“ என்ன இது..? என்ன இது..?” என்று சாத்வீகா கேள்வி கேட்டவளுக்கு பதில் சொல்லும் நிலையில் தில்லை நடராஜ் இல்லை.. காரணம் அவள் வலியில் துடி துடித்து கொண்டு இருக்கிறாள் என்பதை அவள் முகம் அப்பட்டமாக எடுத்து காட்டியதே காரணம் ஆகும்..
“ வீகாம்மா சொல்றேன்.. சொல்றேன் எல்லாம் சொல்றேன்டா.. ஆனா முதல்ல இப்போ ஆஸ்பிட்டல் போய் விடலாம்..” என்று சொல்லி கொண்டே அவள் கையில் இருந்த தன் கை பேசியை வாங்க முற்ப்பட்டவனிடம் அவன் பேசியை கையில் கொடுக்காது, அவன் கை எட்டும் தூரத்தில் இருந்து போக எண்ணி எழுந்து நின்றவளின் பின் பக்கம் முழுவதும் ஈரத்தால் நனைந்து இருந்தது..
“ ஏய் என்ன..? என்ன..? என்று கேட்டு கொண்டே தன் கையினால் அது என்ன என்று உணர முற்ப்பட அந்த ஈரத்தை தில்லை நடராஜ் தொட்டு பார்த்தான்..
அதற்க்குள் சாத்வீகாவும் பின் பக்கம் தன் தலையை திருப்பி பார்த்தவளுக்கு, என்ன இது… நம்மை அறியாது சிறுநீரகம் கழித்து விட்டோமா.. என்பதே அவளுடைய சந்தேகம்..
அதனால் தில்லை அதை தொடவும்.. “ சீ என்ன செய்யிறிங்க..” என்று சொல்லும் போதே சிறிது மட்டுப்பட்ட அவளுடைய வலி இப்போது கூட..
தன்னை அறியாது.. “ ஆ..” என்று கத்தி விட்டாள்..
இப்போது தில்லை அவளிடம் தன் மென்மையை கை விட்டு அவள் கையில் இருந்த தன் கை பேசியை பிடுங்கி கொண்டு…
“ என்ன வீகா.. எந்த நேரத்தில் என்ன செய்யிறது கூட உனக்கு தெரியல… இதுல இருப்பது நீ தானே. ..
வேறு பெண்ணா இருந்தா நீ கோபப்படுவதில் நியாயம் இருக்கு… சொல்றேன் எல்லாம் சொல்றேன்..
ஆனா இப்போ பனிக்குடம் உடைந்து விட்டது.. சீக்கிரம் ஆஸ்பிட்டல் போய் ஆகவேண்டும்…” என்ற அவன் பேச்சில் சாத்வீகா..
“ என்ன பனிக்குடமா..?” என்று இப்போது சாத்வீகாவின் முகத்தில் வலியையும் மீறி அவள் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிந்தது..
அவளின் அந்த முகத்தை பார்த்த தில்லை தன்னை தானே திட்டி கொண்டான்.. எதற்க்கு சொன்னோம் என்று.., இது போலான சமயத்தில் ஏற்கனவே பெண்கள் பயந்து விடுவார்கள்.. முதல் பிரசவத்தில் என்ன நடக்குமோ என்று..
இதில் நாம் இப்படி சட்டென்று போட்டு உடைத்து இருக்க தேவையில்லையோ என்று நினைத்தவன்..
“ இதற்க்கு எல்லாம் பயப்பட தேவையில்ல சாத்வீகா…” என்று மனைவியை தைரியம் படுத்திக் கொண்டே சாத்வீகாவை மாதந்திர பரிசோதனைக்கு அழைத்து செல்லும் மருத்துவமனைக்கு அழைத்து விசயத்தை சொன்னான்..
நல்ல வேலை சாத்வீகாவை பரிசோதனை செய்த அந்த பெண் மருத்துவரே அந்த சமயம் ஒரு எமெர்ஜென்ஸி என்று பிரவசம் பார்த்து விட்டு அப்போது மருத்துவமனையில் இருந்ததால்,
அவரே.. “ சரி நானே இருக்கேன் சீக்கிரம் அழைத்து கொண்டு வாங்க..” என்று கூறியவர் பின்..
“ இன்னும் த்ரீ வீக்ஸ் இருக்குலே..” என்று அவர் கேட்க தில்லைக்கும் அந்த பயம் தான்…
பக்கத்தில் மனைவி இருப்பதால் இன்னும் பயந்து போய் விடுவாள் என்று நினைத்து..
