சக்திவேல் தன் முன்னால் நின்ற தன் மகளை ஆசை தீர பார்த்தார்..அவரது கண்களில் கண்ணீர்…”சகிமா”என்று அவர் அழைத்த அடுத்த நிமிடம் “அப்பா…ஆ என்று அவரிடம் ஒடினாள்….”ப்பா ,பா நீ உயிரோட இருக்கியா..எ..என்ன தெரியுதா?நான் உன் பொண்ணு..என்று கதற, கண்ணம்மா நீ தான் எம் பொண்ணா,அன்னைக்கே எனக்கு தெரியாம போச்சே என்று கத்தினார்…
“ப்பா”ஏன்ன சொல்ற.என்ன முன்னமே பாத்தியா..அப்போ ஏன் என்கூட பேசல…என்று அவரது கையை பிடித்து உலுக்க, “அய்யோ கடவுளே பெத்த பொண்ண அடையாளம் தெரியாத பாவியாகிட்டியே?என் பொண்ண தான் நான் ரவுடிங்க கிட்ட இருந்து காப்பாத்துனேனா?என்ன இந்த நெலமைக்கு ஆளாக்கினவுங்கள என்னால எதுவும் பண்ண முடியலயே?என்று கதறினார்…அவர்களது உரையாடலை வெளியே மறைந்திருந்து பார்த்து கொண்டிருந்தனர் மற்ற மூவரும்…அவர்களுக்குமே கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது….
போதும் போதும் உங்க பாச போராட்டம்…உங்க பாசத்த பாக்கவா உன்ன கடத்தி உம் பொண்ண இங்க வர வச்சேன்..உங்க ரெண்டு பேரையும் இங்கயே கொண்ணு புதைக்க தான் வர சொன்னேன்…என்றவன் டேய் இந்த ஆளு கதைய முடிங்கடா என்று அங்கு இருந்த ரவுடிகளிடம் ஆனையிட.,அவர்கள் கையில் பெரிய கத்தியுடன் சக்திவேலை நோக்கி வந்தனர்…ப்ரனேஷ் அதற்கு மேல் பொறுக்காமல்,அங்கிருந்த உள்ளே வர முயல,”டேய் நிறுத்துங்கடா”என்றான் ராஜசேகர்…ப்ரனேஷ் அப்படியே நின்றான்…சக்திவேல் அவனையே பார்க்க,மித்ராவும் அவனையே தான் பார்த்து கொண்டிருந்தாள்…
“பாஸ் என்னாச்சு” என்றான் ஒருவன்…
“கொஞ்சம் பொறுங்கடா,எப்படி இருந்தாலும் இரண்டு பேரும் சாக போறாங்க..போற உயிர் நம்மள கொஞ்சம் சந்தோஷ படுத்திட்டு போகட்டுமே…?
“என்னா சொல்றீங்க பாஸ்.எங்களுக்கு ஒன்னும் புரியல…
“டேய் என்னடா புரியல..இவ்வளவு அழகான ஒருத்தி நம்ம கண்ணு முன்னாடி நிக்கிறா…அவள எப்படிடா அப்படியே அனுப்ப முடியும் என்று மித்ராவை பார்த்தபடி கூறினான்…
அவன் கூறியதை கேட்டு சக்திவேலுக்கு அவனை கொல்லும் வெறி எழுந்தது…அவர் தனது உடலை அங்கும் இங்கும் அசைத்தார்…அவரால் முடியவில்லை….
“டேய் நாயே உனக்கு நெசமாலுமே தில்லு இருந்துச்னா எம் மேல கைய வைடா பாக்கலாம்”என்று ஆக்ரோசமாய் கூறினாள் மித்ரா…
என்ன சவால் விடுறியா,பழசெல்லாம் மறந்துட்டியா?உங்க அப்பன் கண் முன்னாடி உன்ன அனுபவிச்சத…,
அதனை இப்போது நினைத்தவளுக்கு உடலில் ஒரு விறைப்பு ஏற்பட்டது…அவள்அவனை முறைத்து பார்க்க”நான் உயிரோட இருக்கும் வரைக்கும் அவ நிழல கூட உன்னால தொட முடியாது”என்று கூறிக் கொண்டே ப்ரனேஷ் வெளிவர” எவன்டா அது புதுசா”என்று கேட்டுக் கொண்டே திரும்பியவர் அங்கு கண்கள் சிவந்து போய்,முகமெல்லாம் ரௌத்திரம் பொங்க நின்று கொண்டிருந்த ப்ரனேஷை கண்டு அதிர்ந்து போனார்…
பிர..னா நீ..நீ இங்க…?
