அந்த பிரபலமான மருத்துவமனையில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தான் ப்ரனேஷ்…
அப்போது அங்கு வந்த கவிலாஷ் “டேய் பிரனா என்னாச்சுடா..எப்போ நீ பெங்களூர்ல இருந்து வந்த…என்றான்…
டேய் கவி ஆக்ஸிடன்ட் ஆச்சுடா..
ஆக்ஸிடன்டா?யாருக்கு…
கவி குல்பிய காணும்டா..அவள தேடி போகும் போது தான் ஆக்ஸிடண்ட் ஆச்சு.
அவ எங்க போயிருப்பா..அவ வீட்ல இருப்பா…
இல்லடா..என்றவன் கதிர் கூறிய அனைத்தையும் அவனிடம் கூற..
என்னடா சொல்ற.என்றான் அதிர்ச்சியாய்..
ஆமாண்டா . அவள நான் தேடிட்டு இருக்கும் போது குறுக்க ஒருத்தர் வந்துட்டார்..நான் அத கவனிக்காம அவர் மேல கார ஏத்தி…..அதற்கு மேல் அவனால் கூற முடியவில்லை….
டேய் எனனடா சொல்ற. இப்போ அவர் எப்படி இருக்கார்.. பிரச்சனை ஒன்னும் இல்லையே?
தெரியலடா…டாக்டர் ரொம்ப கிரிட்டிக்கல்னு சொல்லிருக்கார்.. எனக்கு பயமா இருக்குடா..என்னால தான் அவருக்கு இப்படி ஆச்சு என்று தலையில் அடித்து கொண்டான்..
டேய் நீ என்ன வேனுமுனா பண்ணுன..அது உனக்கே தெரியாம நடந்துருக்கு..நீ பயப்படாத..அவருக்கு ஒன்னும் ஆகாது…
இல்லடா..அந்த ஆளு அடிபட்டு ரத்த வெள்ளத்துல கிடக்கும் போது என் போன காட்டி எங்கிட்ட எதோ சொல்ல வந்தார்..அது என்னனு தான் எனக்கு புரியல…
டேய் கவலபடாத..எல்லாம் நல்லதே நடக்கும்… என்னும் போதே டாக்டர் அங்கு வந்தார்…
டாக்டர் அவரு எப்படி இருக்கார்..பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லையே…?கவிலாஷ் கேட்டான்..
பயப்படும்படி ஒன்னுமில்ல…ஆனா தலையில அடிபட்டதுல அவர் அன்கான்சியஸ் ஆய்டாரு..
என்ன சொல்றீங்க டாக்டர்…வேற எதாவது பிரச்சனையா?
இப்போ என்னால எதுவும் சொல்ல முடியாது..கான்சியஸ் வந்தா தான் சொல்ல முடியும்…
ப்ரனேஷோ”என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க”…”கான்சியஸ் எப்போ வரும்”..என்றான்..
அத என்னால கரெக்டா சொல்ல முடியாது மிஸ்டர்..அவர் இப்போ ஒரு கோமா பேஷண்ட் மாதிரி தான்..அவருக்கு நினைவு இன்னைக்கு வரலாம்..இல்ல நாளைக்கு வரலாம்..ஏன் ஒன் மந்த் கூட ஆகலாம்.. (Alprazolam) இன்னும் சொல்ல போனா வராம கூட போகலாம்..எல்லாம் அந்த ஆண்டவன் கைல தான் இருக்கு…
டாக்டர் நாங்க அவர பாக்க முடியுமா?
கண்டிப்பா..பேஷண்ட் டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க என்று டாக்டர்கள் கூறும் அதே வசனத்தை அவரும் கூறிச் சென்றார்…
இருவரும் அந்த அறைக் கதவை திறந்து உள்ளே சென்றனர்…அங்கே ஒருவர் படுத்திருக்க அவரது
தலையில் ஒரு பெரிய கட்டு போடப்பட்டிருந்தது..அப்படியே கண்களை மூடியபடியே படுத்திருந்தார்..
