வீரா பவானி சொன்ன அந்த மருத்துவமனைக்குள் நுழைந்த போது அவன் அம்மா பதட்டத்துடன் அந்த வராண்டாவில் நின்று கொண்டு இருந்தார்.. அவர் பக்கத்தில் அதோடு பதட்டத்தோடு சுகன் நயனி நின்று கொண்டு இருவரும் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டு இருப்பதை பார்த்த வாறு தன் நடையில் இன்னும் வேகத்தை கூட்டி அவர்கள் முன் நின்ற போது..
பவானி வீராவை பார்க்கவில்லை.. ஆனால் நயனியும், சுகனும் இவனின் நடையின் சத்தத்தில் பேசிக் கொண்டு இருந்தவர்கள் வீராவை பார்த்ததும். தங்கள் பேச்சை நிறுத்தியதோடு மட்டும் அல்லாது, அருகருகே நின்று கொண்டு இருந்தவர்கள் சட்டென்று கொஞ்சம் விலகி நின்றும் கொண்டனர்..
வீரா இதை எல்லாம் கவனிக்கவில்லை.. அப்படி கவனித்து இருந்தாலுமே, தவறாக எல்லாம் நினைத்து இருக்க மாட்டான் தான்..
ஆனாலுமே இப்போது அதாவது அவன் தன் ட்ரவல்ஸில் இருந்த சமயம்.. பவானி அழைத்து..
“ இளாவை ஆஸ்பிட்டலில் சேர்த்து இருக்கிறேன்..” என்று சொல்லி மருத்துவமனையின் பெயரை சொன்னதோடு சரி..
என்ன ஏது என்று ஒன்றும் கூறவில்லை.. வழு முழுவதும் இதே யோசனையும், பயமும் தான்… என்ன திடிர் என்று ஒன்றும் புரியவில்லை..
தன் இருசக்கர வாகனத்தை ஒட்டும் நிலையில் அவன் இல்லாததால், தங்கள் ட்ரல்ஸ் காரையே தான் ஒரு ஒட்டுனரோடு அன்னை சொன்ன மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது..
வரும் வழியில் அன்னைக்கு பேசியில் அழைத்தான் தான்.. ஆனால் பவானி மீண்டும்.. “ வா வீரா… “ என்று விட்டார்.. பின் மீண்டும் அவன் அன்னைய பேசியில் அழைக்க முனையவில்லை..
அதனால் வீராவின் மொத்த கவனமும் மனைவிக்கு என்ன என்பதிலேயே தான் இருந்தது..
நயனி.. “ அண்ணா..” என்றதில் தான் பவானி மகனை பார்த்தது..
வீரா என்ன என்று கேட்கும் முன் பவானி.. “ நான் காலையில் இருந்து சாப்பிடவில்லையே.. என்று சாப்பிட கூப்பிட தான் போனேன்.. வீரா.. அப்போ தான் இளா.. விழுந்தாள்.. என் முன் தான் விழுந்தாள்..” என்று கொஞ்சம் பயத்தோடு தான் மகனிடம் நடந்ததை சொன்னார்..
அவர் மிகவும் பயந்து விட்டார்… இளாவை அப்படி பார்த்ததுமே காலையில் இருந்து சாப்பிடாததில் மயங்கி விழுந்து விட்டாளோ.! என்று பயந்து போய் விட்டார்..
விரைந்து சென்று தண்ணீர் எடுத்து முகத்தில் தெளித்து என்று என்னவோ செய்தும் கூட, இளாவின் மயக்கம் தெளியாததில் இன்னும் அவருக்கு பயம் கூடி போய்..
“நயனி ..நயனி..” என்று மகளை அழைத்தார்..
தன் அறையில் பேசியில் சுகனோடு பேசிக் கொண்டு இருந்தவள், அன்னையின் பயந்த குரலில் பேசிக் கொண்டு இருந்த பேசியை அணைக்காது குரல் வந்த திசையான அன்னையின் அறைக்கு ஒடினாள்..
அங்கு இளா விழுந்து கிடப்பதையும். அம்மா பயத்துடன் அமர்ந்து இருப்பதையும் பார்த்து..
“ அம்மா இளாவுக்கு என்ன ஆச்சி..?” என்று கேட்டவளின் குரலிலும் பதட்டமே..
