சிறுவயதிலிருந்து தன்னைக் கண்டாலே மிளகாய் போல் காய்பவன், முதல் முறை தன்னிடம் இதழ் விரிந்த புன்னகையோடு நல்லபெண் என்று பாராட்டி தனக்கு நன்றி வேறு நவின்றும் அதற்காக சிறிதும் சந்தோசிக்க முடியாது அவன் நன்றி நவின்றதின் காரணத்தை எண்ணி உள்ளம் கலங்க அமர்ந்திருந்தவள், அவன் முகத்தைக் கூட ஏறிட்டு நோக்காமல், “பரவாயில்லை சார். இதுக்கு எதுக்கு தாங்க்ஸ். இது மேரேஜ் அன்னிக்கே எடுத்த முடிவுதானே” என்று மட்டும் பிசிறு தட்டும் குரலில் கூறினாள்.
அவள் குரல் பேதத்தை உணராத ஆதியும், “ம்ம்ம்” என்று மீண்டும் புன்னகைத்துக் கொண்டவன், “சரி ஓகே நம்ம நினைச்ச போல டிவோர்ஸ்கு அப்ளை பண்ணியாச்சு. நான் இன்னிக்கு ரொம்ப ஹாப்பியா பீல் பண்றேன். நாம இந்த டேவ செலிபிரேட் பண்ணலாமா?” என்று குதூகலக் குரலில் கேட்டவன் தொடர்ந்து, “உனக்கு பிடிச்ச இடம் சொல்லு ராஹித்தியா அங்க போலாம்? மால், பீச், ஹோட்டல்” என்றும் அடுக்கியவனை தொண்டை அடைக்கப் பார்த்தவள்…
இக்கணம் உள்ளத்தை புழுங்க வைக்கும் இந்தக் கலக்கம் இறைவனைத் தொழுதாலாவது சற்று மட்டுப்படும் என்று எண்ணினாளோ…
“இல்ல அதெல்லாம் வேணாம். க்கோ க்கோ கோவிலுக்கு மட்டும் கூட்டிட்டுப் போறீங்களா சார் ப்ளீஸ்?” என்று கேட்டாள்.
கோவிலுக்கு மட்டும் அழைத்து போகச் சொன்ன மனையாளின் முகத்தில் அவனும் எதைக் கண்டானோ,
“ம்ம்ம்… ஓகே. திஸ் இஸ் பார் யூர் டே” என்று மட்டும் சொல்லி தோள்களைக் குலுக்கியவன் ஒரே ஒரு முறை அன்னையை அழைத்து வந்த பச்சையம்மன் கோவிலை நோக்கி தன் பஹானியைப் பாயவிட்டான் ஆதி.
வண்டியில் ஒலித்த ஆங்கிலப் பாடலைத் தவிர மௌனத்தை மட்டும் சுமந்தபடி வந்த பஹானி கோவிலுக்கு முந்தைய நிறுத்தத்தில் போக்குவரத்து சமிக்கைக்குக் கட்டுப்பட்டு நிற்க, அவர்களின் மகிழுந்துக் கதவை மெல்ல தட்டினாள் ஒரு சிறுமி.
