அன்று தில்லையின் வீட்டில் இருந்து அனைவரும் வரவும், சரண்யாவுக்கு கையும் ஒடவில்லை காலும் ஒடவில்லை…
தில்லையை மனதில்.. ‘நேத்து இங்கு வரும் போது சொல்லி இருந்தால், முன் ஏற்பாடா.. எல்லாம் செய்து வைத்து இருக்கலாமே..’ என்று ஒரு பக்கம் நினைத்தார் என்றால்,
இன்னொரு பக்கம் மகளை பற்றிய பயமும் இருக்க தான் செய்தது.. மகள் முன் நடந்ததை மனதில் வைத்து கொண்டு மாமியார் வீட்டு ஆட்களை மரியாதை இல்லாது பேசி விடுவாரோ என்று பயந்து கொண்டு இருந்தார்..
ஆனால் அவரின் பயம் அநாவசியம் என்பது போல் வந்தவர்களை.. சிரித்த முகத்துடன் தான் வரவேற்று பேசிக் கொண்டு இருந்தாள் சாத்வீகா..
அங்கு இருந்த நாட்களின் கவனத்ததில் “ கலை அக்கா டீ குடிக்க மாட்டங்க அம்மா.. காபி தான்..” என்று சொன்னவள்..
“ சுந்தரி அக்காவுக்கு டீயில் சர்க்கரை கம்மியா போடுங்க.. அப்படி தான் அவங்களுக்கு பிடிக்கும்… “ என்று அவர்களுக்கு பிடித்தவைகளை தன் மாமியார் வீட்டு ஆட்களோடு பேசிக் கொண்டு இருந்த வாரே ஹாலில் இருந்து கொண்டே சமையல் அறை நோக்கி குரல் கொடுத்த வண்ணம் இருந்தாள்..
“ பிரகாஷ் மாமாவுக்கு ஷூகர் சர்க்கரை போடாதிங்க..” என்ற தகவலை தன் அன்னைக்கு தெரிவித்து விட்டு பிரகாஷிடம்..
“ இங்கு நம்ம வீட்டில் ஷூகர் ப்ரீ கிடையாது மாமா… அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்க…” என்ற சாத்வீகாவின் இது போலான பேச்சில் தான் தில்லையின் மொத்த குடும்பத்திற்க்கும் ஏதோ போல் ஆனது..
அதுவும் இங்கு இவர்கள் தங்களை இவ்வளவு உபசரிக்க… தாங்கள் சரண்யா வந்த அன்று நடந்து கொண்ட முறையை நினைத்து சம்பூர்ணா வெட்கி தலை குனிந்து தான் போனார்…
தில்லை இது எல்லாம் பார்த்து கொண்டு இருந்தாலுமே, இடையில் எதுவும் பேசாது அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தான்..
தன் பக்கத்தில் அமர்ந்து இருந்த சாதனாவிடமும் அவ்வப்போது பேச்சுக்கள் நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது..
சரண்யா சமையல் அறையில் இருந்து அரக்க பறக்க உடலில் வியர்வை வழிய.. கையில் அவர்கள் குடிக்க தோதானவையை ஒரு தட்டில் வைத்து எடுத்து கொண்டு வந்தவரின் கை உதறலில் அமர்ந்து இருந்த தில்லை நடராஜ் சட்டென்று எழுந்து கொண்டு..
சரண்யாவிடம் இருந்த தட்டை தான் வாங்கி கொண்டு.. “ எதுக்கு இவ்வளவு டென்ஷன் அத்தை.. கூலா இருங்க…” என்று தானே தன் வீட்டு ஆட்களுக்கு அவர் அவர்களுக்கு தேவையானதை எடுத்து கொடுத்து விட்டு, மீண்டும் ஏதோ செய்ய சமையல் அறைக்கு புக பார்த்த சரண்யாவை கை பிடித்து சாத்வீகாவின் பக்கத்தில் அமர வைத்தவன்…
“ அவங்க சாப்பிட்டு தான் போறாங்க அத்தை..” என்று தில்லை சொன்னதுமே..
உடனே.. “செய்யனும் தம்பி… “ என்று மீண்டும் சரண்யா எழ பார்க்க..
