திருமணத்திற்க்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்தன… செந்தூராவுக்கு திருமணத்திற்க்கு உண்டான ஆடை அணிகலன்கள் அனைத்தும் வந்து விட்டது.. அடுத்து அழகுகலை நிபுணர்.. முன்பே விந்தியாவின் திருமணத்திற்க்கு ஏற்பாடு செய்தவரையே செந்தூராவுக்கும் ஏற்பாடு செய்தாகி விட்டது..
திருமணத்திற்க்கு ஒரு மாதமாகவே அந்த ப்யூட்டிஷேன் வீட்டிற்க்கே வந்து செந்தூராவின் முகத்திற்க்கு என்ன செய்ய வேண்டுமோ அனைத்தும் செய்து முடித்து விட்டனர்..
இப்போது திருமணத்தின் போது செய்ய போகும் அலங்காரத்தை செய்து பார்க்க.. அதாவது ட்ரையல் செந்தூராவை உட்கார வைத்து இருக்கும் முக பூச்சை எல்லாம் அவள் முகத்தில் பூசி என்று அவளை ஒரு வழி செய்து விட்டனர்.
பாவம் அவளுக்கு தான் ஒன்றும் பிடிக்கவில்லை.. அவள் தன்னை கண்ணாடியில் பார்த்த போது கண்ணாடியில் தெரிந்த பிம்பம் யாரோ போல் அவளுக்கு தெரிந்தது..
இது போல் மேக்கப்பில் ஆர்வம் இருக்கும் பெண்ணுக்கு செய்து இருந்தால், விரும்பி இருக்க கூடும்.. ஏன் என்றால் அந்த அழகுகலை நிபுணர்கள் சாதாரணமானவர்கள் கிடையாது..அவர்களிடம் அப்பாயிட்மெண்ட் கிடைப்பதே அறிது.. செந்தூராவின் ஸ்க்கீன்னுக்கும் நிறத்திற்க்கும் ஏற்றது போல் தான் மேக்கப் செய்தனர். இருந்தும் செந்தூராவுக்கு பிடிக்கவில்லை..
அவளுக்கு அவளின் நிறமே மறைந்து விட்டது போல் இருந்தது.. அவளின் அந்த நீல நிறகண்களுக்கு சும்மா அதை சுற்றி மைய்யிட்டாலே அவ்வளவு அழகாக இருக்கும்.. ஆனால் இப்போது ஐலைனர் மஸ்க்காரா என்று ஏகப்பட்டது தீட்டி தன் கண்ணா இது என்று சந்தேகம் படும் படி மாற்றி விட்டு இருந்தனர்.. அதே போல் தான் அவளின் அந்த ஸ்கீன் சாதாரணமாகவே ஷைனிங்காக இருக்கும்..அதை அந்த அழகுகலை நிபுணர்களும் சொன்னார்கள் தான்.
“உங்களுடைய ஸ்கீன் எல்லோருக்கும் இருப்பது போல் இல்லை.. ரேர் என்று.. அந்த உடை நகை என்று அனைத்தையும் போட்டு வீட்டில் இருப்பவர்கள் அனைவரின் முன்னும் நிற்க வைக்கப்பட்டாள்..
அதுவே அவளுக்கு பிடிக்கவில்லை.. ஏதோ கொலு பொம்மையை அனைவரும் பார்ப்பது போல் தன்னை பார்ப்பது..
தனக்கு தான் பிடிக்கவில்லையே தவிர. மற்ற அனைவருக்கும் பிடித்து விட்டது போல..
பத்மினியே. “உன் ஸ்க்கீன்னுக்கு இந்த மேக்கப் நல்லா இருக்கு..” என்று விட்டார். என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
கோசலையும்.”மேரஜூக்கு இதுவே செய்து விடுங்க. அன்று மாலை வர வேற்ப்புக்கு செய்யும் அலங்காரத்தை நாளை வந்து செய்து காமிங்க..” என்றதும்.. என்னது நாளையுமா..? அவள் உள்மனது அலறியது.. தன்னையே பார்த்து கொண்டு இருந்த வம்சிக்கு கேட்டு விட்டது போல்..
