ஆணின் அந்த அமைதியில் அவனைப் போலவே தலையாட்டிச் சிரித்துக் கொண்டவள், “அடுத்த முத்தம் கண்ணுல” என்று விட்டு அந்த முத்தத்திற்கான அர்த்தமும் கூறியபடி அவன் விழிகள் நோக்கி இதழ்களை நகர்த்த, ஆதியின் விழிகளோ அவனையும் அறியாது சொருகத் தொடங்கியது.
தன்னை கண்களுக்குள் நிரப்பியபடியே மெல்ல மெல்ல மூடிக்கொண்ட கணவனின் காந்த விழிகளின் மேலும் அழுத்தமான முத்திரைகள் இட்டு விலகியவள், “இப்போ அதி முக்கிய முத்தம்” என்று ஆணின் அதரங்களில் தன் மூச்சுக்காற்றை படியவிட்டுச் சொல்ல பெண்ணின் அந்தக் குரலே அவனுக்கு கோடி முத்தம் இட்டதைப் போல் போதையை வாரி வாரி வழங்கியது.
மனைவியாய் கை கோர்த்து காதல் பாடம் கற்கும் மாணவியாய் அவனோடு இணைந்தவள் இன்றோ குருவை மிஞ்சிய சிஷ்யையாய் அவனிடம் கற்ற வித்தைகளால் ஆணவனையே ஆட்கொள்ள பெண்ணின் பேராண்மையை புல்லரிப்போடு அனுபவித்தவனும் எச்சில் கூட்டி விழுங்கி மனைவியாய் முன் வந்து கொடுக்கப் போகும் முதல் இதழணைப்புக்குத் தன்னை ஆயத்தம் ஆக்கிக் கொண்டான் ஆதி.
எப்பொழுதும் அவன் அவளை ரசிப்பது போல ஆணின் ஏறி இறங்கிய தொண்டையையும் துடித்துக் கொண்டிருக்கும் கற்றை மீசையையும் பெண்ணின் அருகில் விரிந்து மூடிய தடித்த இதழ்களையும் நிமிடங்கள் பல ஆழ்ந்து பார்த்து, “ஆதி… அழகன்டா நீ” என்று மெலிதாக முணுமுணுத்துக் கொண்டவள், “ஈறுடல் ஓருயிரா காலமெல்லாம் உன் கைவளைவிலயே இருக்க ஆசைன்னு உதட்டாலே உணர்த்துறது தான் இந்த இதழ்…” என்று வார்த்தையை முடிக்கக் கூட பொறுமை இல்லாது ஆணின் அதரங்களை வன்மையாகவே சிறை செய்து பூட்டிக் கொண்டவளின் நாணம் துறந்த அதிரடியில் விக்கித்து விழித்தது அந்த ஆறடி அரிமா.
அவன் அவளிடம் காட்டும் வேகத்துக்கு சிறிதும் குறைவில்லாது ஆணவனின் தடித்த அதரங்களைத் தனதாக்கிக் கொண்டவளின் செயலில் ஆதியின் கரங்களோ இன்பப் பேரவஸ்தையோடு அவளின் துடி இடையை சுற்றி வளைத்து தங்களுக்குள் இருந்த இம்மியளவு இடைவெளியும் இல்லாது செய்திருக்க, பெண்ணின் இதழ்களில் மட்டும் தான் தேனும் பாலும் உள்ளதா என்ன? ‘தன் மெல்லிய அதரங்களுள் சிக்கியிருக்கும் கணவனின் இதழ்களிலும் தேவாமிர்தம் உள்ளதோ?’ என்ற ஆராய்ச்சியில் இறங்கி இருந்தாள் அவன் மனையாள்.
