“ஏ பூர்ணா , இனி தள்ளி நிக்காத. இது தான் என் நம்பர் அப்பப்ப போன் பண்ணு, நேரமாச்சு உன் மாமா வந்துருவாக நான் போறேன்…” என்று கவிதா கிளம்ப ,
அவளையே பார்த்துக் கொண்டிருந்த வேலுவை அசட்டை செய்து தன் போக்கில் உணவை உண்ண,
“ஏட்டி! இப்பவாது என்ன நடந்தது சொல்லுவே நெஞ்சு அடிச்சுகுது. ஒன்னும் தெரியாம நான் கேடக்கென். திடுதிப்புனு அய்யா மாரடைப்புல போய்டாங்க, பவி பிறந்த சமயம் எல்லாம் நாந்தேன் பார்க்கணும். கல்யாணம் தெரியும் தான் எப்படியோ அவ பொழப்ப பார்த்து நல்ல இருக்கட்டும்னு நெனச்சேன்…” என்று பெருமூச்சு விட்ட படி
“இல்லவே, நீ செஞ்சது தான் சரி. தாமரைய சாடவு சொல்லாத, எல்லா பொண்ணுகளும் அப்படித்தான். தன்ன மட்டுமே புருசன் சுத்தி வரணும் , தன்னுடைய பேச்சுக்கு மதிப்பு குடுக்கணும், தன்னை தாண்டி யாரையும் பெருசா நினைக்க கூடாத இப்படி எல்லாம் ஒவ்வொரு பொண்ணுக்கும் கனவு இருக்கும். நானும் அப்படி தான். நீ சும்மா அவ கிட்ட சொம்பு இப்படி , அப்படினு அளந்து விட்றுப அது அவள தூண்டி விட்ருசு. சும்மாவே உங்க அம்மைக்கு நான்ன நாட்டு வெல்லம் மருமகளுக்கு அவங்களும் கொஞ்சம் ஒத்து ஊத என்ன நீ ஊதி தள்ளிட…”
அவன் முகம் சுருங்கி போனது. சம்முவோ அவனிடம்,
“ஏம்ல மூஞ்சிய சுறுக்குற நெசந்தனே. ஆன இதாம்லே நிதர்சனம். எந்த ஆம்பிளைக்கும் அவன் குடும்பம் தான் முதல்ல. அந்த குடும்பத்தில அம்மா, பொண்டாட்டி, புள்ளைக்கு தான் இடம் நட்புக்கு இடம் இருக்காது. நீ உன் குடும்பத்துக்காக என்ன ஒதுக்கி வச்சதுல துளி கவலை இல்லை.நீ யோசிச்சு பாரு உன் அம்மையும் பொண்டாட்டியும் என்னிய வேண்டாம்னு சொல்லியும் நீயி என் கூட பழகி இருந்தா, அது தம்லே தப்பா போருக்கும். இதுக்கு நீ வெசன படவேண்டிய அவசியம் இல்லவே…”
வேலு மனம் வேதனையடைந்தது ஏன் தங்களை யாரும் புரிந்து கொள்ள வில்லை.
மதுரை சென்று வந்து ஒரு வாரம் கடந்த நிலையில், வேலுக்கு யோசனை எல்லம் சம்முவே. அன்று அவளிடம் எப்படி கேட்ட போதும் தன் கல்யாண வாழ்வு பற்றி வாய் திறக்கவில்லை. வெளியே விசாரிக்கலாம் தான். ஆனால் உண்மை பாதிக்க பட்டவரிடம் அல்லவா கேட்க வேண்டும்.
அதனால் தான் வள்ளி அத்தைய கோவிலுக்கு வர சொன்னான் வேலு, சரியான நேரத்திற்கு அவனும் வந்து விட அவனுக்கு முன்னமே வள்ளி வந்து காத்திருந்தார். அது ஒரு ஐயனார் கோவில் வேலு வீட்டு குலதெய்வம்.
“ வாங்க அத்த, வந்து ரொம்ப நேரம் ஆச்சா” ? என்க.
“அதெல்லாம் ஒன்னும் இல்லவே என் பேத்தி எப்படி இருக்கா?… வேற எதுவும் முக்கியமான சோலியா வேலு? என்னிய மட்டும் வர சொன்னலே… மயிலுக்கு தெரியாம நம்ம என்னத்தவே பேசுறது?… என வள்ளி கேட்க
சிறிது நேரம் அமைதி காத்தவன், பின் தன்னை நிலைப்படுத்தி மெதுவாக பேச ஆரம்பித்தான்.
