வர வேற்ப்பு முடிந்து அழைத்தவர்கள் எல்லாம் சென்று விட்டனர்.. இப்போது அந்த மண்டபத்தில் இருந்தோர் பெண் வீட்டார்.. மாப்பிள்ளை வீட்டார்கள் மாத்திரமே.
மண்டபத்தை பன்னிரெண்டு மணிக்குள் காலி செய்து விட வேண்டும்.. அதனால் வீரா தன்னிடம் வேலை செய்பவர்களின் துணை கொண்டு வீட்டிற்க்கு கொண்டு செல்ல வேண்டியதை வண்டியில் ஏற்றி அதை வீட்டிலும் இறக்கி வைத்து விட்டான்..
இனி இரு வீட்டவர்களும் செல்ல வேண்டியது அவ்வளவே பாக்கி.. வீரா பவானியிடம்…
“போகலாமா மா.. இப்போது எங்கு போகனும்.. நம்ம வீட்டிற்க்கா இளா வீட்டிற்க்கா..? என்று வீரா கேட்டது தான் தாமதம்..
“அது ஒன்னும் தமிழ் வீடு இல்லை..” என்று நயனி சொல்ல. வீரா இப்போது தான் அன்னையின் முகத்தை கவனித்தார். அவர் சங்கடத்துடன் நின்று இருப்பதில்..
“என்னம்மா என்ன பிரச்சனை.?” என்று வீரா கேட்ட போது.. மீண்டும் பவானிக்கு முன் நயனி ஏதோ சொல்ல வந்தாள்..
வீரா அவளை பார்த்த பார்வையில் அமைதியாகி விட்டாள்..
நயனிக்கு எப்போதும் வீராவிடம் சிறிது பயம் தான்.. தனக்காக அனைத்தும் செய்து கொடுப்பான் தான்.. ஆனால் சில சமயம் இது போல் முறைத்தால் வாய் திறக்க மாட்டாள்.. திறக்க பயம். அதனால் அமைதியாகி விட.
வீரா பவானியிடம் நீங்க சொல்லுங்க என்பது போல் பார்க்க.
“சம்மந்தி ஈவினிங் மாப்பிள்ளை கிட்ட உங்களுக்கு தனியா வீடு பார்த்து இருக்கோம்.. இங்கு இருந்து நேரா அங்கு போ என்று சொல்லி இருக்காங்க போல. அதுக்கு நயனி கத்திட்டு இருக்கா..” என்று இது வரை இந்த அறைக்கு மகளை கிளம்ப சொல்ல வந்தவரை பிடித்து அப்படி கோபமாக கத்தி கொண்டு இருந்தாள்..
“என்னை எப்படி அவங்க தனியா போக சொல்லலாம்.. அது என் வீடும் தானே..” என்று இது போல பேச்சு.. தங்கையையும் தங்கை மகளையும் அந்த வீட்டில் வைத்து கொள்வாங்க. எங்களை வெளியில் அனுப்பி விடுவாங்கலாம்.. நான் தனியா எல்லாம் போக மாட்டேன்..” இது போல் தான் பேசி கொண்டு இருந்தாள்..
மகளின் பேச்சில் பவானி பயந்து போய் விட்டார்.. திருமணம் முடிந்து மண்டபத்திலேயே பிரச்சனையை ஆரம்பித்து விட்டாளே.. நாளை என்ன ஆகுமோ.. முதலில் இன்று இவள் கத்துவதை மாப்பிள்ளை வீட்டவர்கள் கேட்டு விட போகிறார்கள் என்று அந்த அறையின் கதவையே அடைத்து விட்டார்..
மகன் வரவும் தான் திறந்தது. மகன் கிளம்பலாம் என்றதும்.. அதுவும் எங்கு என்றதில் மகள் சொன்னது அனைத்தையும் வீராவிடம் சொல்லி விட.
“ம் சரி.. அங்கேயே போகலாம்.. நயனிக்கு வாங்க இருக்கும் பொருளை எல்லாம் அங்கேயே இறக்கி விடலாம்..” என்று மிக எளிதாக சொல்லி விட..
நயனி மீண்டும்.. “இல்ல அண்ணா நான் ஒன்னா இருக்கனும் தான் ஆசைப்படுறேன்..” என்று சொல்லும் போது அந்த அறைக்குள் தமிழை தவிர அனைவரும் வந்தனர். நயனியின் பேச்சை கேட்டு கொண்டே தான்..
