ஆறுவருடம் கழித்து
சமி சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தாள்..அவளை அழைத்து செல்ல சக்திவேல் வந்திருந்தார்..வேறு யாரும் வரவில்லை.அவள் ப்ரனேஷ் வருவான் என்று எதிர்பார்க்க, அவன் வராதது அவளுக்கு வருத்தமாய் இருந்தது..அப்பா…ஆ என்று சக்திவேலை அணைத்து கொண்டாள்…அவர் அவளை அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார்….
ப்பா பாசு எப்படி இருக்காரு?
“ம்ம்ம் என்றவர் ஆட்டோவை நிறுத்தினார்…அந்த இடத்தை பார்த்த சமி அதிர்ச்சியாய் “ப்பா இங்க ஏன் வந்துருக்கோம்.யாருக்கு கல்யாணம் என்றாள்…
உள்ளே வா, வந்தா உனக்கே தெரிய போகுது என்றவர்,விடுவிடுவென உள்ளே சென்றார்…சமி ஒன்றும் புரியாமல் குழம்பி நிற்கும் போதே “ஏய் சமி வந்துட்டியா,வா வா உனக்காக தான் எல்லாரும் வெயிட் பண்றோம்…..சீக்கிரம் வா என்று அவளது கையை பிடித்து அழைத்துச் சென்றார் பூங்கோதை…அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை….”ம்மா யாருக்கு கல்யாணம் என்றாள் தயங்கியபடி…நம்ப ரவீனாக்கு என்றவர்,
இந்த பாரு சமி சும்மா மச மசனு நிக்காம போய் குளிச்சிட்டு ரெடியாகி வா..அந்த ரூம்ல உனக்கு தேவையான எல்லாம் இருக்கு என்றார்…அவள் வாய் அந்த கேள்வியை கேட்டாலும் அவளது கண்கள் ப்ரனேஷை தேடின…அவனை எங்கும் காணவில்லை..
ஏய் சமி நான் பாட்டுக்கு சொல்லிட்டே இருக்கேன்..நீ அப்படியே நிக்கிற என்றவர்,
முதல்ல போய் குளி என்று அவளை அந்த அறைக்குள் தள்ளினார்…..அவளது மனமோ ப்ரனேஷை பார்க்க துடித்தது…
[the_ad id=”6605″]
அரைமணி நேரத்தில் ரெடியாகி கீழே வந்தாள் சமி..வந்தவள் ப்ரனேஷை தேடி தன் பார்வையை சுழல விட,அங்கே ஒர் இடத்தில் தனது நான்கு வயது பேரனை அடக்க முடியாமல் அவன் செல்லும் இடத்திற்கெல்லாம் பின்னே சென்று கொண்டிருந்தார் பத்மாவதி…
“டேய் ஜெய் கொஞ்சம் நில்லுடா”இந்த வயசான காலத்துல என்ன இப்படி படுத்துறியே”என்று சலித்து கொண்டே வந்தவர் அங்கு நின்றிருந்த சமியின் மீது மோதினார்..
“ஓ சாரிம்மா”என்றவர் எப்படிம்மா இருக்க என்றார்….
“ம்ம்ம் நல்லாருக்கேன்…”என்றவள் நீங்க எப்படி இருக்கீங்க என்றாள்….
அவுங்களுக்கு என்ன..ரொம்ப சந்தோசமாக இருக்காங்க…அவுங்கள பாத்தா தெரியல…முன்னவிட இப்ப கொஞ்சம் உடம்பு போட்டுருக்கே…இந்தாங்க அத்தை ஜூஸ் என்ற மித்ரா,இந்தா சமி நீயும் எடுத்துக்கோ என்று அவளது கையில் ஒரு கிளாஸை திணித்தாள்…
அப்போது தனது மகனை தூக்கி கொண்டு வந்த கவிலாஷ் ஜெய்ய தனியா விட்டுட்டு இங்க என்ன பண்றீங்க என்றவன் “ஏய் சண்டிராணி வந்துட்டியா”….என்றான்..சமி மெதுவாய் புன்னகைத்தாள்….