கோபம் குறைக்க வேண்டி முதன் முதல் அவளாகக் கொய்த அதரங்கள் ஆணோடு பெண்ணையும் தாப மேடையில் ஏற்றி இருக்க, தான் சிறு வருத்தம் கொள்வது கூடத் தாளாத கணவனின் கரையில்லாக் காதலில் அவளாகப் பூட்டிக் கொண்ட இதழ்களின் சுவையும் சேர்ந்து கொண்டதில், அவன் மீசையின் குறுகுறுப்பையும் கருத்தில் கொள்ளாது, கணவனின் குளுமை கொண்ட இதழ்களை இழுத்து இழுத்துச் சுவைத்து இருவரின் மேனியையும் வேள்வித் தீயில் மூழ்க வைத்தாள் பெண்.
ஆண் தான் பெண்ணை ஆள வேண்டுமா என்ன… பெண்ணின் அமைதியைப் போல் அவளின் ஆளுகை கூட அளவற்ற அழகுதான். அவளுக்கு உடமையானவனிடம் வெளிப்படும் போது.
இதழை சிறை செய்தவளின் ஆரம்பம் அதிரடியாக இருந்தாலும் பெண்ணுக்கே உரிய நிதானத்தோடு ஆணவனின்
கீழ் மேல் அதரங்களை மாற்றி மாற்றிச் சுவைத்தவளின் செயலில் காதலிப்பது மட்டும் சுகமல்ல காதலிக்கப்படுவது அதைவிட உச்சக்கட்ட இன்பம் என்று உணர்ந்து மனைவியின் காதல் போரை ஏற்று தன் உடல் பொருள் ஆவி அனைத்தும் தொலைக்க அவா கொண்டான் ஆதி.
அவன் பிடரி முடியை பற்றி இழுத்தபடி சிறு சிறு இடைவெளிகளோடு தொடர்ந்த நீண்ட இதழ் ஒற்றலில் அவளுள் மிச்சமின்றிக் கரையத் தொடங்கியவனும் கிடைத்த இடைவெளியில் எல்லாம் “தியா… ஹனீ…” என்று மனைவியின் நாமங்களை உறுப்போட்டபடியே அவள் கரத்தில் தன்னை ஒப்புக் கொடுத்துக் கிடக்க, ஆரம்பம் உள்ள அனைத்திற்கும் முடிவும் உள்ளதே.
ஒரு கட்டத்தில் உதடுகள் வலித்து அவள் விலகளை விரும்பிய சமயம் நொடியில் அவள் செயல்களைத் தனதாக்கி, “தியா கொன்னுட்டடி” என்று அவளோடு மஞ்சத்தில் சரிந்தவன் பெண் எனும் பேரழகுப் பெட்டகத்தையும் தனக்கே தனக்காய் உடமையாக்கும் வேளையில் ஆவேசமாய் இறங்க, அவளுள் இருந்த உப்பில்லா தயக்கமும் இன்றோ முகில் கண்ட பனியாக விலகி என்றுமில்லாத அளவு ஆணுக்குப் போட்டியாக அவளும் அவனை ஆட்கொள்ள முனைய, மானிடம் சிக்கிய சிறுத்தையாய் மனைவியின் காதலில் கட்டுண்டு காணாமல் போனான் கட்டிளம் காளையவன்.
தங்களுக்குள் எத்துணையோ கலக்கங்கள் முளைத்தாலும் காதல் என்ற ஒற்றைச் சொல்லால் தங்கள் வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொண்டவர்கள் மோகத்திலும் முக்தியடைய முனைய, அவர்கள் வேகம் தாளாது அவர்களில் எஞ்சியிருந்த ஆடைகளோ மூலைக்கொன்றாய் சிதறி ஓடியது.
ஒருவருக்கொருவர் ஆடையாய் மூடிக்கொண்டு மண்ணும் மழையுமாய் பிண்ணிப் பிணைந்து முக்குளிப்பில் மூழ்கியவர்களின் மோக வெள்ளத்தில், ஆடை மூடா அங்கங்களில் எல்லாம் பெண்ணின் நகக்குறியும், ஆணவனின் மூரல் தடமும் முத்திரையாய் பதிய, அதில் நாணம் கொண்டு துடித்தவளின் “ஆதீ…” என்ற விளிப்புகளும்… அதற்கு பதிலாய், “ஹனீ” என்ற குழைவுகளும் அவர்களின் அதரங்களுக்குள்ளே அமிழ்ந்து தான் போக, அங்கு மீண்டும் மீண்டும் அரங்கேறியது காதலின் முடிவில்லா முக்கூடல்ச் சங்கமங்கள்.
