கீழே மாமன் வீட்டிற்க்கு சென்ற போது ஹாலில் யாரும் இல்லாது வெறிசோடி இருந்தது.. இந்த சமயம் மாமாவும், அத்தானும் அவர்கள் சொந்தமாக வைத்து இருக்கும் ஹார்ட்வேர்ட் கடையில் இருப்பார்கள் என்று தெரியும்..
கூடவே மாமீ கணவரையும், மகனையும் அனுப்பி விட்டு இந்த சமயம் அவர் தன் அறையில் ஒய்வு எடுக்கும் நேரம் என்பதும் தெரியும்..
ஆனால் அம்மா மாமீ வீட்டு உறவு வந்து இருப்பதாக சொன்னாங்களே.. அவங்க இருந்தா வீட்டு இவ்வளவு அமைதியா இருக்காதே.. அதுவும் அவங்க மூன்று பெண்கள் தன்னை பார்க்காது என்பதை விட தன்னை நெட்டு எடுக்காது போக மாட்டார்களே என்று எண்ணம் இட்ட வாறே தான் அவள் கொண்டு வந்ததை சமையல் அறையில் வைத்து விட்டு தன் மாமியின் அறைக்கு சென்றது..
இது எப்போதும் நடக்கும் வழக்கம் தான்.. ஆனால் அன்று இளா நினைத்தது போல் குடும்பத்தோடு தான் சந்திரமதியின் அண்ணன் குடும்பம் வந்தது..
வந்து இறங்கிய உடன் சந்திராவின் அண்ணன்.. கார்முகிலனிடம்.. “ மூத்த பெண்ணுக்கு வயது ஆகி கொண்டு போகிறது..” என்ற அவர் பேச்சை ஆரம்பித்தார்..
கார்மிகிலேனோ.. “ மாப்பிள்ளை பார்க்கட்டுமா மச்சான்..” என்று சொல்லி முடித்து வைக்க இவர் நினைக்க.. அவரோ அவரின் அந்த பேச்சையே ஆரம்ப புள்ளியாக வைத்து சண்டையை தொடங்கி விட்டார்..
“ உரிமை பட்ட என் தங்கை மகன் ராஜா மாதிரி இருக்க.. நான் ஏன் வெளியில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும்..” என்று..
அடுத்து ஒன்றன் பின் ஒன்றாக பேச்சு வளர்ந்து சந்திரமதியின் அண்ணன் தன் மூன்று பெண்களை அழைத்து தன் வீட்டுக்கு சென்றவர் தன் மனைவியை மட்டும் கண்ணை காட்டி இங்கு விட்டு சென்று உள்ளார்..
தான் இங்கு தங்கியதற்க்கு உண்டான வேலையாக சந்திரமதியின் அண்ணி.. “ ஏன் நீங்க சொல்லலாம் இல்லையா.. என் அண்ணன் மகள் தான் என் மருமகளாக வர வேண்டும் என்று..” என்று சொன்ன போது தான் சந்திரமதி..
“ இல்ல அண்ணி அவரு இளா தான் இந்த வீட்டு மருமகள் என்று.. இது இப்போது எடுத்த முடிவு இல்ல இது.. ஆறு வருடம் முன் எடுத்த முடிவு..” என்று சந்திரமதி சொல்லும் போது தான் இளா அந்த அறைக்கு செல்ல முயன்றது..
முயன்றவளின் காதில் இந்த வார்த்தை விழுந்ததால், வந்தது தெரியாது மீண்டும் மாடிக்கு சென்று விட்டாள்.. மாடிக்கு என்றால் தன் வீட்டிற்க்கு கிடையாது..
மொட்டை மாடிக்கு.. அவளுக்கு இந்த செய்தி புதியது.. மருமகள் என்ற அழைப்பு தான் அவள் மாமன் இவளை அழைப்பது.. அது உறவு முறை அழைப்பு மட்டும் தான் அன்று வரை அவள் நினைத்து கொண்டு இருந்தது..
காரணம் அவள் முன் இது வரை இது போலான பேச்சுக்கள் நடந்தது கிடையாது.. கூட கல்யாணம் இதை பற்றி யோசிக்கும் வயதும் அவளுக்கு கிடையாது தானே..
இன்னும் கேட்டால் மூன்று வருடம் முன் கூட அவளுக்கு அப்போது தான் பதினெழு முடிந்து பதினெட்டு வயதின் ஆரம்பத்தில் இருந்தாள்..
அந்த வயது கூட திருமணத்தை பற்றி எல்லாம் யோசிக்கும் வயது இல்லை தான்.. அதுவும் போன வாரம் தான் ரிசல்ட் வந்து அவளின் அத்தான் சுகதீபன் பயின்ற கல்லூரியிலேயே சேர்க்க விண்ணப்பம் வாங்கி இருந்த நிலையில்..
