“ஏங்க, இதெல்லாம் ரொம்ப அநியாயம்ங்க” என பாவமாய் கோபப்பட்டான் பார்த்திபன்.
மனமிறங்கிய அருட்செல்வன், “என்னடா பிரச்சனை உனக்கு? இன்னும் பத்து நாள்ல கல்யாணம் நடக்கப்போகுதுதான?” என்றான் கோபமில்லாமல்.
“அதேதான்ங்க நானும் சொல்றேன், பத்து நாள்ல கல்யாணம். ஆனா ஒத்த வார்த்தை பேசல, உங்க தங்கை என்னை லவ் பண்றாளோ இல்லையோ, நான் பண்றேங்க. புருசன் பொண்டாட்டி ஆகும் முன்ன லவ்வர்ஸா ஒருநாள் அவளோட ஸ்பெண்ட் பண்ணனும். அனுப்பி விடுங்க” என்றான் உரிமையாக.
பார்த்திபன் இன்று வீட்டிற்கே வருவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, திருமணத்திற்கு முன் மனமகனோடு அனுப்பும் அளவிற்கு சங்கர் குடும்பம் இன்னும் முன்னேறவில்லை ஆதலால் பார்த்திபன் கோரிக்கையை யாரும் ஏற்கவில்லை.
அருட்செல்வனிடம், “பெரியவங்கதான் அந்த கால பழக்க வழக்கத்துலயே இருக்காங்க, நீங்க சென்னையில படிச்சவங்கதானே? கொஞ்சம் எடுத்து சொல்லுங்க” என மன்றாடிக்கொண்டிருந்தான் ஒருமணி நேரமாக.
பார்த்திபன் பிடிவாதத்தை தாள முடியாமல் பெற்றோரிடம் அருளே சம்மதம் வாங்கி, “ஆனா நீங்க பேச வேணாம், நானே சொல்லிக்கிறேன்” என்று தனிமையில் பேசி தற்போது மேலும் சற்று நேரம் வம்பளத்து அனுமதித்தான் அருட்செல்வன்.
“ஒரு நாள்லாம் அனுப்ப முடியாது. ஒன் ஹார் வேண்ணா விடறேன்” என்றான் உள்ளுக்குள் சிரித்தபடி.
“இதுக்கு நீங்க விடலனே சொல்லியிருக்கலாம்” என்றான்.
“பார்த்திண்ணா அவர் அப்படிதான் சொல்வார், நீ கூட்டிட்டு போய்ட்டு ஈவ்னிங் போல கூட்டிட்டு வா” என்றாள் சிரிப்போடு.
“அப்படின்ற?” என பொலிவானவன், “ரொம்ப நன்றிங்க” என்றான் அருட்செல்வனிடம்.
“சரியா ஒரு மணிநேரத்துல வந்திடனும்” என்ற கண்டிப்போடு, பத்து நாளில் திருமணம் என்பதால் உடல்நலம் கருதி, “பைக்ல போகாதே, கார்ல போ” என்று அறிவுருத்தி, மனைவியிடம் “பவ்யாகிட்ட போய் சொல்லு” என்று தனதறைக்கு போனான்.
“சிவா, சாரியேது கட்டிட்டு வரப்போறா, சுடிதார் போட்டுட்டு வர சொல்லு” என்றான் உற்சாகமாக.
பார்த்திபன் பைக்கில் வந்ததால், மனைவியை உள்ளே அழைத்தவன் “கார் சாவியை கொடு” என நீட்டினான்.
“பாவம் பார்த்திண்ணா, கொஞ்சம் முன்னாடியேதான் பர்மிஷன் கொடுத்திருந்தா என்னவாம்?” என நொடிப்போடு சாவியை வாங்க, “பாவம் போல மெய்ன்டெய்ன் பண்ணிட்டிருக்கான்டீ, தினமும் பவ்யாகிட்ட பேசிட்டுதான் இருக்கான். அது உனக்கும் தெரியும்னும் எனக்கு தெரியும். தேவையில்லாம வாயடிச்ச… ப்ரோகிராமை கேன்சல் பண்ணிடுவேன்” என முறைக்க, “அச்சோ பார்த்திண்ணா என்னை கொன்னே போட்டுடும்” என சிரிப்போடு வாங்கி வந்தாள் கார் சாவியை.