டேய் பிரனா யாருடா இவரு…பாக்க ஆளே ஒரு மாதிரி இருக்கார்..
டேய் கவி யாரா இருந்தா என்னடா. அவரும் உயிருள்ள ஒரு மனுஷன் தானே…என்றான் வருத்தத்துடன்…
அப்போது அங்கு வந்த செவிலியர் “சார் இந்தாங்க,இது அவரோட திங்ஸ் என்று கூறி அவர் அணிந்திருந்த சட்டையில் சுற்றி கொடுத்து விட்டு சென்றாள்…
அதனை பெற்று கொண்ட கவிலாஷ் அதை பிரிக்க, அதில் ஒரு கிழிந்து போன புத்தகமும், அந்த புத்தகத்தின் நடுவில் ஒரு கூர்மையான கத்தியும் இருந்தது…அதனை பார்த்த இருவரும் அதிர்ந்து போய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்…
டேய் என்னடா கத்தியெல்லாம் இருக்கு என்று ப்ரனேஷ் அதிர்ச்சியாய் கேட்க, அவன் கூறிய எதையும் காதில் வாங்காமல் அந்த சட்டையில் சுற்றியிருந்த மற்றொரு பொருளை,முறைத்து பார்த்து கொண்டிருந்தான் கவிலாஷ்…
கவி. கவி. என்னடா அந்த செயின இப்படி பாக்குற….
ஆமாம் அவனது தந்தை கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடந்த அதே செயினை போல் இருந்தது..அவன் கையில் வைத்திருந்த செயின்..
கவி..கவி..என்று உலுக்க, எ..என்னடா கேட்ட, எதுக்கு இந்த செயின இப்படி பாக்குற…என்றான்
ப்ரணா என் அப்பா கொலை செய்யபட்ட இடத்துல இதே மாதிரி ஒரு செயின் கிடச்சது..
இதே போலவா?ஆச்சரியமாய் கேட்டான்…
ஆமாண்ட்டா..இந்த டிசைன் மட்டும் தான் வேற..மத்தபடி இந்த ஹார்ட் மாதிரி டாலர்..பச்சகல் பதித்தது எல்லாமே சேம் தான்..என்ன இது ஆண்கள் போடுறது..அது பெண்கள் போடும் செயின்.அவ்ளோ தான் வித்தியாசம்…
என்னடா சொல்ற..என்னால நம்ப முடியல…அப்போ அந்த கொலைக்கும் இவருக்கும் எதாவது சம்மந்தம் இருக்குமா?
எனக்கும் அதே டவுட் தான்டா…அந்த கொலைய இவரு தான் செஞ்சாரா..இல்ல இவர் சம்மந்தபட்ட வேற யாராவது….
டேய் கவி அங்கிள கொலை பண்ற அளவுக்கு. அவர் அப்படி என்னடா பண்ணிருப்பார்..ஒன்னும் புரியலடா ..என்று தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்..
நம்ம கேள்விக்கெல்லாம் பதில் இவர் தான்டா சொல்லனும் என்று அங்கு படுத்திருந்தவரை காட்டி கூறினான்…..
அப்போது அவனது போன் அடிக்க எடுத்தவன் சொல்லு ஷாரிக் என்றான்….
நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வா..
என்னாச்சு?
