இளா வீராவை திருமணம் செய்து கொண்டதே ஒரு திட்டத்தோடு தான்.. பிடிக்கும் தான் வீராவை பிடித்து தான் இருந்தது. ஏன் இப்போதும் பிடிக்கிறது தான்.. அதுவும் தனக்காக பார்த்து பார்த்து நடக்கும் கணவனின் இந்த செயலில் இன்னும் இன்னும் அந்த பிடித்தம் கூடி கொண்டு தான் போகிறது..
அவன் மீதான இந்த பிடித்தம் கூடும் போதே, மனதில் ஒரு வித பயமும் தன்னால் தோன்றுகிறது.. அவனை நான் மணந்த நோக்கம் அவனுக்கு தெரிந்தால், இது போல் இருப்பானா என்று..
பின் அவளே இதை நான் சொன்னால் அன்றி வேறு யாருக்கும் தெரியாதே..காதல் ஒரு சுயநலமானது தானே…
வளர்த்தவர்களுக்கு துரோகம் செய்ய கூடாது .. நான் அதில் விழுந்து விட கூடாது என்று தானே.. வீராவை பிடித்து இருந்தும்., நான் அவனை தவிர்த்து வந்தேன்…
ஆனால் அதே சுயநலக் காதல் மீண்டும் தன்னை துரோகத்தில் தள்ளியதினால் தானே.. நான் வீராவை மணக்க முடிவு செய்தது.. சுகனும், நயனியுமே தன்னிடம் அவர்கள் விருப்பத்தை சொல்லி இருந்தால், நானே சுகனை மணக்க எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி இருப்பேனே..
தனக்கு அவன் மீது காதல் இல்லை என்ற போதும்.. பாசம்.. பாசம் இருந்ததே.. அந்த பன்னிரெண்டு வயதில் தந்தையின் காதல் தன் வாழ்க்கையை புரட்டி போட்ட போது.. சுகன் தானே தனக்கு ஆறுதலாக இருந்தான்..
ஆம் அவளின் இந்த முடிவு,, அதாவது வீராவை அவள் முன் மறுக்கவும்,.. இப்போது அவனையே மணக்கவும் காரணம்.. அவள் தந்தையின் சுயநலக்காதல் தான்.
பத்து வயது வரை டெல்லியில் அம்மா அப்பா படிப்பு பிரண்ஸ் என்று ஒரு சாதாரண குடும்ப அமைப்பு தான் அவளுடையது.. தந்தை ரெயில்வே… அம்மா இல்லத்தரசி.. பத்து வயது வரை நன்றாகவே சென்றது..
அம்மா அப்பா அந்நோனியமாக இல்லாத போதும். சண்டை சச்சரவும் என்று இல்லாது தெளிந்த நீரடை போல் தான் அவள் மனநிலை இருந்தது..
அப்போது அவள் ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்புக்கு போன சமயம்.. திடிர் என்று அப்பாவும் அம்மாவும் அடிக்கடி சண்டை போட்டு கொள்வது.. அப்பா இரவு வெளியில் போனால் திரும்ப வீடு வர ஐந்து நாள் ஆவதும்..
அப்போது கூட அப்பா அம்மாவின் சண்டை ஒரு முடிவுக்கு வரக்காணும்.. ஏன் புரியவில்லை.. ஒரு நாள் அப்பா அம்மாவிடம்.. தன்னை காட்டி,….
“இவளுக்காக கூட உன்னை நான் சகித்து கொண்டு வாழ முடியாது… என் காதல் எனக்கு கிடைக்கும் எனும் போது யாரை தொட்டும் என்னால் என் காதலை விட முடியாது.. முன் என் காதலை நான் தொலைத்த போது.. நான் என் படிப்பை முடிக்கவில்லை. அதோடு எனக்கும்,.சுப்ரஜாவுக்கும் சின்ன வயது..
பயம் போராட எங்களிடம் எதுவும் இல்லை.. ஆனால் இப்போது இவை அனைத்தும் இருக்கும் போது .. என் காதல் கைகூட எனக்கு ஒரு வாய்ப்பு கிட்டும் போது நான் ஏன் விட வேண்டும்.. இனியும் ஒரு இயந்திரதன்மையான ஒரு வாழ்க்கையை உன்னொடு என்னால் வாழ முடியாது..” என்று அன்று தந்தை என்று அவள் நினைத்து கொண்டு இருந்தவர் சொல்லி விட்டு சென்றதோடு சரி..