“ச்சீ வாய மூடு நீயெல்லாம் ஒரு மனுஷனா?உனக்கு மனசாட்சி இல்ல…எப்படி உன்னால மத்தவுங்களுக்கு துரோகம் பண்ண முடியுது…உன்ன போய் இவ்வளவு நாள் என்னோட ஹீரோனு நெனச்சத நெனச்சு நான் வெக்கபடுறேன்..இப்படி ஒரு கேவலமானவனுக்கு மகனா பிறந்தத நெனச்சு அசிங்கபடுறேன். உங்கூட இவ்வளவு நேரம் நின்னு பேசுனதே பெரிய தப்பு என்றவன் தனது பலம் அனைத்தையும்
ஒன்று திரட்டி ஒங்கி அவரது நெஞ்சில் ஒரு உதை விட்டான்…அவர் இரண்டடி தூர சென்று விழுந்தார்…
டேய் நான் உன் அப்பன் என்னையே அடிச்சிட்டியா, என்னோட சந்தோஷத்துக்கு குறுக்க யாரு வந்தாலும் அவுங்கள நான் சும்மா விட மாட்டேன்..அது நான் பெத்த புள்ளையா இருந்தாலும் சரி தான்…”டேய் இவனையும் புடிச்சு கட்டி போடுங்கடா”என்று கூற, இரண்டு ரவுடிகள் அவனை நோக்கி வர,மறைந்திருந்த கவிலாஷும் வெளியே வந்தான்…
“டேய் எத்தன பேருடா வந்துருக்கீங்க”ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வரீங்க..டேய் யாரெல்லாம் இங்க நிக்கிறாங்களோ எல்லாரையும் புடிச்சு கட்டி போடுங்கடா”என்றார்…
[the_ad id=”6605″]
ரவுடிகள் இருவர் ப்ரனேஷை நெருங்கி வர அவன் அவர்களை சரமரியாய் தாக்கினான்…கவி ஒருபுறம் சண்டையிட்டு கொண்டிருந்தான்….இருவர் பூங்கோதையை பிடித்து கட்டி வைத்திருந்தனர்…
சமி தன்னை பிடித்து வைத்திருந்தவர்களிடமிருந்து போராடி கொண்டிருந்தாள்…தாக்க வந்தவர்களை சிறிதும் இரக்கமின்றி எதிர்த்தான் ப்ரனேஷ்!ஒருவனது நெஞ்சின் மீது உதை விட்டான்.அவன் தூர சென்று விழுந்தான்.. !மற்றவன் அவன் கொண்டு வந்த கத்தியினால் அவனை குத்த போக அதனை பிடுங்கி அவனையே குத்தினான்… இன்னொருவன் தலையில் பலமாக ஏதோ இரும்பு பொருள் கொண்டு தாக்கினான் ப்ரனேஷ்.அதுநாள் வரை அவனது இந்த குரூர முகத்தைக் காணாத ராஜசேகர் சற்றே கதிகலங்கி போனார்.பொறுமையிழந்த ராஜசேகர் விரைந்து வந்து அவனது கழுத்தை பிடித்தார்..
“கேவலம் நான் போட்ட சோத்த தின்னுட்டு என்னையே எதிர்குறியா உனக்கு எவ்வளவு திமிர்!”-என்றவர் தன் பிடியை இறுக்கினார்.ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் சமாளிக்க இயலவில்லை.மூச்சு முட்டியது!!!
“என்னங்க அவன் நம்ப பிள்ளைங்க”அவன அடிக்காதீங்க …கெஞ்சினார் பூங்கோதை.
ஏய் வாய மூடுடி..அவனுக்கு என்ன தைரியம் இருந்தா என்னையே அடிப்பான்…என்றவர் அவனது மூக்கில் ஒரு குத்து விட்டார்…மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது…
ப்ரனா என்று பூங்கோதையும்,பாசு என்று சமியும் ஒரு சேர கத்தினர்….
