வருண் கிருஷ்ணாவுடைய பிறந்த நாள் விழாவுக்கு வம்சி கிருஷ்ணா சரியான நேரத்திற்க்கு வந்து விட்டான்.. வீட்டிற்க்கு வந்தவுடன் தம்பியை அணைத்து வாழ்த்து சொல்லி விட்டு தான் தன் அறைக்கு சென்றான்.. செல்லும் போது அவனின் பார்வை நாளா பக்கமும் சுழன்டு விட்டு தான் சென்றது..
மகனின் அந்த பார்வை சுழட்டலை கோசலையும் கவனித்தார்.. முன் என்றால் மகனை இப்படி ஊன்றி கவனித்து இருக்க மாட்டாரோ என்னவோ.. ஆனால் மகனுக்கு செந்தூராவின் மீது விருப்பம் என்று தெரிந்ததும், அதை உறுதிபடுத்த வேண்டி தான் தன் மகனை கவனித்தது..
தொழில் ரீதியாக ஒரு வாரம் வெளி ஊருக்கு சென்று இருந்தவன் இன்று தான் வீடு திரும்பி இருக்கிறான். செந்தூராவின் மீது மகனின் விருப்பம் எந்த அளவுக்கு என்று அறிந்து கொள்ள தான்.. கவனித்தது..
கவனித்ததில் இனி இது பற்றி தனி தனியாக பேசுவது எல்லாம் சரி வராது அனைவரின் முன்னும் கேட்டு விட வேண்டியது தான்..
வீட்டில் பெரியவர்கள் இருக்க. வீட்டு பிரச்சனை பார்த்து அவர்களே ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால், முடியாது போல இனி நாமே பார்த்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார் கோசலை தேவி..
இன்று பிறந்த நாள் விழா முடிந்து வீடு திரும்பியதும் பேசி விட முடிவு செய்து விட்டார். ஆனால் வீடு வரை கூட பொறுத்து கொள்ள முடியாது ஒட்டலில் வைத்தே இதை நாம் பேசி விடுவோம் என்று அவருக்கு தெரியாது தான் குடும்பத்தினரோடு ஒட்டலுக்கு சென்றது.
இவர்கள் குழுமத்திற்க்கு என்று ஒரு பர்சனல் மேனஜர் ஒருவர் உள்ளார். வீட்டில் விழா என்றால் வீட்டில் உள்ளவர்களே பார்த்து கொள்வார்கள்.
ஆனால் இது போல் வெளியில் என்றால், அந்த மேனஜர் தான் முன் நின்று அனைத்து ஏற்பாட்டையும் செய்வார்.. கிருஷ்ணா குடும்பத்தினர் அந்த நேரத்திற்க்கு சென்றால் போதும்..இன்றும் அதே போல் தான் அந்த ஒட்டலுக்கு சென்றனர்..
செந்தூராவும் சசிதேவ்வுக் முன்பும் வெளியில் இது போல விழாவுக்கு வெளியில் இவர்களோடு சென்று இருக்கிறார்கள் தான்..’ஆனால் அப்போது அவர்கள் இருவர் மட்டுமே பக்கம் பக்கம் அமர்ந்து கொண்டு அவர்களுக்குள் பேசிக் கொண்டு வருவர்..
இப்போது அதே வீட்டில் இருப்பதால், கிண்டல் கேலி என்று பேசி கொள்ளவில்லை என்றாலும், அக்கா தம்பி இருவரும் இப்போது அந்த குடும்பத்துடன் ஒரளவுக்கு பேசி கொள்ளும் படி தான் இருக்கிறார்கள்..
அதுவும் வருண் கிருஷ்ணா சும்மா இருந்தால் கூட இழுத்து வைத்து பேசும் சுபாவம் அவனுக்கு..
அதுவும் இன்று வருண் பக்கத்தில் செந்தூரா அமர்ந்து கொள்ள.
“என்ன அத்தை பெண்ணே.. அத்தானுக்கு பர்த்டே கிப்ட் ஒன்னும் இல்லையா..? அதுவும் வேலைக்கு எல்லாம் போற.. உன் சம்பளத்தில் இருந்து அத்தானுக்கு வாங்கி கொடுக்கலாம் இல்லையா.?” என்று கிண்டல் பேசி கொண்டு வர.
செந்தூராவும் சிரித்து கொண்டு.. “என்ன வேண்டும்..” என்று கேட்டவளிடம்..
“என் அத்தை பெண் எது கொடுத்தாலும் இந்த அத்தான் வாங்கி கொள்வேன்..” என்று பேச.. சசிதேவ்வும்..
