பூவும் புயலும் மோதிக் கொள்ள, நெஞ்சம் ரெண்டும் விம்மித் தனிய, கண்ணும் கண்ணும் கட்டிக் கொண்ட வேளை அவர்களைச் சுற்றி காதல் தேவதைகள் ஊலாலா பாடினார்கள் என்றெல்லாம் எழுத எனக்கும் ஆசைதான் ஆனால் இந்த எலியும் பூனையும் வைத்துக் கொண்டு அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையே. அவ்வ்வ்வ்.
ஏதோ ஞாபகத்தில் பெண்ணவளைப் பற்றியவனின் விழிகள் வஞ்சியின் வதனத்தில் படிந்த நொடி, “இடியட்” என்று அவளை உதறித் தள்ளியவன், “இதுக்குன்னே வாராவாரம் இங்க வர்றியாடி” என்று சீற…
அவளோ, “எதுக்கு.?” என்று சிறிது பயமும் குழப்பமுமாய் இடையைப் பற்றிக் கேட்டாள்.
அதற்கு அவளை உறுத்து விழித்தவனும், “ம்ம்ம் என் மேல மோதுறதுக்கு…” என்று எரிச்சலாக மொழிய…
அவளோ, “அஹான் உங்களுக்கும் ரொம்பப் பேராசைதான்” என்றவள் வாயாடத் தயாராகிய சமயம் அவன் கையிலிருந்த அலைபேசியில் யாரோ “ஹெலோ ஹெலோ” என்று சப்தமிட்டனர்.
அவனுக்கு அப்பொழுது தான். தான் கைபேசியில் பேசிக்கொண்டிருந்ததே ஞாபகம் வர, எதிரே நின்ற ராஹியிடம், “நீ என்ன ரொம்ப இம்ச பண்றடி நாளைக்கி ஆபிஸ்ல இருக்கு உனக்கு” என்று உறுமிவிட்டு கைபேசியை காதில் வைத்த வண்ணம் விலகிச் செல்ல…
அவளோ, “நாளைக்கி மட்டும் ஆபிஸ்ல பீட்சாவா இருக்கப் போகுது எப்பவும் போல் மூணு காபியும் ரெண்டு சமோசாவும் தானே” என்று அவன் முதுகைப் பார்த்து “எப்போப் பாரு இரும்ப முழுங்குன போலவே முகத்தை வச்சுக்கிறது முசுட்டு மேங்கோ வவ்வவ்வே” என்று சைகையும் செய்து விட்டே படிகளை நோக்கி ஓடினாள் அந்த கள்ளமில்லாக் கன்னி.
“எனக்கு புக்ஸ் படிக்க ரொம்ப புடிக்கும்” என்று அன்று சாஹி சொல்லியது நினைவில் இருந்ததோ என்னவோ அவளை தங்கள் வீட்டு நூலகத்திற்கு அழைத்து வந்தவன் அந்த நூலகத்தின் வரலாறு பற்றியும் சுவைபடச் சொல்லிய வண்ணம் அவளோடு நடக்க, அவளும், “உங்க வீட்டு லைப்ரேரி சூப்பரா இருக்கு ஆது மாமா. எங்க வீட்டுலையும் லைப்ரேரி இருக்கு. ஆனா இவ்ளோ பெருசு இல்ல.” என்று சொல்லிய வண்ணம் அத்துணை பெரிய நூலகத்தையும் ஆசையாய்ச் சுற்றி வந்தவள் அங்கிருந்த ஒரு அலமாரியில் கைவைத்த நொடி அவள் முகமோ சிகப்பரிதாரம் பூசிக் கொண்டது.
திடீரென்று சாஹியின் பேச்சு தடை படவும் ஆத்விக்கோ அவள் முன்னால் வந்து நின்றவன் அவள் கைகள் தொட்டிருந்த புத்தகத்தைப் பார்க்க, அதுவோ அட்டை படம் தொடங்கி வரிக்கு வரி காதலை பறைசாற்றும் ஒரு காதல் நாவலாக இருக்க ஆத்விக்கோ இப்பொழுது அந்த நாவலையும் அருகில் நின்ற நங்கையையும் மாறி மாறிப் பார்த்தான்.
அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவளோ சட்டென்று அந்த இடத்தை விட்டு நகரப் போக…
அவனோ, “சாஹி” என்றழைத்து அவள் நடையை நிறுத்தியவன் அந்த புத்தகத்தை எடுத்து அவளிடம் நீட்டி, “நா படிச்ச ஒண்ணு ரெண்டு புக்ஸ்ல இதுவும் ஒன்னு. நீயும் படி சாஹி லவ் பீலிங் பத்தி ரொம்ப அழகா எழுதிருப்பாங்க” என்று சொன்னான்.