அதன் பின் வீடு வரவில்லை.. அதன் பின் அம்மா தினம் தினம் அழுகையோடு தான் அவள் பார்த்தது… அப்போது அவள் ஆறாம் வகுப்பில் இருந்து ஏழாம் வகுப்புக்கு சென்று இருந்தாள்..
ஒரு நாள் அவள் பள்ளியில் இருந்து வீடு வந்த போது மாமா வீட்டில் இருந்தார்.. தன்னை பார்த்ததும் எப்போதும் செல்லம் கொஞ்சுபவர்.. அன்று தன்னை கட்டி பிடித்து கொண்டு அழுதது..
அதன் பின் ஒரிரு முறை நீதிமன்றம் சென்றது.. அங்கு தன் தந்தையை ஒரு பெண்மணியோடு தன் வயதோடு இரண்டு மூன்று வயது பெரிய பெண்ணோடு பார்த்தது,. இறுதியாக பார்த்த அன்று தான் அவள் வாழ்க்கையையே மறக்க முடியாத நாளாக.. இயற்க்கை கொடுத்த.. அவள் பெண் தான் என்ற அடையாளம் காட்ட கூடிய… பூப்பெய்திய நாளும்..
அன்று தன் தாய் தந்தை விவாகம் ஒரு முடிவுக்கு வந்த நாளும் ஒர் நாளே.. அதுவும் தன் எதிரில் மற்றோரு பெண் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த தந்தை..
அந்த பெண் தன் தந்தையை.. “அப்பா பசிக்குது..” என்றதும் அங்கு இருந்த உணவகத்திற்க்கு அழைத்து கொண்டு சென்றதும் நேரில் பார்த்த நாள் அன்றோ..
அதுவும் உச்சக்கட்டமாக வயிற்று வலியில் துடித்து கொண்டு இருக்க,.. ஒரு பக்கம் மாமா.. ஒரு பக்கம் அம்மா நின்று கொண்டு..தன்னிடம்..
“ என்ன என்ன ஆச்சு..” என்று பதறிக் கொண்டு விசாரித்து கொண்டு இருக்கும் போது… தன்னை பார்த்து கொண்டே கடந்து சென்ற தந்தையை தான் இளா கடைசியாக பார்த்தது..
இதோ வயது இருபது முடிந்து விட்டது.. எட்டு வருடங்கள் கடந்து விட்டன… தந்தைக்கும் தாய்க்கும் என்ன பிரச்சனை என்று தெரியாது.. ஆனால் இருவரும் பிரிந்து விட்டனர்.. என்று மாமன் சொல்லி தெரியும்..
ஆனால் அனைத்தையும் தெரியும் நாளும் ஒன்று அவளுக்கு வந்தது..
எப்போதும் சிரித்த முகத்துடன் வரும் மாமன் அன்று வரும் போதே கோபத்துடன் தான் வந்தார் போலும் ..
மாமி ஏதோ கேட்க.. அதற்க்கு தேவையில்லாது சத்தமும் போட்டார்.. எப்போதும் தன் அன்னை என்ன தான் அவர் அண்ணன் அவருக்கு உரிமை கொடுத்தாலுமே, அதை எடுத்து கொள்ளாது எப்போதும் தள்ளி தான் இருப்பார்..
ஏன் டெல்லியில் இருந்து இங்கு வந்து கீழ் பகுதியில் இருந்ததும் ஒரு வாரம் தான்.. பின் இதோ மேல் பகுதிக்கு வந்து விட்டனர்..
மாமா..”என்ன இது ..இப்போ தனியா போக வேண்டிய காரணம் என்ன…? ஏன் இப்படி அடம்பிடிக்கிற..? என்று எவ்வளவு சொல்லியும்..
“வேண்டாம் அண்ணா..நான் தனியே இருந்து விடுகிறேன்.. நான் என்ன வேறு எங்காவதா இருக்கேன்.. மேலே தானே ..” என்று தீர்த்து சொல்லி விட்டார்..