“பார்த்து அத்தான் அக்கா அடி கொடுத்து விட போறாங்க.” என்று பேச.. இப்படி கலாட்டாவாக பேசிக் கொண்டு ஒட்டல் வரை அந்த கார் பயணம் அமைந்தது..
இதை அனைவரும் பார்த்து ரசித்தனர்.. அந்த காரில் வம்சி இல்லை.. வேறு ஒரு காரில் விழாவுக்கு தாத்தா பாட்டியை அழைத்து கொண்டு சென்று கொண்டு இருந்தான்..
செந்தூரா காரில் வம்சியின் அம்மா கோசலை தேவி இருக்க.. இந்த கலாட்டாவை அவர் ரசிக்கவில்லை..
வருண் எப்போதும் இது போல் பேசுபவன் தான்.. அவன் இருக்கும் இடம் எப்போதும் கல கலப்பாக தான் இருக்கும்.. ஏன் வர்ஷாவிடம் கூட இது போல் அத்தை பெண் அத்தான் கூப்பிடு என்று எல்லாம் கிண்டல் செய்து உள்ளான்..
ஆனால் வருண் வர்ஷாவிடன் பேசும் போது எல்லாம் கோசலைக்கு தவறாக தெரியவில்லை.. காரணம் வர்ஷாவோடு வருண் சின்னவன் என்ற நினைப்பா இல்லை…
தன் மகன் வம்சிக்கு செந்தூராவை பிடித்து இருப்பதால், வருண் செந்தூராவிடம் அதிகம் உரிமை எடுத்து பேசுவது ரசிக்கவில்லையா தெரியவில்லை.. மொத்தத்தில் செந்தூரா தன் மருமகள் ஆனால் மட்டுமே அனைத்து பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வரும் என்று அவர் நம்பினார்..
அதனால் இவர்கள் கார் அந்த ஒட்டலின் முன் நிற்க்கும் போதே இவர்களுக்கு முன் வம்சி கார் ஒட்டலின் முன் வந்து விட்டது.. அங்கு இருப்பவர்களிடம் வம்சி தன் கார் சாவியை கொடுத்து கொண்டு இருக்க கோசலை மகன் அருகில் சென்றவர்.
“போகும் போது வருண் தாத்தா பாட்டியை கூட்டிட்டு போகட்டும் நீ செந்தூராவை கூப்பிட்டு போ.” என்று கூறும் அன்னையை ஒரு விதம் சலிப்பாக பார்த்த வம்சி கிருஷ்ணா..
“அம்மா..” என்று ஏதோ பேச வர கோசலை இப்போது மகன் அந்த பேச்சுக்கு எல்லாம் பெரிது படுத்துவதாக இல்லை…
“இது ஜாதகம் மட்டுமே இல்ல வம்சி.. ஒரு அம்மாவா என் மகன் விருப்பத்தையும் நிறை வேத்தனும் என்று பார்க்கிறேன்..” என்று சொல்லி விட்டு அந்த ஒட்டலுக்குள் செல்லும் தன் அம்மாவையே பார்த்து கொண்டு இருந்தவன் அருகில் சென்ற வருண் கிருஷ்ணா.
“என்ன அண்ணா ஏதாவது பிரச்சனையா..? பெரியம்மாவின் முகம் காரில் வரும் போது கூட ஒரு மாதிரி இருந்தது..” என்று கேட்டவனிடம்..
எதுவும் சொல்லாது. “வா போகலாம்..” என்று அழைத்து செல்ல.. பின் அழைத்தவர்கள் ஒருவர் பின் ஒருவர் வந்து பிறந்த நாள் விழா நேரம் செல்ல செல்ல கலைக்கட்ட தொடங்கியது..
வந்தவர்களில் பெரும் பாலோர் வருண் கிருஷ்ணா நட்பு வட்டம் தான்.. அவனின் பிறந்த நாள் என்பதினால் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கட்டது..
தொழில் முறையில் .இது தவிர முக்கியமான உறவுகள். அவ்வளவே. ஏழு மணி அளவில் பிரமண்டமான கேக்கை வருண் முன் வைத்து கட் செய்ய சொல்ல.
வருண் கிருஷ்ணாவின் ஒரு பக்கம் வர்ஷா நின்று கொண்டு இருந்தாள். வருண் கிருஷ்ணா அப்படி நிற்க்கும் படி பார்த்து கொண்டான்..