நீ வா என்று கூறிவிட்டு வைத்து விட்டாள்…
அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் ஷாரிக்காவின் வீட்டில் இருந்தனர்…
என்னாச்சு டி .எதுக்கு அவசரமா வர சொன்ன…
கவி நேந்து நைட்லேருந்து அப்பாவ கானும் டா…
என்னடி சொல்ற..அவர் என்ன சின்ன பையனா..காணாம போறதுக்கு..எங்கயாவது ஆபீஸ் விசயமா போயிருப்பார்…
இல்ல டா கவி…அவர் என்ன வேலையா இருந்தாலும்,எவ்வளவு நேரம் ஆனாலும் வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துடுவார்…அப்படி வர முடியலனா போன் பண்ணி இன்பார்ம் பண்ணிடுவார்..ஆனா நேத்து நைட்லேருந்து அவர் போனும் பண்ணல..நாங்க போன் பண்ணாலும் சுவிச் ஆஃப்னு வருது. எனக்கு ரொம்ப பயமா இருக்குடா என்று கூறி அழுதார் சுபத்ரா…
ஆன்ட்டி அழாதீங்க..அங்கிளுக்கு ஒன்னும் ஆகாது..நாங்க போய் தேடி பாக்குறோம்..நீங்க பயப்படாம இருங்க…என்றான் ப்ரனேஷ்…
டேய் ப்ரனா .இந்த விசயம் வெளில யாருக்கும் தெரிய வேண்டாம்..தெரிஞ்சா பப்ளிக்,மீடியானு பிரச்சனை பெருசாயிடும்..
ஒகே ஆன்ட்டி நாங்க பாத்துகிறோம் என்று கூறி அங்கிருந்து அவரது அலுவலகத்திற்கு விரைந்தனர்…
குட்மானிங் தம்பி என்று கூறிய செக்யூரிட்டிக்கு ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்தவர்கள் “சார் இருக்காரா”..என்றனர்..
இல்ல தம்பி சார நேத்து நான் ட்யூட்டி முடிஞ்சி போகும் போது பாத்தது தம்பி என்றார்..இவர்கள் இருவரையும் அவருக்கு நன்கு தெரியும் என்பதால் உரிமையாய் அழைத்தார்…
அப்போ அவர் ஆபீஸ்ல தான் இருந்தாரா?
ஆமா தம்பி..
எப்போ கிளம்பினாரு தெரியுமா?ப்ரனேஷ் கேட்டான்….
எனக்கு தெரியாது தம்பி..நேத்து நைட் ஷிப்ட்ல இருந்த வேலையாவ கேட்டா தெரியும்…
ஒ. அப்படியா..அவரு வீடு எங்க இருக்கு..அட்ரஸ் தாங்க என்றவர்களிடம் அவனுடைய “அட்ரசை கொடுத்தவர்,என்னாச்சு தம்பி எதாவது பிரச்சனையா?என்றார்…
அதெல்லாம் ஒன்னுமில்ல அண்ணே..சும்மா தான் என்று கூறி விட்டு வேலையாவின் வீட்டிற்கு சென்றனர்….
அது தினம் தோறும் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தும் தொழிலாளர்கள் வாழும் இடம்..எந்த பக்கம் திரும்பினாலும் சிறு குடிசைகளாகவே இருந்தது..அவர்கள் யாரோ ஒருவரிடம் கேட்டு,வேலையாவின் குடிசைக்கு முன்பு நின்று,
வேலு ..வேலு என்று ப்ரனேஷ் அழைக்க,டேய் ப்ரனா நீ என்ன கத்தினாலும் அவர் வர மாட்டார்…
ஏன்டா?
நல்லா கண்ண திறந்து பாரு..அவரு வீடு பூட்டியிருக்கு…?
அட ஆமா..என்றவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை அழைத்து,அண்ணே இந்த வேலு எங்க என்றான்…
அவனை மேலிருந்து கீழாக பார்த்தவர்,அந்த மனுஷன் எங்க போறானு யாருகிட்டயும் சொல்றது இல்ல..எங்க போறானு தெரியாது.எப்போ வரானு தெரியாது…என்று கூறிவிட்டு சென்றார்..
டேய் கவி என்னடா இப்படி சொல்றாரு…இப்ப என்னடா பண்றது…
டேய் ப்ரனா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்ப்போம்..நைட் ஷிப்ட் முடிசிட்டு வந்துருக்கார்..தூங்குறதுக்கு வீட்டுக்கு வந்து தான ஆகனும்..என்று கூறிவிட்டு இருவரும் அங்கே ஒர் இடத்தில் அமர்ந்தனர்….