“ம்..” என்று மட்டும் சொல்லி விட்டு பேசியை வைத்து விட்டு வலியிலும்,பயத்திலும், பிரம்மை பிடித்தது போல் இருந்த சாத்வீகாவை தேற்றிக் கொண்டே பக்கத்து அறையில் உறங்கி கொண்டு இருந்த தன் மாமியாரை அழைத்தான்.. மருத்துவமனையில் அவள் தனக்கு பயத்தை கொடுக்க போகிறாள் என்று தெரியாது…
சரண்யா வந்த பின் விரைவாக சாத்வீகாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டனர்…
சரண்யா சாத்வீகா தில்லையை போல் எல்லாம் பயப்படவில்லை.. இரண்டு குழந்தை
பெற்று எடுத்தவருக்கு என்ன என்று தெரிந்தது..
மூன்று வாரம் முன் ஆனாலும், இப்போது இருக்கும் மருத்துவ உலகில் தாயையும் சேயையும் நல்ல முறையில் கையில் கொடுத்து விடுவார்கள் என்று நம்பினார்..
சாத்வீகா வலியில் துடித்து கொண்டு..” ஏம்மா.. இன்னும் டைம் இருக்கே.. பாப்பாவுக்கு ஏதாவது ஆகி விடுமா..? என்று பாதி பயத்திலும் , மீதி வலியிலுமெ துடி துடித்து கொண்டு கேட்டு கொண்டே இருக்க..
தில்லை தான்.. “ வீகாம்மா இது ஒன்றும் பிரச்சனை இல்ல.. எல்லாம் நல்ல படியா நடக்கும்.. நீ பயப்பட்டுக்காதே..” என்று அவன் மனதிலும் பயம் இருந்தாலுமே, தன் மனைவியின் பயம் போக்க வேண்டி இப்படி சொன்னான்..
அவளின் பயம் போக்கி ஆக வேண்டிய கட்டாயமும் அவனுக்கு இருந்தது.,.. காரணம் அவள் கை பற்றி கொண்டு இருக்கும் போது அவன் நாடி மிக வேகமாக துடித்து கொண்டு இருப்பதை அவனே உணர்ந்தான்..
இது போலான சமயத்தில் பி.பி அதிகம் ஆக கூடாது என்பது அவனுமே உணர்ந்தது தான்.. இருந்தும் மருத்துவரும் அவனிடம் உங்க மிஸஸை பயப்படாது பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னதோடு,
சாத்வீகாவுக்கு கவுன்ஸிலிங்க் கொடுத்த மருத்துவரையும் அவர் அழைக்கிறேன் என்று விட்டார்..
இதை கருத்தில் கொண்டு தான் தில்லை அப்படி சொன்னது..
ஆனால் அவன் நினைத்ததிற்க்கு எதிர் பதமாக சாத்வீகாவின் கோபம் இன்னும் தான் கூடியது..
“ ஏன் இப்படி சொல்ல மாட்டிங்க.. நீங்க எதுக்கு தான் பயப்படுவீங்க்…” என்று வலியை பொறுத்து கொண்டு கேட்டாள் என்பதை விட கத்தினாள் என்று சொன்னால் சரியாக இருக்கும்…
“ வீகாமா வீகாம்மா உன் நல்லதுக்கு தான்டா சொல்றேன் செல்லம்..” என்று காலம் நேரம் தெரியாது தில்லை தன் மனைவியை கொஞ்ச..
அவ்வளவு தான் சாத்வீகா.. “ ஆ கொஞ்சுங்க.. இப்போ இந்த கொஞ்சு கொஞ்சுங்க.. ஆனா அப்போ எப்போ கொஞ்ச வேண்டுமோ அப்போ கொஞ்சாதிங்க.. எல்லாம் மிஷின் போல..” என்று தன் கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று புரியாது பேசிக் கொண்டு போனாள்..
பாவம் தில்லைக்கு தான் அவமானமாக போய் விட்டது..
அவமானத்தோடு சிறிது பயமும் அவனுக்கு.. பயமா என்ன பயம் என்றால், கோபத்தில் என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்று தெரியாது தங்கள் அந்தரங்கத்தை அனைத்தையுமே கடை பரப்பி விட்டால்…
அவன் பயந்தது போல் தான் அவன் அந்தரங்கம் கடை பரப்பியது தான்.. ஆனால் அந்த கடை பரப்பல் தில்லையின் வாயின் மூலமே அரங்கேறியது தான் சோகத்திலும் சோகம்..