அவனின் மறுப்பக்கம் சசிதேவ் தான் நின்று கொண்டு இருந்தது.. ஆனால் சசிதேவ் எப்போதும் போல் தன் அருகில் தன் அக்கா செந்தூராவை அழைத்து நிற்க வைத்து கொண்டவன்.. அப்படி இப்படி என்று வருண் கிருஷ்ணா கேக் கட் செய்யும் சமயம் சரியாக மறுப்பக்கம் செந்தூரா நின்று கொண்டு இருக்கும் படியாகி விட்டது.. அந்த நிகழ்வு தற்செயலான ஒன்று தான்..
வருண் கிருஷ்ணா என்று இல்லை.. பிறந்த நாளுக்கு கேக் கட் செய்தால் பக்கத்தில் நின்று கொண்டு இருப்பவர்களுக்கு தான் அதை ஊட்டி விடுவர்.. அன்னை தந்தையை தேடி பிடித்து எல்லாம் ஊட்டி விட மாட்டார்கள்.
அதற்க்கு தான் வருண் கிருஷ்ணா தான் இன்று கேக் கட் செய்யும் போது வர்ஷாவை பக்கம் நிற்க வைத்து கொண்டான்.
வழக்கம் போல் கட் செய்த கேக்கின் ஒரு துண்டை எடுத்து முதலில் வர்ஷாவுக்கு ஊட்டி விட்டவன்.. அதே துண்டை இந்த பக்கம் நின்று கொண்டு இருந்த செந்தூராவுக்கும் ஊட்டி விட்டான்..
வர்ஷா சிரித்து கொண்டு வாழ்த்து சொல்ல செந்தூரா வாழ்த்தோடு பிறந்த நாள் பரிசாக ஒரு பிரேஸ்லெட்டை பரிசாக கொடுக்க..
வருண் .. “ஏய் நான் சும்மா கிண்டல் செய்தேன்.. நீ என்ன உண்மையில் பரிசு கொடுக்குற. ஆனா சமையா இருக்கு .” என்று அதை எடுத்து செந்தூரா கையில் கொடுத்தவன்.. கை நீட்டி கட்டி விடு என்றான்.. செந்தூராவும் சிரித்து கொண்டு எந்த விகல்பமும் இல்லாது கட்டி விட்டாள்..
செந்தூரா கட்டி விட்ட பிரெஸ்லெட்டை அனைவருக்கும் காட்டி.. “இன்றைய என் பிறந்த நாள் ரொம்ப விசேஷமானது தான் .. இரண்டு அத்தை பெண்கள் தேவதைகளாக பக்கம் நிற்க.. அய்யோ..” என்று மயங்குவது போல் நடித்து செந்தூரா தோள் மீது லேசாக சாய்வது போல் நடித்தான்..
வருணின் நண்பர்களில் ஒருவன்.. “கண்ணா இரண்டு லட்டு தின்னா ஆசையா.?” என்று கிண்டல் செய்ய மற்றோருவனோ..
“எங்களுக்கும் அத்தை பெண்கள் எல்லாம் இல்ல ராசா. இருப்பது எல்லாம் சித்தி சித்தப்பா பெண்கள் தான்.. சீர் செய்ய தான் நான் இருக்கேன்..” என்று வெறுப்பது போல் பேசி.. என்று அந்த இடம் அந்த வயதிற்க்கு ஏற்றது போல பேச்சுக்கள் நடந்தது..
ஆனால் கோசலைக்கு தான் கார் பயணத்தின் போதே வருண் செயல் பிடிக்காது போக. இப்போது சொல்லவும் வேண்டுமோ.. கோசலைக்கு வருண் செயலை விட செந்தூரா சிரித்து கொண்டு அவன் ஊட்டிய கேக்கை வாங்கி கொண்டது..
பிரஸ்லேட்டை கட்டி விட்டது.. இதோ வருண் தோள் சாய்ந்த போது செல்லம் போல் அவன் கேசத்தை கலைத்து விட்டது.. இதோ வருணின் நண்பர்களின் இந்த பேச்சுக்கு எல்லாம் கூட சேர்ந்து சிரித்தது..
எல்லாம் சேர்ந்து அவருக்கு கோபத்தை வர வழைத்தது.. வருண் எப்போதுமே கலாட்டா பேர் வழி தான்.. ஆனால் இந்த பெண் எப்போதும் அமைதியா ஒதுங்கி தானே நிற்ப்பாள் இன்று என்ன..? ஒரு சமயம் வருணை பிடித்து இருக்கிறதோ என்ற அந்த நினைப்பே கோசலைக்கு வெறுப்பை கொடுத்தது..