செந்தூரா அருகில் வந்து நின்ற வம்சி.. அந்த அழகுகலை நிபுணரிடம்..
தன் கண்ணுக்கு கீழ் அவன் ஆட் காட்டி விரலை வைத்து..
“இது எல்லாம் வேண்டாம்.. ஜஸ்ட் ஐலைனர் மட்டும் போதும்.. அதுவும் லைட்டா போதும். ஏன்னா இந்த ப்ளூ ஐ தான் பிரைட்டா தெரியனும்.. என்றவன் பின் மேக்கப் கூட இந்த அளவுக்கு எவியா வேண்டாம்.. ஏன்னா இவளுடைய நேச்சுரல் ஸ்கீன்னே நல்லா இருக்கும்.. கன்னத்தில் இந்த அளவுக்கு ரூஜ் தடவ தேவையில்லை.. லிப்ஸ்ட்டிக் இந்த அளவுக்கு வேண்டாம் லைட்டா போட்டா போதும்..” என்று அவனின் அந்த விரல்கள் சொன்ன பாகத்தில் எல்லாம் பயணம் செய்ய.
மேக்கப் செய்யும் போது கழுத்திற்க்கும் என்னவோ தடவி விட்டார்கள்.. அடுத்து என்ன என்று தன் அருகில் நின்று கொண்டு இருந்தவனை அவள் விழி விரித்து பார்க்கும் போது அவனின் விழிகளும் அவள் விழிகளை தான் பார்த்து கொண்டு இருந்தது. செந்தூராவையே சிறிது நேரம் பார்த்தவன்..
“நான் சொன்னது எல்லாம் நோட் செய்துக்கோங்க.மேரஜ் மேக்கப் அப்படியே செய்துடுங்க. நாளைக்கு ட்ரையல் எல்லாம் வேண்டாம்.. ரிசப்ஷனுக்கு அந்த ட்ரஸ்க்கு ஏத்தது போல் மேக்கப் போட்டுடுங்க.. ஆனால் எவியா இல்லாம லைட்டா.” என்று சொன்னவன் அப்போது தான் ஆபிசில் இருந்து வந்ததால் டையை கழட்டி விட்டு கொண்டே மின் தூக்கியை நோக்கி சென்று மறைந்தான்.. செந்தூராவுக்கோ.. அவன் தன்னை பார்த்து சிரித்தானா..? என்று மிக பெரிய கேள்வி அவள் மனதில் எழுந்தது..
இதழ் விரிக்கவில்லை.. ஆனால் கண் தன்னை பார்த்து சிரித்தது போல் ஒரு தோற்றம் .பின் இந்த ஆராய்ச்சி வேண்டாம் என்று தன் அறைக்கு சென்று விட்டாள்..
அங்கு இருந்த அனைவருக்கும் வம்சி கிருஷ்ணாவின் செயலில் தான் பே என்று அவன் போகும் வரை பார்த்து இருந்தனர்.. கோசலைக்கு தான் சொன்னது போல் மேக்கப் இல்லை என்றாலும், மனதில் அப்படி ஒரு சந்தோஷம் மகனின் செயல்களில்… எப்போதும் பிசினஸ் பிசினஸ் என்று அதன் பின் ஒடிக் கொண்டு இருப்பவன்.. இனியாவது அவன் வயதிற்க்கு ஏற்றது போல் வாழட்டும் என்று..
நாளை திருமணத்திற்க்கு முன் செய்யும் பூஜைக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார். வேலையாட்கள் அத்தனை பேர் இருந்தாலும், கூட இருந்து வேலை வாங்கினால் தான் வேலைகள் முடியும்..
