திருமணம் பேசிய அன்று ஆதி சாஹியை மணந்து கொள்வதாகச் சொன்னதுமே ஆதிக்கும் ராஹிக்கும் ஏதோ பிடித்தமில்லை என்று புரிந்து கொண்ட அவன் தந்தையும் ஆத்விக்கின் விருப்பத்தையும் கேட்டு நால்வருக்கும் ஆதியின் விருப்பப்படியே திருமண ஏற்பாடுகள் செய்திருந்தான் அஸ்வின்.
ஆனால் எதிர்பாராத விதமாக சாஹி ஆத்விக்கின் காதலால் தாங்கள் முன்பு எண்ணியபடி ராஹியே தங்கள் மூத்த மருமகளாய் இடம் மாறவும் அஸ்வினும் மதியும் மிகவும் மகிழ்ச்சியாகவே அவளை ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் எதிலும் நேர்த்தியும் நேர்மையும் அதிகளவில் எதிர்பார்ப்பவன் சிறிதளவு நேரம் தவறுதலைக் கூட பொறுத்துக் கொள்ளாத மகன் ராஹியுடனான இத்திருமணத்திற்கு எந்த மறுப்பும் சொல்லாது இயல்பாக வளைய வருபவனைப் பார்க்க பார்க்க தன் இரையை அடையும் வரை பொறுமை காத்திருக்கும் வேங்கைப் புலியின் ஞாபகம் தான் வந்தது. நம் காதல் வேங்கைக்கு.
மகனைப் பற்றி நன்கு அறிந்த அஸ்வினோ யுவாவின் வீட்டினர் விடைபெற்றுச் சென்ற தினமே மகனைத் தனிமையில் சந்தித்தவன், “சார்ம் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று தொடங்கி, “ஒரு ஹியூமன் பியிங்க் லைஃப்ல லவ் எப்டி ஒரு மேஜிக்கான பீலிங்க கொடுக்குமோ மேரேஜ்ஜும்
அதே போலத்தான். நம்ம வாழ்க்கைல மிகப்பெரிய மேஜிக்க க்ரியேட் பண்ணி நம்மள ஆச்சர்யப்பட வைக்கும். அதுக்கு உன் மாம்மும், எங்க லைஃப் உமே எக்ஸாம்பில் சொல்லலாம். ஆனா அந்த மேஜிக்க நம்ம உணர்றதுக்கு சில பல வாரங்கள், மாதங்கள், ஏன் வருடம் கூட ஆகலாம். அதுவரை நீ கொஞ்சம் பொறுமையா இருப்பன்னு நான் நம்புறேன் சார்ம்” என்று மகன் ஏற்கனவே பொறுமையின் எல்லையைக் கடந்து செய்த செயலை அறியாது ஒரு தந்தையாய் மகனுக்கு சில பல நல் வார்த்தைகளைச் சொல்லி இருந்தான் அஸ்வின்.
இருந்தும் இன்று காலை வீட்டில் நடந்த நிகழ்விலும் அதைப் பார்த்த மதியின் கவலையிலும் சற்று முன்னர் ராஹியின் முகத்தில் அப்பியிருந்த அச்ச ரேகைகளிலும் தன் முகத்தில் சிந்தனை ரேகைகளைப் படரவிட்டவன், ‘ராஹியின் பின்னே எப்பொழுதும் தான் இருப்பதாக விளையாட்டுப் போல் மகனிடம் எச்சரித்து, ராஹியின் பாதுகாப்பையும் உறுதி செய்து விட்டும் செல்ல…
தந்தையின் முகத்தில் புன்னகை இருந்தாலும் அவன் குரலில் இருந்த தீவிரத்திலே அவன் விளையாட்டாய்ப் பேசவில்லை என்று அவன் மகனும் நன்றாகவே புரிந்து கொண்டான்.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ன.
தந்தை அறையை விட்டுச் செல்லவும் தொடர்ந்து ராஹியையும் அனுப்பி வைத்தவன், ‘யாரோ ஒரு வில்லேஜ் கேர்ளுக்காக என்னையே மிரட்டிட்டுப் போறீங்களா டாட்?. உங்க சன்ன விட அவ உங்களுக்கு முக்கியமா போய்ட்டாளா?. இன்னும் எவ்ளோ நாளைக்கு அவ இங்க இருப்பான்னு நினைச்சிங்க டாட்? மக்சிமம் போர் ஆர் சிக்ஸ் மந்த்ஸ் ஒன்லி’ என்றும் உள்ளூற உறுப் போட்டவனின் நீள் விரல்கள் மேஜையில் மெல்லத் தாளமிட, ஆணவனின் தடித்த அதரங்களோ ஒரு விசமப் புன்னகையையே உதிர்த்துக் கொண்டது.
