வினயனிடமும் நசீரிடமும் அன்றையை வேலைகளை சொல்லிவிட்டு, பிரதாபன் வெளி வேலையாக சொல்ல, பொன்னச்சன் பேத்திக்கு இந்த வரன் நல்லபடியாக அமைய வேபிரதாபன் அன்றிரவு ஒன்பது மணி போலத்தான் வீடு வந்தான். பொன்னச்சன் உறங்கச் சென்றிருக்க, காலையில் அவரிடம் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தான். இரவு உணவு பரிமாறக் காத்திருந்த தங்கையிடம்
“எந்தா மினி?” என்று அவள் முகம் பார்த்தான்.
மின்மினி பதில் பேசாது அவனுக்கு உணவை பரிமாறினாள்.
“மினி!” என்று அவன் குரல் உயர்த்த, தங்கை முறைத்தாள்.
அவள் கேட்காமலேயே, “அம்மாவைப் பார்க்க வரணும்னுதான் நினைச்சேன், ஆனா எனக்கு வேலை இருந்தது, அதனாலதானே நான் வினயனோட உன்னை அனுப்பினேன், வேலை முடியல உன்னிமா. அம்மா கிட்ட போன்ல பேசிட்டேன்” என்று பிரதாபன் விளக்கம் சொல்லிவிட, மின்மினியும்
“ஒகேயேட்டா” என்று சமாதானமானாள்.
“பின்னே வினயன் பத்திரமா வந்தானா? வேகமா டிரைவ் பண்ணினானா?” என்று விசாரித்தான். வீடு வந்து சேர்ந்ததுமே வினயன் பிரதாபனுக்கு அழைத்துச் சொல்லியிருக்க, மின்மினிக்கும் அப்போதே அழைத்துப் பேசியிருந்தான். மீண்டும் கேட்ட அண்ணனை பார்த்த மின்மினி புன்னகை முகத்தோடு
“பத்திரமா கொண்டு வந்துவிட்டார், உங்களை விட ஸ்லோவா டிரைவ் பண்ணினார்.” என்றதும் பிரதாபன் தலையசைத்து உண்டான். மலைப்பிரதேசமான இடுக்கியில் வண்டியோட்டி பழகிய வினயன் வாகனத்தை எப்போதும் வேகமாக செலுத்த மாட்டான், அதை அவன் சொல்லியிருந்தாலும் பிரதாபனுக்கு ஒரு கவலை.
உண்டு முடிக்கவும், பிரதாபன் தங்கையிடம் நாளை அவளைப் பெண் பார்க்க வரப்போகும் விஷயத்தை சொன்னான். மின்மினி இந்த செய்தியை எதிர்ப்பார்க்காதவள் சில நிமிடங்கள் திகைப்போடு தன் ஏட்டனைப் பார்த்தாள்.
முதுகலை படிப்பு இந்த மாதத்தோடு முடியப்போகிறது, எப்படியும் இதற்குமேல் அண்ணன், தன் திருமணத்தை தாமதிக்க மாட்டான் என்று தெரிந்தாலும் அந்த நொடி மின்மினிகுட்டி அதிர்ச்சி விலகாது பார்த்தாள். அந்த பார்வையை உணர்ந்த பிரதாபனுக்கு வருத்தமாக இருந்தது, தங்கையைப் பிரிந்து எப்படியிருக்கப் போகிறோம் என்று அவனுக்கும் கவலை, குடும்பம் என்றால் அவன், தங்கை, அச்சச்சன் தானே? உள்ளுக்குள் இருந்த மறுகலை வெளிக்காட்டாது, அந்த வரன் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்தவன், தன் அலைப்பேசியில் புகைப்படம் காட்டினான்.
“இஷ்டமில்லெங்கில் பறயோ உன்னிமா” (இஷ்டமில்லன்னா சொல்லு) என்று தங்கையிடம் சொன்னான்.
“ஏட்டனுக்கு இஷ்டமாயால் எனிக்கும் இஷ்டமானு” (அண்ணனுக்குப் பிடிச்சா எனக்குப் பிடிக்கும்) என்ற தங்கையின் பதிலில் நெகிழ்ந்தாலும், இன்னும் பொறுப்பாக உணர்ந்தான்.
