மாப்பிள்ளை தந்தையின் அந்த பேச்சில் மேடையை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்த வர்ஷா அப்படியே நின்று விட.. தன் மகள் நடந்து வந்து கொண்டு இருந்த அந்த மண கோலத்தை பார்த்து பூரித்து பார்த்து கொண்டு இருந்த பத்மினி மாப்பிள்ளை தந்தையின் அந்த பேச்சில் முகத்தில் கலவரமாக தன் தந்தையையும், தமையனையும் பார்க்க.. கிருஷ்ண மூர்த்தியோ தந்தைக்கும் சம்மந்திக்கும் இடைப்பட்ட இடத்தில் நின்று கொண்டு..
“நல்ல நேரம் முடியுது சம்மந்தி.. எது என்றாலும் அப்புறம் பேசி கொள்ளலாம்.. இன்னும் நகை வரதட்சணை கூட கொடுத்து விடுகிறேன்.. முதல்ல திருமணம் நல்ல படியா முடியட்டும்..” என்று அவருமே அவசரப்படுத்தினார்..
அதற்க்கு அந்த சம்மந்தியானவர்.. இல்லை ஆக இருந்தவர் சொன்னது.. “இப்போ நகை பணம் இதுக்கு மட்டு நினைத்து உங்க வீட்டு பெண்ணை கட்ட நினைக்கல..உங்க வீட்டிலேயே முறை பையன் இருக்கிறார்.. அவருக்கு தான் இந்த பெண் கட்ட நினைத்தது.. அப்புறம் வேறு இடம் பார்க்கிறது என்று எல்லா விசயமும் எனக்கு தெரியும்.. ஏன் இந்த பெண் அப்பா அவங்க சொத்து ஜப்தியில் போய் அவர் தற்கொலை செய்து கொண்டது வரை தெரிந்தும் ஏன் என் மகனுக்கு கட்ட நினைத்தேன்..
உங்க கிருஷ்ணா குடும்பம் மட்டுமா .? அதுவும் தான்.. ஏன்னா அந்த குடும்பத்து வாரிசுங்களுக்கு தானே.. சொத்துக்கள் கிடைக்கும்.. எத்தனை க்வாரி.. எத்தனை சொத்துக்கள்.. அதுக்கும் சேர்த்து தான்..
ஆனால் கொஞ்ச நேரம் முன் தான் நான் கேள்வி பட்ட விசயம்.. தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் அப்பா அவர் இருக்கும் போதே அவர் மனைவிக்கு உண்டான பாகத்தை பிரித்து கொண்டு போய் அதையும் சேர்த்து தொலைத்து விட்டு தான் அவர் போனார் என்று கேள்வி பட்டேன்.
அது உண்மையா.? இல்லையா. என்று மட்டும் சொல்லுங்க.. பின் பெண் மணமேடையில் உட்காரட்டும்..” என்று சொல்லி விட்டு கை கட்டி கொண்டு சொல் என்பது போல் கிருஷ்ணன் குடும்பத்தை பார்த்தார்..
இதற்க்குள் கிருஷ்ணா குடும்பத்தின் மொத்த பேரும் அங்கு வந்து விட்டனர்.. மாப்பிள்ளையின் தந்தை பேச பேச பத்மினிக்கு கண் இருட்டி கொண்டு வந்தது..
பேச்சு எதை நோக்கி செல்கிறது என்று தெரிந்து கொண்டவர்.. கண் கலங்கி கொண்டு மண கோலத்தில் நின்று கொண்டு இருந்த தன் மகளை பார்த்தார்..
நான் தான் மற்றவர்கள் முன் இறங்கி வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன் என்றால், என் மகளுமா.. என்றதில் தலை சுற்றுவது போல் இருக்க. தன்னை சமாளித்து நின்று கொண்டு கடவுளை வேண்டி கொண்டவராக பத்மினி அடுத்த பேச்சை கவனித்தார்..
வம்சி கிருஷ்ணா தான்.. “இது கேட்கும் நேரமா இது.. பெண் பார்க்கும் போது அவ்வளவு வேண்டும்.. இவ்வளவு வேண்டும்.. என்று கேட்டிங்கலே.. அப்பவே இதை எல்லாம் கேட்டு இருக்க வேண்டியது தானே.”
