வீராவுக்கு தமிழ் இப்படி சட்டென்று தன் குடும்பத்துடன் ஒன்றி விடுவாள் என்று அவன் சிறிதும் எதிர் பார்க்கவில்லை..
அதோடு தமிழ் வீட்டின் குலதெய்வம் கோயிலுல், அத்தனை பேர் இருக்க நாங்கள் விரும்புகிறோம் என்று தான் சொன்ன பொய்யை பற்றி ஏதாவது கேட்பாள் என்று வீரா எதிர் பார்த்தான்..
அதற்க்கு என்ன..? என்ன.. சொல்வது.. எப்படி..? சொன்னால் அவள் கோபப்படாது தன் காதலை புரிந்து கொள்வாள் என்று… யோசித்து வைத்து இருக்க.. ஆனால் தமிழோ அதற்க்கு எல்லாம் வேலை இல்லாது செய்து விட்டாள்..
வீராவுக்கு தெரியும் அவளுக்கும் தன்னை பிடித்து இருக்கிறது என்பது.. அவனுக்கு இதுவும் தெரியும்.. அவள் எப்போதும் தன் காதலை தன்னிடம் சொல்வது என்ன தான் சொன்னாலுமே அதை ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்பது..
அது தான் வீட்டில் அத்தனை பொறுப்பு இருந்தும், தனக்கு கிடைத்த நேரத்தை சரியாக உபயோகித்து கொண்டான்.. அவன் நினைத்தது அனைத்தும் சரியாக தான் நடந்து முடிந்து இருக்கிறது..
இருந்தும் ஏதோ ஒரு குறைவது போல் அவனுக்குள் தோன்றி கொண்டே இருக்கிறது .. அது என்ன என்று தான் அவனுக்கு புரியவில்லை..
ஒரு சமயம் திருமணம் முடிந்து தனிமையில் பேசிக் கொண்டால், அனைத்தும் சரியாகி விடும் என்று நினைத்து கொண்டு இருந்தான்..
கேலாண்டரில் இருக்கும் தாளில் ஒவ்வொரு பேப்பர் குறையும் போதும்.. தமிழுக்கும் தனக்கும் இருக்கும் அந்த இடைவெளி குறைந்து விடும் என்று அவ்வளவு நம்பிக்கை கொண்டான்..
மாதம் முடிய போகிறது .. அம்மா சடங்கை பற்றி ஒன்றும் பேசவில்லையே.. இதை பற்றி நான் எப்படி பேச்சு எடுப்பது என்று வீரா தத்தளித்து கொண்டு இருந்தான்..
ஆனால் இளாவோ.. எப்போதும் போல இங்கு பவானிக்கு உதவி செய்து விட்டு, மூன்று வீடு தள்ளி இருந்த தன் வீட்டிற்க்கும் சென்று அத்தையிடம் சல சலத்துக் கொண்டும்.. அம்மாவிடம் செல்லம் கொஞ்சியும் தன் மீது இருந்த கோபத்தை போக்கி என்று அவள் ஒரளவுக்கு திருமண வாழ்க்கையில் பொருந்தி விட்டாள்..
அதுவும் பவானியிடம் பயின்ற சமையலை தாய் வீட்டிற்க்கு வந்து செய்து கொடுத்து அனைவரையும் அசத்தி கொண்டு இருந்தாள்..
சந்திரமதி கூட தன் கணவனிடம்.. “ நம்ம இளா கல்யாணம் ஆன பின்னே ரொம்ப பொறுப்பா ஆகிட்டாங்க..” என்று இளாவை பற்றி தன் கணவனிடம் புகழ்ந்தாள்..
கார் முகிலோ.. “ இதே வாய் தானேடி அவள் பொறுப்பு இல்லாமல் இருக்கா.. நம்ம பையன் என்ன கஷ்டப்பட போறானோ என்று புலம்பிட்டு இருந்த..” என்று முறைத்து கொண்டு சொன்னார்..
“கல்யாணம் ஆன பின்னே பொறுப்பு வந்துடுச்சிங்க..” என்று சந்திரமதி கூறியதும்..
கார்முகிலன்.. “ இதே தானே நானும் சொல்வேன்.. ஆனா நீ உன் தங்கை மகள் எப்போதும் மாற மாட்டா என்று சொன்னே…” என்று இன்னும் கோபத்துடன் முறைத்தவர்..
