எப்பொழுதும் கோவிலிலேயே இருக்கும் அந்த முரட்டுக் காளையோ மாயனின் அடியில் தறி கெட்டு ஓடி வந்ததை சூலாயுதத்தில் சுற்றியிருந்த மஞ்சள் துணியை வைத்தே அதன் சீற்றத்தைத் தணித்து அதை பின்வாங்க வைத்த யுவாவையும், அவன் வீரத்தையும், அவனின் சமையோசித புத்தியையும் அங்கிருந்த அனைவருமே பெருமையாகப் பார்த்த வண்ணம் இருக்க, அவன் விரிந்த கைகளைப் பார்த்து மலரும் கூட அவனை நெருங்க, அதற்குள் அனைவரையும் தள்ளிக் கொண்டு முன்னால் வந்த லீசாவோ…
“வாட் எ பெர்ப்பாமன்ஸ் ராஜ்” என்று அவனை கட்டிப் பிடித்து அவன் கன்னத்தில் முத்தமும் பதித்தவளின் செய்கையில் அங்கிருந்த ஊர் மக்கள் மட்டுமல்லாது யுவாவின் குடும்பத்தினர் அனைவரும் கூட அதிர்ந்து தான் போக, சற்று முன்னர் காளை துரத்தியதில் வேறு பயந்து போய் இருந்த மலரின் நிலையோ சொல்ல வார்த்தைகளே இல்லா நிலைதான்.
ஆணும் பெண்ணும் சமம் என்று கூறிக் கொண்டு நகரத்தில் வாழும் படித்த பெண்களாலேயே எளிதில் ஜீரணிக்க முடியாத, பிறன் மனைக்கு முத்தமிடும் மேலைநாட்டுப் பழக்கத்தை, அந்த சிறிய கிராமத்தில் வாழும், பேதைப் பெண்ணாள் மட்டுமல்ல அங்கிருந்த பொது மக்களாலும் கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் இருக்க,
“இந்த அமேரிக்கா புள்ள என்ன இப்டி பண்ணிருச்சு” என்று அவர்கள் போக்கில் தங்களுக்குள் பேசத் தொடங்கிய ஊர் மக்களோ….
லீசா தன்னை முத்தமிட்ட அந்தக் கணம் மட்டுமே அதிர்ந்து நின்றவன் மறுநொடியே, “வாட் தி ஹெல் ஆர் யூ டூயிங் டாம்மிட்” என்று வேகமாக அவளை அரைந்து தள்ளிய யுவாவின் சீற்றத்தில் அனைவரின் வாயும் கப்பென்று மூடிக் கொள்ள, அவனோ வேகமாக மனைவியைப் பார்க்க, அவள் முகமோ எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாது இறுகிப் போய் தான் இருந்தது.
சற்று நேரம் முன்னர் கூட தன் நிபந்தனைக்காக லீசாவின் கையைப் பற்றி மலரை வெறுப்பேற்றியவனோ, லீசா தன்னை முத்தமிட்ட அந்தக் கணம் உணர்ந்து கொண்டான், இத்துணை தினங்களாக தான் செய்த தவறை.
மலர்விழிக்கென்றே பிறந்து வளர்ந்த ஆணவனுக்கோ லீசா முத்தமிட்ட இடத்தில் ஆயிரம் கம்பளிப் பூச்சிகள் ஊறுவதைப் போன்ற உணர்வே நிரம்பி வழிய, தன் கணவன் அல்லாத அந்நிய ஆடவன் தனை நெருங்கினால் ஒரு பெண்ணுக்கு எத்துணை அருவருப்புத் தோன்றுமோ, அதற்கு சிறிதும் குறைவில்லா அருவருப்போடு, தன் கன்னமே எரியுமட்டும் லீசா முத்தமிட்ட இடத்தை மீண்டும் மீண்டும் அழுத்தித் துடைத்துக் கொண்டவனுக்கு மலருக்காக மட்டுமே தான் காத்து வைத்திருந்த ஆண்மை என்னும் பொக்கிஷத்தை அந்த லீசா திருட நினைத்ததைப் போலத்தான் ஒரு பிரம்மை தோன்றியது போலும்…
இத்துணை தினங்களாக மலரை மிரட்டுவதற்காகவே அவளிடம் வேறு பெண்ணோடு வாழ்க்கை என்று கூறி வந்தவன் அப்பொழுதெல்லாம் அறிந்திருக்கவில்லை, மலரைத் தவிர வேறு ஒரு பெண்ணின் முத்தம் தனக்கு இத்துனை அருவருப்பைத் தரும் என்று.
