வீரா அன்றைக்கு சென்ற வாகனங்கள்.. ஒட்டுனர்கள் போன்றவற்றை சரிபார்த்தவன் அன்றைய கணக்கையும் முடித்து விட்டு நேரம் பார்க்க.. அது பத்து என்று காட்டியது..
நேரத்தை பார்க்கும் போதே அவனின் மனைவியின் முகம் தான் கண் முன் வந்து போனது என்று எல்லாம் சொல்ல முடியாது.. நிலைத்து இருந்தது என்று சொன்னால் சரியாக இருக்கும்..
தமிழை நினைக்கும் போதே முதல் முறை பார்க்கும் போது பார்த்த அந்த முகமே அவன் நினைவு அடுக்கில்..
படிக்கும் போது தமிழ் பாடம் அவனுக்கு அவ்வளவு பிடித்தம்.. அதே பிடித்தம் அவளை பார்த்த முதலே அவனுக்கு வந்து விட்டது..
பார்த்த உடன் தெரிந்து விட்டது.. டீன் ஏஜில் இருக்கும் பள்ளி பெண் என்று… தன் வயதை கணக்கில் எடுத்தவன்.
‘சீ என்னடா இது.. சின்ன பெண்ணை போய்.. போ வீட்டில் உன் தங்கை இருக்கா… அவளோடு சின்ன பெண்ணா தெரியிறா…’ என்று தன்னை அடக்கிக் கொண்டான்..
இருந்தும் இந்த வீட்டிற்க்கு வர வழைத்த தன் தங்கைக்கு மனதில் நன்றி கூறினான்..
வீரா வேறு வீடு தான் பார்த்தான்.. முதலில் இருந்ததும் சொந்த வீடு தான்.. அவன் அப்பா வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு அது..
அடுத்து வாங்குவது இன்வெஸ்மென்ட்டாகவும் இருக்க வேண்டும்.. அதே சமயம் உபயோகமாகவும் இருக்க வேண்டும் என்ற திட்டத்தோடு தான் தனிவீடு பார்த்தான்..
பழைய வீடாக தான் பார்த்தான்.. காரணம் அவன் தொழிலில் அதை விடுத்து இடம் வாங்கி வீடு கட்டும் போது அதை மேற்பார்வை பார்க்க எல்லாம் அவனுக்கு நேரம் இல்லை..
அதே சமயம் அனைத்து பொறுப்பையும் பில்டரிடம் விடவும் அவன் விரும்பவில்லை..
அதனால் தான் பழைய வீடு பார்த்தான்.. அதே சமயம்.. வீடு கட்டி பத்து ஆண்டுக்குள் இருக்க வேண்டும்..
தான் வாங்கிய பின் குறைந்தது பத்து ஆண்டாவது அதில் தான் கை வைக்க கூடாது என்ற திட்டத்தோடு பார்த்தவனுக்கு நயன் தான் அவள் தோழி வீடு பக்கம் இந்த வீடு இருக்கிறது என்று சொன்னது..
பார்த்ததும் அவ்வளவு ஒன்றும் அவனுக்கு பிடித்தம் இல்லை தான்.. அதுவும் இந்த வீடு பார்த்து விட்டு ப்ரோக்கர் காட்டிய வீடு இதோடு அனைத்து விசயத்தில் மேலாக இருக்க.. அந்த வீடு வாங்க தான் நினைத்தான்..
ஆனால் அது என்னவோ எதற்க்கும் பிடிவாதம் பிடிக்காத நயனி.. இந்த வீடு விசயத்தில் மட்டும் அவ்வளவு அடம் பிடித்தாள்..
அதுவும் இந்த வீடு அவன் ட்ரவல்ஸ்க்கு தான் அருகில்.. நயன் கல்லூரிக்கு தூரம் அப்படி இருக்க ஏன் இந்த பிடிவாதம் என்று நினைத்தாலுமே தங்கையின் ஆசையை நிறைவேற்ற இந்த வீடு வாங்கியது..
அம்மா பெயரில் தான் பத்திரம் பதிவு செய்தான்.. வரும் முன் சிறிய அளவில் கிரகபிரவேசம் செய்ய அம்மா சொன்னதால், அதற்க்கு முன் வீட்டை சீர் செய்யும் வேலையில் இறங்கி விட்டான்..
