விஷ்வா கொடுத்திருந்த மருந்துகளின் உபயத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற உதய் நான்கு மணி நேரத்திற்கு மேல் கண்விழித்த போது இரவு ஏழரைக்கு மேலாகி போயிருந்தது. யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று அம்பலவாணன் சொல்லிவிட்டதில் அவன் அறை பக்கமே யாரும் போகவில்லை..
ஏகப்பட்ட அழைப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில் ராகவுமே நண்பன் உறங்கவும் ராணிபேட்டைக்கு சென்றவன் வரும் வழியில் தன் குடும்பத்தினரிடம் விஷயத்தை தெரிவிக்க சென்றுவிட்டான்.
ஜெகா முதற்கொண்டு அனைவரும் தங்கள் வேலைகளை பார்க்க சென்றுவிட மற்றவர்களை போல ராஜியால் இருக்க முடியவில்லை.
எப்படியாவது உதய்யை பார்த்துவிட வேண்டும் என்று துடித்து கொண்டிருந்தவர் ராகவன் கிளம்பவும் யாருக்கும் தெரியாமல் அறைக்கு சென்றவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் முகத்தை கண்டு இமைக்கவும் மறந்து நெஞ்சில் கை வைத்து அதிர்ச்சியில் சில கணங்களுக்கு உறைந்து போனார்.
பேயறைந்தது போல படபடத்த நெஞ்சை பிடித்துக்கொண்டு அவன் அறையை விட்டு வெளியில் வந்து தன் அறைக்குள் நுழைந்தவரால் அவன் முகத்தில் இருந்த காயங்களில் இருந்து பல மணி நேரங்களுக்கு மீள முடியவில்லை.
விழித்ததுமே உதய்க்கு சரியான பசி..! ஜெகாவிற்கு அழைத்து சொல்ல அவர் உடனே அவனுக்கு தேவையானதை அறைக்கு வெளியில் வைத்துவிட எடுத்துக்கொண்டு வந்தவன் ராகவன் வைத்திருந்த straw வோடு டிவியை உயிர்பித்து அமர்ந்தான்.
எதையும் பொறுமையாக கையாள்பவனின் கோபத்தை கிளறி தளிர் அவனை கலங்கடித்திருந்ததில் இத்தனை மணி நேரங்களாக நிலைகொள்ள முடியாமல் தவித்து தத்தளித்திருந்தவன் உறக்கத்திற்கு பின் தன்னிலைக்கு வந்திருந்தான்.
வயிறு நிறையவும் முகத்தில் மாஸ்க்கோடு பால்கனியை திறந்து வந்து நின்றவனின் முகம் மட்டுமல்ல மனமும் உறக்கத்திற்கு பிறகு நன்கு தெளிந்திருந்தது. ஆங்காங்கே சிறு வெளிச்சத்தோடு இருந்த தோட்டத்தை பார்த்தவாறே ராகவனுக்கு அழைத்து பேசியவன் செல்வத்திற்கும் பேசிவிட்டு ஊஞ்சலில் அமர்ந்து முதல்முறை தளிரின் கண்ணீரால் முழுதாக பார்த்திராத காணொளியை இப்போது நிதானமாக பார்க்க தொடங்கினான்.
அவள் பேசியதை சில இடங்களில் பாஸ் (pause) செய்து வார்த்தைகளை கவனமாக உள்வாங்கியவனின் முகத்தில் அதிர்ச்சி, கோபம், யோசனை என்று உணர்வுகள் மாறிமாறி முகிழ்த்தது.
தென்றலுக்கு அழைத்து, “ப்ரீஸீ தளிரை யார் அடிச்சா..?” என்று எடுத்ததும் கேட்க அவளுக்கு புரியவில்லை.
“புரியல த்தான்..?”
“ப்ச் அன்னைக்கு ஜிஹெச்ல தளிரை அடிச்சது யார்..?” என்று கேட்கவும்,
“த்தான்.. அது… த்தான் எதுக்கு அத்தான் இப்போ இந்த கேள்வி..?” என்று அவள் தயங்க,
“அன்னைக்கு ஜி ஹெச்ல நீங்க நுழைஞ்சதுல இருந்து கிளம்பற வரை என்ன நடந்ததுன்னு எனக்கு முழுசா தெரியனும் சொல்லு” என்றவனின் குரலில் இருந்த கோபத்தை அறிந்தவள் உடன் இருந்த சீதா வேண்டாம் என்று சைகை செய்த போதும் கேளாமல் அன்று நடந்ததை முழுதாக சொல்லிவிட்டாள்.