பார்ப்பதற்கு மிகவும் ஏழ்மை நிலையில், கையில் ஜாதிமல்லிப் பந்துகள் அடங்கிய கூடையோடு கார்க் கதவைத் தட்டிய சிறுமியின் தட்டலில் ராஹியும் தன் புறம் இருந்த கண்ணாடியை இறக்க…
அதில் தெரிந்த ராஹியின் முகம் பார்த்த அந்த சிறுமியோ, “அக்கா நீங்களாக்கா நான் கூட வேற யாரோன்னு நினச்சுதான் தட்டினேன்” என்று ஆச்சர்ய பாவம் காட்டியவள், “இவ்ளோ நாளா தெனைக்கும் என்கிட்டம் பூ வாங்குவீங்களே எங்கக்கா உங்கள ஒரு மாசமா ஆளையே காணல்ல? காலைல உங்களான்ட மொதோ போனி பண்ணா அன்னிக்கி ஏவாரம் பிச்சிக்கும்க்கா. இவ்ளோ நாளா எங்கக்கா போனீங்க?” என்று வினவியவள் ராஹியின் கழுத்தில் மின்னிய மஞ்சள் சரத்தையும் பார்த்து, “உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுக்கா? சார் தான் உங்க சாரா?” என்று முகம் கொள்ளாப் புன்னகையோடு ஆதியையும் எக்கிப் பார்த்து, “அக்கோவ் சார் செம்மையா இருக்காருக்கா” என்றும் சொல்லிச் சிரித்த அந்தச் சிறுமி
இறுதியாக,
“காலைலயிருந்து சரியா போனியே இல்லக்கா. மதியம் கூட சாப்பிடவே இல்லை. இன்னிக்காச்சும் ஒரு பந்து பூ வாங்கிக்கிறியாக்கா?” என்றும் கண்கள் மின்ன வினவினாள்.
ஒரு வேளை உணவிற்காய் நாயாய் உழைக்கும் அந்தச் சிறுமி போன்ற ஏழை வர்க்கத்தினரை தன்னில் ஒருவராய் நினைக்கும் ராஹியும், அவளின் கூற்றிர்கெல்லாம் ஒரு புன்னகையோடு தலையை அசைத்தவள், அவளின் இறுதிக் கேள்விக்கு… “பூவா இப்போவா?”
என்று இழுத்தபடி ஆதியைப் பார்த்தாள்.
அவனோ அத்துணை நேரம் அவர்களின் உரையாடலையும் கேட்டிருந்தவனுக்கு,
சிறுமியின் சோர்ந்த முகமும் மதியம் சாப்பிடவில்லை என்று அவள் சொல்லியதும் அவன் மனதையும் இளகச் செய்ய…
ராஹியின் மேல் ஒரு புதுவிதப் பார்வையை பதித்தபடியே…
“ம்ம்ம் வாங்கிக்கோ” என்று மட்டும் சொன்னவன் ஐநூறு ரூபாய் பணத்தையும் நீட்டி, “சேஞ்ச் வாங்க வேணாம்” என்றும் சேர்த்துச் சொன்னான் ஆதி.
அதில் ஆதியைப் பார்த்து ஒரு அர்த்தப் புன்னகையை உதிர்த்த ராஹியும், “அவங்கல்லாம் அன்னாடங்காச்சிக
ஆதி சார். நேத்தப் பத்தி யோசிக்கவும் மாட்டாங்க. நாளைக்காக சேத்து வைக்கவும் மாட்டாங்க. இப்போ இந்த நிமிஷம் உழைச்ச காசுல வயித்த கழுவி வாழுறவங்க. அவங்களுக்கு நம்ம சும்மா கொடுக்குற ஐநூறு ரூபாய் வெறும் பேப்பர் தான். அவங்க உழைப்புல சம்பாரிச்சது ஒரு ரூபாயா இருந்தாலும் அதுதான் அவங்களுக்கு பெருசு. இத நான் சொல்லலை. உங்களப் போல மல்லிக்கு முதல் தடவ நான் பணம் கொடுத்தப்போ அவளே என்கிட்ட சொன்னது தான்” என்று சொல்லி தன் கைப்பையில் இருந்து நூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்து சிறுமியிடம் புன்னகை முகமாய் கொடுத்தவள், “இந்தா மொதோ ஏதாவது வாங்கி சாப்புட்டு அப்றம் ஏவாரத்தப் பாரு மல்லி சரியா?” என்றும் அவளை அனுப்பி வைத்து நிமிர்ந்தவள்…
“மல்லி போல உழைச்சு மட்டுமே சாப்பிடணும்னு நினைக்கிறவங்க இங்க நிறைய பேர் இருக்காங்க. எல்லாரும் பணம் தான் பெருசுன்னு நினைக்கிறது இல்லை. மல்லியோட குணத்துக்காகவே நான் அவகிட்ட தினமும் பூ வாங்குவேன். நீங்களும் சிக்னல்ல இது போல பொருள் விக்கிறவங்கள பாத்தா முகம் சுழிக்காம அவங்ககிட்ட பொருள் வாங்கி என்கரேஜ் பண்ணுங்க. இது என்னோட ரிக்வஸ்ட் ஆதி… சா சார்” என்றும் துள்ளிக் குதித்துச் செல்லும் அந்தப் பூக்கார சிறுமியைப் பார்த்தபடியே ராஹித்தியா சொல்லி முடிக்க…
அவள் கணவனோ அவளை இன்று தான் புதிதாகப் பார்ப்பது போல் தனை மறந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.
