சமி தனது அறையில் அமர்ந்து தனது கடந்த காலத்தை யோசித்து கொண்டிருந்தாள்…மருத்துவமனையிலிருந்து வந்தவள் எங்கு செல்வது என்று தெரியாமல் விழித்த கொண்டிருந்தவள்,அந்த பக்கம் இருந்த இரயில்வே ஸ்டேசனில் சென்று அமர்ந்தாள்..பசி வயிற்றை கிள்ளியது…போய் வரும் இரயிலையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.அப்போது அங்கு ஒரு கிழவி வெள்ளரி பிஞ்சு விற்று கொண்டிருந்தாள்…அப்போது ஒரு ரயில் பெரிய சத்தத்துடன் அங்கு வந்து நிற்க, அந்த பாட்டி தனது கூடையை எடுத்து கொண்டு ஒவ்வொரு பெட்டியாக ஒடி கூவி கொண்டிருந்தாள்..”சாமி ஒரு கட்டு பத்து ரூவா தான்.வாங்கிக்க சாமி என்று ஒரு கட்டை எடுத்து நீட்ட, வேண்டாம் என்று ஒருவன் மறுக்க,தம்பி இந்த வெயிலுக்கு சாப்பிட்டா நல்லா இருக்கும்..பிஞ்சு தான் தம்பி.நீ ஒரு கட்டு வாங்கிட்டா மீது உள்ளத வித்துட்டு வெள்ளனமே வீட்டுக்கு போயிடுவேன் என்று கூற, அவன் ஒரு கட்டை வாங்கி கொண்டான்.. அவன் வாங்கிய அடுத்த நிமிடம் ரயில் புறப்பட்டது.
அடுத்த இரயில் வர வரைக்கும் இந்த வெயில காத்து கெடக்கனும்..வர ரெயில் ஐஞ்சு நிமிசத்துல போய்டும்..அதுல போயி எப்படி விக்கிறது..இப்பவே தல சுத்த ஆரம்பிக்குது என்று புலம்பி கொண்டே அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து மீதி உள்ள வெள்ளரி பிஞ்சை சிறிதாக நறுக்கி அதில் சிறிது மிளகாய் தூளை போட்டு எடுத்து வைத்தார்..இன்னும் பத்து கட்டு தான் இருக்கு.இத வித்துட்டா இன்னைக்கு பொழப்பு முடிஞ்சது என்று நினைக்கும் போதே ஒரு ரயில் வந்து நிற்க, அவர் கூடையை தூக்கி கொண்டு ஒட முயல, அவரின் அருகில் வந்த சமி ஆத்தா குடு நான் வித்து தரேன் என்றவள் அவரிடமிருந்து ஒரு ஐந்து கட்டை வாங்கி கொண்டு மின்னல் வேகத்தில் ஒவ்வொரு பெட்டியாய் ஒடி விற்றவள்..கட்டு தீர்ந்து போக பாட்டியிடம் மீண்டும் இரண்டு கட்டு வாங்கி விற்றாள்..ரயில் புறப்பட்டதும் அவள் கையில் இருந்த ஏழு கட்டும் காலியாகியிருந்தது..அவள் விற்ற காசை அந்த கிழவியிடம் குடுக்க..”பராவால்லையே நானே ரெண்டு தான் வித்தேன்.நீ எல்லாத்தையும் வித்துட்ட என்றவர்,மீதமிருந்த ஒரு கட்டை அவளிடம் கொடுத்து “இந்தா இத நீ துன்னு என்று கூறிவிட்டு செல்ல முயல, ஆத்தா என்றாள்…அவர் அவளை திரும்பி பார்க்க,நீ நாளைக்கும் இங்க வருவியா..வந்தா நானே வித்து தாரேன் என்றாள்..”அவளது மனம் நீ யாரு?இங்க என்ன பண்ற என்று கேக்க மாட்டாரா?என்று ஏங்கியது..அவளை உற்று பார்த்த கிழவி அவள் நினைத்ததை அப்படியே கேக்க, அவள் உடனே நடந்த அனைத்தையும் கூறிவிட்டு கிழவியின் முகத்தை பார்க்க…கிழவி அவளையே பார்த்தவள்,என்ன நடந்தாலும் சரி இனிமே நீ எங்கூடவே இரு என்று கூறிவிட்டு அவளை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றார்….