என்றுமில்லா பூரணத்துவத்தோடு மனம் நிறைந்த இணைவின் முடிவில் நெற்றி முத்தமிட்டு விலகியவனின் நெஞ்சத்திலே மீண்டும் சரிந்து விழுந்தவள் அவன் முகத்தை ஏறிட்டு நோக்கி, “ஆதீ கோபம் போயிடுச்சா?” என்று மெல்லிசையாகக் கேட்க…
அவனோ, ‘கோபமா? அது எந்தக் கடையில விக்கிது?’ என்பது போல் அவளை மோகமாய்ப் பார்த்திருந்தான்.
கணவனின் அந்தப் பார்வையில் மீண்டும் உள்ளம் சிலிர்க்க அவன் சிகையைக் களைத்தவள், “ஆதித்தான்… கொஞ்சம் முன்ன அவ்ளோ கோவமா இருந்தீங்களே. இப்போ கோபம் போயிடுச்சா?” என்று மீண்டும் அதையே வினவியவளுக்கு கணவனின் திருப்தியை அறிந்தே ஆக வேண்டும் என்று அப்படி ஒரு பேராவல்.
அவனோ அப்பொழுதும் அவளுக்கு பதில் கூறாது அவளைப் பார்வையாலே புசித்துக் கொண்டிருந்தவன், “ஹேய் மக்கு டெவில்… உன் மேல கோபப்பட்டா அது என்னையே நான் தண்டிக்கிறதுக்குச் சமம்டி. உன்கிட்ட கோபம் மட்டுமே பட்ட ஆதி இப்போ காதலை மட்டுமே கொட்டும் ஆதியா ரிவைஞ் எடுத்து இருக்கேன்டி” என்று அவள் கழுத்து வளைவை வருடியவாறே சொல்ல…
அதற்கு மேல் இறங்க விடாது அவன் கைகளைத் தடுத்துப் பிடித்தவள், “அப்போ கொஞ்சம் முன்ன போடி ஒன்னும் வேண்டாம்னு சொன்னது பொய்யா?” என்று கண்ணைச் சுருக்கிக் கேட்டாள்.
பெண்ணின் அந்த பாவத்தில், “ஹனீ இருந்தாலும் நீ இவ்ளோ மக்கு டெவிலா இருக்கக்கூடாதுடி…” என்று அவள் நெற்றி முட்டிச் சிரித்தவன், “அப்டிச் சொன்னதால தானே மேடத்தோட புல் எனர்ஜி இன்னிக்கு ரிவில் ஆச்சு. பொண்ணுங்க வேணாம் வேணாம் சொன்னாதான் போதும் போதும் மட்டும் தருவாங்க போல” என்றும் கண்ணடித்துச் சிரித்தவன், “இங்கப்பாருடி” என்று அவன் மார்பில் படர்ந்திருந்த பற்தடங்களையும் காட்டினான்.
அவளோ அதைப் பார்த்து விட்டு, “அய்யோ இப்டி கடிச்சு வச்சுருக்கேனே” என்று வருத்தத்தோடு வெட்கமும் கலந்து சொன்னவள், “அப்போ எல்லாம் நடிப்பா? பிராடு பிராடு” என்று அவன் மார்பில் வலிக்கும் படி அடிக்க…
அவனோ அதையும் அவளது இதழ் ஒற்றல்கள் போல இதழ் விரிந்த புன்னகையோடே பெற்றுக் கொண்டவன்,
“என்ன பிராட்னு சொல்ற ஹனிக்கு நான் செஞ்ச பிராட் வேல அப்டி ஒன்னும் பிடிக்காத மாறித் தெரியலயே. இப்போ என்ன அடிக்கிற கை கொஞ்சம் முன்ன என்ன, என்னவெல்லாம் பண்ணுச்சுன்னு லிஸ்ட் போடவா?” என்றவன் வழக்கம் போல் புருவத்தை ஏற்றி இறக்க…
அதைப் பார்த்து நாணம் எல்லையைக் கடந்தது பெண்ணிற்க்கு.
