அந்த இடமே அவ்வளவு அமைதி..ஒரு சின்ன குண்டூசி விழுந்தால் கூட சத்தம் பெரிதாய் கேட்பது போல்..அந்த அமைதியை கிழித்தது சக்திவேலின் கதறல்…அய்யோ!என் கண்ணு முன்னாடியே என் பொண்ண நாசபடுத்தினானுங்களே என்று கதற, அவரை சமாதான படுத்த யாரும் முன்வரவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையில் இருந்தனர்..பெண்கள் மூவரும் ஜடமாய் அமர்ந்தனர்…அவர்களது உணர்வுகள் கொல்லபட்டன..கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது..கனவனே தெய்வம் என்று நினைத்து வாழ்ந்தவர்களுக்கு அவர்களின் சுயரூபம் தெரியாமல் போனது தான் அந்தோ பரிதாபம்..?அந்த நேரத்தில் மூன்று பெண்களின் மனதிலும் ஓடியது ஒன்று தான்..வெறும் காமுகனா அவர்கள்?சதைக்கு அழையும் நாய்களா?இவ்வளவு தானா?இவ்வளவு கேவலமான மிருகங்களா?பாசத்தை விட உணர்ச்சிகள் தான் முக்கியமா?மனசை விட மாமிசம் தான் முக்கியமா?அவர்கள் இதுநாள் வரை எங்கள் மீது காட்டியது எல்லாம் பாசம் இல்லையா?இந்த சதைக்காக தானா?அவர்கள் மனது கொதித்தது..சக்திவேலின் கதறல் அவர்களுக்குள் புயலை புகுத்தியிருந்தது..தரம் கெட்டவன் மிருகத்திடமா நான் கர்பம் சுமந்தேன்..ஆக்கி,இறக்கி,பரிமாறி,நோய்க்கு கண் விழித்து,விரதமிருந்து பதபதைத்துப் பூஜை செய்து…ச்சை..வீண்..எல்லாமே வீண்..நாயை மனுஷன் என்று நினைத்தது தவறு.காமத்தை அன்பு என்று நினைத்தது தவறு.இவர்களை போன்ற மிருங்கள் உயிரோடு இருப்பதே தவறு..என்று அவர்களால் அந்த நிமிடம் நினைக்க மட்டுமே முடிந்தது..அங்கு நின்று கொண்டிருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர் வழிந்தது..ப்ரனேஷ் முற்றிலும் செயலிழந்து போனான்..யாரை ஹீரோவாய் நினைத்து வாழ்ந்தானோ,அவர் இப்படி ஒரு கேடு கெட்டவரா?அந்த நினைப்பே அவனை கொன்று தின்றது…கவிலாஷ் ஒன்றும் கூறாமல் அமைதியாய் இருந்தான்..கண்கள் மட்டும் ரத்தமென சிவந்திருந்தது…அவனது தந்தை இப்போது உயிரோடிருந்தாள் அவனே அவரை கொன்றிருப்பான்..அவ்வளவு கொலை வெறியில் இருந்தான்…கண்ணன் மட்டும் தன்னை சமாளித்து கொண்டு சக்திவேலை தேற்றினான்..மித்ராவிற்கு தலை சுற்றுவது போல் இருந்தது..ஏதிரே நிற்பவர்களின் முகம் மங்கலாய் தெரிந்தது..இருந்தும் தன்னை சமாளித்து நின்று கொண்டிருந்தாள்…
“கண்ணன், ஐயா உங்கள எப்படி சமாதானம் படுத்துறதுனு தெரியல..உங்களோட இழப்பு ரொம்ப பெரிது..ரொம்ப கொடுமையானது..ஆனா அழுகிறதுக்கான நேரம் இது இல்ல.முதல்ல உங்க பொண்ணு உயிரோட இருக்காங்களானு கண்டுபிடிக்கனும்..உங்க பொண்ண பத்தின அடையாளம் எதாவது சொல்லுங்க என்றான் சக்திவேலிடம்…
எம் பொண்ணு,பொண்ணு அடையாளம்.,என்று அவர் திணற, ஆமாங்கய்யா,எதாவது முகத்துல தழும்பு,இல்ல வேற எதாவது என்று கேட்க, சட்டென தனது பாக்கெட்டிலிருந்து அந்த செயினை எடுத்தார்…இதே போல ஒரு செயின் என் பொண்ணு போட்டிருந்தா,என்று காட்ட, அதனை வாங்கி பார்த்த கண்ணன் முற்றிலும் அதிர்ந்து போனான்…