“சரி வா வா கல்யாண வேலை நிறைய இருக்கு…என்று சமியை இழுத்து கொண்டு சென்றாள் மித்ரா…
சமி நான்கு புறமும் தன் பார்வையால் தேடினாள்..ஆனால் ப்ரனேஷை காணவில்லை….அங்கு தன் நிறைமாத வயிற்றை பிடித்து கொண்டு “ஆன்ட்டி போதும் என்று பூங்கோதை கொடுத்த ஜூஸை குடிக்க மறுத்தாள் ஷாரிக்கா…
நீ இப்படி வேண்டானு சொல்றது ப்ரனேஷ்க்கு தெரிஞ்சா அவ்ளோதான்…என்றவர் கட்டாயமாய் அவளுக்கு கொடுத்தார்… அதனை கண்ட சமிக்கு கண்களை கரித்து கொண்டு வந்தது..
முகுர்த்த நேரம்,
[the_ad id=”6605″]
ராஜேஷ்,ரவீனா இருவருக்காகவும் மனமேடை தயாரக இருந்தது…மணப்பெண்ணுக்கு அலங்காரம் நடந்து கொண்டு இருந்தது .. மணமேடையில் நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்க,வெளியே திருமண பாடல்கள் ஒலித்து கொண்டிருந்தது…
” முகுர்தநேரம் நெருங்கிடுச்சு பொன்னை அழைச்சிட்டு வாங்கோ ” என்றார் ப்ரோகிதர் ….மித்ராவும்,சுகன்யாவும் ரவீனாவை அழைத்து வந்தனர்…
ரவீனா அங்கு நின்றிருந்த சமியை பார்த்து சிரித்தாள்…அவளை அழைத்து தன் உடனயே வைத்து கொண்டாள்…சமிக்கு தான் மட்டும் தனித்திருப்பது போல் தோன்றியது….ரவீனா சென்று ராஜேஷின் பக்கத்தில் அமர்ந்தாள்…ஐயர் மந்திரம் கூற கூற இருவரும் திரும்ப கூறினர்…”
கவிலாஷ்-மித்ரா,கண்ணன்-சுகன்யா என அவரவர் தங்களின் இணையுடன் நின்றிருக்க,ஷாரிக்கா மட்டும் தனியாய் நின்றாள்…”சுபத்ரா “ஷாரிக்கா ப்ரனேஷ் வந்தாச்சா”. அவரு தான பொண்ணு பக்கத்துல நிக்கனும்..சீக்கிரம் ப்ரனேஷ்க்கு கோல் பண்ணி வர சொல்லு என்றார்…
“இதோ பண்றேம்மா என்றவள் தன் போனை எடுத்து ப்ரனேஷை அழைக்க,சத்தம் அருகிலயே கேட்டது…சத்தம் வந்த திசையை பார்க்க ப்ரனேஷ் வந்து கொண்டிருந்தான்..அவனது முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது…
“டேய் எரும இன்னைக்கு கூடவா வெளிய சுத்த போவ என்று ஷாரிக்கா அவனை அடிக்க போக, ஏய் எதுக்குடி இப்படி உடம்ப போட்டு அலட்டிகிற..என்று அவளை கடிந்து கொண்டான்…சமி அவனை தன் கண்களுக்குள் சேமித்து வைத்து கொண்டாள்…அவளது கண்கள் கண்ணீரில் குளமாயின…அவன் சமியை சிறிதும் கண்டு கொள்ளவில்லை…அவளது மனம் வேதனையில் துடித்தது…
