இளந்தமிழ் மாமா கார் முகிலனுக்கு வீராவின் அன்னைக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.. நயனியை தன் மகன் விரும்பி உள்ளான்.. என்பதே அவருக்கு அதிர்ச்சி என்றால், அந்த காதலுக்காக மகன் என்ன எல்லாம் செய்து இருக்கிறான்.. அதை ஏற்கவே அவரால் முடியாத போது..
உடனே இந்த திருமணத்தை பற்றி அவரால் முடிவு சொல்ல முடியவில்லை.. அதுவும் இளந்தமிழை வைத்து இவர்கள் போட்ட திட்டம்.. என்று யோசனையோடு தன் மருமகள் முகத்தை பார்த்தார் அவர்..
மாமாவின் முகத்தில் தமிழ் என்ன கண்டாளோ.. “என்னை வைத்து நீங்க எந்த முடிவும் எடுக்காதிங்க மாமா.. நீங்களும் அத்தையின் விருப்பம்.. இனியும் என்னை வைத்து எதுவும் நீங்க செய்ய வேண்டாம்..” என்று சொல்லி விட்டு விறு விறு என்று மாடி ஏறி தன் வீட்டிற்க்கு சென்று விட்டாள்..
கார் முகிலன் மருமகளை பின் தொடர பார்க்க தாமரையும் அதையே தான் சொன்னார்.. “நம்ம கிட்டேயும் தப்பு இருக்கு அண்ணா.. இனி சுகன் விருப்பமா செய்ங்க.. நான் அவளை பார்த்துக்குறேன்..” என்று சொல்லி விட்டு வீரா மாப்பிள்ளை ஆகி விட்டதாலும்.. பவானி சம்மந்தியாக போய் விட்டதாலும் முறையாக அவர்களிடம்..
“நான் அவளை பார்க்கிறேன்..” என்று சொல்லி விட்டு தான் மகளை பின் தொடர்ந்து சென்றது..
இங்கு கார் முகிலனும்.. “ இனி நம்ம என்ன சொல்லி என்ன செய்யிறது.. இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிடலாம்..” என்று தன் சம்மத்ததை கூறிவிட்டார்..
ஆனால் சந்திரமதி.. “ நான் நயனியை என்னவோ நினைத்து இருந்தேன் ஆனா இப்படி செய்வா என்று நினைக்கல.” என்று இத்தனை நேரம் மனதில் அடைப்பட்டு கொண்டு இருந்ததை பவானியிடம் சொல்லி விட்டார்..
உடனே கார் முகிலன். “ நம்ம வீட்டில் பிரச்சனை வைத்து கொண்டு மத்த பெண்களை பேச கூடாது சந்திரா.” என்று தன் மனைவியை அடக்கினார்..
இருந்தும் சந்திரமதி.. “ இல்லங்க. அவங்க பெண் திட்டம் போட்டது போல தானே நானும் நினச்சிட்டேன்.. நம்ம தமிழ் பொறுப்பு இல்லாம இருக்கா நயனி மாதிரி தமிழ் இருந்து இருக்கலாம் என்று.. இதை உங்க கிட்ட கூட எத்தனை முறை சொல்லி இருக்கேன்..” என்று தான் முட்டாள் ஆக்கப்பட்ட ஆதங்கத்தை கொட்டினார்.
அது தான் கார் முகிலனுக்கும் தெரியுமே.. ஆனால் அந்த பெண்ணை மட்டுமே குறை சொல்ல முடியுமா.? என்று புரிந்து கொண்டவர்.
“ இதுக்கு எல்லாம் திட்டம் போட்டு கொடுத்தது உன் மகன் தான் சந்திரா.. “ என்று விட்டார். பின் ஒரு மாதிரி இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் வைத்து கொள்ளலாம்.. மண்டபம் கிடைக்க வேண்டுமே.. என்று ஒருவழியாக பேசி அவர்கள் சாப்பிட கொடுத்தே தான் வீரா குடும்பத்தை அனுப்பி வைத்தது.
திருமண பேச்சு நல்ல படியாக தான் முடிந்தது.. ஆனால் அது மகிழ்ச்சி கொடுத்ததா.. தெரியவில்லை.. ஆனால் நயனி மகிழ்ந்து போனாள்.. சுகனோடு தன் திருமணம் முடிந்த அந்த மகிழ்ச்சியில் வீரா தன் சொந்த அண்ணன் இல்லை என்ற அந்த உறவு கூட அவளுக்கு பெரியதாக தோன்றவில்லை.