அடுத்து என்ன படிப்பது என்ற யோசனை தான் அவளுக்கு இருந்து இருக்க வேண்டும்.. இப்போது அவள் மாமியின் அந்த பேச்சில், அதுவும் தன் மாமனுக்கு பிடித்தம் என்ற அந்த பிடித்தத்தை தனக்கு பிடித்தமாக்கும் முயற்ச்சியில் தான் அவள் இன்று வரை முயன்று கொண்டு இருக்கிறாள்..
சுகதீபனும் நல்ல மாதிரி தான்.. இவளை விட ஐந்து வயது பெரியவன்.. இவள் இந்த வீட்டிற்க்கு வந்த போது அவன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தான்..
தான் வந்த அந்த நிலையில் தன்னை சுற்றி கவனிக்கும் நிலையில் கூட இல்லாதவளை அன்போடு கவனித்து கொண்டவன் அவன்.. அதனால் அவனை திருமணம் செய்து கொள்வதில் அவளுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது தான்..
ஆனால் இடை இடையே இந்த வீரவேலோன் பக்கம் ஏன் என் பார்வை போகிறது.. அது தான் அவளுக்கு புரியவில்லை..
ஒரு சமயம் தன் அப்பாவின் ஜூனும் தன்னுள் கலந்து இருப்பதால் இருக்குமோ.. என்று நினைத்ததும்..
“சீ நான் அவ்வளவு எல்லாம் மோசம் கிடையாது.. பார்க்க நல்லா மேன்லி லுக்கா இருக்கான்.. இது சும்மா சைட் தான்.. இதை எல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது என்று தன்னையே திட்டி தன்னையே திட்டம் செய்து கொண்டாள் தான்..
ஆனால் அவனை.. அவனை என்றால் வீரவேலோனை.. யார் திட்டம் செய்வது.. இப்போது எல்லாம் அவனின் பார்வை தன்னில் தான் இருக்கிறது என்பதனை இவள் பாராதே அவளாள் நன்கு உணர முடிகிறது…
வீரவேலோனை பார்த்த அன்று தான் … தன் மாமனுக்கு தன்னை மருமகளாக்கி கொள்ள ஆசை என்பது தெரிய வந்தது.. அதில் இருந்து அவள் அவனை பார்ப்பது கிடையாது தான்..
அதுவும் அவனின் தங்கை தனக்கு தோழியாக ஆனதில் இருந்து அவனை தவிர்க்கவே.. நயனி வீட்டிற்க்கு போகாது, அவளை தன் வீட்டிற்க்கு அழைத்து கொள்வாள்..
நயனி இவள் வட துருவம் என்றால், அவள் தென் துருவம் என்று சொல்லலாம்.. அனைத்திலும் இருவரும் வேறுப்பட்ட குணத்தை கொண்டவர்கள்..
எப்படி இருவருக்கும் நட்பு வந்தது.. அது இன்று வரை இளாவுக்கே தெரியாத போது எப்போதும் சந்திரா மாமி கேட்கும்..
“ எப்படி இரண்டு பேரும் பிரண்ஸ்ஸா இருக்கிங்க.. “ என்ற கேள்விக்கு இவள் என்ன என்று பதில் சொல்வாள்..
அது அவளுக்கே அதிர்ச்சியாக இருக்கும் போது.. இளா சூர்ய உதயத்தை பார்த்ததே கிடையாது..
ஆனால் நயனி விடியற்காலையில் எழுந்து தண்ணீர் தெளித்து கோலம் போட்டு என்று ஆரம்பிக்கும் அவள் வேலையின் நீட்டம் மிக பெரியதாக இருக்கும்..
அதுவும் விடுமுறை என்றால் போதும்.. ஏதாவது உணவில் ஒரு புதிய ஐட்டத்தை செய்து தனக்கு கொண்டு வருவாள்.. சில சமயம் இளா..
“ எனக்கு இது பிடிக்கும்..
‘ என்று எப்போதாவது சொன்னதை நியாபகத்தில் வைத்து செய்து கொண்டு வருபவளை நினைக்கும் போது..தோன்றும் இவள் அண்ணனுக்காக இதை எல்லாம் செய்கிறாளா என்று.. பின் தான் தெரிந்தது இல்லை என்று.. அவளுக்கு பிடித்தவர்களுக்கு இதை எல்லாம் செய்வாள் என்று…
என்ன ஒன்று நயனி செய்து கொண்டு வரும் உணவு வகைகளை கீழே வீட்டிலேயே பெரும் பாலும் தீர்ந்து போய் விடும்.. நயனி வந்தாளே அவளின் மாமி..
“ என்ன நயனி.. என்ன கொண்டு வந்து இருக்க..” என்று சொல்லி அவளிடம் இருப்பதை வாங்கி ருசி பார்க்கிறேன் என்று சாப்பிட ஆரம்பித்தால் போது பாதியை அவரே காலி செய்து விடுவார்..
மீதியை மாமன் தீபன் சாப்பிட்ட மிச்சம் தான் இவளுக்கு கிட்டும்.. அந்த அளவுக்கு ருசியாக இருக்கும் அவளின் கைப்பக்குவம்.. இவளே வியந்து போய் விடுவாள்.