சிறிது நேரம் முன் தான் அந்த மாவட்டத்தின் கலெக்ட்டர் வந்து கொண்டு இருப்பதாக அவனுக்கு தகவல் வந்தது.. அவரை வர வேற்க தான் வம்சி கிருஷ்ணா வெளியில் சென்றது.. அதற்க்குள் தேவ் தான் ஒடி வந்து விசயம் சொல்ல இங்கு வந்து விட்டான்..
கலெக்ட்டர் மட்டும் அல்லாது இன்னும் அரசியல் பிரமுகர்கள் கூட அடுத்து அடுத்து வருவார்கள்.. தாங்கள் செய்யும் இந்த தொழில் அனைத்துமே சட்டத்திற்க்கு உட்பட்டு எல்லாம் செய்ய முடியாது..
ஒரு சிலது அப்படி இப்படி தான் இருக்கும்.. அதனால் இது போல கலெக்ட்டர் அரசியல் சப்போர்ட் அவனுக்கு வேண்டும் என்பதால், யாரையும் விடாது அழைத்து இருந்தான்.. இப்போது வந்து என்ன இது என்ற கோபம் அவனுக்கு..
வம்சி கிருஷ்ணாவின் இந்த பேச்சுக்கு.. “பெண் அழகா இருக்கே.. ஏன் முறை பையன் வேண்டாம் என்று சொல்லிட்டான் என்று நினைத்தேன்.. இப்போ தானே தெரியுது.. நீ சொத்து உடைய பெண்ணா கட்டிக்க.. இந்த பெண்ணை வேண்டாம் என்று சொல்லி இருக்க..” என்ற இந்த பேச்சில்..
வம்சி கிருஷ்ணா.. “இந்த பேச்சு எல்லாம் வேண்டாம்.. இப்போ உங்களுக்கு என்ன தெரியனும்..?” என்று கேட்டவனுக்கு முன் கேட்டதான..
“சொத்து முன்னவே கொடுத்து விட்டதா.?” என்று கேட்டதற்க்கு..
தன் தாத்தாவையும் தந்தையையும் பார்த்தவன்.. “ ம் கொடுத்து விட்டது.” என்று விட்டான்..
“அப்போ இனி உங்க குடும்ப சொத்து உங்க அந்த பெண்ணுக்கு வராது.. அப்படி தானே..” என்று கேட்டவருக்கு.
தாரகராம்.. “அப்படி எல்லாம் என் பெண்ணை ஒன்னும் இல்லாது விட்டு விட மாட்டேன்..” என்று சொன்னவரிடம்..
“ஒன்னும் இல்லாது விட்டு விட மாட்டிங்க. ஆனாலுமே உரிமையா ஒரு பங்கா உங்க பெண்ணுக்கு உங்க சொத்துக்கள் சரி பாதியாவும் வராது தானே..” என்று கேட்டவருக்கு என்ன சொல்வது என்று இருக்க.
மேடையில் அமர்ந்திருந்த மாப்பிள்ளையிடம்.. “எழுந்துருடா..” என்று தந்தை சொன்னதும்.. எந்த மறு பேச்சும் சொல்லாது எழுந்து கொண்டவனை சசிதேவ்வே ஒரு மாதிரியாக பார்த்தவன் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த தன் அக்கா செந்தூராவிடம்..
“அக்கா வர்ஷா அக்கா இவரை கட்டிக்காதே நல்லது தான் கா.” என்று தன் அபிப்பிராயத்தை கூறினான்.
செந்தூராவுமே அதை தான் நினைத்தாள்.. ஆனால் சூழலை நினைத்து அமைதியாக இருந்தவள்.. தம்பியிடமுடம்..
உஷ்.” என்று அமைதியாக இருக்க கூறினாள்..
ஆனால் அவனை அமைதியாக இருக்க மாப்பிள்ளையின் தந்தை விரும்பவில்லை போல.
செந்தூராவின் பக்கம் கை காட்டி.. “உங்க குடும்பத்தில் பெண் எடுக்க எனக்கு ஆசை தான்.. இந்த பெண்ணை கொடுப்பது என்றால் என் மகனை உட்கார சொல்றேன்.” என்றது தான் சசிதேவ் தன் வயதையும் மறந்து..
