இளந்தமிழ் தன் மூன்றாம் வருடத்தின் படிப்பை முடித்து விட்டு நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்து இருந்தாள்;; நயனியும் அதே கல்லூரியில் M.E இரண்டாம் ஆண்டில் இருந்தாள்..
விடுமுறையில் இளா எப்போதும் போல் பொழுது போக்காக செலவு செய்ய… நயனி அவளுக்கு பிடித்த கை வேலைகள் பின் சமையல் என்று ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருந்தாள்..
இளாவிடம் முன்னேற்றம் இருக்கிறதோ இல்லையோ. நயனியிடம் நல்ல முன்னேற்றம் இருந்தது.. அதுவும் அது அனைவரும் பார்க்கும் படி வித்தியாசம் தெரியும் படி வெளிப்பட்டது..
இளா அழகி.. அதில் எந்த வித சந்தேகமும் கிடையாது.. நயனியும் அழகி தான்.. ஆனால் பார்த்த உடன் அழகி என்று சொல்ல முடியாது..
ஆனால் அவளிடம் பழகினால் அவளை அனைவருக்கும் பிடித்து போகும் என்பது நிச்சயம்..
இப்போது நயனி தன் விடுமுறை நாட்களில் பயனுள்ளதாக கழிக்கிறேன் என்று சொல்லி ஒரு அழகு நிலையத்தில் பயிற்ச்சி எடுத்து கொண்டு இருக்கிறாள்..
தான் கற்றதை முதலில் வீட்டில் தானே முயற்சி எடுப்பார்கள்.. அதே போல் தான் நயனியும் அவள் அம்மா பின் இங்கு இளாவின் மாமி அவள் அம்மா என்றவள் கடைசியாக இவளிடம் வந்து நின்றாள்..
இளா.. “ எனக்கு வேண்டாமே, வேண்டாம்.. எனக்கு செய்வது நேரம் விரையம் தான்.. நான் எல்லாம் என் இஷ்டத்திற்க்கு இருப்பேன்.. இது எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது..” என்று தான் கூறினாள்..
ஆனால் இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த அவளின் மாமா முகில்..
“ உன்னை நான் அலங்கரித்து பார்க்கவே இல்லடா ..” என்ற அந்த ஒரு வார்த்தையில் இளா நயனியிடம்..
“ சரி..” என்று விட்டாள்… “ சொல்லி தன்னை ஒப்படைத்து விட்டாள்..
நாளை பத்து மணி அளவில் அவர்களின் குலத்தெய்வ கோயிலுக்கு போவதாக ஏற்பாடு செய்து இருந்தனர்.. குலதெய்வம் கோயிலில் திருவிழா.. அன்று அவர்கள் பங்காளி அனைவரும் வருவர்..
அதனால் இங்கு இருந்து எட்டு மணிக்கு கிளம்பினால் சரியாக இருக்கும் என்று சுகதீபன் அதற்க்கு ஏற்றது போல் நயனியின் அண்ணன் வீரா ட்ராவல்ஸ் மூலம் ஏழு பேர் அமரும் காரும் புக் செய்து இருந்தான்..
ஆம் நம் வீரவேலோன் டிராவல்ஸ் தான் வைத்து உள்ளான்.. அது அவன் அப்பாவுடையது.. அவர் இறந்த பின் அதை இவன் எடுத்து நடத்தி கொண்டு இருக்கிறான்..
அதில் இருந்து வருமானம் நன்றாக தான் வந்து கொண்டு இருக்கிறது.. ஆனால் அதை வெளியில் காட்டாது தந்தை இல்லாத வீட்டிற்க்கு தலை மகனாக..
தங்கைக்கு நகைகள். பிற்கால வாழ்க்கையின் பாதுகாப்பிற்க்கு என்று சொத்துக்கள் என்று வாங்கி கொண்டு இருக்கிறான்..