அதை கேட்டவனின் முகம் ரத்தமென சிவந்து போக, “இவ்ளோ நடந்தும் ஏன் அப்போவே எனக்கு சொல்லல” என்று அடிக்குரலில் சீறியவன் தென்றலின் எந்த சமாதானத்தையும் ஏற்காமல் கோபத்தோடு அழைப்பை துண்டித்து அறைக்குள் நுழைந்து ராஜி எண்ணை எடுத்தநேரம்,
“மச்சான் என்னாச்சு..? ஏன் கோபமா..” என்றவனின் சட்டையை பிடித்தவன்,
“அவ என்னெல்லாம் சொன்னான்னு கேட்டேன்டா..” என்று குரல் உயர்த்த,
“அதுவந்து மச்சான்…” என்றவனுக்கு ‘சத்தியத்தை மீறுவதா..?’ என்ற முதல்கட்ட தயக்கம் இருக்க மனதினுள் அதுகுறித்த அலசலில் ஈடுபட அதற்குள் பொறுமை இழந்த உதய்யின் கரம் ராகவனின் கன்னத்தை பதம் பார்த்தது.
கன்னத்தை பிடித்துக்கொண்டு, “டேய் என்னடா ஆச்சு உனக்கு..” என்று ராகவன் அதிர்ச்சியோடு பார்க்க, கைபேசியை அவன் முன்னே நீட்டி தளிர் பேசியதை காண்பித்து குறிப்பிட்ட வார்த்தையில் நிறுத்தி “என்ன இது..?” என்று கேட்க ராகவனுக்குமே பேரதிர்ச்சி..!
*******************
“எப்படி மச்சான்..?” என்று நம்ப முடியாமல் பார்க்க,
“அதைதான் நானும் கேட்கிறேன் எப்படி..?” என்றான் ஆவேசத்தை அடக்கி ஆழ்ந்த குரலில்.
“மச்சான் சத்தியமா நான் இல்லடா..”
“நீ தான் அவளோட பாச பயிரை வளர்த்துட்டு இருக்கறவன் உன்னை தவிர யாரும் இருக்க முடியாது..” என்று உதய் ஆவேசத்தோடு அறையில் நடக்க, அவன் பின்னே சென்ற ராகவன்,
“மச்சான் என்மேல நம்பிக்கை இல்லையா..? நீ அவ்ளோதூரம் சொல்லியும் நான் எப்படி டா சொல்லுவேன் சத்தியமா நான் இல்ல நம்புடா..?”
“அப்புறம் எப்படி அவ இதை சொன்னா..?”
“அதுதான் எனக்கும் தெரியலைடா!” என்று இறங்கிய குரலில் சொன்னவன் விட்டால் அழுதுவிடுபவன் போலிருக்க,
“இந்த விஷயத்துக்கு அப்புறம் வரேன் அதுக்கு முன்னாடி உன் தொங்கச்சி வேற என்ன உளறினான்னு எனக்கு தெரியனும் சொல்லு” என்று தன்னை கட்டுபடுத்திக்கொண்டு அவன் அமரவும்,
‘தளிர் கவின்மலருக்கு பேசியது, ஊரை விட்டு செல்லபோவது, தன்னை எப்படியாவது உதய்யை கவினுடனான திருமணத்திற்கு ஒப்புகொள்ள வைப்பது’ என்று அனைத்தையும் சொல்லிவிட்டான்.
பின்னே அன்று கவின்மலர் புகைப்படத்தை காண்பித்தது பேசிய பெரியவர்கள் ‘எங்கே தேவையற்ற ஆசையை அப்பெண் மனதிலும் விதைத்து விட்டனரோ..!’ என்று எண்ணிய உதய் அதை முதல் நிலையிலேயே கிள்ளி எறிய வேண்டி தந்தையிடம் நிலவரம் அறிந்தவன் பேச்சு வார்த்தை ஜாதக பொருத்தம் அனைத்தும் இன்னும் பெரியவர்கள் வரையில் மட்டுமே! கவின்மலருக்கு விஷயம் தெரிவிக்க படவில்லை என்பதில் நிம்மதியானவன் அதன் பின் அவளை சுத்தமாக மறந்தும் போயிருந்தான்.
