மதிய உச்சி வெயிலில் தலையில் துண்டை போட்டு புளிய மரத்தின் அடியில் நின்று காத்து கொண்டு இருந்தாள் பூர்ணா. கையில் தூக்கு மற்றும் கொத்து களை இருக்க, பார்த்தாலே தெரிந்தது வேலை முடித்து நிற்கிறாள் என்று… அந்த நேரம் கரும்பு காட்டிற்கு செல்ல வண்டியில் வந்த வேலு , இவள் நிர்ப்பதை பார்த்து அருகில் செல்ல,
“ஏட்டி! மத்தியான வெயில இங்க நிக்குறவ அதுவும் புளிய மரத்துக்கு கீழ பயமில்லையா? போம்ல நேரமா வீட்டுக்கு…”என ஒரு அதட்டல் போட,
அதை அசட்டை செய்து “ உன்ன பாக்க தான் வந்தேன் வேலு ஒரு முக்கியமான சோலிலே…” சொன்னவள் சுத்தி முத்தி பார்த்து யாருமில்லை என கண்டு அவன் கிட்ட போக,
வேலுக்கு ஒரு மண்ணும் புரியல இவளின் செயல் எதுவும்… சம்முக்கு கோபத்தை இழுத்து புடிக்கவெல்லாம் தெரியாது. அந்த நேர கோபம் அப்போது மட்டுமே…பின் சுமுகமாகி அவளே வந்து பேசி விடுவாள். இப்போது யாருக்கும் தெரியாமல் தன்னிடம் பேச என்ன இருக்கு,
வேலு கரும்பு காடு இருப்பது சுடுகாடு போகும் பாதையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடம். இங்கு வந்து பேசுவது என்றால் விசயம் பெருசோ என யோசனையாக “ஏட்டி, ஏதுவும் பஞ்சாயத்தா? யார்டையும் ஓரண்டை இழுத்து பெரிசாகி போச்சா, என்னாலே விவரம்…”
சம்முவோ அவனை முறைத்து,
“நான் காரியமா எதுவும் பேச மாட்டேனா, வம்பு தும்பு மட்டும் தான் இந்த சம்மு பேரு இருக்கோ…”என தலைய சிலுப்ப,
“விவகாரம் இல்லமைய என்னிய தனியா பாக்க வருவ! …” கேட்ட வேலுக்கு,
“விவகாரம் தான் ஆன நீரு நினைக்கிறது இல்லவே … இது வேற நம்மூர் பால்வாடிக்கு ஆய வேலைக்கு ஆள் எடுக்குறாங்களே… அந்த வேலைக்கு என்னிய சேக்கணும். நீ தாம்லே எப்படியாவது என்ன உள்ள தள்ளிடனும்…”
“ஏட்டி! நான் என்ன அரசாங்கத்து ஆள, பஞ்சாயத்தார் வீட்டுக்கு போயேன்…” என்க
“ஏலே வேலு , நான் எல்லாம் விசாரிக்காமையாலே இருப்பேன். எல்லாம் பார்த்தாச்சு அந்த பஞ்சாயத்தார் வேற நெனைக்குறாங்க, ஒன்னுக்கும் வக்கு இல்லாது நான் ஆய வேலைக்கு போறேன்… இருக்க பட்டவங்களுக்கு என்னவவே… இதுக்கும் போட்டின எப்பிடிலே.. நீயே சொல்லுவே விதவை , கைம்பெண் தான் முன்னுரிமையாம். ஆன இப்படி ஒன்னு இருக்குனே இப்பதாம்லே தெரியும். எங்க வறுமைய போக்கத்தான் இந்த வேலையே இதுக்கும் துட்டுன எங்க போறது நாங்களாம்… அப்புராணி சொல்லு அம்பாரி ஏறுமா நீரு பெரிய சம்சாரி உம்ம பேச்சு எடுபடும்லே… பார்த்து ஏதுன பண்ணுவே உமக்கு புண்ணியமா போகும்…”
“ஏட்டி நீ செய்ன செய்ய போறேன். எதுக்கு இம்புட்டு கெஞ்சுறவ… எனக்கும் ஒரு விவரமும் தெரியாதுலே இருந்தாலும் என்ன ஏதுனு கேட்டு சொல்றேன். நீ பார்த்து வீட்டுக்கு போவே , எதுக்கும் வெள்ளென தயாராகி இரு நாளைக்கே முடிச்சு புடுவோம்…” என வேலு புறப்பட,
“நீ சொன்ன சரிதாம்லே” என சந்தோசமாக தலையாட்டி சென்றாள் சம்மு.