“ அத்த நான் இப்ப கேக்குறது சரியில்லதான். எனக்கு நான் நியாயம் சொல்லவும் மாட்டேன். சம்மு இந்த கதிக்கு நானும் காரணமோனு நெஞ்சு அடிச்சுகுது. அன்னிக்கு நான் தள்ளி போனது சுயநலம் தான். யாரையும் என்னாலே சரிக்கட்ட முடியல. எங்க அம்மை ஆட்டமும் எல்லை இல்ல கூட தாமரையும்… ஒன்னும் முடியாமத்தான் ஒதுங்கி போனேன். வீட்டு அமைதிக்கும், எங்க அம்மை பேச்சுல இருந்து சம்முவ காக்கவும்தேன்”
வள்ளி மறுத்து ஒன்னும் சொல்லாமல் வேலுவையே பார்த்து கொண்டிருந்தார். அவர் மனம் வேற ஏதோ சொல்ல துடித்தது.
தொடர்ந்து வேலு பேசினான், “இன்னிக்கு எல்லாம் தப்ப போச்சு “ சொல்லும் போதே தொண்டை அடைத்தது “சம்மு நிலை கண்டு இனி என்னனு ஒரு விளக்கமும் இல்ல. ஆன ஏதாவது பார்த்து பண்ணனும் அதுக்கு நீங்க தான் வழி காட்டனும் “?
“என்ன ஆச்சு அத்த. அந்த கோட்டி கழுத கிட்ட இருந்து ஒன்னு வாங்க முடியல. எப்படி கேட்டாலும் ஏதேதோ பேசி மாத்திபுடுறா… விவரம் தெரியாம நானும் என்னத்த பண்ணுவேன். இனியும் எதுவும் தப்பாகி போய்ட கூடாது. என்னிய நம்பி சொல்லும் அத்த…” என வேலு மன்றாடும் குரலில் கேட்ட பின்னும்.
வள்ளிக்கு தன் மகள் அந்தரங்கத்தை வெளியில் சொல்ல விரும்பவில்லை சம்முக்கும் பிடிக்காது. வேலு தான் சம்முக்கு நெருக்கம். ஆனால் வேலுவிடம் கூட அவள் சொல்ல வில்லை எனும் போது தான் மட்டும் ஏன் சொல்லனும் வேண்டாம். இந்த பேச்சை அவர்களே பேசி தீர்க்கட்டும் என முடிவெடுத்தவர்.
பின் ஐயனார் சாமி சிலை பார்த்து கை கூப்பி வணக்கியவர். கண் திறக்கும் போது கண்கள் நீரால் நிறைந்து இருந்தது. பெரும் விம்மலுடன் வேலு கை பற்றியவரை ,
அதிர்ச்சியாக பார்த்த வேலு, ஏதோ சொல்ல தடுமாறி நின்றவரை தாங்கி பிடித்தவன்,
“என்ன அத்த என்னாச்சு எதுக்கு அழுகை, என்னனு சொல்லுவே எதுக்கு இந்த மூடுமந்திரம்”? விவகாரம் பெருசோ என்று பயத்தோடு கேட்டவனிடம்
வந்த அழுகையை அடக்கிய வள்ளி, அவன் முகம் பார்த்து “என்னிய மன்னிச்சிடுலே வேலு ! பாவி நானு வாக்கு விட்டு உன்னிய ஒத்த மரமா நிக்கவெச்சுடேன். இந்த பாவம் தான் என் தலையில நிக்குதுலே”என கைகளால் தலையில் அறைந்து அழுதவரை,
அதிர்ந்து பார்த்தவன் “என்ன அத்த சொல்றிக புரியும் படி சொல்லுக! ….” நெஞ்சம் படபடத்து போனது அவனுக்கு
வள்ளி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவர் விம்மலுடனே நடந்ததை சொன்னார்.
வீட்டோராம் கிடந்த பந்தலில் பூத்த மல்லிகைய நெருக்க தொடுத்த வள்ளி, ஒரு பையில் வைத்து கிளம்பினார் வேலு வீட்டிற்கு… நேத்து தான் தாமரைக்கு வளைகாப்பு முடிந்தது கூட்டத்தில் செல்லாமல் மறுநாள் பார்க்க சென்றார் கையில் பூ பந்துடன்…
வேலு வீட்டு திண்ணையில் கொடியும் , தாமரையும் பேசி கொண்டிருப்பதை கண்டவர், அவர்களை நெருங்க தன் மகள் பேர் அடிபடுவதில் அப்படியே நின்றார்.