நேரம் ஆகி கொண்டே போனது தவிர அவர் வந்தாய் இல்லை..ச்சை என்னடா இன்னும் கானும்…என்று சலிப்பாய் கூறிய ப்ரனேஷ்,கவி வாடா ஈவ்னிங் வந்து பார்க்கலாம் என்று கூறிவிட்டு சென்றனர்….
ஒரு வாரம் கடந்திருந்தது..தாமோதர் இருக்குமிடம் யாருக்கும் தெரியவில்லை…அந்த செக்யூரிட்டி வேலுவை இருவரும் வலைவீசி தேடினர்…ஆனால் அவர் கிடைக்கவில்லை..அவர் வீட்டிற்கு வந்தாள் உடனே தங்களுக்கு தெரிய படுத்துமாறு அங்குள்ளவர்களிடம் கூறிவிட்டு வந்திருந்தனர்…தாமோதர் காணாமல் போன செய்தியை கேள்விபட்ட ராஜசேகர் ஏகத்துக்கும் அதிர்ந்து போனார்..ஆனால் அவரால் இந்தியா வர முடியவில்லை..அவர் சென்ற வேலை மிகவும் முக்கியமானது..அதனை பாதியில் விட்டு வரமுடியாது என்று கூறிவிட்டார்.. கவிலாஷ்,ப்ரனேஷ் இருவரும் வீட்டிற்கு கூட செல்லாமல் இங்கயே இருந்தனர்..அவர்கள் சுபத்ராவை கூட சமாதானம் படுத்தி விட்டார்கள்..ஆனால் ஷாரிக்காவை என்ன சொல்லி சமாதானம் படுத்துவது என்று தெரியாமல் விழித்தனர்…
இங்க பாரு ஷாரிக் அப்பா எங்கயும் போயிருக்க மாட்டார்…நீ அதையே நினச்சு கவலபடாம அடுத்து என்ன செய்யனுமோ அத கவனி என்றான் கவி..
இதுக்கு மேல கவனிக்க என்ன இருக்கு என்றாள் விரக்தியாய்…
என்ன சொல்ற ஷாரிக் உன்ன நம்பி ஆயிரம் குடும்பம் இருக்கு என்றான் ப்ரனேஷ்…அவன் கூறியது புரியாமல் அவனை பார்க்க…
ஆமாண்டா..இனிமே அப்பா வரவரைக்கும் நிர்வாகம் எல்லாம் நீ தானே பண்ணனும்..நீயே இப்படி முடங்கிட்டா அதெல்லாம் யாரு கவனிப்பா…
அவன் கூறுவதும் சரிதான் என்று நினைத்தவள் தன் கண்களை துடைத்து கொண்டு..குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்….