பின்.. “ இளா வாழ்க்கை நல்ல படியாவே ஆகும்.. இப்போ சுகனை பத்தி தான் நாம யோசிக்கனும்..” என்று மகனை பற்றி கவலையுடன் கூறினார்..
“ ம் ஆமாம்ங்க.. நானும் கூட அவனுடைய ஜாதகத்தை வெளியில் எடுத்து வைத்து இருக்கேன். இனி தான் அவனுக்கு வியாழன் நோக்கி வந்து இருக்கா என்று பார்க்கனும்..” என்று சந்திரமதி சொன்னதற்க்கு..
கார்முகில்.. “ நான் தெரிந்தவங்க கிட்ட எல்லாம் சொல்லி இருக்கேன்.. ஒரு சிலருக்கு இளாவுக்கு திருமணம் ஆனது தெரிந்து இருக்கு.. ஒரு சிலருக்கு தெரியல..
அது தான் சம்மந்தி வீட்டுக்கு போய் ஒரு ரிசப்ஷன் வைத்து விடலாம் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்..” என்று தான் நினைத்ததை கூறினார்..
சந்திரமதியும்.. “ ஆமாங்க ஒரு சில புரலி பேச என்றே கூட்டம் அலையும்.. அவங்க வாய் அடைக்கவாவது வைத்து தான் ஆகவேண்டும்..” என்று சமந்தி வீட்டிற்க்கு செல்ல அவரும் ஒத்து கொண்டார்.
அதன் படி அன்று மாலையே இளா அம்மா மாமீ மாமா என்று அனைவரும் வீரா வீட்டிற்க்கு சென்றனர்..
வீரா அப்போது வீட்டில் தான் இருந்தான். அவர்களை வரவேற்று அமர வைத்தவன்…
“ அம்மா.. தமிழ்..” என்று மாடியை நோக்கி குரல் கொடுக்க..
மாமியாரும் மருமகளும் ஆளுக்கு ஒரு கையில் வடகம்.. வத்தல் எடுத்து கொண்டு வந்தார்கள்..
சந்திரமதி என்ன என்று கேட்டதற்க்கு பவானி “ வத்தல் போட்டேன்.. அது தான் பொழுது போக போவுதே என்று எடுத்துட்டு வந்தோம்..” என்று அவர் பேசிக் கொண்டு இருக்கும் போதே இளா அவர்கள் குடிக்கும் பானத்தை தயார் செய்து அவர்கள் கையில் கொடுத்து விட்டாள்..
மொத்தத்தில் இளா தன்னை அடியோடு மாற்றிக் கொண்டு விட்டாள்.. அது பார்க்கும் அனைவருக்கும் தெரிந்தது.. ஆனால் அது நல்லதற்க்கா கெட்டதற்க்கா என்பது நம் இளாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்..
வந்த நோக்கத்தை சொல்லும் முன்னவே பவானி வர சொன்ன ஐய்யரும் வந்து விட்டார்.. எதற்க்கு என்று பவானியை பார்த்த போது..
வர வழைத்த காரணத்தை பவானி சொல்லி விட்டார்..
“ ம் நல்ல விசயம் தான்.. அப்படியே இவங்களுக்கு ஒரு வரவேற்ப்பு வைத்து விட்டால், இன்னும் நல்லா இருக்கும். அதற்க்கு ஒரு நல்ல நாள் பார்க்க சொல்லி விடலாமா…” என்று ஏன் வைக்க சொன்னே என்ற காரணத்தையும் கார்முகிலன் கூறினார்..
“ ம் வைத்து விடலாமா..?; என்று பெரியவட்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது வீரா ஒரவிழிப்பார்வையில் தன் மனைவியின் முகத்தை பார்த்தான்..
அங்கு அவன் எதிர் பார்த்த மகிழ்ச்சி என்ன.. ஒரு வெட்கம் கூட படாது அவளின் பார்வை பேசியவர்களையே பார்த்து கொண்டு இருந்தாலும், அவள் முகம் ஏதோ யோசனை செய்வது போல் தெரிந்தது…
இவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையா..? இல்லையே காதல் சொல்லாத போது காதலிப்பதாக தான் சொன்னேன்.. அவள் மறுத்து இருக்கலாம்..