அதை தவிர வீட்டு பெண்கள் மட்டும் செய்யும் ஒரு சில வேலைகளும் இருக்கிறது.. அந்த வீட்டில் பூஜை அறைக்குள் வேலையாட்கள் நுழைய அனுமதி இல்லை.. பூஜை வீட்டு பெண்கள் குறிப்பாக அந்த வீட்டு மருமகள்கள் தான் செய்ய வேண்டும்..
அதோடு நாளை சுமங்கலி பூஜை அதற்க்கு தாம்பலத்திற்க்கு ஜாக்கெட்.. ஒரு பரிசு பொருளோடு மங்கல பொருட்களையும் வைக்க வேண்டும்.. அதை ஏற்பாடு செய்ய கோசலை தன் ஒரவத்திகளோடு சென்று விட்டார்..
மீதம் இருந்த அந்த வீட்டின் இளைய தலை முறை ஸ்வேதா வருண் வர்ஷா தான்.. வம்சி கிருஷ்ணாவின் இந்த புது அவதாரத்தை வாய் பிளந்து பார்த்து கொண்டு இருந்தவள் அவன் சென்றதும்.. ஸ்வேதா வருணிடம்..
“வம்சி அத்தான் செய்யிறது எல்லாம் பார்த்தால் எனக்கு சந்தேகமா இருக்கு..” என்று சொன்னதற்க்கு.
வருண் . “என்ன சந்தேகமா இருக்கு..?” என்று ஆர்வமாக ஸ்வேதா அருகில் போய் வர்ஷாவை இடிப்பது போல் நின்று கொண்டான்..
வர்ஷா வருணின் இந்த இடித்தலை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.. அவளுமே ஆர்வமுடன் ஸ்வேதா கூற போவதை கவனித்தாள்..
“இந்த ஜாதகம் இது எல்லாம் நம்ம அத்தான் ஏற்பாடா இருக்குமோ என்று..?” என்று தன் ஒற்றை விரலை மோவாயில் வைத்து கொண்டு யோசிப்பது போல் பாவனை செய்தவளின் அந்த விரலை எடுத்து விட்ட வருண் ..
“எதை வைத்து இப்படி சொல்ற..?” என்று கேட்டான்..
“பின் என்னடா.. லவ் பண்ணி மேரஜ் செய்து கொண்ட என் சாம் கூட என்னை அப்படி பார்த்தது கிடையாது டா. அதுவும் இது கம்மி பண்ணு அது கம்மி பண்ணு என்று அத்தான் பார்வை செந்தூரா மீது அதிகம் படுத்தி கொண்டதை பார்த்த போது. ஒரு எவி ரொமான்டில் ப்லீம் பார்த்தது போல் எனக்கு இருந்துச்சி..” என்ற ஸ்வேதாவின் பேச்சில் வருண் .
“சீ அப்படி எல்லாம் இருக்காது…அந்த ஜோசியக்காரன் மட்டுமா சொன்னாரு.. இன்னொரு இரண்டு பேரு கிட்ட பெரியம்மா பார்த்தாங்கலே.” என்று ஸ்வேதாவின் விளையாட்டு பேச்சுக்கு சீரியஸாக பதில் சொல்ல. ஸ்வேதா சிரித்து விட்டாள்..
“வருண் நீ சின்ன பையன் உனக்கு இது புரியாது..” என்றதும் வர்ஷா..
“யாரு இவன் சின்ன பையன் நீ நம்பிட்டு இரு..” என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு போக பார்த்த வர்ஷாவின் கை பிடித்து நிறுத்திய வருண்..
“அப்போ உன் கண்ணுக்கு நான் சின்ன பையனா தெரியல…?” என்று கேட்டதற்க்கு வர்ஷா. செந்தூராவை வருண் விரும்புகிறானோ என்ற சந்தேகம் மனதில் இருந்ததால்..