பாகியவதியோ. “நான் ஆசைப்படலையே.. வீடு பார்த்தாச்சி.. அங்கு உங்களை குடி வைத்து விட்டு நாங்க கிளம்பனும்.. இப்போவே நேரம் கடந்து விட்டது..” என்று சொல்ல.
மகளின் முகத்தை பார்த்த பவானி.. மெல்ல.. “ஓன்னா இருந்தா நல்லது தானேங்க.. என் பொண்ணு உங்க கூட இருக்க ஆசைப்படுறா இது தப்பு இல்லையே.” என்று கேட்டவருக்கு..
“தப்பு இல்ல தான்.. ஆனா பாருங்க சம்மந்தியம்மா. அது குடும்பம் ஒன்னா இருக்கனும் என்று ஆசைப்பட்டு வரும் மருமகளுக்கு சரி.. ஆனா உங்க மகள் கல்யாணம் செய்வதற்க்கு முன்னவே ஆயிரம் ப்ளான் போட்டவ.. இப்போ என்ன செய்வா..? ஏது செய்வா..? என்று எல்லாம் என் வீட்டில் நான் நிம்மதி இல்லாது இருக்க முடியாது..
சொல்ல முடியாது என் புருஷன் கிட்ட இருந்தோ.. இல்ல என் நாத்தனார் கிட்ட இருந்தே என்னை பிரிக்க கூட ப்ளான் செய்வா.. அதுக்கு ஸ்கீரிப்ட் என் மகனே எழுதியும் தருவான்.. வேண்டாம்.. இன்னை வரை நானும் என் நாத்தனாரும் நல்ல உறவு முறையில் இருந்துட்டு வரோம்.. அது கெட வேண்டாம்.” என்று பாகியவதி சொல்லி முடித்தது தான் தாமதம்..
நயனி.. “ஒ உங்க நாத்தனார் அங்கு இருக்க நான் வெளியில் போகனுமா..? என்னால் முடியாது.” என்று அடமாக சொல்லி விட.
பாக்யவதியோ.. “முறையா அந்த வீட்டில் குடி வைத்து விட்டு வரலாம் என்று இருந்தேன்.. வேண்டாம் என்றால் விடு. எனக்கு ஒரு வேலை மிச்சம்..” என்று சொன்னவர்..
தன் கணவர் நாத்தனாரை பார்த்து.. “கிளம்பிங்க வீட்டிற்க்கு போகலாம். தமிழ் எப்படி நம்ம கூட வரளா இல்ல. மாப்பிள்ளை கூட போறாளா.” என்று கேட்க.
வீரா உடனே. “நான் கூட்டிட்டு போறேன்..” என்று விட்டான்.
நயனியோ.. “அந்த வீட்டிற்க்கு நான் வராத போது என் வீட்டிற்க்கு தமிழ் வந்து விடுவாளோ ..” என்று திமிராக கேட்டால்..
இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த வீரா முதன் முறையாக.. “அது அவள் வீடு நயனி..” என்று விட்டான்..
இவ்வளவு நேரமும் தனக்கு ஆதரவாக பேசாத வீரா தமிழ் என்று வந்ததும் பேசியதில் நயனி..
பவானியிடம்.. “பார்த்திங்கலா அம்மா.. என்ன தான் இருந்தாலும் சொந்த அண்ணன் இல்ல என்று நிருபிக்கிறார்..” என்ற அவளின் பேச்சில் அனைவரும் அவளை தான் ஒரு மாதிரியாக பார்த்தனர். என்ன பெண் இவள் என்பது போல்..
இந்த காலத்தில் சொந்த அண்ணனே. தங்கைக்கு செய்ய அவ்வளவு யோசிப்பான்.. ஆனால் வீரா இதோ காலையில் போட்டு இருந்த நகை இப்போது போட்டு இருக்கும் நகை வெள்ளி பாத்திரங்கள்.. அவ்வளவு கிராண்டாக திருமணம் என்று அவ்வளவு செய்தும் என்ன சொல்கிறாள் பார் என்று.
