அன்று இல்லை நேற்றில் இருந்தே இந்த திருமணத்திற்க்கு உண்டான வேலைகளை நிற்க நேரம் இல்லாது வேலை பார்த்து கொண்டு இருக்கிறான்.
.இது போல் தொழிலதிபர்கள் எல்லாம் ஒரு விழாவில் கலந்து கொள்வது விழாவுக்கு மட்டுமே வருகை தர மாட்டார்கள்.. ஒரு கள்ளில் ஒரு மாங்கா என்ன பல மாங்கா கூட அடிக்கும் கை தேர்ந்த கணவான்கள் தான் பெரும் பாலும் வருவார்கள். அவர்களை வைத்து இவனும் பலது செய்வான்.. செய்தும் உள்ளான். ஏன் இது போல நிகழ்ச்சியில் திருமணம் கூட கூடி வரும்.. சொல்வார்களே .. பணம் பணத்தோடு தான் சேரும் என்று.. அது போல என்று கூட வைத்து கொள்ளலாம்..
விழாவுக்கு ரெடியாகி கீழே வந்த வம்சி கிருஷ்ணாவை பார்த்த அவனின் இரண்டு அத்தை பெண்களில் ஒருத்தி..
“அத்தான் அள்ளுது..” என்று கண் சிமிட்டி கிண்டல் செய்ய. அவர்களின் அந்த கிண்டலை ரசிக்காது. முறைத்து விட்டு சென்றவனை வம்சி கிருஷ்ணாவின் பெரிய அத்தை மகள் இந்த திருமணத்திற்க்கு என்று அமெரிக்காவில் இருந்து வந்து இருக்கும் ஸ்வேதா. இதே வீட்டில் இருக்கும் தன் சித்தி பத்மினியின் மகளான வர்ஷாவிடம்…
“நீ பெரிய அத்தானை தான் மேரஜ் செய்யதுக்கனுமா..? கொஞ்சம் யோசி.. என்னை கேட்டா வம்சியோட இவன் ஒகே என்று சொல்லுவேன்..”
வந்தவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்று கொண்டு இருந்த வருண் கிருஷ்ணாவை கை காட்டி கூறினாள்..சொன்ன ஸ்வேதாவை முறைத்த வர்ஷா.. “ என்னை விட ஆறு மாதம் சின்னவன் டீ ..” என்று பல்லை கடித்து கொண்டு கூறினாள்…
“சோ வாட்..” என்று சொன்னவள். தன்னை விட இளையவர்களை மணந்தவர்களை சுட்டி காட்டி கூறிய ஸ்வேதா..
“இவங்க எல்லாம் சந்தோஷமா வாழலையா…? இன்னும் கேட்டா அவங்களுக்குள் மூன்று நான்கு வயது வித்தியாசம்.. வருணுக்கும் உனக்கும் மாத கணக்கு தானே வித்தியாசம்..” என்று சொன்னவளையே பார்த்திருந்த வர்ஷா…
“அப்போ ஒன்னும் செய்யேன்.. நம்மை விட சின்ன பையனை கல்யாணம் செய்தா லைப் ஹாப்பியா இருக்கும் என்று சொல்ற நீயே வருணை மேரஜ் செய்து கொள்ளேன்..” என்று இப்போது வர்ஷா ஸ்வேதாவுக்கு சொல்ல.
“பண்ணலாம்.. பண்ணலாம்..” என்று ஒரு மாதிரி இழுத்து சொன்ன ஸ்வேதா..
“ஆனா எனக்காக காத்து கொண்டு இருக்கும் சாம் என்ன செய்வான்..” என்று சொல்ல.
“ஏய் இதை நீ சொல்லவே இல்ல.” என்று தினம் பேசியில் பேசி கொண்டு வரும் சகோதரிகள் அந்த வயதுக்கு உரிய பேச்சில் கலந்து விட்டனர்.
அந்த பேச்சில் அவர்கள் வயதுடைய வம்சி கிருஷ்ணாவின் தங்கை விந்தியாவும் கலந்து கொண்டு..
“யார் ஸ்வேதா..? யார்..? நான் மட்டும் என் லவ்வை சொன்னேன் தானே..” என்று கேட்டு கொண்டு இருந்தாள்..
கீழே கல கலப்புக்கு பஞ்சம் இல்லாது.. மகிழ்ச்சிக்கு குறை இல்லாது அழைத்தவர்களின் பெரும் பாலோர் வந்த பின் தான் மாடியில் இருந்து செந்தூரா சசி தேவ் இருவரும் பிடித்த கை விடாது படியில் இருந்து இறங்கி வந்தனர்.
அவர்கள் வருவதை பார்த்த ஸ்வேதா வர்ஷா விந்தியா பேசுவதை விடுத்து அவர்களை பார்த்தனர்.
“செந்தூரா இங்கு வந்தா நம்ம கூட பேசாது ஏன் எப்போதும் தம்பி கூடவே இருக்கா…?” என்று ஸ்வேதா கேட்டதற்க்கு வர்ஷா..