ஆதியின் அறையை விட்டு வெளியே வந்த ராஹியும் அவன் எப்பொழுது தன்னை அழைத்து கடித்துக் குதறுவானோ என்று பயந்தபடியே அவள் மேஜையில் இருந்த கோப்புகளை பெயருக்கு புரட்டிக் கொண்டிருக்க அன்று மாலை வரையிலும் கூட அவள் கணவன் அவளை அழைக்கவே இல்லை.
அவள் செய்ய வேண்டிய வேலையை மட்டும் சிவா மூலம் கொடுத்து அனுப்பியவனும் அன்றைய அலுவலில் தீவிரமாகவே மூழ்கி இருக்க கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குப் பிறகு ஆதியுடன் அலுவலகம் வந்தவள் தங்கள் திருமணத்தின் விளைவால் அவன் முன்பை விட தன்மேல் அதீத கோபம் கொண்டிருப்பதையும் நன்கு உணர்ந்திருந்தமையால் காலையில் இருந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே அவன் கொடுத்த அலுவல்களை செய்து முடித்தபடி இருந்தாள் ராஹித்தியா.
அலுவலக நேரமும் ஆதி கொடுத்த வேலைகளும் முடிந்து பணியாளர்களும் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தும் வீட்டிற்குச் செல்லவா என்று அவனிடம் சென்று எப்படிக் கேட்பது. முதலாவது யாரோடு எதில் வீட்டிற்குச் செல்வது என்றெல்லாம் பலத்த சிந்தனையில் இருந்தவளின் செவியோரம், இதுவரை கேட்டேயிராத குழைவான குரலில்,
“நாம ஒரு முக்கியமான இடத்துக்கு போகப்போறோம் ஹனி” என்ற ஆதியின் வார்த்தைகள் விழவும் திடுக்கிட்டுத் திரும்பியவளை “கமான் டார்லிங் வீ ஹேவ் டூ கோ சூன்டா” என்று அவள் கையைப் பற்றியும் இழுத்தவனின் செயலில் அவன் மேல் மோதி நின்றவளின் அதிர்ச்சியைக் கூட பொருட்படுத்தாது அவள் இடைவளைத்து மேலும் தன்னோடு இறுக்கிக் கொண்டவன்,
“போலாமா ஹனி?” என்றும் அவள் காதோரம் கிசுகிசுக்க…
ஆணவனின் அதிரடியில் அவனையே இமைக்க மறந்து பார்த்தவளின் தலை அன்னிச்சையாக “ம்ம்ம்” என்பது போல் மேலும் கீழாக அசைந்தது.
அதில் அவள் கன்னத்தையும் செல்லமாகத் தட்டியவன் அவளை அணைத்துப் பிடித்தவாறே காருக்கு அழைத்துச் சென்று, அவளுக்காக கார் கதவையும் திறந்து விட, அதைப் பார்த்த ராஹியோ, ‘இவருக்கு ஆவி எதும் அடிச்சிடுச்சா? காலையில இருந்து ஒரு மார்க்கமாவே நடந்துக்கறாரே?’ என்று எண்ணியவள், “ஆதி சார்…” என்று காரில் ஏறாமலே தயக்கமாக இழுக்க…
அவளைப் பார்த்து இதழ் விரித்துச் சிரித்தவனோ, “என்ன ஹனி இதுக்கே இப்டி தயங்கினா எப்டி? இன்னும் எவ்ளவோ இருக்கே” என்று புருவத்தைத் தூக்கியவன், “இப்போ நீ சிரிச்சுக்கிட்டே உள்ள ஏறி உக்காரல. நானே உன்ன தூக்கி உக்கார வைப்பேன்” என்றும் அவள் காதோரம் கிசுகிசுக்க…
அதில் அவனை பயப்பார்வை பார்த்தவளும் மின்னல் வேகத்தில் உள்ளே ஏறி அமர்ந்தாள்.
