இதற்கு இடையில் லலிதா பாண்டிக்கு ஒரு நல்ல சம்பந்தம் வந்தது..
பாண்டியின் அன்னைக்கு மாப்பிள்ளையை மிகவும் பிடித்திருந்தது..
மகனுடன் பேசும் போது அதை பாண்டியிடம் கூறியிருந்தார்..
இந்த ஒரு வருடத்தில் தங்கையின் திருமணத்துக்கு என பணம் நன்றாகவே சேர்த்து வைத்திருந்தான்..
அவனுக்கு பணம் பற்றி கவலை இல்லை.. நல்ல சம்பந்தம் என்றால் உடனடியாக தள்ளிப்போடாமல் முடிக்கும் படி தாயிடம் கூறினான்..
பண்ணையாரிடம் அழைத்து திருமணத்திற்கு அனைத்தும் சரியா முடிவானதும் அந்த பணத்தை அவர்களிடம் கொடுக்கும்படி கூறினான்..
அவரும் சரி என்று கூறினார்..
பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டிலும் லலிதாவை பிடித்திருப்பதாக கூறிவிட்டு நிச்சயதார்த்தத்துக்கு நாள்
குறித்து விட்டு சென்றார்கள்..
குறித்த நாளில் எளிமையாக நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது..
இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்று அதற்கும் நாள் கூறித்தார்கள்..
திருமணத்துக்கு மனைவிக்கு பாண்டி புடவை வாங்க மற்றும் ஏனய செலவுகளுக்கு பணம் அதிகமாக அனுப்பினான்..
அந்த பணமும் பாண்டியின் அம்மாவிடமே போய் சேர்ந்தது..
லதாவுக்கு திருமணத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை.. ஆனால் கோமதிக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள்..
லதாவும் அன்பும் அந்த திருமணத்திற்கு வரவில்லை.. கோமதியும் கோமதியின் அம்மாவும் அந்த திருமணத்திற்கு வந்தார்கள்..
வெகு விமர்சையாகவே பாண்டி முதல் தங்கையின் திருமணத்தை நடத்தி வைத்தான்..
லதாபாண்டி தான் அதை பார்க்கவில்லையே என்று மனம் கவலையாக இருந்தது..
ஒரு அறையில் பாட்டியிடம் குழந்தையை வைத்துக்கொள்ளும் படி கூறி ஒப்படைத்து விட்டு தான் மீனாட்சி மணமேடையில் நின்றாள்..
திருமணத்தை லீலாபாண்டி அண்ணனுக்கு வீடியோ காலில் காட்டினாள்..
எங்கே திருமணத்தைப் பார்த்தான் பாண்டி.. தலை முதல் கால் வரை மனைவியைத்தான் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன்..
பாண்டியின் அன்னை எதிர்பார்த்த அளவுக்கு சந்தோசமாக திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது..
லலிதா பாண்டிக்கு செய்யும் சீர் முறையை எந்த குறையும் இல்லாமலே நல்லபடியாக செய்து முடித்தான் பாண்டி..
லலிதாவும் அன்றே புகுந்த வீட்டிற்கு சென்றாள்..
தற்பொழுது பாண்டியின் அம்மா.. லீலா பாண்டி மற்றும் மீனாட்சி அவள் குழந்தை தாரணியோடு சேர்த்து நான்கு பேர் இருக்கிறார்கள் ..
நாட்கள் போக போக மீனாட்சி தாய் வீட்டுக்கு வருவது குறைந்து போனது.. அப்படியே எப்பாவது வரும்போது லதாவுக்கு மீனாட்சி நடவடிக்கையில் சந்தேகம் வந்தது..
முன்பானால் காலேஜுக்கு போவாள்.. அங்கே நேரம் அதிகம் போவதால் பாண்டியின் அன்னையிடம் அதிகம் சிக்குவதில்லை..
லதாவும் துணைக்கு இருந்தாள்.. வீட்டில் யாராவது அவளை ஏதாவது திட்டினாலும் பெரியளவில் அவள் கஷ்டப்படுவதில்லை..
தற்பொழுது உதவிக்கு லதாவும் இல்லை.. காலேஜ் போகும் நேரத்தையும் சந்தோசத்தையும் இழந்து விட்டாள்..