“ஏன்னா அவள் இங்கு வரும் போது மட்டும் தான் அவள் தம்பியோடு இருக்கா.. அதனால்.” என்று சரியா யூகித்து கூறினாள்.
இறங்கி வந்த செந்தூரா தங்களையே பார்த்து கொண்டு இருந்த உறவு முறையில் தன் அக்காக்களை பார்த்து சிரித்தாள்..
அவளின் அந்த சிரிப்புக்கு பதில் சிரிப்பு சிரித்து விட்டு அவர்கள் மீண்டும் அவர்களின் கல கல பேச்சில் ஈடுபட..
சசிதேவ்.. “நீயும் போய் ஜாயின் பண்ணிக்கோ அக்கா.” என்று அவர்கள் மூவரையும் காட்டி சொன்ன போது வேண்டாம் என்று மறுத்தவள் தன் தம்பியோடு அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..
திருமணத்திற்க்கு முகூர்த்ததிற்க்கு சிறிது நேரம் முன் தான் பெண்ணையும் மாப்பிள்ளையும் மேடைக்கு அழைத்து வந்து மேடையில் ராஜ தோரணையாக இருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்.
காரணம் வயது கூடி போனதால் அதிக நேரம் தாத்தா பாட்டியால் அமர்ந்து இருக்க முடியாது என்று வம்சி கிருஷ்ணா தான் அவர்களை அமர வைக்கும் நேரத்தை கூட சொன்னது..
ஆம் நீங்க நினைப்பது சரி தான்.. இருபதாம் திருமணமும் கிடையாது.. அறுபது வயதில் செய்யும் திருமணமும் கிடையாது.. ஆண்டு அனுபவித்து மகன் மகள் திருமணம் முடித்து வைத்து பேரன் பேத்திக்கள் திருமண வயதை எட்டிய நிலையில் இருக்கும் தம்பதியரின் என்பது வயதில் செய்யும் சதாபிஷேகம் தான் நடைபெறுகிறது.
இளமையில் நடைபெறும் திருமணத்தில் தாலி கட்டியதும் வந்தவர்கள் அந்த தம்பதியர்களுக்கு ஆசி வழங்குவார்கள். எண்பதாம் திருமண வைபோகத்தில் அந்த வீட்டின் மூத்தவரான இன்னும் அந்த வென்மை முறுக்கு மீசையில் கம்பீரம் குறையாது அந்த ராஜ தோரணையில் அமர்ந்திருந்த தாரகராம் அமர்ந்திருந்த விதம் அந்த இருக்கைக்கு பெருமை சேர்ப்பது போல் காணப்பட்டது.
தன் எழுபத்தி ஐந்து வயதிலும் முகத்தில் மினு மினுப்பு குறையாது மருமகள் செய்த அந்த அலங்காரத்தில் அந்த வயதிலும் வெட்கப்பட்டு கொண்டு அமர்ந்திருந்த சரஸ்வதி தேவியின் கழுத்தில் மூன்றாவது முறையா தாலி கட்டினார்..
.அதாவது முன்பே அவருக்கு அறுபதாம் திருமணம் செய்து இருந்ததால், எண்பதாம் வயதில் கட்டும் தாலி மூன்றாவது தாலியாக தன் சகபத்தினி கழுத்தில் கட்டிய பின் வந்தவர்கள் அனைவருமே அந்த மூத்த பழுத்த தம்பதியர்களின் பாதம் பணிந்து ஆசி வாங்கி கொண்டனர்.
காலில் விழுந்து ஆசி வாங்குபவர்களுக்கு கொடுக்க என்று பரிசு பொருட்கள் வம்சி கிருஷ்ணா வாங்கி வைத்ததோடு. அதை தாத்தா கையில் எடுத்து கொடுக்க என்று அவர் பக்கத்தில் ஒரு நபரையும் ஏற்பாடு செய்து இருந்தான்.. அனைத்தும் செய்ய ஆள் இருந்தாலுமே அவர்களை வம்சி கிருஷ்ணா மேற்பார்வை பார்த்து கொண்டான். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று.
வந்தவர்கள் அனைவருமே முக்கிய பிரமுகர்கள் எந்த குறையும் இருக்க கூடாது.. விருந்தோம்பலில் கிருஷ்ணா குடும்பம் போல் இருக்க வேண்டும் என்ற பேச்சு தான் வெளிவட்டாரத்தில் இருக்கிறது.. அதை தன் காலத்தில் கெடுத்து கொள்ள வம்சி கிருஷ்ணா விரும்பவில்லை.. அதனால் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து முடித்தான்..
இதோ அழைத்த வெளியாட்கள் அனைவரும் சென்று விட்டனர்.. பெரிய இடம் என்றால் நேரத்தை அதிகல் விரையம் ஆக்க மாட்டார்கள் தானே.
வெளியாட்கள் சென்ற பின் அங்கு எஞ்சி இருந்தவர்கள் வீட்டவர்கள் மட்டுமே.. வீட்டவர்கள் என்றால்..
