பின் இருக்காதா..? ஒரு பெண்ணை இத்தனை வருடங்கள் ஏமாற்றி கொண்டு இருந்து கொண்டு இருந்தது எவ்வளவு பெரிய அநியாயம்..
அதுவும் இந்த வீட்டு பெண்ணின் பணம் அந்த வீட்டுக்கு போய் இருக்கு…. அதை நினைத்து தான் இன்னும் இன்னும் கோபம் கூடியது அவர்களுக்கு..
அதுவும் தங்களையும் அல்லவா ஏமாற்றினார்கள்..
எப்படி எப்படி எல்லாம் அன்பாக பேசி.. பிடித்தது வாங்கி கொடுத்து விட்டு தங்களை ஏமாளியாக ஆக்கி விட்டான்..
அதுவும் அவர்கள் இந்த வீட்டு பெரிய மருமகன் நம் அனைவரின் மீதும் எவ்வளவு அன்பு வைத்து இருக்கிறார் என்று புலங்காகிதம் அடைந்து பேசி வேறு இருக்கிறார்களே… அந்த கோபமும் தான் அவர்களுக்கு.
வித்யா இது வரை சீனிவாசனை மரியாதை இல்லாது பேசியது கிடையாது.. அவளின் இந்த பேச்சில் அதிர்ந்து போய் தான் விட்டான் சீனிவாசன்… இருந்தும் அதை வெளிக்காட்டாது..
ஏதாவது செய்து ஆக வேண்டும்.. வித்யா தன்னை விட்டு போனால் அவ்வளவு தான்.. சீனிவாசனுக்கே அது நன்கு தெரியும்..
இந்த வீட்டின் மாப்பிள்ளை கொண்டு தான் வெளியில் அவனுக்கு கிடைக்கும் அனைத்து மரியாதையும், அது போனால் அனைத்தும் போய் விடும்..
ஆம் அனைத்தும் தான்.. பெண்களின் பழக்கமும் தான்.. ஆம் உண்மையை சொன்னால் பெண்கள் என்று தான் சொல்ல வேண்டும்..
ஆனால் இந்த பழக்கத்தை சென்னையில் மட்டும் வைத்து கொள்ள மாட்டான்… அனைத்தும் வெளி ஊரில் தான்…
மற்றோரு வீடு நிறந்தம் மற்றம் வந்து செல்லும் வேடந்தாங்கள் பறவை போல..
இதற்க்கு என்று நட்பு வட்டங்கள் இருக்கிறது. ஒரு சில பெண்களை மிரட்டியும் பணிய வைத்து இருக்கிறார்கள்…
கெட்டதிலும் நல்லது அந்த இன்னொரு வீடு மட்டும் தான் தெரிந்து இருக்கிறது… மற்றது எல்லாம் தெரியவில்லை என்று அவன் நினைத்து கொண்டு இருந்தான்..
ஆனால் அவன் வித்யாவிடம்… “ அது தெரியாம நடந்து விட்டது விதும்மா.. நான் பிரண்ஸ் கூட இருந்த போது போதையில் தப்பு செய்து விட்டேன்..
அந்த பெண் அதையே சாக்கா வைத்து ஒட்டிக்கிச்சி.. நான் இப்போ திட்ட வட்டமா சொல்லி விட்டேன்.. இனி என் மனைவிக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று..” என்ற அவன் பேச்சில்..
வித்யா கேட்ட… “ எத்தனை பெண்களிடம் சொல்வீங்க…” என்ற கேள்வியில் சீனிவாசம் அதிர்ச்சியாகி போனவன்.
அப்போதும் விடாது… “ நம்ம பசங்களுக்கு கல்யாணம் செய்யும் வயது வந்துடுச்சி.. கல்யாணத்தில் பெண்ணோட அப்பாவா நான் இருக்கனும் விதும்மா.. இல்லேன்னா நம்ம பெண்களோட வாழ்வு…” என்ற அந்த வார்த்தை சொல்லும் போதே..
அப்போது அந்த இடத்திற்க்கு வந்த வித்யாவின் பெரிய மகள் யமுனா..