ஆம் சோகம் தான்… இது போல் சில பல கத்தலில், அதுவும் மகளின் அந்த பேச்சில், சரண்யா..
“ சாதும்மா சாது அமைதியா இருடா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆஸ்பிட்டல் வந்து விடும் அமைதியா இரு..’ என்று அவருமே மகளின் அந்த பேச்சில் என்னடா..? இது ..? என்று ஆகி விட்டது..
அதுவும் தில்லையின் கார் ஒட்டுனரும் இருக்க.. ஒரு வித சங்கடம் அங்கு நிலவியது..
அந்த சங்கடம் காரில் மட்டும் அல்லாது இதோ தில்லை சொல்லி அனைத்தும் தயார் நிலையில் இருந்ததால், சாத்வீகா அங்கு சென்ற நிமிடத்தில் இருந்து அவளுக்கு சிகிச்சை செய்ய ஆரம்பித்து விட்டனர்..
தில்லையும், சரண்யாவும் நினைத்தது போல், சாத்வீகாவை பரிசோதித்து விட்டு வந்த அந்த பெண் மருத்துவர்… இருவரிடமும்..
“ இது பிரசவவலி தான்.. நார்மல் டெலிவரிக்கு முயற்ச்சி செய்கிறோம்.. எழுபத்தி ஐந்து சத்வீதம் சுகபிரசவம் தான்.. மீறி..” என்று விட்டு சாத்வீகாவுக்கு பிரசவம் பார்க்க சென்று விட்டனர்..
ஆனால் சிறிது நேரத்திற்க்கு எல்லாம் பிரசவ வார்டில் இருந்து வந்த ஒரு நர்ஸ் தில்லையை பார்த்து..
“ டாக்டர் உங்களை கூப்பிடுகிறார்..” என்று அழைத்தார்..
அந்த அழைப்பில் மாமியார் மருமகன் இருவரும் அதிர்ந்து போய் விட்டனர் இருவரும் பிரசவ வார்டுகுள் நுழையந்தனர்…
அங்கு சாத்வீகாவுக்கு பிரசவம் பார்க்க அனைத்தும் தயார் நிலையில் இருந்தது..
சரண்யா அதை பார்த்து பயப்படவில்லை.. ஆனால் தில்லை அந்த சூழல் ஒரு வித பயத்தை கொடுத்தது..
இருவரையும் பார்த்த டாக்டர்.. சரண்யாவை வெளியில் அனுப்பி விட்டு தில்லையிடம் பாதுகாப்பு உடை கொடுத்து..
“ உங்க மனைவி நீங்க இருக்க வேண்டும் என்று சொல்றாங்க இதை போட்டு கொண்டு வாங்க..” என்று சொன்னதில்..
தில்லை நடராஜ்.. “ நானா..?” என்று ஒரு வித பயத்தோடு கேட்டார்..
அவனின் இந்த கேள்வி அந்த பெண் மருத்துவருக்கு கோபத்தை கொடுத்தது..
“ என்ன சார்.. நீங்க இதை பார்க்கவே இப்படி பயந்தா.. அப்போ உங்க ஒய்ப்…? உங்க குழந்தை வெளியில் கொண்டு வர உங்க ஒய்ப் எவ்வளவு கஷ்டப்படுறாங்க என்று உங்களுக்கும் தெரிய வேண்டாமா..?” என்று அந்த மருத்துவர் கொஞ்சம் கோபத்துடன் தான் கேட்டார்..
அதன் பின் தில்லை நடராஜ் அவர்கள் சொன்னப்படி முதலில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அவர்கள் கொடுத்த உடையை அணிந்து சாத்வீகாவின் கையை பற்றிக் கொண்டான்..
அவன் சாத்வீகாவின் கையை பற்றிக் கொண்டான் என்பதை விட, தில்லை சாத்வீகாவின் கையை பிடித்த உடன்.. அவள் கெட்டியாக அவன் கையை பிடித்து கொண்டாள்.
அது கொடுத்த அழுத்தமே அவனுக்கு உணர்த்தியது.. அவளுக்கு எந்த அளவுக்கு வலி என்று..
சிறிது நேரம் சாத்வீகாவின் கையை பற்றியவன் வேறு எதுவும் பேசாது அமைதியாக தான் இருந்தான்..
மருத்துவர் குழந்தை வரும் வழியில் அதற்க்கு உண்டான பாதையை ஏற்படுத்த சாத்வீகா வயிற்றின் மீது கை வைத்து அழுத்தம் கொடுத்து விட்டு..