பின் நாளில் இளா நினைத்தது இது பரம்பரை சொத்து.. அதனால் தான் அம்மா மேலே இருந்தாரோ.. இல்லை என்றால் வேறு வீட்டுக்கு தான் கண்டிப்பாக சென்று இருப்பார் என்று நினைவு தெரிந்து புரிந்து கொண்டது..
அதே போல செலவுக்கும்.. ஊரில் விற்ற பரம்பரை நிலத்தில் தாமரை பங்கு வர.. அதை வங்கியில் போட்டு தான் அவர்கள் ஜீவனம் நடத்துவது..
இப்படி இருந்ததால் தான் தாமரைக்கும் சந்திரமதிக்குமே பிரச்சனை இல்லாது செல்ல ஒரு காரணம்..
ஆனால் அன்று அண்ணன் அண்ணியை தேவையில்லாது.. அதுவும் ஒரு முறை இல்லை.. பல முறை திட்டியதில் தாமரை..
“என்ன அண்ணா வெளியில் இருக்கும் கோபத்தை இப்படி தான் வீட்டில் காட்டுவதா.. என்று கேட்டதற்க்கு தான் அன்று கார்முகிலன் வெடித்து விட்டார்..
“வெளியில் கோபம் இல்லை.. இதோ இவள் மீதும்.. இவள் வீட்டு ஆள் மீதும் தான் கோபம்..” என்றவர்..
தொடர்ந்து.. “இன்னைக்கு அந்த சண்டாளனை.. இவங்க பார்த்து பார்த்து உனக்கு கொண்டுட்டு வந்தாங்களே மாப்பிள்ளை… அவனை பார்த்தேன்.. இங்கு சொந்த பெண்ணை விட்டு விட்டு அந்த பெண்ணுக்கு நீட் தேர்வுக்கு வந்து இருக்கான்..” என்று மாமன் சத்தம் இட்டுக் கொண்டு இருந்த பேச்சை அப்போது தான் பள்ளி விட்டு வீடு வந்த இளா கேட்டாள்..
எப்பொதும் இது போல் ஒளிந்து கேட்கும் பழக்கம் எல்லாம் இளாவுக்கு கிடையாது.. ஆனால் அன்று வீட்டுக்குள் நுழையாது அமைதியாக வெளியிலேயே நின்று கொண்டாள்..
தாய் மாமனின் கோபமான பேச்சுக்கு தன் அன்னை.. “என்ன அண்ணா.. அவங்களுக்கும் இது எல்லாம் நடக்கும் என்றா எதிர்பார்த்தாங்க.. என் தலையில் இது தான் என்று எழுதி இருக்கு.. இதுக்கு ஏன் அண்ணியை திட்டுறிங்க…
அதோட யார் பெண்ணை யார் கூட்டிட்டு வந்தா என்ன..? அந்த உறவு அறுந்து நான்கு வருடம் முடிந்து விட்டது.. இனி அந்த பேச்சு வேண்டாமே..” என்று தான் தாமரை சொன்னது..
ஆனால் கார்முகிலனுக்கு தான்.. மனது ஆறவில்லை போலும்.. “ இல்ல தாமரை இவள் அம்மா பங்காளி வீடு என்று இந்த இடம் வந்த போது கூட நான் உடனே ஒத்து கொள்ள எல்லாம் இல்லை..
அவனை பத்தி விசாரித்தேன் மா.. அப்போ தான் அவன் கல்லூரியில் படிக்கும் போது ஒரு பெண்ணை விரும்பியது.. அது அந்த பெண் வீட்டுக்கு தெரிந்து இவனை என் மகள் பக்கம் போக கூடாது என்று சொல்லி மிரட்டி.. அந்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க என்று நான் விசாரித்ததில் தெரிந்து கொண்டு..
நான் வேண்டாம் என்று சொன்னேன்.. ஆனால் காலேஜ் படிக்கும் போது விரும்புவது எல்லாம் சகஜம் தான்.. அப்படி பார்த்த எந்த ஆம்ப்ளைக்கும் பெண் கொடுக்க மாட்டாங்க… ஏன் இப்போ எல்லாம் பெண்ணுங்களும் இது போல விரும்ப தான் செய்துங்க..
அதோட அந்த பெண்ணுக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே .. நல்ல இடம் ஒரே பையன் நல்ல வேலை சொத்து… அதோடு பையனுக்கு டெல்லியில் வேலை மாமியார் மாமனார் கூட இருக்க தேவையில்லை..