ஆனால் வீரா நயனி பேச்சை கண்டு கொள்வதாக இல்லை.. நாய் வாலை நிமிர்ந்த முடியாது என்பது போல. ஒரு சிலரை எப்போதும் மாற்ற முடியாது. என்பதற்க்கு நயனியே உதாரணம்..
பாக்யவதி சொன்னது போல் தான் அவளை பார்த்திருந்த வீட்டில் விட்டு அன்றைக்கு இரவுக்கு உண்டான வேலைகளை பார்த்து விட்டு தங்கள் வீடு வர இரண்டு மணி கடந்து விட்டது..
தமிழை வீரா சொன்னது போல் தன் வீட்டிற்க்கு அழைத்து கொண்டான்.. தனித்து இருவருமே அந்த வீட்டில் முதல் இரவு.. முதல் இரவு என்பது உறவில் மட்டுமே வருவது இல்லையே..
இதோ அவன் அறையில் அவன் அருகில் தமிழ்.. வீராவுக்கு திருமண வேலைகளின் தொடர் அலைச்சலில் உடல் ஒய்வுக்கு கேட்டாலுமே உள்ளமோ.. தமிழை பக்கம் இருப்பதில் ஒரு புத்துணச்சி கொடுக்க. தூக்கம் தூரம் போய் விட்டது..
வீரா தன் மனைவியை அணைக்கவில்லை.. ஆசை வார்த்தைகள் பேசவில்லை. ஏன் இருவருமே முத்தம் இடவில்லை.. குறைந்த பட்சம் தங்கள் காதலை கூட சொல்லி கொள்ளவில்லை. ஆனாலுமே ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த காதல்.. ஆசை.. விருப்பம். பிடித்தத்திற்க்கு . தமிழ் அகராதியில் என்ன என்ன உள்ளதோ.. அனைத்தும் வைத்து இருந்தனர்..
அன்று ஏன் தமிழ் அவசரமாக தன் கழுத்தில் தாலி கட்ட சொன்னாள் என்ற காரணம் தெரிந்து இருந்தாலும், அதை பற்றி கேட்கவில்லை. தெரியும்.. வீராவுக்கு தெரியும். தமிழுக்கு தன்னை பிடித்ததினால் மட்டும் தான் தன்னை அன்று திருமணம் செய்து கொண்டாள்.. தன்னை தவிர வேறு ஒருத்தன் இருந்தால், நிச்சயமாக திருமணம் செய்து கொண்டு இருக்க மாட்டாள் என்று..
தமிழுக்கோ.. தன் மனதில் உள்ளதை அனைத்தையும் கொட்டி விட்டாள். மனது லேசாக ஆகி விடும்.. என்ற நினைப்பு.. ஆனால் வீரா தன்னை பார்த்து கொண்டு மட்டும் இருக்கிறானே ஏதாவது கேட்டால் தானே சொல்ல..என்ற யோசனை..
மொட்டை மாடியில் அந்த அறையில் தான் இருவரும் அமர்ந்து இருந்தனர்.. வீரா பேச காணும் என்றதும் தமிழின் கண்கள் அந்த அறையை சுற்றி வட்டம் இட்டது..
அந்த அறையில் ஏசி இல்லை.. பேன் மட்டுமே கதவை திறந்து வைத்தால் காற்று குளுமையாக வீசும்.. வீரா எப்போதும் தான் இருந்தால் கதவை திறந்து வைத்து தான் இருப்பான்..
இப்போது மனைவியோடு என்றதில் கதவை அடைத்து இருந்தான்.. அதனால் அவனுக்கு உடல் கச கச என்று இருக்க. தன் மேல் சட்டை கழட்டி போட.. இது வரை அந்த அறையையும் அவனையும் பார்த்து கொண்டு இருந்த தமிழ். வீரா சட்டையை கழட்டவும் சட்டென்று குனிந்து கொண்டாள்..
வீராவுக்கு தமிழில் இந்த செயல் அவளை சீண்டி பார்க்க தோன்ற… “என்னை இது போல நீ பார்த்தது இல்லை போல வெட்கப்படுறா.. ஈவினிங்க கூட எனக்கு ஷெல்வாணியோட நான் எக்ஸைஸ் செய்யும் போது போடும் ட்ரஸ் தான் மேன்லி லுக் கொடுக்குது என்று அந்த வாய் பேசுன. இப்போ என்ன..?” என்று கேட்டவனின் பேச்சில் தமிழுக்கு இன்னும் வெட்கம் வந்து விட்டது..