ப்ரனேஷ் நன்கு உறங்கி கொண்டிருந்தான்…அவன் சரியாய் உறங்கி ஒரு வாரம் கடந்திருந்தது..அவனுடைய குல்பி காணாமல் போனது,அவன் செய்த ஆக்ஸிடன்ட்,தாமோதர் காணாமல் போனது என அடுத்தடுத்து வந்த பிரச்சனைகளில் தூக்கத்தை அறவே மறந்திருந்தான்..பகல் முழுவதும் தாமோதரை தேடினான் என்றால் இரவு முழுவதும்,அவனது குல்பியை தேடினான்..எங்காவது கோவில் தங்கியிருக்கலாம் என்று நினைத்து ஒவ்வொரு கோவிலாக தேடினான்..ரோட்டோரங்களிலும்,சத்திரத்திலும் தேடினான்…ஆனால் அவள் கிடைக்கவில்லை…எத்தனை நாளைக்கு தான் தூக்கத்தை கட்டுபடுத்துவது..இன்று அவனையும் அறியாமல் உறங்கி கொண்டிருந்தான்…
ரவீனா ரவீனா என்று அழைத்தார் பூங்கோதை…
ஏம்மா இப்படி எம்பேர ஏலம் விடுற என்று கேட்டுக் கொண்டு அங்கே வந்தாள் அவள்…
இந்தா இந்த காபிய உன் அண்ணன எழுப்பி குடு..அப்படியே அவன குளிச்சிட்டு வர சொல்லு..புள்ள சாப்டு எத்தன நாள் ஆச்சோ என்று கவலை பட்டார்…
என்னால அவனுக்கு காபி எல்லாம் குடுக்க முடியாது மா…நான் ஊருக்கு வந்து ஒன் வீக் ஆகுது.இதுவரைக்கும் என்ன வந்து பாக்கல..அப்பறம் நான் மட்டும் எதுக்கு அவனுக்கு காபி குடுக்கனும் என்று பொரிந்தாள்…
ஏய் அவன் வீட்லயே இருந்துகிட்டாடி உன்ன பாக்கல. நீயும் பாத்துட்டு தான இருக்க அவனும்,கவியும் எங்கெல்லாம் அலையுறாங்கனு..தெரிஞ்சும் இப்படி பேசுற…
நீ என்ன சொன்னாலும் என்னால முடியாது…என்றாள் பிடிவாதமாய்…
ஏய் எனக்கு கிச்சன்ல வேலை இருக்குடி…
இருக்கட்டும்..வேலைய முடிச்சிட்டு நீயே போய் குடு…
உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாதுடி என்று கூறியவர் காபியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர, அவரின் எதிரே வந்தாள் சமி..ரவீனா அழைத்து வந்த அவளுடைய தோழி…
ஏய் சமி எங்க போன..எவ்வளவு நேரமா உன்ன தேடுனேன் தெரியுமா?
இல்ல..பின்னாடி..தோட்டத்துல…
சரி சரி..வா நாம ஷாப்பிங் போகலாம்…
இல்ல நான். வரல..நீ..போய்டு வா..
ஏன் என்னாச்சு..உடம்பு சரியில்லையா…
அப்படில்லாம் இல்ல.நான் நல்லா தான் இருக்கேன்..
அப்போ சரி..உனக்கு எதாவது வேனுமா?
இல்ல..வேண்டாம்….
சரி என்று கூறிவிட்டு ரவீனா கிளம்பினாள்…
அவள் சென்ற பிறகு சமியின் கையில் காபியை திணித்த பூங்கோதை”பீளீஸ் மா மேல எம் பையன் தூங்குறான்..அவன எழுப்பி இத குடு..அப்படியே அவன குளிச்சிட்டு கீழ வர சொல்லு..என்று கூறிவிட்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்..
ம்மா..,நான் எப்படி..என்று தயங்க..
அதெல்லாம் அவன் ஒன்னும் சொல்ல மாட்டான் ..நீ பயப்படாம போ..
அவள் தயங்கி தயங்கி நிற்க…
ஏம்மா பயப்படுற..தைரியமா போ..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ..அதான்…இல்லனா நானே போயிடுவேன் என்றார்…
சமி காபியை எடுத்து கொண்டு ப்ரனேஷின் அறைக்கு முன் சென்று நின்றாள்..அவளுக்கு உள்ளே செல்ல தயக்கமாய் இருந்தது..மெதுவாய் கதவை தட்டினாள்..மறுபடியும் தட்ட போக கதவு தானாய் திறந்து கொண்டது..மெல்ல தயங்கி தயங்கி உள்ளே சென்றவள்,தன் பார்வையால் அந்த அறையை நோட்டமிட்டாள்..அறை முழுவதும் அவ்வளவு சுத்தமாக இருந்தது..
மெல்ல அடி எடுத்து வைத்தவள், கட்டிலின் முன்பு போய் நின்றாள்…அவளுக்கு தயக்கமாய் இருந்தது. எப்படி தெரியாத ஒருத்தரை எழுப்புவது என்று தயங்கி தயங்கி நின்றாள்..