சரி அது தான் இல்லை என்றாலுமே, அப்போதே திருமணம் செய்ய சொன்னது இவள் தானே.. மீண்டும் இவளை பற்றி ஒன்றும் தெரிய வில்லையே என்ற குழப்பம் தான் அவன் மனதிற்க்குள்..
அப்போது ஐய்யர் தன் பஞ்சாங்கத்தை எடுத்து பார்க்கும் போது இளா.. “ நான் ஒன்னு சொல்வேன்.. அதை தப்பா எடுத்துக்க கூடாது..’ என்று இடையில் பேச வந்தவளை இப்போது அவள் அம்மா தாமரை முறைத்து பார்த்தவர்..
“ இது பெரியவங்க விசயம் இளா..! இதை பத்தி எல்லாம் பேச கூடாது.. நான் கூட பரவாயில்லை நம்ம பெண் பொறுப்பா நடந்து கொள்கிறாள் என்று நினைத்தேன்.!” என்றவரிடம்..
இளா.. “ அது தாம்மா நானும் சொல்றேன்.. நான் சின்ன பெண்.. என்னோடு பெரியவள் நயனி.. அவள் வீட்டில் இருக்கும் போது இது எல்லாம் தேவையா..?” என்று ஒரு வித சங்கடத்துடன் வினாவினாள்..
அவள் சொல்வது அங்கு இருந்த பெரியவர்களுக்கு உண்மை தான் என்று தான் தோன்றியது.. இருந்தும் திருமணம் முடிந்த பின் எத்தனை பிரித்து வைப்பது என்ற யோசனை அவர்களுக்கு..
வீராவும் முதலில் இந்த சடங்கு வேண்டாம் என்று மறுத்தவளை சந்தேகத்துடன் தான்
பார்த்தான்.. பின் அவள் சொன்ன காரணத்தில் அவனுமே அமைதியாகி தான் விட்டான்..
அவனுக்குமே தங்கையின் திருமணத்தை முதலில் முடித்து விட தானே நினைத்தான்.. ஆனால் இப்போது திருமணம் முடிந்த பின் பிடித்த பெண் பக்கம் இருக்க.. எப்படி தள்ளி இருக்க முடியும்..!
அதுவும் அவளை பாற்க்கும் போதே, அவனுடைய எண்ணம் எங்கு எங்கோ செல்லும் போது எப்படி தனித்து இருக்க முடியும்..!?
பெரியவர்கள் தயங்க இளா தான்.. தன் மாமாவிடம்.. “ மாமா போன முறை நம்ம சொந்த ஊருக்கு போயிட்டு வந்து… இரண்டு பேர் பெண் இருந்தா சொல்லுங்க என்று சொன்னிங்களே மாமா..” என்று அவருக்கு நியாபகம் படுத்தினாள்..
அவரும் ..”ஆமாம் ஆமா..” என்று சொன்னவர்..
பவானியிடம்.. “ நல்ல பையன் தான்.. அதுல ஒன்று எனக்கு மகன் முறை ஆகுது.. அது நயனிக்கு முறை ஆகாது..” என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போது தான் நயனி வீட்டிற்க்கு வந்தது..
வந்தவளின் காதில் அந்த வார்த்தையும் தெளிவாகவும் விழுந்தது..
அது கொடுத்த தாக்கத்தில் அனைத்தும் மறந்து… “ நான் இப்போ உங்களை மாப்பிள்ளை பார்க்க சொன்னேனா..” என்று கத்தி விட்டாள்.. கத்திய பின் தான் உணர்ந்தாள் என்ன செய்து விட்டேன் என்று…
உணர்ந்ததும் அனைவரின் முகத்தையும் பார்த்தவளுக்கு..! அங்கு தெரிந்த அதிர்ச்சியில்..! தன்னையே திட்டிக் கொண்டு மானசீகமாக தலையில் அடித்து கொண்டவள்..
சமாளிப்பாக.. “ இல்ல பஸ்ஸில் கூட்டம்.. காலேஜில் வேற நிறைய நோட்ஸ் எடுக்க சொன்னாங்க.. அதில் தலை வலி.. அது தான்..” என்று சொன்னாலுமே.. அதற்க்கு என்று வந்தவர்களிடம்.. அதுவும் பெரியவர்களிடம் இப்படி பேசுவதா..? என்ற எண்ணம் தான்..
