தமிழின் அந்த பார்வையை வீராவினால் ஒரு நிலைக்கு மேல் பார்க்க முடியவில்லை.. அதே போல் தான் தமிழுக்கும் அவனை பார்க்க குற்றவுணர்ச்சியாக இருந்தது..
முதலில் பிடித்து இருந்தும் அவனை பார்க்கவில்லை.. வீட்டில் சுகனை தனக்கு திருமணம் செய்யும் அந்த பேச்சினால், பின் பார்ப்பது என்ன கழுத்தில் கத்தி வைத்து தாலி கட்டு என்று சொன்னேன்.. அது பிடித்து இருந்தாலுமே, அப்போது தாலி கட்ட சொன்ன காரணம் வேறு தானே.. என்று நினைத்து தன்னை தானே வருத்தி கொண்டாள் இளந்தமிழ்..
இருவரின் அந்த பார்வையும் பெரியவர்கள் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தனர்.. ஆனால் சுகன் அவர்களின் அந்த பார்வையை ஆராயும் நோக்குடன் கவனித்தான்..
வீராவின் பார்வையிலும் தமிழ் மீது பிடித்தம் தெரிகிறது.. அதே போல் தான் தமிழின் பார்வையில் ஒரு தவிப்பு.. இது பிடிக்காது திருமணம் செய்து கொண்டவர்கள் போல் தெரியவில்லை.. என்று இவன் யோசிக்கும் போதே..
பவானி அவனின் அந்த யோசனையை தடை செய்வது போல்.. “நான் இப்போ தமிழ் பற்றி பேச வரல..” என்று பேச்சை ஆரம்பிக்கவும்.. மற்றவர்கள் வாய் திறவாது அமைதியாக இந்த அம்மா என்ன தான் சொல்கிறது கேட்போம் என்று இருந்தனர்..இந்த அம்மா தான் ஒரு நாள் நல்லா பேசுது.. ஒரு நாள் முறுக்கி கொள்கிறதே என்ற எண்ணத்தில்..
“நான் இப்போ என் பெண் நயனி விசயமா பேச தான் இங்கு வந்தோம்.” என்றதுமே சுகனிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது..
தன் வீட்டவர்கள் நயனி திருமணம் முடிந்த பின் என் வீட்டு பெண்ணை அனுப்புகிறேன் என்று சொன்னது.. அடுத்து நேற்று அவள் அண்ணன் தினம் ஒரு மாப்பிள்ளை போட்டோ கொண்டு வந்து தருகிறான் என்றாளே. தங்கள் காதல் தெரிந்து,. உறவு முறை அற்ற அந்த காதல் வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று அவசரமாக மாப்பிள்ளை பார்த்து விட்டார்களா..? ஒரே நாளில் எப்படி..? இப்போது நான் என்ன செய்ய வேண்டும்..? கடவுளே ஜாதி இனம் அந்தஸ்த்து அனைத்திற்க்கும் எதிர்த்து நிற்கலாம். ஆனால் இது போல் உறவு முறைகேடான விசயத்தில் நான் என்ன என்று பேசுவது… என்று மனதில் ஒரு பூகம்பம் வெடித்து கொண்டு இருந்தாலுமே, அவனால் வாயை திறக்க முடியாத நிலை தான்..
பெரியவர்களோ நயனிக்கு திருமணம் பேசி முடித்து விட்டார்கள் என்று நினைத்தார்கள். அதில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி..
ஆனால் அடுத்து வீரா சொன்ன… “நயனியை உங்க வீட்டிற்க்கு மருமகளா அனுப்பி வைக்க விருப்பபடுகிறேன்..” என்ற இந்த பேச்சை அங்கு இருந்த ஒருவரும் நினைத்து பார்க்கவில்லை.. ஏன் சுகனே அதிர்ந்து போய் தான் வீராவையும் அவன் அம்மாவையும் பார்த்தான்..
கார் முகில் தான்.. “தம்பி உங்களுக்கு உறவு முறை விவரம் தெரியல என்று நினைக்கிறேன்.. உங்க வீட்டு பெண் சுகனுக்கு முறை ஆகாது..” என்று விட்டார்.
