்கு சின்ன ஆக்ஸிடண்ட் ஆச்சு..இப்போ பயப்பட ஒன்னுமில்ல..நீங்க பரிபூரணமா குணமாயிட்டீங்க என்றான் கவிலாஷ்….
“ரொம்ப நன்றி தம்பி…என்றார்..
ஐயா,இந்தாங்க உங்களோட திங்ஸ் என்று அவருடைய பொருட்களை அவரிடம் நீட்ட, ஒருவித பதட்டத்தோடு அதனை வாங்கி கொண்டார்..அவருடைய பதட்டத்தை குறித்து கொண்ட கவிலாஷ்,ஐயா நான் ஒன்னு உங்க கிட்ட கேட்கலாமா..!
“கேளுங்க தம்பி..என் உயிரையே காப்பாத்திருக்கீங்க…”என்றார்..
“ஐயா,இந்த செயின் யாரோடது என்றான் கவிலாஷ்..”
“இது என்னோடது தான் தம்பி..ஏன் கேட்குறீங்க…”
“இதே போல செயின் உங்க குடும்பத்துல வேற யார்கிட்டயாவது இருக்கா…”
“அவன் அவ்வாறு கேட்டதும்,சட்டென அமைதியானவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது….”கடந்த கால நியாபங்கள் வந்து அவரது உடம்பை உலுக்கியது.முயன்று தன்னை கட்டுபடுத்தி கொண்டவர், இல்ல தம்பி எனக்கு சொந்தமுனு சொல்ல யாரும் இல்ல..வேற யார்கிட்டயும் இது போல செயின் இருக்க வாய்ப்பில்ல தம்பி….
“ஐயா,கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க…என்றான் கவி…”
“இல்ல தம்பி என்று கொஞ்சம் காட்டமாகவே கூறியவர் எதுக்கு இதெல்லாம் கேக்குறீங்க என்றார்…”
“ஐயா இதே போல ஒரு செயின் எங்களுக்கு கிடச்சது..ஆனா அது பெண் போடுற செயின் என்றான் ப்ரனேஷ்..”
அவன் அவ்வாறு கூறியதும்,சட்டென முகம் பிரகாசிக்க, என் பொண்ணு உயிரோட இருக்காளா?என்றார்..அவர்..
அப்போ உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கா..!அவுங்க எங்க இருக்காங்க? எப்படி இருப்பாங்க ?அடுக்கடுக்காய் கேள்விகளை தொடுத்தான் கவிலாஷ்…
தம்பி நீங்க தான இதே போல ஒரு செயின் கிடச்சதுனு சொன்னீங்க…இது உங்ககிட்ட இருக்குனா அப்போ என் பொண்ணு,என் பொண்ணு எங்க, அவ உயிரோட இருக்காளா,இல்லையா,எதாவது சொல்லுங்களேன் என்று அவர் புலம்ப, அவரை ஒருவழியாய் கவிலாஷ் சமாதானம் படுத்தினான்…
ப்ரனேஷ்”டேய் கவி இதுக்கு மேல நீ அவர்கிட்ட எதுவும் கேட்க வேண்டாம்…நான் அவர்கிட்ட கொஞ்சம் பேசனும் என்றான்…”
‘சரி பேசு என்றான் கவி….அவரிடம் நெருங்கி அமர்ந்தவன் ,ஐயா என்ன தெரியுதா ?என்றான்..
அவனை கூர்ந்து பார்த்தவர், தம்பி நீங்க எதோ போன்ல போட்டோ காட்டி ஒரு பொண்ண தேடுனீங்க தான ..அந்த பொண்ணு கிடச்சிட்டாளா?என்றார்..
இந்த வயதிலும் அவரது ஞாபக சக்தியை நினைத்து வியந்தவன்,ஆமாங்கய்யா அது நான் தான் என்றவன்,அந்த பொண்ணு கிடச்சிட்டா ஐயா என்றான்…”
ரொம்ப சந்தோஷம் தம்பி..யாரோ தடியன்க துரத்திட்டு வந்தாங்க..நான் தான் அந்த பொண்ண அவன்க கிட்டேருந்து காப்பாத்தினேன் என்றார்…
அவர் கூறிய அடுத்த நிமிடம்,அவருடைய கையை பிடித்து,ரொம்ப தாங்ஸ் ஐயா என் உயிரையே காப்பாத்தி கொடுத்துருக்கீங்க…உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல…உங்கள எங்க விடனும்னு சொன்னா அங்கயே உங்கள கொண்டு விட்டுறேன் என்றான்….