தலையை ஆட்டி. “இல்லவே இல்ல..” என்று விட..
“யாரு என்னை சின்ன பையனா பார்த்தாலும்.. உன் கண்ணுக்கு நான் பெரியவனா தெரிந்தால் போதும் வர்ஷா..” என்று சொன்னவனுக்கு வர்ஷா.
அதே செந்தூராவை மனதில் வைத்து கொண்டு..” யாருக்கும் தெரியாத விசயம் எனக்கு மட்டும் தானே புரியுது.. அதனால உன்னை எந்த நாளும் சின்ன பையன் என்று சொல்ல மாட்டேன்..” என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல.
“அப்படியா..?” என்று கிண்டலாக போல கேட்ட வருண் கிருஷ்ணா..
“அப்போ நீ எப்போதும் அப்படி பார்க்க மாட்டேன்னா எனக்கு பிராமிஸ் பண்ணு.” என்று தன் கையை அவள் முன் நீட்டி கேட்டான்..
வர்ஷா சிறிதும் யோசிக்காது வருண் கை மீது தன் கை வைத்து மாட்டேன் என்று சொல்லி விட்டு சென்று விட.
இதை எல்லாம் வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்த ஸ்வேதா.. “என்னடா நடக்குது இங்கு..” என்று கேட்டவளின் திறந்து இருந்த வாயை மூடியவன்..
“சின்ன பெண்ணுக்கு எல்லாம் தெரியாது..” என்று சொன்னவனின் பேச்சை ஸ்வேதா ஏற்று கொண்டு விட்டாள்..
“ஆமாடா ஆமாம்.. லவ் மேரஜ் செய்து கொண்டும் .. அதுவும் வெளிநாட்டில் இருந்தும் நான் இந்த விசயத்தில் சின்ன பெண் தான் வருண்.. சின்ன பெண் தான்..
நான் பார்த்தது எல்லாம் பிடித்தால் உடனே சொல்லி விடுவோம்.. பின் அடுத்த ஸ்டெப்.. லிப் லாக்.. ஏன் மேரஜூக்கு முன்னவே கூட ரிலேஷனில் இருப்பாங்க.. ஒரு இடத்தில் பிடிக்கல என்று இரண்டு பேரில் ஒருத்தவங்களுக்கு பட்டாலும்.. ஜென்யூனா இன்னொருத்தர் விலகிடுவாங்க. இங்கு போல கண்ணால் இது போல எல்லாம் லவ் இல்லேடா வருண்.. ஆனாலும் இதுவும் ஒரு விதமா நல்லாதான் இருக்கு வருண்..” என்று சிலாகித்து கூற.
“டூ லேட்..உனக்கு மேரஜ் முடிஞ்சுடுச்சி இனி ஒன்னும் பண்ண முடியாது.” என்று ஸ்வேதாவிடம் கூற.
வருண் கையை பற்றி கொண்ட ஸ்வேதா.. “வருண் இப்படியே கொஞ்சம் கொஞ்சமா வர்ஷா கிட்ட உன் லவ்வை சொல்லி விடு டா. சித்தி வர்ஷாவோட சின்ன பெண் செந்தூராவுக்கு கல்யாணம் முடியுது.. என் பெண்ணுக்கும் சீக்கிரம் பாருங்க என்று பெரிய மாமா கிட்ட சொல்லிட்டு இருக்காங்க..
இந்த முறை நீ முந்தினா உனக்கு வர்ஷா.. ஏன்னா ஒவ்வொரு முறையும் லக் ஒர்க்கவுட் ஆகாது பார்த்துக்கோ..” என்று சொல்லி விட்டாள்..
கோசலை அடுத்த நாளுக்கு உண்டான சுமங்கலி பூஜைக்கு உண்டான ஏற்பாட்டை எல்லாம் கவனித்து விட்டு தூங்கவே நேரம் கடந்து விட்டது..
