எதற்கு நம்மை அழைக்கிறார் என்று எண்ணியவள் , பார்த்துக் கொண்டிருந்த வேலையை மாற்றி வைத்துவிட்டு வெளியில் செல்ல, அவள் வருவதை பார்த்திருந்தான் தூர நின்று.
இளம் மஞ்சள் நிற சுடிதாரில் வந்தாள் , அருகில் வந்தவள் “சொல்லுங்க , ஏதும் வேணுமா ? ரமேஷ் இருப்பாரே அவர்கிட்ட சொல்லலாமே” என்க.
விழிகள் இடுங்க அவளை பார்த்தான் “சிலத அவர்கிட்ட சொல்ல முடியாது” என்க.
அவருகிட்ட சொல்ல முடியாத என்ன விஷயத்தை நம்ம கிட்ட சொல்ல போறாரு என்று யோசித்தவள் , அவனைப் பார்த்து “என்ன விஷயம்” என்று கேட்க.
விழிகள் மூடி கழுத்தை பின்னால் சாய்த்து அழுந்த தேய்த்துக் கொண்டே “மறந்துட்டேன் நியாபம் வந்ததும் சொல்றேன்” என்றவனை ஆராய்ச்சியாய் பார்த்தவள்.
“திமிரு திமிரு , அவ்ளோவும் ஆணவம்” என்று பல்கலைக் கடித்துக்கொண்டே திரும்பி நடந்தாள்.
என்ன செய்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை , “ஏற்கனவே கோவமா இருக்கா ஏன் டா இப்படி பண்ற” என்று தன்னையே நொந்து கொண்டான்.
அடுத்த நாளும் அவளுக்கு அழைக்க முதலில் அவள் எடுக்கவில்லை, மீண்டும் அடிக்க எடுத்தவள் “ரமேஷ் அங்க தான் இருக்கார் அவர்கிட்ட சொல்லுங்க” என்க.
“நேத்து தான் சொன்னேன் சிலத அவர்கிட்ட சொல்லமுடியாதுனு” என்றான் கடுமையாக.
வந்த கோவத்தை அடக்கியவள் “சொல்லுங்க” என்க.
“வெயிட் பண்றேன் வாங்க” என்றான்.
“இல்ல போன்லயே சொல்லுங்க” என்றதும் அவனுக்கு சினம் ஏறியது, “ஏன் என் முன்னாடி வர மாட்டாளா , நா பாக்க கூடாத”.
“சரி உங்க சேர்மேன்க்கு போன் போட்டு நான் சொல்றத கேக்க வர முடியாதுன்னு உங்க பி. எ சொல்லிட்டாங்க , என்ன பண்றதுனு கேக்குறேன்” என்று வைத்துவிட்டான்.
மண்டை காய்ந்தது அவளுக்கு , சேர்மேனிடம் அவள் பேசிவிடலாம்.
ஆனால் தான் போக விரும்பவில்லை என்றாள் அவனைப் பற்றி அவர் தவறாக என்னைக் கூடும் , அதை அவளால் அனுமதிக்க முடியாது.
சிறிது நேரம் கண் மூடி அமர்ந்துவிட்டாள் “இறைவா எனக்கு பொறுமையை குடு , அவன் கிட்ட இருந்து ஒதுங்கி இருக்கணும்னு என்ன நானே கட்டுப் படுத்தி வெச்சிருக்கேன் , மறுபடியும் மறுபடியும் ஏன் இப்படி என்ன சோதிக்கிற”.
“என் மன வலிமையை இழக்க வைக்காத” , என்று வேண்டியவள் எழுந்து அவன் இருக்கும் இடம் நோக்கி நடந்தாள்.
அவள் வரும் வரை அவளை திரும்பி அவன் பார்க்கவில்லை , அவள் அருகில் வந்து நிற்க , தன் கையில் இருந்த லேப்டாப் திறந்து ஒரு மாடல் காண்பித்தான்.
“குழந்தைங்க இருக்குற இடம் நிறைய மனம் உள்ள பூக்கள் வேண்டாம், பூச்சி வரும் , சில குழந்தைகளுக்கு அல்ர்ஜி ஆகவாய்ப்பு இருக்கு” என்றவன்.
சில நல்ல மூலிகை மற்றும் சூழலுக்கு ஏற்ற செடிகளை காட்டினான், அதோடு “சிறிய அளவிலான மர வகைகள் பத்து வைக்கலாம், பிள்ளைகளுக்கு வெயில் நேரங்களில் விளையாடும் நேரங்களில் ஓய்வெடுக்க உதவும் , சூழலுக்கும் நல்லது” என்று விளக்கினான்.
“ஒரு நிமிஷம் நான் சாருக்கு கால் பண்றேன் , அப்படியே காமிச்சிடலாம்” என்றவள்.
அவருக்கு அழைக்க அவருடைய வேறு கம்பெனியில் இருந்தவர் உடனே எடுத்து “சொல்லுமா” என்க , “சார் இந்தமாதிரி சில விஷயங்கள் சொல்றாங்க , நீங்க எப்போ வருவீங்க ஒரு தடவ மாடல் பாத்துட்டிங்கன்னா வேல ஆரம்பிச்சுடலாம்” என்க.