கவிலாஷிடம் திரும்பியவன் சார் இந்த செயின் என்று ஏதோ கூற வர, அவன் கண்களை இருக்கமாய் மூடி,பின் மெல்ல கண்களை திறந்து
“ஆமா ” இது என்னோட அப்பா இறந்த இடத்துல கிடச்ச அதே செயின் போல தான் இருக்கு என்றான்..சட்டென கண்ணனின் கையிலிருந்து செயினை பிடுங்கினார் ரத்னவேல்..அதனை திருப்பி திருப்பி பார்த்து விட்டு,சார்..ச..சார் இந்த செயின் போல எங்க மித்ரா கிட்ட ஒன்னு இருக்கு என்றார்…
அதனை கேட்ட அனைவருக்குமே அதிர்ச்சி…அப்போ மித்ரா தான் இவருடைய பெண்ணா?கடவுளே அப்படி இருக்க கூடாது என்று கவிலாஷின் மனம் துடிக்க, எங்க அந்த செயின காட்டுங்க என்று கண்ணன் கூற, சார் சார் அது எங்கயோ மிஸ் ஆச்சு என்றாள் சுகன்யா..
இதுவானு பாத்து சொல்லுங்க என்றவர்,தனது பாக்கெட்டிலிருந்து செயினை எடுத்து காட்ட, அதனை பார்த்த சுகன்யா இது தான் சார் என்றாள்….
நடப்பது ஒன்றும் புரியாமல் மித்ரா நிற்க,சக்திவேலின் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவென கொட்டியது.கவிலாஷ் ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் இருந்தான்..தன் அப்பாவையும் கொன்றது மித்ரா தான் என்று தெரிந்தும் அவன் எதுவும் கூறாமல் அமைதியாய் நின்றார்…பத்மாவதியும் நடப்பதை நம்ப முடியாமல் நின்று கொண்டிருந்தார்….எ..ம். பொண்ணு எம்..பொண்…ணு என்று கூறிக் கொண்டே மெல்ல அடிவைத்து மித்ராவை நோக்கி வர,மித்ராவிற்கு எதிரே வருபவரின் முகம் மங்கலாய் தெரிய, சட்டென சக்திவேலை தள்ளி விட்டு தான் கொண்டு வந்திருந்த கத்தியால் மித்ராவை குத்தியிருந்தாள் ஷாரிக்கா…..அதனை கண்ட அனைவரும் “ஏய்” என்று அலறி விட்டனர்…குத்தியவள் அவளது கழுத்தை பிடித்து நீ தான என் அப்பாவ கொன்ன..இப்படி தான துடிச்சிருப்பார் அவரும்,என்று அவள் கழுத்தை பிடித்து நெறிக்க,”யேய் விடு அவள”என்று ப்ரனேஷும்,கவிலாஷூம் அவளை தடுத்தனர்…
டேய் கவி நான் சொன்னல்ல, அப்பவே சொன்னேல்ல என் அப்பாவ கொன்னவுங்க நான் என் கையாலயே கொல்லுவேனு..பாத்தியா பாத்தியா நான் குத்திட்டேன்..என் அப்பாவ குத்துனவல நான் குத்திட்டேன் என்று புலம்ப, அவளை திருப்பி ஒங்கி கன்னத்தில் ஒரு அறை விட்டார் சுபத்ரா…ஷாரிக்கா ஒன்றும் புரியாமல் அன்னையை பார்க்க, அதற்குள் அவளை தூக்கி கொண்டு கவிலாஷ் ஒடினான்…
[the_ad id=”6605″]
“இதோ பாருடி அந்த பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு,பெத்த பொண்ணுனு கூட பாக்க மாட்டேன்..நானே உன்ன கொண்ணுடுவேன் என்று எச்சரித்தவர்,அடுத்த நிமிடம் அவரும் கவிலாஷின் பின்னே ஓடினார்….ஷாரிகா நடப்பது ஒன்றும் புரியாமல் குழம்பி போய் நின்றாள்…
இங்கு சமி அமைதியாய் படுத்திருந்தாள்..அவளது மனம் ஒருநிலையில் இல்லாமல் துடித்தது…ரவீனா எங்கோ வெளியே சென்றிருக்க,பூங்கோதையும் வீட்டில் இல்லை…அவள் மட்டும் தனியாய் இருந்தாள்…அவளது மனமோ ப்ரனேஷை நினைத்து துடித்தது… நேற்று ப்ரனேஷ் அவளிடம் நடந்ததை நினைத்து பார்த்தாள்..