பாதபூஜை பண்ணனும் பையன பெத்தவா வாங்கோ என்று ஐயர் கூற, அங்கு வந்தவர்களுக்கு மணமக்கள் பாதபூஜை நடத்தினர்..பொண்ணு வீட்டால் வாங்கோ என்று கூற, ப்ரனேஷ் போய் நின்றான்…அதனை பார்த்த சமியின் கண்களில் கண்ணீர்..ப்ரனேஷின் பக்கத்தில் ஷாரிக்காவிற்கு பதில் இவள் நிற்பதை போல் நினைத்து பார்த்தாள்..உடம்பெல்லாம் சிலிர்த்து அடங்கியது.சட்டென தன் மனம் போன போக்கை கண்டு அதிர்ந்தவள் இதற்குமேல் இங்கே நின்றால் சரிவராது என்று நினைத்து அங்கிருந்து நகர முயல, சட்டென அங்கிருந்த செல்ல முயன்ற சமியை இழுத்து தன் அருகில் நிறுத்தினான் ப்ரனேஷ்….இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத சமி அதிர்ந்து போய் ஷாரிக்காவை பார்க்க,ஷாரிக்கா சிரித்த முகத்துடன் நின்றிருந்தாள்..சமிக்கு ஒன்றுமே புரியவில்லை…பின்பு ப்ரனேஷ் முகத்தை பார்க்க அவனது முகத்திலிருந்து எதுவுமே கண்டுபிடிக்க முடியவில்லை…நடப்பது ஒன்றும் புரியவில்லை என்றாலும் சமியின் மனது இப்போது ஒரு நிம்மதியை உணர்ந்தது…
இந்தாங்கோ திருமாங்கல்யம் எல்லாரண்டையும் ஆசீர்வாதம் வாங்கி வாங்கோ என்று தாம்பாள தட்டை நீட்ட,”ம்மா சமி வாங்கிட்டு போம்மா என்று சுபத்ரா கூற..,அவள் “நானா” என்று தயங்கி நின்றாள்…”நாழியாகறது சீக்கிரம் பிடிங்கோ”என்று கூற, “ஏய் குல்பி ரொம்ப சீன் போடாம போடி என்று அவளது காதில் கூற, அவனது உரிமை பேச்சில் சிறிது அதிர்ந்தாலும்,அடுத்த நிமிடம் சமி அதனை வாங்கி அனைவரிடமும் ஆசி பெற்று வந்து ஐயரிடம் கொடுத்தாள். அவர் அதனை வாங்கி மந்திரம் கூறி ராஜேஷ் கையில் கொடுக்க, அவன் அதனை ரவீனாவின் கழுத்தில் கட்டி தன்னில் பாதியாய் ஆக்கி கொண்டான்…
சமி தன் தந்தையை தேடி கீழே வந்தாள்…அங்கே ஒருவன் அமர்ந்திருக்க அனைவரும் அங்கு அவனோடு பேசிக் கொண்டு அமர்ந்திருந்தனர்…கீழே வந்தவளை பார்த்த பூங்கோதை”சமி மேல ரூம்ல ஒரு பார்சல் இருக்கு அத எடுத்திட்டு வா என்றார் …அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை..அனைவரும் அங்கு இருக்க என்னை ஏன் அனுப்புகிறார் என்று யோசித்தவள் அந்த அறைக்குள் சென்றாள்..அங்கு எந்த பார்சலும் இல்லை..”இங்க தான இருக்குனு சொன்னாங்க என்றவள் அறை முழுவதும் தன் பார்வையால் நோட்டமிட்டாள்..அப்போது யாரோ கதவை சாத்தும் சப்தம் கேட்டு திரும்பியவள் அங்கு நின்றிருந்த ப்ரனேஷை பார்த்து அதிர்ந்தவள்,பாசு எதுக்கு கதவ சாத்துற..தொற நான் கீழ போவனும்….