மறுநாள் காலையிலே வேலு வந்துவிட்டான் கையில் வேலைக்கான விண்ணப்பத்தோடு ,
“ஏட்டி இங்க ஒன்னும் கதையாவது நம்ம நேரா மதுரை கலெக்டர் ஆபீஸ் போய்ருவோம். தெரிஞ்ச ஆளு இருக்க பார்த்துகிடலாம். நான் போய் கார் எடுத்தாரேன்…” என்று கிளம்பியவனிடம்,
“ ஏலே… நமக்குள்ள நல்ல பழக்கம் இருக்கு காசு போக்குவரத்து வேணாம். எந்த நல்ல உறவும் காசுல தான் தகராறு ஆகும். உதவி கேட்டேன் உதவி செய் அத்தோடு போதும். அப்புறம் எதுக்கு உங்காரு, என் தேவைக்கு எதுக்கு உனக்கு செலவு , எனக்காக நீ வந்த உன்னிய நாந்தேன் பார்க்கணும். உம்ம பவுசு உன்னோட எனக்கு வேணாம் என்று நிறுத்தியவள்,
“ஆமா , ஒன்னு கேக்கேன் உம்மட அம்மையோ , பொண்டாட்டியோ இருக்க எமக்காக கார் எடுக்க கை வருமாங்குறேன்…” என சம்மு கேட்க
வேலு தடுமாறித்தான் போனன், அவனின் கல்யாண கறி விருந்தில் வெளியே சாப்பாடு பந்தியில் கூட்டமென்று வீட்டிற்குள் சோட்டு பெண்களோடு சாப்பிட அமர்ந்தவளை இலை போட்டு அரை மணி நேரம் ஆன பின்னும் சோறு போடாமல் இருக்க,
கொடி தான் அவள் வாய் திறந்து தன்னிடம் சோறு கேட்க வேணும்னு பந்தியில் அவளை மட்டும் ஒதுக்கி வைத்தார். பதினாலு வயதிலேயே அவ்வளவு ரோசம் பார்ப்பாள். மறு பேச்சில்லாமல் பச்சை இலையை மூடி எழுந்து விட்டாள். பின் வேலு எவ்வளவு மன்னிப்பு கேட்டும் அவள் மனது ஆறவே இல்லை. அமர்ந்த எல்லார் இலையிலும் கறி விருந்து இருக்க தான் வெறும் இலையோடு அமர்ந்ததை என்றேனும் மறக்க இயலுமா…
பழைய நினைவில் வேலு குன்றி போனான். வீட்டளவில் கறி விருந்து, தன் அழைப்பின் பேரில் மட்டுமே வந்தவள். அவளை தான் தானே கவனிக்க வேண்டும் வெறும் வயிற்றோடு போகும் போது அவள் மனம் என்ன பாடுபட்டுச்சோ! நினைக்க நினைக்க நெஞ்செல்லாம் வலித்தது.
அவன் முகத்தில் வேதனையை கண்ட சம்மு தன்னையே நொந்து கொண்டாள். முடிந்ததை பேசி என்ன நியாயம் பெறுவாள் கொடியே சென்ற பின்… தன்னை சாமளித்தவளாக வேலு கிட்ட
“ஏலே உம்மட கார் எனக்கு வேணாம் பஸ்ல போலாம்…”
தன்னை சுதாரித்து நிமிர்ந்த வேலு,
“ஏட்டி எப்படியும் ரெண்டு மணி கிட்ட ஆவும்ல, போயிட்டு வந்துரலாங்ரையா?