சிறிது நேரம் யோசித்தவர் “கொற்றவை நானே கால் பண்ணனும் நெனச்சேன் , கொஞ்சம் வேல இருக்கு கம்பெனி விஷயமா சென்னை போறேன்”.
“வர மூணு நாள் ஆகும் அதுவரைக்கும் எல்லா அப்டேட்ஸும் எனக்கு வாட்சப் பண்ணிடு டைம் கிடைக்கும்போது பாத்துக்கிறேன்” என்றவர்.
“கார்டன் ஒர்க் நடக்கட்டும் , நீ இப்போ இருக்கற வேலை எல்லாத்தையும் அப்படியே வெச்சுட்டு மிஸ்டர்.இன்பாவ கூட்டிட்டு நம்ம கம்பெனி வா , நா அப்படியே முடிச்சுட்டு கிளம்புறேன்” என்று வைத்துவிட்டார்.
“என்ன இவருடன் வர வேண்டுமா!!” என்று அவனை பார்க்க , “என்ன” என்றான் புருவம் உயர்த்தி.
“ஒன்றும் இல்லை” என்று தலை ஆட்டியவள் , “சார் அவர் கம்பனிக்கு வர சொல்றார்” .
“எங்க இருக்கு” என்றான் , “துறையூர்” என்க .
“ஒகே” என்று அட்ரஸ் கேட்க , “என்னையும் வர சொன்னாங்க” என்றாள்.
சட்டென்று ஒரு ஒளி அவன் கண்களில் , வந்த சிரிப்பை இதழ்களுக்குள் ஒலித்தவன் வேறு புறம் திரும்பிக்கொண்டான்.
“நான் என் வண்டில வரேன் , நீங்க பாலோவ் பண்ணுங்க” என்று அவள் நடக்க.
“என்னால வண்டிய உருட்ட முடியாது” என்றான் .
நின்றுவிட்டாள் தன்னை கிண்டல் செய்கிறான் என்று புரிந்தது, “ஆட்டோல போலாம்” என்று அவள் சொல்ல, “உன்ன கடத்திட்டு போற ஐடியா இப்போ இல்ல , தைரியமா வா” என்க.
“என்ன சொல்கிறான் இவன்” என்று செயலற்று நின்று விட்டாள் .
அவன் தன்னிடம் பேசுவதையே அவளால் நம்ப முடியவில்லை , இதில் அவன் பேச்சும் பார்வையும் புதிதாய், அதுவும் வா போ என்கிறான்.
அவன் வண்டியின் அருகில் சென்று அதை இயக்கி அவள் அருகில் நிறுத்தினான் , அவள் பார்வை முழுதும் பின் பக்க சீட்டில் இருந்தது இப்பொழுது.
இதில் அமரவேண்டுமா ?? உரிமையாக அமர நினைத்த இடத்தில் யாரோ போல விழிகள் நிறையும் என்று தோன்ற வேறு புறம் திரும்பிக்கொண்டாள்
கண்ணாடி வழியே அவன் பார்வை மொத்தம் அவளிடம் “போகவேண்டாமா” என்க.
“இவனுக்கு ஒன்றுமே தோன்றாதா” என்று எண்ணியவள் ஆழ்ந்த மூச்செடுத்து ஏறி அமர்ந்தாள் , பின்னால் கம்பியை பிடித்துக் கொண்டு.
பின் பக்கமே பார்த்திருக்க “துறையூர் அந்த பக்கமா போகணும் !! நான் முன்னாடி போகணும்னு நினச்சேன்” என்றவனின் கூற்றில் அவளுக்கு மெலிதாக சிரிப்பு வந்தது , முன்னே திரும்பியவள் முகத்தில் தெரிந்த புன்னகையில் அவன் இதழ்கள் கூட விரிந்தது.
அவள் வழி சொல்ல அங்கு சென்று சேர்ந்தார்கள் , அவனுக்கு அவரின் கம்பெனி இருக்கும் இடம் தெரியும் ஆனாலும் அவளை பேசவைத்தான்.
அங்கு சென்று அவரை சந்தித்து மாடல் காண்பித்தான் , அவனிடம் தன் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொண்டார் , பிறகு ஒரு மாடல் அவர் தேர்வு செய்ய அதை குறித்துக்கொண்டு அவன் வெளியில் வந்து காத்திருந்தான்.
கொற்றவையிடம் சில அலுவல் சம்பந்தமான விஷயங்களை தெரிவித்து அவளையும் அனுப்பி வைத்தார்.
அங்கிருந்து மீண்டும் பள்ளிக்கு திரும்பிக் கொண்டிருக்க , பாதி வழியிலே வேறு பக்கம் திரும்பினான்.
“எங்க போறீங்க” என்றவள் கேட்க.
“அப்போ தோணல , இப்போ தோணுது” என்றான் .
“என்ன தோணுது” என்றாள் திக்கி திக்கி .
மிரரில் அவளை பார்த்தவன் “கடத்திட்டு போகணும்னு” என்றான்.
முதல் நீ முடிவும் நீ…
மூன்று காலம் நீ…
கடல் நீ கரையும் நீ…
காற்று கூட நீ…
மனதோரம் ஒரு காயம்…
உன்னை எண்ணாத நாள் இல்லையே…
நானாக நானும் இல்லையே…
வழி எங்கும் பல பிம்பம்…
அதில் நான் சாய தோள் இல்லையே…
உன் போல யாரும் இல்லையே…