“அப்போ நீங்க இத்தனை நாள் காமிச்ச அக்கறை என் மேல் உள்ள நேசத்தால் இல்லை. அப்படி தானே?” ஆதங்கமும் வேகமுமாக கேட்ட பெண்ணை ‘லூசா நீ?’ என்பது போல் பார்த்து,
“இதோ பார் நந்தினி! என் பொண்ணை நீ பார்த்துக்கிட்ட. அதுக்கான கூலி தான் இந்த அக்கறை, பாசம் எல்லாம். மற்றபடி நீ எனக்கு யாரோ தான்!” சிறிதும் ஈரம் இல்லாது அலட்சியத்துடன் சொன்னவனை வெறித்த நந்தினி,
“நான் உங்களை லவ் பண்ணுறேன் செல்வா சார்!” அவனது கண்களை கூர்ந்து நோக்கியபடி நிதானமாக தன் காதலை அவள் கூற, அவனிடம் இருந்து சலிப்பான ஒரு உச்சுக்கொட்டலே பதிலாக வந்தது.
“எதுக்கு வந்தோமோ அதை மட்டும் பார்! இனிமேல் என் பொண்ணை நானே பார்த்துக்கிறேன்” கண்டிப்புடன் சொன்னபடி தன் கையில் இருந்து நந்தினியிடம் தாவ முயன்ற மகளை அடக்கிப் பிடித்ததை பார்த்தவளுக்கு நெஞ்சம் எல்லாம் வலி! வலி மட்டுமே!
“அப்போ என் காதலுக்கு உங்க கிட்ட எந்த ரியாக்ஷனும் இல்லை?”
“ஏற்கெனவே ஒரு வருஷம் லேட். இதில் வந்த ஆறு மாதத்தில் காதல்! நீ ஆட்டி வைக்கிறதுக்கான ஆள் நான் இல்லை! உனக்கு ஆண் சுகம் வேணும்ன்னா இந்த காலேஜிலும் எத்தனையோ பேர் இருக்காங்க. அவங்க கிட்ட முயற்சி பண்ணு! நான் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன். அப்புறம் நீ தான் ஏமாந்து போவ..!” கோணலான உதட்டு வளைவுடன் நக்கலாக சொன்னவனை மனதில் எழுந்த வேதனையை மறைத்து ஆழ்ந்து பார்த்துவிட்டு அவனின் கையில் இருந்த குழந்தையின் தலையில் பாசமாய் வருடிக் கொடுத்தவள், அடுத்த நொடியே அங்கிருந்து விறு விறுவென நடந்து அங்கிருந்து சென்றவள், அடுத்த நாளே அந்தக் கல்லூரியில் இருந்து மாயமாய் மறைந்து போனாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.