அதே போல் நகைகள் என்று அனைத்திலுமே கிருஷ்ணா குடும்பத்தினர்கள் முதல் தரமானதை தான் தேர்வு செய்தனர்.. திருமணத்திற்க்கு அழைப்பிதழ் அடித்த அந்த டிசைனே அப்படி இருந்தது.. அதுவும் மந்திரி.. தொழில் அதிபர்கள் என்று சென்னையில் மட்டும் அல்லாது இந்தியாவில் இருக்கும் விஐபிக்களுக்கு அனைவருக்கும் பத்திரிக்கை கொடுத்து விட்டனர்.
வம்சி கிருஷ்ணாவின் முகத்திலும் மாப்பிள்ளைக்கு உண்டான கலை வந்து விட்டது.. அதுவும் வீட்டில் இருந்தால், தன்னை பார்த்தால் மரியாதையாக பேசும் வர்ஷா வருண் விந்தியா..
“மாப்பிள்ளைக்கு வெட்கமா..?” என்று தான் பேசி கொண்டு இருக்கும் போது அந்த இடத்திற்க்கு செந்தூரா வந்து விட்டால், தான் அமைதியாகி விட்டால் போதும் பேசி கலாய்த்து விடுகிறார்கள்..
அதுவும் வருணிடம் உன் திருமணத்திற்க்கு வருவேன் என்று சொல்லி விட்டு சென்ற ஸ்வேதாவும் தன் அன்னையோடு இந்தியா வந்து விட்டாள்.. தன் வெளி நாட்டு கணவன் சாம்முடன்..
ஸ்வேதா எப்போதுமே கலாட்டா பேர் வழி தான்.. இப்போது தன்னை வைத்து செய்வதில் அவளுக்கு என்ன மகிழ்ச்சியோ..
“அத்தான் செந்தூராவிடமாவது சிரிப்பிங்கலா இல்ல முறைப்பிங்கலா.? என்று கேட்டதற்க்கு வருண்..
“நீ வேற ஸ்வேதா எப்போதும் அண்ணன் நம்மிடம் தான் இந்த திட்டல்… அதட்டல்.. மிரட்டல் எல்லாம். செந்தூராவை எப்போதுமே திட்ட மாட்டார்.. நீங்க கவனித்து இருக்கிங்கலா.” என்று கிண்டல் பேச.
வேலை முடிந்து அப்போது தான் வீடு வந்த செந்தூராவின் கையை பிடித்து தங்களுக்கு இடையில் அமர வைத்து கொண்ட வருண்..
“செந்தூரா நீயே சொல்.. உன் வம்சி அத்தான் உன்னை திட்டி இருக்கறா.. ஆனா எங்களை எல்லாம் என்ன மிரட்டுவார் தெரியுமா…” என்று தங்களின் பேச்சில் அவளை இழுத்து கொள்ள..
செந்தூராவுக்கு தான் என்ன சொல்வது என்று தர்மசங்கடமாக போய் விட்டது.. அதுவும் எதிரில் வம்சி கிருஷ்ணா வேறு.. தன்னையே பார்த்த வாறு இருக்க.. தொண்டை காய்ந்து போய் விட்டது போல ஒரு அவஸ்த்தை..
“வருண் அவளை விடு. இப்போ தான் ஆபிசில் இருந்து வந்து இருக்கா பிரஷ் ஆகட்டும்..” என்று . அவளுக்கு அவஸ்த்தையை கொடுத்த வம்சி கிருஷ்ணாவே தான் அவளை காப்பாற்றவும் செய்தான்..
அதற்க்கும் அவர்கள் ஒன்று கூடி.. “ஒ..ஒ” என்று ஒரு சத்தம்…
செந்தூரா அங்கு இருந்து ஒட பார்த்தவளை வருண் மீண்டும் கை பிடித்து.. “ஏய் செந்தூரா.” எனும் போதே வம்சி கிருஷ்ணா.
“அவள் கையை விடு.” எனும் போது அவனின் குரலில் முன்பு இருந்த அந்த இலகு தன்மை மறைந்து இருந்தது.
“அது என்ன ஏய் செந்தூரா என்று.. அண்ணி என்று கூப்பிட்டு. பழகு.” என்று சொல்லி விட்டு செந்தூராவிடம் நீ போ என்பது போல் சைகை காட்டியவன் அவனும் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்..