இளா நயனியிடம் மேக்கப் செய்ய ஒத்து கொண்டு விட்டதால், நயனி காலையிலேயே எழுந்து தன் வேலைகளை முடித்த பின்.. தன்னையும் நல்ல படி அழகு படுத்திக் கொண்டாள்..
இந்த அவளின் படிப்பு அவளை அழகுப்படுத்தி கொள்ள நன்கு உபயோகம் ஆனது.. முன்பை விட இப்போது பளிச்சென்று தெரிகிறாள்..
அனைத்தையும் முடித்து விட்டு.. வாசலில் இருந்த செருப்பை மாட்டிக் கொண்டே.. “ அம்மா நான் இளா வீட்டுக்கு போறேன்.. அப்படியே அவங்க கூட அவங்க குலதெய்வம் கோயிலுக்கும் போக போகிறேன்.. அதனால நான் வர லேட் ஆகும்..” என்று சொல்லி விட்டு விரைந்தவளையே யோசனையுடன் பார்த்து கொண்டு இருந்தார் அவளின் அம்மா பவானி..
மேல் மாடியில் இருந்த தன் அறையில் இருந்து கீழே வந்த வீரா தன் அன்னை எதையோ நினைத்து யோசித்து கொண்டு இருப்பதை கவனித்த வீரா..
“ என்னம்மா யோசனை..?” .என்று கேட்டுக் கொண்டே தன் முன் இருந்த பத்திரிக்கையை கையில் எடுத்தான்..
மகனை பார்த்ததும் அவனுக்கு சத்துமாவு கஞ்சியை கொண்டு வந்து கொடுத்த பவானி..
“ அவன் முன் கேட்ட கேள்விக்கு.. “ நம்ம நயனியை தான் நினச்சிட்டு இருந்தேன் வீரா.. வயசு இருபத்திரெண்டு முடிய போகுது.. இப்போ இடம் பார்த்தா தான் ஒரு வருடத்தில் முடிக்க சரியா இருக்கும்.. அடுத்து உனக்கும் பார்க்க சரியா இருக்கும்..” என்று ஒரு அன்னையாக தன் அடுத்த கடமையை செய்யும் வேலைக்கு பிள்ளையார் சுழியை போட்டார்..
வீராவும் .. “ நானும் இதை பத்தி யோசிச்சிட்டு தான்மா இருந்தேன்.. ஒரு நாள் போய் நாம நயனியின் ஜாதகத்தை திருமண நிலையத்தில் பதிவு செய்து வந்து விடலாம்..” என்று சொல்லவும்..
பவானி உடனே.. “ அப்படியே உன் ஜாதகத்தையும் எடுத்து வரட்டா வீரா…” என்று ஆவளுடன் கேட்டதும் சிரித்து கொண்டே..
“ அம்மா முதலில் அவளுக்கு முடியட்டும்.. அப்புறம் எனக்கு பார்க்கலாம்..” என்று.. அத்தோடு தன் பேச்சை முடித்து கொண்டான்..
இங்கு இளா வீட்டிற்க்கு வந்த நயனி இளாவை ஒரு வழி செய்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.. அந்த அலங்காரம் இந்த அலங்காரம் என்று அவள் அலங்கரித்ததில் இளாவுக்கு சந்தேகமே வந்து விட்டது..
“ இன்று தனக்கு கல்யாணமா என்று..? அப்படி அவளை படுத்தி எடுத்தவளின் கைங்கரியத்தில் சும்மா சொல்ல கூடாது இளா ஜொலித்தாள்..
அதுவும் வெண்பட்டு புடவையில், அடர்சிவப்பு நிற ரவிக்கை… அதற்க்கு தோதாக கேரளா மாடல் நகையில்.. பார்க்க அப்படியே கேரளத்து பெண் குட்டி போல் தான் தெரிந்தாள்..
சுகன் கூட இவளை பார்த்து விட்டு.. “ என்ன குட்டி.. வா பட்சணம் கழிக்க.. ..” என்று கிண்டல் செய்தான்..
அவளின் தாய் மாமன் இவளின் இந்த அலங்காரத்தில் கண் ஒரம் ஈரம் துளிர்க்க..