ஒரு முறை சீர் செய்யும் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று இந்த வீடு பார்க்கும் போது தான் முதன் முதலில் தமிழை அவன் பார்த்தது…
அவள் சின்ன பெண் என்று தெரிவதற்க்கு முன்னவே ஏனோ அவனுக்கு பிடித்து விட்டது.. அதுவும் தன் தங்கை பேச்சுக்கு பேச்சு..இளா இளா.. என்று இங்கு வந்த பின்னும் அவள் பெயரே கேட்க கேட்க.. வேண்டாம் என்று மனதில் இருப்பவளை ஒதுக்கி வைக்க நினைத்தாலும்.. தங்கையின் பேச்சு பசைப்போல ஒட்டி வைக்க தான் பார்த்தது..
உடற் பயிற்ச்சி எப்போதும் செய்வது தான்.. ஆனால் அன்று அவள் தன்னை ஆர்வமாக பார்த்ததை தெரியாது பார்த்தவனுக்கு, உள்ளம் களியாட்டம் போட்டது..
அதன் பின் தன்னை தவிர்த்தது.. ஏன் என்று தெரியாது முழிக்க… மெயின் கடை வீதி இவர்கள் ட்ரவல்ஸை தான்டி தா ன் போக வேண்டும்..
அவ்வப்போது தமிழ் ஏதாவது வாங்கி போகும் போது ட்ரவல்ஸ்ஸில் அமர்ந்து இருந்து பார்ப்பான்..
ஒரு முறை பார்க்கும் போது தான் அவன் நண்பன் எதிரில் அமர்ந்து இருப்பதை மறந்து எப்போதும் போல் பார்க்க..
நண்பன் சொன்ன.. “ அந்த பெண் ஏற்கனவே புக்குடுடா..” என்ற பேச்சில்..
“ இந்த வயதில் லவ்வா..?” என்று தான் நண்பனிடம் கேட்டான்..
“ லவ் எல்லாம் இல்ல.. மாமா பையன் வீட்டோடு இருக்கான்.. அந்த பையனுக்கு தான் செய்து வைப்பதா வீட்டில் பேச்சு..” என்ற பேச்சு வீராவுக்கு உவப்பானதாக இல்லை..
முன்னும் தமிழை அவள் மாமன் மகன் சுகனோடு வண்டியில் செல்லும் போது பார்த்து இருக்கிறான் தான்.. ஆனால் அப்போது
கோபமாக பார்க்காதவன்.. அதன் பின் அவனோடு வண்டியில் சென்றால், ஏன் என்று தெரியாது எல்லாம் இல்லை..
இது பொறாமை என்று அப்பட்டமாக தெரிந்தே அவனுக்கு கோபம்.. சின்ன பெண்.. நாளை பின்ன அது விருப்பம் வேறாக இருந்தால்,, எதற்க்கு சின்ன வயதிலேயே இவன் தான் என்று பெரியவர்கள் முடிவு செய்ய வேண்டும்..
அந்த பெண்ணை இந்த பேச்சு மூலம் லாக் செய்வது போல தானே இருக்கிறது.. என்று அந்த வீட்டு பெரியவர்களை திட்டி தீர்ப்பான்..
அது தான் என்னை அப்படி பார்த்து பின் பார்க்காது விட்டாளா..? என்று சரியாக தமிழின் மனதை கணித்தான்..
அதே போல் சுகனோடு போகும் போது.. அவள் முகத்தை பார்ப்பான்.. அதில் அவன் பார்த்தது தமிழ் அவள் தாய் மாமனோடு போகும் போது எப்படி பேசிக் கொண்டே செல்வாளோ.. அதே பாவனையோடு தான் சுகனோடு செல்வதை கவனித்தது..
இருந்தும் தன் காதல் சொன்னால் அந்த உறவை மீறி தன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டாள் என்பதும் திண்ணமே..
சரி பார்க்கலாம்.. அதன் முன் தன் தங்கையின் திருமணத்தை முடித்தால் தான் அதன் பின்னே தான் எந்த வித ஸ்டெப்பும் எடுக்க முடியும் என்று இருந்தவனுக்கு கிடைத்த வாய்ப்பை தவற விடாது.. தமிழ் தனக்கு மனைவியாக வாய்ப்பு கிட்டும் போது அதை சரியாக உபயோகித்து கொண்டான்..
