கெளஷின் தந்தை அடுத்து என்ன பேசி இருப்பானோ.. “வருண்..” என்று சத்தமாக அழைத்து…
“எல்லோரிடமும் நம்ம குடும்ப விசயத்தை சொல்லிட்டு இருப்பியாடா நீ..” என்று திட்டியதில் அத்தை மகள்களிடம் கல கலத்து கொண்டு இருந்தவன் ஒன்றும் புரியாது பாவம் போல் அண்ணன் முகத்தை பார்த்தான்..
வம்சி கிருஷ்ணாவின் இந்த பேச்சில் கெளஷிக்கின் தந்தை மகனை அழைத்து சென்று விட்டார்.. போகும் போது கூட கெளஷிக் செந்தூராவை ஒராப் பார்வை பார்த்து விட்டு தன் தந்தையிடம்..
“அப்பா வருண் தாத்தா கிட்ட பேசுனிங்கலாப்பா..” என்ற மகனின் பேச்சில்..
“நீ கேள்விப்பட்டது தப்பு.. அந்த வீட்டு பெரிய பேரனுக்கு கட்ட இருக்காங்க போல..” என்று சொல்லி கொண்டு தன் மகனை அழைத்து சென்று விட்டார்..
கெளஷிக் அவன் அப்பா செல்லும் போதே உறவுகள் நட்புக்கள் தொழில் முறையில் அழைத்தவர்கள் அனைவரும் சென்று இருக்க.. இப்போது குடும்பத்து ஆள் மட்டுமே அங்கு இருந்தது..
கோசலை தேவிக்கு இனி பேசாது இருந்தால், ஒருவர் மாற்றி ஒருவர் செந்தூராவை கேட்டு வந்து கொண்டு இருப்பார்கள் என்று..
தாரகராமிடமும் சரஸ்வதி தேவியிடமும்.. “மாமா அத்தை உங்க பேத்தி கிட்ட நீங்க பேசுறிங்கலா இல்ல நான் பேசட்டுமா..? என்று நேரிடையாகவே கேட்டு விட்டார்..
சரஸ்வதி தேவி தான்.. “இங்கேயேவா வீட்டுக்கு போயிட்டு.” என்று தயங்கியவரிடம்..
“இங்கு என்ன இந்த ஹாலில் நம்ம குடும்பம் மட்டும் தானே இருக்கு.. அத்த” என்று சொல்ல.
ஒட்டலில் செட்டில் செய்து விட்டு தங்கள் குழும மேனஜரிடம் ஏதோ பேசி கொண்டு இருந்த வம்சி கிருஷ்ணா அவசரமாக தன் அன்னையின் அருகில் வந்தவன்..
“அம்மா கூல்.. எதையும் யாரையும் நிர்பந்தம் படுத்த கூடாதும்மா.. அதுவும் இந்த விசயத்தில்..” என்ற வம்சி கிருஷ்ணன் பேச்சு அன்னையிடம் இருந்தாலும் பார்வை செந்தூராவிடம் தான் இருந்தது..
செந்தூராவுக்கு கோசலை அத்தை பேச்சு முதலில் புரியவில்லை என்றாலுமே, வம்சி கிருஷ்ணாவின் பேச்சும், பார்வையும், அவளுக்கு புரிய வைத்து விட்டது..
பேச்சு எதை நோக்கி செல்கிறது என்று புரிந்தவளுக்கு, தன் பதில் என்னவாக இருந்தால் தனக்கும் தன் தம்பிக்கும் நல்லது என்று புரியாது பார்வை தன்னால் தன் தம்பியிடம் சென்றது..
சசிதேவ்வுக்கும் புரிந்து விட்டது போல் அதனால் தன் அக்காவின் பக்கம் நின்று கொண்டவன்.. அவள் கையை கெட்டியாக பிடித்து கொண்டு தைரியம் படுத்த.