கவிலாஷ் தான் பிடித்திருந்த இருவரையும் அடித்து தள்ளிவிட்டு ராஜசேகரை தாக்கினான்…
“ஏய் உனக்கு என்ன தைரியம் இருந்தா என்ன அடிப்ப என்றவர் டேய் அவன விடாதீங்கடா,என்று கத்தினார்…
ப்ரனேஷ் தன்னை சமன் செய்து கொண்டு ராஜசேகரை நோக்கி வந்தான்…தன்னை தாக்க வந்தரை தடுத்து அவரது கழுத்தை பிடித்தான்…உன்னை உயிரோட விடுறதே தப்பு..உன்ன இப்பவே இதே இடத்துல கொன்னு புதைக்கிறேன்!”-என்றவன் மேலும் தன் பிடியை இறுக்கினான்…ஒரு நொடி தன் விழிகளை அழுந்த மூடித் திறந்தான் ப்ரனேஷ்….திறந்த விழிகளுக்குள் ரௌத்திரம் தலைவிரித்தாடியது!!தன் முழு பலத்தையும் பயன்படுத்தி,அவர் கழுத்தை மேலும் இறுக்கினான்… எடுத்த எடுப்பிலே இரக்கமின்றி அவன் அவர் கழுத்தை இறுக்கி பிடிக்க,அவர் வலியில் கத்த கூட முடியாமல் தவித்தார்…ப்ரனேஷிடம் மற்ற யாரையும் நெருங்க விடாமல் அனைவரையும் புரட்டி எடுத்தான் கவிலாஷ்…ப்ரனேஷ் சட்டென அவரை விடுத்து, ,அவரது நெஞ்சில் தன் காலால் உதைக்க,நிலை தடுமாறியவர் கீழே விழுந்தார்.விழுந்த அவரின் நெஞ்சில் மிதித்து பக்கத்தில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து,”டேய் நீயெல்லாம் உயிரோட வாழவே தகுதி இல்லாதவன்…என்று கூற “டேய் டேய் ப்ரனா நான் உன் அப்பன்டா”..என்ன எதுவும் செய்திடாதடா,பயத்தில் கெஞ்சினார்…பூங்கோதை நீயாவது சொல்லும்மா..என்ன கொல்ல வேண்டானு சொல்லும்மா என்று கெஞ்சினார்….
கெஞ்சுடா நல்லா கெஞ்சு..இப்படி தான கெஞ்சிருப்பா அவளும்…சாவோட வலி என்னனு உனக்கு தெரியனும்டா..என்று கூறிக்கொண்டே இரும்பு கம்பியை கொண்டு தாக்க போக,”வேண்டா…..ஆம் என்று கத்தினாள் சமி”…அனைவரும் அவளை அதிர்ந்து போய் பார்த்னர்…
வேண்டாம் பாசு அவன கொல்ல வேண்டாம் என்று அழுது கொண்டே கூறினாள்..ப்ரனேஷ் அவளை புரியாமல் பார்க்க, இந்த அயோக்கியன் செஞ்ச பாவத்துக்கு நான் உங்க அம்மாவுக்கு தண்டன குடுக்க விரும்பல பாசு..நான் அவுங்க கையால சாப்டுருக்கேன் பாசு..என்னால அவுங்க அமங்கலியாவுறத நான் விரும்பல பாசு என்று கூறி அழுதாள்…பூங்கோதை அவளை கண்களில் நீர் நிரம்ப நன்றியோடு பார்த்தார்…
பாத்தியாடா,இது தான்டா அவ மனசு….அவ குடும்பத்த நீங்க அவ கண் முண்ணாடி கொண்ணது தெரிஞ்சும் அவ உன்ன மன்னிக்கிறானா அவ ஒரு தேவதைடா..அவ சொன்ன ஒரு வார்த்தைக்காக உன்னை உயிரோட விடுறேன்…இனிமே எங்க கண் முன்னாடி வர கூடாது..மீறி வந்த அன்னைக்கு உன் உயிர் உன்கிட்ட இருக்காது என்று கூறியவன் அந்த கம்பியை தூக்கி தூர போட்டு விட்டு கட்டி வைக்க பட்டிருந்த அவர்களை விடுவித்தான்….