மறுநாளும் சீக்கிரமே எழுந்து விட்டார்…காரணம் சுமங்கலி பூஜைக்கு அழைத்த பெண்மணிகள் எல்லாம் சாதாரணமானவர்கள் கிடையாது..கலெக்டர் மனைவி மந்திரி.. மற்றும் தொழில் அதிபர்களின் மனைவிமார்கள்.. அதனால் எதிலும் ஒரு குறையும் வந்து விட கூடாது என்று உணவு மேற்பார்வை ஆகட்டும் .. நேற்று செய்ய முடியாது இன்று செய்ய வேண்டிய ஒரு சில பூஜை வேலைகள் முடித்து விட்டு விருந்தினர்கள் வருவதற்க்குள் அவருமே தன் அறைக்கு சென்று தயாராகி மீண்டும் பூஜை செய்யும் இடத்திற்க்கு வந்து சேர்ந்த போது மிகவும் கலைத்து விட்டார்..
வீட்டில் பூஜை என்றாலே அந்த வீட்டு பெண்கள் விரதம் இருப்பார்கள்.. அதுவும் சுமங்கலி பூஜை என்றால் கேட்கவே வேண்டாம் .. பல்லில் பச்சை தண்ணீர் கூட படாது.. இவர் மட்டும் இல்லை. மற்ற மருமகள்களும் அப்படியே. இந்த சமயத்தில் இந்த அதிகப்படி வேலையில் கலைத்து போய் விட்டார்.
செந்தூராவிடம் முன் இரவே சொல்லி விட்டார். “நாளை விரதம் இருக்கனும்.. சுமங்கலி பூஜை.. கல்யாணத்திற்க்காக செய்யும் பூஜை நீ தான் கண்டிப்பாக இருக்க வேண்டும் .. காலையில் தலைக்கு குளித்து விடு.. பட்டு உடுத்தி கொள்..” என்று சொல்லி விட்டார்..
வேலைகள் அனைத்தும் செய்து முடித்து விட்டார். இன்னும் செந்தூரா கீழே இறங்கி வர காணும்.. வேலைக்கு இடையில் கோசலையின் கண் மேலே பார்த்து கொண்டே தான் அனைத்தும் செய்து முடித்தார்.
கோசலையின் ஒரவத்தி பல்லவி சாந்தி கூட.. “ என்னக்கா செந்தூரா கிட்ட எல்லாம் சொல்லிட்டிங்க தானே…” என்று அவள் இன்னும் கீழே வராததை பார்த்து கேட்க.
“ம் சொல்லிட்டேன்..” என்று மெல்ல முனு முனுத்தார்.
அழைத்த விருந்தினர்கள் கூட ஒருவ்வொருத்தராக வர ஆரம்பித்து விட்டனர்.
இது வேலைக்கு ஆகாது என்று நினைத்து அங்கு நின்று பூ அலங்காரம் செய்து கொண்டு இருந்தவனிடம் ஏதோ பேசி கொண்டு இருந்த வருணை அழைத்து..
“மேல போய் செந்தூராவை அழச்சிட்டு வா.” என்று அனுப்பி வைத்தார்..
அவனுமே இன்னும் வரலையா.? என்று நினைத்து கொண்டே தான் முதல் மாடி என்பதினால் படிக்கட்டை உபயோகப்படுத்த நினைத்து அந்த பக்கம் செல்ல பார்த்தவனை கோசலை.
“சீக்கிரம் கூட்டிட்டு வா வருண்.” என்ற பெரியம்மாவின் அவசரத்தில் மின் தூக்கி பக்கம் சென்றவனுமே.
என் எதிரில் தானே பெரியம்மா செந்தூராவிடம் சொன்னாங்க.. வர்ஷா ஸ்வேதா கூட பூஜைக்கு தயாரா கீழே இருக்காங்க.. இவள் என்ன என்று நினைத்து கொண்டே தான் செந்தூராவின் அறைக்கு வெளியில் நின்று கதவை தட்டி காத்து கொண்டு இருக்க. கதவை திறந்தவள்.. பட்டு உடுத்தி பூஜைக்கு வருவதற்க்கு தயாராகவே இருந்தாள்..