பெரிய மகன் வம்சி கிருஷ்ணாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தியும்.. அவரின் மனைவி… கோசலை தேவியும்.. இரண்டாம் மகன்.. தேவ கிருஷ்ணாவும் அவர் மனைவி பல்லவி தேவியும்..மூன்றாம் மகன் வாசு தேவகிருஷ்ணா அவர் மனைவி சாந்தியும். மகள்கள் துர்கா தேவி பத்மினி தேவியும் மற்றும் அந்த வீட்டின் அடுத்த வாரிசுகள் மட்டுமே இருந்த நிலையில் …
பெற்றோர்களின் காலில் ஒவ்வொருவரும் குடும்பமாக தாரகராம் சரஸ்வதி தேவி காலில் விழ. வீட்டவர்களுக்கு என்று வாங்கி வைத்திருந்த பட்டு உடையோடு.. வைர செட் நகைகளையும் வாழ்த்தி மனதார தந்து கொண்டு இருந்தனர் அந்த சதாபிஷேகம் முடித்த அந்த மூத்த தம்பதியர்கள்..
மூத்த மகன் கிருஷ்ணமூர்த்தி.. தன் மனைவி மகன் வம்சி கிருஷ்ணா மகள் விந்தியாவோடு பாதம் பணிந்த போது.. பேரனுக்கும் பேத்திக்கும் விரைவில் திருமணம் முடிய வேண்டும் என்று வாழ்த்தியவர்கள்.. வம்சிக்கு பிரேஸ்லெட் விந்தியாவுக்கு வைர வளையல் அணிவித்தனர்..
அடுத்த மகனான தேவ கிருஷ்ணா பல்லவி தேவி மட்டுமே காலில் விழும் போது என்ன சொல்லி வாழ்த்துவது என்று அந்த தம்பதியர் கொஞ்சம் தடுமாறி தான் போயினர்,.. பொருள் செல்வத்தை அள்ளி கொடுத்த இறைவன் அவர்களுக்கு குழந்தை செல்வத்தை கொடுக்காது போய் விட.. மகிழ்ச்சியாக இருங்கள் என்று மட்டும் வாழ்த்தினர்.
அடுத்து வாசு தேவ கிருஷ்ணா சாந்தி வருண் கிருஷ்ணாவோடு காலில் விழ.. பேரனை மூத்த பேரனோடு சேர்ந்து தொழில் கற்று கொண்டு தொழிலில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று வாழ்த்தி அவன் கையில் வைர மோதிரத்தை போட்டு விட்டனர்..
அடுத்து பெண்கள் எனும் போது துர்கா தேவி மகளோடு மட்டுமே அமெரிக்காவில் இருந்து வந்து இருந்தார்.. அதனால் மகளோடு காலில் விழுந்ததும் சரஸ்வதி தேவி..
பேத்தியின் கழுத்தில் வைர நெக்லஸ் மாட்டியர்.. சீக்கிரம் கல்யாணம் நேரம் கூடி வரனும்.. நீ தான் மூத்த பேத்தி உனக்கு தான் முதல்ல திருமணம் முடியனும் என்று கூடுதலாக வாழ்த்த.. ஒரு கள்ள புன்னகை சிந்திய வாறே மேடையில் இருந்து கீழே இறங்கினாள் ஸ்வேதா.. பதிலுக்கு வர்ஷாவும் சிரிக்க.. வருண் கிருஷ்ணா இருவரையும் சந்தேகமாக பார்த்தவன்..
“ம் நீங்க இரண்டு பேரும் சரியில்ல.. என்ன விசயம்..” என்று கேட்டவனுக்கு. “ நீ சின்ன பையன் உன் கிட்ட எல்லாம் சொல்ல முடியாது.” என்று சொன்னதுமே.
இருபத்தி மூன்று வயதான வருண் கிருஷ்ணா அருகில் “18..+ விசயமா“ என்று கிசு கிசுப்பாக கேட்டதும் வர்ஷா.
“வம்சி அத்தான்..” என்றதும்..
“நான் இல்ல நான் இல்ல.” என்று சிறியவர்கள் ஒருபக்கம் கல கலத்து கொண்டு இருந்தனர்.. இதன் நடுவில் இரண்டாம் மகள் பத்மினி கணவன் இழந்ததால் மகள் வர்ஷாவோடு காலில் விழுந்தார்.. மூத்த பேத்திக்கு அணிவித்தது போலவே வைர நெக்லஸ் போட்டு.. “மனம் போல் மாங்கல்யம் கிடைக்கட்டும்..” என்று ஆசி வழங்கினர்..
“மனம் போல் என்ன.. மா. நம்ம வம்சிக்கு தான் வர்ஷா என்று சின்ன வயசுல இருந்து பேசி வைத்தது தானே.. இதை விடுத்து இரண்டு பேரும் வேறு எங்காவது மனசை வைத்து விடுவாங்கலா என்ன..?
அப்படி வைத்தா என்ன நடக்கும் என்று தான் நம்ம வீட்டிலே சாட்சி இருக்கே..?” என்று தாயிடம் பேச்சை ஆரம்பித்த பத்மினி தேவியின் பேச்சு.. பார்வை செந்தூரா.. சசிதேவிடம் சென்று முடிவடைந்திருந்தது..