யார்டா அது…. அந்தா கத்திக்கிட்டு இருக்கு பாரு அந்த மைக் செட்டை கொஞ்சம் நிறுத்துங்க. இருக்கிற அலும்பு பத்தாதுன்னு அது வேற அலும்பு பண்ணுது…. ஒவ்வொரு வருஷமும் ஒரு பஞ்சாயத்தை பார்க்குறதே சிறுமையிலூரு திருவிழாக்கு வேலையா போச்சு. சொன்னா கேட்கிறாங்களா…
“எல்லாம் உங்களால தாண்டா வந்துச்சு. பெருசுல இருந்து சிறுசு வரைக்கும்… நம்மளை தெனாவட்டா பேசிட்டு போதுங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல கட்டபொம்மன் வர போறான். நம்மள வெளுக்க போறான்.”
“அட ஏன்டா நீ வேற… நாங்க என்னமோ வேணும்’னே வம்பு வளர்த்த மாதிரி பேசுற. நாங்க எப்பவும் போல விளையாட தான் வந்தோம். இந்த வருஷமும் விளையாட விடாம பண்ணது அவனுங்க தான். ஊர் பெருசுங்க நடுவுல வந்துடுச்சிங்க இல்லன்னா இன்னையோட அவனுங்க ஆட்டம் மொத்தமும் முடிஞ்சிருக்கும்.” வீர வசனம் பேசியவனின் காதை கடித்த இளையவன்,
“அண்ணே! அண்ணே!… சின்ன அண்ணன் சொன்ன மாதிரி கட்டபொம்மன் வந்தா நம்ம நிலைமை என்ன ஆகும்…”
“போன வருஷம் என்ன ஆச்சோ அதே தான் இந்த வருஷமும். எனக்கு அடுத்து பிறந்த தருதல.. இவனை விட்டுடுவான். சின்னப் பையன்’னு உன்ன விட்டுடுவான். என்னமோ அவனுக்கு அடுத்து பொறந்த என்னை மட்டும் எப்ப பாரு வாட்டி வதைக்குறான்.”
***************************
” இந்த தடவ என்ன ஆனாலும் சரி இவனுங்க வாய உடைக்காம விடக்கூடாது. எப்ப பாரு வம்புல இழுத்து விடுறாங்க. தேவையில்லாம அண்ணன் கிட்ட நம்ம தான் திட்டு வாங்க வேண்டியதா இருக்கு.”
“ஆமாண்டா… அந்த விருமாண்டி வந்தா நம்மள பொரட்டி பொரட்டி அடிப்பானே…. அதுக்குதான்டா அப்பவே சொன்னேன். இந்த உறியடி வேணாம்’னு கேட்டியா.”
“ஒவ்வொரு தடவையும் அவனுங்களுக்கு பயந்துகிட்டு நம்ம ஒதுங்கி நிக்கணுமா. என்னமோ இந்த ஊரு அவனுங்க சொத்து மாதிரி பண்றாங்க. இனிமே ஏதாச்சும் வம்பு இழுக்கட்டும்…. அப்புறம் தெரியும் நான் யாருன்னு.”
பக்கத்து ஊரிலிருந்து.. நண்பர்களுடன் திருவிழா பார்க்க வந்தவனுக்கு இந்த சண்டையும், சச்சரவும் புதிதாக இருக்க தன் நண்பனிடம், “என்னடா இது சினிமால காட்டுற மாதிரி சண்டை போடுறாங்க.” என்றவனின் வார்த்தையை கேட்ட அவ்வூர் பெரியவர்,
“இது சினிமாவையும் மிஞ்சும் இன்னும் கொஞ்ச நேரத்துல பாருங்க.”
“இவ்ளோ பிரச்சனை பண்றாங்க… இவங்கள கண்டிக்க யாரும் இல்லையா? இவங்க அப்பா கூடப்பிறந்த அண்ணன் தம்பி’னு யாரும் இல்லையா?”
“அஞ்சு பேர் இல்ல எட்டு பேரு”. இவங்க பரவால்ல … இவங்க அண்ணங்க இரண்டு பேர் போடுற சண்டையில இந்த ஊரே அல்லோல பட்டுப்போகும். ”
“ஆத்தி யாருடா அவங்க! அப்போ இன்னொரு சண்டை கன்ஃபார்மா நடக்கும் போலையே!” என்றான் தோழனிடம்.
*******************
“இந்தாடி கொஞ்சமாச்சும் உன் ஆளுக்கு பொறுப்பு இருக்கா. சண்டை நடந்து எம்புட்டு நேரம் ஆகுது. சட்டுபுட்டுனு வந்து சேர சொல்லு.”
“ம்க்கும்.. என்னத்தை நான் சொல்ல. அப்டியே சொன்னாலும் கேட்டுட்டு தான் மறு வேலையை பாக்கும்.” சிலுப்பிக் கொண்டவளின் பார்வை தூரத்தில் வரும் புல்லட்டில் விழ… தன் தோழியிடம்,
“என் ஆளு மதுரைவீரன் வரல உன் ஆளு மச்சகாளை தான் வராரு பாத்துக்க. “
“ஆம்பல் உங்கிட்ட எத்தனை தடவை சொல்றது அங்க போகாதன்னு. நீ மட்டும் பாசமா இருந்தா போதாது. என்ன நடந்துச்சுன்னு தெரியும் தான உனக்கு. தெரிஞ்ச்சிட்டே போறது நல்லா இல்ல. கடைசி வரைக்கும் ஆகாது நமக்கும் அவங்களுக்கும். இத்தோட எல்லாத்தையும் விட்டுடு…”
“முடியாது… நான் இப்படி தான். உங்களால முடிஞ்சா கூட இருங்க இல்ல’னா போங்க. “
குடும்பத்துக்குள் எதிர் பாராத ஒரு மர்ம முடிச்சி விழ …அதில் சிக்கி கொண்டு வெளி வரும் அழகான கிராமத்து கதை.
அம்மு இளையாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.