அனைத்தையும் சரியாக கணித்து..யூகித்தவனுக்கு தன் தங்கையை பற்றி யூகிப்பது என்ன கவனிக்காது விட்டது தான் வாழ்க்கையில் அடுத்து அவன் சந்திக்க இருக்கும் பிரச்சனைக்கும் காரணமாகியது..
தமிழை பற்றியான கல்யாணத்திற்க்கு முன் பின் என்று யோசித்து கொண்டு இருந்த போது தான் அந்த ஒட்டுனர் சுகனை ட்ரவல்ஸ்சுக்கு அழைத்து வந்தது.. தப்பு தப்பு குண்டு கட்டாக தூக்கி கொண்டு வந்தான்..
சட்டை எல்லாம் கசங்கி சுகனை பார்த்த வீரா.. என்ன என்பது போல் அந்த ஒட்டுனரை பார்த்தான்..
“ இவர் உங்க சொந்தம் என்று எனக்கு தெரியும் சார்… ரோடில் விழுந்து இருந்தார்.. அவர் வீடும் தெரியும் தான்.. ஆனாலுமே இப்படியே கூட்டிட்டு போக ஒரு மாதிரியா இருந்தது.. அது தான் இங்க அழைத்து வந்தேன்..” என்றதும் சரி என்று தான் வீராவும் நினைத்தான்..
ஆனால் தன்னை மறந்து குடித்து விட்டு ரோடில் விழும் அளவுக்கா.. ஏதோ நினைத்தவன் தலையை உலுக்கு கொண்டவனாக..
ஒட்டுனரின் உதவியோடு அங்கு அவனுக்கு என்று இரண்டு செட் உடை இருக்கும்.. அதில் ஒன்றை அணிவித்து… மோர் குடிக்க வைத்து என்று அவனின் போதை தெளிய வைக்கும் வேலையை செய்து கொண்டு இருந்தாலுமே, வீரா போதையில் உளறும் வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்து கொண்டு தான் இருந்தான்..
சுகனுக்குமே தன்னை அந்த போதையிலும் தெரிந்தது போல் தான் அவனின் உளறல்கள் இருந்தன..
அதில் அவன் காதில் விழுந்த வார்த்தைகள்.. “ நீ..ங்க தா..னா.. நானே உங்.கள வந்து பார்க்க.னும் என்று நினைத்…..தேன்.. நீங்க இளாவை கல்… . யாணம் செய்ததை மறந்து விடுங்க.. அப்போ தான் என் காதல் கல்யாணத்தில் முடியும்.. இல்லேன்னா இல்லேன்னா.. இதோ இது போல தான் தினம் தினம் இருப்பேன் நாளை வருவேன் என்ன.. இளாவை அனுப்பி விட்டு விட வேண்டும்..” என்று போதையில் உளறிக் கொண்டு இருந்தான்..
அந்த வார்த்தையை கேட்ட வீரா.. அதுவும் இளாவை அனுப்பி விட வேண்டும் என்ற வார்த்தையில் போதையை தெளிய வேண்டி சுகனின் கன்னத்தில் பட் பட் என்று தட்டினானா..? இல்லை அந்த வார்த்தைக்கு தட்டினானா..? என்று உதவி செய்து கொண்டு இருந்த அந்த ஒட்டுனர் புரியாது முழித்தார்..
பின் ஒருவழியாக சிறிது அவனை தெளிய வைத்த பின் தன் இரு சக்கர வாகனத்தை ட்ரவல்ஸைல் விட்டு விட்டு காரை எடுத்தவன் அதில் சுகனை தூக்கி போட்டு கொண்டு தமிழின் மாமன் வீட்டுக்கு சென்றான்..
கார்முகிலன் அந்த இரவு நேரத்தில் வீராவை பார்த்ததும். முதலில் பதட்டம் தான் பட்டார்.. அதுவும் வீராவுகுக்கு பின் இளா வருகிறாளா என்று எட்டி பார்த்தவரிடம்..
“ தமிழ் வீட்டில் தான் இருக்கா.. “ என்று சொன்னவன் பின்.. “ காரில் சுகன் இருக்கிறாரு.. கொஞ்சம் வாங்க..” என்றதில் அந்த சமயம் வீராவை பார்த்து குழம்பி நின்ற சந்திரமதியுமே அவன் பின் காரை நோக்கி ஒடினார்..