முழு நேரமும் வீட்டு வேலைகள் மற்றும் குழந்தையை பார்ப்பது என அவளது நேரம் சென்றது..
பாண்டியின் அன்னையோ லீலா பாண்டியோ குழந்தையின் அருகில் கூட வருவதில்லை..
அனைத்தையும் அவள் ஒருத்தியே பார்த்துக் கொண்டாள்..
குழந்தையின் சிரிப்பும் அசைவுகளும் தான் அவளுக்கு தற்பொழுது ஒரே ஆறுதல்..
எதற்கெடுத்தாலும் தொட்டது அனைத்திற்கும் மாமியார் குறை கூறிக்கொண்டு அவளை வசை பாடிக் கொண்டே இருந்தார்..
குழந்தை எப்பொழுது அழும் என்று தெரியாததால் பாண்டியுடன் அவள் அதிக நேரம் பேசுவதில்லை..
காலேஜ் போகாமலே அசைன்மென்ட் மற்றும் பரீட்சை இருப்பதாகவும் அதற்கு படிக்க வேண்டும் என்று கூறி கணவனுடன் பேசுவதை தவிர்த்தாள் மீனாட்சி..
மனைவி மீது வைத்திருந்த நம்பிக்கையில் படிக்கட்டும் தொல்லை செய்ய வேண்டாம்.. என பேசும் நேரத்தை வெகுவாக குறைத்துக் கொண்டான் பாண்டி..
இப்படியே மீண்டும் காலங்கள் கடந்து குழந்தைக்கு ஒரு வயதும் நெருங்கியது..
லலிதா பாண்டி குழந்தை உண்டாகி இருப்பதாக கூறி சந்தோஷமாக தாய் வீட்டுக்கு வந்து போவாள்..
அவள் வரும் நாட்களில் மீனாட்சி மிகவும் கஷ்டப்பட்டு விடுவாள்..
லலிதா பாண்டியின் குழந்தை தான் அந்த வீட்டிற்கும் தனக்கும் ஒரே முதல் வாரிசு என்று மீனாட்சி காது படவே பாண்டியின் அன்னை தினமும் பேசுவார்..
வேண்டாத மருமகள் கைபட்டாலும் குற்றம்.. கால் பட்டாலும் குற்றம்.. நிலை தான் மீனாட்சிக்கு..
முன்பு வாரத்துக்கு ஒரு முறை பாண்டியின் சம்மதத்தோடு தாய் வீட்டுக்கு வரும் மீனாட்சி தற்போது ஏன் அங்கே போவதில்லை என்று ஒரு முறை பாண்டி மனைவியிடம் கேட்டபோது அவள் இல்லாத பொய் காரணம் பல சொல்லி பாண்டியை திசை திருப்பினாள்..
அவன் ஒரு முறை கேட்டதும் குழந்தையை லதா பாண்டியிடம் காட்டுவதற்காகவும் தாயைப் பார்ப்பதற்காகவும் மீனாட்சி அங்கே சென்றாள்..
லலிதா வீட்டுக்கு வந்து சென்றால் அவள் அன்னை எதுவும் கூறுவதில்லை..
மீனாட்சி அங்கே தாய் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கும் திட்டு விழும்..
பாண்டி தாயிடம் நேரடியாகவே மனைவி அவள் தாய் வீடு செல்வதில்லை.. ஏன் என்று கேட்டு இனி அனுப்பும் படி கேட்டு விடுவதால் அவர் மறுத்து எதுவும் கூறாமல் மருமகளை அனுப்பி வைப்பார்..
மன அழுத்தம் காரணமாக அவளுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டிருப்பதை லதா தான் போக போக கண்டுபிடித்தாள்.
அதை பக்குவமாக வீட்டில் சொல்லி அவளை மருத்துவமனை அழைத்து செல்லலாம்.. என்று நினைத்தால் ஆனால் அதற்கு இடையில்
பாண்டியின் அன்னை கொஞ்ச காலம் மீனாட்சி சொல்வது எதையும் கேட்பதில்லை.. அதை நன்கு கவனித்து பார்த்தார்..