வம்சிக்கும் வருண் செந்தூராவிடம் பேசுவது சிரிப்பதை பார்த்து அவன் சந்தேகம் எல்லாம் படவில்லை.. ஆனால் தன்னிடம் இது போல் செந்தூரா பேசி பழகுவது இல்லையே.. தன்னாலும் வருண் செய்தது போல் அனைவரும் முன்னும் செய்ய முடியுமா..?
அனைவரோடும் எப்போதும் சகஜமாக பேசாதவன் செந்தூராவிடம் மட்டும் பேசினால் அது அனைவரின் பார்வைக்கும் வித்தியாசமாக தானே படும்..
ஆனால் இன்று நான் ஏன் வருண் போல் அனைவருடனும் பேசியது இல்லை என்று முதல் முறை தன் செயல்கள் குறித்து கவலைப்பட்டு கொண்டு இருந்தான்.
வம்சி வருண் செந்தூராவை பார்த்து கவலைப்பட்டால் அது நியாயம்.. காரணம் வம்சி செந்தூராவை விரும்பிகிறான்..
ஆனால் வர்ஷாவுக்கும் வருண் செந்தூராவுக்கு கேக் ஊட்டும் போதே.. செந்தூரா யாரோடும் இப்படி சகஜமாக பழக மாட்டாளே.. என்ற எண்ணம் போகும் போதே அடுத்து பிரஸ்லெட் எனும் போது வர்ஷாவின் மனது ஏதோ இழந்தது போல் என்ற ஒரு எண்ணம் அவள் மனதில் தோன்றியது..
வர்ஷா தன் திருமணம் நின்று போனது.. தாயின் உடல் நிலையிலும் இப்படி ஆகி விட்டதில் இன்று கொஞ்சம் உயிர்ப்போடு இருக்கிறாள் என்றால், அதற்க்கு காரணம் வருண் கிருஷ்ணா தான்..
ஏதாவது ஒன்று பேசி அவன் பேச்சுக்கு தன்னை இழுத்து விடுவான்.. அவன் வீட்டில் இருந்தால், வர்ஷாவை தனித்து விட்டதே கிடையாது.
வருணுக்கு நான் எப்படியோ அதே போல் தானே செந்தூராவும்.. நான் ஏன் இப்படி நினைக்க வேண்டும் என்று அவளின் நல்ல மனது சொன்னாலுமே, வர்ஷாவின் மனது வருணுக்கு அவள் வாங்கிய கிப்ட் என்னிடம் சொல்லி இருந்தால், நானும் ஏதாவது வாங்கி இருப்பேனே.. இருவரும் பக்கம் இருக்க அவள் மட்டும் பரிசு கொடுத்து, நான் கொடுக்காது போனால் வருண் என்னை பற்றி என்ன நினைப்பான்.. அதனால் தான் வருண் செந்தூரா செயல் பிடிக்கவில்லை என்று அவளுக்கு அவளே சமாதானமும் செய்து கொண்டாள்..
கோசலை தேவி வருண் செந்தூராவிடம் பழகுவதை பார்த்தே.. இப்படி தவிக்க. அதற்க்கு மேல் ஒரு நிகழ்வாக வருண் அழைத்ததிற்க்கு அவனின் நண்பன் கெளஷிக் அவன் தந்தையோடு பிறந்த நாள் விழாவுக்கு வந்து இருந்தான்..
வருண் கூட என்ன இது அப்பாவோடு வந்து இருக்கான் என்று நினைத்தாலுமே நண்பனின் தந்தையையும் முறையாக அழைத்து உபசரிப்பு எல்லாம் செய்தான்..
பின் தான் இதோ கேக் கட் செய்யும் நிகழ்ச்சி.. ஒரு பக்கம் சின்ன குழந்தைகளுக்கு என்று ஒரு விளையாட்டு.. ஒரு பக்கம் வளர்ந்த குழந்தைகளுக்கு என்று தனிப்பட்ட விளையாட்டு.. இன்னொரு பக்கம் அவர் அவர் தெரிந்தவர்கள் என்று பப்பே முறை உணவை சாப்பிட்டு கொண்டும் பேசி கொண்டும் இருந்தனர்.
ஒரு சில தொழில் பேச்சுக்களும் நடந்து கொண்டு இருந்தது. இது போல் விழா சமயத்தில் தொழில் பேச்சு நடந்தால் வம்சி தாத்தா தன் பக்கத்தில் இருப்பது போல் பார்த்து கொள்வான். இன்றும் அப்படி தான் க்ரனைட் எடுப்பதில் அரசாங்கம் விதித்து இருக்கு வரை முறைகளை பற்றி தங்கள் தொழில் சார்ந்தவரிடம் பேசி கொண்டு இருந்த போது தான்..
