ராஜசேகர் தனது அறையில் மிகவும் டென்ஷனாக நடந்து கொண்டிருந்தார்…”இது எப்படி நடந்தது…”அவுங்க எப்படி தப்பித்து வந்தார்கள் என்று யோசித்தவருக்கு தலையை பிய்த்து கொள்ளலாம் போல் இருந்தது…அப்போது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த பூங்கோதை அவர் இப்படி நடப்பதை பார்த்து”எதுக்கு இப்படி குட்டி போட்ட பூனை மாதிரி நடக்குறீங்க..”என்றார் சிறு கடுப்புடன்…”
ஆஹ்…ஒன்னுமில்லை ..சும்மா தான்…”
ஊர்லேருந்து வந்ததிலிருந்து உங்க மூஞ்சே சரியில்லையே,எதோ திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி பயந்து போய் இருக்கீங்க…”
“அப்படியெல்லாம் எதுவும் இல்லை …..”கொஞ்சம் டயர்டா இருக்கு அதான்..”என்றார்…அதற்கு மேல் எதுவும் கேட்காமல் அமைதியாய் அமர்ந்தார்…அவரது மனமோ நிலையில்லாமல் இருந்தது…
ராஜசேகர் எதையோ தீவிரமாய் யோசித்து கொண்டிருந்தார்..நேற்று சமி கூறியது அவரது காதில் திரும்ப திரும்ப ஒலித்தது..”சிரிக்கிறியா…”நல்லா சிரிச்சிக்கோ.. இனிமே உன் வாழ்க்கையில் நீ சிரிக்கவே முடியாது..உன் கூட்டாளிங்கள மேல அனுப்புன எனக்கு உன்ன அனுப்புறதா கஷ்டம் என்று புருவத்தை உயர்த்தி கேட்க,…,நீ என்ன சொல்ற…அவன்கள கொலை செய்தது நீயா?என்றார் சற்று தடுமாற்றத்துடன்….”
ஆமா..நா தான்..நானே தான்..இந்த கையால தான் அவன்கள நெறிச்சு கொன்னேன்…உனக்கு ஒரு விசயம் தெரியுமா?உங்கள கொல்லனுனு நான் நெனச்சதே இல்ல…ஆனா எப்போ உங்க அந்த பார்ட்டியாண்ட பாத்தனோ அப்பவே முடிவு பண்ணிட்டேன்…உங்கள போட்டு தள்றதுனு..அதுக்கு ஏத்தாப்ல கடவுளும் நமக்கு சோக்கா வாய்ப்பு குடுத்தாரு…குடுத்த வாய்ப்ப சூப்பரா யூஸ் பன்னிகிட்டேன்…ரெண்டு பேரையுமே என் கையால ஆசை தீர அடிச்சு கொன்னேன்…என்றாள்…
அவள் கூறியதை கேட்டு ராஜசேகர் பயத்தில் அவளை பார்க்க…,
ஆனா பாரு அத பாக்க உனக்கு குடுத்து வைக்கல என்றவள்,ஆனா எனக்கு ஒரு டவுட்டு இருக்கு.அது என்னான உன் தோஸ்து அந்த வெள்ளபன்னி வெங்கட்டு இருக்கானே அவன நான் தான் கொன்னேன்..ஆனா இன்னொரு பொறுக்கி இருந்தானே அவன நான் கொல்றதுக்கு முன்னாடியே யாரோ அவன் மண்டையில அடிச்சிருக்காங்க…அது தான் யாருனு தெர்ல.என்று யோசித்தவள்,அதவுடு எத்தன பொண்ணுங்க வாழ்க்கைய கெடுத்தீங்களோ.அதுல யாராவது ஒருத்தி இருப்பா என்றாள்…அவள் கூற கூற அவரது முகம் கருத்து சிறுத்தது…
ஆனா அவன்க மாரி உன்ன பொசுக்குனு போட மாட்டேன்..கொஞ்ச கொஞ்சமா கொல்லுவேன் என்று உறுதியாய் கூறிவிட்டு சென்றாள்…அவர் பயந்து போய் போகும் அவளையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தார்….அப்போது அங்கு வந்த பூங்கோதையை அவர் கவனிக்கவே இல்லை….அவரின் பின்னால் வந்த சக்திவேலை கண்டு ஏகத்திற்கும் அதிர்ந்து போனார்…அவரது உடம்பில் பயபந்துகள் உருள ஆரம்பித்தன..அவர் சக்திவேலை வெறித்து பார்க்க, அண்ணா நீங்க உள்ள போய் ரெஸ்ட் எடுங்க என்று அவரை அனுப்பி விட்டு,அப்போது தான் ராஜசேகரை பார்ப்பது போல் நீங்க எப்போ வந்தீங்க என்றாள்…?