நாளை தயாராக தங்கைக்கு எதாவது தேவைப்படுமோ என்றெண்ணி, “உன்னிமா! எந்தெங்கிலும் வேணோ?”(எதாவது வேணுமா?) என்று கேட்டான்.
அவள் அறையின் சாளரம் வழியே இரவுக்காற்று அறைக்குள் நுழைய, இருளோடு சங்கமித்த காற்று மின்மினிகுட்டியைத் தீண்டியது. காற்றிலாடிய கூந்தலை காதோரம் ஒதுக்கியவளுக்கு, அண்ணன் சொன்னதே மனதில் ஓடியது. திருமணம் குறித்த எதிர்ப்பார்ப்பு அவளுக்கிருந்தது, கூடவே பயமும். யாரோ ஒருவர் வீட்டில் போய் எப்படி வாழப்போகிறோம் என்ற அச்சம் பரவினாலும், எனக்கென்று ஒரு துணை எல்லாமுமாக என்ற எண்ணமும் ஒருங்கே எழுந்தது.
பிரதாபன் காட்டிய புகைப்படத்திலிருந்தவனை நினைவு கூற பார்க்க, ஒரே பார்வைக்கெல்லாம் பதியவுமில்லை, மயங்கவுமில்லை மின்மினிகுட்டி. அந்த இரவு பல்வேறு எண்ணங்களோடு மின்மினிகுட்டியை உறங்கவிடாமல் செய்ய, அதிகாலை அலாரம் வழக்கம்போல் எழுப்பிவிட்டது. அன்று கல்லூரி விடுமுறை என்பதால், அவள் மற்ற வேலைகளைப் பார்த்தாள். அது தெரிந்துதானே பிரதாபன் பெண் பார்க்க வர சொன்னான்.
பிரதாபன் அன்று களரி பயிற்சி முடிந்து வர, எப்படியாவது அவனிடம் பேசிவிட வேண்டும் என்று வினயச்சந்திரன் தயாராக நின்றான். பிரதாபனையும் தாரிணியையும் பேச வைத்தால் போதும், தாரிணி மனதினை பேச ஒரு வாய்ப்பினை எதிர்ப்பார்க்க, அந்த வாய்ப்புதானே அவளுக்கு வாய்க்கவில்லை.
பிரதாபன் களரி பயிற்சி முடித்து வந்தவன் வினயச்சந்திரனிடம், “வினயா! வாசல்பக்கம் இருக்க குப்பையெல்லாம் சுத்தம் பண்ணிடு, எல்லா இடமும் சுத்தமா இருக்கணும். இன்னிக்கு மினியைப் பொண்ணு பார்க்க வராங்க, மதியம் மேல வருவாங்க, கூல்ட்ரீங்க்ஸ், ஸ்நாக்ஸ் எல்லாம் நான் சொல்ற இடத்தில இருந்து வாங்கிட்டு வா. புரிஞ்சதா?” என்ற பிரதாபன் குரலில் பொறுப்புத் தந்த பதட்டமிருந்தது, அதெல்லாம் கடைக்குட்டி வினயனுக்குத் தெரியவில்லை.
ஆனால் தங்கையின் திருமணம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பிரதாபனிடம், அவன் திருமணம் பற்றி இப்போது பேசினால் சரியாக இருக்காது என்று வினயச்சந்திரனுக்குத் தெரிந்தது.
“சூப்பர் சேட்டா! நான் பண்ணிடுறேன்” என்றான் புன்னகையுடன். தாரிணி அன்று களரிப்பயிற்சிக்கு வரவில்லை, வினயனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி பிரதாபனிடம் பேசிவிட்டானா என்று கேட்க, வினயன் பிரதாபன் வெளியே சென்றதும், அவனும் தனியே சென்று தாரிணிக்கு அழைத்துப் பேசினான்.
“நான் அவர் கல்யாணம் பத்தி பேசலாம்னு ப்ளான் பண்ணி போனா, அவர் தங்கச்சி கல்யாணத்துக்குப் ப்ளான் பண்ணிட்டு இருக்கார். மின்மினியை இன்னிக்கு பொண்ணு பார்க்க வராங்களாம்.” என்றதும் தாரிணி சந்தோஷமாக
“ஹே! சூப்பர்டா, மினிக்குக் கல்யாணமா?” என்றாள்.
