காலை திருமணத்தின் போது சந்தானத்தினால் மகளை தனித்து பார்த்து பேசும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.. ஆனாலும் மண்டபத்தை விட்டு போகாது தான் தன் மகளையும் மருமகனையும் ரசித்து பார்த்து கொண்டு இருந்தார்..
ஒவ்வொரு செயலுக்கும் வீரா தன் மனைவியின் முகம் பார்ப்பது.. மகளுமே மருமகனின் பார்வை புரிந்து செயல்படுவது என்ற இந்த காட்சிகளை பார்த்து கொண்டு இருந்தவருக்கு நெஞ்சம் நிறைந்து விட்டது..
மகளின் வாழ்வு கட்டாயத்தினால் கொடுக்கப்பட்டதோ.. கார் முகிலன் தன் மகனின் வசதி வாழ்வுக்காக முறை இல்லாது தன் மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டாரோ.. அதனால் தான் தன் மகள் வாழாது அம்மா வீட்டில் இருக்கிறாளோ என்று நினைத்து கொண்டு வந்தவர்..
தன் மகளுக்கு இந்த திருமண வாழ்வு பிடிக்கவில்லை என்றால், விவாகரத்து செய்து தான் வேறு ஒரு நல்ல வாழ்வு அமைத்து கொடுக்கலாம் என்று என்ன என்னவோ நினைத்து கொண்டு தான் சென்னை வந்தார்..
ஆனால் அவர் பார்த்த காட்சியில் பூரித்து போய் விட்டார். மகளை பார்த்து பூரித்து போனவர்.. அப்படியே டெல்லி திரும்பி சென்று இருந்தால், அந்த மகிழ்ச்சியாவது மனதில் நிலைத்து நின்று இருக்கும்..
ஆனால் ஆசை யாரை விட்டது.. தன் மகளிடம் பேச வேண்டும்.. தன்னை பார்த்தால் கோபம் போய் விடும்.. நான் தந்தை தானே. அதோடு தன் மனைவியின் முதல் குழந்தை பவித்ரா இத்தனை ஆண்டுகள் சென்று தன் தந்தையோடு இணைய வில்லையா..? பாசம் விடாது என்று என்ன என்னவோ எண்ணிக் கொண்டார்..
அவர் நினைவில் வராதது.. பவித்ரா விசயத்தில் பவித்ராவின் தந்தை அவள் தாய்க்கு துரோகம் செய்யவில்லை..சிறு வயது முதலே பவித்ராவின் தந்தை வெளி நாட்டில் தான் இருந்தார்.. கூட இருந்தது தாய் மட்டுமே.. அதனால் விவாகரத்தின் போது தந்தையோடு செல்கிறாயா..? தாயா.? எனும் போது பவித்ரா சுலபமாக தாயை கை காட்டி விட்டாள்..
இதில் பவித்ராவின் தந்தை மீது சிறு தவறுமே இல்லை.. ஆனால் இளந்தமிழ் விசயத்தில் பத்து வயது வரை.. தந்தை என்று பாசமாக இருந்த மனிதர் பழைய காதலி கண்ணில் பட்டதும் மகளாவது மனைவியாவது என்று விட்டு சென்ற வரை எந்த பெண்ணும் மன்னிக்க மாட்டாள் என்று நினையாது.
காலையில் பார்க்க முடியவில்லை என்றதில் மாலையாவது பார்க்கலாம் என்று தான் இதோ வரவேற்ப்புக்கு வந்து நிற்கிறார்.. காலையில் தாமரை அண்ணன் அண்ணி என்று அனைவரும் முன் வரிசையில் இருக்க சந்தானத்தை யாரும் கவனிக்கவில்லை..
ஆனால் மாலையில் வர வேற்ப்பில் வீரா தான் நின்று கொண்டு வந்தவர்களை வர வேற்று கொண்டு இருந்தான்..
மண்டபத்திற்க்குள் நுழைந்ததுமே வீராவை பார்த்தவர். “எப்படி இருக்கிங்க மாப்பிள்ளை..?” என்று மகிழ்ச்சியுடன் விசாரித்தார்.
மாப்பிள்ளை என்ற அழைப்பில் தமிழுக்கு ஏதோ ஒரு வகையில் சொந்தம் என்று நினைத்து கொண்ட வீராவும்.. “ம் நல்லா இருக்கேன். உள்ளே போங்க .” என்று விட்டு அடுத்தவர்ளை வர வேற்க தொடங்கி விட்டான்..