இங்க ஒருத்தன் இருக்குறது இப்போ தான் உன் கண்ணுக்கு தெரிஞ்சதா…?
“நான் கவனிக்கலங்க…?
வர வர கொஞ்சம் கூட பயம் இல்லாம போச்சு உனக்கு..எவன்டி அவன்..வீட்டுக்கு அழச்சிட்டு வந்து தங்க வைக்கிற…?
அவர் ரொம்ப பாவங்க..தன்னோட பொண்ண காணாம தேடிட்டு இருக்கார்..ப்ரனேஷ் தான் கூட்டிட்டு வந்தான்..வந்த வழில எதோ அவசர வேலைனு கவிலாஷ் கூட வெளியே போயிருக்கான் என்று ஒரே தகவலை தெரிவிப்பதை போல் கூறிவிட்டு சென்றாள்…”இப்போதே அதனை நினைத்து பார்த்தவர்,”அப்போ அப்பனும்,மகளும் உயிரோட தான் இருக்காங்க..அதுவும் என் வீட்டிலயே…ஆனா அவுங்க இரண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியல…இத வச்சே உங்க இரண்டு பேரையும் பரலோகம் அனுப்புறேன் என்று நினைத்தவர்,அங்கு அமர்ந்திருந்த பூங்கோதையை பார்த்து…,
“ஏய் நீ எதுக்கு இப்படி சிலை மாதிரி உட்காந்திருக்க…?
“இ..இல்ல என்று தடுமாறியவர் நா..ன் உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா..?”
அவரை நிமிர்ந்து ஏளனமாய் பார்த்தவர்,என்ன புதுசா கேள்வி எல்லாம் கேக்குற..உன் மனசில என்ன நெனச்சிட்டு இருக்க என்று அதட்ட, அவரது உடம்பு நடுங்க தொடங்கியது…
இத..தோ பாருங்க…இவ்ளோ நாள் நீங்க நீங்க பண்ண எல்லா தப்பையும் பொறுத்து உங்க கூட வாழ்ந்துட்டு இருக்கேனா அது என் பிள்ளைகளுக்காக தான்…நீங்க எனக்கு எவ்ளோ கொடுமை பண்ணிருக்கீங்க…என் கண்ணு முன்னாடியே வேற. பொண்ணு கூட…அவரால் அதற்கு மேல் எதுவும் கூற முடியவில்லை…கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது…தொண்டை அடைத்தது…அந்த சின்ன பொண்ண போய்,..எப்படிங்க உங்களுக்கு மனசு வந்தது…நீங்களும் ஒரு பெண்ணை பெத்தவரு தான…உங்க மனசு உருத்தல…இப்படி ஒரு கேவலமான மனுஷன் கூட இத்த நாள் வாழ்ந்துருக்கேனு நினைக்கும் போதே அசிங்கமா இருக்கு..என்று கத்தினார்…
ஹா..ஹா…உங்ககிட்ட அந்த பரதேசி எல்லாத்தையும் சொல்லிட்டானா…அப்பனும் பொண்ணும் என்ன பழிவாங்க என் வீட்டுக்கே வந்துருக்காங்களா..?நல்லா இருக்கு..அதுக்கு உடந்தை நீ…நான் போடுற சாப்பாட்ட தின்னுட்டு,என்ன கொல்ல நினைக்கிறவங்களுக்கு நீ உதவி பண்றியா என்றவர் சட்டென அவரது கழுத்தை பிடித்து நெறித்தார்…..