பவானியே தன் மகளை அதிர்ச்சியோடு தான் பார்த்தார்.. என்ன பெண் இவள் என்பது போல்.. இவளின் இந்த சுயநலம் அந்த வீட்டிற்க்கு நல்லதா என்று,, அதை மகளிடம் கேட்டும் விட்டார்..
அதற்க்கு நயனி., “ எல்லோரும் தமிழை வெகுளி வெகுளி என்று சொல்றிங்க.. ஆனா நான் போட்ட திட்டம் சுகன் நானும் சேர்ந்து போட்டது.. அதுவும் அவங்க வீட்டில் கண்ணை மூடிக் கொண்டு சுகனுக்கு தமிழை என்று கல்யாணம் செய்து கொடுப்பது போல பேச்சில் தான்..
நாங்க வீட்டை விட்டு ஒடி போவதற்க்கு இது பரவாயில்லை என்று நினைத்தோம்.. ஆனா தமிழ்.. எங்க பேச்சை கேட்டு எவ்வளவு சீக்கிரமா அவள் அண்ணனை விரும்பாது அண்ணனோட கல்யாணத்தை முடித்து கொண்டாள்.. இதில் அண்ணன் வாழ்க்கையும் சம்மந்தம் பட்டு இருக்கு..” என்ற மகளின் பேச்சில் பவானி வீராவை பார்க்க .. அவன் ஒன்றும் சொல்லாது மொட்டை மாடிக்கு சென்று விட்டான்..
தமிழை பார்க்க வேண்டும் என்றால் நிற்கும் அதே இடத்தில் நின்று கொண்டவனின் பார்வை தமிழின் மாடி மீது தான் இருந்தது.
ஒரு முறை அவளை மொட்டை மாடியில் பார்க்கும் போது.. அவள் வாயில் பிரஷ் வைத்து தேய்த்து கொண்டு இருந்தாள்.. ஏதோ ஒரு படத்தில் ஆரியா சொல்லும் அந்த வார்த்தை தான் அவனுக்கு அப்போது நியாபகத்தில் வந்தது.
தூங்கி எழுந்த கோலத்திலும் அழகாக.. அவனின் பார்வை இன்னும் கூர்ந்து கவனிக்க தான் சென்றது.. பின் சின்ன பெண் என்று.. இப்போது அது எல்லாம் அவனின் நியாபகத்தில் வந்து சென்றன..
நயனி சொல்வது போல் இளாவுக்கு தன்னை பிடிக்காது எல்லாம் இல்லை.. பிடித்தும் தன்னை பார்க்கவில்லை என்பது அவள் நிலையில் தானே அவனும் இருக்கிறான்.. ஒருவர் தனக்கு செய்த அந்த நன்றி கடனுக்காக எது என்றாலும் செய்யலாம் என்று..
அவள் தன் விருப்பத்தை மறைத்து கொண்டாள் என்ற அளவுக்கு வீரா புரிந்து கொண்டான் தான்.. ஆனால் அதையும் தான்டி வீராவின் மனது இளாவிடம் ஏதோ ஒன்று எதிர் பார்க்கிறது.. அது சத்தியமாக வீராவுக்கே தெரியவில்லை எனும் போது இளந்தமிழுக்கு தெரியுமா..?
தன் வீட்டிற்க்குள் புகுந்து கொண்ட இளந்தமிழுக்கோ மனதில் பாரம் இறங்கிய உணர்வு.. சுகன் நயனி திருமணத்தை குறித்து. இப்போது நினைக்கிறாள்..
அன்று என்ன தைரியத்தில் வீராவை திருமணம் செய்து கொண்டாள்.. நயனி சுகன் தன்னை வீழ்த்த திட்டம் இட்டதில் அவர்களை பழிவாங்க வேண்டும் என்றால் தன் மாமாவிடம். சுகனுக்கு என்னை உடனே திருமணம் செய்து வை என்று சொல்லி இருந்தால் கூட அந்த கோயிலிலேயே நடத்தி முடித்து இருப்பாரே. முகத்தை சுற்றி மூக்கை தொட்டது போலான இந்த செயல் எதற்க்கு.?