ஆனால் சந்தானம் போகாது வீரா பக்கத்தில் நின்று கொள்ள. வீராவும் எதுவும் பேசாது தன் வேலையை கவனித்தான்.ஆனால் இடை இடையே என்ன வேலை செய்யிறிங்க.? என்று கேட்டதற்க்கு எல்லாம் பதில் சொல்லி கொண்டு தான் வந்தான்.
ஆனால் கடைசியாக கேட்ட “பிசினசில் கையில் எவ்வளவு நிற்க்கும்..? என்ற இந்த கேள்விக்கு திரும்பி சந்தானத்தை பார்த்த வீரா.
“அது எல்லாம் உங்களுக்கு எதற்க்கு..?” என்று ஒரு மாதிரி கேட்டு கொண்டு இருக்கும் வேளயில் தான் தங்க நிறத்தில் பட்டு புடவை உடுத்தி தங்கமாகவே மின்னிக் கொண்டு வந்த இளந்தமிழ்..
“இங்கேயே நின்னுட்டு இருந்தா எப்படி உள்ளே வாங்க..” என்று உரிமையாக வீராவை அழைத்து கொண்டே அங்கு வந்தது.
“இன்னும் கொஞ்ச நேரம் தான் தமிழ்…” என்று வீராவின் வாய் தன்னால் மனைவியின் கேள்விக்கு பதில் கொடுத்து கொண்டு இருந்தாலுமே, அவன் கண்கள் அவன் கட்டுப்பாட்டையும் மீறி அவன் இருக்கும் இடத்தையும் மறந்து மிட்டாய் மீது ஈ மொய்ப்பது போல் அவள் மேல் மொய்த்து கொண்டு இருந்தது..
இதில் ஒரு விசயம் சொல்லியே ஆக வேண்டும்.. வீரா சற்று முன் எரிச்சலுடன் பேசி கொண்டு இருந்த சந்தானத்தை அவன் மறந்து விட்டான் என்றால், தமிழோ வீரா பக்கத்தில் ஒருவர் நின்று கொண்டு இருக்கிறார் என்பதையே கவனிக்கவில்லை..
அவள் கண்களுக்கு தன் நிறத்தில் ஷெல்வானியில், அந்த உடையுயில் ஆளுமையாக நின்று கொண்டு இருந்த கணவன் மட்டுமே தான் அவள் கண்களுக்கு தெரிந்தது..
மனைவியின் பார்வையில் தன்னை குனிந்து பார்த்து கொண்டவன்.. “உன் அளவுக்கு இந்த கலர் எனக்கு செட்டாகல தானே..?” என்று கேட்டவனுக்கு அவனுக்கு தோதாக இல்லை என்று மறுப்பாக தமிழ் தலை ஆட்டினாள்… வீராவுக்கோ.. ஏமாந்த உணர்வு..
“உண்மையில் செட்டாகலையா..?” என்று கவலையுடன் கேட்டவனிடம்..
சிறிதான குரலில்.. “ஏந்த ட்ரஸ் போட்டாலும் நீங்க எக்ஸைஸ் செய்யும் போது போடும் காஸ்ட்யூம் போல மேன்லியா தெரியல.” என்று விட. அடிப்பாவீ என்னம்மா பேசுறா என்று அவளை பார்க்கும் போது தான் இருவருமே தங்களுக்கு இடையில் ஒருவர் நின்று கொண்டு இருப்பதையே கருத்திக் கொண்டனர்..
அதுவும் தமிழின் இந்த பேச்சுக்கு சந்தானம் சட்டென்று அந்த பக்கம் முகத்தை திருப்பி கொண்டார்.. அந்த அசைவில் தான் கவனித்தது.
வீரா இன்னுமா நிற்கிறார் என்று அவரை பார்க்க.தமிழோ அய்யோ என்று நினைத்து அவரை பார்த்தாள்.. பார்த்தவள் கண்ணுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி.. அதிர்ச்சியில் அப்படியே நின்று விட.
வீரா தான்.. தங்கள் வீட்டு விழாவுக்கு வந்தவரை அசிங்கம்படுத்த கூடாது என்று.
“உள்ளே போங்க. பங்க்ஷன் உள்ளே தாங்க நடக்குது.” என்று வீரா சொல்ல சந்தானம் அதற்க்கு ஏதோ பேச முயல அதற்க்குள் தமிழ்..
“வெளியில் போங்க..” என்று சத்தமாக சொன்னதோடு அவளின் கை வெளிப்பக்கம் கை நீட்டியும் நின்றது..
சந்தனம்.. “தமிழ் நான் அப்பா டா..” என்க..