“எனக்கு இப்போ சொந்தம்னு சொல்ல யாரும் இல்ல தம்பி..நான் பாட்டுக்கும் என் கால் போன போக்குலு போறேன்.உங்களுக்கு எதுக்கு சிரமம் என்றார்…
இதுல சிரமம் என்ன இருக்கு..இது என்னோட கடமை..எனக்கு உதவி செஞ்ச உங்களுக்கு உதவ கடவுள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துருக்கார்.அத நான் மிஸ் பண்ண மாட்டேன்.நீங்க என்கூட என் வீட்டுக்கு வாங்க என்று அழைத்தான்…
ரொம்ப நன்றி தம்பி..உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு..ஆனா என்னால வர முடியாது..எனக்கு செய்ய வேண்டிய கடமை ஒன்னு பாக்கி இருக்கு .அத முடிக்காம என்னால எங்கயும் வர முடியாது என்று ஒருவித குரோதத்துடன் கூறினார்..
அதுவரை அவர்கள் பேசியதையே கேட்டுக் கொண்டிருந்த கவிலாஷ்,அவருடைய முக மாற்றத்தை கவனிக்க தவறவில்லை….
சரிங்க ஐயா, அதுக்கு மேல உங்க விருப்பம்..அதேபோல உங்களுக்கு எதாவது உதவி வேனுனா கண்டிப்பா தயங்காம என்கிட்ட கேளுங்க என்று கூறியவன்,ஐயா நீங்க எங்க போகனுமுனு சொன்னா நானே விட்டுவிடுவேன் என்றான் மறுபடியும்…
அவர் ஒரு இடத்தின் பெயரை கூறி அங்கே விடுமாறு கூறினார்..சரி என்றவன் அவரையும் அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினர்….
அதேநேரம்,கவிலாஷின் தாய் பத்மாவதி பூங்கோதையை அழைத்தார்…
அக்கா சொல்லுங்க..எப்படி இருக்கீங்க என்றார்…பூங்கோதை..
நான் நல்லா இருக்கேன் கோதை…இன்னைக்கு நம்ப கவிக்கு பொண்ணு பாக்க போறோம்..நீயும் கூட வந்தா நல்லா இருக்கும்..அதனால தான் கோல் பண்னேன்..அப்படியே நம்ப சுபத்ராவையும் கூட்டிட்டு போகலாம்.நீ என்ன சொல்ற…
அதுவந்து அக்கா. இன்னைக்கு அவர் ஊருக்கு வரார்..என்னால எப்படி..என்று இழுக்க…
அவர் வரதுக்குள்ள நாம போயிட்டு வந்திடலாம்..என்ன சொல்ற…
சரிக்கா…கவியும் எனக்கு ஒரு மகன் மாதிரி தான.கண்டிப்பா வரேன் என்று கூறி போனை வைத்தார்…பத்மா,சுபத்ராவையும் அழைத்து விசயத்தை கூறினார்….
மித்து,சீக்கிரம் வா..ரூம் கதவ சாத்திட்டு என்ன பண்ணிட்டு இருக்க கத்தினாள் சுகன்யா…
அறையின் உள்ளே மித்ரா எதையோ பரபரப்பாய் தேடிக் கொண்டிருந்தாள்..ப்ச்!எங்க வச்சேன்..என்று சலித்து கொண்டே அந்த அறையை தலை கீழாய் புரட்டி கொண்டிருந்தாள்…
சுகன்யா தனது போனை எடுத்து கவிக்கு கோல் செய்தாள்…
“சொல்லுங்க சுகன்யா…”
“கவி உங்க அம்மாவ கூட்டிட்டு எப்போ வரீங்க….”
“சுகன்யா நான் ஒரு வேலை விசயமா வெளில வந்துருக்கேன்…அத முடிச்சிட்டு சீக்கிரம் அம்மாவ கூட்டிட்டு வந்திடுவேன்…”
“ஒகே கவி…சீக்கிரம் வாங்க .உங்களுக்காக தான் வெயிட் பண்றேன்….”