ஆ…ஆ..விடுங்க..க்கும்..க்கும். என்று அவரது கையை பிடித்து தடுத்தவர்…நீ..நீ..ங்க எ..ன்..ன சொ.ல்.றீங்க….அவரு பொண்ணு இருக்குற இடம் உ..ங்களுக்கு தெ..தெரியுமா..?
சட்டென அவரது பிடியை தளர்த்தியவர்,அவரை ஒரு மார்க்கமாய் பார்த்தார்…”சொல்லுங்க அந்த பொண்ணு உயிரோட இருக்குறது தெரியுமா..?அப்பனும்,பொண்ணும் பழிவாங்க நம்ம வீட்டுக்கு….”அப்படின்னா…,அப்போ ..அப்போ நம்ம வீட்ல இருக்க சமி தான் அந்த பொண்ணா …என்று அவரது சட்டையை பிடித்து உலுக்கினார்…
[the_ad id=”6605″]
ஆமாண்டி…அவ தான் அந்த சக்திவேலோட பொண்ணு. என்ன பழி வாங்குவேனு என்கிட்டயே சவால் விடுறா….இப்போ என்னன்னா அவ அப்பனும் என்ன பழிவாங்க என் வீட்டுகுள்ள வந்திருக்கான்…அம்மாவும்,மகனும் அதுக்கு துணை போறீங்க என்று கோபமாய் கத்தினார்….
ச்ச்சீ…நீயெல்லாம் ஒரு மனுஷனா..?அவுங்கள பார்த்தும் கூடவா உன் மனசாட்சி உருத்தலை …நீயெல்லாம் மனுஷனே இல்ல..மனுஷ ரூபத்துல இருக்க மிருகம்..உன் கூட இத்தனை நாள் குடும்பம் நடத்துனத நினைச்சி வெக்கபடுறேன்…உனக்கு முந்தானை விரிச்சு இரண்டு புள்ளைய பெத்தத நெனச்சி அசிங்கபடுறேன்..நீயெல்லாம் மனுஷனே இல்ல…உன் உடம்புல நல்ல ரத்தமே ஓடல…சாக்கடை தான் ஒடுது…நீயெல்லாம் உலகத்துல வாழ தகுதியே இல்லாதவன் என்று அவரது சட்டையை பிடித்து கத்தினார்…
சட்டென அவரது கையை பிடித்து தடுத்தவர்,அவரது கன்னத்தில் ஓங்கி அறை விட்டு பெரிய நகைச்சுவை கேட்டது போல் சிரித்தார்…என்ன சொன்ன நான் மிருகமா..என் உடம்புல சாக்கடை ஒடுதா…ஆமாண்டி நான் மிருகம் தான்.என் உடம்புல சாக்கடை தான் ஒடுது…அதுக்கு இப்போ என்ன பண்ண சொல்ற..இதெல்லாம் தெரிஞ்சி தான என் கூட குடும்பம் நடத்துன..அப்பயே போயிருக்கலாமே..?ஏன் போகல ,இந்த பணக்கார வாழ்க்கை ,வீட்ட சுத்தி வேலையாட்கள்,காரு,பணமுனு வாழ்ற சொகுசு வாழ்க்கை,இது எல்லாத்தையும் தரும் என்னையும் விட்டு போக முடியல..அதனால என் கூட இத்தன வருஷமா இருக்க..உன்னால நான் இல்லாம வாழ முடியுமா..?முடியாது அதனால கேள்வி கேக்குறத நிப்பாட்டு…நாய்குட்டியாய் என் காலை சுற்றி வா…தங்க தட்ல சோறு கிடைக்கும் ..உனக்குனு சுய அடையாளமில்லாத இந்த பகட்டு வாழ்க்கை தான் உன்னோட அடையாளம்…இந்தா எடுத்துக்கோ…வெளிநாட்டு கான்ட்ராக்ட் ஒன்னு கிடச்சிருக்கு..அதற்கு பரிசு…”என்று வைர அட்டிகையை தூக்கி அவரது முகத்தில் எரிந்தார்….இதனை விட்டு உன்னால் விலகவே முடியாது..என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்..