ராஹி உள்ளே அமர்ந்ததும், “சோ ஸ்வீட் ஹனி” என்று அவளை நோக்கி இதழ் குவித்த முத்தம் ஒன்றையும் அனுப்பியவன், அலுவலக வாயிலில் தங்களையே பார்த்தபடி நின்றிருந்த தந்தையையும் நெருங்கி, “டாட் நான் என்னோட ஒயிப் கூட வெளிய போறேன். வர லேட் ஆகும்னு மாம்கிட்ட சொல்லிருங்க.” என்றும் சொல்லிவிட்டு மகிழுந்தில் ஏறி விரைய…
மகனைப் போலவே அவன் கைகளில் சீறிக் கொண்டு சென்ற அவனது அன்னப்பறவையையே சில நொடிகள் பார்த்துக் கொண்டு நின்ற அஸ்வினும், “பிரெட்டி பாய். யூ ஹேவ் சம்திங்” என்று புன்னகைத்தபடியே தன் மகிழுந்தில் சென்று ஏறிக் கொண்டான்.
அலுவலகம் இருந்த கிளை சாலையை விட்டு வண்டி பிரதான சாலையை அடைந்தும் கூட உதட்டில் உறைந்த புன்னகை மாறாமல் ஏதோ வாய்க்குள் நுழையாத ஆங்கிலப் பாடலையும் ஹம் செய்தபடியே வண்டியை ஓட்டியவனை, ‘இவன் ஆதிதானா?’ என்பது போல் விழிகள் விரித்துப் பார்த்திருந்தாள் அவன் மனையாள்.
எப்பொழுதும் முறைத்துக் கொண்டே அவளிடம் பேசுவதால் இத்துணை தினங்கள் அவள் கருத்தில் படியாத ஆணவனின் ஆளை வீழ்த்தும் கன்னங்குழி இந்நிமிடம் அவனது உடையாளையும் உள்ளிளுக்கும் வேலையை அழுங்காமல் செய்ய, அவளும், ‘இவரு சிரிச்சா எவ்ளோ அழகா இருக்காரு. அப்றம் ஏன் சிரிக்கவே மாட்டிறாரு’ என்று இதுநாள்வரை தோன்றியிராத ஒரு நூதனக் கேள்வியோடு கணவனையே தனை மறந்து ரசித்திருந்தாள் ராஹித்தியா.
நாளாபுறமும் கண் உள்ளவனின் கவனம் தற்பொழுது பாதையில் இருந்தாலும், தன் மனையாள் தன்னையே பார்த்துக் கொண்டு வருவதையும் நொடியில் உணர்ந்து கொண்ட ஆதி, “அப்றம் ஹனி. உன் ஹஸ்பண்ட் பார்க்க நல்லாயிருக்கேனா?. உனக்கு பொருத்தமா?” என்று வினவ…
அதில் தூக்கிவாரிப் போட்டுத் திரும்பிக் கொண்டவள், “இல்ல இல்லங்க ஆதி…சார். அது அது வந்து சும்மா” என்று வார்த்தைகள் வராது திணறினாள்.
அவள் திணறலைக் கண்டு ஒரு மென்னகையை சிந்தியவனும், “நான் உன்னோட ஹஸ்பண்ட் டார்லிங். நீ என்ன எப்டி வேணா பாக்கலாம் ரசிக்கலாம். தப்பில்லைடா” என்று மேலும் குழைய…
அவனின் குழைவு ராஹியின் நெஞ்சுக்குள் பல அமிலக் கலவையையே உற்பத்தி செய்தது.
ஆதியின் இன்றைய விசித்திர செயலில் அவளோ மேலும் குழும்பி அவனைப் புரியாது பார்க்க, அதைப் பார்த்து இன்னும் அகலச் சிரித்தவனோ, “என்ன ஹனி ஒன்னும் புரியலயா?” எனக் கேட்டான். குரலில் இருந்த சிரிப்புக்கு மாறாக காளையின் கண்கள் சினத்தின் சின்னமாகக் காட்சியளித்தது.
அவன் கேள்விக்கு அவளும் “ஆமாம்” என்பது போல் தலையாட்ட… அதைப் பார்த்தபடி தொடர்ந்தவனும், “இன்னிக்கு காலைல உன் மாமனார் அதான் என்னோட டாட் மிரட்டிட்டுப் போனத கேட்டில்ல?” என்று கேட்க…
அக்கேள்வியில் பதறிவளோ, “இல்லங்க நான் மாமா கிட்ட ஒன்னுமே சொல்லலைங்க” என்று அழவே போய்விட்டாள்.