போ.நானா உன்ன பிடிச்சி வச்சிருக்கேன்..என்றவன் அவளை ஒரு மாதிரி பார்தான்..அவனது பார்வையில் அவளது உடம்பு சில்லிட்டது…அவள் அங்கிருந்து கிளம்ப முயல அவன் கதவின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்…
[the_ad id=”6605″]
பாசு யாரானா பாத்தா பேஜாராயிடும்…இங்குட்டு வா..நான் போகனும்…
உன்னால முடிஞ்சா என்ன தாண்டி போ…என்றான் பிடிவாதமாய்…
அவள் மெல்ல நடந்து அவனருகே செல்ல, அவன் இன்னும் விழியகலாமல் அவளையே தான் பார்த்திருந்தான்…அவனது பார்வையில் இருந்த ஏதோ ஒன்று அவளை இம்சித்தது..அவளது மனமோ”கடவுளே ஏன் என்னை இப்படி சோதிக்கிற..கல்யாணம் ஆன ஒருத்தர நெனச்சு என் மனசு இப்படி அலைபாயுதே”என்று தன்னையே திட்டிக் கொண்டவள்,கதவின் மீது சாய்ந்திருந்த அவன் மீது மோதுவது போல் நின்று கொண்டு அவனை தாண்டி கதவை திறக்க போக,சட்டென அவளது கையை தடுத்து அவளை தன் பிடிக்குள் கொண்டு வந்தான்.அவனது இந்த திடீர் அணைப்பில் முற்றிலும் அதிர்ந்தவள் அவனிடமிருந்து விடுபட முயன்றால்..ஆனால் அவளால் அவனது பிடியிலிருந்து சிறிது கூட நகர முடியவில்லை…”பாசு வுடு பாசு..நீ தப்பு பன்ற..கட்டுன பொண்டாட்டி கர்பமா இருக்கும் போது நீ இப்படி பண்றது தப்பு…என்று கூற, “ஓ அப்படியா” என்றவன் அதனை கொஞ்சமும் காதில் வாங்காமல் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தான்..அவனது இந்த செயலில் முற்றிலும் அதிர்ந்தவள்,விடு பாசு என்று அவனிடத்தில் போராடினாள்..அவளால் இதனை கொஞ்சம் கூட ஏற்க முடியவில்லை…இதனை அவள் ஷாரிகாவிற்கு செய்யும் துரோகமாகவே நினைத்தாள்….ப்ரனேஷ் அவளது கழுத்து பகுதியில் தனது முத்தத்தை பதித்தவன்,அடுத்து அவளது முகமெங்கும் முத்தமழை பொழிந்தான்…அவனது இந்த அதிரடி தாக்குதலில் அவளுமே அவனுக்கு அடங்கி தான் போனாள்..இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு இருந்தாலும் அதனை அனுபவிக்க முடியாத தன் நிலையை எண்ணி வருந்தியவள்,சட்டென அவனிடமிருந்து விலகியவள் அவனது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்….அதுவரை ஒருவித மோனநிலையில் இருந்த ப்ரனேஷிற்கு எதற்கு அடித்தாள் என்று புரியவில்லை..அவனது தாபம் கலைந்த நிலையில் அவன் அவளை முறைக்க, அதனை சிறிதும் கண்டு கொள்ளாமல் அவள் கீழே சென்றாள்…
“ஏய் சமி எங்க பார்சல் என்று பூங்கோதை கேட்க,மேல இல்ல என்றாள்…அவளது மனமோ ப்ரனேஷையே நினைத்திருந்தது…
“அப்படியா சரி இங்க வா என்றவர்,அவரை அருகில் அமர வைத்து அனைவரையும் அறிமுக படுத்தியவர் அந்த புதியவனை பார்த்து “இவர் தான் ரஞ்சன் நம்ம ஷாரிக்காவோட கணவர் என்று அறிமுக படுத்த, அதற்கு மேல் அவர் கூறிய எதுவும் அவள் காதில் விழவில்லை..அவளது மனமோ சிறகில்லாமல் வானத்தில் பறந்தது..அதன்பிறகு ஒரு நொடி கூட தாமதிக்காமல் அங்கிருந்து ப்ரனேஷை தேடி ஒடினாள்…அங்கே அவன் கோபமாய் அமர்ந்திருக்க”பா…சு என்று கத்தியவள் ஒடிச்சென்று அவனை அணைத்து கொண்டாள்…தீடிரென அவள் அணைத்ததும் உட்கார்ந்திருந்தவன் அப்படியே மெத்தையில் சாய்ந்தான்…அவளோ அவனது முகம் முழுவதும் முத்தத்தை பதித்தவள் அடுத்து அவனது இதழை தீண்டி அதிரடியாய் முத்தமிட்டாள்…எத்தனை வருட காத்திருப்பு…இனி கிடைக்கவே மாட்டான் என்று நினைத்தவன் தனக்காக காத்திருப்பது புரிந்து அவனது இதழை வன்மையாக கடித்தாள்…அதில் அவனது உதட்டிலிருந்து சிறிது ரத்தமே வந்து விட்டது…”ஏய் விடுடி வலிக்குது”என்று அவன் கூற,ம்ஹீம் என்றவள் அவனை விடவே இல்லை..”உண்மையாவே வலிக்குதுடி”என்றவனின் குரலில் அவனை விடுத்து அவனது உதட்டை பார்க்க, அதில் லேசாய் இரத்தம் வருவது தெரிந்தது…”ஏண்டி அப்ப அடிச்சிட்டு இப்ப வந்து இப்படி கடிச்சி வைக்கிற என்றவன் அவளிடம் பொய்யாய் கோபம் கொள்ள,
“நீ ஏன் பாசு எங்கிட்ட சொல்லல…”
“என்ன சொல்லல…”
“உனக்கு இன்னும் கண்ணாலம் ஆகலனு…”
“ஏன் உனக்கு தெரியாதா….”
