“ ஒ..” என்று மட்டுமே கேட்டு கொண்டது.. அவனுமே இளாவின் அப்பா இறந்து விட்டார் என்று தான் நினைத்து இருந்தாம்.
இப்போது உயிரோடு இருக்கிறார்.. ஆனால் விவாகரத்து ஆகிவிட்டது என்பதில் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை..
அதனால் தான் இளாவிடம்.. “ அவர் பேசினா இப்படி மயக்கம் போடும் அளவுக்கு நீ பயந்து விடுவாயா என்ன..?” என்று இளாவுக்கு தைரியம் அளித்து கொண்டு இருந்தான்..
ஆனால் பவானிக்கு அதை சாதரணமாக எடுத்து கொள்ளும் மனப்பக்குவம் இல்லை போலும், கார் முகிலன் வீராவிடம் இளாவின் தந்தையை பற்றி கூறுவது பவாயின் காதிலும் விழுந்தது..
அதனால் தனியாக அவருக்கு சொல்ல தேவையில்லாது தெரிந்து விட்டது தான்..
இருந்தும்.. “ அப்பா இல்ல என்றதும் நான் இறந்து விட்டார் என்று தான் நினைத்தோம்.. இப்படி என்று தெரியாது..” என்று தன் முகத்தில் பிடித்தம் இன்மையை அப்பட்டமாக காட்டிய வாரே சொன்னார்..
விவாகரத்து என்றால், அந்த விவாகரத்திற்க்கு காரணம் அந்த ஆண்மகனின் ஒழுக்கம் அற்ற செயலே காரணமாக இருந்தாலுமே, பழியை போடுவடு பெண்கள் மீது தானே..
அதுவும் பெண்களே என்பது தான் நம் சமூகத்தின் சாபகேடு ஆயிற்றே.. இதில் பவானி மட்டும் என்ன விதி விலக்கா… அந்த திட்டத்திற்க்கு உட்பட்ட பவானி.. அதோடு இளா மயங்கியதில் இருந்து தன் மீது பழி விழுந்து விடுமோ என்ற பயம் இரண்டும் சேர்ந்ததால்..
“ விவாகரத்தா..? ஏன் சொல்லலே.. தெரிந்து இருந்தால்..” என்று இப்படியாக அடுத்து வார்த்தை ஏற்க இறக்கத்தோடு பேச வைத்தது..
கார்முகிலனுக்கு பவானியின் இந்த பேச்சு கோபத்தை கொடுத்தது.. அதுவும் மருமகள் உடல்நிலை சரியில்லாது இப்படி இருக்கிறாள்.. இந்த நிலையில் முகத்தை அப்படி வைத்து கொண்டு என்ன பேச்சு என்பது போல் தான் அவர் முகம் பாவனை சென்றது..
முன் தெரிந்து இருந்தால் என்ன செய்து இருப்பாங்கலாம் என்று நினைத்து கொண்டவருக்கு பதிலாக அவர் மகன் வீராவே..
“ இதில் என்னம்மா இருக்கு… ? இறந்தால் என்ன.. விவாகரத்து ஆகி இருந்தால் தான் என்ன..? என்னை பொறுத்த வரை ஒன்று தான்.. இப்போ இளாவின் உடல் நிலை மனநிலை அது தான் முக்கியம்..” என்ற பேச்சில்..
இப்போது நயனி “ இல்ல அண்ணா.. எனக்கு தெரிய தேவையில்லை.. நான் தான் பிரண்ட் பிரண்ட் என்று இருந்து இருக்கேன்.. என் கிட்ட தான் சொல்லலே.. ஆனால் நீங்க இரண்டு பேரும் விரும்பி கல்யாணம் கூட செய்து கொண்டிங்க . இளா உன் கிட்ட கூட சொல்லலே என்று தான் எனக்கு ஆதங்கம்..” என்று பேச்சை ஒரு மாதிரியாக பேசினாள்..
அதோடு.. பார் இளா காதலித்த பெண் உன்னிடம் உண்மையை சொல்லவில்லை என்பதை தன் அண்ணனுக்கு தெரியபட்டுத்தும் நோக்கத்தோடும் இப்படி பேசினாள்..