இந்த நிமிடம் தன் பேச்சுகளையும் செயல்களையும் தானே வெறுத்தவன், மலருக்கும் அது எத்துணை வலியை கொடுத்திருக்கும் என்று உணர்ந்தவன் போல் தயங்கியவாறு மனைவியை ஏறிட்டுப் பார்க்க…
அவளோ ‘இதுக்குத்தான ஆசப்பட்ட’ என்கிற ரீதியில் தான் இமை சிமிட்டாது அவனையே நோக்கியிருந்தாள்.
மனைவியின் பார்வையில் அடிபட்டுப் போனவனாய் நின்றிருந்த யுவாவை நெருங்கிய அஸ்வினோ, “யுவா ப்ளீஸ்… உன்னோட பீலிங்ஸ் எனக்குப் புரியுது, லீசா செஞ்சது தப்புத்தான், ஆனா இத்தன பேர் முன்ன நம்ம இதப் பத்திப் பேசி யாருக்கும் காட்சியாக வேணாம், உன்ன விட மலர்தான் ரொம்ப ஷாக்ல இருக்கா, மொதோ அவள அழச்சுட்டு வீட்டுக்குப் போ யுவா” என்ற அஸ்வினின் பேச்சில் யுவா மலர்விழியின் கையைப் பற்றப் போக…
அவளோ அவன் முகத்தை நிமிர்ந்து கூடப் பாராது வேகமாக ஓடிச் சென்று ஜீப்பில் ஏறி அமர, அவள் பின்னே வந்த யுவாவும் ஜீப்பில் ஏறியவன் அவளைப் பார்த்த வண்ணமே வண்டியைக் கிளப்ப, அவர்களின் மௌன பாஷையோடே அந்த ஜீப்பும் வீடு நோக்கி விரைந்தது.
யுவாவும் மலரும் அங்கிருந்து செல்லவும்
கோவிலில் இருந்த பெரியவர்களிடமும், “நம்மளும் கிளம்பலாம் மாமா” என்ற அஸ்வினோ மதியிடம் லீசாவை நோக்கிக் கண் காட்ட, அவளோ அங்கே விழுந்து கிடந்த லீசாவைத் தூக்கி விட்டாள்.
திடீரென்று யுவா அரைந்து தள்ளியதில் அதிர்ந்து போய் இருந்தவளை தூக்கி விட்ட மதியைப் பார்த்த லீசாவோ, “மெதி, ஆம் ஐ டூயிங் சம்திங் ராங்.?” என்று பாவமாக வினவ…
மதியோ, ‘பண்றது பூராம் தப்பு, இதுல கேள்வி வேற, இந்த ஜொள்ளுப் பார்ட்டிய கூட்டிட்டு வராதீங்கன்னு சொன்னா இந்த அஸ்வி கேட்டாதான’ என்று உள்ளூற எண்ணியவள்…
“எஸ் லீசா… ஆணோ பெண்ணோ யாராயிருந்தாலும் அவங்களோட பர்மிஷன் இல்லாம கிஸ் பண்றது தப்பு தான” என ஆங்கிலத்தில் கூறியவள் லீசாவின் நடையைப் பார்த்து…
“லீசா ஆர் யூ ஓகே.?” என்று கேட்டாள் மதி.