“தெரியாது பாசு…நீ சாரிக்காவ கண்ணாலம் கட்டிகிட்டேனு நெனச்சிந்தேன்…
“ஓ அதுனால தான் என்ன அடிச்சியா,என்றவன்”இப்போ மட்டும் இல்லனு உனக்கு யார் சொன்னது….”
“கீழ ஷாரிக்காவோட வூட்டுகார பார்த்தேன்….”
அவர பாக்கலைனா நீ என்ன தப்பா தான நெனச்சிருப்ப..”ஏண்டி மனசுல ஒருத்திய வச்சிகிட்டு வேற ஒருத்திக்கு தாலி கட்டி குடும்பம் நடத்துற அளவுக்கு நான் மோசமானவனாடி”என்றான் வருத்தத்துடன்…
“மன்னிச்சிடு பாசு..நான் எதோ தெரியாம பண்ணிட்டேன்…”
சரி பரவாயில்ல விடு…அதனால தான் இப்படி ஒரு கிஸ் கெடச்சிருக்கு எனக்கு என்றவன்,இந்த ஆறுவருஷமா நீ இல்லாம நான் ரொம்ப தவிச்சிட்டேன்டி….
“அப்பறம் ஏன் பாசு என்ன பாக்க நீ வரவே இல்ல..”
“உன்ன அந்த நிலையில பாக்க என்னால முடியலடி…உன்ன அப்படி பாத்துட்டு என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்…அதனால தான் உன்ன பாக்க வரல….”
உன்ன பாக்கனும் போல இருக்கும் பாசு ..ஆனா ஒருவாட்டி கூட நீ வரல..அப்பாவும் உன்ன பத்தி எதுவுமே சொல்ல மாட்டார்…எனக்கு அவர்கிட்ட உன்ன பத்தி கேக்கவும் ஒருமாதிரி தயக்கமா இருக்கும்..அதே நேரலத்துல நீ இன்னொருத்தி புருஷனு நெனைக்கும் போது அவ்ளோ கஷ்டமா இருக்கும் என்று கூறும் போதே அவளது கண்கள் கலங்கின..அதனை கண்ட அவன் மென்மையாய் அவளது கண்களில் முத்தமிட்டான்…நான் இதுவரைக்கும் எதுக்குமே ஆசபட்டது இல்ல பாசு…நான் மொதல்ல ஆசபட்டது உன்னதான்..ஆனா நான் அதுக்கெல்லாம் தகுதியில்லாதவனு எனக்கு தெரியும்..நீ வந்து மொத தபா எனக்கு முத்தம் குடுக்க சொல்லோ எனக்கு அவ்ளோ சந்தோஷம்…ஆனா என்னால அத அனுபவிக்க முடியல பாசு..என்னோட கடந்த கால வாழ்க்க உனக்கு தெரிஞ்சா என்னாகும்னு பயத்திலயே நீ கிட்ட வர சொல்லோ நான் விலகி போனேன்…அப்போ தான் சாரிக்கா உன்ன விரும்புன விசயம் எனக்கு தெரியும்…அத கேட்டு நான் துடிச்சு போய்டேன்..அதுக்கப்பறம் நல்லா யோசிச்சு தான் உனக்கேத்த பொண்ணு சாரிக்கானு முடிவு பண்ணி நான் உன்ன விட்டு போக முடிவு பண்ணேன்..நான் போய்டாலாவது நீ அவுங்கள கண்ணாலம் கட்டிட்டு சந்தோசமா இருப்பனு நெனச்சேன்…ஆனா நீ எனக்காக இத்தன வருஷம் வெயிட் பண்ணிருக்க, என்றவள் அவனது உதட்டில் ஒரு முத்தம் வைத்தாள்…