அவர்கள் காதலித்த லட்சணம் அவர்கள் இருவருக்கும் மட்டுமே இருக்கும் ரகசியம் ஆச்சே.. அதனால் வீரா தன்னிடம் கூறவில்லை என்று எல்லாம் நினைக்கவில்லை.. அதே போல் தான் நயனி நட்பு என்ற பேச்சில் இப்போது தங்கையை ஒரு மாதிரியாக தான்.. அப்பட்டமாக சொன்னால் சந்தேகத்துடன் தான் அவளை பார்த்தது..
திருமணம் ஆனதில் இருந்து நயனி தமிழிடம் நல்ல முறையில் பேசி அவன் பார்க்கவில்லை.. திருமணம் முன் அப்படி நயனி நயனி என்று சொல்லி அவள் வீட்டுக்கு செல்பவள் ஒரே வீட்டில் இருக்கும் போது பேச்சு இல்லை என்றால், அவன் மனர்ஹிஏக்கு ஏதோ இருப்பது போல் தோன்றியது..
அதற்க்குள் மருத்துவர் நாளை டிச்சார்ஜ் செய்து கொள்ளலாம் என்று விட.. பின் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு வீரா மட்டுமே இளாவோடு இருந்தது..
தாமரை.. “ சுகனிடம் சாப்பாடு கொடுத்து விடுகிறேன்..” என்று சொன்ன போது கூட..
“ இல்ல அத்தை இங்கு கேண்டினில் பார்த்து கொள்கிறேன் ..” என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டான்..
தாமரைக்கு மட்டும் அல்லாது கார்முகிலன் சந்திரமதி ஏன் சுகன் தீபனுக்கு கூட இளாவை விட்டு போக மனது இல்லாது தான் வீடு வந்தனர்..
வழி முழுவதும் கூட தாமரை.. “ இளா சாப்பிடாது இருந்தால், அழுதா மட்டும் தான் இப்படி ஆகும்.. டெல்லியில் இருந்து வந்த புதியதில் தான் அப்படி இருந்தா.. பின் இல்ல…
காலையில் இருந்து சாப்பிடவில்லை.. ஆனால் அந்த வீட்டில் இருக்கிறவங்க ஏன் என்று அவளை கவனிக்கவில்லையே..?” என்று தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை தன் அண்ணன் குடும்பத்திடம் கொட்டினாள்..
தாமரைக்கு மட்டும் அல்லாது அவர் அண்ணன் குடும்பத்தினற்க்கும் இதையே தான் நினைத்தனர்… ஆனால் தாமரையிடம் சொல்லவில்லை.. அவள் பயந்து விடுவாள் என்று..
அதோடு அந்த சந்தானம் எதற்க்கு அழைத்தான்.. அதுவும் இளாவிடம் உன் அப்பா என்று உறவு பாராட்டி கொண்டு.. இத்தனை நாள் யாருக்கு அப்பாவா இருந்தானோ.. அப்படியே இருந்து தொலைக்க வேண்டியது தனே..
இப்போது என்ன புது பாசம்.. என்று மனதில் இருப்பதை அவர் அவர் கருவிக் கொட்டிய வாறு தான் வீடு வந்தனர்..
சந்தானத்தை பற்றிய கோபத்தை அனைவரும் வார்த்தைகளாக கொட்டினாலும், தானரை கொட்டவில்லை.. காரணம் பயம்.. இப்போது தான் மறந்து நிம்மதியாக இருக்கிறேன்.. புதுசா என்ன இது..?
ஆதுவும் பவானியின் அந்த பார்வை.. இளாவின் அப்பா உயிரோடு தான் இருக்கிறார் என்று தெரிந்ததும் தன்னை ஆராய்ந்த அந்த பார்வையே அவர் முன் வந்தது..
தாமரையும் இதை தான் எண்ணினாள்.. தவறு செய்தது ஆண்.. தண்டனை பெண்களுக்கா என்று..
ஆனால் கடவுளின் முன்.. .. அது ஆணாக இருந்தாலும் சரி.. பெண்ணானாக இருந்தாலுமே, தண்டனை உண்டு..
இதோ எட்டு வருடங்கள் முன்.. மகளை கவனிக்காது காதலியின் போதையில் அவள் மகளுக்கு அப்பாவாக இருந்த சந்தானத்தின் நிலை..டெல்லியில்..