ப்ரனேஷும்,ரவீனாவும் சாப்பிட அமர்ந்திருந்தனர்…”ஏய் எங்கடி அந்த சமி பொண்ண காலையிலேருந்து பாக்கவே இல்ல..ரூம்லயே உக்காந்து என்ன பண்றா,என்ற பூங்கோதையிடம்,ம்மா அவளுக்கு தலைய வலிக்குதாம்.சாப்பாடு வேண்டானு சொல்லிட்டா,என்றாள்.
தலைய வலிச்சா சாப்பிட கூடாதா,நேத்து கூட நல்லா தான இருந்தா..நான் கூட அவகிட்ட நம்ம ப்ரனேஷ பத்தி பேசிட்டு இருந்தேனே என்றவரிடம், அண்ணன பத்தி என்னம்மா பேசுன என்றாள் சிறு பதட்டத்துடன்…அது ஒன்னுமில்லடி நம்ம ஷாரிக்கா அவள விரும்பினால அதபத்தி பேசிட்டு இருந்தேன் என்றவர்,அது சரி அவளோட அப்பா,அம்மா எல்லாம் எங்க இருக்காங்க…இந்த பொண்ணு அவுங்க கிட்ட போன்ல பேசி கூட நான் பாக்கலயே,என்றவரின் கேள்விக்கு ரவீனா திருதிருவென விழித்தாள்…
என்னடி இப்படி முழிக்கிற..அவளுக்கு பெத்தவுங்க இருக்காங்கல்ல…என்க ரவீனா ப்ரனேஷை பார்த்தாள்..அவன் கண்களால் அவளை சமாதானம் படுத்திவிட்டு,ம்மா அப்பா போன் பண்னார்..இந்த வாரம் ஊருக்கு வரராம்..அப்பா வந்துட்டா நீ எங்கள மறந்துடுவல பூவு என்று பேச்சை திசைதிருப்ப, அது சரியாய் வேலை செய்தது….
“டேய் கொஞ்சம் வாய மூடிட்டு சாப்பிடுடா என்றார் சிறு வெட்கத்துடன்…”
“வாய மூடிட்டு எப்படிம்மா சாப்பிடுறது என்று தனது முக்கியமான சந்தேகத்தை கேட்க, அவனை முறைத்தார்….
“சரி சரி இப்படி முறைக்காத..பாக்க பயமா இருக்கு என்றவன் தனது தட்டை எடுத்து கொண்டு கிளம்ப,டேய் தட்டை எடுத்துட்டு எங்கடா போற என்றவரிடம்,எனக்கு முக்கியமான ஒரு கோல் பேசனும்..நான் ரூம்க்கு போய் பேசிட்டு சாப்பிடுறேன் என்று கூறிவிட்டு தனது அறைக்கு செல்ல முற்பட, அதுவரை அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த சமி அவன் வருவதை அறிந்து தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்…ரவீனா அரக்க பரக்க தின்றுவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்…
“ப்ரனேஷ் உணவை எடுத்து கொண்டு மெல்ல சமியின் அறைக்குள் நுழைந்தான்..அங்கே முகமெல்லாம் சோர்ந்து போய் அமர்ந்திருந்தவளை கண்டு,குல்பி என்றான்..சட்டென அவனை அங்கு கண்டதும் திருதிருவென விழித்தவள்,என்ன என்பது போல் அவனை பார்க்க, உனக்கு தலைவலினு ரவீனா சொன்னா…அம்மா காலையிலேருந்து நீ சாப்பிடலனு சொன்னாங்க.அதான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்தேன்..நீ போய் முகத்தை கழுவிட்டு வந்து சாப்பிடு என்றவன் உணவை மேசையின் மீது வைத்தான்…அவன் கூறிய எதையும் காதில் வாங்காமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்…
“ஓய் குல்பி எதுக்கு என்ன இப்படி பாக்குற..”போய் முகத்த கழுவிட்டு வா என்றவனின் குரலில் இருந்தது அதட்டலா,அன்பா என்று புரியாதவள் மெல்ல எழுந்து போய் முகத்தை கழுவி விட்டு வந்தாள்….
