இளந்தமிழ் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அவள் அறியும் முன்னவே… அவள் அம்மாவின் அந்த அடியில் அப்படியே சிலையாக நின்று விட்டாள்..
அதுவும் அவளின் மாமீயும்.. “ அப்பா இல்லாத பெண் என்று உன்னை உன் மாமா தலையில் தூக்கி வைத்து ஆடினதுக்கு ஊரு ஜனம் முன்னாடி அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்து விட்டே..
இதுல உன் இந்த செயலால் என் மகன் பேரையும் சேர்த்து வைத்து நீ கெடுத்து வைக்கிற..” என்று அவள் மாமீ பேச பேச இளா தன் மாமனை தான் பார்த்திருந்தாள்..
அன்று அவள் எதிர் பார்த்த எந்த ஒரு வார்த்தையும் அவள் மாமனிடம் இருந்து வரவில்லை..
அவருமே அமைதியாக தலை குனிந்து நின்று கொண்டு இருப்பதை பார்த்து. அவள் எதுவும் பேசவும் இல்லை.. யாரின் பேச்சையும் அவள் மறுத்து கூறவும் கிடையாது..
ஆனாலும் அவள் காதில் அவள் மாமீ சொன்ன..
“ அப்பா இல்லாத பெண்..” அந்த வார்த்தை தான் திரும்ப திரும்ப எதிர் ஒலித்து கொண்டு இருந்தது..
அவள் தந்தையை விட்டு டெல்லியில் இருந்து சென்னை வந்து எட்டு ஆண்கள் ஆகிறது.. இது வரை தகப்பன் இல்லாத பெண் என்று யாரும் சொன்னது கிடையாது..
இன்னும் கேட்டால் அந்த குறை தெரியாது தான் அவள் மாமன் அவளை பார்த்து கொள்கிறார்.
மாமீயின் அந்த வார்த்தைக்காவது மாமா… “ நான் இருக்கும் போது நீ அந்த வார்த்தையை எப்படி நீ சொல்லலாம்..? என்று கேட்டு இருக்கலாம்…
யாரும் எனக்காக பேச வேண்டாம்.. நானுமே பேச மாட்டேன்.. எல்லோரும் பேசட்டும் எது வரை பேசுகிறார்களோ அது வரை பேசட்டும் என்று அமைதியாக நின்று விட்டாள்..
அவளின் அந்த அமைதி கூட பேசும் பொருளாக்கப்பட்டது தான் விந்தை…
“ ஆம்பிளை அந்த சுகனே போயிட்டான்.. பொட்டச்சி என்ன நெஞ்சி தைரியம் இருந்தால் அப்படியே கல்லு குண்டு போல நிற்பா..” என்று கார்முகிலனின் தூரத்து தங்கை முறையில் இருந்த ஒரு பெண்மணி..
வீடு தேடி என் பெண்ணை கட்டிக்க என்று சொன்னதற்க்கு.. அன்று கார்முகிலன் .. “ தேவதை போல என் மருமகள் இருக்க.. நான் ஏன் வெளியில் பெண்ணை எடுக்க போகிறேன்..” என்று நானும் தங்கை முறை தானே ஆகிறேன்..
என்னை வெளி ஆளாக வைத்து பேசி விட்டாரே … அன்று வீட்டிற்க்கு வந்து அப்படி ஆதங்கப்பட்டாள்..
பின் சூட்டோடு சூடாக தன் பெண்ணுக்கு வெளியில் மாப்பிள்ளை பார்த்து கட்டியும் வைத்தார்.. ஆனால் இப்போது தன் மகள் போன கைய்யோடு மாப்பிள்ளை சரியில்லை என்று தன் வீட்டிற்க்கு வந்து உட்கார்ந்து விட்டாள்..
இன்று அவள் அந்த ஆதங்ககத்தையும் கூடிய மட்டும் தீர்த்து கொள்வது போல பேசி விட்டார்..
அந்த பெண் மணி சொன்னதுமே தான் இளா சுகன் அங்கு இல்லாததையே கவனித்து பார்த்தது..
இந்த பேச்சு பேசுனா…? என்று தான் நினைத்தாள்.. ஒரு எல்லைக்கு மேல் பேச்சு நீளவும்..