ஆனால் அந்த பெண்ணுக்கே தெரியாத விஷயத்தை தளிர் அவளிடம் பேசி பூதாகரமாக்கி வைத்திருப்பதை அறிந்து இன்னுமே கொதித்து போனான்.
“உன் தங்கச்சியை தரகர் வேலை பார்க்க வேண்டாம்னு ஆரம்பத்துலையே சொன்னேன்.. அவளுக்கு தான் அறிவில்ல உனக்குமா இல்ல ஏன்டா அவளை கூட்டிட்டு போன..?” என்று அடிக்குரலில் சீறிட,
“என்னடா சொல்ற..? நானா..?”
“வேற யார்..?”
“என்னடா இது தளிர் என்ன செஞ்சாலும் என்ன பேசினாலும் அதுக்கு நான் தான் காரணமா..? ப்ளீஸ் நம்புடா தளிரை நான் கூட்டிட்டு போகலை.. சத்தியமா தளிர் கவின் கிட்ட பேசினதே அவ சொல்லித்தான் எனக்கு தெரியும்…”
இருவிரலால் நெற்றியை நீவிவிட்டு கொண்டிருந்தவன் “நிவியா ..?” என்று கேட்க,
“ஆமா உதய் நான் கவின்மலர் பற்றி சொல்லிட்டு இருந்தப்போ தளிர் தான் அவ எங்கிருக்கா..? என்ன பண்றா..? அவளோட ஃபேமிலி பற்றி எல்லாம் விசாரிச்சா..?”
“அவ கேட்டா நீ சொல்லுவியா..?”
“இல்லடா அவ எதார்த்தமா கேட்டான்னு தான் நான் நினைச்சேன். அதைவிட கவின் வேண்டாம்னு நீ போட்ட கண்டிஷன்ஸ் எல்லாம் சொன்ன பிறகு தான் அவ இதையெல்லாம் கேட்டா அதனால அது தப்பா தெரியலை. உன்னை புரிஞ்சுகிட்டவ சும்மா விசாரிக்கிறான்னு நினைச்சேன்… ஆனா இப்படி பண்ணுவான்னு எதிர்பார்க்கலை ஸாரி உதய்”
“சரி வேற ஏதாவது உன்கிட்ட விசாரிச்சாளா..?”
“அன்னிக்கு வைஷுவோட விஷயம் அம்மா மறைச்சதை பற்றி பேசிட்டு இருந்தப்போ உன்னோட ஆக்ஸிடென்ட் நீ ப்ளான் பண்ணி பண்ணினதை சொன்னேன் அதுக்கப்புறம் வேற எதுவும் இல்ல” என்றவருக்கு ‘தளிருக்கு தைரியம் கொடுக்கும் விதமாக தான் அளித்த தகவல்களே எங்கே தம்பிக்கு எதிராக திரும்பி விட்டதோ..?’ என்ற பரிதவிப்பு.
“ஏன்க்கா இப்படி..?” என்றவனின் குரலில் பதறிய சுஜி,
“உதய்.. நான் எதாவது தப்பா சொல்லிட்டேனா..?”
“என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லாம அவகிட்ட நீ பேசினதே தப்பு..! உன்னை யார் இதையெல்லாம் பேச சொன்னா..? என்ன காரணம் கிடைக்கும்னு தேடிட்டு இருந்தவளுக்கு எல்லாரும் சேர்த்து தொக்கா என்னை தூக்கி கொடுத்துட்டீங்க” என்றவனுக்கு வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க வைத்த சீதா மீதும் சுஜி மீதும் இப்போது அத்தனை ஆற்றாமை பெருகியது.
“ஸாரி ஸாரிடா..!
“இதையெல்லாம் அவகிட்ட சொல்லும் தேவை இருந்திருந்தா நானே சொல்லியிருக்க மாட்டேனா..? உன்னை யார் இதையெல்லாம் பேச சொன்னா..?”
“வேண்டாம் க்கா இனி அவளோட நீ பேசாம இருக்கிறது தான் எனக்கு செய்யற பெரிய உதவி” என்றதில் சுஜிக்கு மனம் சுணங்கி போனது.
“சரி கவின்மலர் நம்பர் இருந்தா எனக்கு அனுப்பு”
“எதுக்கு..?”