பெண்ணவளின் அளவு கடந்த நாணத்தை ரசித்துப் பார்த்தபடியே,
“ஹனீ…. இவ்ளோ நாளா என்னோட காதலுக்குக் கட்டுப்பட்டுத்தான் என்னோட இழையுறன்னு நினைச்சேன்டி. ஆனா உனக்குள்ள இருந்த உச்சபட்ச ஆசையை இன்னிக்கு வாரி வாரி வழங்கி என்னையே மூச்சு முட்ட வச்சிட்டடி தியா” என்று கிறக்கமாய்க் கூறி அவளையும் கிறங்க வைத்தவன்…
“ஹனீ… அகைன் அகைன் மூச்சு முட்டிப் போலாமா?” என்று சட்டென்று அவள் இதழ்களில் மீண்டும் தன்னதரங்களைப் பொருத்த, ஆணவனின் திடீர் கொய்தலில் அவன் சொன்னது போலவே நொடிகள் பல மூச்சுக்குத் திணறி மீண்டவள், “ஆதித்தான்” என்று வாயைப் பொத்திக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
பெண்ணின் அந்தக் குரலில் அவனும், “என்னாச்சு ஹனீ?” என்று பதறி எழ, அதற்குள் போர்வையோடு அவனை விட்டு குளியலறைக்குள் ஓடியவள் அங்கிருந்த பீங்கானில் வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டாள் ராஹித்தியா.
அதில் மேலும் பதட்டம் கூடி அவள் பின்னோடே ஓடியவன், “டேய் தியா என்னடா பண்ணுது? ஏன் இப்டி வாமிட் பண்ணுற? கிஸ் பண்ணது பிடிக்கலியா?” என்றெல்லாம் கேட்டவாறே அவள் வாந்தி எடுத்து முடிக்கவும் சுத்தமும் செய்து விட்டு மனைவியை கைதாங்கலாய் அழைத்து வந்து அமர வைக்க…
அவளோ அவன் கேள்விகளுக்கு பதில் கூட கூற முடியாத சோர்வோடு சிந்தனை வசப்பட்டவளாய் அவன் தோள்களிலே சாய்ந்து கிடந்தாள்.
மனைவியின் அந்த அமைதியில் மீண்டும் என்னவோ என்று பதறியவன், “தியா
நீ இப்டி பேசாம இருந்தா நான் என்ன நினைப்பேன்டி. உனக்கு என்ன பண்ணுது சொல்லு ஹனீ? எப்பவும் விட இன்னிக்கு டயர்டா இருக்கியே. ரொம்ப படுத்திட்டானா? மாம்ம கூட்டிட்டு வரவா? இல்லன்னா வா ஹாஸ்பிடல் போலாம்” என்று அவள் இடையை பற்றி எழுப்ப முனைந்தவனின் கரத்தை மெல்லப் பிடித்து தன் நடுவயிறு நோக்கிக் கொண்டு சென்று ஆணவனின் விரல்களை தன் வயிற்றோடு வைத்து அழுத்திக் கொண்டவள், “அமைதியா பேசுங்க ஆதி. உள்ள இருக்கவங்க பயந்துடப் போறாங்க” என்றும் கிசுகிசுப்பாய் சொல்ல… ஆதிக்கோ ஒன்றும் புரியவே இல்லை.
