தமிழின் அத்தை மகனை தான் நயனி திருமணம் செய்ய போகிறாள் என்ற விசயம் அந்த கால்லூரி பேருந்தில் இருப்பவர்களுக்கு மட்டும் அல்லாது அந்த கல்லூரி முழுதுமே பரவி விட்டது… கூடுதல் தகவலாக.. இளந்தமிழ் திருமணம் செய்ய இருந்தவன் என்ற விசயமும் கூட..
இதில் கவனிக்க பட வேண்டிய இன்னொரு விசயம் இளந்தமிழுக்கு திருமணம் முடிந்தது அந்த கல்லூரியில் படிக்கும் யாருக்குமே தெரியவில்லை என்பது தான்.. அதுவும் நயனியின் அண்ணனோடு தான் தமிழின் திருமணம் முடிந்து இருப்பதும் தான்…
அதனால் கல்லூரியின் பேராசிரியருக்கும் நயனி முன் தினம் தன் திருமண அழைப்பிதழை வைத்து இருந்தார். ஆனால் முன் தினம் அந்த ஆசிரியருக்கு மாப்பிள்ளை யார் என்று தெரியாது தானே..
இப்போது அந்த மாப்பிள்ளை இளந்தமிழின் அத்தை மகனில் இருந்து அனைத்துமே தெரிந்து இருந்து. நயனி வகுப்பு என்ன பி..ஜி.. யூ.ஜி என்று நயனியும் தமிழும் வேறு வேறு என்றாலுமே இருவரும் உயிர் தோழி என்ற அளவில் கூட படிப்பவர்களில் இருந்து பாடம் சொல்லி கொடுக்கும் பேராசிரியர் வரை தெரிந்து தான் இருந்தது..
அந்த அளவு நயனி தமிழை தன் அருகில் வைத்து கொண்டு இருந்தாள்.. இன்று அந்த பேராசிரியர் வகுப்பு அறைக்கு வந்ததுமே நயனியை பார்த்த அந்த பார்வையில் மரியாதை துளியும் இல்லை..
ஏற்கனவே கூட படிப்பவர்கள் அனைவருமே ஒரு மாதிரியாக… தன்னிடம் கேட்கவில்லை என்றாலுமே, அவர்களுக்குள் .. “ அது எப்படி அப்படி கூட பழகிய பெண்ணுக்கு அப்படி துரோகம் பண்ண முடிந்தது.அந்த பெண் நல்லா பேசுவா..? சின்ன பெண்..” என்று வகையில் பேசிக் கொண்டு இருந்தது நயனி காதில் நன்றாகவே விழுந்தன.
இதில் மேடமும் தன்னை அந்த பார்வை பார்த்து விட்டு பாடம் நடத்திய பின்.. அந்த வகுப்பை விட்டு போகும் முன்.
“ இது என் சம்மந்தம் இல்லாதது தான்.. ஆனால் என் மாணவ மாணவியர்களாகிய உங்களுக்கு படிப்பை தவிர.. வெளி உலகத்தை பற்றி தெரியப்படுத்தும் கடமையும் எனக்கு இருக்கு. அதனால் தான் சொல்றேன்..
நம்ம கூட நல்லா பேசுறாங்க.. நல்லா பழகுறாங்க என்று யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பிடாதிங்க.. முக்கியமா வீடு வரை வரும் நட்பு உண்மையா என்று பாருங்க..
இதை ஏன் சொல்றேன்னா.. நான் இது போல ஏமாந்தேன்.. நான் படிக்கும் போது என் கூட படித்த ஒரு பெண்ணை வீடு வரை அனுமதித்தேன்..
அப்படி நல்லா பழகினா.. என் வீட்டுக்கும் வந்து போவா.. ஒரு நாள் என் அண்ணன் என் வீட்டிற்க்கு சொல்லாமல் கல்யாணம் செய்துட்டு வந்து நின்னா.. “ என்று சொல்லி விட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தவர்..
பின்..” கல்யாணம் செய்து கொண்டு வந்த பெண் யார் தெரியுமா..? என் பிரண்ட் நம்பி வீட்டுக்குள் அனுமதித்த பெண்..இதுல என்ன ஆச்சரியம் என்றால் முன் என் கூட அப்படி நல்லா பழகிட்டு இருந்த பெண்.. என் அண்ணாவை கல்யாணம் செய்த பின். என் கூட பேசுறதையே விட்டுட்டா. வீட்டிலும் என் அம்மா அப்பா கிட்ட எனக்கு அப்படி ஒரு பேச்சு..