மாமியார் ஏதாவது ஒரு வேலை சொன்னால் அவள் வேறு ஒரு வேலை செய்வாள்.. செய்வது பேசுவது அனைத்தையும் மறந்து போய் ஏனோதானோ என்று பிரம்மை பிடித்தது போல் சுற்றுவதை பார்த்து அவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று கூறி குழந்தையுடன் சேர்த்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்..
அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதும் அவள் தாய் வீட்டுக்கு செல்லாமல் எங்கே போவது என தெரியாமல் பேருந்து நிலையத்தில் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்..
கையில் போதியளவு பணம் இல்லை..
மொத்தத்தில் கட்டிய புடவை மற்றும் குழந்தை தான் இருந்தது..
அதை தவிர வேறு எதுவும் மினாட்சியிடம் இல்லை..
அடுத்து எங்கே போவது என்ன பண்ணுவது என எந்த முடிவும் அவளிடம் இல்லை..
அவளுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியவில்லை.. தாய் வீட்டிற்கு போய் இன்னும் அவர்களை கஷ்டப்படுத்த அவளுக்கு விருப்பமில்லை..
அவளாக தான் பண்டியிடம் அவன் வீட்டை விட்டுப் போக மாட்டேன் என்று கூறினாள்..
ஆனால் பாண்டியின் அம்மா அவளை வெளியே அனுப்பியதும் அவள் மறு பேச்சி பேசாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்..
மேலும் அந்த வீட்டில் இருந்தால் அவள் பிடித்தம் இல்லாமல் மூச்சு முட்டியே இறந்து விடுவோம் என அவளுக்கு நன்கு தெரியும்..
கணவன் நாட்டுக்கு வந்ததும் உன் ஆசை பொய்யாகவில்லை.. நிறைவேறி விட்டது. நீ தந்தையாகி விட்டாய். என்று கூறி குழந்தையை அவன் கையில் ஒப்படைக்க வேண்டும் அது வரை மட்டுமாவது அவள் உயிரோடு இருக்க வேண்டும்..
எங்கே போவது என்று தெரியாமல் அங்கே அமர்ந்திருந்தாள்..
மதிக்கு மீனாட்சிக்கு இவ்வளவு அநியாயங்கள் நடந்திருப்பது எதுவும் தெரியாது..
நண்பன் நாட்டில் இல்லை.. ஆனாலும் அவன் போய் மீனாட்சியை பார்த்து இருக்க வேண்டும்.. என மிகவும் தாமதமாகத்தான் நினைத்து வருந்தினான்..
அவனுக்கு தங்கை போல்.. தோழன் தன்னிடமும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றான்.. என்பதை அவனுக்கும் எம்எல்ஏ பொறுப்புகள் மற்றும் வேலை பளு கூடியதால் மறந்துவிட்டான்..
எதிர்க்கட்சித் தலைவர் அவனை தேர்தலில் ஜெயிக்க வைத்து விட்டார்..
அதன் பின் அவனது தொழில் மற்றும் எம்எல்ஏ பதவி பொறுப்பு அதிலேயே அவன் சுற்றி திரிந்ததால் மீனாட்சியை அவன் நன்றாகவே மறந்து விட்டான்.
தினமும் எழுந்து நேரத்தோடு சென்றால் அவன் இரவு எந்த நேரம் தாமதமாக வீட்டிற்கு வருகிறான் என்று தெரியாது..
அதை அன்றய வேலை தான் முடிவு பண்ணும்..
வேலை முடிக்காமல் வீட்டுக்கு போக நினைக்க மாட்டான்..
எந்த நேரம் மதி வீட்டுக்கு வந்தாலும் அவனுக்காக வள்ளி காத்திருந்து அவள் கையால் உணவு பரிமாறி அவன் உண்டதும் கணவன் மனைவி இருவரும் சில நேரங்களில் பேசிக் கொண்டிருந்து விட்டு உறங்குவார்கள்…
மதியால் முடிந்த அளவுக்கு குடும்பத்தையும் தொழிலையும் பொறுப்பையும் நன்றாகவே பார்த்துக் கொள்கிறான் என்று தான் கூற வேண்டும்..
என்ன ஒன்று வள்ளி ஆசைப்பட்டது போல் அவள் இன்னும் அடுத்த குழந்தை உண்டாகவில்லை..