இப்போது அதை நினைத்து பார்க்கவே உடல் நடுங்கியது…அந்த கெழவி மட்டும் இல்லனா.என்னோட நெலம நினைக்கவே உடம்பெல்லாம் பதறியது….அப்போது அவள் இருக்கும் அறைக்குள் புகுந்த பூங்கோதையை கண்டு அவள் ஆச்சரியமாய் பார்க்க, அவர் அவளை பார்த்து கொண்டே அவளின் அருகில் வந்து அமர்ந்தார்…
சமி என்று அவர் அவளை வாஞ்சனையுடன் அழைக்க அவளுக்கு கண்கள் கரித்து கொண்டு வந்தது…இங்கு வந்ததிலிருந்து இன்று தான் அவளின் அருகே அமர்ந்து இருக்கிறார்….”சாரிடாம்மா”என்று அவளது கைகளை எடுத்து தன் கண்களில் ஒற்றியவர்,விடாமல் அழத் தொடங்கினார்…
“ம்மா யான் அழுவுறீங்க என்று பதட்டமடைந்தவள் சட்டென தன் கைகளை உருவிக் கொண்டாள்…”
“என்ன மன்னிசிரும்மா என்று கையெடுத்து கும்பிட்டார்..”
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.எதுக்கு உங்கள மன்னிக்கனும்..நீங்க என்ன தப்பு பண்ணீங்க….”என்றவளிடம்.
கேவலமான ஒருத்தனுக்கு பொண்டாட்டியா வாழ்ந்துட்டு இருக்கேனே..அவன் அயோக்கியனு தெரிஞ்சும் என்னால எதுவும் பண்ண முடியலயே என்று கூறி கண்ணீர் வடிக்க, அவர் கூறியதை கேட்டு சமி சிலையாக அமர்ந்திருந்தாள்…”
நீங்க எ.. என்ன சொல்றீங்க..?எனக்கு ஒன்னும் புரியல…”
“எனக்கு எல்லாம் தெரியும்மா…”என்று கூறி அவர் மீண்டும் அழத்துடங்க,
“எ..என்ன தெரி..யு.ம்”
“சின்ன வயசுல உனக்கு நடந்த கொடுமை எல்லாம் எனக்கு தெரியும்மா….”என்று அவர் கூற, அதனை கேட்ட சமி முற்றிலும் அதிர்ந்து போனாள்..”
“உ..உங்களுக்கு எப்..படி தெரியும்…”அவளது குரலில் தடுமாற்றம்….”
“உ..உங்க அப்பா தான் சொன்னார்…”
நான் கேட்பது நெசமா,என் அப்பா உசிரோட இருக்காரா!அவளால் நம்ப முடியவில்லை…அவளது உடலில் எதோ ஒரு மாற்றம்…கண்களிலிருந்து கண்ணீர்…”நீ..ங்க என்ன சொல்றீங்க..அப்பா..எ..என் அப்..பா. உசுரோட, எங்க பாத்..தீங்க, எப்போ…அவ..ர எப்படி உங்களுக்கு தெரியும் என்று அழுகையுடனையே கேள்வி மேல் கேள்வி கேட்டாள்….
[the_ad id=”6605″]
அவளை இழுத்து அணைத்தவர் அழாதாட என் செல்லமே,உங்க அப்பா உயிரோட தான் இருக்கார்..அதுவும் இங்க உன் பக்கத்துல தான் இருக்கார் என்று கூற,வெடுக்கென நிமிர்ந்தாள்…
“இ..ங்….கை..யா..?????