“என்னது என் அக்காவா… வர்ஷா அக்காவே தப்பிச்சாங்க என்று நினைத்தா நீங்க என் அக்காவை கேட்பிங்கலா.” என்று எகிறி கொண்டு மாப்பிள்ளையின் தந்தையின் முன் சென்றான்.. கிருஷ்ணா குடும்பத்து ஆண்களும் தான்..
அவனை அடக்கினர்.. ஆனால் வம்சி கிருஷ்ணாவை தான் யாராலும் அடக்க முடியாது போய் விட்டது.
“நீ என்ன வர்ஷாவை கட்டிக்க மாட்டேன் என்று சொல்றது.. நான் சொல்றேன் உங்க பையனுக்கு எங்க வீட்டு பெண்ணை என்ன எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்ணை கூட கொடுக்க மாட்டோம்.. இது போல அப்பா பின்னாடி நின்னவன் எல்லாம் என் அகராதியில் ஆண்பிள்ளைக்கே சேர்த்தி கிடையாது கிளம்புங்க.. என்று முதல் வேலையாக மாப்பிள்ளை குடும்பத்தினரை அந்த சத்திரத்தை விட்டு வெளி அனுப்பி விட்டு,,
தன் பிஏ விடம்.. “திருமணம் நின்று விட்டதை வர இருக்கும் வி.ஐ ப்பிக்களுக்கு தெரியப்படுத்தி விடு சொன்னவன்..
அந்த வீட்டின் மூத்த ஆண்மகன் தாரகராமும் இடை ஆண்மகன்கள் மூன்று பேரும் கடைசி தலை முறை வம்சி கிருஷ்ணாவும் அடுத்து என்ன என்று தான் யோசித்தனரே தவிர.
அங்கு வர்ஷாவையோ அவளின் அன்னை பத்மினி பற்றியோ யோசிக்கவில்லை..
வர்ஷாவையாவது மாப்பிள்ளையின் தந்தை பேச ஆரம்பித்த உடன்.. வருண் அவள் பக்கம் நின்று கொண்டு அவளுக்கு ஆறுதல் கொடுத்து கொண்டு இருந்தான்..
கூட ஸ்வேதா ஏன் செந்தூரா கூட..”இது போலானவனோடு திருமணம் நின்றதே மேல் தான்.. பார்த்திங்கலே.. அப்பா கூப்ப்பிட்டதும் நாய் குட்டி போல பின்னால் சென்றது.” என்று அதிர்ந்து என்பதை விட அவமானத்தில் நின்று கொண்டு இருந்த வர்ஷாவை தேற்றி கொண்டு இருந்தனர்..
ஆனால் பத்மினி.. திருமண மேடை வரை வந்து நின்று விட்ட தன் மகளின் வாழ்வை நினைத்து கலங்கி கொண்டவரின் முகம் எல்லாம் வியர்வை.. பின் நெஞ்சு அடைப்பது போல ஒரு உணர்வு.. அடுத்து என்ன என்பதற்க்குள் பத்மினி தன் நினைவை இழந்து இருந்தார்..
திருமண நிகழ்வுக்காக பட்டும் , வைரமும் அலங்கரித்து கொண்ட பெண்கள் மருத்துவமனையில் ஐ.சி.யூ வெளியில் காத்து கொண்டு இருந்தனர்..
ஆண்களில் பாதி பேர் சத்திரத்தில் வருவோர்களை திருமணம் நின்று விட்டது என்று நல்ல முறையில் சொல்லி அனுப்பி அங்கு இருக்க. மீதி பேர் மருத்துவமனையில் இருந்தனர்.
தாரகராமும் சரஸ்வதியும் தான்.. நிலை குலைந்து அமர்ந்து விட்டனர்.. தாங்கள் ஆரோக்கியமாக அமர்ந்து இருக்க.. தன் மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுத்து கொண்டு இருக்கிறாளே என்ற வேதனையில்.
ஆம் உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் பத்மினியை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்த போது மருத்துவர் சொல்லி விட்டனர்.
“எதுவும் சொல்ல முடியாது.. எவி ஹார்ட் அட்டாக். எது இருந்தாலும் பின் தான் சொல்ல முடியும்..” என்று சொல்லி சென்ற மருத்துவர்கள் இன்னும் நிலை என்ன என்று வந்து சொல்ல காணும்.