வருணின் நண்பன் கெளஷிக்கின் தந்தை தாரகராம் அருகில் சென்றது.. அவருமே தொழில் முறையில் தாரகராமுக்கு தெரியும்.. அதனால் நலம் விசாரிப்பு எல்லாம் முடிந்த பின்..
கெளஷிக்கின் தந்தை தாரகராமிடம்.. “உங்க பேத்திக்கு இடம் பார்க்கிறிங்கலா…” என்று தூரம் நின்று கொண்டு இருந்த செந்தூராவை பார்த்து கொண்டே கேட்டார்..
கெளஷிக்கின் தந்தையின் கண் போகும் இடம் தாரகராமுக்கு தெரியவில்லை என்றாலுமே, பக்கத்தில் நின்று கொண்டு இருந்த வம்சி கிருஷ்ணாவுக்கும், மகன் செந்தூரா பக்கம் நில்லாது எப்போ பார்த்தாலும் பிசினஸ் பிசினஸ் என்று இதை கட்டி கொண்டு அழுகிறானே என்று கடுப்புடன் தன் மகனை பார்த்து கொண்டு இருந்த கோசலை தேவியின் கண்களுக்கும் அவர் பார்த்த பார்வை மட்டும் அல்லாது கேட்ட கேள்வியும் நன்றாகவே அவர் காதில் விழுந்தது.
அதில் சாப்பிட்டு கொண்டு இருந்த ப்ளேட்டை கூட அங்கேயே வைத்து விட்டு மாமனார் அதற்க்கு ஏதாவது கூறு முன்.. அவர்கள் இருவருக்கும் இடையே புகுந்து.
“மாப்பிள்ளை வீட்டிலேயே வைத்து கொண்டு நாங்க வெளியில் ஏன் வெளியில் பார்க்க போறோம்..” என்று கேட்டார்..
தாரகாரமுக்கு மருமகள் யாரை சொல்கிறார் என்று புரியவில்லை.. பேத்திக்கு என்றால் தன் வீட்டில் அடுத்து திருமணத்திற்க்கு உள்ள பெண் வர்ஷா தானே.. கெளஷிக் தந்தை வர்ஷாவை பற்றி தான் கேட்கிறார் என்று நினைத்து கொண்டு தான் நல்ல இடமாக இருந்தால் சொல்லுங்க என்று.. சொல்ல நினைத்தது.. மருமகள் என்ன இப்படி சொல்றா.?” என்று அவரை பார்க்க.
கோசலை தேவியோ.. மாமனார் மகன் இருவரையும் பொதுவாக முறைத்து பார்த்து வைத்தார்.
கெளஷிக் தந்தை கோசலையின் பேச்சில் .. “அப்படியா ஆனா என் மகன் வேறு மாதிரி சொன்னது போல இருக்கே..” என்று ஒரு மாதிரி பேச்சை நிறுத்த.
வம்சி கிருஷ்ணாவின் பார்வை அவர் மீது கூர்மையுடன் படிந்து.. “என்ன சொன்னார் உங்க மகன்.. எங்க வீட்டு பெண்ணை பத்தி..?” என்று ஒரு மாதிரியான குரலில் தான் வம்சி கிருஷ்ணா கேட்டது.
வம்சி கிருஷ்ணாவின் குரல் மாற்றத்தை கவனியாது.. “என் மகன் செந்தூராவை பிடித்து இருக்கு பெண் கேளுங்க என்று சொன்ன போது நான் அவங்க வீட்டிலேயே முறை பையன் இருக்கும் போது வெளியில் பார்ப்பாங்கலா என்று தான் கேட்டேன்..
கெளஷிக் தான் செந்தூரா அம்மா லவ் மேரஜ் செய்து போனதால, வீட்டில் வைத்து வளர்க்கல. ஹாஸ்ட்டல் தான்.. அப்படி இருக்க ..
பேரனுக்கு மேரஜ் செய்ய நினைக்க மாட்டாங்க நீங்க கேளுங்க என்று சொன்னான். நானும் என் ஒயிப்பும் லவ் மேரஜ் தான்.. எனக்கு செந்தூராவை மருமகளா ஏத்துக்குறதுல எந்தவித பிரச்சனையும் இல்லை..” எனும் போதே..