அதற்க்கு வீரா. “எனக்கு தான் உறவு முறை தெரியாது என்றால், என் அம்மாவுக்கும் தெரியாதா அங்கிள்..” என்று கேட்டதும் தான்.. ஆமாம்.. என்று மீண்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.
“நயனிக்கு நான் சொந்த அண்ணன் கிடையாது அங்கிள்..” என்று விட்டான்.
அந்த செய்தி யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ.. சுகனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது.. அந்த சந்தோஷத்தில்..
“நயன் என் கிட்ட சொல்லவே இல்ல..” என்று சொல்லி விட..
இப்போது சுகனின் வீட்டவர்கள் தமிழை தவிர அனைவரும் அவனை அதிர்வுடன் பார்த்தனர்.. அவர்கள் பார்வையில் தான்.. நாம் வாய் விட்டு விட்டோம் என்று உணர்ந்தான்..
தமிழுக்கு சுகனின் அந்த பேச்சு.. மனதில் ஒரு வித விரக்தியை கொடுத்தாலுமே, வீரா சொன்ன விசயம்.. தமிழுக்கும் ஒரு நிம்மதியை கொடுத்தது என்று தான் சொல்லவேண்டும்.. அந்த மனநிறைவோடு. இப்போது வீராவை பார்த்தாள் தமிழ்.. வீராவும் தமிழை பார்க்க அவளின் அந்த நிம்மதியான முகம் வீராவுக்கும் ஒரு திருப்தியை கொடுக்க. அந்த தாக்கத்தில் இருவரின் இதழிலும் ஒரு சிறு புன்னகை வந்து போயின.
இப்போது பவானி.. “வீரா என் நாத்தனார் மகன்.. நீங்க எப்படி உங்க தங்கை மகளை பாசத்தோடு வளர்த்திங்கலோ.. அந்த அளவுக்கு நாங்களுமே பாசத்தோடு தான் வளர்ந்தோம்..
உங்க வீட்டில் சுகன் தமிழுக்கு உறவு முறை தெரியும்.. வயதில் ஒன்றாக வளர்ந்ததால் கல்யாணம் செய்யும் எண்ணத்தில் இருந்திங்க..
ஆனா வீரா அவன் அம்மா அம்மா பரிகொடுத்துட்டு என் வீட்டிற்க்கு வரும் போது மூன்று மாத குழந்தை.. இன்னும் கேட்டால் எனக்கு கல்யாணம் ஆகல.. குழந்தை வளர்க்க என்று தான் என்னை அவசரமா கல்யாணம் செய்து கொண்டார்… என் அம்மா வீடு அவ்வளவு வசதி எல்லாம் இல்ல.. எனக்கும் நயனி எங்க கல்யாணம் முடிந்து கொஞ்ச ஆண்டு கழித்து தான் பிறந்தான்..
அதனால இரண்டு பேரும் அண்ணன் தங்கையாக தான் வளர்ந்தாங்க.. இன்னை வரை.. இதோ இப்போ வரை நயனிக்கு இந்த விசயம் தெரியாது,. சொல்ல கூடாது என்று வீரா சொல்லிட்டான்.. அவர் அப்பாவுக்கும் அது தான் விருப்பம். ஒரே தாய் தகப்பனுக்கு பிறந்தவங்களா தான் அவங்க இன்னை வரை வளர்ந்துட்டு இருக்காங்க..” என்று எங்கு வீராவையும் நயனியையும் சேர்த்து ஏதாவது நினைத்து விடுவார்களோ என்ற பயம் பவானிக்கு. இந்த பயம் இப்போது கிடையாது.. அவள் திருமணம் என்று வந்தால் வந்து விடுமோ என்ற பயம் நீண்ட ஆண்டுகளாகவே பவானியின் மனதில் இருந்தது..
அவரின் பயத்தை சரியாக புரிந்து கொண்ட தாமரை இத்தனை நேரம் அமைதியா இருந்தவர்.. ஒரு பெண்ணை பெற்ற அம்மாவாக பவானியின் மனநிலையை புரிந்து கொண்டு..
