“நாளை கிளம்பி ரெடியாக இரும்மா..” என்று செந்தூராவிடம் கூறி விட்டு தாரகராம் தன் மனைவி சரஸ்வதியுடன் இங்கு வந்தால் தங்கும் அறைக்கு சென்று விட கிருஷ்ண மூர்த்தியும் தனக்கு என்று இருந்த அறைக்கு சென்று விட்டார்..
இப்போது அங்கு செந்தூரா சசிதேவ் மட்டுமே மீதம் நின்று இருந்தனர்.. செந்தூரா.. “நாம அங்கு போவதில் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே தேவ்..” என்று கேட்டாள்..
என்ன தான் தம்பியின் பார்வையை புரிந்து கொண்டாலுமே, மனதில் இருப்பதை கேட்டு விட்டாள்..
சசிதேவ்..” எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல அக்கா.. நாம இரண்டு பேரும் ஒன்னா இருக்கனும் அவ்வளவு தான்..” என்று செந்தூராவை முன் நிறுத்தி தான் சசிதேவ் இந்த முடிவை எடுத்தது..
அந்த இன்ஸ்பெக்டர் அக்காவிடம்.. “இரண்டு பேரு மட்டும் தானா இருக்கிங்க தனியா..?” என்று இதையே மீண்டும் மீண்டும் கேட்டதில்.. தன்னால் அக்காவுக்கு சரியான ஒரு பாதுகாப்பை கொடுக்க முடியாது என்று நினைத்து தம்பி இந்த முடிவை எடுக்க..
அக்காவோ.. இன்று வம்சி கிருஷ்ணாவை பார்த்து அந்த இன்ஸ்பெக்டர் முதல் கொண்டு கொடுத்த மரியாதை.. பேச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்து.
இவர்களோடு இருந்தால் தன் தம்பிக்கு அந்த ஆளுமை வந்து விடும்.. அதோடு தன் தம்பியும் உயர்ந்த இடத்திற்க்கு வர வேண்டும் என்று யோசித்து இந்த முடிவை எடுத்தாள்..
இப்படி இருவரும் மற்றவர்க்ளுக்காக எடுத்த இந்த முடிவு படி தாரகராம் சொன்னது போல் அடுத்த நாளே சென்னைக்கு சென்று விட்டனர்.
வம்சி மட்டும் வந்த வேலை முடியவில்லை என்று இரண்டு நாள் கழித்து தான் சென்னை சென்றான்.
பத்மினி முன் போல் இருந்து இருந்தால், செந்தூரா சசிதேவ் இங்கேயே செட்டில் ஆனதற்க்கு என்ன சொல்லி இருப்பாரோ.. ஆனால் ஆறு மாதமாக தன் பெண்ணுக்கு அவ்வளவு இடம் பார்த்தும் ஒன்றும் முடியாததில் மகளை நினைத்த கவலையில் இது பெரியதாக தெரியவில்லை..
அதோடு முன் தன் மகள் இங்கு வாழ போகிறாள் என்ற உரிமை இருந்தது.. இப்போது அது இல்லை என்றானதில் பத்மினி கொஞ்சம் அடக்கி தான் வாசிக்க தொடங்கினார்..
சசிதேவ் மட்டும் கோயம்பத்தூரில் இருந்து சென்னைக்கு தன் படிப்பை மாற்ற கோயம்பத்தூருக்கு இரண்டு முறை சென்று வந்தான்.. வம்சி கிருஷ்ணா உடன்..
இப்போது சசிதேவ் சென்னையில் கல்லூரிக்கும் செல்ல ஆரம்பித்தும் விட்டான்.. முன் போல் இருவருக்கும் ஒரே படுக்கை அறை இல்லாது தனி தனியே தான் கொடுக்கப்பட்டது.
வம்சி கிருஷ்ணா தேவ்விடம்.. “உன் அக்காவை யாரும் தூக்கிட்டு போயிட மாட்டாங்க.. சும்மா சும்மா இந்த கை பிடித்து சுத்தாம நீ தனியா கொஞ்சம் வெளி உலகை பார்.. உன் அக்காவை பார்க்க வை புரியுதா..