இந்தா சாப்பிடு என்று அவள் முன் தட்டை நீட்ட, அதனை வாங்கியவள் உண்ணாமல் அப்படியே அமர்ந்திருக்க, சட்டென தட்டை பிடுங்கியவன் உணவை எடுத்து அவளுக்கு ஊட்ட போக, அவனையே பார்த்திருந்தாள்..”ந்தா சாப்பிடு என்று கூற, மெல்ல தன் வாயை திறந்தாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது..தனது தாயிற்கு பிறகு தனக்கு ஊட்டிவிடுவது இவனே…அவளையுமறியாமல் சட்டென உணவை எடுத்தவள் அவனது வாயருகே கொண்டு செல்ல, இப்போது அவளை பார்ப்பது அவனது முறையாயிற்று…
சட்டென தான் செய்த காரியம் புரிய,கையை மெல்ல கீழே இறக்க,சட்டென அவளது கையை பிடித்து அவளது கையில் இருந்த உணவை பெற்றுக் கொண்டான்…இப்படியே இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக் கொண்டு உண்டு முடித்தனர்…குல்பி நீ படுத்துக்கோ நான் உனக்கு தைலம் தேச்சி விடுறேன்.என்றவன் அவளை படுக்க வைத்து அவளது நெற்றியில் தைலத்தை தேய்த்து விட, அவனது கை பட்டதும் அவளது உடல் சூடானது..மெல்ல எழுந்தவள் அவனை தடுத்து,வேண்டாம் பாசு நானே தேச்சிகிறேன் என்றாள்…
அவள் அப்படி கூறியதும் அவளை முறைத்தவன்,உனக்கு ஒரு தைலம் தேச்சி விட கூட எனக்கு உரிமை இல்லையா…அவ்ளோ வேண்டாதவனா ஆயிட்டேனா என்றவனிடம் எப்படி கூறுவாள்,?உன் கை பட்டால் எனக்கு ஏதோ செய்கிறது,ஆயூசு முழுக்க இந்த கைய புடிச்சிட்டே இருக்கனுனு தோனுது.. என்று…
[the_ad id=”6605″]
அவள் அமைதியாய் இருப்பதை பார்த்து கோபம் கொண்டவன் தைலத்தை தூக்கி போட்டு விட்டு அங்கிருந்து நகர,சட்டென அவனது கையை பிடித்தாள்….இதனை கொஞ்சமும் எதிர் பார்க்காதவன் திரும்பி அவளை பார்க்க,பா..பாசு நான் உன்னோட மடில கொஞ்ச நேரம் படுத்துக்கவா,என்றவளை புரியாமல் பார்த்தவன் சட்டென அமர்ந்து அவளை தன் மடியில் சாய்த்து கொண்டான்…அவனது மடியில் படுத்தவள் மனமோ நிம்மதியை உணர்ந்தது..எத்தனையோ நாள் தூங்காமல் இருந்தவளுக்கு,அவனின் மடி தாயின் மடி போல் இருந்தது..தனக்கான இடம் இது தான் என்பது போல் அவனது இடுப்பை இறுக்கி அணைத்து கொண்டு உறங்கினாள்.சில நாட்களாக வராமல் இருந்த தூக்கம் படுத்த உடனே வந்தது அவளுக்கு…நிம்மதியாய் உறங்க ஆரம்பித்தாள்…
“ப்ரனேஷ் அவளுடைய முடியை அழகாய் ஒதுக்கி விட்டு “ஏண்டி இப்படி பண்ற.உன் மனசுல என்னதான் இருக்கு..என்னால புரிஞ்சிக்கவே முடியல…நான் விலகி போன நீ கிட்ட வர,நான் கிட்ட வந்தா நீ விலகி போற…அது ஏன்னு தான் எனக்கு புரிய மாட்டுது..ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரியுது குல்பி..சந்தோஷமா போயிட்டு இருந்த உன் வாழ்க்கையில நான் எப்போ வந்தேனோ அப்பவே உன்னோட நிம்மதி எல்லாம் போச்சு. என்று சத்தமாகவே கூறினான்…தூங்கி கொண்டிருந்தாலும் அவன் கூறியதை அவளது செவி சேமித்து வைத்து கொண்டது….