பூங்கோதை ஒடி வந்து அவளை அனைத்து கொண்டார்….சரி சரி வாங்க இங்கிருந்து முதல்ல கிளம்பலாம் என்ற கவிலாஷ் அனைவரையும் அழைத்து கொண்டு வெளியே செல்ல முயன்ற நேரம்….,
அம்மா……..ஆ என்று அலறினான் ப்ரனேஷ்..அனைவரும் அதிர்ந்து போய் திரும்பி பார்க்க அவனது தலையில் அவன் கீழே போட்டிருந்த இரும்பு கம்பியால் அடித்திருந்தான் ராஜசேகர்…..
கவிலாஷ் அவரை அடிக்க வர அவனை தடுத்தவர் அவனது முகத்தில் ஒரு குத்து விட்டார்…அங்கு அடிபட்டு கிடந்த ரவுடிகளிடம் “டேய் எல்லாரையும் பிடிச்சு கட்டுங்கடா”என்று உத்தரவிட, அவர் கூறியதை அப்படியே செய்தனர்…
[the_ad id=”6605″]
நீ எனக்கு உயிர் பிச்சை போடுறியா….சாவுங்கடா..எல்லாரும் கூண்டோட கைலாசம் போங்கடா….என்ன பகச்சிகிட்டு யாரும் உயிரோட வாழவே முடியாது…ஆனா நீங்க என்னையும்,என்னோட ஆளுங்களையும் அடிச்சிட்டு இங்கிருந்து உயிரோட போயிடுவீங்களா…?போக தான் விட்டுடுவேனா?என்றவர் அங்கு வைத்திருந்த பெட்ரோலை எடுத்து அவர்கள் மீது ஊற்றினான்….
வேண்டாங்க எங்கள ஒன்னும் பண்ணிடாதீங்க…என்று பூங்கோதை கெஞ்ச…அது எதையும் காதில் வாங்காமல் உங்கள எல்லாம் நான் கொல்ல நினைக்கவே இல்ல..இந்த அப்பனையும் பொண்ணையும் கைலாசம் அனுப்ப நினச்சேன்…அவளுக்கு துணையா நீங்க வந்து மொத்தமா கூண்டோட கைலாசம் போக போறீங்க என்று கூறிக் கொண்டே தீப்பட்டியை பற்ற வைக்க முயல…,”அவ்வ் என்று வாயை பிளந்தார் ராஜசேகர்”….அவரது வயிற்றை கிழித்து கொண்டு ஒரு கத்தி வந்திருந்தது…அனைவரும் அதிர்ச்சியோடு அவரை பார்க்க…அவர் பொத்தென கீழே விழுந்தார்…
அங்கு ரவீனா கொலை வெறியுடன் நின்றிருந்தாள்….அவளை கண்ட ராஜசேகர் அதிர்ந்து ர…வீ…னா….என்றார்….
ஆமாண்டா ரவீனா தான்…நீ பெத்த பொண்ணு தான்…பொண்ணுகன்னா அவ்வளவு இளக்காராமா உனக்கு?இன்னிக்கு உனக்கு எமனா வந்திருக்கிறது அதே பொண்ணு தான்டா!அதுவும் நீ பெத்த பொண்ணு…நீ அன்னிக்கு செய்த எல்லா பாவத்துக்கும் பலன் இன்னிக்கு இந்த ரவீனா கொடுத்துட்டா….
“வேணாம்!என்னை விட்டுவிடு!”-கெஞ்சினார் அவர்.
என்னது விட்டுடனுமா?நான் எந்தப் பாவத்துக்கும் இரக்கப்பட்டு மன்னிக்கிறவள் இல்லை!என் நியாயம் எல்லாம் மரணம் ஒண்ணு மட்டும் தான்! ஏன் தெரியுமா?ஏன்னா நான் நீ பெத்த பொண்ணு..அப்போ உன் உடம்புல ஓடுற ரத்தம் தான என் உடம்புலையும் ஓடுது…நீயே உன் குடும்பத்த அழிக்க துணிஞ்சிட்ட..அப்பறம் நான் மட்டும் எப்படி உன்ன உயிரோட விடுவேன் என்றாள்…
“வேணாம் !என்னை விட்டுவிடு!”-இருகரம் கூப்பி வேண்டினார் அவர்.அவளோ முழுதும் தன்னை தொலைத்திருந்தாள்.தன்னை தானே கட்டுப்படுத்த இயலாத நிலையில் .சற்றும் தாமதிக்காமல் குத்திய வாளை உருவினால்..உருவிய வேகத்தில் அவருடைய இரத்தம் அவளது முகத்தில் தெறித்தது!!
