இளா அன்று காலையில் இருந்தே அவள் அவளாகவே இருக்க முடியவில்லை.. யோசித்தவளுக்கு காலையில் இருந்து தானே என்று நினைத்து கொண்டவள் பின் தனக்கு தானே சிரித்து கொண்டவள்..
ஒரு படத்தில் வருமே என்னையும் அரசியல் வாதியா மாற்றி விட்டதே.. அந்த டையலாக் தான் அவளின் நியாபகத்தில் வந்தன…
வீராவை இளா திருமணம் செய்ய ஒரு காரணம் இருந்தது… நயனி… அதுவும் நயனி சுகனிடம் சொன்ன.. “ என் அண்ணனை இளா திருமணம் செய்து கொண்டால் நம் உறவு சகோதர உறவு..” என்ற வார்த்தை தான் சட்டென்று அன்றே வீராவை இளா திருமணம் செய்ய காரணம்..
அது மட்டுமா என்றால்..? இல்லை… என்ன தான் தனக்கு தானே ஆயிரம் காரணங்கள் சொன்னாலுமே, அவள் மனதின் ரகசியம் அவளுக்கு தெரியாதா என்ன..?
இதே வீரா இல்லாது வேறு ஒருவன் இருந்து இருந்தால், இளா இந்த திட்டத்தை போட்டு இருப்பாளா..? இல்லை கிடையவே கிடையாது தான்..
ஆனாலுமே, இன்று வீரா நயனியை அடித்தது ஏனோ அவள் மனது அவளையே குத்தி கிழித்தது… என்ன இளா நீ இந்த அளவுக்கு வில்லியா..? தன்னை திட்டம் தீட்டியவர்களை பழிவாங்க.. தன் மாமாவிடம்..
“ சுகனோடான என் திருமணத்தை உடனே நடத்தி வைங்க..” என்று சொல்லி இருந்தால் நடத்தி முடித்து இருப்பாரே…! நயனிக்கும், சுகனுக்கும் இந்த தண்டனையே போதுமே..
ஆனால் நான் செய்தது… ஒரு சமயம் இது தான் சாக்கு என்று என் காதலை நான் நிறைவேத்தி கொண்டேனா… என் உடம்பில் ஒடும் அந்த ரத்தம் என்னை இது போல செய்ய வைத்தேதோ.. என்று நினைத்தவளுக்கு..
அவ்வப்போது பழைய நினைவுகள் அங்கு அங்கு கொஞ்சம் கொஞ்சம் வந்து போகும்.. அவள் தன் தந்தையை விட்டு வரும் போது அவள் ஒன்றும் சின்ன குழந்தை இல்லயே.1 ஒர் அளவுக்கு புத்தி தெரியும் வயது தானே..
அதுவும் தன் தந்தையை பார்த்த அந்த கடைசி நாளை அவளால் மறக்க முடியுமா என்ன…? எப்போதும் பழைய நினைவுகள் பிய்த்து எடுத்தது போல் நினைப்பவளுக்கு, இன்று ஏனோ…! கதை போல் நடந்ததை நினைத்து பார்த்தாள்..அதன் தாக்கத்தில் அவள் முகம் முற்றிலும் பொலிவு குறைந்து காணப்பட்டது…
வீராவும் ட்ரவல்ஸ்க்கு சென்றாலுமே அவனுக்கும் அன்று ஏனோ வீட்டின் நியாபகமே..
கோபத்தில் தங்கையை அடித்து விட்டாலுமே, இப்போது ஏனோ வாயால் சொல்லி இருந்து இருக்கலாமோ என்ற எண்ணம் தான்.. அதனால் அன்று மாலை தான் பார்க்கும் வேலையை மற்றவனிடம் ஒப்படைத்து விட்டு விரைவில் வீடு வந்து விட்டான்..
மகனை பார்த்த பவானிக்கும் மனதில் ஆயிரம் இருந்தாலுமே, காபி கொடுத்து டிபன் கொடுத்து தான் பின் பேச்சை ஆரம்பித்தார்..
“ என்ன தான் இருந்தாலுமே நீ நயனியை அடித்து இருக்க கூடாது… அதுவும் வீட்டுக்கு புதுசா வந்த பெண் முன்னால்..” என்றவரின் பேச்சை ஆட்சபிக்காது வீரா அமைதியாக கேட்டாலுமே..
முன் பவானி சொன்ன அடித்து இருக்க கூடாது.. அதை அவனும் நினைத்தான் தான்.. அதனால் தான் நயனியை சமாதானம் படுத்த வெளியில் அழைத்து செல்லலாம் என்று சீக்கிரம் வீடு வந்தது..