தேர்தலின் போது கொடுத்திருந்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருவதற்கு அவனுக்கு நேரம் சரியாக இருந்தது..
ஒருமுறை அவன் மிகவும் கட்டாயப்படுத்தி இராவணனை போய் சந்தித்து வந்தான்..
கடுங்காவல் தண்டனை என்பதால் அவனை அதிகம் சித்திரவதை செய்தனர்.. மிகவும் மோசமான நிலையில் இருந்தான் ராவணன்..
முதலமைச்சர் எலக்சன் வர இருக்கிறது..
அதற்கும் கட்சி கடுமையாக உழைத்தால் எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சராக வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்து கொண்டான் மதி..
சாதாரணமாக இருந்த தன்னை இப்படி ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்த அவரை கட்டாயம் இந்த நாட்டு முதலமைச்சராக கொண்டுவர வேண்டும் என்று அவன் அதற்கு அயராது உழைத்தான்..
அப்படி ஒரு முறை கட்சித் தலைவரை சந்தித்து விட்டு அந்த வழியாக வரும் பொழுது தான் மீனாட்சியை பார்த்தான்..
மீனாட்சியை பார்த்த மாத்திரத்தில் அவனால் மீனாட்சி தான் என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை..
உடல் மெலிந்து கறுத்து போய் எலும்பும் தோலுமாக யாரோ போல் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு திரு திருவென விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்..
அருகே சென்று அவளைப் பார்த்ததும் மதியே கலங்கி போய் விட்டான்..
அவர்கள் திருமணத்திற்கு சென்ற போது பார்த்தது எப்படி அழகாக இருந்தால்..
அந்த பெண்ணா இது என்று அதிர்ச்சி ஆகிவிட்டான்…
கையில் குழந்தையுடன் யாரும் அற்ற அனாதை போல் பரிதவித்து போய் இருந்தாள்.. குழந்தையை தவிர வேறு எதுவும் இல்லை.. இதற்கு முன்பு படிக்கும் போது நேர்த்தியாக அழகாக இருந்த மீனாட்சிக்கும் இவளுக்கும் பல வித்தியாசங்கள் சொல்லலாம்..
ஏனோ தானோ என இருந்தாள்..
குழந்தை பிறந்திருப்பது கூட நண்பன் தன்னிடம் சொல்லவில்லை.. என்று மதி வருந்தினான். ஆனால் அவன்மீதும் பிழை இருக்கிறது. நண்பன் போய் மனைவியை பார்த்துக் கொள்ளும்படி கூறியிருந்தான்.. ஆனால் அவன் அந்த பொறுப்பை தட்டி கழித்து விட்டானே..
மீனாட்சியின் அருகே சென்று பேச்சு கொடுத்து தன்னை அறிமுகப்படுத்திவிட்டு அவள் வரமாட்டேன் என்று கூறியும் கட்டாயப்படுத்தி அவளை அவன் வீட்டிற்கு அழைத்து சென்றான்..
வள்ளி மீனாட்சியிடன் பேசி என்ன நடந்தது என கேட்டாள்.. ஆனால் மீனாட்சி எதுவும் கூற மறுத்து விட்டாள்..
ஆனால் வள்ளி தொடர்ந்து கேட்டதும் நடந்தது அனைத்தும் அவளுக்கு நினைவு வந்து மீண்டும் பாடாய் படுத்தியது..
அதன் அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்து அழுதாள் மீனாட்சி..
மீனாட்சிக்கும் ஏதாவது ஒரு வடிகால் கிடைக்காதா? என காத்திருந்தாள்.. இன்று வள்ளி அன்பாக ஆறுதலாக பேசியதும் அவள் மனதில் இருந்து அழுத்திய அனைத்தையும் கொட்டி விட்டாள்..
அதன் பின்பு தான் அவள் நிலை என்ன என மதியும் தெரிந்து கொண்டான்..
அதில் நண்பனுக்கு குழந்தை பிறந்திருப்பது இன்னும் அவனுக்கே தெரியாது என்பதை தெரிந்து கொண்டான்..
இந்த விஷயத்தை நண்பனுக்கு சொல்லாமலே அவனை கூடிய சீக்கிரம் நாட்டிற்கு வரவழைத்து அவன் கையில் மனைவி மற்றும் குழந்தை இருவரையும் ஒப்படைக்க வேண்டும் என முடிவெடுத்தான்..