“இந்தாண்ணா சாவி, பத்து நாள்ல கல்யாணம், பத்திரம்” என்று கார் சாவியை கொடுத்தாள் சிவப்ரியா.
பட்டு தாவணி பாவாடையில் பவ்யா வர சொக்கிப்போனவன், தங்கை முன் காட்டிக்கொள்ளாமல், “சுடிதாரோட வர சொன்னா இப்படி கூட்டிட்டு வந்திருக்க?” என பொய்யாய் கடிந்து அழைத்துச் சென்றான் ஆசைக் காதலியை.
ஒரு வருடமாக போனில் பேசுவார்கள்தான், ஆனால் பவ்யாவாக ஒரு நாளும் அழைத்ததில்லை. பார்த்திபன் அழைத்தாலும் இவனின் பேச்சிற்குதான் பதில் கொடுப்பாள் ஆகையால், “ப்பா முத்து உதிர்ந்திடுச்சு” என்றான் கிண்டலாக.
பவ்யா தலைகவிழ, “அங்க எங்கப்பாம்மாகிட்ட பர்மிஷன் வாங்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு, இங்க வந்தா உன் ஒரே அண்ணன் பத்து அண்ணனுக்கு சமமா நிற்கிறார். கல்யாணம் முடியட்டும் உன்னை கண்ணுலயே காட்டாம சுத்த விடறேன்” என்றான் கடுப்பாக.
“ஆத்தி… டீ லாம் சொல்றிங்க, தப்பு தப்பா பேசுறிங்க” என்றவள் கண்கள் அதிர்ந்து விரிய, சிரித்தவன், “ஒரு வருசம் மாதிரி படிப்பை பத்தி மட்டும் பேச கல்யாணம் எதுக்கு பார்த்திபா செய்துக்கனும்?” என்றான் சிரிப்போடு.
“வீட்டுக்கு போலாம்” என்றாள் பதட்டத்தோடு.
“போலாம் போலாம்” என்று தியேட்டர் அருகே காரை நிறுத்தினான்.
“அச்சோ… படத்துக்கு போக ப்ளான் பண்ணியிருக்கிங்களா? நான் மாட்டேன்”
“வரமாட்டியா?” என காரின் கதவை லாக் செய்து, பவ்யாவிடம் நெருங்கி உதட்டை தன் விரல்களால் வருட, “எ… என்ன?” என்றாள் திணறலாக.
“நிஜமா இது என்ன? எதுக்கு பண்றேனு தெரியலயா?” என்றான் காதலாக.
பவ்யா தலைகுனிய, “பேஸிக்கே தெரியாம இருக்க. இன்னும் பத்து நாள்ல எப்படி எக்ஸாம் எழுதப்போற?” என்றான் குறும்பாக.
“ஆமாம். யாரு இல்லைனு சொன்னது?” என அவளின் கையில் அழுந்த முத்தமிட, மொத்தமாய் சிவந்தாள் பவ்யா.
“உனக்கு சங்கடமா இருக்கக்கூடாதுனு நம்ம ஷிவாங்கி கல்யாணத்துல கூட கஷ்டப்பட்டு உன்னை பார்க்காம இருந்தேன். ஒன்றரை வருசமா என்னைக்காவது வெளில கூப்பிட்டேனா? காலேஜ் முடிய பக்கமா ஒரே ஒருநாள் கூப்பிட்டேன், வந்தியா? என்னை ரொம்ப காய வச்சிட்ட பார்த்திபா. எல்லாத்துக்கும் சேர்த்து இன்னைக்கு எதாவது பண்ணு, இல்ல நைட் வரைக்கும் வீட்டுக்கு கூட்டிட்டு போகமாட்டேன்” என்றான் பிடிவாதமாக.
“உங்களோட வெளில வந்துட்டு அண்ணா அப்பாம்மா முகத்துல எப்படி முழிக்கிறது? கல்யாணத்துக்கு அப்புறம்னா யாரும் ஏதும் சொல்லமாட்டாங்க” என்றாள் கெஞ்சலாக.
பொறுமையிழந்தவன், “என்னை பிடிச்சிருக்கா? இல்லையா?” என்றான் சிறு கோபத்தோடு.
“ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் தாமதமின்றி.