ஏதற்க்கு என்பது அவள் உள்மனது அறியுமே.. தன் பிடித்ததை.. அதுவும் அது நடக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்த ஒன்றை பழி வாங்க என்று எதேதோ காரணம் சொன்னாலுமே,வீராவோடான தன் திருமணமும்.. சுயநலத்தை ஒட்டி தானே இருக்கிறது என்று வீராவை நினைத்து கொண்டு இருந்தவளின் மனது தற்காலிகமாக அவள் தந்தையை மறந்து இருந்தது..
ஆனால் என் பிரச்சனை இன்னும் தீரவில்லை என்பது போல் தான் டெல்லியில் பவித்ரா அவள் அப்பாவிடம் சேர்ந்த பின் சந்தானத்திற்க்கு தன் வீடே நரகமாக மாறி போயின…
தன் பேசியை தமிழ் எடுக்காது பின் எடுத்தது .. பின் அணைத்து விட்ட பின் சந்தானம் தன் மகளுக்கு மீண்டும் மீண்டும் முயன்ற போது செல்லை சுச் ஆப் செய்து விட்டது என்ற செய்தி தான் திரும்ப திரும்ப அவருக்கு வந்தது.
வேலைக்கும் அதிக நாள் விடுமுறை எடுக்க முடியாது.. அடுத்த மாதம் விடுமுறை எடுத்து மீண்டும் சென்னைக்கு வருவோம் என்று நினைத்து தான் சந்தானம் டெல்லி சென்றது.. டெல்லியில் ஒரு குடும்பம் இருக்கிறதே.. குறிப்பாக தன் சின்ன மகள். அந்த மகள் அவரை டெல்லிக்கு அவர் வீட்டிற்க்கு வரவழைத்து கொண்டாள்..
இப்போது எல்லாம் சுப்ரஜாவுக்கு சந்தானம் காதலானகாவும்.. அதுவும் இருவருக்கும் வேறு வேறு ஒருவரிடம் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பின்னும்.. அந்த காதல் வாடாது பார்த்த உடன் உயிர்த்தெழும் அளவுக்கு இருந்த அந்த காதல். கணவன் மனைவி குழந்தை சமூகம் என்று எதை பற்றியும் யோசிக்காது காதல் வெற்றி ஒன்றே குறியாக திருமணத்தில் முடித்த காதல். இப்போது சுப்ரஜாவுக்கு சந்தானத்தின் மீது இருக்கிறதா என்று தெரியவில்லை..
இப்போது சந்தானதை பார்த்தால் கணவனாக கூட தெரியவில்லை.. தன் மகளை தன்னிடம் இருந்து பிரித்தவனாக தான் தெரிகிறது.
இதன் தொட்டு பேச்சுக்கள் குறைந்து பின் இப்போது முற்றிலும் நின்று போன நிலையில், அந்த சின்ன குழந்தையான காவ்யா மூலம் தான் சின்ன சின்ன பேச்சுக்கள் கூட இருக்கின்றது.
அதுவும் காவ்யா.? அப்பா அம்மா சாப்பாட்டை டையினிங்க டேபுலில் வைத்து விட்டாங்க..” அப்பா அம்மாவுக்கு பணம் வேண்டுமா மளிகை தீர்ந்து போயிடுச்சி என்று சொன்னாங்க..” என்று இது போலான அத்தியாவசிய வார்த்தைகள் மட்டும் தான் மகள் மூலம் நடக்கின்றது..
சந்தானத்திற்க்கு வீடே இப்போது எல்லாம் நரகமாக மாறி விட்டது.. அந்த சின்ன பெண் காவ்யா மட்டும் இல்லை என்றால், இந்த வீட்டிற்க்கே வர முடியாது போலான நிலை தான் சந்தானத்திற்க்கு..
சுப்ரஜா தன் கணவனிடம் நேரிடையான பேச்சுக்கள் தான் கிடையாது. மறைமுகமாக.. காவ்யா ஏதாவது கையில் வைத்து கொண்டு..
“அம்மா இது அப்பா வாங்கி கொடுத்தது” என்று சொன்னாள்..
“நீ அவர் பெண் இல்லையா வாங்கி கொடுப்பார் தான். இதே பவித்ராவுக்கு என்றால்..” என்று அடுத்து சொல்லாது ஒரு சின்ன பெண்ணிடம் என்ன பேசுகிறோம் என்று புரியாது பேசுவார்.