ஆணித்தரமான அவரது குரலில்,அவளின் தன்மானம் சீண்டபட்டது….நான் என்ன உனக்கு அடிமையா. ?சூடு சுரனை இல்லாதவளா..? இந்த அறை,இந்த சுவர்,சோபா,மெத்தை போன்று நானும் ஒரு பொருளா..?நினைக்கவே கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.அனைத்தையும் வெறுத்தாள்..அந்த அறைமுழுதும் இருந்த பொருட்களை வெறுத்தாள்.அந்த வீடு முழுதும் பணத்தின் செழுமை..அடுப்பும் கூட குளிர்ச்சியோடு எரியுமளவிற்கு வீடு முழுவதும் ஏசி.வானத்தை பார்க்க அண்ணாத்தால் வண்ண விலக்குகளால் ஜொலிக்கும் மோட்டுவளை…நிலாச் சோறு சாப்பிட விரும்பினால் வீட்டை சுற்றி எரியும் மெர்குரி விளக்குகளின் அலங்கார உச்சம்.சின்ன தூசியும் காலை ஒட்டாத வெளிநாட்டு கார்பவனி..முப்பது தலைமுறை உட்க்காந்து தின்றாலும் குறையாத சொத்து..இதையெல்லாம் விடமுடியாதா என்னால்?அநீதியை தட்டி கேட்க முடியாதா என்னால்?குழப்ப புயலில் சிக்கி தவித்தார் பூங்கோதை..
வரவேற்பறை,பூஜையறை,சமையலறை,படுக்கையறை இது தானே என் உலகம்..நிமிராமல்,குனியாமல்,ஆடாமல்,அசையாமல் தூங்கி எழுந்து உண்டு வலம்வரும் எனக்கு இதனை விடுத்து இருக்க முடியாதா..?பிரட்சனை,தூசி இல்லாத கண்ணாடி மாதிரியான வாழ்க்கை தடுமாற்றமும்,மேடு பள்ளமும்,உராய்வும்,சிராய்ப்பும் எப்படி இருக்கும் என தெரியாத செல்வ செழுப்பில் மரத்து போன நாட்கள்.நேரங்கள்,நிமிடங்கள் …இதையெல்லாம் விட்டு என்னால் விலக முடியாதா..?இதெல்லாம் நிஜம்தானா..?என்னுடைய வாழ்க்கை இவர் செய்யும் பொய்யுக்கும்,புரட்டுக்கும் துணையிருப்பது தானா என்ற கேள்விகளை அவரை கொன்று தின்றன..தன்னை நினைத்து அவளுக்கே அருவறுப்பில் வயிற்றை குமட்டியது…
அதேநேரம் சமி தனது அறையில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்தாள்..அவளால் நடப்பது எதையும் நம்ப முடியவில்லை…சிறு எறும்புக்கு கூட துரோகம் நினைக்காத என்னை கொலை செய்ய வைத்து விட்டாயே கடவுளே…?என்று புலம்பினாள்…அப்போது மற்ற இருவரையும் கொன்ற சம்பவம் அவள் கண் முன் நிலழாடியது…
