அதிகாலை ஐந்து மணி அந்த ஒத்தையடி பாதையில் பெண்கள் சிலர் தங்களுக்குள் ஏதோ குசுகுசுவென பேசியபடி நடந்து தெற்கே இருக்கும் தோட்டத்திற்கு செல்ல பின்னே வந்த கருப்பாயி , “ஏ பொன்னம்மா மருமகளே அங்க என்னடி வாயி சீக்கிரம் நடைய கூட்டுடி ஏற்கனவே தாமசம் ஆகிபோச்சு , நேத்தே வேலு தம்பி வெள்ளன வந்துர சொல்லி சொன்னகா.. இந்த கார்த்திய மாச குளுர்ல எந்திரிக்க முடியல தம்பி என்ன சொல்லுமோ இவ வாய் பேசி மெத்தனமா நடக்குறவ , போய் வாங்க தான் போறோம் அவன்கிட்ட…” என புலம்ப . அதற்கு ,
“அட! என்ன அயித்த நம்ம வேலு மச்சான் தான மேளுக்கு முடிலன்னு சொன்ன ஒன்னும் வைய மட்டாக…” என்று சொல்ல,
“என்னது நம்ம வேலு மச்சனா ஏத்தம் டி உனக்கு எல்லாம் என் மகன் குடுக்குற இடந்தேன்…”
அதற்கு அந்த பெண், “க்கும் இடம் தான அது கெடக்கு தெக்ககையும் , வடக்கையும் கிழக்கையும் நீ வேற ஏன் அயித்த உன் மகன் இடம் குடுத்த நான் ஏன் இந்த குளிர்ல வேலைக்கு வரேனாம் ”என நக்கல் பேச,
“அடி ஆத்தி ! இந்த செம்பட்டிகாரி வாய்க்கு நான் ஆள் இல்லத்தா என்ன விட்டுவிடு உன்கிட்ட என் அக்கா செக்கே செல்லலா நா எம்மாத்திரம்…” என கேலி பேசியபடி கத்தரிக்காய் தோட்டத்திற்கு வர அங்கு, தங்கவேலு மட்டும் தனியாக கத்தரி பறிக்க , பெண்கள் அனைவரும் பம்மியபடி மடி கூட்டி காய் பறிக்க ஆரம்பித்தனர்.
” எல்லாரும் எம்புட்டு வெள்ளன வந்துடிங்க இன்னும் கொஞ்சம் மெல்ல வர வேண்டி தான” என நக்கல் பேசியவன் ,
“ஏன் சின்னம்மா நேத்தே அம்புட்டு தரம் சொன்னேனே, வெள்ளன வந்ததுர சொல்லி இப்ப ஆடி அசந்து மெல்ல வாரீக ஆன காசு மட்டும் எண்ணி வங்கிடுக. நேரத்துக்கு லோடு ஏத்துன தானே எனக்கு காசு , ஏலம் விட்டுட உங்களுக்கு கூலி ஏது? இது ஆவது , பேசுனா கூலி இல்ல , குடுக்குறதா வாங்கிட்டு போங்க…” என்று கராராக பேசிட ஒருத்தரும் வாய் திறக்கவில்லை, அவசரமாக காய் பறித்து சாக்கு மூட்டையில் கட்டி லோடு ஏற்றி விட்டே ஓயிந்தனர்.
“லே சிவம், சிக்கிரம்ல ஏலம் போய்ர போவுது…” என அவனை விரட்ட , குட்டி யானை எடுத்தது வேகம் எட்டு மணிக்குள் ஏலம் முடித்தவன். பின் வேகமா வீட்டிற்கு வர அங்கு தங்கவேலு பெண்ணரசி வெளி வாசலில் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேகமாக வந்தான் வேலு .
அவள் பவித்ரா தங்கவேலு மகள். பத்து வயது ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். வேலு சென்று மகளிடம் , “ஆயி குளிச்சு ரெடி ஆகியாச்சா அரை மணி நேரம் வந்துறேன்…” என்று உள்ளே சென்றான்.