அதை பார்த்த வருண் கிருஷ்ணா.. “இவன் வேற பாடி காட் போல நின்னுப்பான்..” என்று முனு முனுத்தான்..
அவன் பக்கம் நின்று கொண்டு இருந்த வர்ஷாவின் காதில் வருண் பேச்சு தெளிவாகவே விழ.. “செந்தூராவுக்கு அவன் பாதுகாப்பா நின்னா உனக்கு இடஞ்சல் போல பேசுற..” என்று அவள் ஒரு அர்த்தம் வைத்து கேட்க.
வருண் கிருஷ்ணாவோ.. வம்சிக்கு செந்தூராவோடு திருமணம் முடிந்தால் தான், வர்ஷாவை திருமணம் செய்வதை பற்றி வீட்டில் பேசலாம் என்று நினைத்து கொண்டு இருந்தவன்..
“ஆமா ஒரு சிலது இவனால் இடஞ்சல் தான்..” என்று சொல்லி விட்டான்.. அவன் பேச்சில் கோபமாக அவனை ஒரு முறைத்து விட்டு தன் அன்னையின் பக்கம் நின்று கொண்டாள்.
கோசலையோ மகன் பேச்சை கூட இன்று கேட்பதாக காணும்.. செந்தூராவை காட்டி ..
“அவள் சின்ன பெண் வம்சி.. நாம தான் சொல்லி புரிய வைக்கனும்.. இப்படி எல்லாம் அவங்க பாட்டுக்கு அமைதியா இருந்தா எப்படி..
விந்தியாவை காட்டி.. “கல்யாணம் முடிந்து ஒன்னும் காணும்.. ஒரு முறைக்கு இரு முறை அபார்ட் ஆகி விட்டது.. இன்னொன்றை அவள் உடம்பு தாங்காது..”
கோசலை சொல்லும் போதே விந்தியா அழுது விட்டாள்..
சரஸ்வதி தேவி கோசலையிடம்.. “என்ன இது நல்ல நாள் அதுவுமா இப்படி பேசுற.. “ என்று பெரியவராக கண்டித்து சொல்ல.
கோசலையோ.. “நல்ல நாளா.. இன்னைக்கு வருண் பிறந்த நாள் என்பதே மறந்து இருந்தோம் அத்தை.. முன் எல்லாம் இப்படியா அத்தை.. இப்போ ஏன் மறந்தோம்..
சொத்து இருக்கு அத்தை.. இந்த சொத்தை அடுத்த தலை முறைக்கு எடுத்து செல்ல வாரிசு வேண்டும்.. கல்யாணம் செய்த இரண்டு பேரும் வாரிசு இல்ல. உண்டாகி போயிடுது..”
வர்ஷாவை காட்டி.. “மண மேடை ஏறி கல்யாணம் தடைப்பட்டுச்சி…”
பத்மினியை காட்டி.. “நல்லா இருந்தவள் நோயாளியா தள்ளியாச்சி.. இதுக்கு மேல எதுவும் ஆகுவதுக்கு முன் ஏதாவது ஒரு முடிவு எடுப்பிங்க என்று பார்த்தா… நீங்க எடுப்பது போல தெரியல…அது தான் நான் செந்தூராவிடமே கேட்டு கொள்கிறேன்..” என்று சொல்லி விட்டு செந்தூராவிடம் செல்ல பார்த்த கோசலை தேவியிடம் தாரகராம்.
“கொஞ்சம் பொறுமையா இரும்மா.. நான் பேசுறேன் என்று தானே சொல்றேன்..” என்று சொல்லவும்..
கோசலை இப்போது தன் மாமனாரை பார்த்து..” எது வரை பொறுமையா இருக்க சொல்றிங்க மாமா.. இதோ இப்போ ஒருத்தவங்க பெண் கேட்டாங்க நாளை இன்னொருத்தவங்க வருவாங்க.. ஏன் இன்னும் கொஞ்ச நாள் போனா செந்தூராவுக்கே ஒரு பையனை பிடிக்கவும் செய்யலாம்..” என்ற பேச்சில் கிருஷ்ண மூர்த்தி
“கோசலை கொஞ்சம் யோசிச்சி பேசும்மா..” என்று மனைவியை திட்டம் செய்தார்..