ஏற்கனவே அவன் பார்வையில் செவ்வரியோடி நின்றவள் அவன் கூற்றில் மேலும் தலையை தரையில் புதைத்து,
“இல்ல மாமா… நா நா காதல் கதைகள்ளாம் படிக்கிறதில்லை” என்று சொல்ல…
அவனோ அவளை வியப்பாக ஏறிட்டவன் சட்டென்று, “உன் வயசு என்ன சாஹி.?” என்றான்…
அவளோ, ‘இப்போ எதுக்கு வயசக் கேக்குறாங்க’ என்று யோசித்தாலும் அவள் உதடுகள் “22” என்று அவனுக்கு வேண்டிய பதிலை முணுமுணுத்தது.
அவள் பதிலில் ஆத்விக்கும், “உனக்கு மேரேஜ் பண்ற வயசே வந்துருச்சு சாஹி நீ லவ் ஸ்டோரி புக்ஸ்லாம் தாராளமா படிக்கலாம், தப்பே இல்லை. இந்தா எடுத்துட்டுப் போய் படிச்சிப் பாரு” என்று மீண்டும் கூறியவன் இன்னும் புத்தகத்தை நீட்டியவாக்கிலே நிற்க…
அவளும் வேறு வழியில்லாது வெட்கமும் தயக்கமுமாய் அந்த புத்தகத்தைப் பெற்றுக் கொண்டவள் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் ஓடியே சென்று விட…
அதைப் பார்த்த ஆத்விக்கும், “யுவா அங்கிள் டாட்டர்ஸ் ரெண்டு பேருமே கியூட் இன்னொசென்ட் கேர்ள்ஸ்” என்று சொல்லிய வண்ணம் அங்கிருந்து அகன்றான்.
விடுமுறை நாளின் மிச்சப் பொழுதுகளும் மகிழ்ச்சியாகவே கழிய மறுநாள் வாரத்தின் முதல் நாளும் இனிதாகவே விடிந்தது. வழக்கம் போல் சாஹி அவளது அலுவலுக்குச் செல்ல, ராஹி ஆதியின் அலுவலகத்திற்குள் நுழைய அதுவோ மிகுந்த பரபரப்போடு காணப்பட்டது.
அலுவலகத்தில் எப்பவும் மிகச் சுத்தமாக இருக்கும் ஒவ்வொரு இடமும் பொருளும் இன்று மிக மிக புதுமையாக ஒளிர, பணியாளர்கள் கூட இன்று எப்பொழுதும் விட சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க, அவற்றை எல்லாம் பார்வை இட்டப்படி உள்ளே நுழைந்த ராஹியோ அந்த பரபரப்பின் காரணத்தை நேற்றே அறிந்திருந்தவள்… ஆதி மிகவும் பிஸியாக இருப்பதைப் பார்த்து அவன் கண்ணிலேயே படாமல் சிவாவிடம் மட்டும் தனக்கான வேலையைக் கேட்டுச் செய்து கொண்டிருக்க…
ஆனால் அந்த சிவாதான் ஏதோ பூகம்பம் வந்த பூத் பங்களா போல் முகத்தை வைத்திருந்தான்.
நொடிக்கொருதரம் கைக்குட்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டவன் அடிக்கடி வெளியே சென்று யாருடனோ கைபேசியில் உரையாடிவிட்டும் வர அதைப் பார்த்த ராஹியோ, “ண்ணா என்னாச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? யாருக்கும் உடம்பு சரியில்லையா?” என்றும் வினவ…
அவனோ அவளை ஒரு மருண்ட பார்வை பார்த்தவன், “ஒண்ணும் இல்லமா” என்று மட்டும் சொல்லி உள்ளே சென்றான்.
உள்ளே ஆதி நேற்று தயாரித்து வைத்திருந்த பிரசன்டேசன் பென்டிரைவை சிவாவிடம் கொடுத்து “இதப் ப்ரொஜெக்டர்ல போட்டு செக் பண்ணி வை சிவா” என்று சொல்ல…
அவனும் “ஓகே பாஸ்…” என்று அதை எடுத்துக் கொண்டு கலந்துரையாடல் அறை நோக்கிச் சென்றான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆதியின் தொழில் திட்டத்தைக் காண இன்று நாள் ஒதுக்கியிருந்த வெளிநாட்டுக் கிளைன்ட் உம் வந்து விட…
“வெல்கம் டேவிட்… க்ளாட் டூ மீட் யூ…” என்று அவரை வரவேற்று அவரை தன் மேனஜருடன் அனுப்பி வைத்த ஆதியும் சிவாவை அழைக்க அவன் அங்கே இல்லாததால் ஆதியை நெருங்கிய ராஹி, “சிவாண்ணாவ நான் கூட்டிட்டு வர்றேன் சார்” என்று சொல்லி அவனைத் தேடிச் சென்றவள் சுவற்றில் மோதிய பந்தாகத் திரும்பி வந்து ஆதியிடம்,
“சார் சார் ஒரு பிரச்சனை நீங்க இந்த ப்ரசென்டேசன் பண்ணாதீங்க சார். என் கூட வாங்க ப்ளீஸ். ஒருத்தர கடத்திட்டாங்க” என்று பதற்றமாகச் சொன்னாள்.