“சரி சுகன்யா…மிது என்ன பண்றா…”அவளுக்கு நாங்க வரத சொல்லிட்டீங்களா….?
“இன்னும் சொல்லல கவி..அவளுக்கு சர்பிரைஸ் கொடுக்கலானு நினச்சிருக்கேன்.அப்புறம் உங்க மிது புடவை கட்ட உள்ள போனவ தான்..இன்னும் ஆள கானும் என்று கூற,கவிலாஷ் அழகாய் புன்னகைத்து,சுகன்யாவிடம் சீக்கிரம் வருவதாய் கூறிவிட்டு போனை வைத்தான்….”
கவிலாஷ் மித்ராவை பற்றி அனைத்தையும் கூறி அவனது அம்மாவிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கியிருந்தான்..முதலில் மறுத்த அவனது தாய்,கவிலாஷின் வற்புறுத்தலால் வேறு வழியில்லாமல் ஒத்து கொண்டார்..அவனது அன்னை சம்மதம் சொன்னதும் மகிழ்ந்தவன் உடனே அழைத்தது சுகன்யாவை தான்…அவன் கூறிய செய்தியை கேட்டு சுகன்யா இனிமையாய் அதிர்ந்து போனாள்..நீங்க உண்மையா தான் சொல்றீங்களா கவி!நீங்களும்,உங்க அம்மாவும் நாளைக்கு மித்துவ பாக்க வறீங்களா…?என்று ஆச்சரியமாய் கேட்டவளுக்கு,ஆமாம் என்று பதிலளித்து விட்டு போனை அனைத்திருந்தான்…
அவன் வைத்த அடுத்த நிமிடம் அவள் உடனே தன் தந்தைக்கு அழைத்து விசயத்தை கூற, அவர் மகிழ்சியில் உடனே கிளம்பி வருவதாக கூறிவிட்டார்….
கவிலாஷிடம் பேசி முடித்த சுன்யா,
மித்து நீ உள்ள போயி ஒரு மணி நேரமா ஆகுது.ஒரு புடவை கட்ட இவ்வளவு நேரமா,அப்படி உள்ள என்ன தான் பண்ற என்றவள் எழுந்து போய் கதவை தட்டினாள்.சட்டென மித்ரா கதவை திறக்க, அந்த அறை இருந்த கோலத்தை பார்த்து சுகன்யாவிற்கு கோபம் பொத்து கொண்டு வந்தது.
மித்து என்ன பண்ணி வச்சிருக்க..உன்ன பார்க்க இன்னைக்கு ஒருத்தவுங்க வராங்க.அதனால அழகா ஒரு புடவை கட்டிட்டுவானு சொன்னது ஒரு குத்தமா!ரூம்மயே தலை கீழா மாத்தி வச்சிருக்க.பும்பினால் சுகன்யா.
“சுகு என்னோட செயின பாத்தியா….”
“எந்த செயின் மித்து….”
“அப்பா எனக்கு குடுத்தது…அதான் ஒரு ஹார்ட் மாதிரி க்ரீன் ஸ்டோன் வச்சி இருக்குமே அதான்…”
“ஒ…அதுவா…நான் பாக்கலயே…”
“இங்க தான் வச்சிருந்தேன்.அத இப்போ காணும்….”
“என்ன சொல்ற மித்து. அது ஐந்து பவுன் இல்லையா….”
“ஆமா சுகு..எங்க வச்சேனு ஞாபகம் இல்ல…”
“நல்லா பாரு மித்து..மறந்துட்டு எங்கயாவது வச்சிருப்ப..என்றவள் கடைசியா எப்போ பார்த்த என்றாள்…”
“உன் ப்ரண்டோட பிறந்த நாள் பங்ஷனுக்கு போனப்போ போட்டு வந்தேன்..அதுக்கு அப்பறம் நான் அதை எங்கயும் போட்டு போகவே இல்ல….”
“மித்து அந்த பங்ஷன்ல எதாவது தொலச்சிட்டியா…”
“தெரியல சுகு….ஆனா கொண்டு வந்து வச்ச மாதிரி தான் ஞாபகம் இருக்கு என்றாள்.