மெல்ல குனிந்தவன் அவளது நெற்றியில் இதமாய் முத்தமிட்டு,அவளை மெல்ல தூக்கி படுக்கையில் படுக்க வைத்தவன் அவளுக்கு போர்த்திவிட்டு சென்றான்…அதனை நினைத்து பார்த்தவளுக்கு கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது…இதுக்கு மேலயும் என்னால இங்க இருக்க முடியாது..இப்படியே போனா என் மனசுல இன்னும் அவன் நெனப்பு அதிகமா வந்துடும்..அப்படி வர கூடாது…நான் அவனுக்கு ஏத்த பொண்ணு இல்ல..அவனுக்கு அந்த ஷாரிக்கா தான் சரியான ஜோடி..அவள கண்ணாலம் கட்டிட்டு சந்தோசமா இருக்கட்டும்…நான் இங்கேருந்து போயிடுறேன்..என்றவள் அரக்க பரக்க தனது துணிகளை ஒரு பெட்டியில் போட்டவள், அதனை எடுத்து கொண்டு மாடியிலிருந்து இறங்கியவள் அங்கே ஹாலில்அமர்ந்திருந்தவரை கண்டு முற்றிலும் அதிர்ந்து போனாள்..
அந்த மருத்துவ மனையில் அனைவரும் பதட்டத்துடன் நின்றிருந்தனர்… “சுபத்ராவோ,கடவுளே அந்த பொண்ணுக்கு எதுவும் ஆக கூடாது என்று வேண்டிக் கொண்டவள் முடிந்தவரை ஷாரிக்காவை முறைத்து பார்த்தார்…”ம்மா என்னாச்சுமா உனக்கு..அவ உன் புருஷன கொன்னவம்மா.அவளுக்காக இப்படி உருகி உருகி வேண்டிகிற….”
“அவன மாதிரி ஒரு அயோக்கியன் உயிரோட இருக்குறதுக்கு பதிலா செத்ததே மேலுடி…”என்றவரை அதிர்ச்சியாய் பார்த்த ஷாரிக்கா”என்னம்மா சொல்ற…” என்றாள்…அவர் நடந்த அனைத்தையும் கூற, ஷாரிக்கா அவர் கூறியதை நம்ப முடியாமல் பொத்தென அமர்ந்தாள்..அவளால் நம்ப முடியவில்லை..தனது தந்தை இவ்வளவு கேவலமானவரா என்று …தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன்.என் அப்பா அவள் வாழ்க்கையை அழித்து விட்டார்…நான் அவள் உயிரை அல்லவா பறிக்க நினைத்தேன்..அவருக்கும்,எனக்கும் என்ன வித்தியாயம் உள்ளது..மனசாட்சி இல்லாத ஒருவனுக்கு பிறந்ததால் என் மனம் கல்லாகி விட்டதா…உண்மை தெரியாமல் அரைகுறையாய் கேட்டதை வைத்து அவளை குத்தி விட்டேனே என்று வருந்தினால்…”ஆம் ஷாரிக்கா அவள் அன்னைக்கு கோல் செய்ய அவர் போனை கட் செய்வதற்கு பதிலா ஆன் செய்து விட்டார்..இங்கு மித்ரா சொல்லிய அனைத்தையும் போனின் வழியாக கேட்டவள்,போனை அனைத்துவிட்டு கொலைவெறியோடு வந்தவள் மின்னலை போல் உள்ளே புகுந்து,சக்திவேலை தள்ளிவிட்டு மித்ராவை குத்தினாள்..இப்போது நினைக்கையில் அவளுக்கு உடம்பு நடுங்கியது…
டாக்டர்..டாக்டர். என் மிதுக்கு எப்படி இருக்கு என்று கவி பதட்டமாய் கேட்க,பயப்பட எதுவும் இல்லை. கத்தி ஆழமா குத்தல…இருந்தாலும் பிளட் ரொம்ப லாஸ் ஆகி இருக்கு.. “ஓ பாசிட்டிவ் குரூப் பிளட் இங்க ஸ்டாக் இல்ல…நீங்க வெளில அரேஞ் பண்ணுங்க..கொஞ்சம் சீக்கிரம் என்றார்….
