Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
நீரும் நெருப்பும் 5
Post Views:
3,497
அத்தியாயம்
–
5
அவள்
என்ன
அப்படிபட்ட
அழகு
என்று
அவன்
யோசித்ததில்
அழகு
தான்
என்ற
எண்ணம்
தான்
வந்தது
.
இருந்தும்
இப்படி
இவன்
உருகும்
அளவுக்கு
எல்லாம்
இல்லை
என்று
நினைத்தவன்
.
“எல்லாம்
சரி
தான்
உன்
அப்பா
இதுக்கு
ஒத்துக்
கொள்வாரா
….?”
என, குருமூர்த்தி
கேட்பதிலும்
நியாயம்
இருந்தது
.
அவர்
ஸ்டேட்டஸ்
ரொம்ப
பார்ப்பவர்
.
குரு
தங்களோடு
வசதி
என்பதால்
தான்
விக்ரம்
குரு
நட்பு இவ்வளவு
ஆண்டு
தொடர்கிறது
.
அது
மட்டும்
அல்லாது
குருவால்
விக்ரம்
தொழிலை
கற்றுகொள்வான்
என்பதாலும்
தான்
.
அவருக்கு
ஒரு
லாபம்
இல்லாது
எந்த
காரியத்திலும்
இறங்க
மாட்டார்
.
அதை
நினைத்து
அவன்
கேட்க
“
அதுக்கு
தான்டா
உன்
கிட்ட
ஹெல்ப் கேட்டு
வந்தேன்
.
வீட்ல
என்
கல்யாண
பேச்சு
எடுத்ததும்,
இந்திராவை
பார்க்க
போனேன்டா
….”
என,
இதுவரை
அவன்
சொல்வதை
பொறுமையாக
கேட்டுக்
கொண்டு
வந்த
குரு
இந்திராவை
பார்க்க
போனேன்
என்றதும், ஒரு
மாதிரி
குரலில்
“
எப்போ
….?”
என்றான்.
“
இரண்டு
நாள்
முன்னாடி
.
அவளுக்கு
என்னை
நியாபகத்திலேயே
இல்லடா
…
நான்
உங்க
அண்ணா
கல்யாணத்தில்
பார்த்தோமே, குருவின்
பிரண்ட்
என்று
சொல்லியும்
,
எனக்கு
நியாபகம்
வரலேன்னு
போயிட்டா
…”
என்று
அவன்
சொல்ல
சொல்ல
குருவுக்கு
கோபம்
தான்
அதிகரித்தது
.
என்ன
இருந்தாலும்
இந்திரா
நிவேதாவின்
நாத்தனார்
.
இது
வரை
யாரோ
ஒரு
இந்திரா
என்று
கேட்டுக்
கொண்டு
இருந்தவன்
.
நிவேதாவின்
நாத்தனார்
என்றதும்
முறைப்படி
பேச
உன்
அப்பா
சம்மதிப்பாரா,
அவர்
சம்மதிக்க
மாட்டார்
என்ற
உறுதியில்
தான்
கேட்டான்
.
ஆனால்
இவன்
என்ன
என்றால்
அவளிடமே
பேசி
இருக்கிறானே, கோபத்தை
அடக்கியவனாய்
“
எங்க போய்
பார்த்த?
”
“
கோயம்பத்தூர்
அவள்
படிக்கும்
காலேஜூக்கு
போனேன்..
.”
“
அவள்
படிக்கும்
காலேஜ்
உனக்கு
எப்படி
தெரியும்
.”
“
என்னடா
ஒன்னும்
தெரியாத
மாதிரியே
என்கிட்ட
கேட்குற. அன்னிக்கு
உன்
தங்கை
கல்யாணத்தில்
என்
அம்மா
அவளிடம்
பேசினாங்களே
.
நீ
கூட
பக்கத்தில்
இருந்தியேடா
….”
இப்போது
தான்
அனைத்தும்
அவன்
நினைவுக்கு
வந்தது
.
அதனால்
தான்
ஆர்வமாய்
அவளை
பற்றி
விசாரித்தானா
?
பெண்
என்றால்
கொஞ்சம்
ஆர்வமாய்
பார்ப்பான்
என்று
தெரியும்
.
ஒத்து
வரும்
பெண்களிடம்
கொஞ்சம்
எல்லை
மீறி
கூட
பழகுவான்
.
ஆனால்
குடும்ப
பெண்களிடம்
பார்ப்பதோடு
சரி
.
அதனால்
தான்
அன்று
இந்திராவை
பற்றி
விசாரிக்கும்
போது
அதை
பெரிதாக
எடுத்துக்
கொள்ளவில்லை
.