வீரா என்ன இது அவமாரியாதை என்று அவர்கள் பேச்சில் இடை புகும் போது தான் சந்தானம் நான் அப்பா என்றதும்.. இப்போது கை கட்டி நின்று கொண்டான்.. தெரியுமே அவனுக்கு அனைத்தும்.. அதனால்..
தமிழோ சந்தானம் முகத்தை கூட பார்க்காது வீராவிடம்.. “இவர் முகத்தை நான் என்னைக்கும் பார்க்க விரும்பியது இல்லை. உங்க காதலை நீங்க இதுல நிருபிங்க.. இனியும் நான் பார்க்கவே கூடாது.. இப்போதும்.. எப்போதும்..” என்று விட்டு தமிழ் உள்ளே சென்று விட்டாள்..
மகளின் பேச்சில் அதிர்ந்தவர்.. வீராவை பார்த்து மாப்பிள்ளை.. என்று ஏதோ பேச ஆரம்பிக்கும் போதே.
“உங்களுக்கு மகளே இல்ல.. அப்புறம் எப்படி மாப்பிள்ளை வரும்.. என் ஒய்ப் பேசினது கேட்டது தானே.. கிளம்புங்க.. எனக்கு எல்லாம் ஒய்ப் என்று வந்துட்டா அவள் மட்டும் தான்.. அவளுக்காக என்ன என்றாலும் செய்யனும் என்று நினைப்பேனா தவிர.. எதுக்காகவும் கட்டினவளை விட நினைக்க மாட்டேன்.. முதல்ல இங்கு இருந்து கிளம்புங்க.” என்று விட்டான்..
சந்தானம் பெருத்த அவமானத்தோடு தான் அந்த கல்யாண மண்டபத்தை விட்டு வெளி சென்றது. சந்தானத்தை அனுப்பி விட்டு மனைவியின் மன நிலை அறிய மண்டபத்தின் உள் சென்று பார்த்த போது..
அங்கு அவன் மனைவி தன் கல்லூரி தோழிகளுடன் சிரித்து பேசி கொண்டு இருந்தாள்..
இவனை பார்த்ததும் வாங்க என்றதோடு.. தன்னுடன் படித்த அனைவருக்கும் அறிமுகமாக..
“தன் கணவர் .. கூடவே நயனியின் அண்ணன் ” என்றும் கூறினாள்..
வந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.. கல்லூரி தோழிகளுக்கு என்று ஒரு வாட்சாப் க்ரூப் இருக்கிறது..
இன்று பத்து மணியளவில் இளந்தமிழ். அதில் இந்த விழாவுக்காக இன்விடேஷவை அனுப்பி மாலை கண்டிப்பா வர வேண்டும்.. உங்களுக்கு ஒரு சர்பிரைஸ் காத்து கொண்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தாள்..
இது நயனி இவளின் அத்தை மகன் திருமணம் தானே இதற்க்கு போக வேண்டுமா என்று தான் முதலில் அவர்கள் தோழிகள் நினைத்தது.. ஆனால் சர்ப்பிரைஸ் என்று சொல்றாளே.. இந்த நேரம் திருமணம் முடிந்து இருக்கும்.. அப்போ சர்பிரைஸ் என்றால், இவளுக்கும் அவள் அத்தை மகனுக்கும் தான் திருமணம் முடிந்ததா என்று நினைத்து தான் இவளை விடுத்து மற்ற தோழிகள் பேசி கொண்டு இங்கு வந்தது..
வந்தால் மேடையில் சுகனும் நயனியும் தான் நின்று கொண்டு இருந்தனர்.. ஆனால் தமிழ் சிரித்த முகத்துடன் தான் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தாள்.. என்ன டி என்ற கேட்கும் போது தான் தோழிகளின் ஒருத்தி தமிழை பார்த்து கொண்டே..
“அவளிடம் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிகிறது..” என்று சொல்லும் போதே இன்னொருத்தியோ..
“ஏன் இவளுக்கு மேரஜ் முடிந்து இருக்கு பார்.. நெற்றியில் குங்குமம் கழுத்தில் சரடு..காலில் மெட்டி” என்று சொல்ல. இவர்களை பார்த்து விட்டு தான் கணவனை அழைக்க தமிழ் வெளியில் சென்றது.. திரும்பி உள்ளே வந்தவளுக்கு தன்னால் மகிழ்ச்சி வந்து ஒட்டி கொண்டு விட்டது..இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கும் நாள். இன்றைய நாளில் யாருக்காவும் எவருக்காகவும் என் மகிழ்ச்சியை குறைத்து கொள்ள கூடாது..