முன்பு தான் அவளை பார்க்காமல் விட்ட பிழையை சரி செய்ய தற்பொழுது அவளை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என நினைத்தான்.
மீனாட்சியை அவள் தாய் வீட்டில் தேடுவார்கள் என நினைத்து அவள் அம்மா வீட்டில் பேசி அவர்களை வரவைத்து அனைத்தையும் கூறி அவள் இங்குதான் இருக்கிறாள்.. இனியும் இங்கு தான் இருப்பாள்.. பாண்டி நாட்டுக்கு வந்தால் மட்டும் தான் மீனாட்சியை இங்கிருந்து அனுப்புவேன் என அடித்து கூறிவிட்டான்..
இவ்வளவு நடந்தும் மகள் தங்களை தேடி வரவில்லை என்றால் அவளுக்கு தங்களையும் பிடிக்கவில்லையோ என்று நினைத்து கவலை கொண்டார் கோமதி..
புது இடத்தில் புது சூழ்நிலை மகள் இங்கே இருந்து நன்றாக தேறி வரட்டும் என அவரும் ஏற்றுக்கொண்டார்..
லதா பாண்டி மிகவும் கவலையில் நொறுங்கி விட்டாள்.. தாயின் இழிநிலையை பார்த்து..
அண்ணன் வெளிநாட்டில் இருந்து உழைத்தது போதும்.. இனி நாட்டுக்கு வந்து அவன் மனைவி குழந்தை என வாழட்டும்.. இன்னும் அங்கே இருந்து இந்த கேவலம் கெட்ட ஜென்மங்களுக்கு உழைத்துக் கொட்டி அவன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.. என மதியும் லதாவும் ஒருமித்து நினைத்து அவனிடம் பேசி உடனடியாக அவனை நாட்டிற்கும் வரவழைத்தார்கள்..
அவனும் என்னவோ ஏதோ என பரிதவித்து வந்தான்..
இப்போது எல்லாம் மனைவியுடன் அதிகம் பேசுவதில்லை..
அதுவே அவனுக்கு சந்தேகமாக இருந்தது..
நண்பனும் தங்கையும் இப்படி தொடர்ந்து அழைத்து சீக்கிரம் வரும்படி கூறுகிறார்கள்..
அப்படியானால் ஏதோ பிரச்சினை நடந்திருப்பது மட்டும் தெரியும்..
ஆனால் யாரும் என்னவென்று கூறாமல் வா வா என்று தான் அழைக்கிறார்கள்..
அவனும் அங்கே மனைவியை பிரிந்து சந்தோசமாகவா இருந்தான்..
குடும்பம் கடமை என்று அவன் உணர்வுகளை கட்டுப்படுத்தி தானே காலத்தை கடத்தினான்…
இரண்டு வருட காண்ட்ராக்ட் வேலை மட்டும் போதும்.. அதை செய்து விட்டேன்.. இனி நாட்டிற்கு போகவேண்டும் என கேட்டு போராடி அவன் நாட்டிற்கும் வந்து விட்டான்..
ஏர்போர்டிற்கு மதி தான் சென்று தன் வீட்டிற்கு பண்டியை அழைத்து வந்தான்..
என்ன இவன் தன் வீட்டுக்கு போகாமல் அவன் வீட்டுக்கு கூட்டி வருகிறான் என நினைத்து மதியிடம் கேட்க மதி எதுவும் பதில் சொல்லவில்லை..
உடனடியாக மதியின் வீட்டிற்கு பாண்டியை அழைத்து வந்து இருக்க வைத்து காபி கொடுக்கவும் குடித்துவிட்டு ஒரு அறையை கைகாட்டி அந்த அறையில் போய் குளித்து தயாராகி வரும்படி மதி கூறினான்..
பாண்டி வருவதைப் பற்றி மீனாட்சியிடம் யாரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை..
அந்த அறையில் குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு இருந்தாள் மீனாட்சி..
திடீரென கதவு திறக்கும் சத்தம் கேட்டு தோள் மீது போட்டிருந்த துண்டை நன்றாக போர்த்தி விட்டு வள்ளி தான் வருகிறாளோ என நினைத்துக் கொண்டு பாலை கொடுத்தாள்..