“ ரொம்ப நல்லாவே இருப்போம்.. நீங்க எங்க கூட இருப்பது தான் எங்களுக்கு பயமே.. என்னோட சின்ன வயசு பெண் கிட்டேயே நீயும் உன் பிரண்சும் மிரட்டி பணிய வைத்து இருக்கும் போது..
உங்களை நம்பி நீங்க இருக்கும் வீட்டில் நாங்க எப்படி இருப்பது தான் எங்களுக்கு பயமே…” என்று யமுனாவின் பேச்சில் சீனிவாசன் அதிர்ந்தான் என்றால் அடுத்த பெண் பேசிய..
“ நாங்க அங்கு இருந்த போது.. அப்பா தானே என்று சாதரணமா அங்கு நடமாடி இருந்து இருக்கோம்.. நம்பி எங்க வீட்டு பாத்ரூமில் ப்ரீயா குளிச்சி இருக்கோம்..
நீங்க எந்த எந்த இடத்தில் கேமிராவை வைத்து இருந்திங்கலோ அதை நினைத்தே எங்களுக்கு பயம் தான்..” என்ற அடுத்த பெண்ணின் பேச்சில் சீனிவாசன் வாய் திறவாது தில்லை காட்டிய இடத்தில் கையெழுத்து இட்டு போக பார்த்தவனின் காலரை பிடித்த தில்லை..
“ என் மனைவியிடம் நீ என்ன சொன்ன…?” என்று கேட்டவன் மருத்துவர் தனக்கு அனுப்பிய ஆடியோவை அனைவரும் கேட்கும் படி ஒட விட்டு விட்டான்..
அதில் சீனிவாசன் சாத்வீகாவிடம்.. “ தில்லைக்கு ஜாதகத்தில் பிரச்சனை.. அவளை திருமணம் செய்யும் முதல் மனைவி இறந்து விடுவாள்..
அவனுக்கு இரண்டு தாராம் ஜாதகத்தில் இருக்கு… ஒரு நாள் என்னிடம் யமுனாவை எனக்கு அவ்வளவு பிடிக்கும்… என்னால் அவள் இறக்க கூடாது அத்தான் என்று சொன்னான்..”
“ நான் தான் ஏழை வீட்டு பெண்ணா கல்யாணம் செய்துக்கோ… அந்த பெண் இறந்தா ஏதாவது ஒரு பெரிய தொகை கொடுத்து விடலாம்.. ஆனா எந்த காரணம் தொட்டும் இந்த ஜாதகம் விசயம் வெளியே வர கூடாது என்று சொன்னேன்..
எல்லாம் சரி தான்.. தில்லைக்கு அந்த ஐடியாவே கொடுத்தது… ஆனா நான் நினைக்காத விசயம்… அவன் உன் கூட
வாழ்வான் என்பது தான்..” என்று அதோடு அவன் சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை..
ஆனால் அவன் சாத்வீகாவை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்த வாறே.. “ நீ இப்படி டக்கரா இருந்தா.. எனக்கே ஒரு மாதிரியா இருக்கும் போது.. ஒரே ரூமு ஒரே பெட்.. வயசு பையன் தொடாமா இருந்தா தான் அவன் ஆம்பிள்ளையா என்று எனக்கு சந்தேககம் வந்து இருக்கும்…” என்று சாத்வீகா அந்த மருத்துவரிடம் தன்னை மறந்த ஆழ்ந்த நிலையில் பேசிக் கொண்டு இருந்தவள்…
அவளுக்கு அவளே சொல்லிக் கொல்வது போல்… அவர் பார்த்த அந்த பார்வை எப்படி அசிங்கமா பார்த்தான் தெரியுங்களா…? அதுவும் அவன் பேசின பேச்சு…’ அவளே சொன்னது போல் சொன்னவள் மருத்துவர் கேட்ட…
“ அப்படி இன்னும் அசிங்கமா அவர் என்ன சொன்னார் என்று கேட்டதற்க்கு சாத்வீகா சொன்ன..
“ அது எல்லாம் பிரச்சனை இல்ல… குழந்தை வராம பார்த்துக்கோ அவ்வளவு தான்.. என் மக உன் குழந்தைக்கு ஆயா வேலை பார்க்க முடியாது பாரு..” என்று மட்டும் அல்லாது..