“டவுன் பஸ்ல போலம்ல சீக்கிரமா போய்ரலாம். அம்புட்டு ஒன்னும் நேரம் செல்லாது…”
சம்மு யோசனைப்படி இருவரும் பஸ்ஸில் சென்றே வேலையை முடித்தனர், வரும் வழியில் ஒரு ஓட்டலில் உணவு முடிக்க காத்திருந்த நேரம் , சம்முவை நோக்கி ஒரு பெண் வேகமாக வந்தாள்.
“ஏ யாத்தே , பூர்ணா நீதான புள்ள உன்னை நேர்ல பாப்பேனு நெனச்சு கூட பார்க்கல… எப்படி இருக்க, எம்புட்டு வருசம் ஆச்சு உன்ன பார்த்து எப்படி ஒன்னு மண்ண பழகினோம். ஒரு நிமிசம் மறந்துட்டே? என்று சொல்லி அவளை கை ,முகம் எல்லாம் தொட்டு பார்க்க ,
அவரை பார்த்து சிரித்த சம்மு,
“கவிதா அக்கா எப்படி இருக்கிய… மாமா, புள்ளைக எல்லாம் நல்ல இருக்காங்களா? உங்கள பார்ப்பேனு நானும் நினைக்கல சந்தோசம் தான். ஒரு சோலிய மதுரா வர வேண்டியதா போச்சு…” என்று விளக்கம் கொடுக்க
“உங்க மாமா கிட்ட எப்பவும் உன் பேச்சு தான் எப்படி வாழ வேண்டிய புள்ள, இந்த ஆள் கிட்ட மாட்டி சீரழிஞ்சு போச்சுன்னு ரொம்ப வருந்துவாக…”
வேலுக்கு அவர்கள் பேசியத்தில் தெரிந்தது சம்மு புருசன் வீட்டு உறவு என்று ஏதும் சொல்லாமல் அமைதியாக பார்த்தான்,
கவிதவே கொஞ்சம் குரலை தாழ்த்தி, “ஏய் புள்ள உன் நாத்துனா அந்த நாலு சிரிக்கிகளும் பெறும் பஞ்சாயத்து.. சொத்து ஒரு பைசா கெடையதாம் எல்லாம் அனாத ஆசரமத்துகாம். இவளுக என்னென்னவோ பண்ணி பார்த்தாலும் ஒன்னும் கதை ஆவள , அந்த வீடு கூட அவளுகளுக்கு இல்லையாம். உன்ன எவ்ளோ பாடு படுத்தினாளுக இந்த சொத்துக்கு தானே, இப்ப பாரு கை பிடி மண்ண அல்ல முடியுமா! உனக்கு செஞ்சதுக்கு தான் இப்படினு எல்லாரும் பேசிகிராங்க…”
பூர்ணா ஒன்றும் சொல்ல வில்லை. இன்று நியாயம் பேசுபவர்கள் அன்று எங்கே போனார்கள் கை கட்டி வேடிக்கை அல்லவா பார்த்தார்கள்.
கவிதவே மேலும், “ ஏன் பூர்ணா உன் புரு ம்ம்… அந்த ஆளு செத்ததுக்கு கூட வரலயே , அம்புட்டு வைராக்கியமா இருந்துகிட்டயாக்கும்…” என்று வினவ,
திகைப்பாக சம்முவை பார்த்தான் வேலு. அவனுக்கு இது ஏதும் தெரியாதே…
ஏதோ சண்டை அத்து விட்டாச்சு அவ்ளோ தான் தெரியும். மத்த விவரமெல்லம் சம்மு ஒரு நாளும் சொன்னதில்லை. அந்த ஆளு எப்படி செத்தான் தெரியலையே ?
வேலு நேராக கவிதவிடமே கேட்டான்,
‘ஏன் அக்கா எப்படி செத்தாக சம்மு…” என தடுமாறினான் என்ன சொல்ல ?
கவிதவிடம் தயக்கம் எல்லாம் இல்ல.
“அம்பத்து நாலு வயசாச்சி, அத்தன நோயிம் இருக்க போய் சேரதான வேண்டும். கொஞ்ச நஞ்ச பாவம் செய்னும். ஆண்டவன் சோலிய முடிச்சுட்டான்..” என்று சொல்ல
தடுமாறி கைகளால் தன் நெஞ்சை பிடித்து சம்முவ பார்த்தான் .
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.