அவள் தலை மீது கை வைத்து.. “ நல்லா இருப்பேடா என் செல்லம்..” என்று வாழ்த்தியவர்..
“ அலங்காரத்தில் நல்லா இருக்காலே..” என்று தன் மனைவியிடமும் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டர்.
நயனியிடம்.. “ ரொம்ப சந்தோஷமா.. என் மருமகளை இப்படி முதல் முதலாக அலங்கரித்து பார்க்கும் படி வைத்ததிற்க்கு ..” என்று நயனியையும் பாராட்டினார்..
நயனியோ சிரித்து கொண்டே.. “ என்ன அங்கிள் இப்போ தான் இப்படி அலங்கரித்து பார்ப்பது போல் சொல்றிங்க.. அவள் பெரியவள் ஆன போது இப்படி அலங்கரித்து தானே சடங்கு எல்லாம் செய்து இருப்பாங்க..
அதுவும் அந்த புடவை நகை சீர் எல்லாம் அவளின் தாய் மாமன் நீங்க தானே செய்து இருப்பிங்க..” என்று ஒரு சாதாரண பேச்சு தான் நயனி பேசியது..
ஆனால் அந்த ஒரு பேச்சில் இவ்வளவு நேரமும் அங்கு நிலவிய மகிழ்ச்சியை போக்க அந்த ஒரு பேச்சே போதுமானதாக இருந்தது..
பின் இருக்காதா… ? இளா அவளின் அம்மாவும் அப்பாவும் .. இனி தனி தனி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய அன்று தான் அவள் பெரிய மனிஷி ஆனது..
அதன் பின் விழாவாவது அலங்காரமாவது.. அந்த நினைவில் தத்தம் அப்படியே இருக்க.. இளா தான் ..
நயனியிடம்.. “ உன்னுடைய இந்த அலங்கார வேலையில் நீ உன் சமையலை மறந்து விட்டாயா..?” என்று கேட்டாள்..
அதற்க்கு நயனி பதில் சொல்லும் முன் அவளின் மாமி.. “ அது எல்லாம் செய்து கொண்டு வந்து விட்டா… அதுவும் உனக்கு ரொம்ப பிடித்த அந்த சேமியா கிச்சடி.. தேங்காய் சட்னியோட.. “ என்று சொல்லியவர் நேரம் ஆவதை குறிப்பிட்டு
சாப்பிட அழைத்தவர் அந்த வேலையை முடித்த பின் வாடகை காருக்காக காத்து கொண்டு இருந்தனர்..
இளா எப்போதும் போல் தன் கை பேசியில் முகநூல் பக்கத்தை நோண்டி கொண்டு இருந்தாள்..
நயனி சந்திரமதிக்கு சமையல் அறையில் பாத்திரத்தை ஒழித்து போடுவதிலும் மேடை துடைப்பதிலும் உதவி செய்து கொண்டும் இருந்தாள்..
தன் வீட்டு வேலைகளை முடித்து விட்டு வந்த இளாவின் அன்னை இதை பார்த்து.. “ அவள் பார் உன் அத்தைக்கு எல்ப் செய்து கொண்டு இருக்கா.. ஆனா நீ சட்டமா உட்கார்ந்துட்டு போனை பார்த்துட்டு இருக்க..” என்று கடிந்து கொள்ள..
இந்த முறை அவள் சப்போர்ட்டுக்கு அவன் அத்தான் சுகன்..
“ விடுங்க அத்தை யார் வீடு ..” என்று சொல்ல..
“ இல்ல சுகா நாளை பின்னும் இந்த பழக்கம் தானே வரும்..” என்று வருங்காலத்தில் கணக்கில் கொண்டு அவர் பேசினார்..
சுகதீபனோ.. “ விடுங்க அத்தை.. இதை எல்லாம் பெரிசு படுத்திட்டு..” என்று விட்டான்..