உன்னையும் உன் அக்காவையும் நாங்க பார்த்துப்போம் தான்.. ஆனா எப்போவும் மத்தவங்க உங்க கூடவே இருக்க முடியாது தானே.. எந்த பிரச்சனை வந்தாலும் தனியா ஹாண்டில் செய்யனும்.. அதுக்கு தனிச்சி செயல்பட்டா தான் புரியும்.” என்ற வம்சி கிருஷ்ணாவின் பேச்சில் இருந்த உண்மையில் சசிதேவ்வும் தனி அறை வேண்டும் என்று கேட்டு வாங்கி கொண்டான்.
அதோடு வம்சி கிருஷ்ணா பேச்சோடு அவனோடு இரண்டு முறை கோயம்பத்தூர் சென்று வந்த சசிதேவ்.. ஆபிசில் வேலை இருக்கு என்று அங்கு தேவ்வை அமர வைத்து விட்டு மீட்டிங்க் அட்டண் செய்வான்.. அந்த மீட்டிங்கிள் வம்சி கிருஷ்ணாவின் சுருக்கமான பேச்சுக்கள்.. அதோடு தன் பேச்சை மற்றவர்கள் மறுக்க முடியாது ஏற்க வைத்தது…
இதை எல்லாம் பார்த்து சசிதேவ் வம்சி கிருஷ்ணாவின் விசிறி ஆகி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
அதுவும் இப்போது வம்சி கிருஷ்ணா தங்கள் நல்லதிற்க்கு தான் சொல்வான் என்ற எண்ணமும் சசிதேவ் மனதில் வந்து விட்டது..
மொத்தில் சசிதேவ் அங்கு பொருந்தி போய் விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.. ஆனால் செந்தூராவுக்கு..
சசிதேவ் வீட்டில் இருக்கும் வரை அவளுக்கு பிரச்சனை இல்லை. தூங்க மட்டுமே தன் அறையில் இருப்பவள்.. எழுந்த உடன் தம்பி அறைக்கு சென்று விடுவாள்..
அவன் கல்லூரி போகும் வரை அவனுக்கு உடை எடுத்து கொடுப்பது.. சில பேச்சுக்கள் பின் கீழே வந்து ஒன்றாக சாப்பிடுவது என்று நேரம் சென்று விடும்..
ஆனால் அதன் பின் தேவ் கல்லூரிக்கு சென்ற பின் தான் அவளுக்கு நேரத்தை நெட்டி தள்ளுவது போல் இருந்தது.
இது வரை படிப்பு.. பின் சிறிது காலம் தான் வேலை.. விடுமுறை நாளில் கூட தம்பியோடு சிறிது சமைத்தல் என்று பொழுது போய் விட்டது..
இப்போது.. அதுவும் தேவ் கல்லூரியில் இருந்து வந்த பின் கூட அவன் படிப்பதற்க்கு நிறைய இருப்பதால் படித்து கொண்டு இருப்பான்.. எழுதி கொண்டும் இருப்பான்..
இவள் தான் தம்பியை தொந்தரவு செய்ய கூடாது என்று அவன் அறையில் எட்டி பார்த்து விட்டு தன் அறைக்கு வந்து விடுவாள்..
இது போல் செந்தூரா ஒரு முறை தம்பியின். அறைக்கு சென்று தன் அறைக்கு போகும் போது இதை பார்த்த வம்சி கிருஷ்ணா.
“அவன் இன்னும் சின்ன பையன் கிடையாது.. சும்மா சும்மா பார்த்துட்டு வரதுக்கு.. நீ அவனை ப்ரீயா விட்டா தான் வளருவான்.. சும்மா சும்மா உன் முந்தானையில் பிடிச்சி வைச்சிக்காதே..” என்று சொன்னவனின் பார்வை செந்தூராவின் துப்பாட்டாவின் பக்கம் சென்றது..மனதோ அதில் நானே முடிந்து கொள்ள ஆசைப்படுகிறேனடி.. என்னை பார்க்கவும் மாட்டாயா..? என்று ஒரு குரல் கொடுக்க..
செந்தூரா வம்சி பார்த்த அந்த துப்பாட்டாவை கையில் பிடித்து முன் காட்டி.. “நான் ஒன்னும் இதில் யாரையும் ஒளித்து வைத்து கொள்ளவில்லை..” என்று சொல்ல.
“யாரையுமே ஒளித்து வைத்து கொள்ளாதே என்று நான் சொல்லவில்லையே.. உன்னை பிடித்தவங்களை பிடித்து வைத்து கொள்ளலாம். தப்பு இல்லை..” என்றவனின் பேச்சு செந்தூராவுக்கு சுத்தமாக புரியவில்லை,.