சென்ற வருடம் வரை சந்தானத்தின் இப்போதைய மனைவி சுப்ரஜாவின் மகள் பவித்ராவுக்கு அப்பாவாக இருந்தார்.. சரியான தந்தையாக படிப்பு.. என்று அனைத்தும் அந்த பெண்ணுக்கு அவர் தான் செய்தார்..
சுப்ரஜாவுக்கும், சந்தானத்திற்க்கும் அடுத்தும் ஒரு பெண் குழந்தை பிறந்தது… இப்போது அந்த குழந்தையின் வயது ஏழு… முன் தோன்றாத அந்த வேற்றுமை, அதாவது சந்தானம் பவித்ராவை நடத்தும் விதத்திலும், இவர்களுக்கு பிறந்த காவ்யாவை நடத்தும் விதத்திலும் வேற்றுமை தெரிகிறது மாம்…” என்று கடந்த சில வருடங்களாகவே பவித்ரா தன் அன்னையுடம் புகாரை வாசித்து கொண்டு தான் இருக்கிறாள்..
அது ஒரு வகையில் சரி தான்.. ஒரு வகையில் தான் சரி.. ஆனால் பல வகையில் சந்தானம் பவித்ராவுக்கு நல்ல தந்தையாக.. நன்றாக கவனித்தார் என்று தான் வேண்டும்..
நல்ல தந்தையாக இருக்கிறாரே ஒழிய ..பாசமான தந்தையாக இல்லை.. அவரின் அந்த பாசத்திற்க்கு மொத்த சொந்தக்காரியாக அவர் மகள் காவ்யா ஆக்கிரமித்து கொண்டாள்..
இவர்கள் திருமணம் முடிந்த புதியதில் தான் பவித்ரா பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியது.. பின் வந்த ரிசல்ட் நல்ல மதிப்பெண் தான் எடுத்தாள்..
ஆனால் அடுத்து படிப்பு என்ன என்று கேட்ட போது சந்தானம்..
“ அவளை கேள்.. எவ்வளவு பணம் ஆகும் என்று சொல்..” இது தான் சந்தானம் பவித்ராவிடம் காட்டிய ஈடுபாடு..
அதே தன் மகள் காவ்யா பேபி க்ளாஸ் சேர்க்கும் போது.. எங்கு ..? எப்போது.. என்று அரம்பித்து.. அதன் தரத்தை பார்த்து.. சேர்த்த பின் இவர் ஒரு வாரம் விடுமுறை எடுத்து கூட்டி கொண்டு சென்று கூடவே இருந்து அழைத்து வந்து அப்படி ஒரு ஆர்ப்பாட்டம் செய்து விட்டார்..
அது என்னவோ வயது கடந்து வந்த குழந்தை என்பதால், காவ்யா மீது அந்த அளவுக்கு பாசம் வைத்து இருந்தாரோ.. இல்லை மாற்றன் குழந்தைக்கு தந்தை அந்த மென்டாலி அவர் உணரவில்லை என்றாலுமே, அவர் உள்மனது.. அனைத்திலும் பவித்ராவோடு காய்வா பெஸ்டாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி செய்தாரோ.. சந்தானம் காவ்யா என்று வரும் போது அனைத்தையும் பார்த்து பார்த்து தான் செய்தார்..
சுப்ரஜாவுக்கு இரண்டும் தன் குழந்தைகள்.. அதனால் இது தவறாக அவள் கண்ணுக்கு படவில்லையோ என்னவோ..
ஆனால் பவித்ரா தன் சொந்த தந்தையை விட்டு வரும் போது அவள் வயது பதினாங்கு… விவரம் தெரிந்த வயது.. திருமணமும் அப்படியே.. இதில் தனிப்பட்டு அவள் எந்த அளவுக்கு பாதிக்கபட்டு இருப்பாள்..
அதுவும் குறிப்பாக அவள் படிக்கும் இடத்தில்… ஆம் அனைத்தும் கடந்து வந்தாள்.. ஏன் என்று அது அவளுக்கே புரியவில்லையா.. இல்லை இந்த அமைதிக்கு பின் ஏதாவது ஒரு காரணம் இருக்கிறதா..? தெரியாது ..
அதனால் சில வருடங்கள் எல்லாம் சுமூகமாக தான் சென்று கொண்டு இருந்தது..
