டெல்லியில் சந்தானத்திற்க்கு சென்னையில் இருக்கும் தன் மகளை பற்றி விசாரித்து கூறுபவர்.. அவர் உடன் கல்லூரியில் படிக்கும் போது கூட படித்த ஒரு நண்பர் தான்..அவருக்கு அனைத்து விசயமும் தெரியும்..
அதாவது சந்தானத்திற்க்கு காதல் கல்லூரியில் படிக்கும் போது தானே தொடங்கியது.. சந்தானத்தின் அந்த காதல் பின் தோல்வி திருமணம்.. தெரிந்தவருக்கு..
ஒரு நாள் சென்னையில் அந்த நண்பரை பார்த்த போது தன் வாழ்க்கையில் நடந்த மீதம் விசயமும் சொன்னார்..
அதற்க்கு அந்த நண்பர்.. “உன் காதல் தோல்வியில் முடிந்ததில் உன் முதல் மனைவி அந்த குழந்தைக்கு பங்கு இருக்கா… உன் இந்த செயல்.. அந்த பெண்ணையும் குழந்தையும் பாதிக்கும் தானே..?” என்று அவர் நியாயம் கேட்டார்..
சந்தானத்திற்க்கு மனைவிக்கு செய்த அநீதி பெரியதாக தோன்றவில்லை.. அப்போது காவ்யாவுக்கு தான் அனைத்தும் செய்ய.. இளந்தமிழை விட்டு விட்டோமே என்றது தான் தெரிந்தது..
அதன் பின் தான் சந்தானத்திற்க்கு தன் பெரிய மகளின் மீது அக்கறை செலுத்தி தமிழை பற்றி அந்த நண்பர் மூலமாக ஒரு சிலதை அறிந்து கொண்டது..
அதன் படி அந்த நண்பர் சந்தானத்திற்க்கு சொன்ன தகவலானது..
“உன் மகளுக்கு திடிர் என்று தான் அந்த வீராவோடு மேரஜ் நடந்து முடிந்து இருக்கு.. அதுவும் இப்போ உன் மகள் அம்மா வீட்டில் தான் இருக்கா.” என்று சொன்னவர்.
கூடுதல் தகவலாக. “சுகனை..அதாவது தமிழுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தவனான சுகனுக்கும் தமிழின் கணவனின் தங்கை நயனிக்கும் இன்னும் நான்கு நாட்களில் திருமணம் நடக்க இருக்கிறது..” என்ற தகவலையும் கூறினார்.
சந்தானத்தின் அந்த நண்பர் இந்த விவரங்கள் எல்லாம் தூரம் இருந்து பார்த்ததும் கேட்ட தகவல்கள் தானே. அதனால் அவருக்கு தெரிந்த அளவில் அவர் சொன்னார்.
சந்தானத்திற்க்கு எப்படி முறையாகும்..அதோடு சுகனுக்கும் நயனிக்கும் திருமணம் செய்து கைக்க தான் தன் மகளுக்கு அப்படி அவசரமாக வீராவோடு திருமணத்தை முடித்து வைத்தானா அவன் மாமன்.. என்று தமிழின் தாய் மாமன் மீது ஈசியாக பழியை சுமத்தி விட்டது அவர் மனம்..
அதுவும் நண்பர் கூறிய அந்த கல்யாண மண்டபம் ராஜைய்யா முத்தைய்யா மஹால்.. அது சென்னையில் எவ்வளவு பெரிய திருமண மண்டம் என்பது டெல்லியில் இருக்கும் சந்தானத்திற்க்கே தெரிந்து இருந்தது.
சந்தானத்தின் மனம் தன் மகனுக்கு பெரிய இடமாக முடிக்க வேண்டி.. சின்ன வயதில் இருந்து பேசி வைத்த தன் மகளோடு திருமணத்தை மாற்றி விட்டார் என்பதே…தன் மகளுக்கு நடந்த அநியாயத்தை தட்டி கேட்க வேண்டி சென்னைக்கு செல்ல நினைத்தார்.
இப்போது விடுமுறை கேட்ட போது சந்தானத்திற்க்கு விடுமுறை கிடைக்க. சென்னைக்கு கிளம்பி விட்டார்.
மனைவியிடம் கூறி விட்டே தான் சென்றார்.. அவர் மனதில் நீ உன் பெண்ணை பார்க்கும் போது.. நான் என் பெண்ணை பார்ப்பதில் என்ன தப்பு என்றவகையாக.