வீரவேலோன்… முதல் முறை தன் வாயை திறந்தான்.. அனைவரையும் பார்த்து… “ தப்பு செய்யிறவங்க எல்லோர் முன்னாடியும் கை பிடித்து கொண்டு இருக்க மாட்டாங்க..” என்று சொன்னவனிடம்…
சிறிது நேரம் முன் இவன் நம்ம இனம் தான் என்று சொன்ன அந்த பெரியவர். “ இது எங்க குடும்பம் விசயம் தம்பி.. “ என்று அவனை ஆட்டத்தில் இருந்து தள்ளி நிற்க பார்த்தனர்..
ஆனால் வீராவோ… “ கொஞ்ச நேரம் முன் தான் நீ என் இனம்டா என்று சொன்னிங்க இப்போ என்ன..?” என்று கேட்டவனிடம்..
“ உனக்கு என்னப்பா தெரியும்…” என்று கேட்டவரிடம்.
“ எனக்கு தான் தெரியும்.. இதை பத்தி எனக்கு மட்டும் தான் தெரியும்..” என்று அவன் அழுத்தம் திருத்தமாக சொன்னவனின் அந்த பேச்சில் தலை குனிந்து நின்று கொண்டு இருந்த அவள் மாமன் நிமிர்ந்து அவனை பார்த்தார்.. நயனியோ அதிர்வுடன் தன் அண்ணன் கை பற்றினாள்..
இது என்ன புதுக்கதை என்பது போல் அவனை அனைவரும் பார்த்தனர்..
ஆனால் வீராவோ அவர்களின் பார்வையை எல்லாம் கண்டு கொள்ளாது தன்னையே அதிர்வுடன் பார்த்து கொண்டு இருந்த இளந்தமிழையே பார்த்த வாறு..…
“ ஏன்னா நானும் தமிழும் மூன்று வருடமா விரும்புறோம்..” என்று சொன்னதுமே… மற்றவர்களை விடு…
அவளின் தாயே.. “ என்னடி இது..” என்று சொல்லி அவளின் முடியை பிடித்து இழுக்க.. அவரை லாவகமாக தள்ளி நிறுத்திய வீரா..
“ இதுக்கு தான்.. இதுக்கு தான் அவள் பயந்துட்டு இருக்கா..” என்று வீரா பேச பேச நயனியும் அந்த இடத்தை விட்டு செல்ல..
ஒரு அதிர்ச்சி கொடுத்தால் அதற்க்கு ஏதாவது ரீயக்க்ஷன் கொடுக்கலாம்.. பேசுறவங்க அனைவரும் அதிர்ச்சி கொடுத்தா…
அதுவும் அவள் இப்போது மறுத்தாலும் யாராவது நம்பவா போறாங்க என்று அமைதியாக நின்று விட்டாள்..
அதுவும் வீராவின் பேச்சை கார்முகிலன் நம்பாது… “ என் மருமகள் அப்படி இல்ல.. அதுவும் வீட்டில் சுகனை தான் அவளுக்கு திருமணம் பேசனும்.. என்று சொல்லிட்டு இருக்கும் போது இல்லவே இல்ல..” என்று அவர் மறுத்து கூறினார்..
இப்போது இளந்தமிழ் முகத்தில் கொஞ்சம் நிம்மதி பரவாயில்லை.. நம்ம மாமா இதிலாவது தனக்கு ஆதரவாக பேசுகிறாரே என்று நினைத்து…
ஆனால் அதற்க்கும் வேட்டு வைப்பது போல வீரா… இளந்தமிழை பார்த்து… ஒரு நாள் . கிழமை நேரம் சொல்லி.. “ என்னை நீ ஆர்வமா பார்க்கல.. பார்க்கவில்லை என்று உன் மாமன் தலையில் அடித்து உன் குலதெய்வம் முன் உன் மாமாவிடம் சொல்.. அப்போதாவது நம்புறாங்களா என்று பார்க்கலாம்..” என்று இளந்தமிழிடம் கூறியவன்..