வருண் கிருஷ்ணா தான்.. “எனக்கும் செந்தூரா அத்தை பெண் தான்.. இந்த ஜோதிடம் விசயத்தில் இவர் மேரஜ் செய்து கொண்டால் எனக்கு உரிமை இல்லையா…?” என்று வருண் கிருஷ்ணா பாவம் எப்போதும் போல விளையாட்டு பேச்சாக தான் அவன் கூறியது.. ஆனால் அது இரண்டு நபரின் மனதில் அந்த வார்த்தை ஆழமாக பதிந்து விட்டது என்று தெரியாது போகும் போக்கில் அந்த வார்த்தையை உதிர்த்து விட்டு சென்று விட்டான்..
வருண் கிருஷ்ணாவின் வார்த்தையில் அப்போ இவனுக்கு செந்தூரா என்றால் விருப்பமா..? என்று வர்ஷா யோசித்தாள் என்றால், செந்தூரா.
வம்சி இந்த ஜோதிடத்தினால் தான் தன்னை திருமணம் செய்து கொள்கிறானா. அப்போ அன்னைக்கு விருப்பம் போல கோசலை அத்தை பேசிட்டு இருந்தாங்களே.. என்று யோசித்தவளுக்கு, வம்சி கிருஷ்ணா அது போல் சொன்னது போல் நியாபகத்தில் வராத போது.. தன்னை வம்சி கிருஷ்ணா ஜாதகத்திற்க்கு மட்டுமே தான் தன்னை திருமணம் செய்து கொள்கிறான்..
கோசலை அத்தை சொல்வது போல்.. அவனுக்கு பெண் கொடுக்க நிறைய பேர் காத்து கொண்டு இருக்க என்னை ஏன் திருமணம் செய்ய போகிறான் என்று அவளாகவே ஒரு அர்த்தம் கற்பித்து கொண்டாள்.
ஒரு நாள் செந்தூராவின் முகம் ஒரு மாதிரி இருப்பதை பார்த்து சசிதேவ்.. “அக்கா நீங்க எனக்காக தான் இந்த மேரஜிக்கு சம்மதிச்சிங்கலா. உங்களுக்கு வம்சி அத்தானை பிடிக்கவில்லையா…?”
இந்த திருமணத்தில் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்க… திருமணம் செய்து கொள்ள இருக்கும் தன் அக்காவின் முகத்தில் அந்த மகிழ்ச்சி இல்லையே என்று சந்தேகத்திடல் கேட்டான்..
செந்தூரா உடனே பதறி போய்.. “தேவ் அப்படி எல்லாம் இல்ல.. நீயே ஏதாவது சொல்லாதே.. இப்போ தான் இந்த பேமிலி கொஞ்சம் ஹாப்பியா இருக்கு.” என்றாள்.. உண்மையில் அந்த வார்த்தையை அவள் மனது உகர்ந்து தான் சொன்னது..
முன்னும் இந்த வீட்டிற்க்கு விருந்தாளி போல் வந்து சென்று இருக்கிறாள் தானே… அப்போது எல்லாம் இந்த வீடு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று அவள் பார்த்து இருக்கிறாள் தானே.. ஆனால் இப்போது எல்லாம் இந்த வீடு கலை இழந்தது போல் இருப்பதை அவளும் பார்க்கிறாள் தானே.. அதோடு இந்த வீட்டில் நடந்த அடுத்த அடுத்த நிகழ்வும்.. சரி ஜோதிடம் பொய்யோ உண்மையோ… நல்லது நடந்தால் நல்லது தானே என்பது தான் அவள் எண்ணம்..
செந்தூராவின் இந்த பேச்சுக்கு. “அப்போ ஏன் கா. ஒரு மாதிரியா இருக்கிங்க. இப்போ எல்லாம் என் கிட்ட கூட மனசு விட்டு பேச மாட்டேங்குறிங்க.. அன்னைக்கு நான் வம்சி அத்தானுக்கு உங்களை மேரஜ் செய்ய சம்மதம் சொல்ல காரணம்..