இங்கு சென்னையில் உள்ளுக்குள் அவ்வளவு பிரச்சனை ஒடி கொண்டு இருந்தாலுமே, சுகன் நயனி திருமண வேலைகளில் எந்த ஒரு குறையும் இல்லாது நடந்து கொண்டு இருந்தது.. நடத்தி கொண்டு இருந்தான் வீரா.
அது என்னவோ இரு குடும்பத்திற்க்கும் சம்மந்தம் என்று ஆன போது கூட முதல் நட்பு என்ற அளவில் இருந்த அந்த நெருக்கம். இப்போது சம்மந்தி என்ற அளவில் இல்லாது போய் விட்டது.. அப்படி செய்து விட்டது நயனி சுகன் செயல்கள் மூலம்..
அதுவும் தமிழ் இப்போது இங்கு இருக்க. தன் வீட்டு பெண் மகிழ்வோடு இல்லை என்ற அந்த எண்ணமே.. வீராவின் குடும்பத்தோடு நெருங்கி பழக முடியாது போய் விட்டது..
சுகன் நயனியின் காதல் ஆண்டு கணக்குகள் கடந்த காதல் தான்.. அந்த காதல் கல்யாணத்தில் முடிய தான் அவர்கள் இருவரும் சேர்ந்து என்ன என்னவோ திட்டம் தீட்டியதும்..
இப்போது அந்த திட்டத்திற்க்கு பலனாக இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் அவ்வளவு கஷ்டத்திற்க்கு பலனாக திருமணம் என்ற நிலையில் சுகன் நயனியை பேசியில் கூட அழைத்து பேசுவது கிடையாது..
அதுவும் முன் தமிழ் வீரா திருமணத்தின் பின்… வீரா நயனி உறவு முறை தெரியாது.. குழம்பி போய் இருந்தாலுமே அடுத்து என்ன செய்வது என்றும்.. திட்டியும் சண்டை போட்டாவது சுகன் நயனுக்கு இடையே பேச்சுக்கள் நடந்து கொண்டு தான் இருந்தது..
ஆனால் இப்போது உறவு முறை தெரிந்து அனைத்தும் சரியாகி திருமணம் என்ற இருக்கும் சமயம்.. அந்த மகிழ்ச்சியை உணர முடியாது இரு உள்ளமும்.. அதுவும் சுகன்..
சுகன் தான் திட்டம் போட்டது.. ஆனால் தமிழை மற்ற விசயத்தை தாழ்த்தி காட்ட நினைத்தவன் அவளை ஒழுக்கத்தில் தாழ்த்த நினைத்தது கிடையாது.
நயனி.. தமிழின் ஒழுக்கத்தை பற்றி பேசியதில் இருந்து, ஏனோ அவளுடன் பேச பிடிக்கவில்லை.. நயனுக்கோ.. சுகன் தன்னுடன் பேசாததிற்க்கும் தமிழ் தான் காரணம்.. தன் அம்மா தன்னை திட்டுவதற்க்கும் தமிழ் தான் காரணம்.. வீரா தன் முகத்தை கூட பார்க்காது இருக்க தமிழ் தான் காரணம் என்று தன்னுடைய இந்த நிலைக்கு தன் செயல்பாடுதான் காரணம் என்பதை உணராது, அனைத்திற்க்குமே தமிழ் தான் காரணம் என்று மொத்த பழியையும் அவள் மீது போட்டது நயனியின் மனம்..
அதுவும் நயனிக்கு முகூர்த்த புடவை நகைகள் என்று வாங்கும் போது சுகனின் தாய் தந்தை வந்தார்களே தவிர.. தமிழோ அவளின் அம்மா தாமரையும் வரவில்லை..
தாமரைக்கு தன் ஒரே பெண் இது எல்லாம் செய்து பார்க்கவில்லை என்ற வருத்தம் கூடவே நயனியின் செயல்கள்.. அதோடு தன் மகள் திருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே தாய் வீடு வந்து விட்டது..
அதோடு வீரா தன் மகளோடு பேசாதது.. ஏன் அதை பற்றியதான பேச்சை கூட எடுக்காது நயனி திருமணத்தில் மட்டுமே கவனமாக இருப்பது இதை எல்லாம் நினைத்து தான் ஒதுங்கி நின்று விட்டார்.. தாமரையின் அண்ணன் அண்ணிக்கு அவரின் மனது தெரியும் என்பதினால், இந்த திருமண வேலைகளில் தாமரையை அவர்கள் வர்புறுத்தவில்லை..