“ம்ம், அதுவும் நல்லதுதான்! அந்த பொண்ணுக்கு ரூட் க்ளியர்னா பிரதாபன் அவரைப் பத்தி யோசிப்பார்ல, இன்னிக்கு நல்லபடியா மின்மினிக்குக் கல்யாணம் பிக்ஸ் ஆகிடணும்னு நான் வேண்டிக்கிறேன்”
“பார்டா! அவ்வளவு நல்லவனா நீ?” என்று தாரிணி கிண்டலாகக் கேட்க
“அய்யோடா! மின்மினிக்குக் கல்யாணம் பிக்ஸ் ஆகிட்டா, சேட்டா உன்னைப் பத்தி யோசிப்பார்ல, இன்னிக்குப் பேசலாம்னு பார்த்தேன். அவர் டென்ஷனா இருந்தார், சரி ஒரு நாள்தானே? இன்னிக்கு நல்லபடியா முடிஞ்சிடுச்சுன்னா நாளைக்கே நீங்களும் என் தோழிக்கு வாழ்க்கைக் கொடுங்கனு பிரதாபன் கையைப் பிடிச்சி கெஞ்சிக் கேட்டுட மாட்டேன்” என்றான் வினயன்.
“நக்கல்டா உனக்கு!” என்று தாரிணி திட்டி
“நீ சொல்றதும் சரிதான் வினய், மின்மினி இருக்கும்போது அவரை பத்தி யோசிக்க மாட்டார். நீ ஒன்னும் கெஞ்ச வேண்டாம், ஜஸ்ட் நானும் அவரும் தனியா பேச ஒரு இருபது நிமிஷம் இருந்தா போதும்.” என்றாள்.
“இரண்டு நாள் பார்ப்பேன் இல்லன்னா கடத்தல்ல இறங்கிடுவேன்” என்று வினயன் சொல்ல, தாரிணி சிரித்தாள்.
“பின்ன என்ன? என் ப்ரண்ட்கிட்ட பேச ஒரு டென் மினிட்ஸ் ஒதுக்க மாட்டாரா அவர்?” என்று வினயன் சிடுசிடுத்தான்.
“விடுடா, நாளைக்குப் பார்ப்போம்” என்று தாரிணி சொல்ல, வினயன் அமைதியானான்.
ண்டும் என்று கோவிலுக்குச் சென்றார். பிரதாபன் அன்று மதிய உணவுக்கு வர மாட்டேன் என்றுவிட்டான். பொன்னச்சனுக்கு வெளி உணவு ஒத்துக்கொள்ளாது என்பதால், தங்கையை எளிமையாக சமைக்க சொன்னான்.
சமையல் மட்டுமே அவள் பொறுப்பு, பாத்திரம் கழுவ, மற்ற வீட்டு வேலைகள் செய்ய ஆள் உண்டு. அன்று சமையல் வேலையும் பெரிதாக இல்லை, வார்த்தையால் இன்னதென்று வரையறை செய்ய முடியாத ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது. திருமணம் என்றால் அது வேறொரு வாழ்க்கை, அவள் வீடு போல் இருக்காது, அங்கே எப்படி இருப்பார்கள்? என்ற எண்ணங்கள் மனதுக்குள் ஓட, அப்பா அம்மாவை மனது தேடியது.
பிரதாபன் நிச்சயம் தங்கைக்கு நல்ல வரனாகவே பார்த்திருப்பான் என்று அவளுக்குத் தெரியும், ஆனாலும் ஒரு பயம், எல்லா குழந்தைகளுக்கும் திருமண வாழ்க்கைக்கு முதலில் எடுத்துக்காட்டாக இருப்பது அவர்களின் ‘பெற்றோர்’. மின்மினிக்குட்டிக்குத் தெரிந்து அவள் பெற்றோர் பிரிந்துதான் இருந்தனர். அது குறித்த பேச்சு அவர்கள் வாழ்க்கையில் அதிகம் கேட்டதுண்டு. இன்று அம்மாவிடம் பெண் பார்க்க வரும் விஷயம் சொல்ல வேண்டுமே என்று நினைத்தாலும், நடந்த பின் சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்தாள். இப்போது சொல்லி அம்மா அதையே நினைத்துக்கொண்டிருப்பார் என்று தெரியும். பிரதாபனிடம் கேட்காமல் சொல்லவும் விருப்பமில்லை.