பொறுப்பில்லாதவளாய் விளையாட்டுப் பெண்ணாய் இதுவரை அவன் அறிந்த ராஹி இவள் அல்லவே. அவளின் தற்போதைய ஒவ்வொரு பேச்சும் அவனை கட்டம் கட்டி அடித்தது.
எங்கும் பணம், எதிலும் பணம், எதற்கும் பணம் என்று கோடி கோடியாய் கொட்டி வைத்திருந்தாலும் இன்னும் இன்னும் பணத்தின் பின்னேயே ஓடும் மேல்தட்டு வர்க்கத்தில் ஒருவனாய் இருப்பவனுக்கு பணத்தை தாண்டியும் ஒரு உலகம் இருக்கிறது அதில் இருப்பவர்கள் நம்மை விட மகிழ்வாகவே இருக்கிறார்கள் என்பதையும் நிமிட நேரத்தில் படம் போட்டுக் காட்டியவளை விழிகள் விலக்காது பார்த்துக் கொண்டே இருந்தவன் தன் பின்னே கேட்ட ஒலிப் பெருக்கியின் சப்தத்தில் தான் தலையை உலுக்கி தன்னை மீட்டுக் கொண்டான்.
தனக்குப் பின்னே இருக்கும் வாகனங்கள் எழுப்பிய தொடர் சப்தத்திலும், “சார் வண்டிய எடுங்க சிக்னல் விழுந்திடுச்சு” என்ற ராஹியின் வார்த்தையிலும் மாயவலையில் இருந்து மீண்டு ராஹியின் புறமிருந்து பார்வையை திருப்பியன், ‘ஏய் ஆதி உனக்கு என்னாச்சுடா. இந்த டெவில் இவளைப் போய் இப்டி பாத்திட்டிருக்க?’ என்று கேட்டு, ‘இல்ல இன்னிக்கு அவ பேச்சு அவ பார்வை அதெல்லாம் என்னவோ பண்ணுதுடா’ என்று வாழ்க்கையில் முதல் முறை மனசாட்சியோடு மல்லுக் கட்டியவன் அப்பொழுது தான் போக்குவரத்து சமிக்கையில் பச்சை விளக்கு ஒளிர்வதையும் கண்டு தன்னை முழுதாக மீட்டுக் கொண்டு வண்டியை மின்னலென கிளப்பினான் ஆதி.
ஒரு கையால் தலையை அழுந்தக் கோதியவாறே, மறுகையால் லாவகமாக வண்டியைச் செலுத்தி வந்து இரண்டு திருப்பங்கள் கடந்து கோவிலின் முன்னால் நிறுத்தியவன் இன்னும் ராஹியின் கையிலேயே இருந்த பூப்பந்தையும் வெறுமையாய் இருந்த பெண்ணவளின் கருநாகப் பின்னலையும் பார்த்து, “ப்ளார் வச்சுக்கலையா ராஹி?” என்றும் அவள் முகம் பாராமலே கேட்க…
அதில் அவனை ஒரு மாதிரிப் பார்த்தவளும், “இல்ல சார் உங்களுக்கு இந்த ஸ்மெல் பிடிக்காதில்ல. நான் சாமிக்கு போட்டுக்கறேன்.” என்று சொல்லியவள், “நீங்க வர்றீங்களா சாமி கும்மிட?” என்று கேட்டாள்.