காரணம் பார்த்த உடனே நிலையை அவள் கிரகித்து கொண்டு விட்டாள்.. மயக்கம் தெளிய வைக்க எடுத்து வந்த தண்ணீர் சொம்பும்.. இளாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து என்ன ஊற்றி விட்டு இருக்கிறார்கள் என்று இளாவின் முகத்தையும் தான்டி வழிந்து ஒடிய நீரின் நிலை புரிந்து அவளுமே பயந்து விட்டாள் தான்..
அந்த பயத்தில்.. “ காலையில் நடந்த பிரச்சனையில் ஏதாவது செய்து கொண்டாளா..?” என்று கை பேசியின் அழைப்பில் சுகன் இருப்பது தெரியாது தன் அன்னையிடம் பயத்தை வெளிப்படுத்தினாள்..
பவானியோ.. “ இருக்காது.. காலையில் இருந்து சாப்பிடாதது மயக்கம் வந்து இருக்கலாம்..” என்று அவர் தன் சந்தேகத்தை கூறினார்..
நயனியோ.. “ மயக்கமா இருந்து இருந்தால், இவ்வளவு தண்ணீர் ஊற்றியதற்க்கு மயக்கம் தெளிந்து இருக்குமே..” என்று நயனி பேச்சுக்கு பவானி பதில் அளிக்கும் முன் அவர்கள் முன் நின்றான் சுகதீபன்..
பேசியில் நயனியின் பேச்சை கேட்டவனுக்கு என்னவோ போல் ஆகி விட்டது..
அதுவும் காலை நடந்த சண்டை.. சாப்பிடவில்லை என்றதில் சிறுவயது முதலே தன்னோடு வளர்ந்தவள்.. பசி தாங்க மாட்டாள் என்று கூட வளந்த பாசம் அனைத்தையும் பின் தள்ளி விட்டு வீராவின் வீட்டுக்கு என்ன பவானியின் அறைக்குள் நுழைய வைத்து விட்டது..
பவானி அந்த சமயம் சுகனை எதிர் பார்க்கவில்லை.. பார்த்ததுமே முதலில் ஒரு ஆசுவாசம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கிடைக்கும் உதவியால்..
பின் இளாவின் உறவினர் என்றதில், பதட்டத்துடன் ஒப்புதல் வாக்குமூலம் போல்.. என்ன என்று தெரியல சுகன் தம்பி.. மதியத்தில் இருந்து சாப்பிட வரல..” என்று கூறியவனின் பேச்சை எல்லாம் கருத்தில் கொள்ளாது தன் அத்தை மகளை கையில் தூக்கி விட்டான்..
நயனிக்கு அந்த நிலையிலும்.. “ சுகன் ..” என்று தன் குரலில் ஆட்சபனையை காட்டினாள்..
ஆனால் சுகனோ அதை எல்லாம் காதில் வாங்கும் நிலையில் இல்லை.. அவர்கள் வீட்டு வாயிலில் நின்று கொண்டு இருந்த ட்ரவல்ஸ் காரை நோக்கி சுகன் நடக்கும் போதே பவானி அதன் சாவீயை எடுத்து வந்து காரின் கதவை திறந்து வைத்தார்..
பின் எந்த பேச்சும் இல்லாது இதோ இங்கு வந்து சேர்த்து விட்ட பின் தான் பவானி வீராவை அழைத்தது.. அவருக்கே ஒன்றும் விளங்காத போது வீராவுக்கு என்ன என்று அவர் சொல்வார்..
வீரா கேட்கும் போது தான் மருத்துவர் அங்கு வந்தது.. வந்தவர்.. “ மைக்ரேன் இருக்குறங்க நேரத்திற்க்கு சாப்பிடனும்.. ரொம்ப எல்லாம் டீப் திங்கிங்க் இருக்க கூடாது.. நல்ல தூக்கம் வேண்டும்.. இல்லை என்றால் அதன் விளைவு இது தான்.. அதோட ரொம்ப தடவை வாந்தி எடுத்துட்டு இருந்து இருக்காங்க..
உடம்பில் உள்ள நீர் எல்லாம் வடிந்து விட்டது.. அதோட அவங்க காலையில் இருந்து சாப்பிடல போல.. இப்போ ட்ரீப்ஸ் ஏத்தி இருக்கு.. இன்னும் கொஞ்ச நேரத்தில் சரியாகி விடும்” என்றதும் வீராவுக்கு என்னவோ போல் ஆகி விட்டது..
திருமணம் முடிந்து நாள் கணக்கில் தான் ஆகிறது.. காலையில் இருந்து சாப்பிடவில்லை.. யாரும் சாப்பட வைக்கல.. அதோட வாந்தி.. வீரா என்ன வீரா ஆசைப்பட்டு கல்யாணம் செய்து கொண்டு வந்தா மட்டும் போதுமா..? என்று அவன் மனது எடுத்து உரைத்தது..