உச்ச கட்டமாக சீனிவாசன் பேசிய..
“ குழந்தை வராம தடுக்க வழிய தெரியுமா இல்ல நான் சொல்லி கொடுக்கட்டுமா..?” என்று கேட்டான்.. என்று சொன்ன சாத்வீகா அடுத்து சொன்ன.
“ இவரும் கல்யாணம் ஆன புதியதில் இப்போ குழந்தை வேண்டாம் என்று தான் சொன்னார்.. இந்த குழந்தை அதையும் மீறி வந்தது..” என்றதோடு சாத்வீகாவின் பேச்சு நின்று விட்டது..
தில்லை சீனிவாசனை கேவலமாக ஒரு பார்வை பார்த்து வைத்து.. “ நீ எல்லாம் என்ன ஜென்மம்டா.. மகள் வயசு.. மகள் உறவு இருக்கும் பெண் கிட்ட என்ன மாதிரி பேசி வெச்சி இருக்க..?” என்று கேட்டவன்..
“ இத்தனை நாள் வீகா அனுபவித்த மன உளச்சலுக்கு நான் உன்னை சும்மா விடுவேன் என்று நினைச்சிட்டியா…?
வீடு மனைவியை மட்டும் இழந்துட்டு நீ நிற்க போறது கிடையாது.. வெளியில் ஜம்பமா சுத்திட்டு இருந்தியே . எல்லாம் விட்டு விட்டு இருக்க வைக்கமா நான் உன்னை சும்மா விட மாட்டேன்..” என்று சொன்னவன்..
அதை செயல்படுத்த காரியத்தை செய்து விட்டு தான் சீனிவாசனுக்கு விவாகரத்து நோட்டிஸையே தன் வித்யா அக்காவை வைத்து அனுப்பி வைத்தான்..
வித்யா தன் கணவனுக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது என்பதிலே வெறுத்து போய் பெண்களோடு அம்மா வீட்டிற்க்கு வந்த வித்யா..
தன் தம்பி தில்லை சீனிவாசனை பற்றிய சொன்ன முழு விவரத்தில்.. அவர் என்ன மாதிரி உணர்ந்தார் என்று வரையறுக்க முடியாத ஒரு சூழ்நிலைக்கு வித்யா இருந்தார் என்று சொன்னால் சரியாக இருக்கும்..
காரணம் தில்லை நடராஜ் தன் அக்காவிடம் சொன்ன விசயம் அப்படி பட்டது…
தில்லை சீனிவாசனை நம்பிய வரை தான் விட்டு வைத்தது.. சாதனாவை வைத்து
சீனிவாசன் செய்த செயலில்.. தான் தில்லை முழித்து கொண்டான்..
அடுத்து அடுத்து என்று ஆராய்ந்ததில் முதலில் வெளி வந்தது கோயம்பத்தூரில் பத்து ஆண்டுகளாக ஒரு பெண்ணோடு குடும்பம் நடத்துவது..
அடுத்து சீனிவாசன் அதிகம் செல்லும் இடம் கொடைக்கானல். அங்கு அவனின் நட்பு வட்டம் அதிகம்… அதனால் செல்கிறான் என்று நினைத்து கொண்டு இருந்த தில்லை ..
இப்போது அதிலும் ஏதாவது இருக்கும் சந்தேகம் என்ன உறுதியாக இருக்கும் என்று நினைத்து தான் தன் பத்திரிக்கை யுத்தியை யைய்யாண்டதில் அவனுக்கு கிடைத்த தகவல்கள் அவனுமே எதிர் பாராதது தான்…
வித்யாவின் கணவனின் நண்பன் ஒருவன் அங்கு இருக்கும் ஒட்டல் ஒன்றில் மேனஜராக இருக்கிறான்..
அங்கு தங்கும் தம்பதியரின் படுக்கை அறை இல்லை குளியல் அறையில் கேமிராவை வைத்து விட்டு அதை வைத்து அந்த பெண்ணை தங்களுக்கு அடிமை படுத்திக் கொள்வான்..