ஆமாம்..இருவரையுமே சமி தான் கொன்றிருந்தாள்..அந்த பார்ட்டியில் மூவரையும் கண்டதும் பயந்து போனவள்,
பிறகு தன்னை சமாதானம் படுத்தி கொண்டு அமர்ந்திருந்தாள்..அப்போது தான் வெங்கட் போனில் யாருடனோ பேசிக் கொண்டே அந்த அறைக்குள் செல்வதை கவனித்தவள்,எழுந்து அவரை பின் தொடர்ந்து சென்று அந்த அறையில் வைத்து அவரை தாக்கினாள்…அதே போல் தான் தாமோதரையும் கொன்றாள்..அவளை ரவுடிகள் துரத்த பயந்து போனவள் அங்கிருந்த புதருக்குள் பதுங்க, அப்போது யாரோ தொடுவதை உணர்ந்தவள் திரும்பி பார்க்க அங்கே ஒரு ஆள் நின்றிருந்தார்..அவரை பார்த்து பயத்தில் அலற,பயப்படாதம்மா நான் இங்க தான் செக்யூரிட்டியா வேலை பாக்குறேன் என்று கூறியதை கூட காதில் வாங்காமல் அந்த அலுவலகத்தின் உள்ளே ஒட, அவள் அலறிய சத்தத்தை கேட்டு ரவுடிகள் அங்கு வந்தனர்..அவர்களை அந்த செக்யூரிட்டி விரட்டி அடித்தார்..உள்ளே சென்ற சமி அங்கு தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த தாமோதரை கண்டதும் அதிர்ந்தவள்,பிறகு அங்கு உடைந்து கிடந்த கண்ணாடி துண்டை எடுத்து அவரது தொண்டையில் கிழித்தாள்…அப்போது அந்த செக்யூரிட்டி வருவது போல் தெரிய ,அவருக்கு தெரியாமல் பதுங்கி பதுங்கி அங்கிருந்து வெளியேறியவள் ஒரு கோவிலுக்குள் வந்து நுழைந்து கொண்டாள்……இப்போது அதனை நினைத்து பார்த்தவள் மனம் எதனையோ சாதித்தது போல் நிம்மதி அடைந்தது….ஆனால் ராஜசேகர் இவரை,…இவரை என்னால் கொல்ல முடியாதே…?நான் இங்கு வந்ததிலிருந்து என்னை சொந்த மகளை போல் பார்த்து கொள்ளும் அந்த தாயை எப்படி என்னால் துன்ப படுத்த முடியும்..தன் கணவனின் சுயரூபம் தெரிந்தால் அவர் எப்படி அதனை தாங்கி கொள்வார்…அப்பறம் பாசு அவர்,அவர் எப்படி இதை எடுத்துப்பார்..நான் பொய் சொல்றதா தானா நினைப்பார் என்று பலவற்றையும் நினைத்து குழம்பி போனாள்…”
“ந்தா இந்த ஜீஸ்ஸ குடி என்று மித்ராவின் முன்பு நீட்டினார் பத்மாவதி..”
“இ…இல்ல. வேண்டாம்ங்க..”