“அவளே நேர்ல பார்த்து ஓகே பண்ணி கவின்மலருக்கு சர்டிஃபிகேட் கொடுத்த பிறகு அவ வார்த்தையை மதிக்கலன்னா எப்படி..?”
“உதய்…”
“கவின்மலருக்கு சம்மதம் இருந்தா அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வச்சுக்கலாம்” என்று உதய் உச்சபட்ச கோபத்தோடு சொல்ல,
“உதய்..” என்று அதிர்ச்சியில் அவருக்கு வார்த்தை எழவில்லை.
“கேள்வி கேட்காம நம்பர் அனுப்புக்கா” என்றவன் ‘இரவு நேரம் அழைப்பதா..?’ என்று நேரம் பார்க்க அது எட்டரை என்று காட்டவும் மலருக்கு அழைத்தான்.
******************
“ஹலோ நான் உதயாதித்தன் பேசறேன்”
“ஸார் நீங்களா..?” என்ற ஆச்சரியமும் அதிர்ச்சியும் மலரிடம்.
“ஆம் ஐ ஸ்பீக்கிங் டூ கவின்மலர்..”
“ஆமா ஸார் நான்தான்..!! நீங்க எப்படி எனக்கு… அதுவும் நீங்க இவ்ளோ சீக்கிரம் கால் பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை” என்று உற்சாக குரலில் சொல்லவும் உதய்க்கு ‘அய்யோ’ என்றாகி போனது.
“கவின்மலர் எனக்கு உங்களோட பேசணும் ஃப்ரீயா இருக்கீங்களா..?”
“கண்டிப்பா ! சொல்லுங்க ஸார்” என்று இன்னும் உற்சாகம் வடியாமல் அவள் பேச அதை நீடிக்க விட கூடாது என்ற முடிவோடு,
“என்னோட வைஃப் உங்களை மீட் பண்ணினதா சொன்னாங்க.. அவங்க என்ன பேசி இருந்தாலும் அதை பெருசா எடுத்துக்க வேண்டாம் முக்கியமா உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இருந்தா ஐ ஆம் ஸா..” என்று தொடங்கவும்.,
“ஸார்… ஸார் ஒரு நிமிஷம் மேம் என்னை பார்க்க வந்தாங்க உங்களை பற்றி பேசினாங்க ஆனா நான் எதையுமே பெருசா எடுத்துக்கலை..”
“நீங்களும் மேம்மும் பெர்ஃபெக்ட் மேட்ச்! மேட் ஃபார் ஈச் அதர்! எங்க காலேஜ்ல உங்க ஜோடிக்கு எவ்ளோ ஃபேன் பேஸ் இருக்கு தெரியுமா..? அதைவிட எனக்கு உங்களை இன்டர்வியூ பண்ணனும் டேட் கிடைக்குமா..?”
“மலர் என்ன சொல்றீங்க..?”
“எனக்கு இந்த மேரேஜ் ப்ரொபோஸலே தெரியாது சார் மேம் வந்து சொல்லி தான் தெரியும். எங்க வீட்ல முதலிலேயே சொல்லியிருந்தா நான் அப்பவே எந்த ஃபர்தர் ஸ்டெப்பும் எடுக்க வேண்டாம்னு சொல்லி இருப்பேன்” என்றவளிடம்,
“கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க மலர்” என்றான்.