நிஜமா வம்சி அத்தான்.. நல்லவர் அக்கா.. அவர் எல்லோரைம் ரொம்ப கேர் பண்றார். அவர் கிட்ட பேமிலி அட்டாஜ்மெண்ட் இருக்கு… நீ அவரை மேரஜ் செய்தா உன்னை அவர் ரொம்ப கேர் பண்ணுவார் அக்கா நமக்கு அந்த கேர் கிடைக்காது தானே சின்ன வயசில் இருந்து வளர்ந்தோம்.. அது உனக்கு கிடைக்கும் எனும் போது. அது தான் கா ஒகே சொன்னேன்..
அதோடு உங்களுக்கு மேரஜிக்கு வெளியில் பார்ப்பது என்றால் யார் பார்ப்பது..? எனக்கு இன்னும் உலகம் சரியா தெரியல என்று அந்த ஒரு நிகழ்வே எனக்கு உணர்த்திடுச்சி கா… வெளியில் கொடுத்து ஏதாவது பிரச்சனை ஆகிடுச்சினா..” என்று சொல்லி கொண்டு வந்த சசிதேவ்.. அக்காவின் கையை கெட்டியாக பிடித்து கொண்டவன்..
“வம்சி அத்தான் உங்களை நல்லா பார்த்துப்பார் என்று எனக்கு தோனுச்சிக்கா.” என்று சசிதேவ் இந்த திருமணத்திற்க்கு அவன் சம்மதம் சொன்ன காரணத்தை அடுக்க.
தம்பி எப்படி எல்லாம் யோசித்து இருக்கான்.. இவனுக்காவது என் கல்யாணம் வாழ்க்கை நல்ல மாதிரி இருக்கனும் என்று நினைத்து கொண்டவள்..
வம்சி கிருஷ்ணா இந்த ஜோதிடத்திற்க்காக தான் தன்னை திருமணம் செய்ய சம்மதித்து இருக்கிறான் என்றாலும், இப்போ என்ன..? எல்லோரும் விரும்பியா கல்யாணம் செய்து கொள்கிறாங்க. பெரியவங்க பார்த்து கல்யாணம் செய்து அதன் பின் வாழ்றவங்க வாழ்க்கை எல்லாம் நல்ல மாதிரி தானே போயிட்டு இருக்கு என்று அவள் மனதிற்க்கு அவள் சமாதானம் செய்து கொண்டாலுமே, ஏதோ ஒரு நினைவில் அவள் முகம் கசங்கி விட்டது..
இவளின் முகத்தையே கவனித்து கொண்டு இருந்த சசிதேவ் அக்காவின் முக கசங்களை பார்த்து விட..
“என்னக்கா என்ன பிரச்சனை..? எது என்றாலும் சொல்லுக்கா..” என்று கேட்டவனிடம்..
“எனக்கு பயமா இருக்கு தேவ்..” என்று விட்டாள்..
இப்போது சசிதேவ் முகத்தில் குழப்பம்.. “பயமா..? எதுக்குக்கா..?” என்று கேட்டவனிடம்..
வம்சி கிருஷ்ணாவுடன் தன் திருமணம் முடிவானதில் இருந்து தன் மனதில் இருக்கும் பயத்தை வெளியிட தொடங்கினாள்..
“இங்க எல்லாம் பூஜை எல்லாம் ரொம்ப செய்வாங்க. அதே போல ஒரு சின்ன பண்டிகை கூட எல்லோரையும் கூப்பிட்டு வைத்து தான் கொண்டாடுவாங்க…
மூன்று அத்தைங்க விரதம் இருப்பாங்க. சில சமயம் வர்ஷா அவங்க கூட நான் சாப்பிடல இன்னைக்கு நான் விரதம் என்று சொல்லி இருக்காங்க. நிறைய பூஜ புனஸ்காரம் எல்லாம் இங்கு செய்வாங்க.. சின்ன வயசுல இருந்தே ஹாஸ்ட்டலில் வளர்ந்த எனக்கு அதை பத்தி ஒன்னும் தெரியாது.. இதை எல்லாம் எப்படி சமாளிக்க போறோம் என்று தான் பயமா இருக்கு தேவ். எனக்கு எல்லோரிடமும் கலந்து பேச கூர தெரியல.” என்று தன் மனதில் பயத்தை கூறினாள்..