காரில் சுகன் இருந்த நிலையை பார்த்து சந்திரமதிக்கு கண்ணீரே வந்து விட்டது..
இரு ஆண்களும் அவன் அறையில் படுக்க வைத்த பின்.. சந்திரமதியிடம்.. “இது போல சமயத்தில் வெறும் வயிற்றில் படுக்க கூடாது ஏதாவது கொடுங்க..” என்றதில் சந்திரமதிக்கு இன்னும் கண்ணீர் வந்தது..
மற்றவர்கள் முன் தன் மகன் இறங்கி தெரியும் படி ஆயிற்றே. அதுவும் இது போலான பழக்கமே இல்லாதவன்..
வீரா தன் மகனை குடிக்காரன் என்று நினைத்து விட்டால், “இது வரை குடித்ததே இல்ல .. இளாவுக்கு கல்யாணம் ஆனதில் இருந்து ரூமில் தான் அடைந்து கிடந்தான்..
இன்னைக்கு தான் வெளியில் போனான்.. சரியாகிடுவான் என்று நினைத்தேன்.. “ என்று கண்ணீரை துடைத்து கொண்டே தன் ஆதங்ககத்தை கொட்டியவள்..
“என்ன தான் இருந்தாலும் சின்ன வயசுல இருந்து இளாவை தான் மனைவி என்ற மனசுல ஆழ பதிந்து இருக்கும் தானே.. சட்டுன்னு..” என்று மேலும் சந்திரமதி என்ன சொல்லி இருப்பாளோ..
கார்முகிலன்.. “சந்திரா..” என்று ஒரு சத்தம் போடவும் அடுத்து பேசாது அமைதியாகி விட்டாள்..
பின் சந்திரமதி தன் மகனை கவனிக்க சென்று விட்டார்.. ஹாலில் அமர்ந்து இருந்த ஆண்களின் நிலை தான் கொஞ்சம் சங்கடமாகியது..
கார்முகில் என்ன நினைத்தாரோ.. “நாங்க பெரியவங்கக்குள் தான் கல்யாண பேச்சு… அவங்க சின்ன வயசுல பழகினது போல தான் பழகிட்டு இருந்தாங்க..
இதை நான் சொல்ல தேவையில்லை.. அப்படி இருந்து இருந்தா மருமகள் உங்களை விரும்பி இருக்காது தம்பி..” என்று வீரா இளாவையும், தன் மகனையும் தவறாக நினைத்து விடுவானோ என்ற பயத்தில் சொன்னார்..
வீராவுக்கு கார்முகில் எதற்க்காக அனைத்தையும் கூறிகிறார் என்பது புரிந்து விட்டது சிரித்துக் கொண்டே..
அவர் கை மீது கை வைத்தவன்.. “எனக்கு புரியுது அங்கிள் “என்றான்..
வீராவின் புரிந்து கொண்ட தன்மையில் அவருமே அவனை பார்த்து சிரித்தவர்..
பின்… “சுகன் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலுமே, அவனுக்கு இளாவை கட்டிக் கொள்வதில் இந்த அளவுக்கு விருப்பத்தில் இருந்தான் என்பது இளாவுக்கு கல்யாணம் ஆன பின் தான் எங்களுக்கே தெரியுது…” என்று ஒரு வித விரக்த்தியுடன் கூறியவர் பின் அவரே,..
“சரியா ஆகிடும்..” என்று அவருக்கு அவரே தைரியம் அளித்தும் கொண்டார்..
தான் இதற்க்கு மேல் இருந்தால் கார்முகிலனின் மனது இன்னும் தான் வேதனை அடையும் என்று நினைத்த வீரா..
“சரி அங்கிள் நான் வரேன்..” என்று அவரிடம் விடைப்பெற்று தன் வீட்டிற்க்கு வந்தான்..
அவன் வந்த நேரம் ஹாலில் அவன் அம்மா மட்டுமே அமர்ந்து டிவியில் சீரியல் பார்த்து கொண்டு இருந்தார்..
அவன் வீட்டின் உள்ளே நுழைந்ததுமே அவன் கண்கள் மனைவியை தான் தேடியது.. தமிழ் அவன் கண்ணில் மாட்டாததில்…
“என்னம்மா வீட்டில் வேறு யாரும் காணும்..” என்று கேட்டுக் கொண்டே சாப்பிடும் மேசையில் அமர்ந்து கொண்டான்..