அதற்கு அவனும், “நோ ராஹி டூ மீ டோன்ட் பிலீவ். நீ சீக்கிரம் போய்ட்டு வந்துரு. நான் வெயிட் பண்றேன்” என்று சொல்லி அவளை மட்டும் அனுப்பி வைத்தவனின் பார்வை அவனைக் கேளாமலே அவள் பின்னால் அசைந்தாடிச் செல்லும் பெண்ணவளின் கார்குழலில் ரசனையோடு படிந்து,
“ட்ரூலி இட்ஸ் பியூட்டிபுல்” என்றும் முணுமுணுத்துக் கொள்ள, இப்பொழுது அவன் சிந்தையை களைக்கும் வேலையை அவனது கைபேசி தனதாக்கிக் கொண்டது.
கைபேசி ஒலியில் “சிட்… எனக்கென்னாச்சு?” என்று தலையைச் சிலுப்பி அவளில் நின்றும் பார்வையை திருப்பியவன், அதை எடுத்து செவியில் பொருத்தி “ஹாய் பியூலா” என்க…
அந்தப்புறம் பேசிய நங்கையோ, “ஆதி டார்லிங் என்னாச்சு உங்க மேரேஜ். அந்த வில்லேஜ் கேர்ள் கூடவே வாழலாம்னு முடிவு பண்ணிட்டிங்களா?” என்று குழைந்த குரலில் கேட்டாள்.
அதில் சட்டென்று முகத்தில் சினம் பரவ, “நோ வ்வே… பியூலா” என்றவன், “மியூச்சுவல் டிவோர்ஸ் ஹாஸ் பீன் ரெஜிஸ்ட்ரெட். பிபோர் தெட்டி மினிட்ஸ்” என்று சொல்ல…
அதற்கு அவளும், “சூப்பர் டார்லிங். நல்ல வேலை செஞ்சிங்க” என்று ஆர்ப்பரித்தவள்…
“டுமார்ரோ மீட் பண்ணலாமா?” என்றும் கேட்டாள் அப்பட்டமான மோகம் வழிந்தோடும் குரலில்.
அதில் ஒரு கர்வப் புன்னகையை உதிர்த்தவனும், “இப்போ சுவிச்சுவேசன் சரியில்லை. ஆப்ட்டர் டிவோர்ஸ் நீ கேட்ட போல உனக்கு டேட் தர்றேன்” என்று சொல்லியவன் “கால் யூ லேட்டர் பேபி” என்றும் சொல்லி கைபேசியை அணைக்க…
“போலாம் சார்” என்றபடி அவன் மனைவியும் வந்து சேர்ந்தாள்.
நெஞ்சை அடைத்த பாரம் முழுதும் கடவுளிடம் இறக்கி வைத்து நிர்மலமான முகத்துடன் வந்தவளிடம், “எல்லாம் முடிஞ்சுதா?” என்று கேட்டவனும் வண்டியைக் கிளப்ப…
அவளும், “ம்ம்ம்” என்று தலையாட்டியபடியே உள்ளே ஏறி அமர்ந்தாள்.
தன்னை ஏமாற்றித் திருமணம் செய்தாள் என்று அவள் மேல் அளவில்லா கோபத்தில் இருந்தவன், இன்று அவள் விவாகரத்திற்குக் கொடுத்த முழு ஒத்துழைப்பில் என்றுமே இல்லாத அளவு அவனே அறியாது அவளிடம் மென்மையை பிரதிபலிக்கத் தொடங்கி இருந்தான் ஆதி.
கோவிலிலிருந்து ராஹியோடு கிளம்பியவன் அவள் வேண்டாம் என்று மறுக்க மறுக்க பெரிய நட்சத்திர உணவு விடுதிக்கும் அழைத்துச் சென்று அவளை உண்ணவும் வைக்க, அவளுக்கோ இன்று தன் வாழ்வில் நடந்தேறிய அனர்த்தத்தை நினைத்து உணவு தொண்டையில் இறங்கினால் தானே.