அதில் இன்னும் உரக்க நகைத்தவன்,
“ஐ நொவ் ஹனி. உனக்கு அவ்ளோ விவரமெல்லாம் இல்லன்னு எனக்குத் தெரியும். உன் மாமனாருக்கு நீ சொல்லவெல்லாம் தேவையே இல்லை. அவரு பார்வை கழுகுக்கு ஈடானது” என்று சொன்னவன், “ஆனா இப் தி மதர் ஸ்விம்ஸ் எயிட் பீட் , தி கப் வில் ஸ்விம் எலெவேன் பீட்ங்குறத அவரு தான் மறந்துட்டாரு” என்றும் மகிழுந்து அதிர கர்ஜித்தவனுக்கு, யாரோ ஒரு மூன்றாம் பெண்ணிற்காய் அந்த பெண்ணின் முன்பு தான் தலைவனாய் எண்ணியிருக்கும் தந்தை தன்னை மிரட்டுவது போல் பேசிச் சென்றதை சிறிதும் ஜீரணிக்க முடியாதிருக்க, அந்த மூன்றாம் பெண் தற்பொழுது தான் தாலி கட்டிய மனைவி என்பதையும் ஏற்க முடியாத கர்வத்தின் பிடியில் சிக்கி இருப்பவன் காரின் ஆக்சிலேட்டரை உச்ச வேகத்தில் அழுத்தினான் ஆதி.
ஆதியின் இந்த அவதாரத்தில் அவன் மகிழுந்தின் குலுங்கள் கூட கருத்தில் பதியாது பாவையவள் உறைந்து போய் அமர்ந்திருக்க ஆதியின் கரங்களில் சீறி வந்த பஹானியும் ஒரு வெள்ளை நிற கட்டிடத்தின் முன்னால் வந்து கிரீச்சிட்டு நின்றது.
மகிழுந்து நின்றும் கூட அசையாது அமர்ந்திருந்தவளின் முன்பு சொடுக்கிட்டு நிமிரச் செய்தவன், “கெட் ஆப் ராஹி” என்று சொல்ல…
அப்பொழுது தான் மகிழுந்து நின்று விட்டதை உணர்ந்து அந்த இடத்தையும் சுற்றி முற்றிப் பார்த்து அது என்ன இடம் என்று கண்டு கொண்டவளுக்கு அவளையும் மீறி அவள் கண்ணோரம் உவரி நீர்தான் கரித்துக் கொண்டு வந்தது.
இருந்தும் அதைக் கட்டுப்படுத்தியபடி, “ஏங்க… ஆதி… ஆதி சார் இ இ இங்க எ எ எதுக்கு வ வ வந்துருக்கோம்?” என்று வினவ…
அவனோ, “ஏன் உனக்குத் தெரியாதா?” என்று பதிலுக்குக் கேட்டான்.
அதற்கு அவளும் எந்த பதிலும் கூறாமலே அவனை பாவமாகப் பார்க்க…
அவனோ அவளைப் பார்த்தால் தான் நினைத்ததை பேச முடியாது என்று எண்ணியவன் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டவன், “லிசன் ராஹித்தியா, ஐ நீட் டூ டிவோர்ஸ். இது இன்னிக்கு எடுத்த முடிவில்ல. நீயும் அன்னிக்கே சைன் பண்ணி கொடுத்துருக்க” என்றும் கண்டனக் குரலில் கூறியவன், “இப்போ நாம வந்துருக்கது சென்னைலயே நம்பர் ஒன் லாயர்கிட்ட. உள்ள வந்து அவர்கிட்ட எனக்கு மியோச்சுவல் டிவோர்ஸ்கு சம்மதம்னு சொல்லி ஒரு சைன் பண்ணிட்டன்னா பினிஷ்ட். அப்றம் ஒன் ஆர் டூ ஹியரிங் இருக்கும். நெக்ஸ்ட் பியூ மந்த்ஸ்ல நமக்கு டிவோர்ஸ் கிடைச்சிடும். அப்றம் நீ உன் வில்லேஜ பாத்து போலாம். நானும் நிம்மதியா இருப்பேன்” என்று சொல்லி அவள் கையைப் பற்றியும் அழைத்துச் சென்றவன் அவளை நிறுத்தியது என்னவோ அவன் கூறியது போல சென்னையிலேயே மிகவும் பிரபலமான வக்கீலின் முன்னால் தான்.