தந்தை என்று பெயர் அளவில் மட்டும் இருந்தவரான். நானும் என் அம்மாவும் பட்ட துன்பங்கள் போதும்.. இனி அவரால் எங்களின் மகிழ்ச்சி சிறிதும் குறைய கூடாது..
அதோடு தன் மாமாவும், மாமியும் சந்தானம் போனில் அழைத்து பேசினார் என்பதற்க்கே, அடுத்து என்ன செய்ய காத்து கொண்டு இருக்கிறானோ என்ற பயந்ததும் அவளுக்கு தெரியுமே..
அதனால் இன்று வந்தது கூட தெரியப்படுத்த கூடாது.. தெரியப்படுத்தும் அளவுக்கு கூட நாம் அவருக்கு முக்கியத்தும் கொடுக்க தேவையில்லை என்று நினைத்து ..
நான் மகிழ்ச்சியாக இருந்தால் தான் தன் கணவனும் இருப்பான் என்று தனக்கு தானே சொல்லி கொண்டு வந்தவள் தன் தோழிகளுடன் இணைந்து பேசி கொண்டு இருந்தாள்..
“யார் உன்னவர்.. இது எப்படி.?” என்று கலாட்டாவாக பேசி கொண்டு இருந்த போது தான் வீரா மனைவியின் மன நிலை அறிய மண்டபத்தின் உள் வந்தது.
வந்தவனை பார்த்து தன் அருகில் அழைத்து கொண்டவள் தோழிகளுக்கும் கணவன் என்று அறிமுகம் படுத்தியதோடு நயனிக்கு உண்டான உறவு முறையும் சொல்ல.
தோழிகள் என்ன ஏது என்று குழம்பினாலும் வீரா இருப்பதால் எதுவும் கேட்கவில்லை.. வீரா தன் மனைவியின் தோழிகளிடம் நல்ல மாதிரியாக பேசி விட்டு..
“பேசிட்டு சாப்பிடாது அனுப்பி விடாதே..”என்று மனைவியிடம் சொல்லி கொண்டு இருந்த வீராவுக்கு அப்போதும் மனைவின் அழகு கண்ணை நிறைக்க தான் செய்தது..
இன்று அவனுக்கு இருந்த கடமையில் பொதுவாக வேலை இருக்கிறது என்று சொல்லி விட்டு செல்லும் போதும் மனைவியை விசேஷ பார்வை பார்க்க தவறவில்லை..
வீரா அந்த இடத்தை விட்டு சென்றதுமே தோழிகள் பிடித்து கொண்டனர்.. ஏய் என்ன நடக்குது இங்கு. என்று.. அன்னலும் நோக்கினால் அவளும் நோக்கினால் என்பது போல நீங்க பார்த்துட்டு இருக்கிங்க..
ஆனா காலையில் மேரஜ் முடிந்த நயனி ஒரு பக்கம் முகத்தை திருப்பி வைத்து கொண்டு இருக்கா.. அவள் புருஷன் ஒரு பக்கம் முகத்தை திருப்பிட்டு இருக்கான்..
என்ன நயனிக்கு இது கட்டாயா கல்யாணமா..?” என்று வந்து இருந்த தோழிகளில் ஒருத்தி கேட்டாள்..
அவள் கேட்டது போல் தான் மேடையில் இருவரும் இடு துருவங்களாக திரும்பி நின்று கொண்டு இருந்தார்கள்.. என்ன விசயம் என்று தமிழுக்கு தெரியவில்லை.. ஆனால் அவளுக்குமே தெரிந்தது தான்.. இருந்தும் அவள் கண்டு கொள்ளவில்லை..
தெரிந்த விசயமான.. “இது லவ் மேரஜ் தான் ..” என்று விட்டாள்..
அப்போது இன்னொரு பெண்.. “உன்னுடையது..” என்று கேட்டதற்க்கு..
“என்னுடையதும் தான்..” என்று சொல்ல..
“உன்னுடையது லவ் மேரஜ் என்று உங்க இரண்டு பேரை பார்த்தாலே தெரியுது…” எதோ ஒரு வேலைக்கு மேடை ஏறிக் கொண்டு இருந்த வீராவின் பார்வை தமிழை பார்த்து கொண்டே சென்றவனை காட்டி சொன்னவள்..
“ஆனா அவங்களை பார்த்த தெரியலையே தமிழ்..?” என்று தன் சந்தேகத்தை கேட்டாள்..