“ம்ம்ம்”என்று தலையாட்டியவர்,நடந்த அனைத்தையும் கூறினார்..அதனை கேட்ட சமி இப்படியெல்லாம் கூட நடக்குமா?என்று அதிர்ந்தே போனாள்…
எங்க அப்பா இப்போ எங்க..நான். நான் இப்பவே பாக்கனும் என்று கூறிக்கொண்டே அவர் தங்கியிருந்த அறைக்கு ஓடினாள்…
“பா…ப்பா. எங்க இருக்க…”நான் உன் பொண்ணு மித்து பா..பாரு..பாரு. நா..நான் பெ..பெரிய பொ..ண்..ணா ஆயிட்டேன் பா…இவ்வளவு நாள் ஏன் என்ன பாக்க வரல…ப்பா எங்க இருக்க நீ…நான் கூப்புடுறது உன் காதுல உலழயா…ப்பா..ப்பா…என்று அவள் கத்தி கொண்டே அந்த அறை முழுவதும் தேடினாள்..அவரை காணவில்லை….
“ப்பா…” என்று கூறிக் கொண்டே பொத்தென கீழே விழுந்தாள்..அவளது கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது…”ம்மா அவருக்கு என்ன பாக்க புடிக்கலையாம்மா,என் கூட பேச புடிக்கலையா,எங்க போனார் என்று வாய்விட்டே கதறினாள்..அவள் அழுவதை பார்த்து அவருக்குமே கண்களில் நீர் நிரம்பியது. அவளை எப்படி சமாதானம் படுத்துவது என்று தெரியாமல் விழித்தார்…
இங்க பாருடா அழாத, அவர் எங்கயும் போகல..வெளில எங்கயும் போயிருப்பார் நீ அழாத, என்று அவர் சமாதனம் செய்யும் போதே சமியின் போன் ஒலித்தது…ஆம் ப்ரனேஷ் வாங்கி ரவீனாவின் மூலமாக கொடுத்திருந்தான்…எடுத்தவள் “ஹலோ “என்றாள்…”
“ஹா…ஹா…ஹா என்று சிரிப்பு சத்தம் மட்டுமே கேட்டது…”
“யா…யாரது?”
“கண்டுப்பிடிம்மா செல்லம்!என்வீட்ல இருந்துட்டு எனக்கே எச்சரிக்கை கொடுத்ததை கொடுத்தவளே மறக்கலாமா?”
“ரா..ராஜசேகர்!”
“புத்திசாலிப் பொண்ணு!”கரக்டா கண்டுபிடிச்சிட்ட…”
“என்ன வேணும் உனக்கு?”சற்று அதிகாரமாய் கேட்டாள்…”
“நீதான்டி!நீ தான் வேணும்.உன் உயிர் தான் வேணும்.உங்க அப்பாவை தேடிட்டு இருக்க போல?”
அ..அப்பா?ஏய் அவர என்ன பண்ண..?அவருக்கு மட்டும் எதனா ஆச்சு உன்ன உயிரோட அழிச்சிடுவேன்..ஆங்காரமாய் கத்தினாள்….
“ஹா..ஹா..இந்த கோவம்..இது தான்..எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…”என்றவன் ஒர் இடத்தின் பெயரை கூறி அங்கே வருமாறு கூறிவிட்டு போனை அனைத்தான்…”
“சமி சிலையென போனை வெறித்து கொண்டிருந்தாள்….”