மனம் நிறைந்தவன், “ஹும்… உனக்கு வாய்ச்சது அவ்வளோதான்டா வாத்தி” என பெருமூச்சிழுத்து, “சரி ஷாப்பிங்காவது பண்ணலாமா?” என்றான்.
“உங்களுக்கு வேணும்னா வாங்குங்க, எனக்கு தேவைக்கு அதிகமாவே எல்லாம் எடுத்துருக்காங்க” என்றாள் பொறுப்பாக.
“ரொம்ப கஷ்டம்டா” என அலுத்துக்கொண்டவன், “உன்கிட்ட ஏதும் இல்லைன்னா சொன்னேன்? அப்பாம்மா, அண்ணன் வாங்கி தரதுக்கும் நான் வாங்கி தரதுக்கும் வித்யாசம் இல்லையா?” என கடிந்து நகைக்கடைக்கு அழைத்துச் சென்றான்.
“அச்சோ” எனும்போதே முறைத்தவன், “வாயே திறக்கக்கூடாது” என கட்டளையிட்டு, சிறு கல் பதித்த கம்மல், சிறிய டாலர் செயின், வளையல் என வாங்கியவன், அடுத்து ஜவுளிக்கடைக்கு சென்று, இவன் தேர்ந்தெடுத்த உடை பவ்யாவை வாயடைக்க வைக்க, “இது மாதிரிலாம் நான் போடமாட்டேன்” என்றாள் அழாத குறையாக.
சற்று நேர பயணத்திற்கு பிறகு, அந்த போக்குவரத்தற்ற பாதையில் ஓரிடத்தில் காரை நிறுத்தியவன், “ஒன்றரை வருசமா லவ் பண்றேன், ஒரு சினிமா இல்ல, எங்கேயும் வெளில போனதில்ல, இதெல்லாத்தையும் விட பெரிய கொடுமை… படிப்பை பத்தி மட்டுமே ஒரு வருசமா பேசினது” என அலுத்துக்கொள்ள, மீண்டும் முதலில் இருந்தா எனப்பார்த்தாள் பவ்யா.
“என் புலம்பலை நிறுத்த, ஒரே ஒரு கிஸ். ப்ளீஸ்…” என நெருங்கியவன் பவ்யா மறுப்பதற்கு கூட நேரம் கொடுக்காமல் தனதன்பை காண்பித்தான் அவளின் இதழில்.
பார்த்திபன் மனம் பவ்யாவை விட மறுக்க, பவ்யா அவனின் தோள் பட்டையில் பலம் கொண்டு குத்த, தன்னை நிலைப்படுத்தி விடுவித்தவன், “ராட்சஷி, எதுக்குடி இந்த அடி அடிக்குற?” என்றான் சிரிப்போடு.
பார்த்திபன் முகம் காணமுடியாமல் பவ்யா தலைகுனிய, வீட்டிற்கு செல்வதற்குள் இவளை இயல்பாக்க வேண்டும் என, “எதாவது சமைக்க தெரியுமா? இல்ல நீயும் சிவாவை போலதானா?” என்றான்.
தெரியும் என்பதாய் தலையசைத்தாள் பார்த்திபன் முகம் பாராமல். என்னென்ன சமைப்ப? உனக்கு என்ன பிடிக்கும்? என இவனிற்கே சலிப்பாகும் கேள்விகளை கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவளை இயல்பிற்கு திருப்பியிருந்தான்.
ஊருக்குள் நுழைந்ததும் பவ்யா முகம் சங்கடத்திற்குள்ளாக, “ஒரே ஒரு முத்தத்துக்கு இப்படி முகத்தை வச்சிட்டு உன் அண்ணன்கிட்ட என்னை மாட்டிவிட்டுடுவ போலயே” என்றான் பாவமாக.
“போங்க” என நாணத்தோடு முகம் திருப்பினாள்.
வீட்டிற்கு வர, வாசலில் இருபது பேர்வரை இருந்தனர். என்னவாக இருக்கும் என பார்த்திபன் காரிலிருந்து வேகமாக இறங்கி வீட்டிற்குள் செல்ல, தனது தாய்தந்தையர், சித்தி சித்தப்பா என அனைவரும் இருக்க, “என்னாச்சுப்பா?” என்றான் பதட்டமாக.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.