“ அத்தை சாப்பிட்டு தான் போவாங்க.. ஆனா நீங்க சமைக்க தேவை இல்லை.. ஒட்டலில் இருந்து வர வழைத்து கொள்ளலாம்..” என்று தில்லை சொல்லவும்..
சகுந்தலா பாட்டியிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்த சாத்வீகா தில்லையை திரும்பி பார்த்து விட்டு மீண்டும் பாட்டியிடம் தன் பேச்சை தொடர்ந்தாள்…
சரண்யா தான் ஒரு வித சங்கடத்துடன்… “ ஒட்டல் சாப்பாடு தான் உங்களுக்கு பிடிக்காதே…” என்று சொன்னவருக்கு, மனதில் சாத்வீகா அந்த வீட்டில் ஒரு சமையல்காரியக இருந்தது.. நினைக்காது இருக்க முடியவில்லை..
அவர் நினைப்பு அவர் முகத்தில் தெரிந்ததோ என்னவோ…சம்பூர்ணா தன் பெரிய மனித தோரணையை விட்டு விட்டு, மனது உணர்ந்து..
“ வசதியானா வீட்டு பெண்கள் இளவரசியாகவும், இல்லாத வீட்டு பெண்கள் இந்த வேலை எல்லாம் பழக்கம் தானே என்று
நினைத்து நான் என்ன என்னவோ செய்துட்டேன்..
ஆனால் எந்த வீட்டு பெண் ஆனாலும், அவங்க அவங்க வீட்டுக்கு அவங்க இளவரசி தான் என்பதும்.. போகும் வீடு எந்த வசதி ஆனாலுமே தான் மகாராணியாக இருக்கனும் என்று தான் ஆசைப்படுவாங்க.. “ என்று பொதுவாக சொன்ன சம்பூர்ணா..
பின் சாத்வீகாவை பார்த்து… “ பழச மனதுல வைத்து கொள்ளாதே சாத்வீகா… முன் போல நீ அந்த வீட்டுக்கு எல்லாம் வர தேவையில்லை..
தில்லை நீ குழந்தை பிறந்ததும் அவன் தனி வீட்டுக்கு தான் உன்னை அழைத்து செல்வேன் என்ற முடிவு எடுத்து இருக்கான்.. அதனால பழைய படி வேலை எல்லாம் உனக்கு பிரச்சனை இருக்காது. உங்க இரண்டு பேருக்கு நீ சமைப்பது என்றாலும் சரி..
இல்லை குழந்தையையும் பார்த்து கொண்டு உன்னால முடியாது என்றால், வீட்டோடு ஒரு சமையலம்மாவை வைத்து கொள்ளுங்கள்..
ஆனால் இனி தில்லையோடு இருந்தால், எனக்கு அதுவே போதும்..” என்று சொன்னார்..
தன் மூத்த பெண்ணுக்கு மத்த பையன்கள் செய்வது என்ன ..? தில்லை செய்வதை கூட தடை செய்தது அவரை பெரியதாக பாதித்து விட்டது..
அதுவும் தான் இருக்கும் போதே என்றதில், அவர் மனது பெரியதாக அடி வாங்கியது.. அவர்கள் யாரின் தூண்டுதலோடு இப்படி பேசினார்கள் என்பதும் அவருக்கு தெரிந்தது தான்..
ஆனால் தில்லை.. அவனின் செயலிலும், அவன் நடவடிக்கையிலும், எப்போதும் அவன் தன் பெரிய மகளை கை விட மாட்டான் என்ற நம்பிக்கை அவருக்கு வந்தது..
சாத்வீகாவும் மற்ற மருமகள் போல் கணவனிடம்.. வித்யாவுக்கு செய்யாதே என்று தடுக்க மாட்டாள் என்பது புரிந்தது தான்..
அவன் விரும்பிய பெண்ணை கட்டி வைத்து விட்டு என்னவோ தான் உலக சாதனை படைத்தது போல அதையே பெரிது படுத்திக் கொண்டு..
இதற்க்காக நீ எல்லாம் பொறுத்து தான் போக வேண்டும் என்று சாத்வீகாவிடமும் , தில்லையிடமும் பேசிய பேச்சுக்கள் எத்தனை.. எத்தனை..?