நீ அவள கட்டிக்கனு சொன்னப்ப எனக்கு அவ்ளோ கோபம் வந்தது.அதே நேரம் நீ எதுக்காக அத சொல்றேனு எனக்கு புரிஞ்சது..சாரிக்கா மட்டுமில்ல எல்லாருக்குமே நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும் ஆசை…அதனால தான் ஷாரிக்கா வேற கல்யாணம் பண்ணிகிட்டா…ரவீனா நீ வந்து ஆசீர்வாதம் பண்ணா தான் கல்யாணம் பண்ணிப்பேனு சொல்லிட்டா…அதனால தான் அவளுக்கு இன்னைக்கு கல்யாணம் பண்னோம் என்றவன்,
“ஏய் முடியலடி கொஞ்சம் எந்திரி என்றான்…அவள் புரியாமல் அவனை பார்க்க, அவன் கண்களால் சாடை காட்டினான்…அப்போது தான் அவள் கவனித்தாள் இவ்வளவு நேரம் தான் அவன் மீது படுத்திருந்ததை…சட்டென அவனிடமிருந்து விலக , எழுந்து அமர்ந்த ப்ரனேஷ் அவளை தன் மடியில் அமர்த்தி கொண்டான்…
“பாசு நான் ஒன்னு சொல்லவா…”
“சொல்லுடி…”
“நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா…”
“வேண்டாம்டி…”
அவனது பதிலில் அதிர்ந்தவள்,அமைதியாய் இருந்தாள்…அவளது அமைதியை பார்த்தவன்”இன்னைக்கு ஒருவாட்டி நாளைக்கு ஒருவாட்டி தாலி கட்ட முடியாதுடி”என்று கூற, சட்டென நிமிர்ந்தவள் அவனை புரியாமல் பார்க்க…”ஆமாண்டி நாளைக்கு நமக்கு கல்யாணம்..இன்னைக்கே பண்ணலானு தான் நெனச்சேன்..ஆனா உன் மனசுல என்ன இருக்குனு தெரியாம எப்படி பண்றது…அதான் உன்கிட்ட பேசலானு இங்க வந்தேன்…வந்த இடத்துல அம்மணிகிட்ட அடி வாங்கி ,இப்போ முத்தம் வாங்கி இப்படி உட்காந்திருக்கேன் என்றான்…
“என் மனசுல உள்ளத சொல்லாம இருந்திருந்தா என்ன பண்ணிருப்ப…”
வேற என்ன பண்ணிருப்பேன்..போடினு சொல்லி உன் கால்ல விழுந்திருப்பேன்..அதுக்கும் ஒத்து வரலனா உன்ன தூக்கிட்டு போய் தாலி கட்டிருப்பேன் என்றான்..
அவனது பதிலில் அவளது உள்ளம் பூரித்து போனது..எப்பவுமே அவன் தனக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை நினைத்து அவள் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது…”பாசு இந்த நிமிஷம் நான் அவ்ளோ சந்தோசமா இருக்கேன்.என் வாழ்க்கையில இந்த மாதிரி நான் சந்தோஷமா இருந்ததே இல்ல என்றவள் அவனது கழுத்தை கட்டிக் கொண்டாள்.அவளது நெற்றியில் வந்து விழுந்த தலைமுடியை ஒதுக்கி விட்டவன்,இதோ பாரு குல்பி உன் வாழ்க்கையில இனி சந்தோஷமோ,துக்கமோ எப்பவும் நான் உங்கூட இருப்பேன்…
சந்தோஷமான சூழ்நிலையில் உன்கூட சந்தோஷமா இருக்குறது பெரிய விஷயமே இல்லை .. சோகத்திலோ அல்லது கஷ்டத்திலோ அதை சேர்ந்து எதிர்கொண்டு சந்தோஷமா வாழுறதுதான் உண்மையிலேயே அழகான வாழ்க்கை ..”அந்த வாழ்க்கைய உனக்கு கொடுக்க ஆசைபடுறேன்..நான் சாகும் வரைக்கும் எங்கூடவே வருவியா கண்ணம்மா என்றான்..