ஆனால் அதை நயனி பொறாமை என்று பெயர் என்று அர்த்தம் புரிந்து கொண்டதோடு அதை தன் அன்னையிடம் கூறினாள்..
இப்போது எல்லாம் பவானி நயனி பேச்சை எல்லாம் பெரியதாக எடுத்து கொள்வது இல்லை.. நல்ல முறையில் அவளை திருமணம் செய்து அனுப்பி விட வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு..
அதோடு வீரா தன் மகளுக்கு ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்வதை நினைத்து அவனின் வாழ்வும் நல்லப்படியாக ஆகிவிட வேண்டும் என்றும் நினைத்து கொண்டு இருந்தார்..
அனைவரும் ஒவ்வொன்றும் நினைக்க தமிழும் வீராவும் என்ன நினைத்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் பெரியவர்கள் இரு வீட்டார்களுக்கும் புரியவில்லை.
இதோ அதோ என்று இருந்த திருமண நாளும் வந்து விட்டது.. அந்த சத்திரத்தில் இரவு பன்னிரெண்டில் இருந்து அடுத்த நாள் இரவு பன்னிரெண்டு மணி தான் கொடுப்பது..
அதனால் முதலில் காலை முகூர்த்தம் முடிந்த பின் அன்று மாலை வர வேற்ப்பு நடத்துவாக ஏற்பாடு செய்து இருந்தது..
அதன் படி திருமணத்திற்க்கு முன் நாள் இரவு வீரா தமிழ் வீட்டிற்க்கு கீழ் சுகன் வீட்டிற்க்கு செல்லாது தாமரை வசிக்கும் மாடிக்கே சென்று விட்டான்.
கீழே அமர்ந்து இதை முகில் பாக்யவதி சுகன் வீரா மாடிக்கு செல்வதை பார்த்து கொண்டு தான் இருந்தனர்..ஏதாவது நல்லது நடந்தால் போதும் என்பதே அவர்களுடைய எண்ணமாக இருந்தது.
மாடிக்கு வந்த வீரா கண்டது தாமரை காய்கறி நறுக்கி கொண்டு இருப்பதையும் தமிழ் ஜன்னல் பக்கம் அமர்ந்து இருந்து வெளியில் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதையும் தான்..
சரியாக சொல்வது என்றால், அங்கு இருந்து பார்த்தால் வீராவின் மொட்டை மாடி நன்றாக தெரியும்..
தாமரை பீன்ஸை அறிந்து கொண்டே.. “ எப்போதும் அங்கேயே உட்கார்ந்துட்டு என்ன பண்றியோ எனக்கும் ஒன்னும் தெரிய மாட்டேங்குது.. காலேஜ் போயிட்டு வந்தா அவ்வளவு தான்.. அதை எடுத்தும் படிக்க காணும்.. சரி அதை தான் விடு.. சரியா சாப்பிடுறியா தூங்குறியா…?”“என்று அவர் பாட்டுக்கு பேசி கொண்டே நறுக்கிய காய்கறிகளை எடுத்து கொண்டு சமையல் அறைக்குள் சென்று விட்டார்..
வீரா அங்கு வந்து நின்றதை தாயும் பார்க்கவில்லை.. மகளும் கவனிக்கவில்லை.. வீரா தாயின் பேச்சையும்.. மகளின் பார்வையையும் பார்த்து கொண்டே தான் வீட்டிற்க்குள் வந்து நின்றது.
வந்தவன் தன் கையில் கொண்டு வந்ததை அங்கு இருந்த இருக்கையில் வைத்து விட்டு தமிழ் பின் சற்று இடை வெளி விட்டு நின்றவன்..
அவனுமே தமிழ் அப்படி என்ன பார்க்கிறாள் என்று எல்லாம் பார்க்கவில்லை.. அவள் தன்னை தான் பார்க்க அமர்ந்து இருக்கிறாள் என்பது அவனுக்கு தான் தெரியுமே..
அதனால் அவள் பின் கை கட்டி கொண்டு நின்று கொண்டான்.. அவ்வளவே.. ஜன்னல் பக்கமே பார்த்து கொண்டு இருந்தவளுக்கு தான் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை சென்று கொண்டு இருந்தது.
அதன் விளைவாக கையில் இருந்த நகத்தை கடித்து துப்பி கொண்டு இருந்தவள் தன் கையில் இருந்த செல்லில் நேரத்தையும் பார்த்தாள்….
பின் அவளுக்கு அவளே. “கிளம்பி விட்டதா தானே சொன்னாங்க..” என்றும் முனு முனுத்து கொண்டாள்..