லீசாவோ, “ஐம் நாட் ஓகே மெதி” என்றவள்
“ஒரு கிஸ் பண்ணதுக்குப் போயி இந்த ராஜ் என்னோட இடுப்பையே ஒடச்சிட்டான், இனி ஒரு நாள் கூட நா இங்க இருக்கமாட்டேன், நம்ம நாளைக்கே ஊருக்கு போலாம் மெதி” என்று இடுப்பை பிடித்துக் கொண்டே வந்து காரில் ஏறியவள், “வேர் இஸ் மை பிரதர்.?” என்று எட்விட்டைத் தேட…
அந்த எட்விட்டோ ஜானுவைப் பார்த்ததில் இருந்தே அவள் மேல் ஆசை கொண்டவன் அங்கு கோவிலின் பின்புறம் தான் காத்திருந்தான், கதிர் அழைத்து வரும் ஜானுவிடம் ஐ லவ் யூ சொல்வதற்காக.
அந்த பரந்து விரிந்த கோவிலின் பின்புறம் தோழிகளோடு இருந்த ஜானுவோ முன்புறம் நடந்த களேபரம் எதையும் அறியாதவளாய் பேசிச் சிரித்திருந்தவளை நெருங்கிய கதிரோ…
அவளை, “ஜானு” என்றழைக்க அவளும் அவனை நெருங்கி, “என்ன கதிரவா.?” என்று வினவியவளிடம்,
கதிரும், “என்கூட கொஞ்சம் வா ஜானு” என்று முன்னே நடக்க….
அவளும் ‘என்ன டியூப்லைட்டு கொஞ்சமா பிரைட் ஆகுற மாதிரி இருக்கே’ என்று எண்ணியவளும்… “என்ன விஷயம் கதிரவா.?” என்றவாறு அவனைப் பின்தொடர அவளை, அவன் அழைத்துப் போனது என்னவோ எட்வட்டிடம் தான்.
தன்னைப் பார்த்ததும் முப்பத்திரண்டு பற்களையும் காட்டி “ஹாய் ஜானு” என்ற எடிவிட்டைப் பார்த்த ஜானுவோ நிமிர்ந்து கதிரவனையும் பார்க்க, அவனோ அவள் பார்வையை சந்திக்க துணிவில்லாதவனாய் தலை தாழ்ந்து கொண்டவன்…
“எட்வட் உன்கிட்ட ஏதோ பேசணுமாம் ஜானு” என்று மட்டும் கூறி அந்த இடத்திலிருந்து விரைந்தான்…
கதிர் சென்று மறையும் மட்டும் அவன் முதுகையே குழப்பமாக பார்த்திருந்த ஜானுவும் ‘எட்விட்டுக்கு என் கிட்ட பேச என்ன இருக்கு’ என்று எண்ணியவளாய் அவன் புறம் திரும்பியவளோ…
“எஸ் எட்வட், டெல் மீ.?” என்று வினவ…
அவனோ, “எனக்கு சொல்றதுக்கு கொஞ்சம் கூச்சமா இருக்கு ஜானவி, ஆனா கண்டிப்பா சொல்லணும். நீ என்னோட மனச எப்படி உன் பக்கம் இழுத்தன்னு தெரியல, ஆனா உன்ன ரொம்ப லவ் பண்றேன்” என்று ஜானுவின் மேல் தோன்றிய ஈரப்பை தன் தாய்மொழியில் வெளிப்படுத்தியவன்.
“வில் யூ அக்ஸப்ட் மை லவ் ஜானு.?” என்று ஆவலாகக் கேட்க…
அவளோ, “இதெல்லாம் கதிருக்குத் தெரியுமா.?” என்று தான் கேட்டாள்.