என்ன சொல்றாங்க. தம்பியை ப்ரீயா விடு என்று சொன்னாங்க. இப்போ பிடித்தவங்களை முடிச்சிக்க சொல்றாங்க.. இவங்க பேச்சையா தேவ் அப்படி புகழ்ந்து தள்ளிட்டு இருக்காங்க..
சரி ஏதோ சொல்லட்டும் என்னை விட்டா போதும் என்று நினைத்து அவனை சுற்றி போக பார்த்தவளை வழி மறித்த வம்சி கிருஷ்ணா..
“சரி அப்போ ஏன் தம்பி ரூமுக்கு போய் பார்த்துட்டு வர..?” என்று கேட்டதுமே.
“அங்கு வேலை பார்த்துட்டு இருந்தவளை இங்கு பிடிச்சி கூட்டிட்டு வந்திங்களே.. என் தம்பிக்கு காலேஜை இங்கு மாத்தி கொடுத்தது போல எனக்கு வேலை இங்கு மாத்தி கொடுத்து இருந்தா நான் ஏன் சும்மா சும்மா அவன் ரூமுக்கு போக போறேன்..” என்று கேட்டாள்..
கேட்டதும் தான் என்னடா இது.. இவ்வளவு பேசி விட்டேன் என்று பயந்து அவன் முகத்தை பார்த்தாள்.. திட்ட போகிறானா என்று..
ஆனால் அவன் முகத்தில் திட்டுவதற்க்கு உண்டான எந்த அறிகுறியும் தெரியவில்லை.. மாறாக ஏதோ யோசிக்கிறான் போல. சரி நாம நம் அறைக்கு போய் விடலாம் என்று நினைத்த போது.
“எல்லாம் அவங்களே செய்து கொடுப்பாங்க என்று நினைக்க கூடாது.. உனக்கு தேவையானதை நீ தான் கேட்டு வாங்கனும்.. உனக்கு வேலைக்கு போகனும் என்றால் நீ தான் கேட்கனும்..
என் கிட்ட இல்லை என்றாலும் தாத்தா கிட்டையாவது சொல்லி இருக்கனும்.. நீ வர்ஷா போல வீட்டில் இருக்க ஆழைப்படுவ என்று நினைத்து விட்டேன்..” என்று சொல்ல.
முன் இத்தனை பேச்சுக்கு அமைதியாக கேட்டு கொண்டு இருந்த செந்தூரா வம்சி கிருஷ்ணா வர்ஷா போல என்றதில்..
“நான் யார் போலவும் இல்ல.. நான் நான் தான்..” என்று பட்டென்று சொல்லி விட்டாள்..
இந்த பேச்சுக்கு வம்சி கிருஷ்ணா. “ஆமா உன்னை போல யாரும் இல்ல.. நீ நீ தான்..” என்றவனின் பேச்சை கேட்டு கவனிக்கும் முன் வம்சி..
“சரி உன் வேலையை பத்தி ஒன் வீக்ல சொல்றேன்.. வெளியில் எல்லாம் வேலைக்கு போக தேவையில்லை.. நம்ம கம்பெனியிலேயே உனக்கு ஏத்தது போல சொல்றேன்..” என்று சொல்ல. இப்போது செந்தூராவுக்கு கொஞ்சம் நிம்மதி..
அதில் சிரித்து கொண்டே அவள் அறைக்கு செல்ல.. அவள் அறைக்கு செல்லும் வரை அவளை பார்த்து கொண்டு இருந்த வம்சி கிருஷ்ணா அதன் பின் தான் தன் அறைக்கு சென்றான்..
இதை எல்லாம் கவனித்த கோசலைக்கும் தன் மகனின் மனது புரிந்து விட்டது.. அதில் இன்னும் செந்தூராவின் மீது கோபம் எழுந்தது..
என் மகனுக்கு என்ன குறை.. இவளுக்கும் இவள் தம்பிக்கும் செய்ய மட்டும் என் மகன் தேவைப்படுறான்… கல்யாணம் செய்து கொள்ள மட்டும் மாட்டாளாமா..?
கோசலை தேவி தன் இந்த ஆதங்கத்தை இரவில் தன் கணவனிடமும் சொன்னாள்.. கிருஷ்ண மூர்த்திக்கு கோயம்பத்தூரிலேயே தன் மகனின் மனது புரிந்து விட்டதே.. அதனால் அதை மறுத்து ஒன்னும் சொல்லவில்லை என்றாலுமே..