சாத்வீகாவிடம்.. “ சாத்வீகா புஷ் புஷ்..” என்று சொல்லிக் கொண்டே அவர்கள் முறையை சரியாக தான் செய்து கொண்டு இருந்தனர்..
ஆனால் சாத்வீகா தான் அவர்களின் சிகிச்சைக்கு சிறிது அளவுக்கு கூட ஒத்துழைப்பு கொடுக்காது இருந்தாள்..
ஒரு நிலைக்கு மேல் மருத்துவர் என்ன செய்வது என்று தெரியாத நிலைக்கு ஆனார்கள்..
வீட்டில் இருந்து வரும் போதே பனிக்குடம் உடைந்து விட்டதால் தண்ணீர் எல்லாம் பாதி வெளியேறிய பின் தான் சாத்வீகா மருத்துவமனைக்கே வந்தது..
இப்போது போக போக இருந்த நீரும் வெளி வந்ததில் குழந்தை வெளி கொண்டு வந்தே ஆக வேண்டும்.. இல்லை என்றால் பிரச்சனை எனும் போது.. அவர்கள் என்ன செய்ய..?
ஆதுவும் சுகப்பிரசவம் ஆவதற்க்கு அனைத்து சாத்திய கூறும் இருக்கும் இந்த நிலையில் பேஷண்டே அதற்க்கு ஒத்துழைப்பு கொடுக்க வில்லை என்றால் மருத்துவரால் என்ன செய்ய முடியும்..?
உள்ளது உள்ளப்படி தில்லையிடம் மருத்துவர்கள் சொல்லி விட்டனர்..
இது வரை சாத்வீகாவின் வலியை மட்டுமே உணர்ந்து தன் கையை அவளிடம் கொடுத்து விட்டு அதன் வலியை தாங்கி கொண்டு இருந்த தில்லைக்கும் சாத்வீகா ஏன் இப்படி செய்கிறாள் என்பது புரியவில்லை..
அதோடு அவளின் இரத்தம் அழுத்தமும் கூடுக்கிறது.. இது குழந்தைக்கு நல்லது இல்லை என்றும் சொல்லிய மருத்துவர்கள்.
.
உடனே சாத்வீகாவுக்கு கவுன்ஸிலிங்க் கொடுத்த அந்த மருத்துவரையும் பிரசவ வார்டுக்கு வர வழைக்கப்பட்டனர்..
அவர் தன்னால் முடிந்த மட்டும் சாத்வீகாவிடம்.. “ உன்னையும் கஷ்பப்படுத்தி கொண்டு ஏன் குழந்தையையும் கஷ்டப்படுத்துகிறாய்..” என்று தன்னால் முடிந்த மட்டும் பேசி பார்த்தும் சாத்வீகா மனதில் என்ன நினைத்து விட்டாளோ.. எந்த ஒத்துழைப்பும் கொடுக்காது இருந்தாள்..
ஒரு நிலைக்கு மேல் ஏதாவது செய்து தான் ஆக வேண்டிய சூழ்நிலை..
தில்லை நடராஜ்… “ ஆபிரேஷன் செய்து விடுங்கள்..” என்று தன் மனைவியின் முகத்தை பார்த்து கொண்டே மருத்துவரிடம் சொல்லி கொண்டு இருந்தான்..
சாத்வீகா கணவனை பார்த்து கொண்டே இருந்தவள் வலியில் தன் உதட்டை கடித்ததில் உதட்டில் இருந்து ரத்தமும் துளி வெளி வந்தது…
இருந்தும் அடமாக இன்னும் இன்னும் பல்லை கடித்து கொண்டு தன் கணவன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தவளின் முகத்தில் சிறிது மாற்றம்..
ஒரு பெரும் குரலாக.. “ ஆ..” என்று கத்தியவளை தில்லை பயத்துடன் பார்க்க..
மருத்துவரோ குழந்தை வரும் வழியில் தலை பாதி வந்த நிலையில் இருக்க அங்கு இருந்த மருத்துவர் சேவிலியர் கொண்டு அனைவரும் பயந்து விட்டனர்..
தில்லைக்கு மருத்துவர் குழந்தையின் தலை வந்த தடத்தை காட்டி.. “ சிசரியனுக்கும் வழி இல்லை.. கெட்டதிலும் நல்லது.. குழந்தையின் சுவாசம் சீராக இருக்கிறது..