பட்டு சேலை சரசரக்க ஒன்பது மத நிறை வயிருடன் முகம் எல்லாம் பூரிக்க நின்றவளிடம் வந்த கொடி , “ ஏட்டி! கோவிலுக்கு போரீக மேக்கு தெரு வழியா போகாதிக, அந்த சித்ராங்கி அங்கனதான் வீடு.. உன் புருசன் பத்தி தெரியும்ல நான் சொல்லியே கேட்காதவன் உன் வயித்த பார்த்து தான் அடங்கி போறான். அப்படியே சரிகட்டிபுடு, இல்ல அந்த சிரிக்கி தான் தொட்டத்துக்கு எல்லாம் நீ அடுத்து தான் அவனுக்கு…”
மாமியாரும் மருமகளும் பேசுவதில் இருந்தே தன் மகளை பற்றி தன் சொல்கிறார்கள் என அறிந்த வள்ளிக்கு வேதனையாக இருந்தது.
“ரோசாகாரிதான்லே, வேலு விசேசத்துக்கு சொல்லானவும் வைராக்கியம வராம இருந்துகிட்டா… ஆத்தாளும், மவளும் வெளி திண்ணையில் தான் எப்பவும், நீங்க பாட்டுக்கு அந்த வழிய போன கண்ணடி படும்”
கேட்ட வள்ளிக்கு நெஞ்சு கொதித்தது தங்களை பற்றிய எண்ணம் இது தான என்று,
அத்தோடு நிறுத்தாமல் மேலும் வார்த்தைகளை அள்ளி வீசினார் கொடி திரும்ப அள்ள முடியாத படி.
“ஏட்டி தாமர, சின்னத்திலே அவள நான் வீட்டுக்குள்ள சேக்கமாட்டேன் ஒதுக்கிதான் வைபேன். இந்த வேலு பையன் தான் சம்முன்னு அவ பின்னாடியே திரிவான். அவ ஒரு ராசிகெட்டவ நல்ல பொறப்பு வாங்கி வரல”
கொடி பேசியதில் உடன்படாத தாமரை, “அச்சோ அத்த அப்படி பேசாதீங்க இது தப்பு. எனக்கும் சம்முவ புடிக்காதுதான் அதுக்காக ஒரு பொண்ண என்னவும் பேசலாமா”….
தன் பேச்சை நிலைப்படுத்த அடுத்து கொடி சொல்லிய வார்த்தை எல்லாம் வேலு தலையில் தான் நின்றதோ ! யாருக்கு தெரியும் அந்த அங்காள ஐயனை தவிர,
“ ஏட்டி! நான் என்னத்த இல்லாததையா சொல்லிபுட்டேன் நெசம் தான்டி… அவ பொறந்ததும் கையளவு காட்ட வித்தாக, அஞ்சு வயசிலேயே அப்பன் செத்துடான், கூட பொறப்பு ஒன்னு இருக்கா , இல்ல சொந்தம் சொல்ல தான் ஆள் இருக்க”,
“ அவ அம்மையாவது கன்னினு இல்லாம ஒருத்தனுக்கு வாக்க பட்டா இவ வாய்க்கு அந்த யோகமும் இருக்காதுலே காலத்துக்கும் கன்னி தான் அவ அம்மை துணைக்கு” என்று வன்மாமாக உரைத்தவரை பார்க்கைகயில்,
தாமரைக்கே பயம் வந்தது ஒருவரை புடிக்க வில்லையென்றால் அவர்களை அடித்து வீழ்த்த என்னவும் சொல்வார் போல!
அத்தோடு நிறுத்தாமல் சம்மு மேல் உள்ள கோபத்தை எல்லாம் கொடி வார்த்தைகளாக வீசினார், “நம்ம வேலுக்கு ஆறு மாசத்துக்கு தான் இவ இளமை ஆன என் புள்ள ஒரு புள்ளைக்கு தகப்பனாக போறான்…” என்று பெருமையாக சொன்னவர்,
பெற்ற வயிறு பற்றி ஏறிய கொடிய சும்மா விடும் எண்ணமே வள்ளிக்கு இல்லை. அவ்வளவு ஆக்ரோஷம் அவர் கண்ணில்…
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.