அதை எல்லாம் இப்போது நினைத்தால், அவருக்கு சீ இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டு விட்டோமோ என்று அவரை நினைத்தே அவருக்கு அவமானமாக இருந்தது..
அதுவும் சீனிவாசன் சாதனாவை வைத்து அவன் வாழ்க்கையில் குழறுப்படி செய்ய பார்த்தது, பின் சீனிவாசன் சாத்வீகாவிடம் பேசிய பேச்சுக்கள்.. இதை எல்லாம் தெரிந்தும் தன் சகோதரியின் பொறுப்பு தன்னுடையது என்று நினைக்கும் தில்லையின் வாழ்க்கை அவருக்கு முக்கியம் என்று நினைத்து, எதை நினைத்தும் கவலை படாது..
சாத்வீகாவிடம் மனம் உணர்ந்து பேசிக் கொண்டு வந்தவர்.. கடைசிடாக கை கூப்பி.. “ மன்னித்து விடும்மா..” என்றதில் இது வரை
அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த சாத்வீகா சம்பூர்ணாவின் கை கூப்பலில் சட்டென்று எழுந்து அவர் அருகில் வந்து அவர் கையை கீழே இறக்கி விட்டு..
“ என்ன அத்த.. இது எனக்கு ஒரு மாதிரி தர்மசங்கடமா இருக்கு … ப்ளீஸ் வேண்டாமே..” என்று சொன்னாள்..
சரண்யாவும் பதட்டத்துடன் எழுந்தவர்.. “ என்ன சம்மந்தி இது … வயசுல பெரியவங்க.. என்ன இது..? உங்க மன்னிப்போடு உங்க மருமகளுக்கு இது போலான நேரத்தில் உங்க ஆசிர்வாதம் தான் வேண்டும்..” என்று சொன்னவர் ஏதோ நியாபகம் வந்தது போல..
“சம்மந்தி டெலிவரி டேட்டுக்கு இன்னும் மூன்று வாரம் தான் இருக்கு..வீட்டோடு சீமந்தம்..” என்று சரண்யா பேச்சை ஆரம்பிக்கும் போதே..
சகுந்தலா பாட்டி.. “ அது பத்தி பேச தான் வந்தோம் சரண்யா… அத விட்டு விட்டு வேறு என்ன என்னவோ பேசிட்டு இருக்கோம் பாரு..” என்றவர்..
“ அடுத்த வாரம் இவங்க இரண்டு பேர் ஜாதகத்துக்கு பொருத்தமான நாள் என்று ஜோசியர் நாள் குறிச்சி கொடுத்து இருக்கார்… அன்னைக்கு வைத்து கொல்ள உங்களுக்கு எந்த வித ஆட்சபனை இல்லையே என்று கேட்டுட்டு அப்படியே சாத்வீகாவை பார்த்துட்டு போகலாம்…” என்றவரின் பேச்சில் சாத்வீகா அவரை பார்த்த பார்வையில்,
இது வரை தங்கு தடையின்றி பேசிக் கொண்டு வந்த மூதாட்டி… சாத்வீகாவின் அந்த பார்வையில் அடுத்து பேச்சு வராது தடுமாறி தான் போனார்..
பின் என்ன..? தான் குழந்தை பேறு உண்டாகி இத்தனை மாதத்தில், இவர்களுக்கு தன்னை பார்க்க தோன்றவில்லை..
தன் வீட்டு பெண்களுக்கு பிரச்சனை எனும் போது தான் தன் நியாபகம் இவர்களுக்கு வருகிறதோ… என்ன தான் இனி இது தான் தன் வாழ்க்கை.. தன்னை பார்த்து அம்மா கவலை பட கூடாது ..
அதுவும் சிறிது நாள் முன் வரை தான் இருந்த அந்த திக்பிரம்மை நிலையை பார்த்து அம்மா எவ்வளவு பயந்து போய் விட்டார்கள் என்று ஒரு சில சமயம் சாதனா பேசும் பேச்சாக தன்னை மறந்து சொல்லி விட்டவளை அம்மா முறைத்து..
“ அது எல்லாம் ஒன்றும் இல்ல சாதும்மா…” என்று தான் கவலை பட கூடாது என்று
தனக்காக பேசிய அன்னையின் பேச்சில், சாத்வீகா இனி தன்னால் இவர்கள் கவலை பட கூடாது..