அனைவரும்..ஆ…..என்று அலறிவிட்டனர்…
அனைவரும் நடந்ததை நம்ப முடியாமல் பார்க்க, ரவீனாவின் காரை தொடர்ந்து வந்த கண்ணன் நொடிக்குள் நடந்ததை யூகித்து அங்கு கட்டபட்டிருந்தவர்களை விடுவித்தான்…அப்படியே போனை எடுத்து மற்ற காவலர்களை அங்கு வரும்படி உத்தரவிட்டான்..
ப்ரனேஷ் ஒடிவந்து தன் தங்கையை அனைத்து கொண்டான்..அவளது கண்களில் கண்ணீர்…”ன்னா நான் கொண்ணுட்டேன்னா”என் கையால நானே கொண்ணுட்டேனா…என்று கூறி கதறினாள்…ஆழதாடா ஒன்னுமில்ல..நீ ஒரு அயோக்கிய தான கொன்ன ..பரவால்ல விடு என்று ஆறுதல் படுத்தினான்…அவள் தொடர்ந்து அழுது கொண்டே”நான் நினைக்கலண்ணா இவர் இப்படிபட்ட அயோக்கியனு…ஷாரிக்கா மட்டும் நான் பாக்க போகாம இருந்திருந்தா இன்னைக்கு உங்க எல்லோரையும் நான் பாத்துருக்கவே முடியாது…அவ தான் இவர் செஞ்ச பாவத்தை எல்லாம் என்கிட்ட சொன்னா…கேட்டதும் எனக்கு ரொம்ப ஷாக்….அப்படியே வரும் போது தான் நீங்க எல்லாம் ஒரு கார்ல வரத பார்த்து பாலோ பண்ணேன்…நான் மட்டும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா உங்கள எல்லாம்……அவளால் அதற்கு மேல் எதுவும் கூற முடியவில்லை…அழுகை அவள் தொண்டையை அடைத்தது…ன்னா அம்மா என்று அழுது கொண்டே அன்னையை பார்க்க,அங்கே கலைந்த சித்திரமாய் நின்றார் பூங்கோதை…,தன் உடல் தாங்கிய,தன் கழுத்தினை அலங்கரித்த மாங்கல்யத்தை கழற்றி தூர வீசி எரிந்திருந்தார்….தன் நெற்றியில் இருந்த குங்குமத்தை கலைத்திருந்தார்….கைகளில் போட்டிருந்த வளையல்களை கழட்டி தூக்கி எரிந்திருந்தார்…அந்த கோலத்தில் பார்த்த தனது தாயை கண்டு இருவரும் கண்ணீர் வடிக்க, ஓடிச் சென்று அவரை அனைத்து கொண்டனர்…அவரை பார்த்து அங்கு நின்றிருந்த அனைவருக்குமே கண்கள் கலங்கியது..சமி தன் தந்தையை அணைத்து கொண்டு இருந்தாள்…அப்போது பூங்கோதை தன் மகனை அழைத்து கொண்டு சக்திவேலிடம் வந்தார்…சமி சட்டென தன் தந்தையை விட்டு விலக, “அண்ணா நான் உங்ககிட்ட ஒரு உதவி கேட்பேன்.மறுக்காம செய்வீங்களா”
“என்ன தாயி இப்படி கேக்குற”… நான் உசுறா நெனக்கிற என்பொண்ணையே காப்பாத்தி குடுத்துருக்க…உனக்கு செய்யாம யாருக்கு தாயி செய்ய போறேன்..கேளு தாயி என்றார்…
“அண்ணா உங்க பொண்ண என் வீட்டுக்கு மருமகளா அனுப்புவீங்களா”?என்று பாவமாய் கேட்க, அவரது கையை பிடித்து கொண்டு கதறி விட்டார் சக்திவேல்….இத விட எம்பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்காது….எல்லா உண்மையும் தெரிஞ்சு என் பொண்ண ஏத்துகிற உங்க நல்ல மனசு யாருக்குமே வராது தாயி என்று கூறி கண்ணீர் வடித்தார்….