வீராவின் அம்மா பவானியும் தான் அமர்ந்து இருந்த இருக்கையை விட்டு எழுந்து வீராவின் எதிரில் அமர்ந்தவர்…
ஒரு தட்டை வீராவின் முன் வைத்து விட்டு ஹாட் பேக்கில் இருந்து சப்பாத்தி வைத்து ஒரு சின்ன கிண்ணத்தில் குருமாவையும் ஊற்றி தட்டு பக்கத்தில் வைத்தவர்…
“யாரை கேட்கிற..?” என்று கேட்டார்..
இது வரை தான் கேட்ட கேள்விக்கு பதில் தெரியும் பொறுட்டு பவானி முகத்தையே பார்த்து கொண்டு இருந்த வீரா..
அம்மாவின் இந்த கேள்வியில் சட்டென்று தலை குனிந்து.. சப்பாத்தியை குருமாவில் முக்கி எடுப்பது தான் மிக முக்கியமான வேலை என கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டு இருந்தான்..
பவானிக்கு மகன் நிலை புரிந்து தான் இருந்தது.. திருமணம் முடிந்து எத்தனை நாட்கள் பிரித்து வைப்பது அதுவும் மகன் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் போது..
இந்த பெண் வேறு நயனிக்கு கல்யாணம் முடிந்து தான் என்று சொல்லி விட்டாள்… சின்ன பெண்ணிடம் இதை பற்றி பேசவும் அவரால் முடியவில்லை..
இருந்தும் மனது நிறைந்து தான் இருந்தது.. தன் மகள் மீது மருமகள் காட்டும் அக்கறையில்.. இருந்தும் சீக்கிரம் நயனிக்கு திருமணம் நிச்சயமாவது செய்து முடித்து விட வேண்டும் என்ற முடிவோடு தான் பவானி மகனையும் படுக்க சொல்லி விட்டு தானும் உறங்க அவர் அறைக்கு சென்றார்..
அங்கு உறங்கும் மருமகளை பார்த்த பின் ஒரு சிரிப்பு தன்னால் தோன்றியது..
காரணம் அவள் தூங்கும் நிலை அப்படி பட்டது… ஒரு முளையில் தலையும். இன்னொரு மூளையில் காலும், அதுவும் க்ராசாக மற்றவர்கள் உறங்க இடம் இல்லாது அளவுக்கு தான் அந்த பெரிய கட்டிலில் தூங்கி கொண்டு இருந்தாள் இளா..
‘மவனே உன் நிலை கஷ்டம் தான்டா..” என்று நினைத்து கொண்டே அவளை ஒதுக்கி விட்டு படுத்தார்..
அவர் எழும் முன் இளா எழுந்து விட்டாள் போல் அவளுக்கு தெரிந்த வேலையை செய்த பின் கணினியை முன்னே வைத்து ஏதோ செய்து கொண்டு இருந்தவள் தூங்கி எழுந்து வந்த பவானியை பார்த்து..
“அத்தை காபி வைத்து இருக்கேன்.. குளிச்சிட்டு காபி குடித்து விட்டு இங்கே வாங்க சீக்கிரம் அத்தை..” என்று பவானியிடம் கூறியவள் மீண்டும் கணினிக்குள் தலையை நுழைத்து விட்டாள்..
இளா சொன்னது போல செய்து முடித்து விட்டு இளா பக்கத்தில் அமர்ந்த பவானி.. “ என்ன செய்யிற இளா.. என்னை ஏன் சீக்கிரம் வர சொன்ன..?” என்ற கேள்விக்கு பதிலாக கணினியை பவானி பார்ப்பது போல் வைத்து விட்டு..
“இதுல ரிஜிஸ்ட்டர் செய்ய தான் அத்தை..” என்று கல்யாண மேட்ரிமோனி வெப்சைடை காண்பித்து..
“இதுல கேட்கும் விவரம் எனக்கு முழுசா தெரியல அத்தை.. அதோட நயனிக்கு நீங்க என்ன எக்ஸ்பெர்ட் பண்றிங்க என்று எல்லாம் எனக்கு தெரியாது” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அந்த இடத்திற்க்கு வந்த நயனி..
“என் விசயத்தில் ரொம்ப ஒவரா போற..” என்று சொல்லி முடிக்கும் முன் வீராவின் கை தடம் நயனியின் கன்னத்தில் விழுந்து இருந்தது..