அதுவும் அப்பா இறந்து அவரை பற்றி கூட நினைக்க முடியாது தன்னால் அம்மாவுக்கு இன்னும் இன்னும் பிரச்சனை வர வேண்டுமா.. என்று யோசித்தவளுக்கு விடை குழந்தை பிறந்த பின் கணவனோடு போவது என்று முடிவு எடுத்து விட்டாள் தான்…
ஆனால் இருந்தும்… சில முறை பழையது நினைத்தால், வேதனை தான் மிஞ்சும்.. இப்போது கணவர் தன்னிடமும் தன் குடும்பத்தினரிடமும் நல்ல முறையாக தானே
நடந்து கொள்கிறார் என்று என்ன தான் தன்னை தானே தேற்றிக் கொண்டாலுமே,
இதோ இது போலான பேச்சின் மூலம் பழையது நினைவில் வருவதை அவளால் தடுத்து நிறுத்த முடியவில்லை ..
இதோ இந்த சகுந்தலா பட்டி இப்படி பேசுக்கிறார்களே.. இவங்க தானே வசதி இல்லாத வீட்டில் பெண் எடுத்தா எல்லாம் அவள் எடுத்து செய்வா என்று தன் மருமகளுக்கு ஐடியா கொடுத்தது..
இதே அந்த வீட்டு பெண் வித்யாவுக்கு எதுவும் நடவாது இருந்து இருந்தால், இவர்களுக்கு என் நியாபகம் கூட வந்து இருக்காது தானே…
அதை நினைத்த உடனே சாத்வீகாவின் பார்வை மாறி சகுந்தலா பாட்டியை பார்க்க..
அவரோ அடுத்து என்ன சொல்வது என்று தயங்கவும் பின் சாத்வீகாவே..
“ நீங்க சொன்ன தேதியிலேயே.. வைத்து கொள்ளலாம் பாட்டி..” என்று சொன்னவள்.. பின் பொதுவாக அனைவரையும் பார்த்து..
“ எனக்கு ரொம்ப டையாடா இருக்கு.. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டுமா.. என்று கேட்டாள்..
என்ன தான் அவர்கள் மீது ஆதங்கம் இருந்தாலுமே, அவர்கள் தன் வீட்டுக்கு வந்த இந்த சமயத்தில் தான் போவது சரியா…? இருக்காது என்று நினைத்து கேட்டாள்..
அதற்க்கு உடனே சகுந்தலா.. “ நீ போம்மா போய் ரெஸ்ட் எடு.. இது போலான சமயத்தில் இது போல் சோர்வு இருக்க தான் செய்யும்..” என்று சொன்னதும் அனைவரையும் பொதுவாக ஒரு பார்வை பார்த்த பின் தன் அறைக்கு சென்று விட்டாள்..
தில்லை சிறிது நேரம் பேசிய பின்.. யாருக்கு என்ன என்ன வேண்டும் என்று கேட்டு ஸ்விகியில் ஆர்டர் செய்து வாங்கி கொடுத்து விட்டான்..
பின் அவர்கள் போகும் போது…
“ சீமந்தம் தேதி அதே தேதியில் தானே…” என்று மீண்டும் சரண்யாவிடம் சம்பூர்ணா கேட்டு தெளிவு படுத்த கேட்டார்…
சரண்யா தான் தயங்கி கொண்டு.. இந்த அவசரத்துக்கு சத்திரம் கிடைக்குமா.. வீடு என்றால்,” என்று இழுக்க,.
“ அப்படியா ..?” என்று மட்டும் கேட்டுக் கொண்டார். அவருக்கு உண்மையில் தெரியாது…
அவருக்கு என்ன இத்தனை மாதங்கள் அந்த வீட்டில் குடும்பம் நடத்திய சாத்வீகாவுக்கே தெரியாத போது சரண்யாவுக்கு எங்கு இருந்து தெரிந்து விட போகிறது..
அதே தான் சாத்வீகா தில்லையிடம்.. அனைவரும் சென்ற பின்.. “ இன்று இங்கே தான் தங்க போகிறேன்..” என்று தன் வீட்டு ஆட்களை அனுப்பி விட்டு தன் மனைவியின் அறைக்கு போனவன்..