அவள் முனு முனுப்பு வீரா காதில் விழ தான் செய்தது.. மீண்டும் நேரத்தையும் தனக்கு வந்த மெசஜையும் படித்து பார்த்து விட்டு.. மெசஜ் போட்டவனுக்கு இவள் பேசியில் அழைத்தாள்..
“உன் ஒனர் கிளம்பி விட்டதா தானே சொன்ன. இன்னும் ஆளை காணும்.” என்று பொறுமை இல்லாது பட பட என்று பொறிந்து தள்ளினாள்..
அந்த பக்கம் வீரா ட்ராவல்ஸ்ஸில் வேலை செய்யும் பையன்.. “அண்ணா கிளம்பினதும் உங்களுக்கு மெசஜ் போட்டேன்.. அவர் வீட்டுக்கு வரலேன்னா நான் என்ன அண்ணி செய்யிறது..?” என்று கேட்டவனுக்கு.
“அங்கு இருந்து கிளம்பினா எப்போதும் வீட்டுக்கு தானேடா வருவார் உன் அண்ணன்.. இன்னைக்கு எங்கு தொலைந்து போனார்… நேரம் போக போக வெளிச்சம் போயிடும்.. அப்புறம் இருட்டுல நான் என்னத்தை பார்க்கிறது.” என்று முதல் பேச்சை சத்தமாகவும் கடைசி பேச்சை மெல்லவும் முனு முனுத்து கொண்டாள்..
அவளின் பேச்சில் பின் நின்று கொண்டு இருந்த வீராவின் முகத்தில் தன்னால் ஒரு புன்னகை.. இன்னும் என்ன தான் பேசுகிறாள் என்று கேட்போம் என்று அவன் நினைத்து கொண்டு இருந்தான்..
ஆனால் அதற்க்குள் சமையல் அறையில் வெள்ளை குரூமாவுக்கு செய்ய வேண்டியதை செய்து விட்டு.. பிசைந்து வைத்து இருந்த சப்பாத்தி மாவை எடுத்து கொண்டு பேன் காற்றில் அமர்ந்து தட்டலாம் என்று நினைத்து தாமரை அதை எடுத்து கொண்டு ஹாலுக்கு வரும் போது தான் வீரா தன் மகள் பின் நின்று கொண்டுன் இருப்பதும்.. தன் மகள் ஜன்னலிலேயே பார்வை இட்டு கொண்டு இருப்பதையும் கவனித்தது.
அதை பார்த்ததும் தாமரைக்கு பதட்டம் ஆகி விட்டது. மனைவி தன்னை கவனிக்கவில்லை என்று மாப்பிள்ளை கோபித்து கொள்வாரோ என்று..
அவருக்கு தான் மனைவி தன்னை பார்க்க தான் அங்கு அமர்ந்து இருப்பது தெரியுமே. அது தெரியாது தாமரை..
“வாங்க மாப்பிள்ளை. வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சா..?’ என்று பதட்டத்துடன் வீராவை பார்த்து கேட்டவர்..
தன் பேச்சில் திரும்பி வீராவையும் தன்னையும் பார்த்து முழித்து கொண்டு இருந்த மகளை பார்த்து.
“எப்போ பார் அங்கு உட்கார்ந்துட்டு என்ன செய்துட்டு இருக்க தமிழ். இப்போ தானே திட்டிட்டு போனேன். மாப்பிள்ளை வந்ததை கூட கவனியாது..” என்று கடிந்து கொண்டவரின் பேச்சில் தமிழ் அமைதியாகி நிற்க..
வீரா தான் .. “அங்கு உட்கார்ந்துட்டு இருந்தாலும் என்னை தான் கவனிச்சி பார்த்துட்டு இருந்தா அத்தை..” என்ற பேச்சில் தமிழ் வீராவை அதிர்ந்து தான் பார்த்தது..
ஆனால் அவளின் அந்த அதிர்ந்த பார்வை.. வீராவின் பார்வையில் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி காதல் பார்வையாக மாறியதை தாமரை கவனியாது..
மாப்பிள்ளையை கவனிக்கிறேன் என்ற பெயரில்..தமிழிடம்.. “முதல்ல மாப்பிள்ளைக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடு தமிழ்.” என்று அவளிடம் கூறினாள்..
மனைவிக்கும் கணவனுக்கும் இடையே இது போல் உபசரிப்பு ஒரு பாலமாக அமையும் என்பது அவர் எண்ணம்..ஆனால் சும்மா இல்லாது முக்கியமாக தாமரை அந்த இடத்தில் இல்லாது இருந்தாலே. ..