இப்போ அண்ணனும் அந்த பெண்ணும் விவாகரத்தும் செய்துக்கிட்டாங்க. .. என் அம்மா அப்பா கிட்ட வரும் அந்த திட்டை இன்னை வரை வாங்கிட்டு இருக்கேன். ஏன்னா இன்னும் வரை என் அண்ணன் தனித்து தான் இருக்கான்..இது சொல்லனும் என்று தோனுச்சி சொல்றேன்..” என்று சொல்லி சென்று விட்டார்.
இது யாருக்கு யாரை பற்றியதானது என்று அங்கு இருந்த அனைவருக்குமே தெரிந்து நயனியை அப்படி ஒரு பார்வை பார்க்க அழுது கொண்டே கல்லூரியை விட்டு கல்லூரி பேருந்தில் அமர்ந்து விட்டாள்..
இளந்தமிழும் அமர்ந்து இருக்க.. அந்த பேருந்து கிளம்பும் சமயம் மூன்று கல்லூரி பையன்கள் ஏறினர்.. அவர்கள் இந்த வழி கல்லூரி பேருந்தில் அவர்களை பார்த்தது கிடையாது..
அதனால் ஏனையவர்கள்.. “என்ன ப்ரோ..?” என்று கேட்டதற்க்கு..
“இறங்கி விடுவேன் ப்ரோ..” என்று அதில் ஒரு பையன் சொன்னவன்.. தமிழ் அமர்ந்திருந்த இருக்கை பின் இருந்த காலியாக இருக்கையில் அமர்ந்து கொண்டான்..
அமர்ந்தவன் சுற்றி எல்லாம் வலைக்காது. “நீ ஆல்ரெடி.. நீ எங்கேஜ்டு என்று தான் உன் மீது விருப்பம் இருந்தும் நான் உன் கிட்ட பிரபோஸ் பண்ணல. ஆனா இப்போ தான்..” என்று சொல்லியவன் நயனியை திரும்பி பார்த்து விட்டு மீண்டும் தமிழிடம்..
“இப்போ தான் அது இல்ல என்று ஆகி விட்டதுலே.. இப்போ என் விருப்பதை உன் கிட்ட சொல்றது தப்பு இல்ல என்று தோனுது.. அது தான் உன் கிட்ட என் விருப்பதை சொல்றேன்..” என்றவனிடம் தமிழ் ஏதோ சொல்ல வர.
அவளை பேச விடாது தடுத்து நிறுத்திய அந்த கல்லூரி இளைஞன்.. “இப்போவே உங்கள் விருப்பத்தையோ மறுப்பையோ சொல்ல வேண்டாம்.. ஏன்னா இது வரை இவன் தான் என்று இருந்தவன் இன்று அது இல்ல..
.
அதை ஏற்றுக் கொள்ளவே உங்களுக்கு டைம் வேண்டும்.. இதுல என் விருப்பத்தை உடனே ஏத்துப்பிங்க என்று நான் எதிர் பார்க்கல.. அப்போ ஏன் இப்போவே சொன்னிங்க என்று நீங்க நினைக்கலாம்.. ஏன்னா வேறு ஒருத்தன் உங்களை அப்ரோச் பண்ணும் முன் நான் பண்ணிடறது பெட்டர் என்று தோனுச்சி.” என்று அவன் சொல்லி முடிக்கவும் அந்த கல்லூரி பேருந்தில் பயணம் செய்யும் ஒரு மாணவி இறங்கும் இடம் வரவும் சரியாக இருக்க. அந்த மாணவனும் இறங்கி விட்டான்.. இதில் தன்னை பேச விடாது அவன் பாட்டுகு பேசி சென்றவனை நினைத்து ..
“என்னை பேச விடுறானா. பாரு.. அவன் பாட்டுக்கு வந்தான் சொன்னான் சென்றான்..” என்று மனதில் திட்டி கொண்டு இருக்க.
இன்று முழுவதும் தனக்கு நேர்ந்த அவமானத்தில் தமிழ் மீது கோபமாக இருந்த நயனி.. அந்த பையன் தமிழிடம் காதல் சொன்னதை வேறு மாதிரியாக தன் வீட்டில் வீரா அம்மாவிடம்.. திரித்து கூறிவிட்டாள்..