டாக்டர் என்னோட ப்ளட் க்ரூப் “ஓ பாசிட்டிவ் தான்…நான் குடுக்குறேன் என்றாள் ஷாரிகா… ஓ மை குட்நஸ்,என்றவர் நர்ஸ் இவுங்கள கூட்டிட்டு வாங்க என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்…வெளியில் அனைவரும் பதட்டமாகவே நின்றிருந்தனர்…அடுத்த அரைமணி நேரத்தில் வெளியே வந்த டாக்டர் பயப்பட வேண்டாம்.. பேஷண்ட் நல்லா இருக்காங்க …கொஞ்சம் மயக்கத்துல இருக்காங்க…நீங்க போய் பாருங்க எற்று கூறிவிட்டு சென்றார்…
அனைவரும் உள்ளே செல்ல,ஷாரிகா அவளது கையை பிடித்து கொண்டு மன்னிப்பு வேண்டினாள்..அவளிடம் பதிலுக்கு சிறு புன்னகையை உதிர்த்தவள்..அ..அப்பா என்றாள்…
கண்களில் வழியும் கண்ணீரோடு மெல்ல நடந்து அவளிடம் வந்த சக்திவேல் “கண்ணம்மா என்று கூறி அழுதார்..இன்னும் நான் என்னவெல்லாம் பாக்கனுனு இருக்கோ என்று கதறினார்…
கவிலாஷ் அவளது அருகில் அமர்ந்து அவளது நெற்றியை நீவி விட்டான்…
அப்பா. நான்..நான் உங்க பொ..பொண்ணு இ.இல்ல…என்று கூற, சுற்றி நின்ற அனைவரும் அதிர்ந்து போயினர்….
“எ..என்னம்மா சொல்ற…”
அ…ஆமா… ஒருநாள் எங்க பாட்டி வீட்டுக்கு போயிட்டு வரும் போது ஒரு சின்ன பொண்ணு அடிபட்டு கிடந்தா.அவள கொண்டு போயி ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம்…ஒரு வாரமா அங்க தான் இருந்தா..எங்க அப்பா தான் பாத்துகிட்டார்…ஒரு நாள் நானும் எங்க அம்மாவும் அப்பா கூட அந்த பொண்ண பாக்க போனோம்.அந்த பொண்ணு அங்க இல்ல..நாங்க தேடுனோம்.எங்கயுமே இல்ல..அப்போ அங்க இருந்த ரிஷப்சன்ல தன்னோட செயின கழட்டி குடுத்து,எங்க அப்பாகிட்ட குடுக்க சொன்னாளாம்…அந்த பொண்ண பாத்தா கண்டிப்பா இத திருப்பி கொடுக்கனுமுனு எங்க அப்பா என் கழுத்துல போட்டு விட்டார் என்று கூற, சுற்றி நின்ற அனைவருக்குமே அதிர்ச்சி…அந்த சிறுவயதிலயே மற்றவருக்கு கடனாளியாய் இருப்பது பிடிக்காமல் தன் செயினை கழட்டி கொடுத்த அந்ந சின்ன பெண்ணை நினைத்து அனைவரும் கண்கலங்கினர்…அப்படிபட்ட பெண் இப்போது எங்கு,எப்படி இருக்கிறாளோ என்று நினைக்கையிலே அவர்களுக்கு நெஞ்சு அடைத்தது…சக்திவேல் தன் மகள் கிடைத்து விட்டாள் என்ற மகிழ்ச்சியில் இருந்தவர் மித்ரா கூறிய செய்தியில் முற்றிலும் உடைந்து போனார்…
[the_ad id=”6605″]