ராஹியின் சோர்ந்த நிலை கண்டு அவள் உடலுக்குத்தான் என்னவோ என்று பதறி விட்டவன், ராஹியின் வார்த்தையில் மேலும் குழம்பி, “உள்ளுக்குள்ள இருக்கவங்க பயப்புடவாங்களா? யாரு தியா? எங்க இரு?” என்று கேட்கத் தொடங்கியவன் அப்பொழுது தான் அவள் வயிற்றில் படிந்திருந்த தன் கரத்தையும் உணர்ந்து, “தியாமா…” என்று கூவியே விட்டான் ஆதி.
கணவன் கண்டு கொண்டதை உணர்ந்து அவன் மார்புக்குள் புகுந்தவளுக்கு அசதியையும் மீறிக் கொண்டு வெட்கமும் மகிழ்ச்சியும் போட்டு போட்டுக் கிளம்ப, அவளுக்கு இம்மியும் குறையாத பரவசத்தோடு, “ஹனீ… நிஜவாவாடி?. சுயர்ராவா?” என்று அவள் முகத்தைப் பற்றி நிமிர்த்தினான் அவளவன்.
அதில் அவனை புன்சிரிப்போடு பார்த்தவளும், “சிம்டம்ஸ்லாம் அப்டித்தான் தெரியுதுங்க. நாளும் தள்ளிப் போயிருக்கு. நைண்டி பர்சன் பேபிதான் ஆதித்தான்” என்று சொன்னவளுக்கு மட்டுமில்லாது அதைக் கேட்டிருந்தவனுக்கும் இன்று தான் வாழ்வின் பூரணத்துவத்தைப் பெற்று விட்டதைப் போல் அப்படி ஒரு மகிழ்வு அவர்களின் உள்ளம் எங்கும் வியாபித்துப் பரவியது.
தாங்கள் பெற்றோர் ஸ்தானத்தை அடைந்து விட்டோம் என்ற செய்தி மகவைக் கருவில் ஏந்திய பெண்ணுக்கு மட்டுமல்ல, அதை அவளுள் விதைத்த ஆணுக்கும் அளவில்லா மகிழ்ச்சியல்லவா. கூடவே தங்களால் ஒரு உயிர் உருவாக்கப்பட்டிருக்கும் பெருமையும் பொங்கிப் பெறுகியதில் திக்குமுக்காடிப் போயினர் ஆதியும் ராஹியும்.
மனைவியின் மணி வயிற்றில் தங்கள் காதலின் சின்னம் உதித்திருக்கிறது என்ற எண்ணமே ஆதிக்கு அத்துணை பரவசத்தைத் தர, “ஹனீ ஹனீ ஹனீ தாங்க்ஸ்டி தாங்க்ஸ்டி” என்று அதற்கும் அவளை முத்தாடித் தீர்த்து விட்டான் ஆதி.
ஆரம்ப அலப்பறைகள் முடிந்து சிறிது நேரம் அவளை கவனமாக இருக்குமாறு சொல்லிவிட்டு வெளியேறியவன் கர்ப்பத்தை உறுதி செய்யும் பிரகனன்சி கிட்டோடும் வந்து மனைவியிடம் தந்து தங்கள் மகவின் வருகையை நூறு சதவீதம் உறுதி செய்து கொண்டவன் அது அர்த்த ராத்திரி என்றும் பாராமல் குடும்ப மருத்துவருக்கு அழைத்து விஷயத்தை சொல்லி சற்று முன் நடந்த கூடலினால் பாதிப்பு எதுவும் வர வாய்ப்பில்லை என்றும் உறுதி செய்தப் பின்னே சீராக மூச்சு விட்டான்.
காதல் பெண்ணவளின் இணைவால் நேசக் கணவனாய் மாறி இருந்தவன், இன்னும் மண்ணிலே உதிக்காத மகவின் வரவால் பொறுப்புள்ள தந்தையாகவும் அவதாரம் பூண்டு இருந்தான் ஆதித்யவர்மா.