அவள் அறையிலிருந்த அச்சம்மா அம்மினிகுட்டியின் புகைப்படத்தைக் விரல்களினால் தடவினாள். தானாக கண்ணீர்த்துளி புகைப்படத்தின் மீது விழுந்தது. அம்மினிகுட்டி இருந்திருந்தால் அவள் அந்த நேரம் மிகுந்த தைரியமாக இருந்திருப்பாள், அவரின் இழப்பு தந்த ஏக்கம் பெரிதாக வாட்டியது. அவள் அப்பா, அம்மா, அச்சச்சன், அண்ணன் என்று எல்லாரும் அவள் மீது அன்பு கொண்டவர்கள் என்றாலும், அந்த அன்பினை முழுதாக உணர்த்தியவர் மின்மினிகுட்டியின் அச்சம்மா மட்டுமே!
அவள் அச்சம்மாவுக்குப் பேத்தி வருந்தினால் பிடிக்காது, எதற்காவது சுணங்கி அழுதாலும், உடனே எதாவது செய்து சமாதானம் செய்துவிடுவார். உயிராக இருந்தவர்களை புகைப்படச் சட்டத்துக்குள் அடைத்துப் பார்ப்பது கொடுமையாக இருந்தது, வாழ்க்கையில் பெயரனும் பெயர்த்தி நன்றாக வளர வேண்டும் என்று மிகுதியாக விரும்பியவர் அவர்.
இப்போதும் அச்சம்மாவுக்கு அழுதால் பிடிக்காது என்று புரிந்து, கண்களைத் துடைத்தவள் சமையலை முடித்துவிட்டு, குளிக்கலாம் என்று நினைத்தாள். சமையலறைக்குச் சென்றவள் எதாவது எளிமையாக செய்யலாம் என்று பார்த்தாள். எள்ளுச் சோறு செய்யலாம் என்று இரும்பு சட்டியை எடுத்து கடலை பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை, குறுமிளகு, வற்றல் மிளகாய், வெள்ளை, கறுப்பு எள் எல்லாம் போட்டு வதக்கி, அதை ஆற வைத்து உப்பு சேர்த்து அரைத்து எள்ளுப்பொடி செய்தாள்.
இன்னொரு பாத்திரத்தில் நல்லெண்ணெய்யும், நெய்யும் ஊற்றி சூடாக்கினாள். கடுகு, வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, சிறிதாக வெட்டிய சின்ன வெங்காயம் எல்லாம் சேர்த்து வதக்கி, அதனோடு நிலக்கடலை சேர்த்து தாளித்து வடித்த சோறும், பின் எள்ளுப்பொடியும் போட்டு சூடான எள்ளுசாதம் செய்தாள். அதில் மெல்லியதாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்தபோது கண்களில் நீரோடு முகத்தில் புன்னகை உதயமானது.
நெய்யோடு எள்ளுப்பொடி மணம் மனதை நிறைத்தது, அவளின் அச்சம்மா இப்படித்தான் செய்வார். பொடியைத் தயாரித்து டப்பாவில் அடைக்கும் வழக்கம் அவரிடம் கிடையாது, அதனாலயே அந்த எள்ளுச்சோற்றின் சுவை கூடுதலாக தெரியும். அச்சம்மாவுக்கு சமைப்பது பிடிக்கும், மின்மினிக்கு அச்சம்மாவை பிடிக்கும், பிடித்தவர்களின் பிடித்தங்களை நமதாக்கிக் கொள்வதும் பிரியம்தானே? அப்படித்தான் மின்மினிகுட்டிக்கு சமையல் மீதான ஆர்வம். ஏனோ அச்சம்மாவின் பக்குவத்தை அப்படியே பின்பற்றி சமைத்த பின் ஒரு நிறைவு மனதில். நினைவுகளாகிவிட்டவர்களோடு உரையாட இதுவும் ஒரு வழிதானே?