வர்ஷாவின் நிலை சொல்ல முடியாது மண பெண் அலங்காரத்தில் கதறி அழுது கொண்டு இருந்தாள்.. அவளின் அப்பா அவளின் பன்னிரெண்டாவது வயதில் தற்கொலை செய்து கொண்டார்..
அந்த வயதில் தந்தையை இழப்பதே கொடுமையான விசயம் தான்.. ஆனால் அந்த இறப்பை அவள் தந்தையே தேடி கொண்டது.. எவ்வளவு கொடுமை..
அதில் இருந்து மீண்டு தாய் மட்டுமே. அதுவும் தாத்தா வீட்டில் தான்.. வெளியில் இருந்து பார்ப்பவர்கள் சொல்வார்கள்.. அவளுக்கு என்ன வசதியாக இருக்கிறாள் என்று..
ஆனால் ஒரு பெண் தந்தையின் கீழ் இல்லாது தாத்தா வீட்டில்.. ஒவ்வொன்றும் அவர்கள் செய்தால் தான் என்ற நிலையில் வாழ்பவர்களுக்கு தான் அந்த வேதனை தெரியும்.. எதையும் காட்டி கொள்ளாது.. இருந்தவள் தான்..
ஆனால் அம்மா. என்ன தான் பத்மினி வெளியில் அப்படி பேசி கொண்டு இருந்தாலுமே, அன்னையில் சூழ்நிலையும் மகளுக்கு தெரியுமே. தனக்காக மட்டுமே தானே அம்மா வாழ்ந்து கொண்டு இருந்தது.. இப்போது தன்னாலேயே உயிருக்கு ஆபத்தில் படுத்து கொண்டு இருப்பதில் அழுது அழுது ஒரு நிலைக்கு மேல் அழ கூட தெம்பு இல்லாது சோர்ந்து போய் விட்டாள்..
சில மணி நேரம் கழித்து சத்திரத்தில் இருந்த ஆண்களும் மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.. இன்னும் சிறிது நேரம் கழித்து மருத்துவர் வந்து பத்மினி ஆபத்தான கட்டத்தை தான்டி விட்டார்.. ஆனால் ஹார்ட்டில் அடைப்பு இருக்கிறது.. அதற்க்கு உடனே சர்ஜரி செய்ய வேண்டும் என்று சொல்லி அதற்க்கு தேதியும் குறித்த பின் தான் அவர் அவர் ஒரு நிலைக்கு வந்தனர்..
பின் மருத்துவமனையிலேயே எல்லோம் இருக்க வேண்டாம் என்று.. அனைவரையும் வீட்டிற்க்கு அனுப்பி விட்டு.. வம்சி கிருஷ்ணா வருண் கிருஷ்ணா. கோசலை இருப்பதாக முடிவு ஆனது..
ஆனால் வர்ஷா நான் அம்மா வீட்டிற்க்கு வராது நான் வர மாட்டேன் என்று சொல்லி மருத்துவமனையிலே இருந்து விட்டாள்.. இவர்களுக்கு என்று மருத்துவமனை இரண்டு அறைகள் கொடுக்கப்பட.. அதில் ஆண்கள் பெண்கள் என்று தங்கி கொண்டனர்..
இரண்டு நாட்கள் கழித்து பத்மினிக்கு பைபாஸ் சர்ஜரி நல்ல முறையில் நடந்து முடிந்தது.. இனி உயிருக்கு ஆபத்து இல்லை.. ஆனால் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.. என்று சொல்லி ஒரு சில உணவு கட்டுப்பாடுகளும், மாத்திரைகளும் எடுத்து கொள்ள சொல்லி மருத்துவமனை வாசமாக பத்து நாட்கள் சென்ற பின் அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
புகுந்து வீடு செல்ல மணப்பெண் கோலத்தில் பத்து நாட்களுக்கு முன் அந்த வீட்டில் இருந்து சென்ற வர்ஷா.. அம்மாவை நோயாளியாக்கி அந்த வீட்டிற்க்குள் மீண்டும் வந்து சேர்ந்தாள்..
பார்த்தவர்களுக்கு கண்கள் கலங்கி விட்டது.. பத்மினி தான் கொஞ்சம் பேசுவாள்.. ஆனால் வர்ஷா தங்கமான பெண்ணாயிற்றே.. அவளுக்கு இது போல் நடந்து இருக்க வேண்டாம் என்பது தான் அனைவரின் எண்ணமாக இருந்தது..