“ இத்தனை வருடம் சமைக்கும் என் அம்மா மாமி கூட இந்த அளவுக்கு ருசியாக சமைத்தது இல்லடீ…” என்று சொல்லி அம்மா மாமியிடம் கொட்டும் வாங்கிய அனுபவங்கள் அவளுக்கு இருக்கிறது..
இதோ இப்போது கூட கோயிலில் பிரசாதம் உபையம் வீரவேலோன் குடும்பதுடையது தான்.. இந்த அம்மன் கோயிலுக்கு ஆகும் செலவு முழுவதும் அந்த தெருவாசியே பார்த்து கொள்வார்கள்..
அதன் படி தமிழ் வருடத்தின் முதல் நாளான இன்றைய கைங்கரியத்தை நயன் குடும்பத்தார் ஏற்று கொண்டதில் இன்றைய செலவு முழுவதும் அவர்களுடையது தான்..
அந்த தெருவில் இருப்பவர்கள் மூக்கால் வாசி பேர் சொந்த வீடு வைத்து இருப்பவர்கள்.. ப்ளாட் போட்டு விற்ற போது வாங்கி கட்டி கொண்டு வந்தவர்கள் என்பதால் அனைவருமே நன்கு பரிச்சயம் தான்.
மாமா அத்தை என்று கூட உறவு முறை வைத்து அழைத்து கொள்வார்கள்..
இதோ நயனி தான் இன்றைய பிரசாதம் சமைத்தாள் என்று தெரிந்ததும் அதன் ருசியில் அவளை அனைவரும் பார்ராட்டி கொண்டு இருந்தார்கள்..
அதில் ஒருவர் காலை சர்க்கரை பொங்கல் தானே பிரசாதமா செய்வாங்க.. நீ என்ன புளிசாதம் செய்து இருக்க..” என்று கேட்டவருக்கு பதில் அளிக்காது நயனி திருட்டு தனமாக முழித்து கொண்டு இருப்பதிலேயே இளாவுக்கு தெரிந்து விட்டது.. நயனி இதை தனக்காக தான் செய்தாள் என்று..
பிரசாதம் சாமிக்கு படைத்த பின் அனைவருக்கும் விநியோகம் ஒருவர் செய்து கொண்டு இருந்தார்..
இளா தனக்கு உண்டானதை வாங்கி கொண்டு ஒரு மூளையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது பக்கத்தில் வந்து அமர்ந்த நயனி தன் கையில் உள்ள பிரசாதத்தையும் அவளுக்கே கொடுத்து விட..
‘ நீ சாப்பிடலே..? என்று இளா கேட்டதற்க்கு நயனி..
“ வீட்டில் கொஞ்சம் இருக்கு இளா நீ சாப்பிடு..” என்று சொன்னாள்.. நயனி இளாவை விட இரண்டு வயது தான் பெரியவள்.. ஆனால் அவளின் செய்கைகள் அனைத்திலும் ஒரு முதிர்ச்சி தெரியும்..
இளாவின் மாமி சந்திரமதி கூட.. “ உன்னை விட பெரியவள் தானே அக்கா என்று கூப்பிடு ..” என்று எத்தனையோ முறை சொல்லியும் ஏனோ அந்த அக்கா என்ற வார்த்தை கொண்டு இது வரை இளா நயனியை அழைத்தது கிடையாது..
நயனி கொடுத்ததை சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது நயனியின் பக்கத்தில் அவளின் அண்ணன் வீரவேலோன் வந்து அமர்ந்தான்..
அவன் அமர்ந்த உடன் தான் எழுந்தால் நயனி என்ன நினைப்பாளோ என்று தான் இளா அமைதியாக நயனி கொடுத்த பிரசாதத்தை சாப்பிட்டு கொண்டு இருந்தது..
ஆனால் அவன் கையில் இருந்த அந்த பிரசாதத்தை நயனி கையில் கொடுக்க.. நயனி அதை தான் சாப்பிட்டு கொண்டு இருந்தவற்றில் கொட்டும் முன் சட்டென்று எழுந்து விட்டவள்..
சாப்பிட்டு முடித்த அந்த தொன்னையை அங்கு இருந்த குப்பை கூடையில் போட்டு விட்டு தன் மாமன் பக்கம் வந்து நின்று கொண்டாள்..
தன் மாமன் அவர் கையில் இருந்த பிரசாதத்தை தனக்கு ஊட்டும் போது எந்த மறுப்பும் சொல்லாது உண்பவளையே பார்த்து கொண்டு இருந்த வீரவேலோனை பார்க்காமலேயே அவன் தன்னை தான் பார்க்கிறான் என்பதை உணர்ந்து மறந்தும் அவள் அவன் பக்கம் பார்வையை செலுத்தாது இருந்தாள்..
பார்க்கலாம்.. இது எத்தனை நாளுக்கு தாக்கு பிடிக்கும் என்று..