கோபத்துடன் தன் கால்லூரி பையை அங்கு இருந்த இருக்கையில் வீசி ஏரிந்து விட்டு அமர்ந்த நயனியை என்ன என்பது போல் பவானி பார்த்தாரே தவிர,. என்ன என்று கேட்கவில்லை..
பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு தபால் மூலம் அனுப்ப வேண்டிய பத்திரிகைகளுக்கு பெயரும் முகவரியும் எழுதிக் கொண்டு இருந்த வீராவிடம்..
“இதை போஸ்ட் செய்துட்டு இது சேர இரண்டு நாள் ஆகும் கைய்யோட அவங்களுக்கு போனும் போட்டு அழச்சிடு வீரா.. அது தான் மரியாதையா இருக்கும்..” என்று கூறிக் கொண்டு இருந்தார்..
தான் கோபமாக வந்து இருக்கேன்.. என்னிடம் என்ன ஏது என்று கூட கேட்கல.. வந்தவளுக்கு சாப்பிடுறியா.. கேட்கல தண்ணீ கூட கொடுக்கல..
முன் எல்லாம் இது போலவா.. அதுவும் வீரா அண்ணா நான் இது போல இருந்தா என்னம்மா பதறி போய் கேட்பாரு.. அது தான் சொந்த அண்ணன் இல்லையே.. அது தான்..” முதலில் சொன்னதை மெல்ல முனு முனுத்தவள் கடைசி சொன்ன அந்த வார்த்தையை சத்தமாகவே பேசினாள்..
அதற்க்காவது வீரா தன்னிடம் பேசுவான் என்று.. பாவம் வீரா நயனி இந்த வார்த்தை சொல்லும் போது பத்திரிக்கையில் முகவரியை எழுதி கொண்டு இருந்த அவன் கை ஒரு கணம் நின்றது.. அவ்வளவு தான் நயனியின் அந்த பேச்சுக்கு வீரா கொடுத்த மரியாதை..
நயனியின் இந்த பேச்சுக்கு பவானி தான்.. “ என்ன பேசுறேன் என்று யோசித்து பேசு நயனி.. உனக்கு தான் வீரா உன் சொந்த அண்ணன் இல்ல என்பது இப்போ தெரியும்.. ஆனா வீராவுக்கு அவன் பத்தாவது வயதில் இருந்தே தெரியும்.. இப்போ உன் பேச்சை அவன் கேட்காது இருக்கான் என்றால் நீ செய்து வைத்த விசயம் அப்படி.. ஒரு பெண் என்ன எல்லாம் செய்து வைத்து இருக்க..?”
இன்னும் நயனி செய்து வைத்ததை நினைத்தால் பவானி நம் பெண்ணா அப்படி செய்தது என்று தான் நினைப்பார்..
“விருப்பம் பட்டவனை கல்யாணம் செய்ய நினைத்தது என்ன அவ்வளவு பெரிய தப்பா..?” இன்னுமே அவள் செய்த செயல்களின் வீரியம் தெரியாது தான் பேசினாள்..
“காதலித்தவனை கல்யாணம் செய்ய நினைத்தது தப்பு இல்ல டி.. ஆனா மத்தவங்களை நீ அதுக்கு பகடை காய உபயோகித்து இருக்க பார்த்தியா.. அது தான் தப்பு..” என்று கூறிய பவானியிடம்..
“நீங்க சும்மா என்னையே குத்தம் சொல்றதை விட்டுட்டு.. உன் மருமகள்..” என்று பேச்சை ஆரம்பித்த நயனி.
பின்..” ஆமா இப்போவும் மருமகள் உறவு தானா..?” என்று கேட்டு விட்டு பின் அவளே..
“ உன் மருமகள் என்ன செய்யிறா என்று பாருங்க.. இல்லை என்றால் நம்ம குடும்ப மானம் சந்தி சிரித்து விடும்.. ஏன்னா அது போல ஒரு விசயத்தை தான் உங்க மருமகள் செய்து கொண்டு இருக்கா.”
தன்னுடைய இத்தனை பேச்சுக்கும் என்ன என்று கேட்காது தன்னை பார்வை மட்டும் பார்த்து கொண்டு இருந்த அம்மாவையும்.. அந்த பார்வை கூட பாராது பத்திரிக்கை நாங்கு முனையிலும் மஞ்சள் தடவி கொண்டு இருந்த வீராவையும் பார்த்து அவளுக்கு இன்னும் கோபம் தான் கூடியது.