உன் தங்கை தான் ராஜா ராணி.. “ என்ற கார்முகிலன் மாமியார் அன்று பேசிய பேச்சுக்கள் கார்முகிலனிடம் நன்றாகவே வேலை செய்தது..
சரி என்று விட்டார்..
ஆனால் அந்த காதல் .. தாமரையை திருமணம் செய்து பத்து வருடங்கள் கடந்த பின்.. அதுவும் ஒரு குழந்தை பிறந்த பின்.. மீண்டும் துளிர் விடும் என்றா கார்முகிலன் அன்று நினைத்தார்..
ஆம் அது தான் நடந்தது… இளாவின் தந்தை டெல்லியில் தான் வேலை தாமரையை மணந்த பின்.. குடும்பம் டெல்லியில் என்றானது.. அடுத்த வருடமே இளா பிறக்க.. கார்முகிலனுக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த அந்த பயம் கூட முற்றிலும் அகன்று.. மகிழ்ந்தார்..
ஆனால் அவரின் அந்த மகிழ்வு பத்து வருடங்கள் தான் நீடித்தது.. ஒரு நாள் தாமரை கார்முகிலுக்கு அழைத்து.. “ அண்ணா இப்போ எல்லாம் இவர் போக்கு சரியில்ல.. வீட்டுக்கு சரியா வராது கிடையாது..
நான் சாதாரணமா பேசினா கூட அதை சண்டையா ஆக்கி விட்டுடுரார்.. அதோட மணிக்கணக்கா.. போனில் பேசுறார்.. ஒரு நாள் அவர் குளித்து கொண்டு இருக்கும் போது அவருக்கு போன் வந்தது.. போனில் சுப்ரஜா என்று பதிவு செய்து வைத்து இருந்தார்..
நான் எடுத்து பேச.. ஆனால் அந்த பக்கம் எந்த சத்தமும் இல்ல.. பின் தான் தெரிந்தது.. அவங்க கால கட் செய்து விட்டது.. நான் அவர் குளியல் அறையில் இருந்து வந்த போது கேட்டதிற்க்கு .. பதில் சொல்லாது இனி என் போனை தொட்டு பார் என்று என்னை தான் கத்தினார்..” என்று கட கட என்று மனதில் இருந்ததை கொட்டிய பின் தாமரை.. மெல்ல..
“அண்ணா அவர் படிக்கும் போது ஒரு பெண்ணை விரும்பினாரே.. அந்த பெண் பெயர் சுப்ரஜா தானே அண்ணா..” என்று கேட்டதற்க்கு கார்முகிலனுக்கு நியாபகம் இருந்தது,, இதே பெயர் தான் என்று..
ஆனால் தங்கைக்கு இன்னும் பயத்தை கூட்டது.. “ என்ன தாமரை இது.. உனக்கு கல்யாணம் நடந்தே பத்து வருடம் முடிந்து விட்டது.. அந்த பெண்ணுக்கு பதினாரு.. உன் கற்பனைக்கும் ஒரு எல்லை உண்டு..” என்று தாமரையை கண்டித்தார்..
ஆனால் காதல் கற்பனைக்கு எல்லாம் அப்பாற்ப்பட்டது என்பதை காதலில் அனுபவம் இல்லாது கார்முகிலனுக்கு தெரியவில்லை என்பது தான் நிதர்சனம்..
ஆம் தாமரை சந்தேகம் பட்டது போல் தான் அதே சுப்ரஜா தான் சந்தானத்தை ;போனில் அழைத்தது.. அது முதல் அழைப்பு கிடையாது. அதே போல் அவர்களின் பேச்சு போனில் மட்டுமே நின்றும் விடவில்லை..
சந்தானம் ரெயில்வேயில் ரெயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கொடுக்கும் வேலையில் தான் இருந்தார்.. ஒரு நாள் தன் தினப்படி வேலையான டிக்கெட் கொடுத்து கொண்டு இருக்கும் போது..
“ இரண்டு ****” என்று கேட்ட அந்த குரலில் சட்டென்று குனிந்து கேட்டவரை பார்த்த சந்தானத்தின் உதடு சுப்ரா..” என்று அதிர்ந்து போக.. பின் சுப்ரஜாவும் அதிர்ந்து போனவள்..