அதுவும் அப்போது எல்லாம் தன் வீட்டிற்க்கு வரும் போது, அப்படி நடந்தவள் இப்போது இப்படி நடந்து கொண்டதில் ஏனோ முரணாக தோன்றியது .. இருந்தும் அதை பெரிது படுத்த வில்லை..
இன்னும் கேட்டால் சந்திரமதி.. “ நீ ஏன்..? இப்போது எல்லாம் அங்கு நம்ம வீட்டிற்க்கு வருவது இல்லை..” என்றும் கேட்டார்..
அதற்க்கு நயனி என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசிக்கும் போதே.. இளா.. “ இனி அங்கு வந்து என்ன ஆக போகுது..?” என்ற பேச்சில் அனைவரும் குழப்பத்துடன் இளாவை பார்த்தார்கள் என்றால், நயனி சந்தேகத்துடன் அவளை பார்த்தாள்..
இளா சிரித்து கொண்டே.. “ அது தான் நான் இங்கு வந்து விட்டேனே..” என்று சொல்லி சிரித்தவள்..
நயனியிடம்.. “ ஆமாம் தானே..” என்று அவளிடமே கேட்டு வைத்தாள்..
நயனியும்.. “ ஆமா..” என்று சொல்வதை விட வேரு விழ இல்லாது போய் விட்டாது..
அடுத்த பிரச்சனையாக சந்திரா… “ நம்ம இளா இருக்கும் போது அவளுக்கு பிடித்தது ஏதாவது செய்து கொண்டு வருவே.. என் மருமகள் பெயரை சொல்லி நானுமே சாப்பிடுவேன்..” என்று சொன்னதுமே..
பவானி.. “ அவள் செய்ய மாட்டா.. இளாவுக்கு இது பிடிக்கும் என்று சொல்லுவா நான் தான் செய்து கொடுப்பேன்..” என்ற உண்மையை போட்டு உடைக்க..
இப்போது அனைவரும் நயனியை என்ன இது../ என்பது போல் தான் பார்த்தனர்..
வீராவும் சிரித்து கொண்டே.. “ என்ன நீ செய்தே என்று அங்கு ரீல் விட்டு இருக்கியா..?”
என்று சும்மா கிண்டல் போல தான் கேட்டான்.. எந்த உள் குத்தும் தெரியாதவன்..
நயனிக்கு பூமிக்குள் தலையை புதைத்து விடலாமா..? இதை என்ன சொல்லி சமாளிப்பது என்ன..? பேச கூட நா எழவில்லை அவளுக்கு..
ஆனால் அவளுக்கும் சேர்த்து வைத்து இளா…” என்ன கிண்டல் செய்யிறிங்க.. அவள் செய்தா என்ன…? அத்தை கிட்ட சொல்லி செய்து தந்தா என்ன..? செய்யிறவங்க பிரச்சனை இல்ல.. எனக்கு அது பிடிக்கும் என்று செய்து கொடுக்கனும் என்று நினச்சா பாருங்க.. அதை பாருங்க..” என்று சொல்லி நயனி தோள் மீது கை போட்டு..
“ அப்படி தானே.?” என்றும் கேட்டாள்..
அதற்க்கு பின் நயனி அங்கு இல்லாது தலை வலிக்கிறது.. நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்..” என்று சொல்லி தன் அறைக்குள் ஒடி விட்டாள்..
இப்போது ஐய்யர் என்ன என்று பார்க்க அனைவரும் சேர்ந்து பேசி ஒரு மனதாக.. “ ஒரு ஆறுமாதம் தள்ளி வைத்து கொள்ளலாம்.. அதற்க்குள் நயனியின் திருமணத்தையும் நாம் முடித்து விடலாம்.. இளாவும் தன் படிப்பை முடித்து விடுவாள்.. ..” என்று தீர்மானம் செய்தனர்..
வீராவுக்கு முதலில் ஒரு மாதிரியாக தான் இருந்தது.. அது கூட தமிழுக்கு தன்னை பிடிக்காது தள்ளி வைக்க பார்க்கிறாளோ என்ற எண்ணம் தான் அவன் மனதில் சுணக்கம் வர காரணம்..
அடுத்து நயனி திருமணம் தமிழ் படிப்பு என்று சொன்னதில், தன்னையே தேற்றிக் கொண்டான்..
அதுவும் தமிழ் மாமா.. “ அது வரை இளா நம் வீட்டில் இருக்கட்டுமே..” என்று கேட்டதற்க்கு வீரா மறுக்கும் முன்.. இளா..