ஒரு வழியாக அனைத்தும் முடிந்து கிளம்பியவர்கள் வீட்டை நெருங்கும் சமயம் சோர்ந்து போய் இருக்கையில் சாய்ந்திருந்த ராஹித்தியா மகிழுந்து நின்று விட்டதை உணர்ந்து கதவைத் திறக்க கை வைக்க, “ஹேய் ராஹி ஒரு நிமிஷம்” என்று அவள் கையைப் பற்றி இழுத்திருந்தான் அவள் கணவன்.
ஆதி இழுத்த இழுப்பில் ஆணவனின் ஒற்றைத் தொடையில் பெண்ணவள் சரிந்து அமர, அந்தச் சரிவில் அவளின் காதோரம் ஆடிய குடை ஜிமிக்கி ஆதியின் இதழ்களை பட்டும் படாது உரசி விட்டு விலகியது.
அதில் கவனம் சிதறிய ஆணின் கூர்பார்வையோ அவனையும் அறியாமல் இப்பொழுது ஜிமிக்கியோடு உறவாடிய சுருண்ட குழல் கற்றைகளின் மேலும் படிந்து அங்கிருந்து மெல்லப் பயணிக்கவும் தொடங்க, படிக்கும் காலம் தொட்டு இதுவரை எத்துணையோ பெண்களைப் பார்த்து பழகி இருந்தாலும் இதுவரை யாராலும் ஈர்க்கப் படாத கர்வத்தோடே, ‘இவகிட்ட இந்த ஹேர் ஒன்னுதான் கொஞ்சம் பாக்குற மாறி இருக்கு. வேற ஒன்னும் ஸ்பெஷலா இல்லியே’ என்றும் எண்ணியபடியே நிறுத்தி நிதானமாக மனைவியின் முகத்தில் உலா வந்தவனின் அலட்சியப் பார்வை நல்ல தடிமனான பன நுங்கை செதுக்கி வைத்தது போல் மலர்ந்த ரோஜாவின் வண்ணத்தில் மிளிர்ந்த பெண்ணவளின் கன்னக் கதுப்புகளில் படிந்த நொடி அவனது அலட்சியத்தையும் மீறி ரசனைப் பார்வையாக மாறியது.
அதில், “நாட் பேட்” என்று மெல்லிதாகப் புன்னகைத்துக் கொண்டவன் தான் கூற வந்ததையும் மறந்து, ‘சில நாட்களாகவே ராஹியின் அருகில்
நாவை வரளச் செய்யும் இந்தப் புது
வித தாகம் ஒருவேளை அவளின் கன்னங்களைக் கடித்து உறிந்தால் தீருமோ’ என்ற ஆராய்ச்சியில் இறங்கத் தொடங்கிய வேளை அவன் மடியிலிருந்து
விலகி அமர்ந்த அவன் மனைவியோ, “சார் என்ன விஷயம் சார் சீக்கிரம் சொல்லுங்க” என்று நெளிந்தபடியே வினவினாள்.
அப்பொழுது தான் கனவுலகில் இருந்து மீண்டவனோ, “ஹான் ராஹி இரு சொல்றேன்” என்று அவள் முகத்தில் நின்றும் சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டவன்…
“இது ரொம்ப முக்கியமான விஷயம் இனிமே தான் நாம கொஞ்சம் அலர்ட்டா இருக்கணும். டாட்க்கு இப்போ நம்ம டிவோர்ஸ் மேட்டர் தெரிஞ்சா பிளான் எல்லாம் கொலாப்ஸ் ஆகிடும். அதனால்
மாம் டாட் முன்னாடி நா உன்கிட்ட கொஞ்சம் க்ளோஸ்டா நடந்துப்பேன் நீயும் அதையே மெயின்டைன் பண்ணிக்கோ. சரியா?” என்றும் அவள் காதோரம் ஏதோ ரகசியம் போல் சொல்ல…
அவளும் அவன் சொன்ன ‘கொஞ்சம் க்ளோஸ்ட்’ என்ற வார்த்தையின் வீரியம் புரியாமல் “ம்ம்ம்” என்று எல்லா புறமும் தலையை ஆட்டியவள் மெல்ல காரை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள் ராஹித்தியா.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.