“என்ன உறவு என்று முக்கியம் இல்லேங்க.. கூட வளர்ந்தது.. அதுவும் நயனிக்கு தெரியாது வேறு சொல்லி இருக்கிங்க. எப்படி வேறு மாதிரி வளர்ந்து இருப்பாங்க.” என்று கேட்டார்.
கார் முகில்.. வீராவிடம் “ உங்களுக்கு எப்போ தெரியும்.?” என்ற கேட்டதற்க்கு.
“நான் டெந்த் படிக்கும் போது அப்பாவே தான் என்னை கூப்பிட்டு சொன்னது.. அதுக்கு கூட இறந்த அந்த அப்பா வழி ஏதோ சொத்து விற்க.. பிரச்சனை. என் கிட்ட அவங்க பேச வராங்க.. அதுக்காக தான் சொன்னார்..எனக்கு அப்பா சொன்ன போது அவ்வளவு ஷாக்.. அப்பா என்று நினைத்தவர் மாமாவா..? என்று..
இந்த ஷாக் என் தங்கைக்கு வர கூடாது தான் அவளுக்கு இந்த விசயம் தெரியவே கூடாது என்று சொன்னேன்.. ஆனா அது இந்த அளவுக்கு வேறு பிரச்சனை எல்லாம் கூட்டி வந்து நிற்க்கும் என்று நான் நினைத்து பார்க்கல.” தமிழ் சுகனை பார்த்தவாறு கூறி முடித்தான்..
இப்போது மீண்டும் அங்கு அமைதி.. சுகனின் அம்மா சந்திரமதி தான். “எல்லோரின் பார்வைக்கும் நயனி உங்க தங்கை என்ற பிம்பம் தான் தெரியும்.. இப்போ நயனியை என் மகனுக்கு கட்டினா.. பார்ப்பவங்க என்ன நினைப்பாங்க..? எல்லோர் கிட்டேயும் சொல்லிட்டு இருக்க முடியுமா.?” என்று கேட்டார்.. அவர் கேட்டது நியாயமான கேள்வி தான்..
அதுவும்.. “நயனியை வேறு இடத்தில் கட்டி கொடுத்தால் இந்த பிரச்சனை இல்லையே..?” என்று தங்கள் வீட்டு பெண்ணை கட்டி கொடுத்த வீடு என்பதினால் நாசுக்காக மறுத்தார்..
மொத்தத்தில் சந்திரமதியின் கேள்வியில் அப்படி என்ன இங்கு கட்டி கொடுத்து ஆக வேண்டும் என்ற கேள்வி தான் மறைந்து இருந்தது,. அதற்க்கு உண்டான பதில் வீராவிடம் இருந்தது.. ஆனாலும் அதையும் நான் தான் சொல்லி ஆக வேண்டுமா என்று தான் சுகனை பார்த்தான்..
சுகனுக்கோ தடுமாற்றம்.. “தான் நயனியை விரும்புகிறேன்..” என்று இப்போது சொல்வதில் பிரச்சனை இல்லை தான்..
ஆனால் அதற்க்கு அடுத்து நடந்ததை சொன்னால், வீராவுக்கோ சுகன் சொல்வானா மாட்டானா..? இவனையா நயனி நம்பினாள் என்று நினைக்கும் போதே. தமிழ்..
“சுகன் அத்தானுக்கு நயனியை மேரஜ் செய்து வைத்து விடுங்க அத்தை.. அது தான் எல்லோருக்கும் நல்லது..” என்று விட்டு இருந்தாள்..
வீராவை திருமணம் செய்ய ஏதோ ஒரு காரணம் என்று முன்பே யோசித்து கொண்டு இருந்த கார் முகிலனுக்கும், சந்திரமதிக்கும் தமிழின் இந்த பேச்சில்..
“அப்போ நீ வீராவை கல்யாணம் செய்துக்க இது தான் காரணமா..?” என்று இருவரும் கேட்டதற்க்கு அவளிடம் பதில் இல்லை..
வீரா ஆமாம் என்று சொல்லி விடுவாளோ என்ற மனதில் அவ்வளவு பயம் இருந்தும் சாதாரணமாக அவளை பார்த்திருந்தான்..