பின் நேரம் பறந்தது வேகமா உலை வைத்து சோறு வடித்து , கலை உணவகா என்ன இருக்கு என்று பார்க்க மாவு இல்லை ராத்திரி வாங்கிய பரோட்டா மட்டுமே இருக்க அதை பித்து போட்டு சால்னா சுடு பண்ணி ஒரு முட்டை சேர்த்து கலக்கி தோச கல்ல போட்டு ரெண்டு கொத்து கொத்தி கலை உணவக வைத்து விட்டு , மதியம் ரெண்டு வெங்காயம் ஒரு தக்காளி முட்டை சேர்த்து வதக்கி சுடு சோறு கொட்டி கிளறி முடித்தான். வேலுக்கு தலை பின்ன வராமல் போக மகளுக்கு எப்போதும் பாய் கட் தான் , அவசரமாக மகள் பவித்ராவை வண்டியில் ஏற்றி சரியான நேரத்தில் பள்ளியில் விட்டு வந்து தானும் குளித்து கிளம்பி ஆய கடையில் நாலு இட்லிய பிச்சு போட்டு தன் உணவை முடித்தவன், வாழைத் தோப்பு சென்று மத்த வேலை பார்க்க ஆரம்பித்தான் .
மத்தியான வெயில் மண்டைய பொளக்க கட்டுமான வேலை நடக்கும் இடத்தில் தலையில் வண்டுகட்டி செங்கல்லை அடுக்கி கொண்டிருந்தாள் சம்பூர்ணா . அப்போது அங்கு வந்த மேஸ்திரி ”இந்த புள்ள பூர்ணா மேல சிமெண்ட் மூட்டை கிழிஞ்சு சிமெண்ட் கொட்டி கெடக்கு அள்ளி தனியா வை “ என்று சொல்லி விட்டு போக , “இந்த வரேன் அண்ணா” என்று ஒதுங்க வைக்க சென்றாள்.
மேலே வந்த பூர்ணா கூட்டி அள்ளி ஒதுங்க வைக்க , வந்தார் மேஸ்திரி
“இந்த பூர்ணா உன் கிட்ட பேசணும்” என தயங்க ,
“சொல்லுங்க அண்ணா…”
“அது வந்துமா உன்ன பத்தி எல்லாம் கேள்வி பட்டேன் ரொம்ப வருத்தமா போச்சு , உன்ன மாதிரி நல்ல பொண்ணு எங்கயாவது பார்க்க முடியுமா ! உன்ன போய் ஒதுக்கி வச்சுட்டாங்க , உன் புருசன் அந்த படுபாவி நல்ல இருப்பனா… வயசான உன் அம்மா வச்சு நீ தான் பார்க்குற நோயாளி வேற பாவம் பூர்ணா நீ , உன்ன நெனச்சு மனசு வேதனையா இருக்குமா !…”
” அண்ணே ! நான் வாழ வெட்டிய வந்து ஆறு வருசம் ஆச்சு இப்ப வந்து கவலையா பேசுறீங்க…” என யோசனையாக பார்க்க,
“அது வந்து இப்பத்தான் உன் குணம் எவ்வளவு நல்ல குணம்னு தெரியுது பூர்ணா என வழிய…
“புரியலையே அண்ணா எதையும் தெளிவா சொல்லுங்க…”என மேலும் ஊக்கினாள்.
“அது வந்துமா என்று இழுத்து இனிமே உன் எல்லா தேவைக்கும் நானே வரேன் , உன் அம்மா பத்தி எல்லாம் கவலை படாதே அதுக்கும் நான் செய்றேன் நீ என்னைய மட்டும் தனியா கவனி போதும்…” என்று குழைந்து பார்வையால் அழைக்க புரிந்து விட்டது. பூர்ணாக்கு , இந்த ஆறு வருடத்தில் எவ்வளவு பார்த்திருப்பாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.