சரி..சரி நீ பதட்ட படாத…இங்க தான வச்ச..கண்டிப்பா இங்க தான் எங்கயாவது இருக்கும் எனும்போதே வீட்டின் அழைப்பு மணி சப்தம் கேட்க,சுகன்யா சென்று கதவை திறந்தாள்..அங்கே முகத்தில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார் ரத்னவேல்…
“அப்பா………என்று கத்தியவள் அவரை அணைத்து கொண்டாள் ….
சுகன்யா கத்திய கத்தலில் அறையை விட்டு வெளியே வந்த மித்ரா,அங்கு நின்று கொண்டிருந்தவரை கண்டு,அப்பா…….ஆ என்று அவளும் ஒடிச் சென்று அணைத்து கொண்டாள்….
தனது இரண்டு மகள்களையும் அணைத்திருந்த ரத்னவேலின் கண்கள் சிறிது பனித்தன..
“அப்பா, இப்போ தான் எங்கள பாக்க உங்களுக்கு நேரம் கிடச்சதா.. “என்று மித்ரா செல்லமாய் கோபித்து கொள்ள…,இனிமே அப்பா உங்க கூட தான் இருக்க போறேன் என்று கூற, இருவரது முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது…
“அப்பா, அப்போ வேலைய விட்டீங்களா,கேட்டாள் சுகன்யா….”
“இல்லடா இங்கயே மாத்திட்டு வந்துட்டேன் என்றார்…..”
அப்பா…அப்புறம் என்று மித்ரா எதோ கேட்க போக, அப்பாவ வெளியே நிக்கவச்சி தான் பேசுவீங்களா..உள்ள கூப்ட மாட்டீங்களா,என்று சிரித்து கொண்டே கேட்க, அய்யோ..,ரொம்ப நாள் கழித்து உங்கள பாத்த சந்தோஷத்துல மறந்துட்டோம் என்று ஒரு சேர கூறியவர்கள் அவரை அழைத்து கொண்டு உள்ளே சென்றனர்….
அப்பா நீங்க உட்காருங்க நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன் என்ற மித்ரா அங்கிருந்து செல்ல, சுகும்மா மாப்பிள்ளை வீட்லேருந்து வரத பத்தி மித்துட்ட சொல்லிட்டியா என்றார்…
இன்னும் இல்லப்பா..அவுங்க வந்ததும் ஒரு சர்பிரைஸ் குடுக்கலாமேனு சொல்லல…
சரிடா..எம்பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்க போறத நெனச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..அதேபோல உனக்கும் சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிட்டா,உங்களுக்கு பிறக்க போற கொழந்தைய கொஞ்சிட்டு என் காலத்த ஒட்டிடுவேன் என்று ஒரு தந்தையாய் தன் மனதின் ஆசையை வெளிபடுத்தினார்…
அப்பா. இந்தாங்க காபி என்று அவர் கையில் கொடுக்க, அதனை வாங்கி கொண்டவர் மித்ராவையும் அமர வைத்து கதை பேச தொடங்கினர்..அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே காலிங் பெல சத்தம் போட, இது கண்டிப்பா கவிலாஷ் தான் என்று நினைத்த சுகன்யா,ஏய் மிது நீ போய் கதவ திற என்றாள்..
ஏன் நீ போய் திறந்தா என்ன என்று கேட்டுக் கொண்டே கதவை திறந்தவள்,அங்கே கண்களில் கூலிங் கிளாஸ் உடன் நின்று கொண்டிருந்தவனை கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்து போனாள்…
ச..சார் நீங்க என்று வார்த்தை வராமல் தந்தியடிக்க,
நான் இன்ஸ்பெக்டர் கண்ணன்..இறந்து போன தாமோதர் பத்தி உங்கிட்ட ஒரு விசாரனை பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்..
என்..கிட்ட எ..என்ன…,சரி உள்ள வாங்க என்று அழைத்தவள்,அவனை உள்ளே அனுப்பிவிட்டு திரும்ப, வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது..வாசலில் தன் பார்வையை செலுத்தியவள் அதிலிருந்து இறங்கியவர்களை கண்டு மேலும் அதிர்ச்சியானாள்….
இவுங்க எல்லாம் இங்க எதுக்கு வராங்க என்று கண்ணனுக்குமே அதிர்ச்சி தான்….