” ம்மா..மா என்று கத்தி கொண்டே உள்ளே நுழைந்தான் ப்ரனேஷ்.உடன் கவிலாஷ் கூட…
“ப்ரனா….ஆ என்று கத்திக் கொண்டே அவனை அணைத்துக் கொண்டார்…
“ம்மா என்னாச்சு,எங்க அந்த பொண்ணு.பெரியவர் எங்க என்று கேட்டான்…ஆம் இன்று சமியை பற்றிய அனைத்து உண்மையும் கூறிவிட வேண்டும் என்று நினைத்த பூங்கோதை ப்ரனேஷிற்கு அழைத்து,அந்த பெண் கிடைத்து விட்டாள்.நீ உடனே கிளம்பி வீட்டிற்கு வா என்று கூறிவிட்டு தான் சமியின் அறைக்கே சென்றார்…”ம்மா சொல்லுங்க,எங்க அந்த பொண்ணு என்றவன் அப்போது தான் அமர்ந்திருந்த சமியை கண்டான்…அவனுக்கு எதோ தவறாக தோன்றியது…”
“ப்ரனா அந்த பெரியவர உங்க அப்பா கடத்திட்டார்டா..?
“என்னம்மா சொல்றீங்க…”என்றான் பதட்டத்துடன்…”
“ஆமாண்டா…இப்போ தான் சமிக்கு கோல் பண்ணி அவர கடத்தி வச்சிருக்கிறத சொல்லி இவள அங்க வர சொல்லி மிரட்டினார் என்று கூறினார்…”
[the_ad id=”6605″]
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை..”ம்மா சமிய எதுக்கு வர சொல்லனும்…”
“சமி..சமி தான் அவரோட பொண்ணு…”
அவர் கூறிய அடுத்த நிமிடம் ப்ரனேஷின் சப்த நாடியும் அடங்கி போனது.கை கால்கள் இறுகி போயின.உடல் வெலவெலன்று ஆடியது..தலை முதல் பாதம் வரை மின்னதிர்வு..அவனின் உடல் முழுதும் அக்னி தீயாய் கொதித்தது..அன்னை கூறியதை நம்ப மறுத்தான்..இல்ல இல்ல என்று கத்தினான்…ரூமில் இருந்த பொருட்களை தூக்கி எறிந்தான்…அவனது முகம் ரௌத்திரமாய் மாறி இருந்தது…இப்போது மட்டும் அவர் இவன் கண் முண்ணே நின்றார் என்றால் அவரை எப்படி கொல்வான் என்று அவனுக்கே தெரியாது ..அவ்வளவு ஆத்திரம் உண்டானது..அவனது இந்த பரிமானத்தை பார்த்து கவிலாஷ்,பூங்கோதை இருவரும் பயந்து போய் நின்றனர்…இத்தனை வருட பழக்கத்தில் இப்படி ஒரு ப்ரனேஷை இவன் பார்த்ததில்லை…”சமி போனையே வெறித்து கொண்டிருந்தாள்…மெல்ல அடி வைத்தவன் அவளின் அருகே சென்று அவளின் தோளின் மீது கை வைத்தான்..அவள் தீடீரென கை பட்டதும் பதறி நடுங்கினாள்..அவளின் நடுக்கம் அவனை கொன்றது…சிறு வயதில் எவ்வளவு துன்பம் அனுபவித்திருக்கிறாள் என்ற எண்ணம் தோன்ற முற்றிலும் உடைந்து போனான்…குல்பி …..இ என்று கத்திக் கொண்டே அவளை அணைத்திருந்தான்…அந்த அணைப்பு இப்போது அவளுக்கு தேவையாய் இருந்தது போலும்..அவனுடைய தொடுதல்,அந்த வருடல் அவளுடைய வலிகளுக்கு வடிகாலாய் இருந்தது…அவள் அனுபவித்த மொத்த வலிகளுக்கும் அவனுடைய அணைப்பு வலி நிவாரணியாக இருந்தது..அவனுடைய மனதில் குருதி வடிந்தது…அவளை அணைத்து அவளுடைய தலையை கோதினான்..கண்ணீர் மெல்லியதாய் கோடிட்டு அவளுடைய முதுகை நனைத்தது.வலிச்சுதா கண்ணம்மா?வலிச்சுதா என் செல்லமே?உன்னை சிதைக்க எப்படி அவன்களுக்கு மனம் வந்தது..அப்போ எப்படி துடிச்சிருப்ப என்று அன்று நடந்த சம்பவத்திற்கு இன்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான்….