ஆனால்
இவன்
அவன்
அம்மாவை
விட்டே
விசாரித்து
இருக்கிறானே
.
ஏதோ
நினைத்தவனாய்
“
உன்
அம்மாவுக்கு
உன்
விருப்பம்
தெரியுமா
?”
என,
“
ஆ!
தெரியும்
தெரியும்
.
அவங்கக்கிட்ட
அன்னிக்கே
இந்திராவை
காட்டி
இவள்
தான்
உங்க
மருமகள்னு
சொல்லிட்டேன்
.
..
”
“
அதுக்கு
ஆன்ட்டி
என்ன
சொன்னாங்க..
.
”
“
என்ன
சொன்னாங்களா
?
நான்
இது
மாதிரி
சுத்தாம
ஒழுங்கா
கல்யாணம்
பண்ணா
போதும்னு
ஒத்துக்கிட்டாங்க
.
அதுவும்
இல்லாம
இந்திராவுக்கு
என்ன
குறைடா
அவளை
வேண்டாம்னு
சொல்ல..
.”
அவன்
பேச்சு
குருவிடம் இருந்தாலும்
அவன்
கண்கள்
ஏதோ
கனவுலகில்
மிதக்க “அது
எல்லாம்
சரி
.
உன்
அம்மா
சம்மதிக்கிறது
பெரிய
விஷயம்
இல்ல
.
உன்
அப்பாவை
சம்மதிச்சு முறைப்படி
பேசச்
சொல்
.
நான்
இது
பற்றி
சுபாஷிடம்
பேசுறேன்
.
..
”
என்றதும்,
“
எனக்கு
அது
தான்
குரு
பயமா
இருக்கு
.
..
”
“
என்ன
பயமா
இருக்கு..?
”
“
அப்பா
ஒத்துக்குவாங்களான்னு
தான். உனக்கே
என்
அப்பாவ
பத்தி
நல்லா
தெரியும்
.
ரொம்ப
ஸ்டேட்டஸ்
பாப்பாருன்னு
.
முதல்ல
இந்திராவ
பத்தி
அம்மா
அப்பா
கிட்ட
ரொம்ப
புகழ்ந்து
பேசிட்டு
இருக்கும்
போது
ஆர்வமா
தான்
கேட்டாரு
.
நிவேதாவோடது
லவ்
மேரேஜ்னு
அவருக்கு
தெரியாதுல. நீங்க
பெரிய
இடமா
தான்
பார்த்து
இருப்பீங்கன்னு
ஆர்வமா
கேட்டவரு,
அப்புறம்
சுபாஷ்
என்ன
பண்றான்னு கேட்டப்போ
தான்
உண்மை
தெரிஞ்சது
.
அதுக்கு
அப்புறம்
அம்மா
இந்திரா
பத்தி
ஏதாவது
பேசினா, அந்த
பேச்சு
எல்லாம்
நமக்கு
எதுக்குன்னு
சொன்னார். என்னை
பார்த்துக்கிட்டே எனக்கு
இந்த
லவ்
மேரேஜ்
எல்லாம்
சுத்தமா
பிடிக்காது
.
எனக்கு
என்
ஸ்டேட்டஸ்
ரொம்ப
முக்கியம்னு
சொல்லிட்டார். பிறகு
அம்மா
அதுக்கு
அப்புறம்
வாயே
திறக்கல.
உனக்கே
என்
வீட்டை
பத்தி
நல்லா
தெரியும்
.
அம்மா
பேச்சு
எல்லாம்
அப்பா
துளியும்
கேட்க
மாட்டாருன்னு
.
அம்மாவோ
என்
கிட்ட
இந்திராவை
மறந்துட்டு
அப்பா
பாக்குற
பெண்ணை
கல்யாணம்
செய்துக்கோன்னு
ரொம்ப
கூலா
சொல்லிட்டு
போறாங்க
.
நான்
எப்படிடா
அவள
மறப்பேன்
.
சரி
இந்திராக்கிட்ட
பேசலாமுன்னு
போனா, என்னை
தெரியவே
இல்லடா
.
எனக்கு
எப்படி
இருக்கும்
சொல்லு
.
..
”
என்று
ஆதாங்கத்துடன்
பேசும்
விக்ரமின்
நிலை
புரிந்தாலும்
குருவால்
இதில்
என்ன
செய்ய
முடியும்.
நினைத்ததை
கேட்க
“நீ
தான்
இந்திராக்கிட்ட
பேசனும்
குரு..
.”