அனைவரையும் அழைத்து கொண்டு ஷோபாவில் அமரவைத்தவள் உடம்பு லேசாய் நடுங்க தொடங்கியது….
அதனை உணர்ந்த சுகன்யா மெதுவாய் அவளை அணைத்து,ஏய் மித்து பயப்படாத, இவுங்க எல்லாம் கவிலாஷோட பேமிலி..உன்ன பொண்ணு கேட்டு வந்துருக்காங்க…என்றவளை ஆச்சரியமாய் பார்த்தாள் மித்ரா….
சுகு கவி..கவிய உனக்கு எப்படி தெரியும்?
எப்படியோ தெரியும்.அதெல்லாம் உனக்கு எதுக்கு…அப்பா கூட உன் கல்யாணத்த பேசி முடிக்க தான் வந்துருக்கார்..என்று குண்டை தூக்கி போட, இதெல்லாம் ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல, என்று கோவபட்டாள்..
உனக்கு ஒரு சர்பிரைஸ் குடுக்கலாமேனு தான் என்றாள்….
வணக்கம்ங்க,நான் மித்ராவோட அப்பா என்று தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர்,மித்தும்மா எல்லாருக்கும் காபி போட்டு எடுத்துட்டு வா என்றார்….”
சரிப்பா,என்று அவள் உள்ளே செல்ல, பத்மாவதி அங்கிருந்தவர்களை அறிமுகபடுத்தினார்…
தம்பி யாருனு சொல்லவே இல்லையே,என்று தாமோதர் கேட்க…”
அங்கு இருந்த மூவரும் ஒருவர் முகத்தை பார்த்து கொண்டனர்..
“இந்த தம்பி உங்க வீட்டு பையன் இல்லையா…”கேட்டார் பத்மாவதி..
இல்லைங்க…உங்க கூட வந்தவருனு தான் நெனச்சிருந்தேன்…என்றவர் கண்ணனை பார்க்க, மற்ற மூவரும் அவனையே தான் பார்த்தனர்….அவனோ அந்த அறை முழுவதும் தனது பார்வையால் நோட்டமிட்டு கொண்டிருந்தான்…
அதேநேரம் வாசலில் டேய் பிரனா,நீ இவர கூட்டிட்டு போ..நான் இங்கயே இறங்கிறேன் என்றான் கவிலாஷ்…
“டேய் கவி..இது யாரு வீடு..நீ ஏன் இங்க இறங்குற,புரியாமல் கேட்டான்…”
டேய் இது மிது வீடுடா…அம்மா இங்க தான் மிதுவ பாக்க வந்துருக்காங்க..என்றான் சிறு வெட்கத்துடன்….
டேய் பிராடு,என்கிட்ட எதுவுமே சொல்லல…ஏன் உன்னோட வருங்கால மனைவிய நான் பார்க்க கூடாதா?என்றான் சிறு ஆதங்கத்துடன்….
“டேய் அப்படியெல்லாம் ஒன்னுமில்ல..நீ இவர கூட்டிட்டு போறள..அதனால தாண்டா..”
“பரவால்லடா நானும் வரேன் என்றவன்,ஐயா நீங்களும் வாங்க..ஒரு பைவ் மினிட்ஸ் உள்ள போய்ட்டு வந்துடலாம் என்றான்….”
“இல்ல தம்பி நான் எதுக்கு,நீங்க போய்ட்டு வாங்க என்றவரை வலுகட்டாயமாய் அழைத்துச் சென்றான்…..”
“அங்கே அனைவரும் கண்ணனை பார்க்க,மித்ரா அனைவருக்கும் காபி எடுத்து வந்து கொடுத்தாள்…”
“தம்பி நீ…..ங்க….,என்று ரத்னவேல் கேட்க, இன்ஸ்பெக்டர் கண்ணன் என்று கூறிக் கொண்டே உள்ளே வந்தான் கவிலாஷ்…அவனின் பின்னே மற்ற இருவரும் வந்தனர்….”