அங்கு போர்வையை முழுதும் இழுத்து போர்த்தி கொண்டு படுத்திருந்தான் ப்ரனேஷ்…
சார் சார் என்று மெதுவாய் அழைத்தாள்..அவள் அழைத்தது அவளுக்கு கேட்டவில்லை..அப்புறம் எங்கே அவனுக்கு கேட்க போகிறது…
என்ன காதில வாங்காம இப்படி தூங்குறார் என்று நினைத்தவள்,மெல்ல அவனை உசுப்பினாள்…அவனோ”பீளீஸ் மா”இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் என்று கூறிக் கொண்டே திரும்ப, அவனுடைய கை இடுக்கில் இவளுடைய கை மாட்டிக் கொண்டது…
இதனை கொஞ்சமும் எதிர் பார்க்காதவள்,திருதிருவென விழிக்க, அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவள்,அவளது கையை உருவ முயல, அவன் போர்வை என்று நினைத்து நன்றாக இழுக்க,கால் தவறி சட்டென அவன் மீது விழுந்தாள்..போர்வையையும் தாண்டி அவனது இதயதுடிப்பு அவளுக்கு தெளிவாய் கேட்டது…சட்டென அவனிடமிருந்து விலகியவள்,அங்கிருந்து எழப்போக பட்டென அவளது கையை பிடித்தான் ப்ரனேஷ்..தன்மீது ஏதோ விழுந்ததும் தூக்கம் கலைந்தவன், அப்போது தான் அவன் தங்கை வந்திருப்பது அவனுக்கு ஞாபகம் வர…அவளது கையை பிடித்தான்..
ஹேய் பப்ளி சாரிடி..நான் வேனுனு எதுவும் பண்ணல..எனக்கு கொஞ்சம் அர்ஜென்ட் ஒர்க் டி அதனால தான் உன்ன ரிசிவ் பண்ண வர முடியல சாரிடி என்றான்…
அவன் கையை பிடித்ததும் அவளது இதய துடிப்பு அதிகமாய் துடித்தது..அவனை திரும்பி பார்க்காமல் அப்படியே நின்றாள்…
என்னடி பேசமாட்டியா…அண்ணன் மேல கோவம் இருந்தா ரெண்டு அடி அடிச்சிக்கோ..ஆனா என்கிட்ட பேசாம முகத்த திருப்பிட்டு போகாத என்று கெஞ்சினான்..
அவள் அதற்கும் அசையாது அப்படியே நிற்க,சட்டென அவளது கையை பிடித்து இங்க வந்து உட்காரு, என்று இழுக்க, ஏற்கனவே பதட்டத்தில் இருந்தவரள் சட்டென அவன் மீது சரிந்தாள்…சரிந்ததில் காலையில் தலைக்கு குளித்து காய வைத்திருந்த தலைமுடி ,அவளது முகத்தை மறைக்க…
அய்யய்யோ …என்று அவன் அலற..
என்னமோ ஏதோ என்று பயந்தவள் சட்டென அவனிடமிருந்து விலகி,அவனை பார்க்க, அவளது அந்த கோலத்தை பார்த்து கலாய்தவன் சட்டென அவள் திரும்பவும்,அவன் அவளை பார்க்க,நான்கு விழிகளும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டனர்..ப்ரனேஷோ தன் கண்களை கசக்கி தான் காண்பது கனவா,இல்லை நினைவா என்று தன் கைகளை கிள்ளி பார்க்க, அம்மா என்று அலறினான்..ஆ..வலிக்குது அப்போ உண்மை தான் என்று உரைக்க,சட்டென அவளது கையை பிடித்து இழுத்து அவளை தன்மேல் போட்டுக் கொண்டு அவளது முகம் முழுவதும் முத்தமழை பொலிந்தான்….இதனை சற்றும் எதிர்பார்க்காத சமி சிலையாய் அமர்ந்திருந்தாள்….