ஆனால் கோசலைக்கு இன்று இரண்டில் ஒன்று தெரிந்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தது போல் தான் அவர் பேச்சு இருந்தது.
“என்ன யோசிச்சி பேச சொல்றிங்க. நீங்க எல்லோரும் என் மகன் விருப்பத்தை பத்தி யோசிச்சி பார்த்திங்கலா. .. உங்க பிசினஸை டெவலப் பண்ண என் மகன் வேண்டும்.. வீட்டில் இருப்பவங்க எல்லோருக்கும் பார்த்து பார்த்து அவ்வளவு செய்யிறான்..
ஆனா அவன் விருப்பத்தை பார்த்து செய்யனும் என்று உங்க யாருக்கும் தோனலலே..” என்று கோசலை கேட்ட கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை..
செந்தூராவுக்கோ வம்சிக்கு நான் விருப்பமா.. என்று நினைத்து அவனை பார்க்க. அவ்வளவு நேரமும் அவளை பார்த்து கொண்டு இருந்த வம்சி கிருஷ்ணா செந்தூரா பார்வை தன் பக்கம் திரும்பியதும் தன் பார்வையை அன்னையின் பக்கம் திருப்பி கொண்டவன்..
“அம்மா பொருள் இல்லைம்மா. பேரன் ஆசைப்பட்டா என்று.. வாங்கி கொடுக்க.. மத்தவங்க விருப்பத்தையும் நாம பார்த்து தான் செய்யனும்..” என்று சொல்லவும்..
வம்சி கிருஷ்ணாவின் இந்த பேச்சில் அவனை பார்த்த செந்தூராவின் விழிகள் இன்னும் விரிந்து கொண்டது..
கோசலை.. “அது தான் வம்சி நான் கேட்கிறேன். நீ அமைதியா இரு,.” என்று சொல்ல.
வம்சி மீண்டும்.. “அம்மா அவங்களுக்கு நாம தான் எல்லாம் யோசித்து செய்யனும்.. நாமலே நெருக்குவது போல இருக்க கூடாதும்மா..” என்று இன்னும் என்ன சொல்லி இருப்பானோ..
சசிதேவ். “எங்களுக்கு விருப்பம் ..” என்று பட்டென்று சொல்லி விட்டான்..
தன் அன்னையிடம் பேசி கொண்டு இருந்த வம்சி கிருஷ்ணனோடு அனைவரும் சசிதேவ்வை தான் பார்த்தனர்.. ஏன் வம்சி கிருஷ்ணாவையே விழி விரித்து பார்த்து கொண்டு இருந்த செந்தூராவுமே. தன் தம்பியை அதிர்ச்சியுடன் பார்த்தாள்..
வம்சி தான்.. “இது எல்லாம் நீ மட்டும் முடிவு செய்யும் விசயம் இல்ல தேவ்.. அதோடு நீ சின்ன பையன்.. பெரிய விசயம் எல்லாம் உன்னால முடிவு எடுக்க முடியாது.” என்றதும்.
கோசலை.. “அது எல்லாம் பெரிய பையன் தான்.. அக்காவின் நல்லதுக்கு ஒரு முடிவு எடுக்கும் உரிமை அவனுக்கும் இருக்கு.. உன் கூட பழகுறான் தானே.. உனக்கு அக்காவை கல்யாணம் செய்து வைத்தால் தன் அக்கா நல்லா இருப்பான் என்று தெரிந்து இருக்கும்..
அது தான் அவன் விருப்பத்தை சொல்லி விட்டான்..” என்று கோசலை சட்டென்று சொல்லி விட்டார்.. கோசலை எதை நினைத்து அப்படி சொன்னாரோ.. ஆனால் சசிதேவ் தன் அக்காவை வம்சி கிருஷ்ணாவுக்கு திருமணம் செய்து கைக்க ஒப்புக் கொண்டதற்க்கு அது தான் காரணம்..