அதே போல் காவ்யா… “அம்மா எனக்கு ட்ரஸ் பண்ணி விடு.. அப்பா என்னை வெளியில் கூட்டிட்டு போறேன் என்று சொன்னார்..” என்று சொன்னாள்..
அதே தான் நீ அவர் பெண்.. ஆனா அக்கா என்று இதே தான் வீட்டில் பேச்சு இருக்கும்..
அனைத்திற்க்கும் பொறுத்து போன சந்தானம் ஒரு முறை காவ்யா.. “ நான் மட்டும் தான் உங்க மகளாப்பா..?” என்று கேட்டதுமே. அவளை பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் வீடு வந்தவர் தன் மனதில் இருந்த கோபத்தை எல்லாம் மனைவியிடம் கொட்டி தீர்த்து விட்டார்.
“நானா உன் பெண்ணை உன்னிடம் இருந்து பிரித்தேன்.. என்னை வைத்து உன் பெண்ணை வளர்த்து ஆளாக்கி விட்டு . என் பணத்தில் படித்து முடிச்சு அதன் மூலம் வேலை கிடைத்து.. அவனுக்கு என்று ஒருத்தனை உன் பெண் பார்த்த பின் தான் நான் அவளை வேறு மாதிரி பார்க்கிறேனா…
இது எந்த எந்த அர்த்தத்தை கொடுக்கும் டி.. உன் மனசாட்சியை தொட்டு சொல்.. நான் அப்படி பார்க்கிறவனா இல்லை பார்த்து இருக்கிறேனா..என் மூலமா எல்லாம் முடிந்து அவள் அப்பன் எப்போ எங்கு இருந்து வந்தான் என்று தெரியல.. ப்ளான் பண்ணி என்னை டிஷ்யூ பேப்பர் போல் யூஸ் பண்ணிக்கிட்டது உன் பெண் தான்.. “ என்று இத்தனை நாள் மனதில் இருப்பதை கொட்டியவர் பின்..
“நான் இந்த வார்த்தையை உன்னை பார்த்து சொல்லி இருக்கனும்.. என் பெண்ணை என் கிட்ட இருந்து பிரித்து விட்டாய்..” என்று சென்னை சென்றும் மகளை நேரில் பார்க்க முடியாத ஆதங்கம் அவருக்கு.
இவளுக்கு என்ன .. இவள் பெண் படித்து முடித்து விட்டால்;; வேலைக்கு போகிறாள்.. சொந்த அப்பா கூட சேர்ந்துட்டா. இவளும் அவள் வேலை செய்யும் இடத்தில் போய் பார்த்துக்குறா. தனக்கு தெரியாது என்று நினைத்து கொண்டு இருக்கா.. அதுவும் கூடிய சீக்கிரம் அவள் காதலிக்கும் பையனோடு திருமணம்.
ஆனால் நான் என் மகளை பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகுது.. என் கிட்ட போனில் பேச கூட என் மகள் விரும்பல.. இதுல படிக்கும் பெண்ணுக்கு கல்யாணம் நடந்து இருக்கு.. அது எப்படி பட்ட கல்யாணம் என்று எனக்கு இன்ன வரை தெரியல. என்னை போலவே மகளை முழுவதும் இவள் விட்டுட்டு என் கூட வந்தாளா..
அந்த கோபத்தில் மகள் காவ்யா மூலம் நடந்து கொண்ட அந்த பேச்சு வார்த்தைகள் மூட முற்றிலுமாக நின்று போய் விட்டது..
சந்தானத்திற்க்கு நடந்த ஒரே நல்ல விசயம். இல்லை கேட்ட நல்ல விசயம் சென்னையில் தன் பெண் மீண்டும் கல்லூரி செல்கிறாள் என்பது.. ஆனால் அவள் கணவன் வீட்டில் இல்லாது அம்மா வீட்டில் இருந்து செல்கிறாள் என்ற விசயமும்/..
கூடவே மகள் திருமணம் செய்த மாப்பிள்ளை தங்கைக்கு சுகனனோடு திருமணம் நடக்க இருக்கிறது என்பது.. இது தான் குழப்பமாக அவருக்கு இருந்தது.. அலுவலகத்தில் விடுமுறை கேட்டால் இப்போது தான் லாங் லீவ் எடுத்து இருக்கிங்க. திரும்பவும் கொடுக்க முடியாது.. என்று விட்டனர்..