“மித்ராவிற்கோ வியர்த்து கொட்டியது..தனது கைகளை பிசைந்தபடி நின்று கொண்டிருந்தாள்…அங்கு அமர்ந்திருநத அனைவருக்குமே அதிர்ச்சி தான்…”
“கண்ணன் நீங்க இங்க என்ன பண்றீங்க என்றான் கவிலாஷ்…”
“சார் தாமோதர் சார் கொலை சம்மந்தமா இவுங்க கிட்ட விசாரிக்கலாமேனு வந்தேன் என்று மித்ராவை கை காட்டினான்…”
“அவன் கூறியதை கேட்ட சுபத்திராவிற்கு தூக்கி வாரி போட்டது…”இந்த பொண்ணுகிட்ட விசாரிக்க என்ன இருக்கு என்றார் பதட்டத்துடன்…”
“என்ன சொல்றீங்க கண்ணன்..அவள எதுக்கு விசாரிக்கனும் என்றான் சற்று குரலை உயர்த்தி….”
“சார் இவுங்க தான் தாமோதர் சார கடைசியா பாத்திருக்காங்க..” என்றான்…
அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியான கவிலாஷ்,என்ன சொல்றீங்க என்றான்…
எஸ் சார்..இவுங்க தான் அவர கடைசியா பார்த்திருக்காங்க.. மறுநாளிலிருந்து இவுங்க வேலைக்கு வரவே இல்ல…அதனால தான் இவுங்கள விசாரிக்கலாமே வந்தேன்..ஆனா வந்த இடத்துல இப்படி நடக்குமுனு நான் எதிர் பார்க்கல சார்….என்றான்..
“அவன் கூறியதை நம்பாமல் கவி நேரா மித்ராவிடம் சென்றான்…மிது இவரு சொல்றதெல்லாம் உண்மையா என்றான்…”
அவள் எதுவும் கூறாமல் அமைதியாய் நின்றாள்..அவளது உடல் அவளறியாமலே நடுங்கி கொண்டிருந்தது…
“உன்கிட்ட தான் கேக்குறேன்..என்றான் குரலை உயர்த்தி சற்று கோபமாக…”
“லா..லாஷ். அ..து..வந்து…..என்று இழுக்க, அங்கு நின்றிருந்த அனைவரும் அவளையே தான் பார்த்தனர்…”
“அப்போ அங்கிள நீதான் கொலை செய்தியா என்று கத்தினான் அடக்கபட்ட கோவத்துடன்…”அவன் கத்திய கத்தலில் அனைவருமே பயந்து போனர்…”அப்போது சுபத்ராவின் போன் அடிக்க கட் செய்தார்..
“நா..நான் வே..வேனுனே. பண்ணல..லா..லாஷ்..அது எதேச்சயா நடந்த..து..இ..ப்படி ஆகுனு நா..நான் நினைக்கல..என்றாள் தட்டு தடுமாறி….”அவள் கூறியதை அனைவரும் நம்ப முடியாமல் கேட்க, ஒருவர் மட்டும் அவளையே பார்த்திருந்தார்…
சுபத்ரா அவளின் முன்னால் வந்து அவளது கன்னத்தில் ஒங்கி ஒரு அறை விட்டார்..ஏண்டி என் புருஷன கொன்ன..அவர் உனக்கு என்ன பாவம் பன்னினார் என அவளை சரமாரியாய் அடித்தார்….”
ஆன்ட்டி ப்ளீஸ் விடுங்க..என்ன நடந்ததுனு முழுசா கேக்கலாம் என்று அவரை சமாதானம் படுத்தினாள் சுகன்யா….
மித்து சொல்லு என்ன நடந்தது..எதுக்காக அவர கொலை செஞ்ச,என்றாள் சுகன்யா…
மித்ரா அழுது கொண்டே அன்று நடந்ததை அப்படியே கூறினாள்..அதனை கேட்ட அனைவருக்குமே அதிர்ச்சி.. சுபத்ராவோ தன் கணவனா அப்படி நடந்து கொண்டான் என்று நினைக்கயிலே அவருக்கு அழுகை பொங்கி வந்தது…
“ஏம்மா ,அப்போ அவர உனக்கு முன்னாடியே தெரியுமா என்றார் பூங்கோதை….”
“ம்ம்…
“எப்படி…..”
அ..அது..அது…என்று தடுமாறியவள்,அடுத்த நிமிடம் தன்னை சமாளித்து கொண்டு,இதற்கு மேல் உண்மையை மறைத்தால் சரியாகாது என்று நினைத்து,தனக்கு திருமணம் ஆனது முதல் சிறைக்கு சென்று வந்தது வரை அனைத்தையும் கூறி முடித்தாள்..