ஆனால் அவன் அம்மா அடுத்து சொன்ன… “ வீட்டுக்கு புதுசா வந்த பெண் முன்ன..” என்ற அந்த பேச்சை வீராவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
இருந்தும் அமைதி காத்தான்.. இனி தான் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் வேறு ஒரு அர்த்தத்தை கொடுக்கும் என்று நினைத்ததினால் வந்த அமைதி..
பவானிக்கோ மகனின் அந்த அமைதியே போதுமானதாக இருந்து விட்டது போலும்..
“ நயனி மதியம் சாப்பிட கூட வரல..” என்றதும்.. அமர்ந்து இருந்தவன் சட்டென்று எழுந்த விட்டு..
“ இதை முதல்ல சொல்ல கூடாது..” என்று அன்னையை கடிந்து கொண்டு தங்கையின் அறைக்கு சென்றவன்.. அங்கு நயனியிடம் என்ன சொன்னானோ… சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வீரா நயனியோடு வந்தான்..
மகளை பார்த்ததும் பவானி டிபனை எடுத்து வந்து கொடுக்க… விரும்பி சாப்பிட வில்லை என்றாலுமே கடமைக்கு என்று சாப்பிட்டு கொண்டு இருந்தாள்..
தன் அறையில் அதாவது பவானி அறையில் காலையில் இருந்து.. புதியது பழையது என்று நினைத்து.. அதனால் அழுதுக் கொண்டு இருந்த இளா… பின் ஒரு நிலைக்கு மேல் அழுது அழுது தலை விலியே வந்து விட்டது..
அதோடு காலையில் இருந்து எதுவும் சாப்பிடாதது வேறு, அவளுக்கு இன்னும் தலை வலியை அதிகப் படுத்தியது..
சரி காபி குடிக்கலாம் என்று நினைத்தவள், அழுதது தெரிகிறதா..?ஏன்று கண்ணாடி முன் பார்த்தவளுக்கு கண்கள் வீங்கி… அவள் அழுதாள் என்பது அப்பட்டமாக தெரிவது போல் இருக்க..
குளியல் அறைக்கு சென்று முகத்தை அலம்பிய பின்னும் பார்த்தும், அவள் அழுது இருப்பதை மறைக்காது காண்பித்தது..
அப்போது தான் வீரா நயனியை அழைத்து வந்து சாப்பிட வைத்து கொண்டு இருந்த நேரம்…
அதை பார்த்த இளாவுக்கு,.. அது என்னவோ தான் மட்டும் தனித்து இருப்பது போன்ற ஒரு பிம்பம் அவள் மனதில் எழுந்தது..
காலையில் இருந்து சாப்பிட வரவில்லை… யாரும் தன்னை அழைக்கவில்லை.. ஏன் என்றும் கேட்கவில்லை..
அத்தை தன்னிடம் நன்றாக தானே பேசிக் கொண்டு இருந்தார்கள் .. அவர்கள் கூட தன்னை அழைக்கவில்லையே என்று நினைக்கும் போதே..
இளா… வீரா நயனியை அடித்ததில் இருந்து அத்தை தன்னிடம் முகம் கொடுத்து பேசாதது, நியாபகத்தில் வந்தது… அதை நினைத்து ஒரு விரக்தி புன்னகை தன்னால் இளாவின் முகத்தில் வந்தது..
என்ன தான் இருந்தாலும், மகள்.. மருமகள் ஒன்றாகி விட முடியாது தானே.. அந்த உண்மையை கசப்பு போல் தொண்டையில் இறங்கினாலும், இளா தனக்கு காபி கலக்க… சமையல் அறையை நோக்கி சென்றாள் ..
இது வரை விருப்பத்தோடு சாப்பிடவில்லை என்றாலும் தட்டில் இருப்பதை கடமைக்கு என்று சாப்பிட்டு கொண்டு இருந்த நயனி, இளாவை பார்த்ததும், கையில் எடுத்த உணவை சட்டென்று தட்டிலேயே போட்டு விட்டு எழ பார்த்தாள்..
எழாது தடுத்து நிறுத்திய பவானி… “ நயனி சாப்பிடு..”என சொன்னவர் இளாவிடம்..
“ நீ ரூமுக்கு போ இளா… நயனி சாப்பிட்ட பின் வா…” என்ற அந்த வார்த்தை மிக சாதாரணமான வார்த்தை தான்..