பின் அனைவரையும் பார்த்து… “ அப்படி சத்தியம் தமிழ் செய்யவில்லை என்றால், நான் இவ்வளவு நேரம் பேசினது எல்லாம் தப்பு என்று எல்லோர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்..” என்று இளா வீராவை ஆர்வமாக பார்த்த அந்த நாளை குறிப்பிட்டு சொல்லும் போது எப்படி மாமன் தலை மீது சத்தியம் வைப்பாள்..
பார்ப்பதும் விரும்புவதும் ஒன்றா..? என்று பேசினால் கூட.. என் அந்த வார்த்தையை கொண்டே கேலி கூத்தாக்க கூடும் என்று தெரிந்ததால், அதற்க்கு அடுத்து ஒன்றும் பேசாது, எப்போதும் இங்கு வந்தால் அங்கு இருக்கும் ஆத்தங்கரைக்கு மகிழ்ச்சியாக செல்பவள் இன்று அனைவரின் முன்னும் தன் கண்ணீரை மறைக்க அங்கு சென்றாள்..
சென்றவளுக்கு ஏன் அங்கு சென்றோம் என்பது போல்.. நயனியின் கையை பிடித்து கொண்டு சுகதீபன்…
“ கொஞ்சம் பொறுமையா இரு.. நயனி.. நான் தான் எல்லாம் பார்த்துக்குறேன் என்று சொல்றேன் லே..” என்று கெஞ்சிக் கொண்டு இருந்தவனை பார்த்து தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாது இருந்தவளின் காதில் அடுத்து சொன்ன நயன்…
“என்ன எல்லாம் பார்க்க போற.. தீபன்.. முதல்ல நீ என்ன எல்லாம் பார்த்துக்கிட்ட.. எல்லாம் எல்லாம் நான் தான் செய்து கொண்டு வரேன் இது வரை..
நீ நம்ம காதலுக்காக இது வரை ஒரு துரும்பை கூட கிள்ளி போடல… உன் வீட்டில் இளா தான் உனக்கு பேசி வைத்த பெண்.. அது சின்ன வயசுல பேசினது..
தைரியமா எனக்கு இந்த பெண்ணை தான் பிடித்து இருக்கு என்று உங்க அப்பா அம்மா முன்னாடி என்னை நிறுத்தாது… அவங்களே.. நம்ம மகனுக்கு இளாவோடு நயனியை கல்யாணம் செய்தா தான் நல்லா இருப்பான்.. என்று நினைக்கனும்..
அப்படி ஒரு எண்ணம் மட்டும் என் அம்மா அப்பாவுக்கு வந்து விட்டால் போதும்.. நம்ம கல்யாணத்ததிற்க்கு நம்ம இனம் கூட தடையா இருக்காது என்று.. காது சுத்தி மூக்கை தொட என்னை என்ன என்ன செய்ய வைத்திங்க ..
அண்ணா வீடு வாங்க பார்க்கிறான் என்று உன் கிட்ட சொன்ன போது… நீ எங்க வீட்டு கிட்ட ஒரு வீடு விற்க போறாங்க நீங்க அங்கு வந்து விட்டால் அப்புறம் எல்லாம் ஈசியா நடந்து விடும்.. என்று நீ ரொம்ப ஈசியா சொல்லிட்ட..
ஆனா நான் அதை நடத்தி முடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்கு தான் தெரியும்..” என்ற அந்த வார்த்தையில் தள்ளாடி கொண்டு இருந்த இளாவின் கால் மொத்தமாக விழுந்து போனாள்..
இது என்ன டீ இருக்கு.. இதுக்கு மேல தான் மெயின் பிச்சரே என்பது போல் தான் அவர்களின் உரையாடல் இருந்தது..
நல்ல வேலை இளா விழுந்தது மரத்துக்கு அருகில் அப்படி அந்த மரத்து மேல் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்..
அவர்கள் மும்முரமாக பேசிக் கொண்டு இருந்ததால் இளா விழுந்த சத்தம் கூட அவர்களுக்கு கேட்கவில்லை..
அதோடு மரத்தின் அந்த பக்கம்.. அதாவது அவர்கள் பார்க்காத பக்கம் இளா சாய்ந்து கொண்டதால் அவர்கள் இளாவை கவனிக்கவே இல்லை..