இளா கண் விழிக்கும் போது இளாவின் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் வந்து விட்டனர்,… சுகன் உபயத்தால்..
இளா வீட்டவர்களை பார்த்த நயனி.. “ அது தான் ஒன்னும் இல்ல என்று தான் டாக்டர் சொல்லிட்டார் தானே.. ஏன் இதை பெரியது படுத்துற..?” என்று கோபத்துடன் நயனியின் பேச்சுக்கு சுகன் பதில் அளிக்கவில்லை..
அவனுக்குமே என்ன இது என்பது போல் தான் மனது இருந்தது..
இளாவை பிடிக்கும்.. திருமணம் செய்யும் நோக்கத்தோடு இல்லை.. ஆனாலுமே இளாவை போல் தான் சுகனும்..
சுகனுக்குமே இளாவுக்கு மைக்ரேன் இருப்பது தெரியும்.. சின்ன வயதில் இது போல் அழுது வாந்தி எடுத்து என்று இருந்து இருக்கிறாள்.. அப்போது அவள் டெல்லியில் இருந்து வந்த புதியது..
ஆனால் அடுத்து அவள் தலை வலி என்று கூட சொல்லாது தன் நிலை உணர்ந்து அனைத்தும் நேரத்திற்க்கு செய்து விடுவதோடு.. டீப் திங்கிங் எல்லாம் வைத்து கொள்ள மாட்டாள்..
வீட்டில் ஏதோ பிரச்சனை என்ற அளவில் தன் வீட்டிற்க்கு தெரியப்படுத்தி விட்டான்..
வந்தவர்கள் அப்போது தான் மயக்கம் தெளிந்த இளாவின் கை பற்றி கொண்டார் அவள் மாமா கார்முகிலன்..
“ என்னடா இளா..” என்று கேட்டது தான் தாமதம்..
“ மாமா அந்த ஆள் போன் செய்தார் மாமா.. என் போன் நம்பர் எப்படி அவருக்கு கிடைத்தது..?” என்று கேட்கவும்..
கார்முகிலனுக்கே யார் போன் செய்தது.. ? மருமகள் யாரை பற்றி சொல்கிறாள் என்று தெரியாத போது.. பக்கத்தில் நின்று கொண்டு இருந்த வீராவுக்கு என்ன என்று தெரியும்.
அவன் புரிந்து கொண்டது.. யாரோ ஒருவன் தன் மனைவியிடம் தவறாக பேசி இருக்கிறான் என்பதே..
கோபத்துடன்.. “ என்ன பேசினான்..?” என்று கேட்டவனுக்கு..
“ ஒன்னும் ஒன்னும் பேசல.. நான் அப்பா பேசுறேன் என்று அந்த ஆள் சொன்னதுமே நான் வைத்து விட்டேன்..” என்ற இளாவின் பதிலில் இரு குடும்பமும் அதிர்ந்து விட்டன..
தாமரைக்கு என்ன திடிர் என்று.. உறவு புதுபித்து கொள்வது.. ஏதாவது திட்டத்தோடு போன் செய்து இருக்கிறாரோ.. என்ற கவலை.., அதே கவலை தான் கார் முகிலனுக்கும்..
ஆனால் வீராவின் குடும்பத்திற்க்கோ.. “ இளா அப்பாவா..? அப்போ அவர் உயிரோடு தான் இருக்கிறார்..?” என்று பவானி அதிர்ந்து போய் கேட்டார்..
அப்பா இல்லாத பெண் என்றது.. இறந்து விட்டார் என்று தான் இவ்வளவு காலமும் நினைத்து கொண்டு இருந்தார்..
ஆனால் இப்போது என்ன புதியதாக என்று சந்தேகத்துடன் தாமரை கழுத்தில் அவர் பார்வை சென்றது..அங்கு தாமரை சுமங்கலிக்கு உண்டான எந்த அங்கீகாரமும்
இல்லாது சின்ன ஜெயின் அதுவும் டாலரோடு அந்த ஜெயின் வெளியில் இருந்ததால், அது தாலி கொடியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழாத அளவுக்கு இருந்தது..
வீரா தாமரையின் கழுத்தை எல்லாம் ஆறாயவில்லை.. ஆனால் வீராவின் திகைத்த முகத்தை பார்த்த கார்முகிலன் அனைத்தும் சுருக்கமாக சொல்லி விட்டார்..