அவனோ அவள் வார்த்தைகள் எதையும் செவியில் ஏற்றாமல் பைத்தியத்தைப் பார்ப்பது போல் பார்த்தவன், “என்னடி உளர்ற ஸ்டுப்பிட்.?” என்று அடிக்குரலில் சீறிவிட்டு…
அந்த கிளைன்ட்டோடு சேர்த்து அலுவலகத்தின் முக்கிய பணியாளர்களும் கூடியிருந்த அந்த கலந்துரையாடல் அறை நோக்கி தன் நீள எட்டுக்களை வைக்க, அவன் வழியை மறைத்து நின்றவள், “ப்ளீஸ் ஆதி சார் இன்னிக்கு அந்த பிரசன்டேசன நீங்க டெலிவரி பண்ண வேணாம். நா சொல்றத கொஞ்சம் கேளுங்க… என் கூட வாங்களேன்” என்று அவன் கையைப் பற்றிக் கொண்டு சிறு குழந்தையாய் அடம் பிடித்தாள் ராஹி.
அவளின் இந்த விசித்திரச் செயலில் அவளை பார்த்து பல்லைக் கடித்தவன்,
“ஹேய் டெவில் முந்தாநாள் நீ பேசிட்டு போனதுக்கே உன்ன ஆபிஸ்குள்ளயே விட்டுருக்கக் கூடாது ஆனா டாட்க்காக கொஞ்சம் பொறுமையா இருக்கேன். என்னோட ரொம்ப நாள் பிளான இன்னிக்கு எக்ஸிக்யூட்டிவ் பண்ண போற ஹாப்பி மூட்ல இருக்கேன் நான். அத ஸ்பாயில் பண்ணாம மரியாதையா இங்கிருந்து போடி” என்று அவளைப் பிடித்துத் தள்ளியவன் மின்னலென அவ்வறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
அவன் பிடித்துத் தள்ளியதில் கீழே போய் விழுந்தவள் “ச்சே இந்த முசுட்டு மேங்கோ சொல்ற எதையும் கேக்க மாட்டிதே” என்று மேலும் கலக்கம் கொண்டவள் நகத்தை கடித்து கடித்து துப்பிக் கொண்டே தைரியத்தைக் கூட்டி அவளும் அவ்வறைக்குள் நுழைந்தவள் அங்கே அனைவரின் முன்னிலும் புன்னகை முகமாக ப்ரஜெக்டரை இயக்கப் போன ஆதியைப் பார்த்து வேகமாக ஓடி அவன் கையை பற்றித் தன் புறம் இழுத்தவளோ
“ஆதி உன் குழந்தை என் வயித்துல இருக்குறது எங்கப்பாக்கு தெரிஞ்சிடுச்சு உடனே உன்ன பாக்கணும்னு சொல்றாங்க, வா ஆதி போலாம்” என்று கண்கலங்கி சொல்ல…
அதைக் கேட்டு அங்கிருந்த அனைவருமே அவனை அதிர்ச்சியாகப் பார்க்க அந்த வெளிநாட்டு கிளைன்ட் உம் ஆதியையும் ராஹியையும் குழப்பமாகப் பார்த்தார்.
ராஹியின் கூற்றில் அவனும் அதிர்ந்து அவளை கொலைவெறியோடு நோக்கியவன், “ஹேய் உனக்கு பைத்தியம் எதும் பிடிச்சிரிச்சா, மொதோ இங்கிருந்து வெளிய போடி” என்று அடிக்குரலில் சீறியவன் சுற்றி இருந்தவர்களின் ஆராய்ச்சிப் பார்வையில் உச்சகட்ட ரௌத்திரத்தை அடைந்து கொண்டிருக்க அதை மேலும் அதிகரிக்கும் வண்ணம் அவன் பேச்சை காதில் வாங்காத ராஹி அந்த கிளைன்டிடம் திரும்பியவள்…
“சார் இப் யு டோன்ட் மைண்ட் நாளைக்கு மீட்டிங் வச்சுக்கலாமா ப்ளீஸ்.?” என்று கலங்கிய குரலிலேயே கேட்டாள்.
அவரும் “ஓ சுயர் எனக்கு ஒண்ணும் ப்ரோப்லேம் இல்ல” என்று அவளைப் பார்த்துச் சிரித்தவர் ஆதியிடமும், “ஆதி இவங்கள வேகமா கல்யாணம் பண்ணிக்கோங்க. ஷி லவ்ஸ் யு தட் இஸ் விசிபில் இன் ஹெர் ஐஸ். மீட்டிங் நாம ரெண்டு நாள்ல வச்சுக்கலாம். பட் டோன்ட் ஒர்ரி, ப்ராஜெக்ட் இஸ் ஆல் யுவர்ஸ்” என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட மற்றவர்களும் ஒவ்வொருவராக வெளியேற…
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.