“
என்னது
நான்
பேசனுமா? தோ
பார்
நீ
என்
பிரண்டு
என்பதால்
தான்
நான்
வேலை
எல்லாம்
விட்டுட்டு
உன்
கிட்ட
பேசிட்டு
இருக்கேன்
.
என்
கிட்ட
அப்பாயின்மெண்ட்
கிடைக்காம
எத்தன
பேரு
காத்திட்டு
இருக்காங்கன்னு
உனக்கு
நல்லாவே
தெரியும்
.
உன்னுடைய
இத்தன
வருஷ
பிரண்ட்ஷிப் மதிச்சு தான்
என்
வேலை
எல்லாம்
விட்டுட்டு
பேசுறேன்
.
அதுவும்
இல்லாது
அந்த
பெண்ணை
கல்யாணம்
பண்றத
பத்தி
பேசறதால
தான்
பேசுறேன்
.
இதுமாதிரி
வேலை பாக்க
எல்லாம்
எனக்கு
நேரம்
இல்ல
.
ஆ
இன்னொன்னும்
அந்த
பெண்ண
வெளியில்
பார்க்குற
வேலை
இனி
வேண்டாம்
.
உங்க
அப்பா
சம்மதித்தா
சொல்லு
சுபாஷ்
கிட்ட
பேசி
முறையா
முடிக்கலாம்
.
பெண்கள்
விஷயத்தில்
நீ
எப்படின்னு
எனக்கு
நல்லாவே
தெரியும்
.
அவள
பாக்க
போய்
அவ
பேர
கெடுத்துடாதே. சொல்லிட்டேன்…
.”
என்று
சொல்லி
அவன்
போய்
விட,
‘இவன்
எனக்கு
ஏதாவது
உதவி
செய்வான்னு
பார்த்தா
எனக்கே
வான்
பண்ணிட்டு
போறானே
…
’ என்று
நொந்தவனாய்
அவ்விடத்தை
விட்டு
போக, குருமூர்த்திக்கு
அன்று
பிஸ்னஸ்
மீட்டிங்கில்
சரியாக
கவனத்தை
செலுத்த
முடியாமல்
திண்டாடி
ஒரு
வழியாக
முடித்துக்
கொண்டு
வெளியில்
வந்தான்.
அவன்
பி
.
ஏ
“
சார்
…”
என, வந்தவளை
தடுத்து
“
இன்னிக்கு
உண்டான
பிரோகிராமை
கேன்சல்
செய்துடு..
.”
என்றுவிட்டு,
அவள்
பதிலை
எதிர்
பாராது
தன்
காரை
செலுத்திக்
கொண்டே
போனை
எடுத்து
சுபாஷுக்கு அழைப்பு
விடுத்தான்
.
அந்த
பக்கம்
சுபாஷின்
போனில்
குருவின்
நம்பரை
பார்த்து
இவன்
ஏன்
அழைக்கிறான்
என்று
யோசனையுடனே
போனை
ஆன்
செய்தான்
.
அவன்
தங்கையை
கல்யாணம்
செய்வதற்கு முன்பாவது
தொழில்
விஷயமாக
போன்
செய்வான்
.
எப்போது
அவன்
தங்கையோடு
திருமணம்
முடிந்ததோ,
தொழில்
பற்றி
என்றாலும்
நிவேதாவோடு பேச்சை
முடித்து
விடுவான்
.
அப்படி
பட்டவன்
ஏன்
போன்
செய்கிறான்
என்ற
ஆராய்ச்சியிலேயே
போன்
அட்டென்
செய்ய,
அந்த
பக்கத்தில்
இருந்த
குரு
“
சுபாஷ்
நீங்க
உங்க
தங்கச்சியோடு
போனிலாவது
பேசிட்டு
இருக்கீங்களா
….?”
என்ற
கேள்வியில்
சுபாஷ்
குழம்பித்தான்
போனான்
.
திடீரென்று
என்ன
இந்திராவைப்
பற்றி
இவன்
பேசுகிறான்
ஏதாவது
பிரச்சனையா? இந்திரா
அது
மாதிரி
ஆள்
இல்லையே.
அவள்
உண்டு
அவள்
படிப்பு
உண்டு
என்று
இருக்கும்
ரகம்
தானே, என்று
நினைத்தவன்
.
“
என்ன
குரு
திடீர்னு என்
தங்கை
பத்தி
பேசுறீங்க
.
ஏதாவது
பிரச்சனையா
…?”
சிறிது
நேர
அமைதிக்கு
பிறகு
“
பிரச்சனை
எல்லாம்
இல்ல
.