“இன்னைக்கு காலேஜ் பஸ்சில் ஒரு பையன் அவளிடம் லவ்வை சொல்லிட்டு இருக்கா. இவளுக்கு ஒன்னும் சொல்லாது அமைதியா உட்கார்ந்துட்டு இருக்கா…” என்று இந்த பேச்சுக்காவது வீரா தன்னிடம் பேசுவான் என்று பார்த்திருக்க.
அப்போதும் அவனிடம் எந்த எதிர் வினையும் இல்லை..
பவானி தான்..“இன்னும் இவங்க கல்யாணம் யாருக்கும் சொல்லலே டி. ஒரு வரவேற்பு வைத்து விட்டால் இந்த பிரச்சனை இருக்காது..” என்று விட்டார்..
தான் எவ்வளவு பெரிய விசயம் சொல்லி இருக்கோம்.. இவங்க என்ன இப்படி சொல்றாங்க. அவள் மீது அவ்வளவு நம்பிக்கையா…?
“இதுக்கு வரவேற்ப்பு என்ன வைக்கிறது.. அந்த பையன் பிரப்போஸ் பண்ணும் போது அவள் சுடியில் மறைத்து வைத்து இருந்த தாலியை எடுத்து காட்டி இருந்தா போதும்.. கல்யாணம் முடிந்து விட்டது அவனுக்கு மட்டும் என்ன மொத்த காலேஜிக்கும் தெரிந்து விட போகிறது..
ஆனா அவள் சொல்ல மாட்டாள்..பசங்க அவள் பின்ன சுத்துவதை என்ஜாய் செய்துட்டு இருக்கா.. நான் சொல்வதை நீங்க ஏதோ விளையாட்டா எடுத்துட்டு இருக்கிங்க.. இதனால நாளைக்கு பெரிய பிரச்சனை வரப்போகுது பாருங்க.
ஏன்னா அவள் வீட்டில் ஒரு பையன் கல்யாணம் செய்து வைக்க என்று பேசிட்டு இருந்த போதே நம்ம அண்ணாவை பார்த்து இருக்கா.. இப்போ மேரஜ் செய்து கொண்ட பின் வேறு ஒருவனிடம் தாவ மாட்டாள் என்பது என்ன நிச்சயம்..” என்ற நயனியின் பேச்சில் பவானி அவளை அடிக்க கை ஒங்கி விட்டார்.
ஆனால் வீரா தான் பிடித்து தடுத்து நிறுத்தி வேண்டாம் என்பது போல் தலையை மறுப்பாக ஆட்டினான்.
ஆனால் சம்மந்தி வீட்டவர்களின் முக்கியமானவர்களுக்கு நாங்கள் வந்து பத்திரிக்கை கொடுக்கனுமா என்று அம்மா கேட்டு கொண்டு வர சொன்னதால் வந்த சுகனின் கையை பிடித்து தடுக்க யாரும் இல்லாததினால் நயனியை அடித்து இருந்தான்..
“எங்க வீட்டு பெண்ணை நீ என்ன என்றாலும் பேசுவீயா…? இது போல் தான் பேசுவேன் என்றால்”அங்கு இருந்த பத்திரிக்கையை காட்டி.
“இதுக்கு வேலை இருக்காது பார்த்துக்கோ..” என்று எச்சரிக்கை செய்ய நயனியோ அதிர்ந்து போய் சுகனை பார்த்தாள்..
இவனுக்காக தான் என்ன எல்லாம் செய்தோம்..எத்தனை அவமானங்கள்.. அவ்வளவு பாசமாக இருக்கும் அண்ணன் முகம் பார்த்து பேசவில்லை.. என்று என்ன என்னவோ நினைத்து அடி வாங்கிய கன்னத்தை பிடித்து கொண்டு சுகனை பார்க்க..
அவனோ வீராவிடம்.. “ உன் மனைவியை பற்றி அப்படி பேசிட்டு இருக்கா.. நீங்க அமைதியா இருக்கிங்க… அவள் பேச்சை கேட்க முடியாது அத்தை அடிக்க போவது கூட தடுத்து நிறுத்துற. இனி உன்னை நம்பி இந்த வீட்டிற்க்கு எப்படி தமிழ் வருவாள்..?” என்ற சுகனின் இந்த பேச்சுக்கு வீரா அவனை நக்கலாக ஒரு பார்வை பார்த்தவன்..