“நம்ம பையனுக்கு மட்டும் பிடித்தா போதுமா தேவி.. செந்தூராவுக்கும் பிடிக்க வேண்டாமா..?” என்று கேட்டார்..
அதற்க்கு மனைவி பதில் சொல்லும் முன்.. நம்ம மகன் நமக்கு உசத்தி தான்.. ஆனா அப்படி எல்லோரும் நினைக்கனும் என்று நாம எதிர் பார்ப்பது தப்பு தேவி..” என்ற கணவனின் பேச்சு கோசலைக்கு புரிய தான் செய்தது..
ஆனால் அந்த ஜோதிடம் சொன்னது.. வீட்டிலும் அதுக்கு ஏற்றது போல் தான் நடந்து கொண்டு இருக்கும் விசயங்கள்.. அப்போதே செந்தூரா என் மகனை திருமணம் செய்ய என்ன என்று நினைத்தவர்..
இப்போது தன் மகனுக்கு விருப்பம் என்று தெரிந்த போது.. எப்படியாவது செந்தூராவை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று நினைத்தார்.
அதை மறுநாளே தன் மாமியாரிடம் சொல்லவும் செய்தார்.. தன் மகன் விருப்பம் சொல்லாது..
“வர்ஷாவுக்கும் ஒரு இடம் முடியல. வம்சிக்கும் முடியல. இதே போல இருந்தா பசங்களுக்கு வயது தான் போகுது அத்தை.. விந்தியா ஸ்வேதா. அபார்ட் ஆனதுல இருந்து இன்னும் பயமா இருக்கு.. “ என்று சொன்ன கோசலை
“உங்க பேத்தி இங்கு தானே வந்து இருக்கா.. தினம் உங்க கிட்ட கொஞ்சம் நேரம் பேசிட்டு தானே போறா.. கொஞ்சம் சொல்லுங்க அத்தை.. உங்களுக்கே தெரியும் என் மகனுக்கு ஜாதகத்தில் மட்டும் இப்படி இல்லேன்னா இந்த நேரம் கல்யாணம முடிந்து இருக்கும் என்று..
செந்தூரா சின்ன பெண்.. பெரியவங்க நீங்க தான் அவளுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லனும்.” என்ற மருமகளின் பேச்சு சரஸ்வதி தேவிக்கும் புரிய தான் செய்தது..
அதனால்.. “நான் நேரம் பார்த்து செந்தூராவிடம் இதை பத்தி பேசுறேன் கோசலை..” என்று விட்டார்..
சரஸ்வதி தேவிக்கு செந்தூராவிடம் பேச நேரம் வருவதற்க்குள் வர்ஷாவுக்கு ஒரு நல்ல இடத்தில் இருந்து மாப்பிள்ளை முடிவாகி விட்டது..
வர்ஷா நல்ல நிறம் அழகாகவும் இருப்பாள்.. மாப்பிள்ளை வீட்டவர்கள் சென்னை கிடையாது. பூனே.. தூரம் வழி உறவு முறையில் இந்த இடம் வந்தது.
மாப்பிள்ளை கேசவ்வுக்கு வர்ஷாவை பார்த்ததும் பிடித்து விட்டது. பெண்ணிடம் கேட்க..”பெரியவர்கள் விருப்பம்.” என்று கூறிவிட்டாள்.. வர்ஷாவுக்கும் இடம் பார்த்து பார்த்து முடியாது போக இந்த இடமே முடித்து விட்டார்கள்..
குறை சொல்லும் படி ஒன்றும் இல்லை.. என்ன ஒன்று வரதட்சணை பணம் அதிகம் கேட்டனர்.. அதோடு நகையும் தான். நம்மிடம் இல்லாததா என்று தாரகராம் ஒத்து கொண்டு விட்டார்..
ஆனால் வம்சி கிருஷ்ணா தான்.. “எனக்கு என்னவோ சரியா படல தாத்தா. ஏதோ வட்டிக்காரன் போல கேட்டு வாங்குவது..” என்று சொல்ல..
இந்தியாவுக்கு வந்து இருந்த ஸ்வேதா.. வம்சி கிருஷ்ணாவின் இந்த பேச்சுக்கு..” வட்டிக்காரனாவது கொடுத்த பணத்துக்கு வட்டி போடுறான்.. ஆனா இவங்க..” என்று எடுத்து சொல்ல.