அறைக்குள் வந்த பாண்டி அப்படியே சிலை என சமைந்து நின்று விட்டான்..
பக்கவாட்டில் பார்த்ததுமே தன் மனைவியை பார்த்து தெரிந்து கொண்டான்..
அவள் இங்கே எப்படி?.. அதுவும் கையில் குழந்தையுடன்.. அப்படியானால் அவனுக்கு தெரியாமல் ஏதோ நடந்திருக்கிறது என புரிந்து கொண்டான்..
அவளுக்குத் தான் வந்திருப்பதை அவனும் தெரியப்படுத்தாமல் நேரே பாத்ரூம் சென்று முகம் கழுவி குளித்து உடைமாற்றிவிட்டு ஹாலுக்கு வந்தான்..
பாண்டி அறைக்கு வந்து பாத்ரூம் போய் வந்தது என அனைத்தையும் தெரிந்து கொண்டால் ஆனால் யார் என பார்த்துக் கொள்ளவில்லை மீனாட்சி..
தற்போது தன்னிடம் என்ன நடந்து என்று உண்மையை கூறும் படி நண்பனை வற்புறுத்தி கேட்டான்..
நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் அவனுக்கு தெரிந்த வகையில் மதி கூறினான்..
முதலில் தாய் மீதும் அடுத்து மனைவி மீதும் அவனுக்கு கொலை வெறியே வந்தது..
அம்மாவுக்கு தான் அறிவில்லை என்றால் இவளுக்கும் அறிவு இல்லாமல் சத்தியம் செய்துவிட்டு இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்துவிட்டு இதையும் தனக்கு தெரியாமல் மறைத்து தன்னை ஏமாற்றி விட்டாள் என நினைத்தான்..
எத்தனை முறை கேட்டிருப்பான்.. அங்கே ஏதாவது கஷ்டமா சொல்லு என்று..
நடந்தது அனைத்தையும் இல்லை இல்லை என கூறி மூடி மறைத்து விட்டாள்..
இனியும் அமைதியாக இருந்தால் தன் மனைவிக்கு தான் நல்ல கணவன் இல்லை.. இனியும் தாயை விட்டால் சரிப்பட்டு வராது என பொங்கி எழுந்து விட்டான் பாண்டி ..
மதியை வைத்து அவளை ஹாலுக்கு வரவழைத்தான் பாண்டி..
“ மீனாட்சி மீனாட்சி.. இங்க கொஞ்சம் வாம்மா.. ” என்று மதி அழைத்தான்..
வெளியே அவளை அழைக்கிறார்கள்.. போக வேண்டும் என்பது கூட அவளுக்கு தெரியவில்லை..
அந்த அறையே கெதி என கிடப்பாள்.. வள்ளி மூன்று வேளையும் உணவு கொண்டு போய் கொடுப்பாள்..
குழந்தை அழுதால் பசிக்கு அழுகிறது என தெரிந்து பால் மட்டும் கொடுப்பாள்..
ஒன்னரை வயது குழந்தை என்பதால் வள்ளி தான் குழந்தையை தூக்கி வைத்து மற்ற உணவுகளை கொடுப்பாள்..
மீனாட்சிக்கு தலை சீவி பொட்டு வைத்து விடுவாள்..
மீனாட்சியின் நிலை மோசமானதே தவிர எந்த மாற்றமும் வரவில்லை..
இதற்கு ஒரே தீர்வு பாண்டியே நாட்டுக்கு வந்து அவள் கையில் மீனாட்சியை ஒப்படைத்து அவன் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்..
பாண்டியின் அன்பும் அரவணைப்பும் உண்மையாக அவளுக்கு கிடைத்தால் மட்டும் தான் அவள் குணமாக வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர் கூறியதால் தான் பாண்டியை உடனடியாக நாட்டுக்கு வரவழைத்தான் மதி..
மூன்று நான்கு சத்தம் மதி வைத்ததும் தான் குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்..
“ இது யாருன்னு தெரியுதா மீனாட்சி..” என்று பாண்டியை காட்டி மதி கேட்டான் மதி..
கணவனை கூட அவளுக்கு சரியாக அடையாளம் காண முடியவில்லை..