அதற்க்கு தமிழுக்கு அப்படி ஒரு சிரிப்பு.. சிரிக்கும் போது அவள் கண்களும் மின்ன. மேடையில் எடுத்த பொருளை அன்னையிடம் கொடுக்க அவர் இருந்த அறைக்கு செல்ல பார்த்த வீராவின் கால்கள் தன் மனைவியின் அந்த சிரிப்பை பார்த்து அங்கு செல்லாது அவளிடம் செல்ல சண்டித்தனம் செய்ய..
வீராவின் கால்கள் எந்த பக்கம் செல்வது என்று ஒரு நிமிடம் நின்று விட்டது.. அதை பார்த்த தோழி ஒருத்தி..
“நீ கொஞ்சம் சிரிப்பதை நிறுத்து தமிழ். பாவம் உன்னவர்.. அவரை கொஞ்சம் வேலை பார்க்க விடு.” என்றதில் கணவன் பக்கம் பார்வையை செலுத்திய தமிழ்.. வீராவின் பார்வையில் .. இப்போது தமிழின் முகத்தில் சிரிப்பு மறைந்த அந்த இடத்தில் நாணம் வந்து குடி கொண்டது..
சிரிப்பிலாது வேலை இருக்கே என்று வீராவின் மனது ஒத்தையா..? இரட்டையா..? போட்டு பார்த்து கொண்டது.. ஆனால் தமிழின் இந்த வெட்கத்தில் ஒரு பக்கமான ஒற்றை என்று முடிவு எடுத்தவன்.. அந்த ஒற்றையான மனைவியிடம் சென்றான்.
மற்றவர்களை பார்க்காது மனைவியிடமே பார்வையை வைத்து.. “ஏதாவது வேணுமா..?” என்று கேட்க..
தோழிகள் தன்னை பார்த்த அந்த கிண்டல் பார்வையில் ஒன்றும் இல்லை என்று தலையாட்டினாள்..
ஆனால் தமிழின் தோழிகள்.. “எங்களுக்கு ஒன்னு தெரியனும்.. உங்க லவ் ஸ்டோரி..” என்று கேட்டதில்..
“லவ் ஸ்டோரியா.. நாங்க லவ் பண்றோமா என்ன..?” என்று கேட்டவனிடம் தோழி ஒருத்தி.
“உங்க இரண்டு பேருடைய பார்வையே சொல்லுதே..” என்ற பேச்சில்..
“அப்படியா..?” என்று மனைவியை பார்த்து கண் அடித்து விட்டு அன்னை அழைத்த அழைப்பிற்க்கு அவர்கள் இருந்த அறையை நோக்கி சென்று விட்டான்..
தோழிகள் சொன்னது போல் அவர்கள் இருவரின் பார்வையே அவர்களுக்குள் இருக்கும் காதலின் ஆழத்தை சொல்லி விட்டது..
“உங்களுடையது லவ் மேரஜ் தான்.. அது நீங்க சொல்லவே தேவையில்லை.. ஆனா இந்த நயனியுடையதும் லவ் மேரஜ் என்று சொல்றியே. அது தான் சந்தேகமா இருக்கு.” என்று தன் தாடையில் கை வைத்து கொண்டு யோசனை செய்த தோழியின் பாவனையில் சத்தமாக சிரித்து விட்டாள்..
அந்த தோழிகள் சொன்னது போல் தான் மேடையில் இருவரும் நின்று கொண்டு இருந்த விதம் அந்த லட்சணத்துடன் இருந்தது..
அதுவும் போட்டோகிராபர்.. இருவரையும் சிரித்த முகமாக ஒரு ஸ்நாப் எடுக்கவே முடியாது போக.. எங்கு இருந்து இவர்களை வைத்து ரொமான்டிங்க் ஸ்டில் எடுக்க முடியும்..
அந்த போட்டோகிராபர் வாங்கின காசுக்காவது ஏதாவது செய்யனுமே என்று யோசிக்கும் போது தான் இருவரும் பக்கத்தில் நிற்கவில்லை என்றாலும், பார்வையால் தழுவி கொண்டு இருந்த இளந்தமிழ் வீராவை பார்த்தது.. தன் கேமிராவுக்கு தீணி கிடைத்து விட்டது என்று மேடையில் இருக்கும் ஜோடியை எடுக்காது இவர்களை எடுத்து தள்ளி விட்டான்..
மேடையில் இவர்கள் இப்படி நிற்க காரணம்.. மேடைக்கு வரும் முன் சுகனின் அன்னை சுகனிடம்..
“உனக்கு தனியா வீடு பார்த்து அப்பா வைத்து விட்டார்.. நீங்க இங்கு இருந்து நேராக அங்கு போயிடுங்க..” என்பதே காரணம்..