ஆனால் அதை அவன் செயலில் காட்ட எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறான் என்று அவனுக்கு தான் தெரியும்..
“இப்போ தான் நயனி அவருடைய சொந்த தங்கை இல்லை என்ற விசயமே தெரியும் மாமா..” என்று கூறியவள்.. பின் இதை சொல்லலாமா என்று யோசிக்கும் போதே… அவளின் அன்னை..
“அப்போ சுகனுக்கு நயனியை கல்யாணம் செய்து வை என்று நீ ஏன் சொல்ற.. உன் கல்யாணம் உன் விருப்பம் என்பது போல் தானே சுகனுக்கு என்று ஒரு விருப்பம் இருக்கும்..” என்று கூறிய தாமரை மகளை நீ கொஞ்சம் பேசாது இரு என்று முறைத்திருந்தார்..
இது சின்ன விசயம் கிடையாது.. மகனின் திருமணம்.. அண்ணி நல்லவர்கள் தான் தன் மகள் மீது அக்கறையும் பாசமும் இருக்க போய் தான் இதோ இது வரை எந்த பிரச்சனையும் இல்லாது சென்று கொண்டு இருக்கிறது..
சந்திரமதியின் நல்லவர் என்ற அந்த பிம்பம். அவர் மகனின் நல்வாழ்வில் கை வைக்காத வரை தான்.. நாளை பின் சுகனுக்கு நயனியை திருமணம் செய்த பின் ஏதாவது பிரச்சனை என்று வந்தால், கண்டிப்பாக அண்ணி தன் மகளை பேசி விடுவார் அது நிச்சயம்..
ஆனால் வீராவுக்கோ தன் மனைவியிடம் இருந்து அவன் எதிர் பார்த்த. “இல்ல நான் விரும்பி தான் திருமணம் செய்தேன்..” என்ற பதில் வராது போனதில் சோர்வும்.. இன்னும் இவன் நயனியை விரும்புகிறேன் என்று சொல்லாது இருந்த சுகனின் மீது கோபம் வந்தது..
நயனி மண் குதிரையை நம்பி ஆற்றில் இருங்குவது போல் இவனை விரும்பி விட்டாளோ.. இல்லை என்றால் எந்த பைத்தியக்காரனாவது தன் காதலை வீட்டில் சொல்லாது.. அது என்ன தான் தனக்கு என்று பேசி இருக்கும் முறைப்பென் வீட்டில் இருந்தாலும், அதை சொல்லாது விரும்பிய பெண்ணை வைத்து இத்தனை செய்வானா..
அதுவும் இதில் அவன் விரும்பிய பெண்ணையும் பிரச்சனைக்குள் தள்ளி இருக்கிறான்.. தன் வீட்டில் அவனை நம்பி வளர்ந்த பெண்ணையும் பிரச்சனைக்குள் தள்ள பார்த்து இருக்கிறான்.. என்று கோபத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்..
சந்திரமதியோ.. “சுகனுக்கு என் அண்ணன் தன் பெண்ணை கொடுக்கனும் என்று முன்னவே ஆசை.. ஆனா அப்போ அவனின் அப்பா தமிழுக்கு கல்யாணம் செய்து வைக்கனும் என்று நினைத்து இருந்தார்.. ஆனா இப்போ அது இல்ல என்று ஆனதில் திரும்ப அண்ணன் தன் பெண்ணை கொடுக்கனும் என்று சொல்லி இருக்கார்.” என்ற இந்த பேச்சில்.
சுகன் சட்டென்று “நான் நயனியை விரும்புகிறேன் அம்மா.” என்று விட்டு இருந்தான்..
இவனின் இந்த பேச்சில் சந்திரமதி அதிர்ந்து போய் மகனை பார்த்தார் என்றால், தாமரையும் கார் முகிலும் யோசனையுடன் சுகனையும், தமிழையும் பார்த்து இருந்தனர்.
இப்போது தாமரை. மகளிடம். “சுகன் நயனியை விரும்புவது தெரியுமா.?” என்று கேட்டவரின் குரலில் எதையே தெரிந்து கொள்ள வேண்டிய பாவனை இருந்தது.