“என்ன வாங்க போங்கனு கூப்பிடுற…உரிமையா அத்தைனு கூப்பிடு…”
அவர் கூறியதை கேட்டு மித்ரா அதிர்ச்சியாகி,சுகன்யாவை பார்க்க அவள் சிரித்து கொண்டே கண்களை மூடி திறந்தாள்..அதிலிருந்தே தெரிந்தது அவருக்கு அவளை பற்றி அனைத்தும் தெரிந்திருக்கிறது என்று….”அவள் கண்களில் லேசாய் கண்ணீர்…””ச்சூ எதுக்கு இப்போ கண் கலங்குற…நடந்தது நடந்து போச்சு..அதையே நினைத்து கவலை படாதா…இதுல உன்னோட தப்பு எதுவும் இல்லை….உன் இடத்துல நான் இருந்தா கூட இத தான் பண்ணிருப்பேன்…அதையெல்லாம் நினைத்து மனச போட்டு குழப்பிக்காத..சீக்கிரம் குணமாகி வீட்டுக்கு வா…உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி என் கண் குளிர பாக்கனும்னு ஆசையா இருக்கு…”என்று அவளது தலையை வருடி நெற்றியில் முத்தமிட்டார்…அவரது அன்பை நினைத்து மித்ரா முற்றிலும் உடைந்து போனாள்…”அத்தை என்று கூறி அவரை அணைத்து கொண்டாள்….”அப்போது அங்கு கண்ணன் வர, அவரை கண்டு மித்ரா சிறிது நடுங்கினாள்..அவளது நடுக்கத்தை உணர்ந்த சுகன்யா,”இதோ பாருங்க அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே..ஷாரிக்கா கூட இந்த கேஸ இதோட விட சொல்லிட்டாளே..பின்ன நீங்க எதுக்கு இங்க வந்தீங்க என்று பொறிய, கண்ணன் சுகன்யாவை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான்…அவள் சட்டென தனது வாயை மூடிக் கொண்டாள்…”மித்ரா எனக்கு ஒரு டவுட்..அத கிளியர் பண்ணிக்க தான் இப்போ வந்தேன் என்றான்…”
“எ..என்ன டவுட்…”
[the_ad id=”6605″]
“உங்க கிட்ட தப்பா நடக்க முயற்சி செஞ்சாருனு தாமோதர கொலை பண்ணீங்க..”அதுல ஒரு நியாயம் இருந்தது…ஆனா வெங்கட்ட எதுக்காக கொலை செய்தீங்க….”
அவன் கூறியதை கேட்டு மித்ரா அதிர்ந்து போனாள்…பத்மாவதி முகத்தில் எவ்வித பதட்டமும் இல்லை…”மித்தும்மா நீ பேசிட்டு இரு..நான் டாக்டர போய் பாத்துட்டு வரேன்..”என்று கூறிவிட்டு கிளம்ப முயல, அம்மா ஒரு நிமிஷம் நீங்க இங்கயே இருங்க..மித்ரா என்ன சொல்றாங்கனு கேக்கலாம்…நாளைக்கு எதோ ஒரு சந்தர்பத்தில் அவுங்க தப்பு செய்ததா நீங்க நினைக்க கூடாது இல்லையா..”என்று கூற, அவனுக்கு மித்ராவின் மேல் இருக்கும் அக்கறையை நினைத்து சுகன்யா அவனை காதலாய் பார்த்தாள்….
நீ..ங்க எ..என்ன சொல்றீங்க…யாரு வெ..வெங்கட்..?என்றாள்…
அவள் கூறியதை கேட்டு மூவருமே அதிர்ந்து போயினர்…”வெங்கட் யாருனு தெரியாதா?அவர் தான் கவிலாஷ் சாரோட அப்பா..?அவர் இறந்த இடத்துல தான் நீங்க போட்டிருந்த செயின் கிடச்சது என்று விளக்கி கூற..,மித்ரா பத்மாவதியை பயத்தோடு பார்த்தாள்..அதனை கண்ட பத்மா அவளது கையை ஆறுதலாய் பிடித்து கொண்டாள்…அந்த பிடியில் தனது பயம் அனைத்தும் நீங்க…,”சார் அன்னைக்கு பங்ஷன்ல எனக்கு வாமிட் வர மாதிரி இருந்தது..அதனால அந்த ரூம்க்கு போய் பாத்ரூம் கதவ தட்டினேன்..