பின் முதலில் எதார்ச்சையாக சந்தித்தவர்கள் பின் திட்டமிட்டு அவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது.. அந்த அவர்களின் சந்திப்பில் அவர்கள் அறிந்து கொண்ட தெரிந்து கொண்ட ஒரு அறிய கண்டுப்பிடிப்பு தான்..
இது வரை இருவர்களுமே தன் இணையுடன் காதல் வாழ்க்கை வாழவில்லை என்பதும்.. ஒரு இயந்திரதன்மையோடு தான் அவர்கள் தாம்பத்தியம் இருந்தது என்பதுமே… அதோடு அவர்களின் கல்லூரி காதல் மரித்து போகாது இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது என்றும் அறிந்து கொண்டவர்கள்..
அந்த் உயிர் காதலை வளர்வதற்க்கு தினம் தினம் சந்த்ப்பு பேச்சு என்று அதை வளர்ந்து கொன்டு இருந்ததால், அவர்கள் இருவரின் திருமண வாழ்க்கையும் மரித்து விட்டது..
ஆம் சுப்ரஜா கணவன் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருந்தான்.. ஒரே பெண் பவித்ரா.. சுப்ரஜா மாமனாருக்கு டெல்லியில் வேலை.. அதனால் சுப்ரஜா கணவன் மனைவி குழந்தையை தன் பெற்றோர்களிடம் விட்டு விட்டு வெளிநாட்டுக்கு சென்று விட்டான்..
ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா வருவான்.. அவர்களின் அந்த கல்யாண வாழ்வு இதே போல் பதினைந்து ஆண்டுகளும் எந்த பிரச்சனையும் இல்லாது தான் சென்று கொண்டு இருந்தது.. சந்தானம் சுப்ரஜா சந்திப்பு நிகழும் வரை..
சந்தானம் ..”என் போனை தொடாதே ..” என்று கத்திவிட்டான்..
ஆனால் சுப்ரஜா வீட்டில் தேவை இருந்தால் மட்டுமே வெளியில் செல்லும் மருமகள்.. இப்போது எல்லாம் அடிக்கடி செல்வது.. நேரம் கழித்து வீட்டிற்க்கு வருவது…
வீட்டிற்க்கு வந்தாலுமே மணிக்கணக்கில் போனில் பேசுவது என்று இருக்க.. ஒரு நாள் சந்தானம் வீட்டில் நடந்தது போல தான் சுப்ரஜா குளிக்கும் போது ..
மருமகள் மீது சந்தேகம் கொண்டு அவள் போனை அவள் மாமனார் எடுத்து பார்க்க.. அனைத்திலும் டால்.. என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த எண்ணில் இருந்து தான் அழைப்பு வந்ததும் சென்றதுமே..
அழைப்புக்கள் நடுயிரவு.. பார்த்தவர் ஒன்றும் செய்யவில்லை.. பேச்சை ரெக்கார்ட் செய்யும் மோடுக்கு செய்து விட்டு எடுத்த இடத்திலேயே வைத்து விட்டார்..
அடுத்த நாள் அதே போல் சுப்ரஜா குளிக்க சென்று இருந்த போது பேசியை எடுத்து ரெக்கார்ட் செய்து இருந்த பேச்சுக்களை தன் பேசிக்கு மாற்றியதோடு தன் மகன் பேசிக்கும் அனுப்பி வைத்து விட்டார்..
பேச்சுக்கள் இல்லை சண்டைகள் இல்லை.. அனைத்துமே சுமூகமாக முடித்து கொண்டது சுப்ரஜா அவள் கணவனோடான திருமண வாழ்க்கை..
சுப்ரஜா.. “என்னோடு என் மகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்..” என்று கோரிக்கை வைக்க.. “ அவள் இனி நம் மகள் ..” என்று சொன்ன சந்தானம் தன் சொந்த மகளை விட்டது ஏனோ..
அது என்ன என்று அன்று தெரியாதது போலவே.. இன்றும் அதே சந்தானம் தன் மகள் இளாவுக்கு அழைத்து..
“ நான் உன்னை பார்க்க வேண்டும்..” என்று கெஞ்சலுக்கு பின் இருக்கும் காரணமும் தெரியாதி.. இளா..