“டேய் பிரனா இப்படியே பேசிட்டு இருக்க போறியா..?பெரியவர காப்பத்தனும்டா என்று கவிலேஷ் கூறியதும் சட்டென விலகியவன் அவளை பார்க்க, அவள் அவனையே தான் பார்த்து கொண்டிருந்தாள்…இதோ பாருடா..நீ எதுக்கும் கவல படாதா..நான் இருக்கேன்ல..நான் உயிரோட இருக்குற வரைக்கும் உனக்கும்,உங்க அப்பாவுக்கும் எதுவும் ஆக விடமாட்டேன்…என் உயிர கொடுத்தாவது உங்க அப்பாவ உன்கிட்ட ஒப்படைப்பேன்..என்றவனை விழியகலாமல் பாத்தவள், “அப்ப ஏன் அன்னைக்கு என்ன காப்பாத்த நீ வரல…”அடுத்த நொடி அவள் கேட்ட கேள்வியில் முற்றிலும் உடைந்து போன ப்ரனேஷ்….அய்யோ….என்று என் தன்னையே நொந்தவன் அவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல்,சுற்றுபுறத்தை மறந்து அவளது இதழை தீண்டினான்…அவனது அந்த தீண்டலில் அவளது மொத்த பாரத்தையும் இறக்கி விடுபவன் போல்…கவிலாஷ் பூங்கோதையை அழைத்து கொண்டு வெளியே வந்து விட்டான்…..
மெல்ல அவளை விடுவித்தவன்,அதான் இப்போ வந்துட்டேன்ல என்றவன் அவளை அழைத்து கொண்டு,ராஜசேகர் கூறிய இடத்திற்கு விரைந்தான்..கூடவே பூங்கோதையும்,கவியும் வந்தனர்…
அந்த காபி ஷாபில் சுகன்யாவை முறைத்து கொண்டு அமர்ந்திருந்தான் கண்ணன்..
“நீ மொறச்சா எனக்கென்ன”என்பது போல் அவனையே பார்த்திருந்தாள் அவள்…”
“அவள் எதுவும் கூறாமல் அமர்ந்திருக்க,கடுப்பானவன்”எதுக்குடி என்ன வர சொன்ன, என்றான்..
“அவள் எதுவுமே கூறாமல் அவனையே பார்க்க,ஏய் உன்ன தான் என்ன வர சொல்லிட்டு இப்படி என்னையே பாத்துட்டு இருந்தா என்ன அர்த்தம் என்று எகிற…”
“அவள் அதற்கும் எந்த ரியாக்சனும் காட்டாமல் தனது வேலையை தொடர,கடுப்பானவன்அங்கிருந்து எழ போக சட்டென அவனது கையை பிடித்தவள் உட்காருங்க கண்ணன் என்றாள்…
அமர்ந்தவன் என்ன என்பது போல் அவளையே பார்க்க, உங்களுக்கு பொறுமையே இல்ல கண்ணன்.ஒருத்தி வர சொன்னாலே எதுக்குனு கேக்காம இப்படி வெடுக்குனு கிளம்புறீங்க என்று கூற,…
யாருக்குடி பொறுமை இல்ல.எனக்கா?ஆமாண்டி பொறுமை இல்லாம தான் உனக்காக ரெண்டு வருஷம் காத்து இருக்கேன் என்று எகிறினான்…
சாரி கண்ணன்..இனிமே உங்கள காக்க வைக்க விரும்பல..நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்றாள் சிறு வெட்கத்துடன்…
இத நான் சொன்னப்ப நீ கேட்டுருந்தா,நல்லாருந்துருக்கும்..அப்போ என் பிரண்டுக்கு கல்யாணம் ஆகாம என்னால பண்ணிக்க முடியாதுனு சொன்னவ இப்போ எந்த மூஞச வச்சிட்டு என்ன கல்யாணம் பண்ணிகிறேனு சொல்ற.. கத்தினான்..