அன்னையின் பேச்சில் வம்சி கிருஷ்ணா செந்தூராவை பார்க்க.. இப்போது அவளின் பார்வை அவனிடம் இல்லாது தரையை பார்த்து குனிந்து இருக்க..வம்சி கிருஷ்ணாவுக்கு செந்தூரா என்ன நினைக்கிறாள் என்று புரியவில்லை..
.தாரகராம் தான்.. “கோசலை சின்ன பெண் கோசலை.. நான் தான் நிதானமா பேசுறேன் என்று சொன்னேன் தானே..” எனும் போதே தலையை குனிந்து நின்று கொண்டு இருந்த செந்தூராவிடம் இருந்து ஒரு கேவல் வர..
வம்சி கிருஷ்ணா கோபத்துடன் தன் அம்மா சொல்லும் வார்த்தையான..
“என்னை பிடிக்காது அழுபவளை கட்டாயப்படுத்தி என்னை கல்யாணம் செய்யும் நிலையில் நான் இல்லை அம்மா.” என்றதும்..
செந்தூரா உடனே.. “கட்டாயம் அப்படி எல்லாம் இல்ல..” என்று அவசரமாக சொன்னவள்..
“இல்ல நீங்க சொன்னது போல மேரஜ் ரொம்ப பெரிய விசயம்.. இதை பத்தி டிஸ்கஸ் செய்ய அப்பா அம்மா இல்ல.. அவங்க இருந்தா எனக்கு நல்லது எது என்று அவங்கலே எல்லாம் யோசித்து செய்து விடுவாங்க…” சொன்னவளின் பேச்சில் அழுகை கூட..
செந்தூராவின் இரு பக்கமும் அவளின் தாத்தா பாட்டி போய் நின்று கொண்டு..
“என்ன பேச்சு இது.. உங்க இரண்டு பேரையும் ஹாஸ்ட்டலில் சேர்த்ததினால் உங்க மீது பாசம் இல்லை என்று நினச்சிட்டிங்கலா…
ஒரு சிலது வெளியில் சொல்ல முடியல செந்தூரா.. பத்மினியை காட்டி..
இவளுக்கும் உன் அம்மாவுக்கும் ஒரே வீட்டில் தான் கொடுக்க நினைத்தோம்.. ஆனா அது இல்லாது என்ன என்னவோ ஆகிடுச்சி..
தப்பு யார் மேல எல்லாம் நான் சொல்ல வரல. ஏன் எங்க மீதே கூட இருக்கட்டும். ஆனா அதனால பாதிக்கப்பட்டது பத்து தான்..
கல்யாணம் தள்ளி. பின் நடந்தும்.. வாழ்க்கை சரியில்லாது மொத்தமா அவள் வாழ்க்கையை இழந்துட்டு ஒருத்தி என் வீட்டிற்க்கு பொண்ணோட வந்து நின்னுட்டா.. இன்னொருத்தி மொத்தமா புருஷ்னோடு போய் சேர்ந்துட்டு அவங்க இரண்டு பிள்ளைங்க என் கிட்ட.. இரண்டும் ஒரே சமயம்..
நான் யாருக்கு பார்ப்பேன்.. பத்து என்னை பார்த்து கேட்குறா.. உங்க பேச்சை மதித்து நீங்க கை காட்டிய இடத்தில் கழுத்தை நீட்டியா நானும்..
உங்களை மீறி போய் கல்யாணம் செய்து கொண்டு நம்ம குடும்பத்தை போலீஸ் ஸ்டேஷன் வரை நிற்க வைத்த அவளும் ஒன்னா என்று.