அதுவும் நயனி அடுத்து அடுத்து பேசிய பேச்சுக்களான..
“ என் அண்ணா கிட்ட இங்கு வீடு இருக்கு என்று சொன்ன போது.. யார் சொன்னது..? எப்படி தெரியும்..? என்று கேட்டவரிடம் எப்படி எப்படி எல்லாம் பேசி சமாளித்து அங்கு வந்தா,…
அடுத்து அடுத்தும் என்னை தான் செய்ய வைக்கிறது.. இளா கிட்ட பிரண்டா ஆக காலேஜ் மாத்தி… அவளுக்கு பிடித்த ஐட்டத்தை எல்லாம் என் அம்மா கிட்ட சொல்லி செய்ய வெச்சி… எத்தனை எத்தனை நான் செய்யிறது..
ஆனா நீ என்ன செய்தே.. ?.. ஆ செய்தியே.. இதோ இப்போ வரும் போது நான் எப்போவும் போல உங்க அம்மா மைண்டை கழுவ அவங்க கிட்ட நான் பேசிட்டு இருந்தா..
நீ உன் அத்தை பெத்த ரத்தினத்துக்கிட்ட கடளை வறுத்து கொண்டு இருக்க…” என்று சுகனின் சட்டையை பிடிக்காதது தான் ஒரு குறை அப்படி ஆவேசத்துடன் சுகனை நயனி வெளுத்து வாங்கி கொண்டு இருந்தாள்..
இதை அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த இளந்தமிழுக்கு.. என்ன உலகம் டா இது…?
நான் எல்லாத்தையும் ஈசியா எடுத்து கொண்டு போனதல், இவங்க எல்லோரும் என்னை லூசு என்று நினைத்து கொண்டார்களோ.. அதுவும் சுகனின் செல்லில் காலோர் ட்யூன்..
ரகசியமானது காதல்… மிக மிக ரகசியம் ஆனது காதல் என்றது வேறு இளாவின் நியாபகத்தில் வந்தது..
ரகசியல் இல்லடா.. உங்க காதல் ரகசியல் இல்லடா.. மானம் கெட்ட செயல்.. அதுவும் அப்போது அவள் தந்தை தன் காதலுக்காக.. தன் அன்னைக்கு செய்த துரோகமும் வந்து போக..
நான் என் அம்மா இல்ல.. கண்டிப்பா இதுக்கு நான் பதில் அடி கொடுத்தே தீருவேன்.. அதுக்கு நான் ஏதாவது செய்வேன்..உங்களை வெச்சி செய்வேன் என்று அவள் நினைத்து கொண்டு இருக்கும் போதே..
அவளின் கையில் இதோ அவர்களை வைத்து செய்ய வேண்டிய செயலை அவளுக்கு காட்டியது போல அதுவும் நயனே காட்டியது தான் அங்கு உச்சம்..
சுகன் நயனியிடம்… “ இப்போ நீ ஏன் டென்ஷன் படுற கூல்.. கூல்..” என்று அவளின் கன்னத்தில் முத்தம் இட்டே அவளை தன் வழிக்கு கொண்டு வர பார்த்தான்..
ஆனால் இந்த முறை சுகனின் அந்த வழி செல்லுப்படி ஆகவில்லை..
பின்னே… “ அங்கு என்ன பஞ்சாயத்து ஒடிட்டு இருக்கு உனக்கு ரொமான்ஸ் கேட்குதா…?” என்று எரிந்து விழுந்தாள்..
“ என்ன தான் ஒடுது.. என்னையும் இளாவையும் சேர்த்து வைத்து பேசுறாங்க,… உனக்கு அது இல்லேன்னு தெரியும்.. அப்புறம் என்ன..?” என்று அவன் மிக கூலாக சொல்ல..
அதை கேட்டு கொண்டு இருந்த இளாவுக்கு.. ; அப்போ நான் என்ன ஆனாலும் பரவாயில்லையா..? இவனுக்கு..’ என்று நினைத்து கொண்டவளின் காதில் தொடர்ந்து அவர்கள் பேச்சு கேட்டு கொண்டு இருந்தது..