அவன் இப்படி கோவபடுவான் என்று அறியாதவள் அது..வந்து என்று இழுக்க, அவளை தடுத்தவன் நான் வேற பொண்ண பார்த்தாச்சு..அவுங்க அப்பாகிட்ட எங்க வீட்ல பேசிட்டாங்க.நான் அவள தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று அவளது தலையில் குண்டை தூக்கி போட்டான்…
இதனை சற்றும் எதிர்பார்க்காத சுகன்யா கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது..”எ..என்ன சொல்றீங்க”என்றாள் அதிர்ச்சியுடன்…
ஆமா நான் சொல்றது உண்மை தான்..எத்தன வருஷம் உனக்காக காத்திருக்குறது.அதான் இந்த முடிவு என்று கூலாக கூறினான்…
அவளது சர்வ நாடியும் அடங்கி போனது..அவனுக்காக தானே வேலையை இங்கு மாற்றி வந்தது…ஆனால் அவனுக்கு என் நினைப்பே இல்லை என்ற என்னமே அவளை கொன்றது..அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிய,துடைத்தவள் “ஸாரி”என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட இப்போது அவளது கையை பிடித்து நிறுத்துவது அவனது முறையானது…
“ஏய் இரு.எங்க போற..நீயா கோல் பண்ணி வர சொன்ன..இப்ப என்னனா எதுவுமே பேசாம கிளம்புற..என்ன எனக்கு வேலை வெட்டி இல்லனு நெனச்சியா…”
“ஸாரி”நான் தெரியாம கூப்பிட்டுடேன் என்றாள்…”
“தெரியாம கூப்பிட்டியா?சரி சரி இவ்வளவு தூரம் வந்துட்ட..நான் கட்டிக்க போற பொண்ண பாத்துட்டு போ என்று கூற,வெடுக்கென நிமிர்ந்தவள்,அவள் இங்கே வந்திருக்கிறாளோ என்று நினைத்து சுற்றி முற்றிலும் பார்த்தாள்…அவள் அப்படி பார்பதை பார்தவனுக்கு சிரிப்பு வர அதனை அடக்கி கொண்டவன்,தன் பர்சை திறந்து ஒரு போட்டோவை எடுத்து அவளிடம் நீட்டினான்.. கைகள் நடுங்க அதனை வாங்கியவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு,தயங்கி தயங்கி போட்டோவை பார்த்தவள் அதிர்ந்து போனாள்..அதில் அழகாய் சிரித்து கொண்டு நின்றிருந்தாள் சுகன்யா….அவளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்கி வழிய, அவன் தன்னிடம் பொய் கூறியுள்ளான் என்று தெரிந்து அவனை முறைக்க, அவன் அழகாய் அவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தான்…
[the_ad id=”6605″]
ஹா…ஹா..ஹா பயந்துட்டியாடி?அது எப்படிடி நான் எது சொன்னாலும் நம்பிடுற என்று அவனை கேலி செய்ய, அவள் அவனை பளார்,பளார் என அடித்தாள் ..ஏய் அடிக்காதடி,எல்லாரும் நம்பல தான் பாக்குறாங்க என்று கூறிக் கொண்டே அவளது கைகளை பிடித்து தடுத்தவன்..போதும் டி வலிக்குது என்றான் பாவமாய்..அவன் கூறிய தினுசில் அவளுக்கு சிரிப்பு வந்தது….