ஜானு, தான் கூறிய புரப்போசலுக்கு பதில் சொல்லாமல் இப்பொழுது எதற்கு கதிரைப் பற்றிக் கேட்கிறாள் என்று எட்விட்டுக்கு புரியாவிட்டாலும் அவள் கேள்விக்குப் பதிலாக,
“தெரியும் ஜானு, கதிர் தான உன்ன சந்திக்க ஹெல்ப் பண்ணாரு, இட்ஸ் நைஸ் காய்” என்றும் சேர்த்துக் கூற…
எட்வட்டின் பதிலில் அதிர்ச்சியடைந்த ஜானுவோ ‘ரொம்ப நைஸ் காய்தான், தன்னக் காதலிக்கிற பொண்ணக் கூட அடுத்தவனுக்கு தூக்கிக் கொடுக்கற அளவுக்கு நைஸ்’ என்று ஒரு விரக்திப் புன்னகையை உதிர்த்தவளுக்கு, உள்ளுக்குள் அடிபட்டுப் போன வலி தான்.
‘கதிரவா அப்ப நீ என்ன நேசிக்கவே இல்லியா.?, நாந்தா பைத்தியம் போல உன் பின்னாடி சுத்துறனா.?’ என்று தனக்குள்ளே கேட்டுக் கேட்டு நொந்து கொண்ட ஜானுவிடம்
“வில் யூ மேரி மீ ஜானு.?” என்று மீண்டும் தன் விருப்பத்தை வலியுறுத்திய எட்வட்டோ ஜானுவின் கையைப் பற்றவர, அவளோ நிமிர்ந்து அவனை பார்வையாலே எரித்தாள்….
அவளின் பார்வையில் இரண்டடி பின்னடைந்தவனைக் கண்டு , தன்னை வெகுவாக கட்டுப்படுத்திக் கொண்ட ஜானுவோ…
“ஐம் நாட் இன்ட்ரெஸ்டட் எட்வட்” என்று மட்டும் கூறி விட்டு நில்லாமல் அங்கிருந்து விரைய…
ஜானுவின் பதிலில் அந்த அமெரிக்கக் குடிமகனோ சிறிதே ஏமாற்றம் அடைந்தாலும், “இட்ஸ் ஓகே ஜானு” என்று சுரத்தில்லாமல் கூறியவனும் யுவாவின் வீட்டை நோக்கிச் செல்ல, யுவாவின் குடும்பத்தினர் அனைவருமே இப்பொழுது கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.
யுவாவின் மொத்த குடும்பமும் கோவிலை விட்டு செல்லும் வரையிலும் கூட மறைந்திருந்து அவர்களையே பார்த்திருந்த, அனைத்திற்கும் மூல காரணமான மாயனை நெருங்கிய அவன் கையாளோ, “என்னண்ணே யுவராஜ மாடு முட்டறத பாத்து ரசிக்கலாம்னு பிளான் போட்டா, அந்த வெள்ளக்காரி முத்தத்த கொடுத்து எல்லா பிளானையும் கவுத்துப் போட்டாளேண்ணே” என்று அழுகாத குறையாக கூறியவனோ,
“நெசமாலுமே அவனுக்கு எங்கையோ மச்சம் இருக்குண்ணே, கட்டிப்புடுச்சு நச்சுன்னு குடுத்தாளே பாத்திகளாணே.?” என்று மீண்டும் மீண்டும் ஒருவித ஆதங்கத்தோடு அங்கலாய்த்துக் கொண்டிருந்த தன் கையாளை நோக்கி
“ஹா, ஹா, ஹா… உனக்கு உன் பீலிங்கு” என்று வில்லன் போலச் சிரித்த மாயனோ,
“டேய் உய்யான், அந்த வெள்ளக்காரி முத்தம் குடுத்தத பாத்தியே, அதப்பாத்து அவென் பொண்டாட்டி மொரச்சுட்டு போனத பாத்தியா.?” என்று மீண்டும் சிரித்தவன்…
“நமக்கு வேண்டியது அந்த யுவா நல்லாயிருக்கக் கூடாது… அது தானாவே நடக்கும்னு உள்ள பட்சி சொல்லுதுடா, இப்பதக்கி வேடிக்க மட்டும் பாப்போம், தேவப்பட்டா மூக்கையும் நொழப்போம் (நுழைப்போம்), நீ அப்பப்போ அவன் வீட்ல என்னா நடக்குதுன்னு மட்டும் வள்ளிகிட்ட கேட்டு வந்து சொல்லு” என்ற மாயனும்….