பெண்ணவளின் இணைவே தன் வாழ்வில் மகிழ்ச்சியின் உச்சக்கட்டம் என்று பெண்ணவளைச் சேர்ந்த நாளிலிருந்து எண்ணியிருந்தவன், இன்றோ அவள் கொடுத்த மணநாள் பரிசில் திக்குமுக்காடிப் போனவனாய், “ஹனீ ஹனீ… நம்ம குழந்தைடி. நம்ம ஆழமான நேசத்தோட நகல்டி. உன்னோட நகலா என் கைக்கு வரப்போகுது தியா. ஐம் சோ எக்சைட்டட் தியா. ஐம் சோ லக்கிடி” என்றும் வானுக்கும் பூமிக்கும் குதிக்கத் தொடங்கியவனை இவன் ஆதிதானா என்று விழிகள் விரித்துப் பார்த்திருந்தாள் அவன் மனையாள்.
வரப்போகும் சின்ன உயிரை தாங்கள் உருவாக்கிய ஒரு உயிராய் மட்டுமே எண்ணாமல், தங்கள் நேசத்தின் சான்றாக எண்ணியதாலோ என்னவோ, விடிய விடிய மனைவியை மடியில் அமர்த்திக் கொண்டு கதைகள் பல பேசி தங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியவன், “தியா எப்போடி குட்டி தியாவப் பெத்துத்தருவ? இப்போ எவ்ளோ டேஸ் ஆகுதுடி? டெலிவரிக்கு இன்னும் எவ்ளோ மந்த்ஸ் ஆகும்?. எனக்கு இப்போவே நம்ம பொண்ண பாக்கணும் போல இருக்குடி. அவ எப்டி இருப்பா தியா? உன்னப்போலவே குண்டு குண்டு கன்னம், குருவி போல லிப்ஸ். க்ரேப்ஸ் போல ஐஸ், அதுல சின்னப்புள்ளயில நீ என்ன முறைச்சுப் பாப்பியே அது மாறி முறைப்பாளா? எனக்கு எனக்கு சந்தோசத்துல பறக்குற மாறி பீல் ஆகுதுடி. நம்ம குட்டி தியாக்கு என்ன பேரு வைக்கலாம் ஹனி?” என்றெல்லாம் சித்தம் சிதறியவன் போல் பிதற்றத் தொடங்கியவனை…
“இவருக்கு என்னாச்சு? இப்போ தான் கன்பார்மே ஆகிருக்கு. அதுக்குள்ள இவ்ளோ எக்சைட்மென்ட் ஆகுறாரு.
இப்டி ஒரு ஆதிய இவ்ளோ நாளா எங்க ஒளிச்சு வச்சிருந்தாரு இந்த முசுட்டு மேங்கோ. குட்டி தியா வேணுமாமுல்ல. அதுவும் இப்போவே” என்றும் கணவனின் மகிழ்ச்சியை மனம் குளிரப் பார்த்து ரசித்தவள் அப்பொழுது தான் ஞாபகம் வந்தவளாய்…
“ஹலோ ஆதி… என்ன இது போங்காட்டமா இருக்கு. அன்னிக்கு குட்டி ஆதி வேணும்னு நான்தான் பஸ்ட் ஆசைப்பட்டேன். நீங்க இப்போ வந்துட்டு குட்டி தியான்னு ஏலம் போடுறீங்க. அதெல்லாம் இல்லை. நமக்கு பஸ்ட் வரப்போறது குட்டி ஆதிதான்” என்று முறுக்கிக் கொண்டு அவன் மடியில் நின்றும் எழுந்து நின்றாள் ராஹி.
அவள் எழுந்த வேகத்தில், “ஹேய் மெல்லடி” என்று பதறி எழுந்தவனும், “பேபி வரணும்னு யார் ஆசைப்பட்டா என்ன தியா. எனக்கு பஸ்ட் குட்டி தியாதான் வரணும்னு இருக்குடி” என்று புடவையை ஒதுக்கி மென்மையாக அவள் வயிற்றைத் தடவியவனின் கரத்தைத் தட்டி விட்டவள்…
“ம்ஹூம் அதெல்லாம் முடியாது. நான் இதுல மட்டும் காம்ப்ரமைஸ் ஆகவே மாட்டேன். எனக்கு முதல்ல குட்டி ஆதிதான், குட்டி ஆதிதான். ரெண்டாவது மூனாவது வேணா குட்டி தியாவப் பெத்துக்கலாம்” என்று கால்களைத் தரையில் உதைத்துக் கொண்டு சண்டைக் கோழியாய் சிலிர்த்து நின்றாள் ராஹி.
மனைவியின் அந்தச் செயலில் மேலும் பதறியவன், “இந்த மாறி டைம்ல இப்டிலாம் ஆடக் கூடாதுடி” என்று மீண்டும் அவளைத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன்,
ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சிடுவோம்” என்று கண்ணடித்துச் சிரிக்க…
அவளோ, “அதுக்கு சான்ஸ் இருக்கா ஆதித்தான்?” என்று கண்கள் மின்ன வினவினாள்.
மனைவியின் மின்னும் விழிகளில் தன் இதழ்களைப் புதைத்தவன், “மே பி ஹனி. நீ ட்வின்ஸ்னால நமக்கும் ட்வின்ஸ் பிறக்க வாய்ப்பு இருக்குடி. பாப்போம்” என்று சொன்னவன், “இப்போ சொல்லு உனக்கு குட்டி தியாவும் வந்தா ஹாப்பி தானே?” என்றும் வினவ…
அவன் கண்களில் உள்ள ஆசையில், அவன் தன் நகலை மகளாய் எதிர்பார்க்கும் காதலில் கட்டுண்டு போனவளும், “ஐ லவ் யூ ஆதித்தான்” என்ற கேவலோடு அவன் வெற்று மார்பில் முகத்தைப் புதைத்தாள் ராஹி.
பதிலுக்கு, “ஐ லவ் யூ லாட்ஸ் ஹனீ…” என்று ஆக்டோபஸ்ஸாய் அவளைத் தழுவிக் கொண்டவனும், மார்பில் படர்ந்த கண்ணீர்த் துளிகளின் ஈரத்தில் அவள் உணர்ச்சிவசப்பட்டிருப்பதை உணர்ந்து “டேய் தியா வேணாண்டா. டோன்ட் க்ரைமா. இந்தமாரி நேரத்துல எமோஷனல் ஆகக் கூடாதுடி” என்று முத்தங்கள் பல பதித்து மனைவியை இயல்புக்குக் கொண்டு வர முயன்றவனின் கரம், விசும்பலில் குலுங்குபவளின் வயிற்றைச் சுற்றியும் ‘இந்த முகிலவனின் பெண்பனி நீயடி’ என்ற அழுத்தத்துடன் அரணாக இறுகியது. அவர்கள் நேசத்தின் ஆழத்தைப் போலவே.
கள்ளமில்லாக் காதல் கரையில்லாது இருந்தால் கட்டுக்குள் நிற்காத காளை மட்டுமல்ல கண்ணுக்குத் தெரியாத காற்றும் நம் கரங்களுக்குள் தானே.
நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நான் அல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா
நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நீ அல்லவா
கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே என்னை கண்டேன்
கண் மூடினாள் கண் மூடினாள்
அந்நேரமும் உன்னை கண்டேன்
ஒரு விரல் என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா
மறு விரல் வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா
உயிர் கொண்டு வாழும் நாள் வரை
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா
நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நீ அல்லவா
இதே சுகம் இதே சுகம்
எந்நாளுமே கண்டால் என்ன
இந்நேரமே இந்நேரமே
என் ஜீவனும் போனால் என்ன
முத்தத்திலே பலவகை உண்டு
இன்று சொல்லட்டுமா கணக்கு
இப்படியே என்னை கட்டி கொள்ளு
மெல்ல விடியட்டும் கிழக்கு
அச்சம் பட வேண்டாம் பெண்மையே
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே
நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நீ அல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா
நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நீ அல்லவா”
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.