ஏன்டி என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கா என்று அவளை முறைக்க, அவள் அதற்கும் சிரித்தே வைத்தாள்..இப்போது அவனும் அவளுடன் இணைந்து சிரிக்க, அதன்பிறகு இருவரும் நிறைய பேசினார்கள்…காபி வரவழைத்து குடித்தார்கள்..இருவரும் அங்கிருந்து கிளம்பி வெளியே வர, கண்ணன் தன் பைக்கை நோக்கி செல்ல, அவள் அவனுக்காக பைக் நிற்கும் இடத்தில் இருந்து ரோட்டை ஒட்டி நிற்க, எங்கிருந்தோ வேகமாய் ஒரு கார் வந்து அவளை உரசி செல்ல, அம்மா…ஆ என்று கத்தியவளை தாங்கி பிடித்தான் கண்ணன்…
“ஏய் என்னாச்சு என்றான் பதட்டத்துடன்…
“ஒன்னுமில்லை .லேசா இடிச்சிட்டு என்று கூற,…, அவனுக்கு கோவம் வர, அவளை அங்கிருந்த ஆட்டோவில் அனுப்பிவிட்டு அந்த காரை துரத்தினான்….
அந்த அறை முழுவதும் ரவுடிகள் நிரம்பி வழிய,அங்கு கிடந்த ஒரு நாற்காலியில் கட்டபட்டு இருந்தார் சக்திவேல்…
“டேய் யாருடா நீங்க..?எதுக்காக டா என்ன கட்டி வச்சிருக்கீங்க…எவன்டா அது.தைரியம் இருந்தா முன்னாடி வாடா என்று கர்ஜித்தார் சக்திவேல்….”
“நான் தான்டா உன்ன இங்க கட்டி வச்சிருக்கேன் என்று கூறிக் கொண்டே அவரின் எதிரே வந்தார் ராஜசேகர்…”
“நெனச்சேன்டா..இத நீ தான் பண்ணிருப்பனு..உனக்கு தான் நேரடியா மோத தைரியம் கிடயாதே..நீ தான் ஒரு பொட்டையாச்சே என்று கூற,ராஜசேகரின் கை அவரது கன்னத்தை பதம் பார்த்தது…”
“எவ்வளவு பட்டாலும் உன்னோட திமிர் குறைய மாட்டுதுடா என்று கூறி அவரது முகத்தில் ஓரு குத்து விட்டார்..அவரது மூக்கிலிருந்து இரத்தம் வழிந்தது…”
ஹா..ஹா அடிடா.அடிச்சு கொன்னுடு என்ன..உயிரோட விட்ட உன் சாவுக்கு நான் பொறுப்பில்ல என்று கூற, அவரது தொண்டையை நெறிந்தவன் டேய் அடங்க மாட்டிங்களடா அப்பனும் பொண்ணும்…என்ன கொண்ணே தீருவனு ஒத்த கால்ல நிக்கிறீங்க..”என்று கூற….
“எ…என்ன…சொல்ற..எம் பொண்ணு எம் பொண்ணு…நீ. பாத்தியா….. “
ஹா..ஹா..அப்போ அப்பனும் பொண்ணும் ஒரே வீட்ல இருந்தும் இரண்டு பேரும் பாத்துக்கல..சரியா போச்சு போ…..இதோ உன் பொண்ணு உன்னைத்தேடி வந்துட்டே இருக்கா!கொஞ்ச நேரம் தான்!”-வந்துடுவா…அப்பறம் ஆசை தீர அவள பாத்துக்க..பாத்ததுக்கு அப்பறம் இரண்டு பேரையும் ஒன்னாவே போட்டு தள்ளுறேன்..என்று அவர் ஆணவத்தில் ஆற்றிய உரையை நடுவே தடுத்தது சமியின் வருகை….”
“அடடா!வந்துட்டா பாரேன்!”-என்னும் போதே உள்ளே வந்தாள் சமி.அங்கே கட்டிபோட்டிருந்த சக்திவேலும்,சமியும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்து கொண்டனர்….
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.