இந்த பேச்சை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த பத்மா… “அப்போ என் மகளுக்கு இந்த இடத்தை முடிக்க மாட்டிங்கலா..? இது போடுங்க என்று சொல்ல எனக்கு இந்த வீட்டில் என்ன உரிமை இருக்கு.. நானே அன்டி வாழுறேன்..” என்று ஒரு ட்ராமா போட அடுத்து வம்சி கிருஷ்ணா வாய் திறக்கவில்லை..
இனி பேசினால் நான் பணத்திற்க்கு பார்க்கிறேன் என்று சொல்லி விடுவார்கள் என்று விட்டு விட்டான்..
பின் அந்த இடத்தையே வர்ஷாவுக்கு பேசி முடிவு செய்யப்பட்டது.
ஸ்வேதா தான் வருண் கிருஷ்ணாவிடம்.. “ இப்போவும் நீ வாய் திறந்து சொல்ல மாட்ட அப்படி தானே..” என்று கேட்டதும் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் நின்று விட்டாலும் தன்னை சமாளித்து கொண்டவனாக.
“என்ன சொல்ல சொல்றா..?. யார் கிட்ட. நான் சொல்லனும்? என்ன சொல்லனும்..?” என்று புரியாது போல் கேட்ட வருண் கிருஷ்ணாவிடம் ஸ்வேதா..
“சும்மா நடிக்காதேடா… தோ பார்.. இனியும் நீ சொல்லாமல் விட்டா… எங்கிருந்தாலும் வாழ்க என்று நீ பாட வேண்டியது தான்..” என்று தீர்த்து சொல்லி விட்டாள்..
இப்போது வருண் கிருஷ்ணா தன்னை வெளிப்படுத்தி கொண்டவனாய்.. “என்னை சின்ன பையன் போலவே பார்க்கிறா பேசுறா ஸ்வேதா.. தம்பி என்று சொல்லாதது தான் ஒரு பாக்கி.. ரொம்ப பேசுனா.. அப்படியும் கூப்பிடுற போறான்னு தான் நான் சில சமயம் ஒதுங்கி போக வேண்டியதா இருக்கு..” என்று தன் நிலையை கூறியவனிடம்..
ஸ்வேதா.. “நீ பெரிய பையன் என்பதை காட்டு..” என்று விட்டாள்..
ஆனால் வருண் கிருஷ்ணாவுக்கு தான் அப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த முடிவும் எடுக்காது தத்தளித்து கொண்டு இருந்தான்..
கூட்டு குடும்பத்தில் தன் ஒருவனின் செயல் நாளை ஏதாவது பிரச்சனை வந்து விட போகிறது என்று பயமும் வருண் கிருஷ்ணா. இதே வெளி பெண் என்றால் ஆறு மாதம் என்ன ஆறு வருடம் பெரியவளாக இருந்தாலும், தன் விருப்பத்தை சொல்லி இருப்பான்..
கூட்டு குடும்பம் உடைந்து விட கூடாது என்று தான் பயம்..
இவன் பயத்தில் நாள் செல்ல. வர்ஷாவுக்கும் கேசவ்வுக்கும் திருமண நாளே வந்து விட்டது..நாளை திருமணம்..
இருந்தும் கிருஷ்ணா குடும்பத்து பெண்கள் பயந்து தான் இருந்தனர் ஜோசியத்தை நினைத்து.. அவர்களுமே தங்களுக்கு தாங்களே தைரியம் சொல்லி கொண்டு படுக்க சென்றனர்.. ஜோதிடர் சொன்னது பலிக்குமா.? பலிக்காதா. என்பது நாளை தெரிந்து விடும் என்று நினைத்து..
ஆனால் அவர்கள் பயந்ததிற்க்கு ஏற்ப தான் அப்படியே பலித்தது… மறு நாள் இரவு குதிரையில் மாப்பிள்ளையின் ஊர்வலம்.. அடுத்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று அனைத்தும் மகிழ்ச்சியாக நடை பெறும் வரை ஒரு பிரச்சனையும் இல்லை..மண மேடையில் மாப்பிள்ளை அமர வைக்கப்பட்டு பெண் அழைத்து வரும் வேளயில் தான் மாப்பிள்ளையின் அப்பா..
தாரகராமிடம். “எனக்கு ஒரு சந்தேகம்.. அது தீர்த்து வைத்து விட்ட பின் உங்க பேத்தியை மேடையில் உட்கார வைங்க..” என்று திருமணத்திற்க்கு வந்து இருந்த அனைவரின் முன்னும் கேட்டார்.