அவ்வளவு தான்..அவனின் இந்த வார்த்தையில் முற்றிலும் அவனிடம் சரணடைந்தாள் சமி…அவளது கண்களிலிருந்து கண்ணீர்.அவளது கண்ணீரை துடைத்தவன் அவளை இறுக அணைத்து கொண்டான்..
ப்ரனேஷின் அருகில் அமர்ந்து மந்திரங்களை சொல்லி கொண்டு இருந்தான் கவிலாஷ் .. கண்களில் தாரைதாரையா நீர் .. ஒரு பக்கம் தனது தங்கையின் திருமணம்(ஆமாம் சமியை தனது தங்கையாக ஏற்றுக் கொண்டான்.) இன்னொரு பக்கம், திருமண வேள்வியில் இருந்து வரும் புகை..
” என்னம்மா பொண்ண ரெடி பண்ண இவ்வளவு நேரமா ?” என்றார் பத்மாவதி.
” நான் ரெடிதான் அம்மா .. என் ரெண்டு அண்ணிகளும் என்னை விட்டால்தானே?என்னால முடியல “இந்த மித்ரா அண்ணியும்,சுகன்யா அண்ணியும்,இந்த நகை போடு, என் சங்கிலி போடு , இது என் பரிசு , எனக்காக இது போடுனு என்ன படுத்தி எடுக்கிறாங்க..என்று குறை கூறினாள்….அவளை மற்ற இருவரும் முறைத்து பார்த்தனர்…
” பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ ” என்று அய்யர் சொன்னதும் சட்டென நிமிர்ந்தான் ப்ரனேஷ்,.. வேள்வியில் வந்த தீ பெரிதா அல்லது அவன் கண்களில் தெரியும் காதல் தீ பெரிதா என்று பட்டிமன்றமே வைக்கலாம் .. அந்தநீல நிற நிற புடவையில் தேவதை போல இருந்தாள் சமி .. எப்போதும் ஒருவித வெறுமையுடன் சோர்ந்து போய் இருப்பவள்,இன்று அழகாய் புன்னகைத்து, அந்த புடவையில் நளினமாய், அழகு மங்கையை இருந்தாள் .. கண்களில் காதலில் வென்றுவிட்ட களிப்பு, கன்னமோ செவ்வானமாய் சிவந்திருந்தது, ஓரக்கண்ணால் ப்ரனேஷை பார்த்துக் கொண்டே அமர்ந்தாள் … அவனோ காதல் பெருக்கில்,
ஏ குல்பி என்ன கொல்றடி….என்று சொல்லி சட்டென கன்னத்தில் முத்தமிட்டு விட்டான் .. அனைவரும் ” ஓஹோ ” என்று குரல் எழுப்ப,
” எப்படியும் கலாய்க்க போறிங்கன்னு தெரியுது …முழுசா நனைஞ்சாச்சு இனி எதுக்கு முக்காடு ? ” என்று சிரித்தவன் மறுபடியும் முத்தமிட்டான் …. சமிக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது ..
டேய் போதும்டா..என் தங்கச்சி எங்கயும் போக போறதில்ல..முதல்ல உன் ரொமான்ஸ நிறுத்திட்டு தாலிய வாங்கி கட்டு என்றான் கவிலாஷ்…
மித்ரா மெதுவாய் “உங்கள விட இவர் பெரிசா ஒரு ரொமான்ஸ் பண்ணல..நீங்க தாலி கட்டுறதுக்குள்ள என்ன பாடு படுத்துனீங்க” என்று அவனது காதில் ரகசியம் பேச, அன்றைய தினத்தை நினைத்து பார்த்தவன் அழகாய் சிரித்தான்…
லாஷ் அப்படி சிரிக்காதீங்க..எனக்கு இப்பவே உங்கள கட்டிக்கனும் போல இருக்கு என்று அவனை சீண்ட, ஆச்சரியமாய் அவளை பார்த்தவன்,ஐயரே சீக்கிரம் தாலிய கொடுங்க..அவன் சீக்கிரம் தாலி கட்டட்டும் .எனக்கு முக்கியமான வேலை இருக்கு என்று கூறி மித்ராவை பார்த்து கண்ணடித்தான்…
டேய் கவி அவன விட உன்னோட ரொமான்ஸ் தான்டா தாங்க முடியல என்றாள் ஷாரிக்கா….