“ரெடி ஆகிட்டியா…” என்று கேட்டவனிடம்..
“ம் அப்பவே ரெடி.. சும்மா புக் படிச்சிட்டு இருந்தேன்..” என்று சொன்னவளையே ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு இருந்த வருணை பார்த்த செந்தூரா அவனின் பார்வையில் ஏதாவது தப்பு செய்து விட்டோமோ.. என்று.
“எ..ன்ன..?” என்று தயங்கிய படி தான் கேட்டாள்..
“ரெடியான கீழே வர வேண்டியது தானே … கீழே பூஜை வேலை எவ்வளவு இருக்கு.. “ என்று சொன்னவனின் மொழி தெரியாது பாவம் போல் தான் பார்த்தாள் செந்தூரா.. பூஜை வேலையா.? என்று… அவளுக்கு சமையலே கோயம்பத்தூரில் அந்த கொஞ்ச நாளில் யுடியூப் புண்ணியத்தை கத்து கொண்டாள்..
பூஜை எப்படி செய்வது அதில் பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு தான் வருணோடு கீழே வந்தவள்.
“எனக்கு தோனல… அது எல்லாம் தெரியல. எப்போதும் கூப்பிட்டா தானே கீழே வருவேன்.. இன்னைக்கு தேவ் காலேஜிக்கு ஏதோ டெஸ்ட் என்று போயிட்டான். அவன் இருந்தா சொல்லி இருப்பான்..” என்று ஒரு வித குற்றவுணர்ச்சியோடு சொல்ல.
வருணே.. “ஏய் விடு .. இனி பார்த்து நடந்துக்க.. நம்ம வீட்டில் இதை எல்லாம் ரொம்ப பார்ப்பாங்க..” என்று இருப்பதை தான் வருண் சொன்னது..
ஆனால் அது தான் செந்தூராவுக்கு பயத்தை கொடுத்தது.. இதை நினைத்து தானே செந்தூரா பயந்து கொண்டு இருப்பது..
கீழே வந்த செந்தூராவை பார்த்த கோசலை ஏதோ சொல்ல வரும் முன் கலெக்ட்டரின் மனைவி..
“மிஸஸ் கிருஷ்ணா உங்க வருங்கால மருமகள் அழகா இருக்கா… வாவ் ஐ என்ன வித்தியாசமா இருக்கு.” என்று பாராட்ட.. அதில் குளிர்ந்து போய் சிரித்து கொண்டே..
செந்தூராவிடம்.. “பாட்டி பூஜையில் இருக்காங்க போ பக்கத்தில் உட்கார்ந்து என்ன வேண்டும் என்று செய்..” என்று விட செந்தூராவும் சமத்து பெண்ணாக தன் பாட்டி பக்கத்தில் அமர்ந்து கொண்டவள்.. பாட்டி இட்ட சின்ன சின்ன வேலைகளை எல்லாம் சரியாகவே செய்து முடித்து விட்டாள்..
பூஜை இன்னும் முடியவில்லை.. வம்சிக்காக காத்து கொண்டு இருந்த போது தான்.. விருந்தினர்களுக்கு சாப்பிட ப்ரூட் சாலேட் கொடுக்கப்பட்டது.
காலையில் இருந்து அவள் ஒன்றும் சாப்பிடவில்லை.. விரதம் என்றால் அவள் ஹாஸ்ட்டல் பிரண்ஸ் பழங்கள் சாப்பிட்டுவதை அவள் பார்த்து இருக்கிறாள்..
அதனால் ப்ரூட் சாலேட் சாப்பிட ஒரு கிண்ணத்தை கையில் எடுத்து கொண்டாள்…