மருமகனின் பேச்சுக்கு தாமரை அமைதியாக ஆனாலுமே, மனதில் இப்போது எல்லாம் அண்ணி இளாவின் பொறுப்பற்ற இந்த செயலை அடிக்கடி குறிப்பிடுவது போல் அவள் உணர்ந்தாள்..
அதுவும் நயனியை சொல்லி.. அவளை பார் இரண்டு வயது தான் பெரியவள்.. ஆனால் என்ன ஒரு பொறுப்பு..” என்று அடிக்கடி சொல்வது போல் உணர்கிறார்..
அவரையும் குறை சொல்ல முடியாது…அவர் சொல்வது போல் தான் இந்த பெண்ணும் நடந்து கொள்கிறாள்.. முன் தான் சின்ன பெண்.. இன்னும் ஒரு வருடத்தில் படிப்பு முடிந்து விடும் அடுத்து கல்யாணம்..
அப்படி இருக்க இவள் இப்படி இருந்தால், மகனை பெற்ற எந்த தாய் சும்மா இருப்பார்கள்.. தாமரை செல்வியின் நியாய மனது தன் அண்ணியின் நிலையில் இருந்து யோசித்தது..
தாமரை நினைப்பது போல் தான் சந்திரமதி இப்போது எல்லாம் என்ன இந்த பெண் என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறாள்..
முன் சின்ன பெண்.. ஆனால் இப்போது.. அதுவும் ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத போது தலை வலி என்று வீட்டில் வந்த மகனுக்கு காபி கூட இந்த பெண் கொடுக்கவில்லை..
தானும் தாமரையும் வீட்டிற்க்கு வந்த பின் தான் அவளுக்கும் சேர்த்து கலக்கி கொடுப்பது போல் ஆனது..
ஒரு நாத்தனார் பெண்ணாக இப்போதும் இளாவை சந்திரமதிக்கு பிடித்து தான் இருக்கிறது.. ஆனால் நாளை மகனின் மனைவியாக அவளிடம் கொஞ்சம் பொறுப்பை அந்த தாய் உள்ளம் எதிர் பார்த்தது..
இதை கணவனிடம் சொல்லவா முடியும்.. சொன்னால் அவ்வளவு தான் இந்த வயதில் டைவஸ் என்று கோர்ட்டில் நிற்க வைத்து விடுவார்.. என்று இதை எல்லாம் நினைத்து ஒரு பெரும் மூச்சு தான் விட வேண்டியது தான்..
நினைத்து கொண்டவள் கை பாட்டுக்கு தன் பாட்டுக்கு வேலை செய்து கொண்டு இருந்தாலும், தனக்கு இணையாக உதவி செய்து கொண்டு இருந்த நயனியை பார்த்தவளுக்கு..
“ இந்த பெண் இவளை போல பொறுப்பா இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்..” என்று நினைத்து கொண்டார்..
அனைத்தும் முடிந்து என்ன இன்னும் கார் வரவில்லை என்று யோசித்து கொண்டு இருக்கும் போது தான் அவர்கள் வீட்டு முன் கார் வந்து நின்றது..
ஒட்டுனர் இருக்கையில் இருந்து வீரா இறங்கவும் , காரை பார்த்த உடன் அதை நோக்கி சென்ற இளாவின் கால் அப்படியே ப்ரேக் பிடித்தது போல் நின்று விட்டாள்..
நயனி தான்.. “ என்ன அண்ணா நீங்களே ஒட்டிட்டு வந்து இருக்கிங்க..?” என்று கேட்டாள்..
அதற்க்கு வீரா இளாவை ஒரா பார்வை பார்த்து கொண்டே.. “ ட்ரைவர் யாரும் அவலைப்பல் இல்லை..” என்று சொன்னான்.
இது போல் சில சமயம் நடப்பது தான்.. அதனால் நயனி அதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை..
ஆனால் இளாவால் அப்படி எடுத்து கொள்ள முடியவில்லை.. நின்றவள் அசையாது இருந்தாள்… அப்படி இருந்தவளை சந்திரமதி தான்..