எந்தப் பெண்ணும் நினைத்துப் பார்க்கக் கூட விரும்பாத ஒரு இக்கட்டான நிலையில் திருமணம் முடிந்து பத்து தினங்கள் கூட கடக்காமல் கட்டிய கணவனுடனே விவாகரத்துக் கோரி வக்கீலின் முன்னே நின்றவளுக்கு அங்கே அறுபது வயது மதிக்கத்தக்க அமர்ந்திருந்தவரையும், அவர் முகத்தில் தெரிந்த அனுபவ முதிர்ச்சியையும் கூடவே அவரே எழுந்து நின்று, “வாங்க வாங்க வாங்க ஆதித்யவர்மா. வாட் எ சர்பிரைஸ்” என்று ஆதியை வரவேற்றதையும் பார்த்ததுமே தான் சம்மதிக்கா விட்டாலும் தங்களுக்கு நிரந்தரப் பிரிவு என்னும் விவாகரத்து கிடைத்தே தீரும். கணவன் எப்படியேனும் அதை வாங்கி விடுவான் என்றும் நன்கு உணர்ந்து கொண்டவளுக்கு மறுப்பு சொல்லும் மார்க்கமே இல்லாது தான் போனது.
அப்படியே விவாகரத்திற்க்கு மறுப்பு கூறினாலும் ஆதி அதற்குக் காரணம் கேட்டால் அவளும் எதைத்தான் சொல்லுவாள். அப்படி ஒன்று இருந்தால் அல்லவோ சொல்லுவதற்கு.
ஆதியை அவள் ஆசைப்பட்டு மணந்து கொண்டாளா என்றால் அது இல்லை. ஆதியை அவளுக்கு பிடிக்குமா என்றால் இல்லவே இல்லை. ஆதிக்கு அவளை பிடிக்குமா என்றால் வாய்ப்பே இல்லை. இந்த வாழ்க்கை தொடரவேண்டும் என்று அவள் விரும்புகிறாளா என்றால் எந்தப் பதிலும் இல்லை.
ஆனால் இக்கணம் தான் வந்திருக்கும் இந்த இடம் எந்தப் பெண்ணுமே வரக்கூடாத இடம் போல தான் மாபெரும் பாதகம் செய்யப் போவதைப் போல அவள் உள்ளத்தோடு உடலும் நடுங்கத் தொடங்கியதை ராஹியால் என்ன செய்தும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
சற்று முன் அவள் உள்ளம் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம் இல்லை என்ற பதிலே விடையாகக் கிடைக்க, அவளும் இல்லை என்று மறுக்க முடியாது கணவன் கூறியபடியே அந்த வக்கீலின் முன்பு விவாகரத்திற்கு ஒப்புதல் கொடுத்தவள் சாவி கொடுத்த பொம்மை போல் மீண்டும் மகிழுந்தில் வந்து ஏறிக் கொள்ள,
தானும் கையெழுத்திட்டு மேற்படி செயல்முறைகளைத் தொடரச் சொன்னவனும் விசிலடித்தபடியே வந்து மகிழுந்தில் ஏறி மிகவும் பொறுமையாகவே சீரான வேகத்தில் வண்டியைச் செலுத்தினான் ஆதித்யவர்மா.
இதுவரை அவள் கண்டிராத அளவு புன்னகை முகத்துடனே அவள் கையைப் பற்றியே அழைத்து வந்து மகிழுந்தில் ஏற்றியவன், “ஐம் சோ ஹாப்பி பார் யூ ராஹி. இப்போதான் நிம்மதியா இருக்கு. நீ அன்னிக்கு சைன் பண்ணப்போ கூட டிவோர்ஸ்கு இவ்ளோ கோஆப்ரேட் பண்ணுவன்னு நான் எதிர்பாக்கலை. எனிவே நான் நெனச்சத விட நீயும் கொஞ்சம் நல்ல பொண்ணுதான் போல. தாங்கியூ ராஹித்தியா” என்று மிதமான வேகத்தில் வண்டியைச் செலுத்தியபடியே விவாகரத்திற்கு மறுக்காமல் ஒத்துழைத்த மனையாளுக்கு நன்றி சொல்லியபடி வந்தான் ஆதி
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.