அவர்களுக்கு நடக்கும் நிகழ்வில் இவரை பத்து மாதத்திற்க்கு பாட்டியாக்கி விடுவார்கள் அவர்கள் என்று தெரியாது தான் பேசினார்.
தமிழ் ஒரு விதமாக கணவனை பார்த்து கொண்டு சமையல் அறைக்குள் போக. தாமரை அது வீராவுக்கு தண்ணீர் கொண்டு சென்று கொடுப்பதில் தயக்கம் என்று நினைத்து
“நீங்க தப்பா எடுக்காதிங்க மாப்பிள்ளை..” என்று மன்னிப்பு கேட்கும் தோனியில் பேசினார். தாமரைக்கு தவறு யார் மீது இருக்கிறதோ.. அது எல்லாம் யோசித்து பார்க்கவில்லை.. எப்படியாவது பெண்ணின் வாழ்வு சரியாகி விட வேண்டும்.. இது தான் எண்ணமாக இருந்தது..
வீராவோ.. “இளா தப்பு எதுவுமே செய்யலையே அத்த..” என்று தான் கூறினான்..
அவனுக்கு தான் இளந்தமிழை பற்றி தெரியுமே.. இதோ இருவரும் ஒருவருக்கு ஒருவர் அதிக அளவில் பேசி கொண்டது கிடையாது. காதல் சொல்லி கொண்டதும் கிடையாது..ஆனால் அந்த பார்வை.. தமிழிடம் தனக்கு உண்டான தேடலை அறிந்து கொண்டவன் எப்படி தன் மனைவியை தவறாக நினைப்பான்..
தமிழ் தண்ணீர் கொண்டு வந்து தந்ததும் வாங்கியவன். தண்ணீரை பருகியவன் பார்வையால் தன் மனைவியையும் பருகி கொண்டான்..
பின் தான் எடுத்து வந்த புடவை நகைகளை எடுத்து தாமரையிடம் கொடுத்தவன்..
“இதில் உங்களுக்கும் தமிழுக்கும் புடவை நகைகள் இருக்கு அத்தை நாளை கல்யாணத்திற்க்கு இதை போட்டுட்டு வாங்க.” என்று வீரா சொன்னதும் தாமரை அதை வாங்காது தயங்கினார்..
“தமிழுக்கு பரவாயில்லை மாப்பிள்ளை… எனக்கு வேண்டாமே.” நாசுக்காக மறுக்க..
ஆனால் வீரா.. “ தமிழ் உங்களுக்கு ஒரே பெண் அத்தை.. உங்களுக்கு செய்ய வேண்டிய கடமை தமிழுக்கு இருக்கு.. தமிழும் நானும் வேறு வேறு இல்லை என்று நினைத்தால் வாங்கிக்கோங்க அத்தை..” என்று சொன்ன பின் வாங்காது எப்படி மறுக்க வாங்கி கொண்டார்..
“நாளை காலையில் முகூர்த்தம்.. இரண்டு மணிக்கு சத்திரத்திற்க்கு கிளம்ப வேண்டும்..வீட்டில் அவ்வளவு வேலை இருக்கு அத்தை நாளை இளா இதை கட்டி கொள்ள வேண்டும் தான் கொன்டு வந்தேன்..” என்று சொன்னவன் விடை பெறும் போது..
“நயனியை அவள் கணவன் வீட்டிற்க்கு அனுப்பி வைத்த பின் நான் தமிழை கூட்டி கொள்கிறேன் அத்தை..” என்ற வீராவின் அந்த வார்த்தை தாமரைக்கு அவ்வளவு நிம்மதியை கொடுத்தது..
இதோ கையில் கொடுத்த அந்த புடவை நகைகளோடு வீராவின் அந்த பேச்சு கொடுத்த சந்தோஷத்தில் முகத்தில் புன்னகை மலர. “சரிங்க மாப்பிள்ளை..” என்று கூற.
வீரா மனைவியிடம்.. விடை பெறும் போது மட்டும் ஒரு கள்ள சிரிப்பு சிரித்தவன்.
“இன்னைக்கு வேலை அதிகம் மொட்டை மாடிக்கு போக மாட்டேன்.. நீ சாப்பிட்டு தூங்கு. கல்யாணத்தில் அப்போ தான் பிரஷ்ஷா இருப்ப” என்று கூறியவனுக்கு தமிழ் அதே கள்ள புன்னகை கொடுத்தாள்..