ஆனால் சூழலும், கேட்பவரின் நிலையின் மாறுப்பாட்டை பொருத்து தான், அந்த வார்த்தையின் அர்த்தம் அமையும்.. ஆனால் இளா கேட்ட இந்த சூழல்…! அந்த வார்த்தை…! அவள் மனதை பலமாக தாக்கியது..
பவானி அப்படி சொன்னதுமே சட்டென்று இளா வீராவை தான் பார்த்தாள்.. வீரா அவ்வளவு நேரமும், அதாவது இளா அறையில் இருந்து வெளி வந்ததில் இருந்து, அவளின் அழுத முகத்தையும் சோர்ந்து போன தோற்றத்தையே கவனித்து கொண்டு இருந்த வீரா..
அன்னையின் இந்த பேச்சில் சட்டென்று அதிர்ந்து அவரை பார்த்தான்.. இளாவும் அப்போது தான் வீராவை பார்த்தது, பின் அவள் என்ன நினைத்தாளோ, எதுவும் பேசாது மீண்டும் தனக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் புகுந்து கொண்டாள்..
இளாவின் நிலை இப்படி என்றால், வீராவின் நிலையோ அதற்க்கு மேல் என்று தான் சொல்ல வேண்டும்.. நயனியை அடித்து இருக்க கூடாது சமாதானம் படுத்த தான் வீட்டிற்க்கு வந்தான்..
ஆனால் இளாவை பார்த்ததும் சாப்பிட்டு கொண்டு இருந்த நயனி எழுந்து கொள்ள பார்த்ததில், என்ன இது.. என்று அவன் நினைக்கும் போதே அதோடு பெரியதாக அவனின் அம்மா அப்படி சொன்னதில் வீரா நிலை குலைந்து தான் போனாள்..
வீரா தமிழை பிடித்து தான் பார்த்தான்.. அந்த பிடித்தம் இன்னும் பிடித்தம் கூட்டியதில் பெரும் பங்கு நயனிக்கு உண்டு… தமிழுக்கு பிடித்த உணவை செய்து கொடுப்பது..அவளை பார்க்க அவள் வீட்டிற்க்கு செல்வது..
ஒரு நாள் எங்காவது சொந்த ஊருக்கு சென்று வந்தாலுமே, விடியலில் நயனி தமிழை பார்க்க அவள் வீட்டிற்க்கு சென்று விடுவாள்.. வீரா தன் காதலில் இன்னும் உறுதியோடு இருக்க நயனி தமிழின் நெருக்கமும் ஒரு காரணம்..
ஆனால் இப்போது என்ன இது.. விரோதி போல… நினைக்க நினைக்க… அவனுக்கும் தலை வலி வந்து விட.. மகனின் முக மாறுதலை கவனித்த பவானி..
“ என்ன வீரா..?” என்று கேட்க..
“ ஒன்னும் இல்ல..” என்று சொன்னவன்.. இங்கு இருந்தால், வேறு ஒரு பிரச்சனை வர கூடும் என்று நினைத்து தான் மீண்டும் தன் ட்ரவல்ஸ்சுக்கு சென்றது..
அங்கும் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.. தமிழை பார்த்தாளே தெரிந்தது.. அவள் அழுது இருக்கிறாள் என்று.. சாப்பிட்டது போலவும் தெரியவில்லை.. இந்த அம்மா.. ஏன் இப்படி செய்யிறாங்க… நல்ல மாதிரி தானே போயிட்டு இருந்தது.. ஏன்.?.ஏன் ? என்ற கேள்வியே அவனுக்குள் மீண்டும் மீண்டும் எழுந்தன..
அறையில் வந்த இளாவுக்கு இருக்கும் பொருட்களை தூக்கி போட்டு உடைக்கும் ஆத்திரம் எழுந்தது.. மனம் ஒரு குரங்கு என்று சொல்வது
உண்மை என்பது மெய்ப்பிக்கும் வகையாக.. இவ்வளவு நேரமும் வீரா நயனியை அடித்தது.. தப்பு.. என் சுயநலத்திற்க்காக தான் வீராவை மணந்தேன்.. பழி வாங்க என்பது எல்லாம் கண் கட்டும் செயல் என்று தன்னையே பழித்து கொண்டு இருந்த இளா..
இப்போது நயனி தன்னை பார்த்ததும் எழ பார்த்தது.. பாவனியின் பேச்சு.. வீரா எதுவும் சொல்லாது இருந்தது.. இதை எல்லாம் நினைக்க நினைக்க சத்தம் போட்டு கத்த வேண்டும் போல இருந்தது.. இல்லை என்றால் பொருட்களை தூக்கி போட்டு உடைக்க வேண்டும் போலவும் ஆவேசம் எழுந்தன..