“ஸார் உங்களுக்கு என்னை பற்றி தெரியுமான்னு தெரியலை.. நான் எம்.ஏ சைக்காலஜி ஸ்டுடென்ட்! ஃபைனல் இயர்ல இருக்கேன். சரத் கேஸ் எடுத்து நாங்க ஸ்டடி பண்ணிட்டு இருக்கோம். அதுல தளிர் மேம் எப்படி அந்த விஷயத்துல இருந்து மூவ் ஆன் ஆனாங்க..! எப்படி ஆக முடிஞ்சது..? எப்படி இன்னோரு கல்யாணத்துக்கு வந்தாங்கன்னு சரத்தை தாண்டி அவங்களை பற்றின ஒரு அலசலும் எங்களுக்குள்ள இருந்தது”
“எங்களுக்கு இடையிலேயே நிறைய கருத்துமுரண் இருந்தது.., நியூஸ், சோஷியல் மீடியான்னு இவ்ளோ நடந்த பிறகு ஒரு செட் ஆஃப் ஸ்டூடெண்ட்ஸ் அவ்ளோ ஈசியா மூவ் ஆனாகி நெக்ஸ்ட் போக மாட்டாங்கன்னு சொன்னாங்க., ஒரு சிலர் இவ்ளோ தூரம் மேம் கூட இருந்த நீங்க விட மாட்டாங்கன்னு…”
“இன்னோரு பக்கம் தளிர் மேம் கேஸ் முடிஞ்சதும் சரத் எதிர்ல வாழ்ந்து காட்டனும்னு உங்களை கல்யாணம் பண்ணிக்கிற முடிவு எடுப்பாங்கன்னு சொன்னாங்க, வெகு சிலர் அவங்க உங்களை கல்யாணம் செய்துக்காம போகவும் வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க..” என்று அவர்களுக்கிடையில் இருந்த சாத்தியக்கூறுகளை சொல்லியவள்..,
“நானுமே உங்க கல்யாணத்தை தான் எதிர்பார்த்தேன்! ஆனா மேம்கிட்ட இருந்து இப்படி ஒரு ஷாக்கிங் டெசிஷன் எதிர்பாக்கல.. அதுவும் உங்க இரண்டு பேரையும் அட்மைர் பண்ற என்கிட்டே இப்படி பேசுவாங்கன்னு எதிர்பார்க்கலை..”
“இதுல பியூட்டி என்ன தெரியுமா ஸார்..?” என்று மலர் நிறுத்த மறுபுறம் எந்த சலனமுமில்லிலை.
“உங்களை பற்றி பேசினவங்க அந்த கான்வர்சேஷன் முழுக்க உங்களை அவங்களோட புருஷனா தான் அட்ரெஸ் பண்ணினாங்க.. நீங்க அவங்களை எவ்ளோ லவ் பண்றீங்கன்னும் சொன்னவங்க அவங்க உங்க லைஃப்ல இனி கிடையாது அதனால எனக்கு கிட்டத்தட்ட இது செகண்ட் மேரேஜ் தான் சொன்னாங்க, எனக்கு இதுலயே அவங்களோட mental trauma (மன அதிர்ச்சி)புரிஞ்சது..”
“நீங்க என்ன சொன்னீங்க..?”
“எனக்கு இந்த ப்ரோபோஸல் தெரியாது. அவங்க புருஷன் மேல எனக்கு எந்த இண்டரெஸ்ட்டும் இல்லை இன்ஃபாக்ட் உங்க இரண்டு பேரையும் அட்மைர் பண்றேன் சொல்லி நானும் முடிஞ்சவரை அவங்களை கன்வின்ஸ் பண்ண பார்த்தேன் ஆனா அவங்க திரும்ப திரும்ப ஒரே புள்ளியில தான் வந்து நின்னாங்க..”
“லைக் அவங்க பிரிஞ்ச பிறகு நீங்க தனியா இருந்திட மாட்டீங்க கண்டிப்பா குடும்ப கௌரவத்துக்காக சில கண்டிஷன்ஸோட கல்யாணம் செய்துப்பேன் சொன்னீங்களாமே..”