அடுத்த வாரம் தான் சிக் லீவ் எடுத்து சென்னை சென்று வர வேண்டும் என்று முடிவு செய்து இருந்தார்..\
இங்கு சென்னையில் சந்தானத்திற்க்கு கிடைத்த தகவல் சரி தான் என்பது போல் தான் இளந்தமிழ் தன் கல்லூரிக்கு செல்ல அதே கல்லூரி பேருந்தில் தான் பயணப்பட்டு கொண்டு இருந்தாள்..
இளந்தமிழை பார்த்த பார்வையில் மற்றவர்களை பொறுத்த வரை எதுவும் மாறவில்லை.. இதோ சிறிது நாள் விடுமுறை எடுத்தாள்.. அவ்வளவே.. ஆ இன்னொன்று முக்கியமான விசயம் சொல்ல வேண்டும்.. பேருந்தில் பக்கம் பக்கம் அமர்ந்து செல்லும் தமிழும் நயனியில் இருக்கைகள் மாரி இருந்தன. பேருந்தின் இந்த கோடியில் தமிழ் அமர்ந்திருந்தாள்.. அந்த கோடியில் நயனி அமர்ந்திருந்தாள்..
தமிழ் உடன் படிக்கும் பெண்கள்.. தமிழிடம். “உன் கூட படிக்கும் என்னை விட்டுட்டு.. சீனியர் கூட பேசிட்டு இருப்ப. என்ன இது அதிசயமா பேசாது. என்ன விசயம்..?” என்று கேட்டதற்க்கு..
“சொல்லி தான் ஆகனுமா..? என்று ஒரு மாதிரி தமிழ் கேட்டாள்..
அதற்க்கு தமிழோடு க்ளாஸ்மேட்டான மற்றொரு பெண்ணோ.. “நீ சொல்ல தேவையில்லை.. நீ சொல்லமாலேயே எனக்கு தெரிந்து விட்டது..” என்றதில்
தமிழ் இவளுக்கு என்ன தெரியும் என்று நினைத்து அந்த பெண்ணை பார்த்தாளே ஒழிய வாய் திறக்கவில்லை..
இவள் வாய் திறவாததிற்க்கு சேர்த்து வைத்து அந்த பெண்.. முன் கேட்ட பெண்ணிடம்.. “இவள் மேரஜ் செய்ய இருந்த இவளோட சுகன் அத்தானை. அவள் தட்டி தூக்கிட்டா.. என்ன புரியலையா. .”
நயனி பக்கம் கை காட்டிய அந்த பெண்.. “அம்மணி நேற்று அவள் க்ளாஸ் மேட்க்கு எல்லாம் அவள் கல்யாண பத்திரிக்கை வைத்து இருக்கா. மாப்பிள்ளை யார் தெரியுமா.. இவளுடைய சுகன் அத்தான். தான் .” என்றதும் அந்த இரு பெண்கள் மட்டும் அல்லாது அனைத்து பெண்களுமே அப்படியா என்று கேட்டனர்.
இவளோடு படிக்கும் பெண்கள் அனைவருக்குமே தமிழ் அவள் அத்தான் சுகனை தான் திருமணம் செய்து கொள்ள போகிறாள் என்பது தெரியும்.. தெரிய வைத்து இருந்தாள் தமிழ்.. காரணம் வீராவை பார்த்து அவள் மனது தள்ளாடி போவது அவள் உணர்ந்தாள்.. அதை தவிர்க்க தனக்கு தானே அதை சொல்லி கொண்டாளா இல்லை.. அனைவருக்கும் தெரியப்படுத்தி விட்டால் தன் மனது மாறாது என்று அவள் நினைத்து விட்டாளோ.. இன்னொன்றும் தமிம் அழகான பெண்.. படிக்கும் போது காதல் என்று சொல்லி கொண்டு வருபவர்களிடம்..
“ நான் அத்தானை தான் கல்யாணம் செய்து கொள்வேன்..” என்றும் சொல்லி இருக்கிறாள்..
இப்போது தமிழ் அத்தானை நயனி திருமணம் செய்து கொள்வதில்.. இவளுக்கு வீராவோடு திருமணம் முடிந்தது தெரியாது.. இவளை அனைவரும் பாவமாக பார்த்தனர் என்றால் நயனியை வில்லியாக பார்த்து வைத்தனர்..