அதாவது குழந்தையின் மூக்கு பகுதி அடைக்கவில்லை.. ஆனால் இதே போசிஷன் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கும் என்று
தெரியவில்லை..” என்று எங்களால் முடிந்ததை செய்து கொண்டு தான் இருக்கிறோம்.. இனி உங்கள் மனைவி கையில் தான் இருக்கிறது..” என்று அவர்கள் சொல்லி விட்டனர்..
தில்லைக்கு குழந்தையின் அந்த தலையின் பாதி பகுதியை பார்த்த உடனேயே பகிர் என்று விட்டது…
பின் அவர்கள் பேச பேச.. அவனுக்கு இன்னும் தான் பயம் கூடியது.. அவர்கள் பேசியதில் ஒரே ஆதரவான விசயம்… குழந்தைக்கு சுவாசம் சீராக இருக்கிறது என்பது மட்டுமே..
அதுவும் அது எவ்வளவு நேரம் என்று தெரியாது என்றதில், சாத்வீகாவின் கால் பகுதியின் நின்று கொண்டு இருந்த தில்லை சாத்வீகாவின் தலை பகுதிக்கு வந்து விட்டவன்..
“ என்ன வீகா உனக்கு என்ன பிரச்சனை.. ஏன் இவ்வளவு அடம் பிடிக்கிற…? என்று கொஞ்சம் கோபமாகவே தான் சாத்வீகாவை அதட்டினான் தில்லை..
அவனின் அந்த திட்டலை.. அந்த வலியிலும் ஒரு மென் புன்னகை அவள் முகத்தில் வந்து போனது..
அதை கவனித்து விட்ட தில்லை.. “ உனக்கு என்ன தான் பிரச்சனை வீகா… சொல்லி தொலை..” என்று இன்னும் கோபம் கூடிய அவனின் அந்த கத்தலில் சாத்காவின் மென் புன்னகை இப்போது இன்னும் கொஞ்சம் விரிந்தது..
பின் உடனே வலி கொடுத்த அந்த அழுத்ததில் அவளின் கட்டுப்பாட்டையும் மீறி வலியில் தன் உதட்டை இன்னும் கடித்ததில், அவள் உதட்டின் ரணத்தின் மீதே இன்னும் பல் படிந்ததில் அவளின் வலியின் அளவும் கூடியது..
அது கொடுத்த தாக்கத்தில் அவள் கண்கள் இரண்டு ஒரத்தில் கண்ணீர் துளிகள் வந்து விழுந்தன..
அதை பார்த்த தில்லை.. இப்போது தன் கோபத்தை மூச்சை இழுத்து விட்டு தன்னை கட்டுப்படுத்தி கொண்டு..
“ உனக்கு என்ன தான் வேண்டும் வீகா…?” என்று கேட்டான்..
சாத்வீக் அந்த வலியிலும்.. “ உங்கள் காதல் கதை…” என்று சொல்ல..
அதை கேட்ட அங்கு இருந்த மருத்துவர்கள்… சேவிலியர்கள் என்ன இது என்பது போல் பார்க்க.. தில்லைக்கு ஒரு வித சங்கடம் ஏற்பட..
“ சொல்றேன் வீகாம்மா.. கண்டிப்பா உன் கிட்ட சொல்றேன்.. ஆனா
இப்போ நம்ம குழந்தை முதலில் வரட்டும்.. ப்ளீஸ்..” என்று கெஞ்சினான்..ஆனால் சாத்வீகா அவனின் கெஞ்சலி, எல்லாம் கண்டு கொள்ளாது போல அதே அடம் பிடித்து இருக்க..
தில்லை சொல்ல ஆரம்பித்து விட்டான்… திருமணத்திற்க்கு முன் தன் காதலை தில்லை சாத்வீகாவிடம் கூறவில்லை..
திருமணத்திற்க்கு பின்னும் கூறவில்லை.. படுக்கையில் காதலை தவிர்த்து தன் மனைவியிடம் காமத்தை மட்டுமே அவளின் உடலில் காட்டினான்….
அடுத்தும் தன் காதலை சொல்ல என்ன உணர்த்த கூட தன் கடமை கண் முன் நின்றதில் மறுத்தவன்… இப்போது தன் குழந்தை வெளி வரும் அந்த நேரத்தில், அதுவும் தனிமையில் தன் மனைவியிடம் சொல்ல வேண்டிய தன் காதலை..
மருத்துவர் சேவிலியர்…. வெளி உலகத்தை பார்க்க பாதி வழியில் இருக்கும் அவனின் குழந்தை அனைவரும் கேட்கும் படி தன் காதலை சொல்ல ஆரம்பித்தான்…