“நீ உன் புருஷன கொன்னுட்டு ஜெயிலுக்கு போனதுக்கு என் புருஷன ஏன்டி கொன்ன…என்று கத்தினார் சுபத்ரா…”
“நான் அவன கொன்னதுக்கு காரணமே உங்க புருஷன் தான் என்று அவளும் கத்தினாள்…”
“நீ..என்ன சொல்ற….”
ஆமா,அந்த அயோக்கியன்கிட்ட சொல்லி என்ன ஒரு நாள் படுக்க கூப்டதே உங்க புருஷன் தான்..அவன் மட்டும் என்னைய கூப்டாம இருந்திருந்தா,எனக்கு பிடிச்சிருக்கோ,பிடிக்கலயோ எனக்கு விதிச்சது இவ்வளவு தானு நெனச்சி நான் என்னோட வாழ்க்கைய ஒட்டிருப்பேன்..என்னோட அப்பா அம்மா எங்கூட இருந்திருப்பாங்க,நான் கொலை செஞ்சிருக்க மாட்டேன்,மூனு வருஷம் ஜெயில்ல இருந்துருக்க மாட்டேன்…என்னோட வாழ்க்கையே தலைகீழா மாறி போக காரணம் உங்க புருஷன்..அவர் மட்டும் தான்…அதோட விட்டாரா!இத்தன வருஷத்துக்கு அப்புறம் என்ன பாத்தும் கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தாம,மறுபடியும் என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்னார்..அதனால அடிச்சேன்..அதுல செத்துட்டார்..இதுல என்னோட தப்பு என்ன இருக்கு..என்று ஆவேசமாய் கூறி முடித்தவள்,அங்கிருந்த தண்ணீரை எடுத்து குடித்தாள்….
அவள் கூறியதை கேட்டு அனைவரும் ஸ்தம்பித்து போய் நின்றனர்..அவள் கூறிய அனைத்தும் உண்மை தானே..!அதனை யாராலும் மறுக்க முடியாது..சுபத்ராவின் நிலமை தான் படு மோசமாய் இருந்தது..அவரால் மித்ரா கூறியதை நம்பவும் முடியவில்லை,நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..ஆனால் அவர் தொட்டு தாலி கட்டிய மனைவி ஆயிற்றே..இதுவரை அவளுக்கு தெரிந்து அவர் எந்த தப்பும் செய்ததில்லயே! மித்ரா கூறியதை அவர் மனம் ஏற்க மறுத்தது…..
இல்ல,நீ பொய் சொல்ற..என் புருஷன் அப்படி எல்லாம் பண்ணிருக்க மாட்டார்…என்று அழுது கொண்டே ஆற்றாமையில் பொங்கினார்….
அங்கு நின்றிருந்த அனைவருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் நின்றனர்…ஒரு பெண் தன் வாழ்க்கையில் இவ்வளவு துன்பம் அனுபவித்திருக்கிறாள்…அவள் எதற்காக ஒருவரை பற்றி தப்பாக கூறவேண்டும்,என்ற எண்ணமே அங்கிருந்தவர்களின் மனதில் தோன்றியது…அவர்களுக்கு சுபத்ராவிடம் எப்படி கூறி புரிய வைப்பது என்று தெரியாமல் குழம்பி போய் நின்றனர்….
அக்கா..அக்கா..அவரபத்தி உங்களுக்கு தெயியும்லக்கா..அவர் அப்படி பட்டவரா?சொல்லுங்க அக்கா..சொல்லுங்க அவர் அப்படி பட்டவரா?என்று கதறினார்..அவர் இறந்த செய்தியை கேட்டு கூட இவர் இவ்வளவு அழவில்லை..ஆனால் தன் கணவன் ஒரு காமுகன் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை…கதறினார்..அக்கா இந்த பொண்ணு பொய் சொல்றா..நம்பாதீங்க என்று கெஞ்சினார்…
ஆமா அந்த பொண்ணு பொய் தான் சொல்றா..என்று ஒலித்த அந்த கனீர் குரலில் மித்ரா உட்பட அனைவரும் அதிர்சியாய் குரல் வந்த திசையை நோக்கினர் …
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.