ஐயர் திருமாங்கல்யத்தை எடுத்து ப்ரனேஷிடம் கொடுத்தார்..
சமி மகிழ்ச்சியில் லேசாய் ப்ரனேஷ் பக்கம் சாய்ந்து அமர்ந்தாள் .. இப்போது அனைவரும் அவளை கேலி செய்தனர் .. “கெட்டிமேளம் கெட்டிமேளம் ” என்று ப்ரோகிதர் சொல்ல, திருமாங்கல்யத்தை ஏந்தியவன் மீண்டும் பார்வையாலே அவளின் சம்மதத்தை வாங்கி தனது கரங்களால் அவளை தன் சரிபாதியாக்கி கொண்டான் ப்ரனேஷ் … மனதில் அப்படி ஒரு கர்வம் உண்டானது அவனுக்கு .. உலகையே வென்று விட்ட ஒரு உணர்வு .. பெண்ணவளோ விண்ணில் பறந்தாள் … சமியின் விரல் பிடித்து அந்த சின்ன ஸ்பரிசத்தில் ஆயிரம் மின்சாரங்கள் பாய்ச்சி, தங்களின் காதல் வாழ்க்கையை திருமணத்தில் தொடக்கி வைத்து அக்கினியை வளம் வந்தான் ப்ரனேஷ் ..தனது மகளின் வாழ்க்கை இனி சந்தோஷமாக இருக்கும் என்று நினைத்த சக்திவேலின் கண்கள் பனித்தன….அதன் பிறகு நடந்த அனைத்து சம்பிரதாயங்களையும் இருவரும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர்…இருவரும் பூங்கோதை,சுபத்ரா,பத்மாவதி மூவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, அவர்கள் அவளை அணைத்து முத்தமிட்டனர்…
“நாங்களும் நாங்களும் என்று மித்ரா,சுகன்யா,ஷாரிகா,ரவீனா ஆகியோரும் அவளுக்கு முத்தமிட,அவர்களை முறைத்த ப்ரனேஷ் எல்லா முத்தத்தையும் நீங்களே குடுத்துட்டா,அப்பறம் நான் என்ன பண்றது.எனக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க, என்று ப்ரனேஷ் கூற அங்கே சிரிப்பலை உருவானது…
“மச்சான் கவலபடாத உனக்கு நாங்க தரோம்” என்று கவிலாஷ்,கண்ணன்,ராஜேஷ்,ரஞ்சன் நால்வரும் அவனை நெருங்க, ப்ரனேஷ் “டேய் என்ன விட்டுடுங்கடா”என்ற ப்ரனேஷின் புலம்பலுக்கு அனைவரின் சிரிப்பே பதிலானது…
பாவம் அண்ணி நீங்க… எங்க அண்ணன் கிட்ட வந்து இப்படி மாட்டிக்கிட்டீங்க” என்று சிரித்தாள் ரவீனா.”பப்ளி நீயுமா?என்ற ப்ரனேஷை பார்த்து சிறியவர்கள் அனைவரும் சிரிக்க,பெரியவர்கள் அனைவரும் மனநிறைவோடு அவர்களை ஆசீர்வதித்தனர்…. ஒரு நிறைந்த புன்னகையோடு ப்ரனேஷை பார்த்தாள் சங்கமித்ரா.
நிறம் மாறும் பச்சோந்திகள் வாழும் இவ் உலகில் தனது நிஜத்தை தொலைத்து,நிழலில் வாழ்ந்து வந்தவள்,இன்று தன்னவனின் நிழலையும்,நிஜத்தையும் கண்டு அவனுடன் பல்லாண்டு வாழ முடிவெடுத்தாள் பிறந்த பிறவியை நிறைவு செய்ய…….,
நிலவும் நீயும் ஒன்றடி என்றவன்,
நின்று மயக்கினான் அவளை…
நிஜத்தை தொலைத்து வாழ்ந்தவள்,
நிலவென கண்டாள் அவனை…
நிதமும் அவனின் திருமுகத்தை காண
தவித்தவளை…,
நில்லடி பெண்ணே என் நிழல்முகம்
காட்டுகிறேன்….நிம்மதியாய்
நின்று ரசித்திடு என்றான்….!
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.