“அய்யோ என் கண்ணம்மா எங்க இருக்க..இந்த அப்பாவ தேடி சீக்கிரம் வாடி செல்லமே என்று கதறினார்…அப்போது அங்கு வந்த டாக்டர் எதுக்கு பேஷண்ட சுத்தி இவ்ளோ பேர்..ஒருத்தர் இருங்க மத்த எல்லாரும் கிளம்புங்க என்றார்…அழுது கொண்டிருந்ல சக்திவேலை சமாதானம் படுத்திய ப்ரனேஷ் அவரையும்,அவனது அன்னையையும் அழைத்து கொண்டு செல்ல,ஷாரிக்கா தனது அன்னையை அழைத்து சென்றாள்..பத்மாவதி தனது மருமகளை தானே உடன் இருந்து பார்த்து கொள்வதாய் கூற, சுன்யாவும் பத்மாவதியும் மருத்துவமனையிலே தங்கி விட்டனர்..மித்ரா ஷாரிக்கா மீது எந்த கம்ளைண்டும் கொடுக்க வில்லை…
கவிலாஷ்”மிஸ்டர் கண்ணன் இந்த கேஸ இதோட முடிச்சிடுங்க…அவன்க செத்தது செத்ததாகவே இருக்கட்டும்…”
“சார் அப்போ அந்த ராஜசேகர்…”
“அவருக்கு கிடைக்க வேண்டிய தண்டனை கண்டிப்பா கிடைக்கும்.. “என்றவன் அங்கிருந்து கிளம்பினான்…
ஏய் சமி நீ இங்க தான் இருக்கியா..”எதுக்கு இப்படி திருதிருனு முழிச்சிட்டு இருக்க..இங்கே வா உனக்கு ஒருத்தவுங்கள அறிமுகபடுத்துறேன் என்று கூறியவள்,அங்கு அமர்ந்திருந்த ராஜசேகரை காட்டி இது என்னோட அப்பா…என்று கூறிய ரவீனா டாட் பேசிட்டு இருங்க இதோ வர்றேன் என்று கூறிவிட்டு நகர…. ,சமி உயர்கட்ட மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்தாள்….இது என் பாசோட அப்பனா…இருக்கவே முடியாது..என்று அவள் நினைத்து கொண்டிருக்க,…”
“ஹாய் சமி..ஹவ் ஆர் யூ என்றார்…”
“அவள் அவரை வெறித்து பார்க்க…ஏய் என்ன அப்படி பாக்குற என்றவரிடம்..,இனிமே பாக்க முடியாதே அதான் என்றாள்….
“வா…ஆட் …?ஏன் பாக்க முடியாது…”
“நான் இங்கிருந்து போய்டா இனிமே பாக்க முடியாதே,அதான் சொன்னேன்….”
“ஹா..ஹா.. அப்போ போகாதா…இங்கயே இரு..உன் பேரன்ஸ்கிட்ட நான் பேசுறேன்…”
“சமியின் முகம் கருத்து போனது..அவுங்க உயிரோட இல்ல என்றாள்…”
“சோ சேட்..என்றவர் எப்படி இறந்தாங்க என்றார்…”
சமி அவனை முறைத்து பார்த்தாள்…அவுங்களா சாவல மூனு மிருங்கள் சேர்ந்து என் குடும்பத்த என்கிட்டேருந்து பிரிச்சிட்டாங்க…”
“ராஜசேகருக்கு சிறிது பதட்டம் உண்டாக, என்ன..என்ன சொல்ற நீ…”
“புரியலயா,நான் என்ன சொல்றேனு புரியலயா….”பெரியய்யா,ரத்னவேல் இவுங்களையெல்லாம் மறந்துட்டியா,என்றாள் அவரை உற்று பார்த்தபடி…”
“நீ…நீ…மித்ரா…..”
“ஆமாண்டா அதே மித்ரா தான்…”உன்ன கொல்றதுக்காக காத்திருக்க அதே சங்கமித்ரா தான் என்றாள்….”
ஹா…ஹா….குட் ஜோக்….நீ…ஹா..ஹா..என்ன கொல்ல போற….என்று அடங்கமாட்டாமல் சிரிக்க, அடுத்து அவள் கூறியதை கேட்டு அவர் சிரிப்பு உதட்டிலே உறைந்தது….
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.