அன்னைக்கு நான் அவள் சொன்னது நியாயம் என்று பட்டுச்சி.. அதான் அவள் பக்கம் நின்னு உங்களை ஹாஸ்ட்டலில் போட்டேன்.. ஆனா என்னைக்கும் உங்களை விடனும் என்று நினைக்கல.. அப்படி நினைத்து இருந்தால், உங்க அம்மாவுக்கு சேர வேண்டிய பங்கை சரி சமமா உன் பெயரிலும், உன் தம்பி பெயரிலும் உயில் எழுதி வைத்து இருக்க மாட்டேன்..” என்று சொன்னவரின் பேச்சில் செந்தூரா சிலையாக நின்றவள்..
பின்.. “நான் வம்சி அத்தானை மேரஜ் செய்து கொள்கிறேன்..” என்று தன் சம்மதத்தை கூறி விட்டாள்..
செந்தூராவின் அந்த பதிலில் அனைவரும் மகிழ.. வம்சி கிருஷ்ணா தான்.. “எல்லோரும் கார்னர் பண்றாங்க எல்லாம் ஒத்து கொள்ள வேண்டாம்.. நிதானமா யோசி..” என்று சொல்ல. கிருஷ்ண மூர்த்தியும் அதையே தான் சொன்னார்..
ஆனால் செந்தூரா “எனக்கு சம்மதம் தான்..” என்று அதையே திரும்ப சொல்ல.. ஒரு வழியாக வம்சி கிருஷ்ணா செந்தூராவின் திருமணம் வருண் கிருஷ்ணா பிறந்த நாள் அன்று ஒரு முடிவுக்கு வந்தன..
செந்தூரா இரண்டாவது முறையும் தன் சம்மதத்தை சொல்லும் போது வம்சி கிருஷ்ணா அவளையே பார்க்க.. ஆனால் அவளோ தன் தம்பியின் முகத்தை பார்த்த வாறே தான் தன் சம்மதம் சொன்னாள்..
பின் வீடு வரும் வழி முழுவதுமே யாரும் பேசாது அமைதியில் சென்றது.. மனதில் ஆயிரம் பேசி கொண்டனர். ஆனால் வெளியில் அமைதியாக இருந்தனர்..
ஆனால் ஒன்று சொல்ல வேண்டும்.. அனைவரின் மனதிலுமே ஒரு பெருத்த நிம்மதி இருந்தது என்பது உண்மை..
கோசலை தன் மகனுக்கு செந்தூராவுடன் திருமணம் விரைவில் முடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் அடுத்த நாளே வீட்டின் பெரியவர்களை அழைத்து கொண்டு அதே ஜோதிடரிடம் சென்று,, நிச்சயம் எல்லாம் வேண்டாம் ஒன்னுக்குள் ஒன்றாக தானே முடித்து கொள்கிறோம். அதனால் கல்யாணத்திற்க்கு நல்ல நாள் குறித்து கொடுக்க சொல்ல..
அவருமே ஒரு நல்ல நாள் குறித்து கொடுத்தவர்.. இனி எல்லாம் சுபமே என்று ஆசியும் கொடுத்தார்…
சென்னையில் இருக்கும் மிக பெரிய திருமண மண்டபம் புக் செய்யப்பட்டது. உணவு.. இந்தியாவில் பிரபலங்களின் திருமணத்திற்க்கு சமைத்தவரை புக் செய்தனர்.. அதே போல் தான் இசை.. ஆடல் மெகந்தி…
எப்போதுமே அவர்கள் குடும்பத்திற்க்கு விழா என்றால் பிரபல காஸ்ட்யூம் டிசைனர் தயாரிப்பின் உடையை தான் உடுத்துவர்.. ஆனால் செந்தூரா அப்படி இல்லையே.. அவள் திருமணத்திற்க்கு ஹாலிவுட் ஷீரோயினுக்கு உடை வடிவமைத்து கொடுப்பவர்கள் வர வழைக்கப்பட்டு அவள் திருமணத்திற்க்கு உண்டான உடை வடிவமைக்கப்பட்டது..