கணவன் சொன்னது போல் மாலை இவள் தான் அப்படி பேசியது.. அது பொதுவெளியில் எனும் போது தைரியமாக பேசி விட்டாள்..
ஆனால் இப்போது தனித்து கணவனோடு எனும் போது.. என்னவோ போல் இருக்க. தமிழ் இன்னும் தலையை குனிந்து கொண்டாள்..
“தமிழ் என்னை பார்..” என்று சொன்ன வீராவின் குரலில் முன் இருந்த சீண்டல் இல்லை பேச்சில் ஒரு நிதானமும் அமைதியும் தெரிய.. இப்போது தமிழ் நிமிர்ந்து கணவன் முகத்தை பார்த்தாள்..
“என்னை பிடிச்சி இருக்கா..?” சுற்றி வலைத்து கேட்காது நேரிடையாக கேட்க அவள் கண்ணை பார்த்து கணவன் கேட்ட அந்த கேள்விக்கு.
தமிழ் பார்வைக்கு இப்போது பதில் தாக்குதலாக. “ உங்களுக்கு..?” என்று கேட்டாள்..
இப்போது வீராவின் முகத்தில் ஒரு சிரிப்பு.. “ உன் கேள்விக்கு உண்டான பதில் உனக்கே தெரியும்.. என்னை விட அதிகமாவே…” என்று சொல்லியவனிடம் தமிழ்.
“அதே தான் நானும் சொல்றேன்.. “ என்று விட்டாள்..
“உனக்கு என்னை பிடிக்கும் என்று எனக்கு தெரியும்.. அதை உன் வாயில் இருந்து வந்தா நல்லா இருக்கும் என்று தான்..” என்ற பேச்சை வீரா பாதியில் நிறுத்தி விட்டு மனைவியை பார்க்க.
அவன் மனைவி அவன் எதிர் பார்த்த அதே பேச்சாக. “எனக்கும் தான் என் மீதான உங்க விருப்பத்தை இங்க வாயில் இருந்து. கேட்கனும் என்று ஆசை.” என்று தமிழ் கேட்டதை செய்து முடித்து இருந்தான் வீரா.
அவன் வாய் வழி மூலமாக தமிழ் மீது அவனுக்கு இருக்கும் காதலை விளக்கி கொண்டு இருந்தான். என் ஒன்று . அவன் வாய் வழி மூலம் சொல்லும் அந்த அவனின் பிடித்தம் தமிழ் செவிக்கு சென்று அடையாது அவள் வாயிக்குள் சென்றது அவனின் இதழ் முத்தத்தின் மூலம்…
தமிழ் வாய் அடைத்து போய் விட்டாள். ஆனால் மனது தன்னவனுக்காக விசாலமாக திறந்து கொண்டது.. அந்த அவளின் விசாலம் எந்த அளவுக்கு என்றால் அன்னையின் முன் கூட நிற்க கூச்சம் கொள்ளும் கோலத்தில் கணவன் முன் நிற்க தயாராகும் அளவுக்கு கணவனுக்காக அவள் மனதில் அவனுக்கு தாரளம் இடம் கொடுக்கப்பட்டது.
அனைத்திற்க்கும் வீரா ஏதாவது கேட்டால் எனக்கும் எனக்கு என்று கேட்ட தமிழிடம் வீரா.
தமிழின் காதில் .. “நீ கேட்டதை நான் செயலில் காட்டி விட்டேன்.. அதே போல என் செயலை நீ எடுத்துக்கனும் என்று எனக்கு ஆசை இருக்காதா..” என்று கேட்டவனுக்கு மறுப்பு சொல்ல முடியாது கூச்சம் இருந்தாலுமே, கணவனின் அனைத்து தேவைகளையும் கொடுத்து விட்டாள்..
மங்கையின் மனம் முரண்பட்டது தான் போல… காதல் சொல்ல தேவையில்லை. காதலை உணர்ந்து கணவனுக்காக அனைத்துமே விட்டு கொடுத்து விட்டாள்..