(வள்ளி, யுவா வீட்டு வேலைக்காரி, உய்யானின் காதலி)
“டேய் பங்காளி இனிமே தாண்டா உனக்கு இருக்கு” என்று கூறிக்கொண்டே தன் கைபேசியையே பார்த்த வண்ணம் அங்கிருந்து அகல,
“சரிங்கண்ணே” என்ற உய்யானும், “ஒரு கிஸ்ஸுனாலும், என்னா கிஸ்ஸு, ம்ம்ம்” என்று நொந்தபடியே அவனைப் பின் தொடர்ந்து செல்ல. ஒரு வழியாக அந்த திருவிழா நாளும் முடிவுக்கு வந்தது.
காலையில் மிக்க சந்தோசமாகவே திருவிழாவிற்கு சென்ற யுவாவின் குடும்பத்தினர் அனைவரும் மாலை அதற்கு முற்றிலும் மாறுபட்ட மனநிலையோடு வீட்டிற்குத் திரும்பியிருக்க… கோவிலிலிருந்து வந்த மலர்விழியோ யாரிடமும் ஒரு வார்த்தை கூடப் பேசாது தமக்கையின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்க, யுவாவோ அவள் முகத்தைக் கூடப் பார்க்க முடியாது சிறிதான குற்ற உணர்ச்சியில் தான் தவித்திருந்தான்.
செய்வதை எல்லாம் செய்த லீசாவோ இடுப்பை பிடித்துக் கொண்டு… “மாம் டாட்” என்று புலம்பியபடியே உள்ளறைக் கட்டிலில் உருண்டு கொண்டிருக்க, மற்ற அனைவரும் கூட அங்கே கூடத்தில் மௌனமாகவே அமர்ந்திருக்க… அவர்களை கலைத்தது என்னவோ நாச்சிதான்.
“ஏப்பா இப்ப என்ன குடியா முழுகிப் போச்சு, அது ஏதோ அமெரிக்கால பொறந்த பொண்ணு அங்கக்க இருக்க பழக்கத்துல இப்டி பண்ணீருச்சு, அதப் போய் பெரிய விஷயமா நெனச்சு எல்லாரும் ஏன் இப்டி உக்காந்துருக்கீக, போய் அவுகவுக சோலியப் பாருங்கப்பா” என்று அனுப்பி வைக்க, அனைவரும் பெயருக்கு உணவைக் கொறித்தவர்கள் அவரவர் அறையில் முடங்கிக் கொண்டனர்.
மலரும், தன்னை பார்வையாலே பின்தொடர்ந்த கணவனின் முகத்தைக் கூடப் பாராது விரைந்து சென்று படுத்துக் கொள்ள, யுவாவும் படுக்கப் பிடிக்காது பால்கனிக்குள் நுழைந்து கொள்ள, அன்றைய இரவும் ஒருவழியாகக் கழிந்து மறுநாள் காலையும் ஒருவாறாக விடிந்தது.
காலை உணவுக்காக உணவு மேஜையில் அமர்ந்திருந்த யுவா வீட்டினர் அனைவருக்கும் நேற்று இருந்த மனநிலை முற்றிலும் மாறிவிடவில்லையானாலும் அனைவரும் ஓரளவு சகஜ நிலைக்கு வந்திருக்க, மலர்விழியின் முகம் தான் இன்னும் தெளிவில்லாமலே இருக்க, அவளையே பார்த்திருந்த யுவாவுக்கும் உள்ளம் பாரமேறித்தான் இருந்தது.