ஆனா உள்ளே யாரோ இருந்தாங்க போலிருக்கு..திறக்கவே இல்ல..சரினு நான் திரும்பும் போது கீழே கிடந்த ஜாடில நான் தடுக்கி கீழே விழுந்துட்டேன்..அப்போ தான் என்னோட செயின் கீழ விழுந்திருக்குனு நினைக்கிறேன்.என்று அன்று நடந்த சம்பவத்தை அப்படியே கூறினாள்…”அதனை கேட்டதும் கண்ணனுக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது…”சாரிம்மா உன்ன தொந்தரவு பண்ணிட்டேன் என்று கூறிவிட்டு அவளிடம் விடைபெற்று அங்கிருந்து சென்றான்…போகும் அவனையே பார்த்து கொண்டிருந்த சுகன்யா,”திரும்பி என்ன பாருங்க ஆபிஸர்,திரும்பனும்,திரும்பனும் என்று சற்று சத்தமாகவே கூற, அது கதவை திறக்க போன கண்ணனின் காதில் தெளிவாக விழ சட்டென திரும்பினான்..அவன் திரும்பிய உடனே இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டனர்..சுகன்யா சிரித்து கொண்டே அவனை பார்த்து கண்ணடிக்க,அவன் பேச்சிழந்து நின்றான்..அடுத்த நிமிடம் அவளை முறைத்து கொண்டே அங்கிருந்து வெளியேறினான்…
அங்கிருந்த பாரில் அமர்ந்திருந்தனர் ப்ரனேஷ்,கவிலாஷ் இருவரும்…அவர்கள் நன்கு குடித்திருந்தனர்…
‘ப்ரனேஷ்…,”டேய் மச்சி..நான் அவர எப்படியெல்லாம் நெனச்சிருந்தேன்..என்னோட ஹீரோ மச்சான்..ஆனா..ஆனா இன்னைக்கு அந்த ஆளு எவ்வளவு கேவலமானவனு தெரிஞ்சப்போ நான் செத்துட்டேன் டா…எப்படிடா மனசு வந்தது..அந்த சின்ன பொண்ண நாசம் படுத்த..”
ஆமாம்டா…நல்லவேல எங்கப்பன் செத்துட்டான்..இல்ல என்கையாலே அவன துடிக்க துடிக்க கொன்னுருப்பேன் என்று கவிலாஷ் புலம்பினான்…
என்னால முடியலலே மச்சான்..அந்த அயோக்கியன என் கையாலயே கொல்லனுனு என்னோட ஒவ்வொரு அனுவும் துடிக்குது..ஆனா ஆனா. என் அம்மா..அம்மா. அவுங்கள நினச்சா தான்டா கஷ்டமா இருக்கு….மகாலெட்சுமி மாதிரி இருக்குற அவுங்கள விதவை கோலத்தில பாக்குற சக்தி எனக்கு இல்லடா மச்சான்…அந்த ஆளு முகத்துல முழிக்கவே அறுவருப்பா இருக்கு மச்சான்..அந்த ஆளுக்கு புள்ளையா பொறந்தத நினச்சு நான் அசிங்க படுறேன் மச்சான்…அந்த ஆள கொல்லனும்..என்கையால கொல்லனும்..ஆனா என்னால முடியாது..அந்த அயோக்கியன கொல்ல முடியாத பாவி ஆயிட்டனே என்று புலம்பினான்…
“விடு மச்சான் அவர போலீசுல புடிச்சி குடுத்துடலாம்….”
[the_ad id=”6605″]
வேண்டாம் மச்சான் அத மட்டும் செய்ய கூடாது..அந்த ஆளு தன்னோட இன்புலன்ஸ் யூஸ் பண்ணி வெளில வந்திடுவான்..அதுவும் இல்லாம அந்த பொண்ணு எங்க இருக்கானு தெரியலயே..அவள சீக்கிரம் கண்டு பிடிச்சி அந்த பெரியவர்கிட்ட ஒப்படைக்கனும் மச்சி..அதான் அந்த ஆளு செஞ்ச தப்புக்கு என்னால செய்ய கூடிய சின்ன பரிகாரம்…என்று கூறிக் கொண்டே தலை கவிழ்ந்தான்…அப்போது அவனது போன் விடாமல் அடிக்க..எடுத்தவன் எதிரே கூறப்பட்ட செய்தியை கேட்டு அடித்த போதை எல்லாம் தலை தெறிக்க ஒடியது…..
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.