இப்போது நயனி.. “ லூசு.. லூசு… அங்கு இப்போ என் அண்ணனும் இளாவும் லவ் பண்ணுவது போல பேசிட்டு இருக்கான்..” என்று நிலமையுன் தீவிரம் புரியாது பேசிக் கொண்டு இருக்கிறானே இவன் என்று… நயனுக்கு சுகன் மீது இன்னும் கோபம் தான் கூடியது..
உண்மையாக சுகனுக்கு வீரா பேசிக் கொண்டு இருக்கும் விசயத்தின் தீவிரம் புரியவில்லை தான்..
அதனால் தான் அப்போதும் சுகன்.. “ நிஜமா இது ஒரு நல்ல விசயம் தானே.. இதனால் நமக்கு நம்ம கல்யாணம் செய்வது இன்னும் ஈசியா முடிந்து விடும்..
உன் அண்ணாவுக்கே இளாவை திருமணம் செய்து வைத்தாலும் அது நமக்கு நல்லது தான்.. இல்லை என்றாலும், இதையே சாக்கா வைத்து நான் வீட்டில் பேசி உன்னை கல்யாணம் செய்து கொள்வேன்..
இதுக்கு நீ ஏன் இவ்வளவு கோபப்படுற என்று தான் எனக்கு புரியல..” என்று சொல்லியும் நயனி அவனை முறைத்து கொண்டு இருப்பதை பார்த்து..
“ நீ போன வாரம் சொன்னியே.. உங்க அப்பாவுக்கு இளா தான் அந்த வீட்டு மருமகள் என்று பிக்ஸ் ஆக்கி கொண்டார்…
இனி அவர் மனசை மாத்துறது கஷ்டம்.. மாத்த ஒரே ஒரு வழி இருக்கு.. அவள் கேரைக்ட் வைய்ஸ் பிரச்சனை எழுந்தா தான் அவர் மனசுல இருக்கும் அந்த தாட் போகும் என்று சொன்ன..
என்ன தான் இருந்தாலும், என் கூட வளர்ந்தவள் என்று நான் மறுத்துட்டேன்.. அந்த அளவுக்கு எல்லாம் நாம போகாமல் இது நல்லது தானே நயன்…” என்று சுகன் பேச்சில்..
இளந்தமிழ் தன் நெஞ்சின் மீது கை வைத்து கொண்டாள்..அந்த இடம் பாரமாக அழுத்துவது போல ஒரு உணர்வு… என்ன மாதிரி மனிதர்கள் இவர்கள்.. தன் சுயநலத்திற்க்காக இவர்கள் எதையும் செய்வார்களா..
அவளுக்கு காதல் தப்பான ஒரு செயல் இல்லை.. ஆனால் அவர்கள் அந்த காதல் மற்றவர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.. இவர்களே தன்னிடம் சொல்லி இருந்து இருக்கலாம்..
இல்லை சுகன் அத்தானே தன்னிடம்.. “ நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன்..” என்று சொல்லி இருக்கலாமே..
முன் தன் தந்தை இழந்த அவர் காதலை மீட்டெடுக்க குடும்பத்தை அம்போ என்று விட்டு விட்டு சென்று விட்டான்..
இப்போது இவர்கள் தங்கள் காதலுக்கு என்ன என்ன எல்லாம் செய்து இருக்கிறார்கள்… என்னவும் செய்ய துணிந்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது அவளுக்கு மனது ஆரவில்லை..
நெஞ்சில் கை வைத்து தன் துக்கத்தை அடக்கி கொண்டே அவர்கள் பேசுவதை இளா கவனித்தாள்..
அப்போது நயன் சுகனிடம்.. “ முட்டாள் முட்டாள்.. இளா என் அண்ணாவை கல்யாணம் செய்து கொண்டால் நான் உனக்கு என்ன முறை ஆவேண்டா..” என்று உக்கிரத்தோடு கத்த..
இப்போது இளாவின் நெஞ்சம் அடைப்பில் இருந்து விடுப்பட்டது போல அந்த ஒரு பேச்சே போதுமாக இருக்க.. திரும்பவும் இளா கோயிலை நோக்கி நடக்க தொடங்கினாள்..