கல்யாணம்
ஆன
இந்த
மூன்று
மாதத்தில்
நீங்க
உங்க
ஊருக்கு
போய்
நான்
பாக்கல
.
அது
தான்
போனிலாவது
தொடர்பு
இருக்கான்னு
கேட்டேன்..
.”
குருவின்
பேச்சில்,
ஏதோ
மறைப்பது
போலவே
சுபாஷூக்கு
இருந்தது
. “
திரும்பவும்
ஏதாவது
பிரச்சனையா
….?”
என்று
அழுத்தி
கேட்டும்
குரு
சொல்லாது
போக, இவன்தான்
விட
வேண்டியாதாகி
விட்டது
.
“
வாரத்தில்
ஒரு
நாள்
அம்மாவோடு
பேசுவேன்
.
இரண்டு
வாரத்துக்கு
ஒரு
நாள்
இந்திராவோடு
பேசுவேன்..
.”
என்ற
சுபாஷின்
பதிலில் குரு, என்ன
மாதிரி
உணர்கிறான்
என்று
அவனாலேயே
சொல்ல
முடியாது
இருந்தான்
.
தன்
தங்கையோடு
திருமணத்திற்கு
முன்
சுபாஷின்
இந்த
செய்கை
ஒரு
வகையில்
நல்லது
என்றே
குரு
நினைத்திருந்தான்
.
அவன்
எண்ணியது
போல
வீட்டோடு
மாப்பிள்ளையாக
தான்
வரவேண்டும்
என்று
சுபாஷிடம்
கேட்டபோது,
உடனே
யாரிடமும்
கேட்காது
சம்மதித்தது
அவனுக்கு
சந்தோஷத்தையே
அளித்தது
.
தன்
தங்கை
யாரின்
கட்டு
பாட்டிலும்
இருக்க
தேவையில்லை
என்று
எண்ணி
.
ஆனால்
இப்போது
சுபாஷின்
இந்த
செயல்
குருவுக்கு
சுத்தமாக
பிடிக்க
வில்லை
.
என்ன
அண்ணன்
இவன்
.
தந்தை
இல்லாத
தங்கைக்கு
தந்தை
ஸ்தானத்தில்
செய்யவில்லை
என்றாலும்
ஒரு
அண்ணனாய்
கூட
அக்கரை
செலுத்த
மாட்டானா
….?
இரண்டு
வாரத்துக்கு
ஒரு
தடவை
போன்
செய்வானாம்.
ஏன்
போன்
பில்
கட்ட
முடியவில்லையாமா
…?
அவனுக்கு
தெரிந்த
வரையில்
சுபாஷின்
அம்மா
கிருஷ்ணகிரி
தாண்டி
ஒரு
கிராமத்தில்
இருப்பதாக
கேள்வி
.
அப்போ
இந்த
பெண்
கோயம்பத்தூரில்
ஏதாவது
ஹாஸ்டலில்
தங்கி
தானே
படிப்பாள்
.
சுபாஷ்
அடிக்கடி
போய்
பார்த்தால்
தானே
அவளுக்கு
ஏதாவது
பிரச்சனை
என்றால்
ஒரு
அண்ணனாய்
இவனிடம்
சொல்வாள்
.
இவன்
இப்படி
ஒதுங்கி
இருந்தால்
தன்
பிரச்சனையை
அந்த
பெண்
யாரிடம்
சொல்வாள்
என்று
தான்
நினைக்கத்
தோன்றியது
.
திடீர்
என்று
நான்
ஏன்
இதை
பற்றியே
யோசிக்கிறேன்
.
எனக்கு
என்று
ரிலாக்ஸ்
கிடைப்பதே
அரிது
இதில்
ஏன்
தேவையில்லாத
யோசனை
என்று
நினைத்தவன், நேரம்
பார்த்தான்
அது
இரவு
எட்டு
என்று
காண்பித்தது
.
அதிலேயே
கிழமையும்
சனி
என்று
இருக்க
,
டிஸ்கோ
போகலாமா
என்று
யோசித்தான்
.
அவன்
எப்போதாவது
இது
மாதிரி
போவது
தான்
.
கொஞ்சம்
ட்ரிங்சும்
எடுத்துக்
கொள்வான்
.
ஆனால்
அளவுக்கு
அதிகம்
ஆகாமலும்
பார்த்துக்
கொள்வான் தொழிலை
தவிர
எதிலும்
ஒரு
எல்லையோடு
நிறுத்தி
விடுவான்
.
டிஸ்கோ
போவது
என்று
முடிவு
செய்த
பின்
தன்
காரை
அதை
நோக்கி
செலுத்தினான்
.
Advertisement: