செய்வதறியாது, கணிதமும் புரியாது பெண்ணவள் விழித்திருந்த வேளை இன்று ராஹித்யா வேலையில் சேரப் போகும் விஷயம் அறிந்திருந்த ஆத்விக்கும் அவளை பார்த்து விட்டுப் போகலாம் என்று அவன் பார்த்துக் கொண்டிருந்த வேலையை ஒத்தி வைத்து விட்டு அங்கே வர அவனைப் பார்த்த பெண்ணவளோ, “ஹை ஆது மாமா” என்று கூவியே விட்டாள்.
“அய்யோ ஆது மாமா வாங்க வாங்க இவ்ளோ நேரம் உங்களதா எதிர்பார்த்திட்டிருந்தேன்” என்ற ராஹியின் ஆர்ப்பரிப்பிலும்…
“கம்பெனிக்கு புதுசா ஜாயின் பண்ண வந்திருக்கது நீங்க ராஹி மேடம் நாந்தான் உங்கள வெல்கம் பண்ணனும், நீங்க என்னடான்னா எனக்கு இவ்ளோ பெரிய வரவேற்பு கொடுக்கறீங்க” என்று இதழ் பிரித்துச் சிரித்த ஆத்விக்கின் பதிலிலும்
அத்துணை நேரம் ‘யார் இந்தப் பட்டிக்காடு’ என்பது போல் ராஹியைப் பார்த்திருந்த மற்ற பணியாளர்கள் அனைவரின் விழிகளும் இப்பொழுது ஆத்விக்கையும் ராஹியையும் சேர்த்தே சுவாரஸ்யமாகப் பார்த்திருக்க, தங்களையே பார்த்திருந்தவர்கள் புறம் திரும்பிய ஆத்விக்கோ,
“ஹாய் ப்ரண்ட்ஸ், மீட் மிஸ் ராஹித்யா, நம்ம கம்பெனிலதான் இனிமேல் வேலை பாக்கப் போறாங்க, அப்றம் இவங்க மை கியூட் கசினும் கூட” என்று அறிமுகம் செய்து வைத்தவன் தொடர்ந்து, “இவளும் எங்க குடும்பத்துல ஒருத்தி தான் அதனால நீங்க எல்லாரும் எங்களுக்கு கொடுக்கற அன்ப இனிமேல் ராஹிக்கும் கொடுக்கணும்” என்றும் கூறினான்.
அதைக் கேட்ட ராஹியோ ஆத்விக்கின் அன்பில் நெகிழ்ந்தவளாய், “அய்யோ எதுக்கு ஆது மாமா எனக்கு இவ்ளோ பில்டப்பு.?” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவள் அருகில் வந்த சக பணியாளர்கள் அவளுக்கு சிறிது மரியாதையோடே வாழ்த்து தெரிவித்து கை குலுக்கி விட்டுச் செல்ல, அவளும் நன்றி கூறி அவள் இடம் நோக்கி விரைய, ஆத்விக்கும் அவளோடு இணைந்து சென்று அவளருகில் அமர்ந்து கொண்டான்.
ராஹித்யாவின் மேஜை முன் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்ட ஆத்விக்கும், “அப்றம் ராஹி உன்னோட முதல் நாள் வேலை எப்டியிருக்கு.?” என்று வினவ…
அவளோ சபரி கொடுத்த அந்த பைலைக் காண்பித்து தனக்கு ஒன்றும் புரியவில்லை என்று நாலு பக்கத்திற்கு பாட்டாகவே படித்து விட்டாள்.
அவள் செயலில் சிரித்த ஆத்விக்கும்,
“ராஹி நா ஒண்ணு கேட்டா தப்பா நினைக்கமாட்டியே?” என்று கேட்டு “நீ படிச்சு பாஸ் பண்ணி தான் பிகாம் டிகிரி வாங்குனியா?” என்றும் அடக்கப்பட்ட சிரிப்புடன் வினவ…
அவளும் ‘அய்யோ எப்டி கண்டு புடிச்சான்’ என்பது போல் திருதிருவென விழித்தவளும் அதை வெளியே காட்டாமல், “ஆது மாமா” என்று மட்டும் சிணுங்க, அந்த இடத்திலோ மீண்டும் ஒரு சிரிப்பலை.
அப்படியே ராஹியுடன் சிரிப்பும் பேச்சுமாக சிறிது நேரம் அளவளாவியவன், “ஆமா ராஹி சாஹித்யாவும் இன்னிக்குத்தான வேலையில ஜாயின் பண்றா? அவ நம்பர் கொஞ்சம் குடு, அப்பா உங்க ரெண்டு பேரையும் பாத்துக்கற பொறுப்ப அய்யா கிட்டதான் கொடுத்துருக்காங்க” என்று காலரை தூக்கி விட்டுக் கூறி அவளிடம் சாஹியின் கைபேசி எண்ணையும் பெற்றுக் கொண்டவன் அவள் வேலையைப் பற்றியும் விளக்கிக் கொண்டிருந்த சமயம் ஆதியிடம் இருந்து “கம் டூ மை ரூம் ஆது” என்று குறுஞ்செய்தி ஒன்று வர… அதைப் பார்த்த ஆத்விக்கும் “அண்ணா கூப்பிடுறான்” என்று சொல்லி விட்டு ஆதியின் அறை நோக்கி விரைந்தான்.
தன் அறைக்குள் இருந்து கொண்டே சிசிடிவியில் வெளியில் நடப்பவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆதி ராஹிக்கு தன் தம்பி உதவி செய்வதை சிறிதும் விரும்பாதவன் ஆத்விக்கிடம் அவன் விட்டு வந்த வேலையை ஞாபகப் படுத்தி கடிந்து கொள்ள, அவனும் “சாரிண்ணா இதோ போறேண்ணா” என்று சொல்லி வெளியேறியவனும், “ஈவ்னிங் மீட் பண்ணலாம் ராஹி, சீயூ பாய்” என்று தொலைவில் இருந்தே ராஹியிடம் கையெசைத்து விட்டுச் சென்று விட இங்கு ராஹியோ “அய்யோ இப்ப என்ன செய்றது” என்று மீண்டும் கையை பிசையலானாள்.
“ச்சே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து இந்த ஆது மாமா சொல்லிக் கொடுத்திட்டுப் போயிருக்கலாம்” என்று புலம்பியவாறே அந்தக் கோப்பில் ஏதோ எழுதுவதும் பின்பு அதை அழிப்பதுமாக இருந்த ராஹியின் செயல்களை மாலை வரை தொடர விட்ட ஆதித்யவர்மா, தன் வேலைகள் அனைத்தும் முடித்து ராஹியை தன் அறைக்கு வரச் சொல்லியவன் சிவாவை வெளியில் அனுப்பி விட்டு அவளிடம், “என்ன மிஸ் ராஹித்தியா முதல் நாளே வேலைல ரொம்ப பிஸியாகிட்டிங்க போல.?” என்று வலப்புருவம் தூக்கிக் கேட்டான்.
அதற்கு அவளோ “ஹான் சார் அது வந்து” என்று பேந்த பேந்த விழித்தவளை ஒரு ஏளனப் புன்னகையோடு பார்த்தவன்,
“ஆதுவோட அடிச்ச அரட்டை சத்தம் தான் இங்க வரை கேட்டுச்சே. நீ என்ன வேலை பாக்க வந்தியோ அத சிறப்பா செய்ற போல” என்று பேசிக் கொண்டே சென்றவனின் வார்த்தையில் அங்கிருந்த சிசிடிவி திரையைப் பார்த்து அவன் தன்னை கண்காணித்திருக்கிறானோ என்று எண்ணிக் கொண்டவள்…
“இல்ல ஆதி மா… சார், எனக்கு வேலைல நிறைய டவுட் அதான். ஆது மாமா கிட்ட கேட்டேன்” என்று உள்ளே போன குரலில் உரைத்தாள் பெண்.
அதில் மேலும் அவளை உக்கிரமாக நோக்கியவன், “லீவ் இட் ராஹி. இது என்ன உங்க சாப்பாட்டு பேக்டரின்னு நினைச்சியா? எல்லாம் ஈஸியா புரியறதுக்கு, இது வர்மா குரூப்சோட ஹைடெக் பினான்ஷியல் கம்பெனி. இங்க பியூனா வேலை செய்றதுக்குக் கூட பெரிய தகுதி வேணும். இங்க வேலை பாக்குறவங்க ஒவ்வொருத்தரும் எவ்ளோ டேலண்டட் தெரியுமா? அவங்களுக்கு ஒன் மன்த் சேலரி எவ்ளோன்னு உனக்குத் தெரியுமா? என் டாட்டோட ரெக்கமண்ட்ல ஈஸியா இங்க வந்து பொழுது போகாம சும்மா சீட்ட தேச்சிட்டுப் போறதுக்கு நான் உன்ன அலோவ் பண்ண முடியாது. நாம ஒன்னு வேணும்னு ஆசப்படுறதுக்கு முன்ன அதுக்கு நமக்கு தகுதி இருக்கானு முதல்ல பாக்கணும்” என்று அவன் பாட்டில் பேசிக் கொண்டே சென்றவன் குரலில் வழிந்த அப்பட்டமான இகழ்ச்சியில் …
‘இவன் என்ன சொல்ல வர்றான் நா இவன்கிட்ட வேலை பாக்க ஆசைப்பட்டேனாமா?’ என்று எண்ணிக் குமைந்தவாறு அவனையே பார்த்துக் கொண்டிருந்த ராஹிக்கு நன்கு புரிந்து போனது அவன் தன்னை மட்டம் தட்டுவதற்கென்றே வரவழைத்திருக்கிறான் என்று.
இருந்தும் தற்சமயம் பேசும் இடத்தில் அவனும், கேட்கும் இடத்தில் தானும் இருப்பதை உணர்ந்து கொண்ட ராஹி பல்லைக் கடித்துப் பொறுமையாக நிற்க…
அவனோ நிறுத்தாது “ஹேய் லுக் மிஸ் ராஹித்தியா” என்று தொடர்ந்தவன், “என்னோட கம்பெனி லெவல்க்கு, ஒரு கிராமத்துல படிச்ச நீ கொஞ்சமும் செட் ஆக மாட்டன்னு உனக்கே இப்ப புரிஞ்சிருக்கும். நீ இப்போ வெறும் ட்ரைனர் மட்டும் தான் உனக்கு இங்க செட் ஆகலைன்னா நீ உடனே ரிசைன் பண்ணிட்டு போகலாம்?” என்று ஏதோ சிறந்த ஆலோசனை கூறுபவனைப் போல் கூறியவனை உணர்ச்சிகழற்று நோக்கியவளும்… ‘போடா நீயுமாச்சு உன் வேலையுமாச்சு’ என்று அங்கிருந்து பிய்த்துக் கொண்டு ஓடும் மனநிலைதான் இருந்தாள்.
அதிலும் காலை பத்து மணியிலிருந்து இதோ இப்பொழுது மாலை ஐந்து மணி வரை கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆதிக்கு பயந்து கருமமே கண்ணாக, கடிவாளம் கட்டிய குதிரைகளாய் சிறு பேச்சுக் கூட இடம் இல்லாது, அங்கு வேலை பார்க்கும் மற்ற ஊழியர்களைப் பார்த்து, ‘இங்கேயே தொடர்ந்து வேலை செய்தால் நாமும் நாளடைவில் இப்படித்தான் புன்னகை தொலைத்த முகமாய் மாறி விடுவோமோ?’ என்று எண்ணிய ராஹிக்கு இக்கணமே அந்த சென்னை மாநகரை விட்டு தன் பூஞ்சோலை கிராமத்திற்கு ஓடி, தன் தந்தையின் தோளில் ஆசுவாசமாக சாய்ந்து கொள்ளக் கூட உள்ளம் வெகுவாக ஏங்கியது.
ஆனால் தான் அப்படிச் சென்றால் தன்னோடு தன் இரட்டையும் அவள் ஆசையாகச் சேரந்திருக்கும் வேலையை விட்டு வர வேண்டிய நிலை ஏற்படுமே என்று எண்ணி பொறுமை காத்தவள்…
தன்னை அலட்சியமாக நோக்கும் ஆணவனின் கூர் விழிகளை அலட்டிக் கொள்ளாத பாவனையோடு ஏறிட்டு, “இல்லை சார் எனக்கு இங்க எல்லாம் ஸ்மூத்தா ஈஸியா தான் இருக்கு. நான் நான் சீக்கிரமே வேலைல பிக்அப் பண்ணிருவேன் சார்” என்று வரவழைக்கப்பட்ட இலகுக் குரலில் சொல்ல…
அதைக் கேட்டவனோ “ஆர் யூ ஜோக்கிங் ராஹித்தியா?” என்று பக்கென்று சிரித்தே விட்டான்.
ஆணவனின் அந்த எள்ளல் நகைப்பே,
‘நீ சொல்றது உனக்கே ஓவரா தெரியலையா?’ என்று கேட்டிருந்தும் அதை கண்டு கொள்ளாது நிமிர்ந்து நின்றவள், “இல்லை சார் நான் நான் சீரியஸாத்தான் சொல்றேன். நான் சீக்கிரம் வேலை கத்துப்பேன் சார்” என்று சொல்ல…
அவளை தலையூடு பாதம் பார்வை மாறாது நோக்கியவனும், “இட்ஸ் ஓகே ராஹித்தியா. நீயே இவ்ளோ கான்பிடன்ட்டா சொல்றப்போ நானும் உனக்கு ஒரு ஆபர் தர்றேன்” என்று நிறுத்தியவன்.
“இன்னிலயிருந்து பத்து நாள் இந்த ஆபிஸ்ல நீ எப்டி வேணா இருந்துக்கோ என்ன வேணா செஞ்சிச்சுக்கோ. ஆனா எண்ணி பதினோராவது நாள் நான் உனக்கு ஒரு சின்ன டெஸ்ட் வைப்பேன் சும்மா அக்கௌன்ட் பைல்ஸ் பாக்குற மாறி டெஸ்ட் தான். அதுல மட்டும் பாஸ் பண்ணிட்டேன்னா நீ இங்க கண்டினியர்சா ஒர்க் பண்ணலாம். இல்லின்னா….” என்று சற்றே நிறுத்தி விட்டுத் தொடர்ந்தவன்…
“அப்டி நான் வைக்கிற டெஸ்ட்ல பாஸ் ஆகலைன்னா நீயே இந்த வேலை எனக்கு செட் ஆகலைன்னு எழுதிக் குடுத்துட்டு உன் கிராமத்துக்கே ஓடிரணும். ஓகே வா?” என்ற ஆதியின் பேச்சில் அதிர்ந்த ராஹி “சார்” என்று அவஸ்தையாய் விளித்த சமயம் அந்த அறைக்கதவு மென்மையாகத் தட்டப்பட்டு உள் நுழைந்தான் அஸ்வின்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.