நயனியின் இத்தனை பேச்சுக்கும் அமைதியாக இருந்த வீரா தமிழ் உன்னை நம்பி எப்படி இந்த வீட்டிற்க்கு வருவாள் என்ற இந்த பேச்சுக்கு.
நயனியை காட்டி. “உன்னையே நம்பி இவள் வரும் போது.. என்னை நம்பி என் மனைவி வர மாட்டாளா டா..?” என்று கேட்டான்.
பவானி தான் என்ன இருந்தாலும் மாப்பிள்ளையாக வருபவன்.. இப்படி மரியாதை இல்லாது பேசினால். நாளை பிரச்சனை ஆகிவிடுமோ என்று பயந்து.
“வீரா கொஞ்சம் அமைதியாக இருப்பா.” என்று வீராவை அடுத்து பேசாது தடுத்தார்.
ஆனால் அதற்க்கு சுகன் விட வேண்டுமே. “லவ் பண்ணவளை விட கூடாது. அவளையே கல்யாணம் செய்துக்க நான் என்ன எல்லாம் செய்தேன் என்று உங்களுக்கு தெரியும் வீரா. நான் நம்பதாகாதவனா.?” என்று கோபத்துடன் கேட்டவனுக்கு கிண்டலாக பார்த்த வீரா.
“லவ் பண்ணவளை மேரஜ் செய்ய நீ என்ன செய்த.. சுகன்.. என்ன செய்த..? “ என்று ஆவேசத்துடன் கேட்டவன்..
“ஆ ஒன்னு செய்து இருக்க. காதலியை வில்லியா மாத்தி வைத்து இருக்க.அது தான் செய்து வைத்து இருக்க நீ.
வீட்டில் உனக்காக பேசிய பெண் இருக்க. ஒன்னு அந்த பெண்ணையே கல்யாணம் செய்ய உன் மனசை தயார் செய்து அடுத்த பெண் மனசில் ஆசையை ஏற்படுத்தாது இருந்து இருக்கனும்..
இல்ல எனக்கு வீட்டில் பேசிய பெண்ணை அது போல பார்க்க முடியலேன்னா வீட்டில் அந்த பேச்சு வேண்டாம் என்று சொல்லனும்.. இல்ல குறைந்த பட்சம்.. உன் லவ்வை சொல்லி இவளை கல்யாணம் செய்து இருக்கனும்.
இதை எல்லாம் விடுத்து நீ ஒரு புல்ல கூட புடுங்காது.. இவள் உன் வீட்டவங்க எல்லோரையும் இம்பிரஸ் செய்யனும்.. அதுவும் தமிழை குறச்சி காட்டி…இதுல என்னை நம்பி தமிழ் எப்படி வருவா என்று கேள்வி கேட்குற.. போ. போ.. யாருக்காவது ஒருத்தருக்காவது உண்மையா இரு.
முதல்ல இவளுக்காக தமிழை ஏமாத்துன. இப்போ தமிழை தப்பா பேச அவளுக்காக இவளை அடிக்குற” என்ற வீராவின் பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியாது சுகன் தலை குனிந்து கொண்டு சென்று விட்டான் ..
சுகனுக்கு தெரியவில்லை.. தமிழ் மீது வீரா எந்த அளவுக்கு காதல் வைத்து இருக்கிறானோ.. அந்த அளவுக்கு அவள் மீது நம்பிக்கையும் வைத்து உள்ளான் என்று.. அதே போல் தான் தமிழுக்கும்.. அவனோடு வாழாது பேசாது.. இதோ அம்மா வீட்டிற்க்கு வந்த பின்னும் அவனை தொடர்பு கொள்ளாது இருந்த போதும்.. வீரா தன்னை அழைத்து கொள்வான் என்ற நம்பிக்கை தமிழுக்கு இருப்பதினால் தான் தமிழ் அவ்வளவு பிரச்சனைகளையும் எதிர் கொண்டு இருக்கிறாள் என்பதும்..
அடுத்த பிரச்சனையாக தமிழின் அப்பா சந்தானம் அதுவும் சரியாக நயனி சுகன் திருமணத்தில் வந்து நிற்கும் போது எழும் பிரச்சனைகளை கணவன் துணை கொண்டு தான் அனைத்தையும் எதிர் கொள்வாள்.. என்பதும்.. தமிழுக்கு வீரா மீதும் வீராவுக்கு தமிழ் மீதும் இருக்கும் காதலில் அளவு அப்போது தான் அனைவருக்கும் தெரிய வரும் போது..