தன் மனைவியிடம்.. “ வீகா சீமந்தம் இந்த தேதியில் வைப்பது உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே…?” என்று கேட்டான்..
“பிரச்சனை என்று சொன்னா மாத்த போறிங்களா..?” என்று இடக்காக கேள்வி கேட்டவளை தில்லை பாவம் போல் ஒரு பார்வை பார்த்தான்..
பாவம் இப்போது எல்லாம் சாத்வீகா தன்னுடைய ஆதங்கத்தை தில்லையிடம் இது போல் பேசி தான் தீர்த்து கொள்கிறாள்..
தில்லைக்கும் மனைவியின் மனநிலை தெரிந்ததால், அவள் பேச்சை பெரியதாக எடுத்து கொள்ளாது பழகி கொண்டான்..
ஆனாலுமே இது போலான பேச்சில், இதற்க்கு என்ன சொல்வது என்று பாவம் போல் பார்த்தவனை பார்க்க சாத்வீகாவுக்கே பாவம் போல் தான் தெரியும்.. இருந்தும் அவளை அறியாது இது போல் பேசி விடுவாள்…
தில்லை .. “ உனக்கு சீமந்தம் செய்ய பிடிக்கவில்லையா…? என்று கேட்டதற்க்கு சாத்வீகா அதற்க்கும்..
“ ஒ இவளுக்கு எல்லாம் எதுக்கு சீமந்தம்..? என்று நினைக்கிறிங்களா..? நினைப்பிங்க.. நினைப்பிங்க… அதுவும் உங்க சொந்த சத்திரத்தில் செய்ய வேண்டுமா ..?” என்று கேட்டாள் அவன் தான் என்ன செய்வான்..
முழு சரணாகதி என்பது போல… “ இனி உன் விருப்பம் தான் வீகாம்மா.. நீ என்ன செய்ய சொல்றியோ.. அதுவே செய்துடலம்..”
என்று தில்லையின் பேச்சுக்கும்..
சாத்வீகா.. “ இது எந்த போதிமரத்தில் இருந்து கிடைத்த ஞானம் ..” என்று கேட்டாள்…
“ வீகாம்மா..” என்று பேசியவனுக்கு அடுத்த பேச்சு வராது போக.. நல்ல வேலை தக்க சமயத்தில் அவனுடைய மைத்துனி..
“ அக்கா பால் குடிச்சிட்டு போவீயா..? அம்மா சொல்ல சொன்னாங்க..” என்று ஹாலில் இருந்து குரல் வரவும்..
தில்லை.. “ நீ இரு வீகாம்மா நான் போய் எடுத்துட்டு வரறேன்..’ என்று சொல்லி விட்டு ஹாலுக்கு போனவன் சிறிது நேரம் கழித்து தான் தில்லை அறைக்கே வந்தான்…
வந்தவன் கண்ணுக்கு தெரிந்தது… முகத்தில் வியர்வை வடிய ஒரு கைய்யால் வயிற்றை பிடித்து கொண்டு வலியை பொறுத்து கொண்டு இருந்தவளின் தோற்றத்தை பார்த்து..
பாலை அங்கு இருந்த டேபுல் மீது வைத்து விட்டு அவள் பக்கத்தில் சென்று அவளின் தோளை பற்றியவன்..
“ வீகா என்ன செய்யுது..?” என்று பதட்டத்துடன் கேட்டுக் கொண்டே அவளின் முகத்தில் பயிந்திருந்த வியர்வையை துடைத்து விட்டவன்..
மருத்துவமனைக்கு அழைப்பு விடுக்க தன் கை பேசியை தேடும் போது தான் கவனித்தான்.. அது மனைவியின் மற்றோரு கையில் இருப்பது..
அதுவும் ஒரு புகைப்படம் அதில் தெரிய அந்த வலியிலும் அந்த புகைப்படத்தை கணவன் முன் நீட்டி..
“ இது என்ன..?” என்று கேட்டாள்…
அடுத்த 24…2 கதை நிறைவு பெற்று விடும் வாசகர்களே.. அந்த பதிவு இன்று இரவு… இல்லை நா:ளை கொடுத்து விடுவேன் பா…