ஆனால் நயனி வாழ்க்கையில் சுகனும் இவளும் விரும்பி மணந்து.. அதுவும் அவ்வளவு வேலை பார்த்து மணந்து கொண்ட மங்கையின் மனம் இப்போது கணவனோடு உடல் அளவில் ஒன்றி வாழ்ந்தாலும், மனதோடு கணவனோடு வாழ்ந்தாளா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் நித்தம் நித்தம் ஒரு பிரச்சனை தான் அவர்களுக்குள் சென்று கொண்டு இருந்தது.. எந்த வீட்டிற்க்கு சென்று தன் ராஜாங்கம் நடத்த வேண்டும் என்று நினைத்தாளோ அந்த வீட்டிற்க்கு அவள் விருந்தினர் போல் தான் சென்று வர வேண்டி இருந்தது.. இன்றும் தமிழ் மட்டுமே தன் புகுந்த வீட்டிற்க்கு இளவரசியாகவும் தன் பிறந்த வீட்டில் மகாராணியாகவும் இருப்பதில் அவ்வளவு பொறாமை .. இருந்தும் மாமியார் மாமனாரிடம் இதை பற்றி பேச முடியாது போனதில் தன் கணவனை தான் வைத்து செய்தாள்.. சுகனுக்கும் இது தேவை தான்..
அவன் காதலித்ததில் தவறு கிடையாது.. அதை வீட்டில் சொல்லி காதலியை மணந்து கொள்ள முயலாது.. தன் காதலை நிறை வேற்றி கொள்ள அவன் திட்டம் இட்டது தான் தவறாக போனது..
அதே போல் தான் நயனியும்.. நம்பி பழகிய தோழியை ஏமாற்றியதோடு மட்டும் அல்லாது அவளை தன் விரோதியாக நினைத்ததினால், தான் இத்தனை செய்தது சுகனை திருமணம் செய்ய தானே.. அது தான் நிறை வேறி விட்டதே என்று எண்ணாது.. அவள் மகிழ்ச்சியாக இல்லாததோடு கணவனையுமே மகிழ்ச்சியாக அவளாள் வைத்து கொள்ள முடியவில்லை..
இந்த மங்கை வேறு வகையில் முரண் பட்டு நின்றது.
இந்த தலை முறையின் மனம் மட்டும் முரண்பட்டு நிற்கவில்லை.. சென்ற தலை முறையான பாக்யவதியான நயனியை பார்த்து பொறுப்பான பெண்.. இவள் போல் தமிழ் இல்லையே என்று அன்று நினைத்த மங்கையின் மனம் இன்று..
எந்த சாதுர்யமும் இல்லாது தமிழ் தான் தன் மருமகள் மகள் என்று அவரின் மனம் முரண் பட்டு நின்றது..
அதே போல் தான் சுப்ரஜா. கல்லூரியில் காதலித்தவனை கை பிடிக்க முடியாது..வீட்டில் பார்த்தவனை மணந்து கொண்டு ஒரு பெண் குழந்தை பிறந்த பின்னும் தன் காதலன் சந்தானத்தை பார்த்ததும்,, இந்த சமூகம் கணவன் குழந்தை என்று எதையும் பார்க்காது மீண்டும் காதலனை மணந் சுப்ரஜா.
இன்று தன் பெரிய மகள் பவித்ரா தன்னை விட்டு தன் தந்தையுடன் சென்றதிற்க்கு சந்தானம் தான் என்று நினைத்து ஒரே வீட்டில் இருந்தாலும், சந்தானத்தை தன்னுடைய சின்ன மகள் காவ்யாவுக்கு தந்தையாக ஏற்க முடிந்த சுப்ரஜாவால் இப்போது கணவனாக பார்க்க முடியவில்லை..
அதுவும் தன் பெரிய மகள் திருமணத்தை அவளின் தந்தை முன் நின்று நடத்த தான் யாரோ போல் தள்ளி நின்று பார்த்து விட்டு வந்ததில் சந்தானத்தால் தான் தன் மகள் தன்னை விட்டு விலகி நின்று விட்டாள் என்று மங்கையின் மனம் இந்த விசயத்தில் முரண் பட்டு நின்று விட்டது..
மங்கையின் மனம் முரண்பட்ட மனம் தான் போல. அதனால் தான் பெண்ணின் மனம் ஆழம் என்று சொன்னார்களோ…