“இல்ல ஸார் சொல்லலை.. இன் ஃபியூச்சர் சம்பந்தம் பேச வரும்போது நீங்களே அதை என்கிட்டே பேச வாய்ப்பு இருக்கு அப்படி பேசினா உங்களை மாதிரி ஒரு லைஃப் பார்ட்னரை மிஸ் பண்ணிடாம நான் சம்மதிக்கணும் சொல்லி என்னை கன்வின்ஸ் பண்ண பார்த்தாங்க.. என்னோட பதில் சொன்னாதான் கிளம்புவேங்கிற மாதிரி அடமா உட்கார்ந்துட்டாங்க”
“…”
“நான் கடைசியா உங்க புருஷன் என்கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் கேட்கும் போது நான் என்னோட பதிலை உங்க புருஷன் கிட்டேயே சொல்றேன் சொல்லிட்டேன்” என்றதில் பெருமூச்செறிந்தவன்,
“ஸாரி டூ டிஸ்டர்ப் யூ ம்மா”
“எதுக்கு ஸார் ஸாரி எல்லாம்.. டோன்ட் மென்ஷன்!! சரத் கேஸ் நாங்க ஆரம்பத்துல இருந்து ஃபாலோ பண்றோம் நிச்சயமா தளிர் மேம்ன்னு கிடையாது எந்த பொண்ணுக்குமே ஸ்விட்ச் ஓவர் பண்ண டையமெடுக்கும்.. அவங்களோட mental agony இப்படி பேச வைக்கலைன்னா தான் நாங்க ஆச்சர்யபடனும்”
“பட் உங்களையும் நாங்க ஆரம்பத்துல இருந்து பார்த்துட்டு வரதால நீங்க அவங்களை விட மாட்டீங்கன்னு நம்பிக்கை இருந்தது. அன்ட் நான் எங்க வீட்லயும் இனி உங்களை மட்டுமல்ல எனக்கு தெரியாம எந்த அலையன்ஸும் பார்க்க வேண்டாம் சொல்லிட்டேன்”
“தேங்க்ஸ் ம்மா”
“எனக்கு தேங்க்ஸ் போதாது ஸார்” என்று மலர் சிரிப்போடு சொல்ல,
“வேறே என்ன வேணும் சொல்லுங்க..” என்றான் புன்னகையோடு.
“ஏற்கனவே கேட்டது போல உங்களோட இன்டர்வியூ! அதுமட்டுமில்ல கண்டிப்பா உங்க மேரேஜ்க்கு என்னை இன்வைட் பண்ண மறந்துடாதீங்க ஸார்..” என்று சொல்ல புன்னகையோடு அவளுக்கு பதிலளித்தவன் கைபேசியை அணைத்து விட்டு ஆசுவாச மூச்செடுத்தான்.
****************
அதேவேளை மழையில் நனைந்த ஈர உடையோடு பலமணி நேரமாக இருந்த தளிரின் மேனியில் மெல்ல சூடு பரவ தொடங்கியிருந்தது.
உதய் புகைப்படத்தை பார்த்தவாறு மேஜையில் இருகரங்களையும் கோர்த்து அதில் முகத்தை பதித்து இருந்தவளின் கண்களில் இருந்து அவ்வப்போது கண்ணீர் வெளியாவதும் அதை துடைத்து தன்னை நிலைபடுத்த தளிர் முயல்வதும் மீண்டும் கண்ணீர் எட்டிப்பார்ப்பதும் மீண்டும் துடைப்பதும் என்று தனக்குள் போராடிகொண்டு இருந்தாள்.
எப்படியாவது தளிருக்கு மாத்திரையை ராகவன் கொடுக்க சொன்னதில், அவளை தேடி சீதா வந்தபோது ஓயாமல் பொழிந்து கொண்டிருந்த அவள் விழிநீரும் இப்போது ஓரளவு தன் வரத்தை நிறுத்தியிருந்தது.
“அம்மூ மழையில நனஞ்சது ஜுரம் வந்துடபோகுது வெந்நீர் போட்டு வச்சிருக்கேன் குளிச்சுட்டு துணி மாத்திட்டு வா சாப்ட்டுட்டு மாத்திரை போடுவ” என்று சொல்ல இமைசிமிட்டி அவரை பார்த்தவள்,
“ம்மாஆஆஅ” என்று பாய்ந்து அவரை கட்டிக்கொண்டு தன் போக்கில் ஏதேதோ பிதற்றிக்கொண்டே ஒரு மூச்சு வாய்விட்டு அழுது தீர்க்க தன் கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு மகள் தலையை கோதியவாறு நின்றிருந்தார் சீதா.
“அம்மூ போதும்.. இது உன்னோட முடிவு! அதை எடுக்கும் முன்ன ஆயிரம் முறை யோசிச்சிருப்ப அப்புறம் இதுல நான் சொல்ல எதுவுமே இல்ல…”
ஆனால் உடைகளைந்து வெந்நீரை ஊற்றிய மறுநொடியே உதட்டிலும் உதய் பிடித்திருந்த இடத்திலும் சுள்ளென்ற வலி பரவி அதீத எரிச்சல் கொடுக்க “அம்மாஆஅ…” என்று வலியோடு கண்கலங்க இடையை ஒருகையால் பிடித்தவாறு ஜக்கை தவறவிட்ட தளிரின் அலறலில் அடித்து பிடித்து சீதாவும், தென்றலும் ஓடிவந்திருந்தனர்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.