“ இல்ல மாமா நான் இங்கேயே இருக்கேன்..” என்று வீராவை ஒரே விழிப்பார்வை பார்த்து கொண்டே கூறினாள்.. அடுத்து சம்மந்து உபச்சாரத்தோடு இளா வீட்டினர் சென்று விட்டனர்.. வீராவும் தன் ட்ரவல்ஸ்சுக்கு சென்று விட்டான்..
ஆனால் தன் அறைக்குள் சென்ற நயனுக்கு தான், அறையில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் தூக்கி போட்டு உடைக்கும் அளவுக்கு ஆவேசம் கோபம் என்று வந்தது..
பொய்யான தலை வலி உண்மையிலேயே அவள் தலை மீது வந்து அமர்ந்து விட்டது.. தலை மீது கை வைத்து கொண்டவளுக்கு..
சுகதீபனிடம் கொஞ்ச நேரம் முன் பேசிய பேச்சுக்களே.. மனதில் வந்து வந்து போனது..
“ நாம யாரையும் பார்க்க தேவையில்லை வா நாம கல்யாணம் செய்து கொள்ளலாம்..” என்று சுகன் பேச்சை நயனியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
ஒடி போய் திருமணம் செய்து கொள்வது.. பின் குழந்தை ;பிறந்தால் அனைத்தும் சரியாகி விடும் என்பது எல்லாம் முன் செய்து இருக்க வேண்டும்.. அப்போது நயனி இதை தான் சொன்னாள்..
ஆனால் அப்போது சுகன்.. “ நான் வீட்டிற்க்கு ஒரே மகன்.. அப்படி எல்லாம் விட்டு விட்டு வர முடியாது.. இப்படி செய்,, என்று சொல்லிட்டு இப்போ ஒடி வா என்கிறான் இடியட்..
இப்போது சென்றால், எப்போதும் இரு குடும்பத்திலும் இணைய முடியாது.. எல்லாம் தனித்து எப்படி…? நினைக்கவே குழப்பமாக இருந்தது..
அதுவும் சுகன் “ ஒடி போகலாம்.” என்ற வார்த்தையை அதுவும் சுகன் வாயில் இருந்து கேட்க அவளுக்குமே ஒரு மாதிரியாக ஆனது.
.
இதில் வீட்டிற்க்கு வந்தால் சுகன் அப்பாவுக்கு மகன் முறை எனக்கு முறை இல்லை என்கிறார். அப்போ அவர் மகன்.. அதில் தான் தன்னை மறந்து கத்தி விட்டாள்..
வீட்டில் இவள் மட்டுமா தன்னை மறந்து கத்தி விட்டாள்.. இதோ ரோட்டில் நயனியிடம் பேசிய பின் சுகன் போன இடம்.. டாஸ்மார்க்..
குடுக்காதவன்.. முதல் ஆரம்பமே உச்ச கட்டம் எனும் போது..! போதையும் உச்சத்தில் தானே இருக்கும்.. தன்னை மறந்த நிலையில் சுகன் ரோட்டில் விழுந்து கிடந்தான்..
வீதியில் அவனை பார்த்த ஒருவன்.. அதுவும் வீரா ட்ரவல்ஸ் கார் ட்ரைவர்.. அவர் ஷிப்ட்டை முடித்த பின் காரை ட்ரவல்ஸ்சில் விட வரும் போது தான், ரோட்டில் சுகன் விழுந்து கிடந்ததை பார்த்தார்..
சுகன் வீட்டவர் குடும்பமாக எங்காவது வெளியில் செல்வது என்றால், வீரா ட்ரவல்ஸில் தான் புக் செய்வார்கள்.. ஒரு முறை இதே ட்ரைவர் தான் காரை ஒட்டிக் கொண்டு சென்று உள்ளான்..
அதோடு அவர்கள் வீட்டு பெண்ணை தான் வீரா மணந்து இருப்பது அந்த ஒட்டுனருக்கு தெரியும்.. அதனால் பொறுப்பாக ட்ரவல்ஸ்ஸில் விடும் காரிலேயே சுகனை தூக்கி போட்டு கொண்டு ட்ரவல்ஸ்ஸை நோக்கி சென்றான்… போதையில் சுகனாக உளறுவானா..? தீபனாக உளறுவானா..? பார்க்கலாம்…