“தெரியும்.” என்று சொன்னவளுக்கு அடுத்து வரும் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா.? என்று யோசிக்கும் போதே கார் முகில்..
“எப்போ தெரியும்.. உன் கல்யாணம் நடந்த அன்னைக்கா.. இல்ல கல்யாணம் நடக்கும் கொஞ்ச நேரம் முன்னா…?” என்று அவருமே ஏதையே புரிந்து கொண்டு தான் இந்த கேள்வியை மருமகளிடம் கேட்டது..
தமிழ் என்ன சொல்வது என்று தயங்கும் முன்னவே. சுகன் சொல்லி விட்டான் ஆரம்பம் முதல்…அதாவது நயனியை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக விரும்புவதில் ஆரம்பித்து..
எனக்கு தமிழை தான் திருமணம் செய்து வைக்க வீட்டில் பேசி இருப்பதால்.. இவர்களே நயனியை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ரு நயனி தமிழுடன் நட்பு ஆனதில் ஆரம்பித்து அன்று கோயிலில் நடந்த விசயங்கள் அனைத்தும் சொல்லி முடித்ததும்,.
இப்படி எல்லாம் ஒருவன் செய்வானா. அதுவும் தன் மகன்.. ? பெற்றோர் இருவருக்கும் இது பேரதிர்ச்சி. தாமரைக்கு மட்டும் ஒரு சந்தேகம் எப்போதும் இருந்து கொண்டு இருக்கும்.. அது நயனி செய்யும் செயல்கள் அனைத்திலும் ஏதோ ஒரு போலியான பாவனையை அவர் உணர்ந்து இருந்தார் தான்..
அது தன் மகளை விட அனைத்திலும் அவள் உயர்ந்தவள் என்று காட்டும் பாவனையோ என்ற சந்தேகமும் தாமரைக்கு இருந்தது.
ஏன் என்று யோசித்த போது ஒரு சமயம்.. நயனி சுகனை விரும்புகிறாளோ.. வீட்டில் சுகனுக்கு தமிழை திருமணம் செய்யும் பேச்சு இருக்கிறது என்று தெரிந்ததால் நயனி. தமிழை கீழ் இறக்க நினைக்கிறாளோ என்று நினைத்தாரே ஒழிய..
இது இருவரும் காதல் சாமாச்சாரம்.. நயனி செய்தது திட்டமிட்டு தான்.. ஆனால் அந்த திட்டத்தை வகுத்து கொடுத்தது தன் அண்ணன் மகன் என்று தெரிந்ததில், மகன் போல நம்பிய தன் அண்ணன் மகனை அதிர்ச்சியோடு பார்த்து கொண்டு இருக்க..
அவரின் பார்வையில் சுகன்.. “அத்தை..” என்று அவர் கை பிடிக்க சென்றவனிடம் கை கொடுக்காது கொஞ்சம் ஒதுங்கி நின்று கொண்டவர்..
“பரவாயில்லை.. என் பெண் எல்லா வகையிலும் கீழா தெரியனும் என்று வேறு ஏதாவது செய்யாம போனியே. அது வரை சந்தோஷம்..” என்ற வார்த்தையில் சுகன் கூனி குறுகி போய் விட்டான்..
அவனுக்கு ஆதரவாக அவன் அன்னை தந்தை கூட பேசவில்லை.. நயனி அதையும் தானே செய்ய சொன்னாள்.. இவன் தான் கூட வளர்ந்த பாசம் அதை செய்ய விடாது செய்தது..
அனைத்தும் தெரிந்த பின்.. தாமரைக்கு இன்னும் கூட ஒரு கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.. அது தன் மகள் வீராவை திருமணம் செய்து கொண்டது எதனால் என்று.. ஏன் என்றால் இன்னுமே நயனி வீராவை திருமணம் செய்தால் நீ எனக்கு அண்ணன் முறையாவாய்.. என்று சொன்னதும்.. அதை தமிழ் கேட்டதுமே… தெரிந்தால், அண்ணன் மகனையே அந்த கேள்வி கேட்ட தாமரை மகளை சும்மா விட்டு விடுவாரா..?”