[the_ad id=”6605″]
அப்பா ஒரு நிமிசம் என்று தடுத்தாள் சமி…அவர் என்னவென்பது போல் அவளை பார்க்க…,”என்னால இவர கண்ணாலம் கட்டிக்க முடியாது என்றாள் முடிவாய்..அவள் கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ந்து போயினர்…ப்ரனேஷ் அவளை முறைத்து பார்த்தான்…அவளுக்கு உள்ளே வலித்தாலும்,அதனை தாங்கி கொண்டு அவனது பார்வையை தாங்கி நின்றாள்….
“ஏம்மா என் பையன உனக்கு பிடிக்கலயா…”
“அய்யோ அப்படி இல்லம்மா..அவர எனக்கு ரொம்ப பிடிக்கும்…ஆனா அதுக்காக கண்ணாலம் எல்லாம் கட்டிக்க முடியாது…
“அதான் ஏன் என்றான் அடக்கபட்ட கோபத்துடன் ப்ரனேஷ்…”
“ஏன்னா என் வாழ்கய கெடுத்தது உங்கப்பா.அவரு பையன எப்படி கண்ணாலம் பண்ணிக்க முடியும்… நிச்யமா முடியாது…உங்களுக்கு ஏத்த சோடி அந்த சாரிக்கா தான்..நீங்க அவள தான் கண்ணாலம் கட்டிக்கனும்…இதை கூறும் போதே அவளது இதயம் உடைந்து நொறுங்குவதை போல் இருந்தது…அது இல்லாம நான் ரெண்டு கொல பண்ணிருக்கேன்…
“அந்த கேஸ தான் நடத்த வேண்டானு சொல்லியாச்சே…”கவிலாஷ்…கூறினான்..
நீங்க சொல்லலாம்..ஆனா என்னால முடியாது..செஞ்ச தப்புக்கு கண்டிப்பா தண்டன வேனும்…என்றவள் சட்டென கண்ணனின் முன் நின்று தனது கையை நீட்டினாள்…அவன் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க…கவிலாஷ் வேண்டாம் என்று தலையாட்டினான்….
“இதோ பாருங்க சார் நானே மூனு கொல பண்ணிருக்கேன்…”அனைவரும் அவளை புரியாமல் பார்க்க,, ஆமா இந்த கொலையும் நான் தான் பண்னேன்..அவர கொன்னது அவரு பொண்ணா இருந்தாலும்,பண்ணது எனக்காக தான..அதனால எல்லா கொலயும் நான் தான் செஞ்சேனு கேஸ போடுங்க..இப்போ என்ன அரஸ்ட் பண்ணுங்க…என்றாள் முடிவாய்….அப்போது காவலர்கள் உள்ளே நுழைய அடிபட்டு கிடந்தவர்களை கைது செய்தனர்…கண்ணன் சமியின் கையில் விளங்கை மாட்டினான்…அனைவரும் அவளையே பார்க்க,”ம்மா உனக்காக அப்பா போறேன்டா”என்று கெஞ்சினார்…அவள் அதனை ஏற்கவில்லை…உப்ப திண்ணவன் தான் தண்ணி குடிக்கனும்…கொல பண்ண நான் தான் தண்டனை அனுபவிக்கனும் என்றவள் நேரே வந்து ப்ரனேஷிடம் நின்றாள்…அவன் அவளையே வெறித்து பார்க்க..நீ ரொம்ப நல்லவன் பாசு….யாரும் கஷ்டபட கூடாதுனு நினைக்கிறவன்…அப்படிபட்ட அயோக்கியன்களுக்கு இப்படிபட்ட பிள்ளைங்க…நெனைக்கவே ஆச்சரியமா இருக்கு பாசு….உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்…நீ நூறு வருஷம் நல்லாருக்கனும்…என்று கூறிவிட்டு கண்ணனின் முன்புசெல்ல அவன் அவளை அழைத்து கொண்டு சென்றான்…
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.