அது கொடுத்த தாக்கத்தில் மீண்டும் ஹாலுக்கு கோபத்துடன் இளா வர.. அங்கு ஒருவரையும் காணும்.. ஒருவர் இருந்து இருந்தால் கூட போதும்..
“ என்ன நினைத்து கொண்டு இருக்கிங்க..?” என்று கேட்கும் ஆவேசத்துடன் தான் இருந்தாள்.. நல்ல வேலை யாரையும் காணும்.. அது யாருக்கு நல்ல வேலை என்பது பின் தெரியும்..
இதோ மீண்டும் வீராவுக்கு போனில் அழைத்தாவது சண்டை போடலாம் என்று தன் செல்லை கையில் எடுத்தவளுக்கு, வீராவின் எண்ணையும் அவள் செல்லில் ஸ்டோர் செய்து வைக்கவில்லை..
மனப்பாடமாக செல்லில் பட்டனை தட்ட அவனின் பேசியின் எண்ணும் அவளுக்கு தெரியவில்லை.. சீ என்று மீண்டும் செல்லை கட்டிலில் போட்டவள்.. யாரிடம் கேட்பது ..அத்தையிடம் நயனியிடம்.. என்று நினைத்தவளின் மனநிலை இப்போது கொஞ்சம் மட்டு பட்டதால்..
வேண்டாம்..
இப்போது அவர்களிடம் பேசினால் சண்டை பெரியதாக ஆக கூடும் என்று நினைத்து கொண்டு இருந்தவளுக்கு சட்டென்று ஒரு நியாபகம்.. பேசியில் ட்ரவல்ஸ் பெயரை போட்டு ட்ரவல்ஸ் தொலை பேசி எண்ணில் அழைக்கலாம் என்று நினைத்து கொண்டுஇளா பேசியை கையில் எடுத்த போது தான் தெரியாத எண்ணில் இருந்து அவளுக்கு அழைப்பி வந்தது..
எப்போதும் இளாவின் பழக்கம் தெரியாத எண்ணில் இருந்து வந்தால் உடனே எடுக்க மாட்டாள். அதே பழக்கத்தில் எடுக்காது தான் விட்டாள்..
ஆனால் மீண்டும் மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வரவும்.. ஒரு வேலை கணவன் அழைக்கிறானோ என்ற சந்தேகம் இளாவுக்கு வந்தது..
தனக்கு அவன் எண் தெரியாது… அவனுக்கு என் எண் தெரிந்து இருந்தால், அப்படி ஒரு சிந்தனை இளாவுக்கு வந்த உடனே.. மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வரவும், சட்டென்று அந்த அழைப்பை எடுத்து விட்டாள்..
இப்போது அழைத்தவர்கள் இளா.. “ ஹலோ.. ஹலோ.. “ என்று பேசியும் பேசியின் அந்த பக்கத்தில் இருந்து எந்த சத்தமும் இல்லாது போக..
யாரோ விளையாடுகறார்களா..? என்று பேசியின் அழைப்பை துண்டிக்கும் சமயம்..
அழைப்பில் இருந்தவர்கள்.. “ இ..ளா..” என்ற அந்த அழைப்பும் அந்த குரலும் எங்கோ கேட்ட நியாபகம்.. ஆனால் என்ன யோசித்தும் யார்..? என்று அவளின் நியாபகத்தில் வரவில்லை..
மீண்டும் மீண்டும். “ இ..ளா எப்ப..டி இரு..க்கேம்மா..” என்று தொடர்ந்தால் போல பேசிய பேச்சில் இந்த குரல் முன் கேட்ட நியாபகம்.. எட்டு வருடங்கள் முன்..
அவளின் அந்த நியாபக சக்தியை உறுதிப்படுத்தும் வகையாக.. “ அ..ப்பா பேசுறேன் மா..” என்ற அந்த வார்த்தையில் இத்தனை வருடங்கள் மனதில் அழுத்தி வைத்து இருந்த துக்க பந்து மேலே எழுந்து வந்ததின் தாக்கத்தை, இளாவின் மனது தாங்க முடியாது இளா தரையில் விழுந்தாள்…
அப்போது தான் நயனியை சாமாதானம் படுத்தி விட்டு ஹாலுக்கு வந்த பவானிக்கு இளா சாப்பிடாதது அவர் மனதை குத்த.. சரி சாப்பிட அழைக்க தன் அறைக்கு சென்ற போது இளா விழுவதை பார்த்தவருக்கு பகீர் என்றாகி விட்டது…