நசீர் வெளியே சென்றிருக்க, வினயனை அழைத்து உண்ண சொன்னாள். உணவு பாத்திரம் திறக்கும் முன்னே, அதன் முன் உட்கார்ந்த வினயன்
“மின்மினி எள்ளுச்சோறா?” என்றான் ஆச்சரியமாக. அவனுக்குப் பரிச்சயமான வாசம், பிடித்த வாசமும் கூட.
“அதே” என்று மின்மினி புன்னகையோடு சொல்ல, அவள் கண்களும் வினயனின் கண்டுபிடிப்பில் மின்னியது.
மின்மினி எள்ளுச்சோறோடு பப்படமும், பைனாப்பிள் அச்சாரும் பரிமாற, வினயன் அந்த உணவின் ருசியில் அம்மாவை உணர்ந்தான். மின்மினி அவனுக்குத் தண்ணீர் ஊற்ற, ஒரு வாய் உணவு வாய்க்குள் சென்று இறங்கியதும் வினயச்சந்திரன் சொன்னான்.
“எங்கம்மா கூட இப்படித்தான் மின்மினி செய்வாங்க” என்றான்.
“எங்க அச்சம்மா இப்படி செய்வாங்க, பொடியை உடனே அரைச்சு செஞ்சா நல்லாயிருக்கும்” என்றதும்
“எங்கம்மா கூட அப்படித்தான் பண்ணுவாங்க, எள்ளுப்பொடி, பூண்டுபொடி, பருப்புப்பொடி இப்படி எது செஞ்சாலும் மூணு நாளைக்கு மேல வைக்க மாட்டாங்க.” என்றவன்
“தேங்க்ஸ்” என்றான்.
“எந்தினு நன்னி?” என்று மின்மினி புரியாமல் கேட்டாள். வினயச்சந்திரனுக்கு அவன் உணர்ந்ததை விளக்கத் தெரியவில்லை. என்ன சொல்வான், உன் உணவின் வழி என் அம்மாவை நான் உணர்கிறேன் என்றா? அது என்னவோ அதிகப்படியாக தோன்றுமென்ற எண்ணம். மின்மினி நன்றாக சமைப்பாள், வினயனுக்கும் அது பிடிக்கும், ஆனால் இன்று அந்த உணவு கொடுத்த உணர்வு வேறாக இருந்தது, நினைவால் சமைத்த உணவு நினைவினைத் தூண்டியது. அம்மா கையால் சாப்பிட்ட அதே உணர்வு! ஆனால் அது சாத்தியமில்லையே, ஆகையால்
“எனிக்கு எள்ளுச்சோறு செய்ய ஈசி” என்று மின்மினி சொல்ல
“சரி விடு மின்மினி” என்றான் சிரிப்போடு.
மின்மினியின் பெயரை சுருக்காது அவன் சொல்ல, அதில் மின்மினியின் புன்னகை விரிந்தது. வினயன் உண்டுகொண்டிருக்கும்போதே நசீர் வந்துவிட, அவர் மினியைத் தயாராக சொல்லிவிட்டு உண்டார்.
மின்மினிகுட்டி ஒரு புது சல்வார் அணிந்தாள். அண்ணன் வாங்கி வந்த மல்லிப்பூவை சூடினாள், வழக்கம்போல் கண்ணெழுதி லிப் பாம், லிப்ஸ்டிக் போட்டு எளிமையான அலங்காரம். பிரதாபன் பரபரப்பாக இருந்தான், எதிர்ப்பார்ப்பு தந்த ஒரு பதட்டமிருந்தது, தங்கைக்கு இந்த வரனே நல்லவிதமாக முடிய வேண்டும் என்ற பேராவல் இருந்தது.
“வினயா! இந்த சேரை அங்க போடு, வண்டியை ஓரமா நிறுத்துடா” என்று கத்தினான்.
“வண்டியை ஓரமா நிப்பாட்டாம, ஏதோ ஸ்ரீஹரிகோட்டாவுல ராக்கெட் விடுற சயிண்டிஸ்ட் மாதிரி வேகமா வந்துட்டு, இப்போ இவர் ஏன் கதகளி ஆடுறார்?” என்று மனதுக்குள் புலம்பினாலும் சொன்னதை செய்தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.