ஆனால் இடை இடையே பவித்ரா மட்டும் அவ்வபோது சுப்ரஜாவிடம்.. “ டாடிக்கு காவ்யாவுக்கு என்றால், அவர் எதையும் பார்ப்பது இல்லை.. என்ன இருந்தாலும்..” என்று அதோடு தன் பேச்சை நிறுத்தி விடுவாள்..
அப்போது பவித்ரா கல்லூரியில் படித்து கொண்டு இருந்தாள்.. நல்ல கல்லூரி பவித்ரா இந்த கல்லூரி.. இந்த சப்ஜெக்ட் என்று சொல்லி விட்டாள்..
இவள் எடுத்த மதிப்பெண்ணுக்கு மேனஜ்மெண்ட் கோட்டாவில் தான் கிடைத்தது.. சந்தானம் ஒரு வார்த்தை சொல்லாது பணத்தை கட்டினார் தான்..
ஆனால் பவிதாரவுக்கு பணம் கட்டும் போது அவர் மனதின் ஒரத்தில் இளா இப்போது பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்து இருப்பாள்.. என்ன சப்ஜெக்ட் எடுத்து இருப்பாள்.. அவள் மாமா நல்ல பள்ளியில் சேர்த்து இருப்பாரா..? என்று அவரால் எண்ணமால் இருக்க முடியவில்லை..
அந்த எண்ணம் அப்போது மட்டும் அல்லாது அவ்வபோது.. அதுவும் குறிப்பாக பவித்ராவுக்கு அவர் ஏதாவது செய்தால் தொடர்ந்தது தான்.. இருந்தும் பவித்ராவுக்கு செய்வதை அனைத்தும் செய்து தந்தார் தான்..
சுப்ரஜாவின் நிலையும் பவித்ரா .. சந்தானத்தை பற்றி சொல்லும் போது ஊசலாடும் நிலையில் தான் இருந்தார்..
அவர் வேலைக்கு செல்லாத பெண்மணி… அனைத்தும் சந்தானத்தை எதிர் பார்த்து தான் இருந்தார்… சந்தானமும் அனைத்தும் செய்தார்.. இது போதுமே என்ற எண்ணம் தான் அவருக்கு..
அதோடு அவருக்குமே கணவன் காவ்யா எனும் போது முழு ஈடுபாட்டோடு செய்பதை கவனிக்கிறார் தானே.. அதனால் பவித்ராவிடம் தான்..
“ இதை எல்லாம் பெரியதாக எடுத்து கொள்ளாதே.. உனக்கு டாடி நீ கேட்டது எல்லாம் வாங்கு தருகிறார் தானே.. இன்னும் என்ன..?” என்று சொல்லி சமாதானம் படுத்தி விடுவார்..
அதனால் மேலுக்கு எந்த பிரச்சனையும் இல்லாது அந்த குடும்பம் நன்றாக சென்று கொண்டு இருப்பது போல் தான் ஒரு வர்ணம்..
அந்த மேல் பூச்சு கூட பவித்ரா வேலை கிடைக்கும் வரை தான்.. வேலையும் கிடைத்து,, அவளுக்கு ஒரு நல்ல காதலனும் கிடைத்த பின்… பவித்ராவின் செயல்களில் பல மாற்றங்கள்..
குறிப்பாக அவள் காதலன் சொன்ன.. “ என் பேரன்ஸ் நல்லவங்க தான்.. லவ் மேரஜ் ஒத்து கொள்வாங்க தான்.. ஆனா உங்க அம்மாவுடையது.. அது லவ் மேரஜ் கணக்கா என்று எனக்கே குழப்பமா இருக்கும் போது என் பேரன்ஸ் அதை எப்படி எடுத்து கொள்வாங்க என்று எனக்கு தெரியல..” என்று அவ்வப்போது காதலனின் பேச்சு..
அதோடு இப்போது எல்லாம் பணம் தேவைக்கு சந்தானத்திடம் கேட்கும் நிலையில் இல்லாது சுயசம்பாத்தியம் கொடுத்த அந்த நிமிர்.. என்றும் சொல்லலாம்.. இல்லை திமிர் என்றும் சொல்லலாம்… மேல் பூச்சான அந்த வர்ணமும் ஒரு நாள் பெய்த பலத்த மழையில் கரைந்து விட்டது..